2. அசுரனின் மோகினியே
அசுரனின் மோகினியே 2
‘என் மாமன் பொண்ணு அழகாத்தான் இருக்கா!’ என்று மனதிற்குள் நினைத்தவன், அவளுடைய நெற்றியில் முத்தமிடுவதற்காகக் குனிந்தான்.
அடுத்த நொடியே தான் என்ன செய்கிறோம் என்பதை உணர்ந்து சட்டென நிமிர்ந்தவன், ‘டேய் ஆதித்யா! என்னடா பண்ற? நீ ஒரு போலீஸ்காரன். ஒரு பொண்ணு மயக்கத்துல இருக்கும்போது இப்படியா நடந்துப்ப?’ என்று தனக்குள்ளே கேட்டுக்கொண்டான்.
ஆனால் அடுத்த நொடியே ‘இல்ல இவ திமிர் பிடிச்ச என் தாய் மாமன் ராஜசேகரன் பொண்ணு. என் அம்மாவை அவமானப்படுத்தினதுக்கு அந்த நாய் மாமனுக்குக் கொடுக்கிற தண்டனை இதுதான்!’ என்று நினைத்தவன் அவளைக் கடத்தி வந்தது சரிதான் என்று தன்னைத் தானே நியாயப்படுத்திக் கொண்டான்.
‘இவ கழுத்துல தாலி கட்டி என் பொண்டாட்டியாக்கிக்க போறேன். என் மாமன் எங்களோட வசதியைப் பார்த்து எங்களை அவமானப்படுத்தினாருல்ல? இனிமே அவரோட பொண்ணு அவரை விட வசதி இல்லாத வீட்டுலதான் இருக்கப் போறா’ என்று நினைத்தவன் அவளை பார்த்து விஷமப் புன்னகையுடன் சிரித்தான்.
“மச்சான், என்னடா தனியா சிரிச்சிட்டு இருக்க?” என்ற கார்த்திக்கின் குரலில் சுயநினைவுக்கு வந்த ஆதித்யன் அவனை முறைத்தான்.
“டேய், வண்டியைப் பார்த்து ஓட்டுடா!”
“ஓட்டிட்டுத்தான் இருக்கேன். ஆனா, நீ பண்றது எதுவுமே சரியில்லடா. அந்தப் பொண்ணு பாவம்!”
“டேய், எனக்கு எல்லாம் தெரியும். நீ உன் வேலையைப் பாரு!”
“ஆதி உனக்குத் தெரியும்னு சொல்லிச் சொல்லியே தப்புத் தப்பா பண்ணிட்டு இருக்க!”
“மறுபடியும் சொல்றேன் வாயை மூடிட்டு வண்டிய மட்டும் ஓட்டு!” என்று ஆதித்யன் சூடாகப் பதிலளிக்க..
“உன்னைத் திருத்தவே முடியாதுடா!” என்று சலித்துக்கொண்ட கார்த்திக், காரை ஓட்டுவதில் கவனம் செலுத்தினான்.
அடுத்த ஒரு மணி நேரத்தில் கார் ஆதித்யனின் வீட்டின் முன்னால் நின்றது.
கார்க் கதவைத் திறந்து, மயக்கத்தில் இருந்த மோகனாவைத் தூக்கிக்கொண்டு வீட்டுக்குள் நுழைந்தான் ஆதித்யன். அவனுக்குப் பின்னால் வேகமாகச் சென்றான் கார்த்திக்.
“டேய் ஆதித்யா! என்னடா பண்ற? ஒரு பொண்ணை அவளோட அனுமதி இல்லாம இப்படித் தூக்கிட்டு வர்றது தப்புடா!”
“டேய்.. எங்க குடும்பத்தையும் என்னையும் போலீஸ்காரன், மாசச் சம்பளக்காரன்னு அவமானப்படுத்தினான் இவ அப்பன். இப்போ இவ கழுத்துல நான் தாலி கட்டப் போறேன்!”
“மச்சான், உன் மாமன் செஞ்சது தப்புதான். அதுக்காக இந்தப் பொண்ணை ஏன்டா தண்டிக்கிற? அவ என்ன பண்ணுனா?”
“டேய், அவன் பொண்ணு இவ, இவளைக் நான் கல்யாணம் பண்ணிக்கிட்டா அவனுக்கு வலிக்கும்ல. என் அம்மாவைக் அவமான படுத்தி கண்ணீர் விட வச்சவனைச் சும்மா விடுவேன்னு நினைச்சியா?”
“ஆனா, நீ ஒரு போலீஸ்காரன் ஆதி. சட்டத்தைப் பாதுகாக்க வேண்டிய நீயே இப்படிச் சட்டத்தை மீறலாமா?”
“எனக்கு அறிவுரை சொல்ற வேலையை முதல்ல நிறுத்து. நான் என்ன செய்யணும்னு எனக்குத் தெரியும் !”
என்று கார்த்திக்கை முறைத்தவன், மோகனாவைத் தூக்கிக்கொண்டு தன்னுடைய அறைக்குச் சென்றான்.
“ஐயோ! உன்னையொல்லாம் திருத்தவே முடியாதுடா. என்னமோ பண்ணு. நா கிளம்புறேன்!” என்று புலம்பியபடி அவன் வெளியே சென்று விட்டான்.
அறைக்குள் நுழைந்த ஆதித்யனோ, மோகனாவைப் படுக்கையில் மெதுவாகப் படுக்க வைத்தான். அவளுடைய முகத்தில் விழுந்திருந்த கூந்தலை ஒதுக்கிவிட்டு, அவளையே சில நொடிகள் பார்த்துக் கொண்டிருந்தான்.
அவளுடைய அழகிய முகத்தைப் பார்த்ததும், தன்னை மறந்து மீண்டும் அவளுடைய நெற்றியில் முத்தமிடக் குனிந்தான். ஆனால், உடனே தன்னை சுதாரித்துக்கொண்டு
‘ம்ஹீம் இவ மயக்கத்துல இருக்கா. இப்போ நான் நினைக்கிற எதையும் செய்யக் கூடாது!’ என்று முணுமுணுத்தவனின் நினைவு அடுத்த நொடியே தன் தாயிடம் சென்றது.
அவமானத்துடன் வீட்டுக்குத் திரும்பிய கமலாம்பாளின் முகம் அவனுடைய கண்முன்னால் வந்து போனது.
‘அம்மாவை அப்படிப் பேசின என் மாமனுக்குக் கொடுக்கிற தண்டனை இதுதான்!’ என்று வன்சினம் கொண்ட வேங்கையாக மோகனாவின் கழுத்தைப் பார்த்தான்.
‘இன்னைக்கு உன் கழுத்துல தாலி கட்ட போறேன் மோகனா!’ என்று மனதிற்குள் முடிவு எடுத்து கொண்டு , அறையிலிருந்து வெளியேறினான்.
சிறிது நேரம் கழித்து, மோகனா கண் விழிப்பதற்கு முன்பே அவளுடைய கழுத்தில் தாலி கட்ட வேண்டும் என்ற முடிவுடன் மீண்டும் அறைக்குள் வந்த ஆதித்யன்.
அவள் கண் விழிப்பதற்கு முன்பே தாலி கட்டிவிட்டால், தன்னுடைய பழிவாங்கும் திட்டத்தின் முதல் கட்டம் முடிந்துவிடும் என்று நினைத்தவன் மோகனாவை பார்த்தான்.
அவள் இன்னும் மயக்கத்தில்தான் இருந்தாள். ஒரு நீண்ட பெருமூச்சுடன் அவளுடைய கழுத்தில் தாலியைக் கட்டியவன், ஒரு கணம் அவளையே பார்த்தான்.
‘இனிமே நீதான் என் பொண்டாட்டி!’ என்றவன் முகத்தில் திருப்தியான புன்னகை மலர்ந்தது.
தாலி கட்டிய பிறகு, ஆதித்யன் குளியலறைக்குள் சென்று குளித்துவிட்டு வெளியே வந்தான்.
அறையில் இருந்த பீரோவைத் திறந்தவன், அதிலிருந்த மதுப்புட்டியை எடுத்தான். ஒரு கண்ணாடிக் கோப்பையில் மதுவை ஊற்றிக்கொண்டு, மோகனா படுத்திருந்த படுக்கைக்கு அருகில் இருந்த நாற்காலியில் அமர்ந்தவன் அவளைப் பார்த்தபடியே மது அருந்தினான்.
அவள் கண் விழித்ததும் என்ன நடக்கப்போகிறது என்பது அவனுக்கு நன்கு தெரியும்.
‘நீ என்னை ஏத்துக்க மாட்டேன்னு சொல்லி கத்துவ, சண்டை போடுவ. ஆனா, உன் கழுத்துல தாலி கட்டினது இந்த ஆதித்யன்! அதை மட்டும் உன்னால மாத்த முடியாது!’ என்று சொல்லிக்கொண்டே கோப்பையை உதட்டில் வைத்தான்.
அதிகாலை நேரம் மோகனாவுக்கு மெல்ல நினைவு வந்தது தலை பாரமாக இருக்க, கண்களைத் திறக்க முடியாமல் சில நொடிகள் சிரமப்பட்டவள், பிறகு மெல்லக் கண்களைத் திறந்தாள்.
தனக்குப் பழக்கமில்லாத அறையைப் பார்த்ததும் திடுக்கிட்டு ‘நான் எங்கே இருக்கேன்?’ என்று அறையை சுற்றி பார்த்தாள்
முந்தைய இரவு நடந்த சம்பவங்கள் மங்கலாக நினைவுக்கு வந்தன.
அறைக்குள் வந்த ஒருவன்… மூக்கருகே ஏதோ தெளித்தது… அதன் பிறகு கண்கள் சுழன்றது…
“ஐயோ!” பதறியபடி எழுந்து அமர்ந்தாள்.
அப்போது அவளுடைய கழுத்தில் ஏதோ உறுத்த, கையை வைத்துப் பார்த்தவளின் கண்கள் அதிர்ச்சியில் விரிந்தது
அவளுடைய கழுத்தில் தாலி தொங்கிக் கொண்டிருந்தது.
“என்ன இது?” அதிர்ச்சியில் தாலியைப் பிடித்துப் பார்த்தவள், அடுத்த நொடியே கோபத்தில் கொதித்தாள்.
“யாரு என் கழுத்துல தாலி காட்டியது?” அந்த அறையே அதிரும் படி கத்தினாள்
அப்போது அறையின் கதவை திறந்து கொண்டு கையில் காபிக் கோப்பையுடன் உள்ளே நுழைந்தான் ஆதித்யன்.
அவனைப் பார்த்ததும் படுக்கையிலிருந்து வேகமாக எழுந்தவள் “ஏய்! நீதானா என்னைக் கடத்திட்டு வந்தது?” என்று ஆங்காரமாக கத்த
ஆதித்யனோ “ஆமா. நான்தான்!” என்றான் நிதானமாக.
அவனுடைய அலட்சியமான பதிலில் அவளுக்குக் கோபம் தலைக்கேறியது.
“என்ன தைரியம் இருந்தா என்னைக் கடத்திட்டு வந்திருப்ப? என் கழுத்துல இந்தத் தாலியைக் கட்டினது நீதானே?”
“அதுல என்ன சந்தேகம்?”
“பொறுக்கி ராஸ்கல்” என்றவள் ஆத்திரத்தில் கத்த
“என்ன சொன்ன?”என்று அழுத்தமாக கேட்ட ஆதித்யனின் முகம் சட்டென்று மாறியது.
“ம்ம் பொறுக்கின்னு சொன்னேன்! ஒரு பொண்ணு மயக்கத்துல இருக்கும்போது அவ கழுத்துல தாலி கட்டுற உன்னை வேற என்னன்னு சொல்லுவாங்களாம் ஆங்?” என்ற மோகனாவிற்கு ஆத்திரத்தில் அவளை கொன்று விடலாமா என்று கூட தோன்றியது.
அவனோ காபிக் கோப்பையை சவதானமாக மேசை மீது வைத்துவிட்டு, அவளை நோக்கி அழுத்தமான காலடிகளுடன் வந்தவன்
“பேசுறதுக்கு முன்னாடி யார்கிட்ட பேசுறோம்னு தெரிஞ்சுக்கிட்டுப் பேசு ம்ம்” என்று பல்லை நறநறவென்று கடித்தான்.
“நீ எவனா இருந்தாலும் எனக்கு அதபத்தி கவலையே இல்லை. நீ கட்டின இந்த தாலி எனக்கு தேவையே இல்லடா ” என்று அவள் கழுத்தில் இருந்த தாலியைக் கழற்றக் கையை உயர்த்தினாள்.
ஆதித்யனோ “நான் கட்டிய தாலியைக் கழற்றிப் போடுற அளவுக்கு உனக்கு அவ்வளவு தைரியமாடி?”என்றவன் அலட்சிய குரலில் கேட்க
அவனை முறைத்து பார்த்தவள், “ஆமா! என் விருப்பம் இல்லாம நீ கட்டின தாலியை நான் ஏன் கழுத்துல போட்டிருக்கணும்?” என்றாள் அவனை விட அலட்சியமாக.
“என்னடி சொன்ன?
“ஆமா! உன் இஷ்டத்துக்கு என்னைக் கடத்திட்டு வந்து கல்யாணம் பண்ணிக்கிட்டா, நான் உன்னைப் புருஷனா ஏத்துக்கணுமா? போடா பொறுக்கி” என்றாள் அவன் முகத்தில் காறி உமிழாத குறையாக.
அவளின் திமிர் பேச்சில் அவனுடைய ஆணவத்தைச் சீண்டி விட்டாள்
“என்னைப் பொறுக்கின்னு சொல்ற அளவுக்கு உனக்குத் திமிரு அதிகம்தான்!”
“அது இருக்கு நிறையா.. உன்ன மாதிரி ஆளுங்கள பார்த்தா இதைவிட மோசமான வார்த்தைதான் எனக்கு பேச தோணுது!” என்றவாளின் கையை பிடித்து இழுத்து தன் மார்போடு அணைத்து கொண்டவன் “பொறுக்கி என்ன பண்ணுவான்னு தெறியுமாடி? என்று அவளை பார்த்து இதழை கடித்தான்.
அவளோ “விடுடா, என்னை விடு பொறுக்கி!” என்று திமிறியவள் மீண்டும் அவனை சீண்டினாள்.
அவன் அவளுடைய முகத்தை ஆழ்ந்து பார்த்தான். அவளுடைய கண்களில் கோபமும் வெறுப்பும் மட்டுமே நிறைந்திருந்தது..பயம், துளி அளவுகூட இல்லை.
“ஓய், என்னைப் பார்த்துப் பயப்பட மாட்டியா?”
“உன்னைப் பார்த்து நான் ஏன் பயப்படணும்?” அவளுடைய பதில் அவனை மேலும் சீண்டியது.
அவளைத் தன் அருகில் இன்னும் இறுக்கமாக அணைத்தவன், “பொறுக்கி என்ன பண்ணுவேன்னு காட்டுறேன்டி” என்றவனோ அடுத்த நொடியே ஆக்ரோஷமாக அவளுடைய இதழ்களை கவ்வி சுவைக்க ஆரம்பித்தான்.
அதிர்ச்சியில் உறைந்துபோனாள் மோகனா. அடுத்த நொடியே அவனைத் தன்னிடமிருந்து விலக்க முயன்றாள். முடியவில்லை.அவன்தான் அவளை உடும்பு பிடியாக அல்லவா பிடித்திருந்தான்.
அவளோ கைகளால் அவன் முதுகில் அடித்தாள். அவன் ஜிம் பாடிக்கு கொசு கடித்தது போல இருந்தது அது. அவளை முத்தமிட துவக்கியவன் சில நொடிகள் தன்னை மறந்தான். முத்தமிட்டபடியே அவளை தூக்கி கொண்டு மெத்தையில் கிடத்தி அவளை பார்த்தவன்..
“என்னைப் பொறுக்கின்னு சொன்னல்ல பொறுக்கி இப்படித்தான்டி நடந்துப்பான்!” என்று சிரித்தபடி உதட்டை துடைத்துக் கொண்டே அவளைச் சீண்டினான்.
அவளோ அவனுடைய வார்த்தைகளைக் கேட்டு இன்னும் கொதித்துப் போனவள்..
“இப்பவும் சொல்றேன்டா! நீ ஒரு பொறுக்கி மட்டுமில்ல… பொறுக்கிகளுக்கெல்லாம் தலைவன்! கெடு கெட்ட மிருகம். ஒரு பொண்ணோட விருப்பம் இல்லாம அவளைக் கடத்திட்டு வந்து தாலி கட்டுற நீயெல்லாம் ஒரு ஆம்பளையா?
என்னைத் தொட உனக்கு என்ன உரிமை இருக்கு?
“உன் கழுத்துல இத கட்டியிருக்கேனே! இந்த உரிமை போதாதா?” என்ற ஆதித்யன் அவளுடைய கழுத்தில் தொங்கிய தாலியைச் சுட்டிக்காட்டினான்.
“இது கல்யாணமே இல்லை! என் சம்மதம் இல்லாம நீ கட்டின தாலி இது!”
“அதைப் பத்தி நான் கவலைப்படலை!”
“நீங்க மனுஷனே இல்லை!”
“அதை ஏற்கெனவே சொல்லிட்ட. வேற ஏதாவது புதுசா சொல்லு!” என்று அவனுடைய நக்கலான பேச்சில் மோகனா கோபத்தில் நடுங்கினாள்.
“உன்னைச் சும்மா விடமாட்டேன் டா!”
“விடாதே! என்ன பண்ணுவடி ?” என்றான் எகத்தாளமாக
“உன்னை ஜெயில்ல தள்ளாம விடமாட்டேன் பாரு!” அவள் பேசியதை கேட்டு சத்தமாக சிரித்த ஆதித்யனோ,
“ஜெயில்ல தள்ளப் போறியா? யாரை? என்னையா?” என்றான்.“ஆமா! உன்னைத்தான்!”
“நான் யாருன்னு தெரியாம பேசுற! நானே போலீஸ்காரன்டி
“நீ போலீஸ்னா? பெரிய இவனா?”
“நான் போலிஸ்காரன் மட்டும் இல்ல. நா யாருன்னு தெரியணுமா? உன் அத்தை மகன்!” என்று அழுத்தமாக சொல்ல
மோகனாவோ “என்ன சொன்ன?”என்று அவனை ஆழ்ந்து பார்த்தாள்
“உன் அப்பாவோட தங்கச்சி கமலாம்பாளோட மகன். ஆதித்யன்!” அவளுடைய முகத்தில் இருந்த கோபம் சட்டென்று அதிர்ச்சியாக மாறியது.
“அத்தை மகனா?”
“ஆமா!” என்றான் நிதானமாக
அவளுடைய நினைவுகள் பின்னோக்கிச் சென்றது அவள் அமெரிக்காவிலிருந்து இந்தியாவுக்கு வந்திருந்த சமயம் அது. அன்று கமலாம்பாள் தன் மகனுக்கு மோகனாவைப் பெண் கேட்டு வந்திருந்தார். தன் மகனுக்குத் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்ற ஆசையுடன் வந்த அவரை தன் அப்பா பேசியது அவள் நினைவுக்கு வந்தது
“உன் மகன் போலீஸ்காரன். அவன் வாங்குற மாதச் சம்பளம் என் பொண்ணோட ஒருநாள் செலவுக்குக்கூடப் பத்தாது. என் பொண்ணு உன் வீட்டுல வந்து வாழ முடியாது கமலா”என்ற அப்பாவின் அந்த வார்த்தைகள் மோகனாவின் நினைவில் மின்னலாய் வந்து போக,
கமலாம்பாள் கண்ணீரை அடக்கிக்கொண்டு அங்கிருந்து சென்ற காட்சியும் அவளுடைய கண்முன்னால் தோன்றியது.
பாவம் அத்தை! தன்னோட மகனுக்காக ஆசையா பொண்ணு கேட்டு வந்தவங்களை அப்பா இப்படியா அவமானப்படுத்தி அனுப்பணும்? அந்த நேரம் அவள் மனம் வேதனையில் சுருங்கியது.
ஆனால் அடுத்த நொடியே தன் கழுத்தில் தொங்கிய தாலியைத் தொட்டுப் பார்த்தாள்.
“அதுக்காக இவன் என்னைக் கடத்திட்டு வந்து தாலி கட்டுவானா? நான் என்ன தப்பு பண்ணேன்?” மீண்டும் அவளுடைய கண்களில் கோபம் நிறைந்தது.
“என்ன மோகனா? பழைய சம்பவம் ஞாபகத்துக்கு வந்துடுச்சா?” என்ற ஆதித்யனின் குரல் அவளுடைய சிந்தனையைக் கலைத்தது.
“அன்னைக்கு அத்தை வீட்டுக்கு வந்தப்போ அப்பா அவங்களை அவமானப்படுத்தினது எனக்குத் தெரியும். ஆனா, அதுக்காக என்னைப் பழிவாங்குறது எந்த விதத்துல நியாயம்?”
“உன் அப்பா எங்க அம்மாவை அவமானப்படுத்தினாரு. அதுமட்டுமில்லாம, எங்களுக்குச் சேர வேண்டிய சொத்தையும் கொடுக்காம ஏமாத்தி இருக்காரு !” என்றவனின் குரல் இறுகியது.
“எங்க அம்மா அவரோட தங்கச்சி. ஆனா, அவங்களுக்குச் சேர வேண்டிய சொத்தைக் கொடுக்க மனசு வரலை. எங்களை வசதி இல்லாதவங்கன்னு சொல்லி ஏளனம் பண்ணியிருக்காரு. அதையெல்லாம் மறந்துட்டு நான் உன் அப்பாவைச் சும்மா விடணுமா?”
“அவர் செஞ்சது தப்புதான். ஆனா, நீங்க என்னைக் கடத்திட்டு வந்து தாலி கட்டினது மட்டும் சரியா?”
“எனக்கு எது சரி, எது தப்புன்னு தெரியும்!” ஆதித்யன் அவளை முறைத்தான்.
“தெரிஞ்சிருந்தா இப்படிப் பண்ணியிருக்க மாட்டீங்க!” என்றாள் கோபமாக
“ஓஹோ! உன் அப்பா மேல தப்பே இல்லாத மாதிரி பேசுறியே!”
“நான் அப்படிச் சொல்லவே இல்லை. அவர் செஞ்ச தப்புக்கு அவர்கிட்ட போய் கேளுங்க.அதவிட்டுட்டு என்னை ஏன் தண்டிச்சீங்க ?”
“ஏன்னா, உன் அப்பாவை எங்கே அடிச்சா வலிக்கும்னு எனக்குத் தெரியும்!”
மோகனா அவனை வெறுப்புடன் பார்த்தாள்.
“நீங்க ஒரு போலீஸ் அதிகாரி. உங்ககிட்ட நியாயத்தை எதிர்பார்த்தது என்னோட தப்புதான்!”
அந்த வார்த்தைகள் ஆதித்யனின் முகத்தை ஒரு கணம் இறுக்கின. ஆனால் அவன் அதை வெளிக்காட்டவில்லை.
“நல்லா கேட்டுக்கோ, மோகனா. உன் அப்பா எங்களை அவமானப்படுத்தினதுக்கு நான் அவருக்குப் பதில் கொடுக்கப் போறேன். அதுவரைக்கும் நீ இந்த வீட்டைவிட்டு எங்கேயும் போக முடியாது!”
“நான் இங்கே இருக்க மாட்டேன்!”
“இருந்துதான் ஆகணும்!”என்றான் தீர்க்கமாக
“என்னால முடியாது!” என்றாள் பிடிவாதமாக.