தீரா காதல் 4

அத்தியாயம் 4

 

அவன் தாலி கட்டி முடிக்கவும் தங்கமயில் கண்கள் கலங்கி அமர்ந்திருக்க ஒற்றை கண்ணீர் துளி அவளின்  கண்ணை தாண்டி வெளியே வந்தது அவளுக்கு எதிர்மறையாக சக்திவேலின் முகம் மலர்ச்சியுடன் இருந்தது எதையோ சாதித்துவிட்ட நினைப்பு திருமண சடங்குகள் ஒவ்வொன்றாக நடக்க ஆரம்பித்தது தங்கமயிலின் சகோதரன் அருண் மணமகனின் கையை பிடித்து செல்ல இருவரும் அக்னி குண்டத்தை வலம் வந்தனர். 

 

இறுதியாக அனைத்து சடங்குகளும் முடிய இருவரும் ஜோடியாக வீடு வந்து சேர்ந்தனர் தங்கமயிலின் முகம் வாடி இருந்தது அவளை சக்திவேலை அவன் அறைக்கு அழைத்து சென்றான் 

சக்திவேல் அறையின் உள்ளே வந்தவுடன் சோர்வுடனே படுக்கையில் விழ பெண்ணவள் என்ன செய்வது என்று தெரியாமல் படுக்கையில் அமர்ந்திருந்தாள் அவளை பார்த்தவன் 

“கொஞ்ச நேரம் படுத்து எழுந்துரு மயிலு சாய்ந்திரம் வரவேற்பு இருக்குல்ல” என்று கூற அவள் எங்கோ வெறித்து பார்த்து கொண்டு அமர்ந்திருந்தாள். 

 

அவளின் நினைவுகள் பின்னோக்கி சென்றது சரியாக ஆறு மாதங்களுக்கு முன்பு தங்கயிலின் கல்லூரியில் கடைசி வருட மாணவ மாணவிகளுக்கு நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது மாணவ மாணவிகள் அனைவரும் அங்கே ஒன்று கூடி இருந்தனர் தங்கமயிலின் அங்கே சென்றிருக்க அவளின் கண்கள் அந்த கூட்டத்தில் அர்ஜூனை தேடியது அவனும் கடைசி வருட மாணவன் இருவரும் ஒருவரை ஒருவர் காதலிக்கின்றனர் ஆனால் வெளிப்படையாக இதுவரை அதை பற்றி பேசியது இல்லை. 

 

அவளே எதிர்ப்பார்க்காத சமயம் அவளின் பின்னே வந்து நின்ற அர்ஜூன் “என்ன தான தேடுறிங்க மேடம்” என்ற குரல் கேட்க பதட்டத்துடனே திரும்பினாள் அர்ஜூனை பார்க்கவும் வெட்கம் வந்து தொலைத்தது பெரிய பணக்கார வீட்டு வாரிசு ஆணழகன் நீட்டாக உடை அணிந்து அழகான மாடல் போல வந்து நின்றான் படத்தில் வரும் கதாநாயகனை போல தான் இருந்தான். 

 

“என்னை தான தேடுறிங்க மேடம்” என்று அவன் மீண்டும் கேட்க ஆம் என்று தலையை ஆட்டியவள் “இல்லையே” என்றாள் பதட்டத்துடனே நிமிர்ந்து “ஓஹோ இன்னைக்கு தான் என்னோட லாஸ்ட் டே ஆப் காலேஜ் அப்போ நான் கிளம்பவா” என்று கேட்க பதட்டத்துடனே நிமிர்ந்தவள் 

“வேண்டாம்” என்றாள். 

 

“இன்னும் எத்தனை நாள் தான் உன் காதலை சொல்லாம என் கிட்ட இருந்து மறைப்ப நானும் துபாய் கிளம்ப போறேன்” என்க அவனை அதிர்வுடனே நிமிர்ந்து பார்த்தாள் பெண்ணவள் “ஆமாம் ஒரு வருசம் அங்க தான் அப்பாவோட பிஸ்னஸ்சை பார்த்துக்கனும் அதுக்கப்புறம் இங்க வந்துடுவான்” என்றான் உடனே அவள் முகம் வாடி விட 

“எதுக்காக வருவேன்னு கேட்க்க மாட்டியா” என்று ஏக்கம் சுமந்த விழிகளுடன் அவளை பார்த்து கேட்க “எதுக்காக” என்று அவளும் கேட்க “உங்க வீட்டுக்கு வந்து உன்னை பொண்ணு கேட்க தான்” என்றான் அவளும் வெட்கத்துடனே தலைகுனிய அன்றைய நினைவில் மூழ்கி இருந்தாள் அவளின் 

கவனம் சக்திவேலின் குறட்டை சத்தத்தில் நடப்புக்கு வந்தது. 

 

படுக்கையில் படுத்து கிடந்தவனிடம் அவள் கண்கள் சென்றது தொன்னூறு கிலோ எடையுள்ள மாமிச மலை ஒன்று பட்டு வேட்டி சட்டையில் கிடப்பதை போல இருந்தது நல்ல கார்மேக நிறம் சக்திவேல் உடலுக்கு ஏற்ற எடை கைகள் இரண்டையும் சிலுவையில் அறைந்த கடவுளை போல விரித்து படுத்து கிடந்தான் முறுக்கு மீசை 

கழுத்தில் கிடந்த தங்கசங்கிலி சட்டையின் மேல் இரண்டு பட்டன்கள் திறந்து கிடக்க அவனின் பூனை முடிகள் வெளியே தெரிந்தது அவனை பார்க்க பார்க்க அவளுக்கு கோபம் தான் வந்தது தன் கழுத்தில் கிடந்த தாலியை பார்த்தவளுக்கு இன்னும் கோபம் வந்தது ஒன்றும் செய்ய முடியாத தன் இயலாமையை நினைத்து கண்ணீர் தான் வந்தது. 

 

அழுத விழிகளுடன் அமர்ந்திருக்க மாலை அவளுக்கு ஒப்பனை ஒப்பனை கலைஞர்கள் அங்கே வந்து சேர்ந்தனர்

அவளை அலங்காரம் செய்ய வேண்டாம் வெறுப்பாக அமர்ந்திருந்தாள் அடர் சிவப்பு நீல அதிக வேலைப்பாடுகள் லெகங்ஹா ஒன்றை அணிந்து அதற்க்கு ஏற்றவாறு அணிகலன்கள் அணிந்து கிளம்பி தயாராக அறையின் உள்ளே வந்தான் சக்திவேல் அவனுக்கு எப்போதும் இந்த கோட் ஷூட் எல்லாம் செட் ஆகாது எப்போதும் போல வெள்ளை வேட்டி சட்டை தான் அறையின் உள்ளே வந்தவன் தன்னவளை பார்த்து மயங்கிவிட்டான் “எல்லாரும் சாப்பிட்டு வாங்க” என்று அவளுடன் இருந்தவர்களை துரத்தியவன் பெண்ணவள் அருகில் வந்தான். 

 

அவளை மேல் இருந்து கீழ் வரை பார்க்க ஆரம்பித்தான் அந்த ஆடையின் மேலாடையின் இறக்கம் சற்று அதிகப்படியாக இருக்க தூக்கி நின்ற அவளின் முன்னெழிலில் மூச்சு விட மறந்து போனான் அவன் பார்வையில் அவள் உடல் கூசிப் போக “அழகா இருக்க டி மயிலு” என்க அவளோ கோபத்துடனே அவனை முறைத்து பார்க்க “அய்யோ மாமாவை அப்படி பார்க்காத டி மயிலு அப்புறம் இங்கேயே முதல் ராத்திரி கொண்டாடிபுடுவேன்” என்று கூற அவளுக்கு தூக்கி வாரிப்போட்டது இவனிடம் இருந்து எப்படி தப்பிப்பது என்று நினைத்தவள்  “மாமா எனக்கு பசிக்குது” என்று கூற அவ்வளவு தான் சக்திவேல் மனநிலை உடனே மாறியது “உனக்கே இன்னும் சாப்பாடு தரலையா இரு இப்போவே ஆளுங்களை அனுப்பி வைக்கிறேன்” என்று கூறிவிட்டு வெளியே சென்றான். 

 

அப்பாடா என்று இருந்தது தங்கமயிலுக்கு 

அவனை சமாளித்தாள் போதும் என்று தான் நினைத்தாள் இருவரும் மணமேடைக்கு சென்று நிற்க விருந்தினர்கள் வர ஆரம்பித்தனர் சக்திவேலின் திருமணத்துக்கு சி. எம் முதல் அனைத்து கட்சியினரும் அங்கு வந்து சேர்ந்தனர் 

இருவரும் கால் நோக நின்றிருக்க 

“அக்கா உனக்கு போன்” என்று அருண் அவளிடம் போனை எடுத்து வந்து கொடுக்க 

திரையில் தெரிந்த வெளிநாட்டு எண்ணை பார்த்தவள் மணமேடை என்று கூட பாராமல் கீழே இறங்கி தனியே சென்று பேச ஆரம்பித்தாள் அருண் தான் அழைத்து இருந்தான். 

 

“ஹலோ அருண்” என்று கூற 

“ஹேய் பேபி எப்படி இருக்க” என்று பேசும் போதே அவளின் கண்கள் கலங்கியது தன்னை சமாளித்து கொண்டே “நீங்க எப்போ வரீங்க அர்ஜூன்” என்று கேட்க

“இன்னும் மூனே மாசத்துல அங்க வந்துருவேன்” என்றான் அதற்க்குள் அவளின் அத்தை பாண்டியம்மா அவளை அழைக்க “ஆஹான் வரேன் அத்தை” என்று கூறிவிட்டு அழைப்பை துண்டித்து விட்டு அங்கிருந்து ஓடினாள். 

 

அவளின் கண்கள் கலங்கியிருப்பதை பார்த்த சக்திவேல் “என்ன மயிலு கண்ணு கலங்கியிருக்கு” என்று கேட்க அவளோ மிகவும் பதட்டமடைந்தாள் “அது மாமா கண்ணுல தூசி விழுந்துருக்கும் போல” என்றாள். 

 

அதன் பின் வந்தவர்களை வரவேற்று அனைவரும் விடைபெற்று இரவு பதினொரு மணி ஆனது தங்கமயில் வீட்டின் உள்ளே வர சக்திவேலின் அண்ணன் மனைவிகள் அவளை குளித்துவிட்டு வர சொல்ல அவளும் குளித்து வர அவளுக்கு வெள்ளை நிற கேரளா புடவை ஒன்றை எடுத்து வைத்திருந்தனர் அதை அவளுக்கு அணிவித்து “ஒரு வழியா என் கொழுந்தனோட தவ வாழ்க்கை இன்னையோட முடிய போகுது” என்று கூறிவிட்டு சிரித்து கொண்டே அவளை பால் சொம்புடன் அறையின் உள்ளே அனுப்பி வைக்க தங்கமயில் பயத்துடனே உள்ளே வந்தாள். 

 

சக்திவேல் பட்டு வேட்டி சட்டையில் பெண்ணவளை ஏக்கத்துடனே பார்த்து கொண்டே அமர்ந்திருக்க தங்கமயில் பயத்துடனே வந்தவள் புடவை தடுக்கி விழ ஓடி வந்து அவளின் இடையை பிடித்து கொண்டான் சக்திவேல் “பார்த்து வர மாட்டியா டி” என்று கடிந்து கொள்ள அதற்க்கே அவள் பயந்து அவன் இடையில் இருந்த தன் கையை விலக்க முயற்சிக்க அவன் பிடியோ இறுக்கமாக இருந்தது அவளின் கையில் இருந்த பால் சொம்பை வாங்கி டேபிளின் மீது வைத்தவன். 

 

அவளை தன் கையில் சட்டென தூக்கி கொண்டான் “மாமா மாமா என்ன பண்றீங்க” என்று அவள் பயந்து கதற 

“இந்த நாளுக்காக எத்தனை நாள் தவம் கிடந்தேன் தெரியுமா உன் ஒருத்தி கூட மட்டும் தான் வாழனும்ன்னு இதுவரை எந்த பொண்ணையும் ஏறெடுத்து பார்த்தது இல்லை டி” என்று கூறிக் கொண்டே அவளின் தலையில் சூடியிருந்த மல்லிப்பூவை முகர்ந்து பார்க்க அவளின் விழிகள் பயத்தில் படபடத்தது. 

 

அவளை தூக்கி கொண்டு சென்று படுக்கையில் கிடத்தியவன் அவள் மீது படர்ந்து மெல்ல அவள் இதழ்களில் முத்தமிட போக “மாமா நாம பேசி புரிஞ்சிக்கலாம் மாமா” என்று அவள் பதட்டத்துடனே கூற “இன்னும் என்னத்த டி பேசி புரிஞ்சிக்க சொல்ற” என்று அவன் கேட்டு கொண்டே அவள் கழுத்து வளைவில் முகம் புதைக்க போக “மாமா மாமா” என்று அவள் கத்தி அழைத்து விட 

“இப்போ என்ன டி” என்று அவன் கேட்க 

அவள் திருதிருவென விழிக்க “மாமா அய்யோ வயிறு வலிக்குது” என்று திடீரென அழ அவளிடமிருந்து அடித்து பிடித்து விலகினான் சக்திவேல். 

 

“அய்யய்யோ என்ன டி ஆச்சு” என்று பதறியவன் ஓடிச்சென்று தண்ணீரை எடுத்து வந்து அவளிடம் கொடுக்க அவளும் பயத்தில் ஒரு சொம்பு நிறைய தண்ணீரை குடித்தாள் அவளையே பார்த்து கொண்டே இருந்தவன் “வயிறு வலி நின்னுருச்சா மயிலு” என்று கேட்க 

“இல்லை மாமா இது வேற வயிறு வலின்னு நினைக்கிறேன்” என்று கூற ஆணவன் முகம் வாடியது. 

 

“எத்தனை நாள் ஆகும் வயிறு வலி சரி ஆக” என்று அவன் கேட்க “அவளோ தன் கையை தூக்கி ஐந்து நாள்” என்று ஐந்து விரலை காட்ட தலையில் கை வைத்து கொண்டான் சக்திவேல் தலையணை போர்வை ஒன்றை எடுத்தவன் தரையில் விரித்து படுத்தவன் “நீ மேல படு” என்று கூறிவிட்டு விளக்கை அணைத்து கீழே படுத்து கொண்டான். 

 

“பத்து வருசமா காத்துருந்துட்டு கேவலம் அஞ்சு நாள் காக்க மாட்டானா” என்று தனக்கு தானே புலம்பிக் கொண்டே படுக்க 

அப்பாடா என்று இருந்தது பெண்ணவளுக்கு இப்போதைக்கு ஐந்து நாள் தள்ளி போட்டுவிட்டாள் 

 

இன்னும் வரவிருக்கும் மூன்று மாதங்கள் எப்படி தாக்கு பிடிப்பாள் கடும் பசியில் இருக்கும் பூனையிடம் இருந்து இரையை காப்பது பெரும் கடினம் என்பது பெண்ணவளுக்கு எப்போது புரிய போகிறதோ .

 

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *