காதலின் காவலன் 1

காதலின் காவலன் 

 

அத்தியாயம் 1

 

1980-க்கு பிந்தைய காலகட்டத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி பன்னிரெண்டாம் வகுப்பின் வகுப்பறை குண்டூசியை கீழே போட்டாள் கூட சத்தம் கேட்க்கும் அளவுக்கு அத்தனை அமைதியாக இருந்தது மாணவ மாணவிகள் பயத்துடன் அமர்ந்து இருந்தனர் மாணவிகள் பயத்தில் வியர்த்து வடிய அமர்ந்திருக்க ஒவ்வொருவரின் வினாத்தாளையும் கொடுத்துக் கொண்டு இருந்தார் கணித ஆசிரியர் சரவணன். 

 

அடுத்தப்படியாக “வள்ளி” என்று அழைக்க அந்த பெயருக்கு உரியவளோ எழுந்து கொள்ளாமல் பயத்துடனே அமர்ந்து இருந்தாள் “ஏய் வள்ளி இப்போ எழுந்து வர போறியா இல்லையா” என்று ஆசிரியர் சரவணன் மீண்டும் கத்தி அழைக்க வள்ளி கடைசி இருக்கையில் இருந்து பயத்துடனே எழுந்து நின்றாள் வெள்ளை நிற தாவணி பச்சை நிற மேலாடை அதே நிறத்தில் பாவடையுடன் நீளக்கூந்தலை இரட்டை தலைப்பின்னி ரிப்பன் கட்டி 

பள்ளி சீருடையில் பயத்தில் படபடக்கும் விழிகளுடனே எழுந்து நின்றாள் அவளின் கண்களில் பயம் தெரிந்தது சரவணன் வாத்தியாரின் முறுக்கு மீசையை பார்த்து பயத்துடனே மெல்ல தன் இருக்கையில் நடந்து வந்து ஆசிரியர் முன் நிற்க சரவணன் அவளின் வினாத்தாளை பார்த்து முறைத்தான் வெறும் ஐந்து மதிப்பெண் வாங்கி இருந்தாள். 

 

“நீயெல்லாம் எதுக்கு படிக்க வந்து என் உசுர எடுக்குற இன்னும் எத்தனை வருஷத்துக்கு இதே பன்னிரெண்டாவதுலையே உட்கார்ந்து இருக்கனும்ன்னு நினைக்கிற மூஞ்சில மஞ்ச பூசிக்க தெரியும் தலையில வரிவரியா அடுக்கு மல்லி வைக்க தெரியும் ஆனா படிக்க தெரியாது நீயெல்லாம் எதுக்கு பள்ளிக்கூடத்துக்கு வர இந்த வருசமும் பெயிலு கையை நீட்டு” என்று கணித ஆசிரியன் சரவணன் கூற கண்ணீரும் பயத்துடனே தன் கையை முன்னே நீட்டினாள் வள்ளி மூங்கில் குச்சியை ஓங்கி அவள் கையில் அடித்தான் “அப்பத்தா” என்று கத்தி அழுது கொண்டே அவள் வலியில் துடிக்க “இன்னொரு கையை நீட்டு கழுதை நீயெல்லாம் எதுக்கு படிக்க வர ஊர்ல எவனாவது கேனப்பய கிடைப்பான் அவனை கட்டிக்கிட்டு போக வேண்டியது தான” என்று திட்டிக் கொண்டு இன்னொரு கையிலும் அடி கொடுத்து வினாத்தாளை தூக்கி எறிய கீழே கிடந்த வினாத்தாளை எடுத்து கொண்டு தன் இருக்கையில் சென்று அமர்ந்தாள். 

 

வள்ளி இரண்டு வருடமாக கணக்கு பாடத்தில் மட்டும் தோல்வியுற்று இதே வகுப்பில் இருக்கிறாள் அவளுக்கு சுட்டு போட்டாலும் கணக்கு மண்டையில் ஏறாது சரவணனும் இதே வகுப்பில் இரண்டு வருடமாக அவளை பார்த்துக் கொண்டு தான் இருக்கிறான் அதனால் தான் இத்தனை கோபம். 

 

வினாத்தாளை வாங்கி கொண்டு தரையில் அமர்ந்தாள் வள்ளி அவளுக்கு 18 முடிந்து 19 வயதாகிவிட்டது இன்னும் அந்த கணக்கு பாடத்தில் பாஸ் ஆகவில்லை அவள் ஊரிலேயே அவள் ஒருத்தி மட்டும் தான் இத்தனை வயதாகியும் திருமணம் செய்யாமல் இருக்கிறாள் நேரம் கைக்கூடி வராததால் திருமணத்தை தள்ளி வைத்திருந்தனர் அவளின் பெற்றோர் இப்போது 19 வயதானவுடன் ஜோசியர் மாப்பிள்ளை பார்க்க சொல்லியிருக்க இன்று மாலை அவளை மாப்பிள்ளை வீட்டில் இருந்து பெண் பார்க்க வருகிறார்கள். 

 

அவள் அழுது கொண்டே இருக்க பள்ளி மணி ஒலித்தது மாணவ மாணவிகள் அனைவரும் வெளியே வர வள்ளியும் அவள் தோழி தாமரையும் நடந்து வந்தனர் 

வள்ளியை விட அவள் இளையவள் தான் ஆனாலும் இருவரும் உயிர் தோழிகள் 

“என்ன அக்கா இன்னைக்கும் அந்த வாத்தியார் உன்னை அடிச்சாரா” என்று தாமரை கேட்க. 

 

“ஆமாம் டி” என்றாள் சோகத்துடனே வள்ளி

“அவரு என்ன அக்கா எப்ப பாரு உன்னையே அடிச்சிட்டு இருக்காரு” என்று அவள் கேட்க “அது தான் டி எனக்கும் தெரியலை அந்த ஆளு எப்ப பாரு என்னை தொல்லை பண்ணிட்டே இருக்காரு எனக்கு செம்ம கோபம் அதனால தான் அந்த ஆளோட வண்டி டயரை பஞ்சர் பண்ணி விட்டுட்டேன்” என்றாள் சிரித்து கொண்டே. 

 

தாமரை அவளை ஆவென்று பார்த்தாள்

“ஆனா எல்லாம் இன்னும் கொஞ்ச நாளைக்கு தான் டி இன்னைக்கு தான் என்னை பொண்ணு பார்க்க வராங்கலே இன்னும் கொஞ்ச நாள்ல நான் கல்யாணம் பண்ணிக்கிட்டு போய்டுவேன் அப்புறம் இந்த கணக்கு வாத்தி தொல்லையே இருக்காது” என்றாள் வள்ளி சிரித்து கொண்டே. 

 

“அப்படியா அக்கா அப்போ சாய்ந்திரம் நானும் உங்க வீட்டுக்க வரேன் பஜ்ஜி கேசரிலாம் இருக்கும்ல்ல” என்று கூறினாள் தாமரை வள்ளி வீடு வந்து சேர 

பெண் பார்க்க ஏற்பாடேல்லாம் தடபுடலாக ஆரம்பமானது வள்ளியின் மனம் அதையெல்லாம் பார்த்து துள்ளாட்டம் போட்டது இனி பள்ளிக்கூடம் பக்கம் எட்டி கூட பார்க்க தேவையில்லை படிக்க வேண்டும் என்ற அவசியமில்லை குறிப்பாக அந்த மீசைக்கார வாத்தியை பார்க்கவே தேவையேயில்லை என்று மகிழ்ச்சியுடனே குளித்து முடித்து எப்போதும் போல முகத்தில் நிறைய மஞ்சள் பூசி அடுக்கு மல்லி தலையில் சூடி புடவை கட்டி கிளம்பி கொண்டு இருந்தாள். 

 

தாமரையும் அவள் வீட்டில் இருந்து வந்து விட வெளியே புல்லட் சத்தம் கேட்டது கூடவே மாட்டு வண்டியின் சத்தமும் 

“மாப்பிள்ளை வந்துட்டாரு” என்று ஒரு பெண்மணி குரல் கொடுக்க வீடே பரபரப்பானது கல்யாண ஜமுக்காலாம் விரிக்கப்பட மாப்பிள்ளை வீட்டின் சொந்த பந்தங்கள் அனைவரும் வந்தமர்ந்தனர். 

 

வள்ளி ஆவலுடன் ஜன்னல் வழியாக மாப்பிள்ளை யார் என்று எட்டி பார்த்தாள் ஆனால் அவள் கண்ணுக்கு மாப்பிள்ளையின் முகம் தென்படவேயில்லை காரணம் அனைவரும் அவன் முன் நின்று பேசிக் கொண்டு இருந்தனர் நல்ல உயரமாக இருந்தான் ஒரு கட்டத்தில் அவன் முன் இருந்த அனைவரும் விலகி நிற்க அவனை பார்த்த வள்ளியின் கண்கள் அதிர்ச்சியில் விரிந்தது பஜ்ஜியை வாயில் வைத்து கொண்டு இருந்த தாமரை வாயில் இருந்த பஜ்ஜியும் கீழே விழுந்தது “எக்கா இது உங்க கணக்கு வாத்தியார் இல்லை” என்று கேட்க. 

 

வள்ளிக்கு எதுவும் காதில் விழுந்த பாடில்லை பேயறைந்ததை போல நிற்க 

“பொண்ணை அழைச்சிட்டு வாங்க” என்று ஊர் பெரியவர் குரல் கொடுக்க தட்டில் பஜ்ஜி கேசரியுடனே வெளியே வந்தாள் வள்ளி, சரவணன் பெண்ணை பார்க்காமல் பக்கத்தில் இருந்தவருடனே பேசிக் கொண்டு இருக்க வள்ளி ஒவ்வொருவராக பண்டங்களை கொடுத்து முடித்து இறுதியாக சரவணனிடம் வர அவன் அவளின் முகத்தை பார்க்க நிமிர அவளோ தலையை தரையில் புதைத்து கொள்பவளை போல நிமிராமல் இருக்க அவளின் தலை மட்டும் தான் அவன் கண்ணுக்கு தெரிந்தது முகம் தெரியவில்லை அவள் தலையில் அடுக்குமல்லிகை பூ இருந்தது. 

 

சரவணன் தட்டை எடுத்து கொள்ள பெண்ணவள் அங்கிருந்து ஓடியேவிட்டாள் சரவணனுக்கோ பெண்ணை பார்க்கவில்லையே என்ற வேதனை அவன் அருகில் இருந்த அவன் நண்பன் கந்தன் 

“பொண்ணை பார்த்தியா மாப்பிள்ளை உனக்கு பிடிச்சிருக்கா” என்று கேட்க

“நான் எங்க டா பொண்ணை பார்த்தேன் அதுக்குள்ள தான் பொண்ணு உள்ளே போய்ருச்சே” என்றான். 

 

“அடப்பாவி பொண்ணு கிளிப் பச்சை கலர் புடவையில பார்க்க அழகா அம்சமா இருந்துச்சு நீ பார்க்கலையா” என்றான் அவன் நண்பன் “அடப்பாவி என்னைத் தவற எல்லாரும் பொண்ணை பார்த்திருக்கிங்களா டா” என்று புலம்ப அவன் கண்கள் மீண்டும் அந்த அறையை எட்டி பார்த்தது அங்கே வள்ளியுடன் அவளின் அப்பத்தா பேசிக் கொண்டு இருக்க இப்போதும் அவளை அவனால் பார்க்க முடியவில்லை. 

 

வள்ளியோ தன் அப்பத்தாவிடம் “பாட்டி எனக்கு அந்த மாப்பிள்ளையை பிடிக்கல” என்றாள் மிரண்ட விழிகளுடன்

“ஏன்..ஏன்..டி மாப்பிள்ளை நல்லா உசரமா அழகா தான இருக்காரு” என்று கூற 

“பாட்டி அது என் கணக்கு வாத்தியாரு” என்று கூற “வசதியா போச்சு அந்த ஒரு பாடத்தையும் உன் புருசன் கிட்ட கேட்டு பாஸ்சாகிடு” என்றார் சிரிப்புடன் வள்ளி என்ன செய்து திருமணத்தை நிறுத்தலாம் என்று யோசித்து கொண்டு இருந்தாள். 

 

சரவணன் வீட்டில் பெண்ணை மிகவும் பிடித்து விட இன்றே தேதி குறித்து விடலாம் என்று பேச வரும் முகூர்த்தத்தில் ஒரு நல்ல நாளாக பார்த்து குறித்து விடலாம் என்று பேச சரவணன் என்ன சொல்வது தெரியாமல் விழித்து கொண்டு இருக்க “இப்போ வேணாம்ங்க வர்ற முகூர்த்தத்துல நிச்சயம் வச்சிப்போம் அப்புறம் கல்யாணம்” என்றார் பெண் வீட்டில் இருந்த பெருசு ஒருவர் சரவணனுக்கு அப்போது தான் அப்பாடா என்று இருந்தது. 

 

இந்த இடைப்பட்ட நாளில் ஒரு நாள் பெண்ணை பார்த்து கொள்வோம் என்று நினைத்தான் சரவணன் மாப்பிள்ளை வீட்டார் கிளம்பி விட தன்னால் முயன்ற அளவுக்கு அப்பத்தாவிடம் வாதாடி கொண்டு இருந்தாள் வள்ளி அவளுக்கு தாய் இல்லை அவர் ஒரளவுக்கு விபரம் தெரியும் வயதிலேயே இறந்து விட அவள் தந்தை மட்டுமே இருந்தார் அவள் அப்பத்தா தான் அவளையும் வளர்த்தார். 

 

அவள் அப்பத்தாவிடம் எவ்வளவு பேசியும் அவள் பேச்சு எடுபடவில்லை அவள் தந்தையிடம் அவளால் எப்படியும் பேசவும் முடியாது மறுத்து ஒரு வார்த்தை கூட பேச முடியாது மிகவும் பிடிவாதக்காரர் என்ன செய்யலாம் யோசித்து யோசித்து அவளுக்கு தலையே வெடித்தது. 

 

‘அந்த கணக்கு வாத்தி என்னைய பார்த்துருப்பாரா அவருக்கு தான் என்னை அரவே புடிக்காதே எப்படி கல்யாணத்துக்கு சம்மதிச்சாரு’ என்று அவள் மனதில் ஆயிரம் கேள்விகள் எழுந்தது. 

 

தாமரை மாப்பிள்ளையை பார்த்த மறுநொடியே தன் வீட்டிற்க்கு ஓடியேவிட்டாள் இரவு அதே யோசனையுடனே வள்ளி உறங்க அவள் கனவில் கணக்கு வாத்தியார் மூங்கில் கம்புடன் மணமேடைக்கு வர அவளோ பயத்துடனே அமர்ந்திருக்க அவள் கழுத்தில் தாலியை கட்டி முடித்தவன் 

“இந்த வருசமாவது பஸ் பண்ணுவியா” என்று கேட்டு கொண்டே அவளை அடி வெளுக்க மாலையும் கழுத்துமாக பெண்ணவள் இங்கும் அங்கும் பயத்துடனே ஓடிக் கொண்டு இருந்தாள். 

 

நள்ளிரவு வேளையில் அப்பத்தா என்று அலறி அடித்து கொண்டே எழுந்தாள் வள்ளி அவளின் அப்பத்தா தரையில் படுத்திருக்க அவள் அருகில் ஓடி வந்தவர் 

“என்ன டி குட்டி ஆச்சு” என்று கேட்க 

“ஏதோ கெட்ட கனவு அப்பத்தா” என்க சாமி முன்னே இருந்த விபூதியை எடுத்து வந்து அவள் நெற்றியில் பூசி பட்டை போட்டு விட்டு “இனி காத்து கருப்பு எதுவும் அண்டாது ஒழுங்கா படு” என்று கூறிவிட்டு அவரும் சென்று படுத்தார். 

 

அதன் பின் வள்ளி இரவெல்லாம் உறங்காமல் விழித்து கிடந்தாள் மறுநாள் பள்ளிக்கு எப்படி செல்ல போகிறோம் என்ற பயம் அவளுக்கு அதனாலேயே உறங்காமல் கிடந்தாள். 

 

 

 

 

 

 

 

 

    1 comment

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *