காதலின் காவலன் 4,5

அத்தியாயம் 4 

 

“எனக்கு இந்த கல்யாணத்துல சுத்தமா விருப்பம் இல்லை எதாவது காரணத்தை சொல்லி முதல்ல இந்த கல்யாணத்தை நிறுத்துங்க” என்று அவன் திட்டவட்டமாக கூற சரவணனின் அண்ணன் 

தனவேலனோ “என்ன காரணம் எதுக்காக கல்யாணத்தை நிறுத்த சொல்ற பொண்ணை உனக்கு பிடிக்கலையா” என்று கேட்க. 

 

“ஆமாம் பொண்ணை எனக்கு பிடிக்கல ஏன்னா அவள் என் கிளாஸ்ல படிக்கிற பொண்ணு என்னோட ஸ்டூன்ட்ட நான் எப்படி கல்யாணம் அவளை பண்ணிக்க முடியும்” என்று கேட்டான் சரவணன். 

 

“ஏன்டா இதை பொண்ணு பார்க்க போன அன்னைக்கே சொல்ல வேண்டியது தான” என்று சரவணனின் தந்தை கேட்க 

“அப்பா நான் அன்னைக்கு பொண்ணை பார்க்கவேயில்லை இன்னைக்கு தான் பெண்ணையே பார்த்தேன் அவளை மாதிரி ஒரு மக்கு பொண்ணை என் வாழ்க்கையில நான் பார்த்தே இல்லை நான் கணக்கு வாத்தியார் அவளுக்கு சுட்டு போட்டாலும் கணக்கே வராது அவள் எனக்கு வேண்டவே வேண்டாம் எதாவது பண்ணி இந்த கல்யாணத்தை நிறுத்துங்க அவ்வளவு தான்” என்றவன் அங்கிருந்து வெளியேறினான். 

 

“என்ன டா இவன் இப்படி பேசிட்டு போறான்” என்று சரவணனின் தந்தை அவன் அண்ணனிடம் கேட்க “என்னங்க நீங்க அவன் சொல்ற எதையும் கண்டுக்காதிங்க 

பொண்ணு ரொம்ப நல்ல பொண்ணு ஊர்ல அவங்க அப்பாவுக்கும் நல்ல மரியாதை நல்ல குடும்பம் நாமலே தேடினா கூட இப்படி ஒரு சம்மந்தம் கிடைக்காது அதெல்லாம் கல்யாணம் பண்ணி வச்சா சரியா போயிடும் நீங்களும் தான் வாத்தியாரு நான் மழைக்கு கூட பள்ளிக்கூடம் பக்கமே போனது இல்லை நாம நல்லா வாழலையா” என்று அவர் கேட்க “அதுக்கு இல்லை அவனே பிடிவாதக்காரன் எதுக்கு அவனுக்கு பிடிக்காததை செய்யனும்” என்று அவர் கேட்க. 

 

“இப்போ கல்யாணத்தை நிறுத்துனா நம்ம பையனுக்கு யாரு பொண்ணு கொடுப்பா நாள் குறிச்ச அப்புறம் கல்யாணம் நின்னா ராசி இல்லாதவன்னு சொல்ல மாட்டங்க” என்று அவர் கேட்க அவர் கேட்பதும் நியாயமாக தான் அங்கிருந்த அனைவருக்கும் தோன்றியது “கொஞ்ச நாள் விடுங்க கால் கட்டு போட்டா அவனே சரியாகிடுவான்” என்றார் சரவணனின் தாய் 

அவன் தந்தையும் சரியென்று தலையை ஆட்ட. 

 

சரவணன் தன் புல்லட்டை எடுத்து கொண்டு நேரே சென்றது தன் நண்பன் சுரேஷ்சை பார்க்க தான் நேரே சென்று அவன் சட்டையை பிடித்தவன் “டேய் உனக்கு அன்னைக்கு தெரியும் தான அவள் என் ஸ்டுடன்ட்டுன்னு அப்புறம் ஏன் டா என் கிட்ட சொல்லலை” என்று அவன் கேட்க

“டேய் மாப்பிள்ளை உனக்கு தெரியும்ன்னு நினைச்சேன் டா உங்க அப்பாவும் அம்மாவும் சொல்லியிருப்பாங்கன்னு நினைச்சேன் சாரி டா” என்றான் சரவணனனுக்கு தலையே வலித்தது 

அவனுக்கு வரும் மனைவி நல்ல படித்தவளாக இருக்க வேண்டும் என்று மனதில் கோட்டை கட்டி வைத்திருந்தான் 

பெண்ணை பற்றி அவன் வீட்டில் பேசும் போது பள்ளியில் இருக்கிறாள் என்று கூறியவுடன் ஏதோ டீச்சராக வேலை பார்க்கிறாள் என்று தான் நினைத்தான் ஆனால் இப்படி ஒரு திருப்பத்தை அவன் நினைத்து பார்க்கவேயில்லை. 

 

அதேநேரம் வள்ளியின் வீடு அவளும் சரவணனை பற்றி தான் நினைத்து கொண்டு இருந்தாள் மோதிரம் மாற்றும் போது அவன் பார்த்த பார்வை அவள் கண் முன் வந்து போனது காலம் முழுவதும் அடி வாங்கி தான் சாக போகிறோம் என்று நினைத்தாள் அதை நினைத்தே காய்ச்சல் வந்திருந்தது. 

 

மறுநாள் காலை அவள் காய்ச்சலுடனே பள்ளிக்கு வந்தாள் நெற்றியில் விபூதியால் பட்டை அடித்து கொண்டு 

வள்ளி பயத்துடனே மனதில் கடவுளை வேண்டிக் கொண்டு இருக்க கணக்கு பாட வேளை வர அவளுக்கு காய்ச்சல் இன்னுமே அதிகமானது. 

 

சரவணன் வகுப்பின் உள்ளே வந்தவன் பார்வை இன்று முதன் முதலில் வள்ளியிடம் தான் சென்றது அவளை முறைத்து பார்த்தவன் “எல்லாரும் பேப்பர் பேனா எடுங்க முந்தா நாள் நடத்துன கணக்கை இப்போவே எழுதி காட்டுங்க” என்று கூறியவன் கரும்பலகையில் எழுதி போட வள்ளி உயிரை கையில் பிடித்துக்கொண்டு பேப்பர் பேனாவை எடுத்தாள் கண்கள் கலங்கியது அனைவரும் தனித்தனியே சென்று அமர

அவளும் அமர்ந்தாள். 

 

பேப்பரை எடுத்து கேள்வியை எழுதியவளுக்கு அடுத்து என்ன எழுதுவது என்றே தெரியவில்லை அந்த கேள்வியே என்னவென்று அவளுக்கு புரியவில்லை பயத்துடனே அமர்ந்திருந்தவள் எதையாவது எழுதலாம் என்று நினைக்க எதுவும் அவளுக்கு விளங்கவில்லை கண்கள் கலங்க கண்ணீரின் ஒரு துளி பேப்பரில் வந்து விழுந்தது. 

 

அவள் இங்க் பேனாவில் எழுதியிருக்க அந்த இடம் அவள் கண்ணீர் பட்டு அலைந்து போனது ஒவ்வொருவராக எழுதி முடிக்க சரவணன் ஒவ்வொருவரின் வினாத்தாளையும் வாங்கி அப்போதே திருத்த ஆரம்பித்தான் அனைவரும் எழுதி முடித்து விட இறுதியாக வள்ளியின் அருகில் வந்தான் அவன் அருகில் வந்து நின்றவுடன் அவளின் கைகள் நடுங்க ஆரம்பித்தது இதயம் படபடத்தது கண்களில் இருந்து கண்ணீர் வெள்ளத்தை போல் பாய ஆரம்பித்தது. 

 

சரவணன் டேபிளின் மீது தன் கையால் வேகமாக தட்டியவன்

“மா முடிச்சியா இல்லையா” என்று கேட்க அழுதேவிட்டாள் அதற்க்குள் அந்த வகுப்பு முடிய மணி ஒலிக்க வேறு வழியேயின்றி வெளியேறினான் அவனுக்கு கோபம் அவன் தான் மாப்பிள்ளை என்று தெரிந்தும் அவள் திருமணத்துக்கு சம்மதித்தது இருக்கிறாளே என்பதே அவனுக்கு கோபத்தை வரவழைத்து இருந்தது 

அதை எப்படி காட்டுவது என்று தெரியாமல் தான் இன்று அவளை அடி வெளுக்க வேண்டும் என்று தான் நினைத்தான் எப்படியோ வள்ளி தப்பித்தாள்.

 

வள்ளியின் பக்கத்தில் வந்த அவளின் தோழிகள் “ஏன் டி வள்ளிக்கு எதுக்கு இப்படி அழுவுற” என்று கேட்டு கிண்டல் அடிக்க “ச்சீ போங்க டி” என்று கத்தி விட்டு அங்கிருந்து ஓடியேவிட்டாள் வள்ளி நேரே ஓடி வந்து கழிவறையின் உள்ளே கதவடைத்துவிட்டு நிற்க இப்போதும் அவள் கைகள் இப்போதும் நடுங்கியது. 

 

இத்தனை பயம் உள்ளவள் திருமணத்துக்கு பிறகு அவனுடன் எப்படி காலம் தள்ள போகிறாளோ அதேநேரம் கோபத்துடனே ஆசிரியர்கள் அறையின் உள்ளே வந்தான் சரவணன் அந்த அறையில் விமலா டீச்சர் மட்டும் அமர்ந்திருக்க அங்கு யாரும் இல்லை விமலா டீச்சருக்கு சரவணன் என்றால் உயிர் பல முறை அவனிடம் தன் விருப்பத்தை கூறியிருக்க அவன் அவரை கண்டு கொண்டதாக இல்லை. 

 

விமலா டீச்சருக்கு மட்டும் அல்ல அந்த பள்ளியில் இருந்த பல பெண்களுக்கு அவள் மீது ஒரு ஈர்ப்பு இருந்தது காரணம் அவன் எந்த பெண்ணையும் இதுவரை ஏறெடுத்து பார்த்ததில்லை குறிப்பாக அவன் பெண்களிடம் பேசியது கூட இல்லை அவன் உண்டு அவன் வேலை உண்டு என்று இருப்பான். 

 

அவன் தன் இருக்கையில் வந்து அமர 

“சரவணன் சார்” என்று விமலா அழைக்க கண்டுகொள்ளாதவனை போல புத்தகத்தை தலை குனிந்து பார்த்து கொண்டு இருந்தான் அவர் மீண்டும் “சரவணன் சார்” என்று அழைக்க நிமிர்ந்து பார்த்தவன் அவரை எரித்து விடுவதை போல ஒரு பார்வை பார்த்தவன் “என்ன வேணும் மேடம் உங்களுக்கு” என்று கோபத்துடனே கேட்க அவன் முகத்தை பார்த்தே பயந்தவர் அமைதியாக அமர்ந்து கொண்டார். 

 

திருமணத்துக்கு நாட்களும் நெருங்கி கொண்டே இருந்தது சரவணன் வீட்டலும் வள்ளி வீட்டிலும் வேலைகள் தடபுடலாக நடக்க சரவணன் எவ்வளவு சொல்லியும் அவர்கள் காது கொடுத்து கேட்பதாக இல்லை வள்ளி வீட்டில் திருமணம் ஆனவுடன் பள்ளியிலிருந்து நிறுத்திவிடுவதாக கூறியிருந்தனர் அவள் யாருக்காக பள்ளிக்கூடம் பக்கம் போகவே கூடாது என்று நினைத்தாளோ அவனே இன்னும் சில நாட்களில் அவளின் கணவனாக மாற போக இனி அவள் பள்ளிக்கு சென்றால் என்ன செல்லாமல் இருந்தால் என்ன. 

 

ராஜதுரை முழு நேர தேவதாசாக மாறி தாடி வளர்த்து இரவெல்லாம் குடித்து கொண்டு சுற்றிக் கொண்டு இருந்தான் அன்று தாமரைக்கு பதினெட்டாவது பிறந்தநாள் தேன் மிட்டாயுடன் அவனை பார்க்க வந்தாள் ஒரு மஞ்ச பையில் அவன் வெள்ளை சட்டையை துவைத்து அழுக்கில்லாமல் எடுத்து வந்தாள் வள்ளி அவன் காதலை நிராகரித்த அன்று தான் அவனை கடைசியாக அவள் பார்த்தது அதன் பின் இன்று தான் அவன் வீட்டுக்கு வருகிறாள் தாமரை.

 

இன்னும் சொல்லப்போனால் முதல் முறையாக அவன் வீட்டுக்கு வருகிறாள் 

அவள் வீட்டின் உள்ளே வர வீடே பாழடைந்து கிடந்தது பெண் இல்லாத வீடு பின் எப்படி இருக்கும் பெரிய வீடு நல்ல வசதியான குடும்பம் தான் ஆனால் வீடே ஒழுங்கில்லாமல் தான் கிடந்தது நடந்து உள்ளே வந்தவள். 

 

ராஜதுரை எங்கு இருக்கிறான் என்று கண்களால் தேடி கொண்டே வரே 

ஒரு அறையின் உள்ளே சென்று பார்க்க 

“இங்கே என்ன பண்ற” என்று தன் கரகரத்த ஒரு குரல் அவள் பின்னே இருந்து கேட்க பதட்டத்துடனே திரும்பினாள் தாமரை அவளை விட நல்ல உயரமாக இருந்தான் 

யார் என்று சரியாக தெரியவில்லை அந்த அறை இருளாக இருந்ததில் நன்றாக கண்ணை திறந்து பார்க்கும் போது தான் அது ராஜதுரை என்றே தெரிந்தது. 

 

“எனக்கு பிறந்தநாள் உனக்கு தேன்மிட்டாயை கொடுக்க வந்தேன்” என்று அவன் முன் கிண்ணத்தை நீட்ட 

அப்படியே முழு கிண்ணத்தையும் கையில் பிடுங்கி கொண்டான் ராஜதுரை 

ஒரு தேன் மிட்டாயை எடுத்து வாயில் போட்டவன் “இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்” என்று கூற அவளும் லேசாக புன்னகைக்க “சரி சரி எங்க டி சட்டை” என்று அவன் கேட்க “ஐய்ய உன் சட்டையை நானா போட்டுக்க போறன் இந்தா” என்று அவன் கையில் கொடுக்க. 

 

“சரி சரி கிளம்பு” என்று அவன் கூற 

“கிளம்ப தான் போறேன் உன் குடும்பம் நடத்த ஒன்னும் வரலை” என்று முகத்தை திருப்பியவள் அங்கிருந்து வெளியேறினாள் ராஜதுரையும் அவளுடன் அறையில் இருந்து வெளியே வர எதிரே அவன் தந்தை வந்தார் இருவரையும் சந்தேகமாக பார்க்க தாமரை அங்கிருந்து ஓடியேவிட்டாள் ராஜதுரை அருகில் வந்தவர் “டேய் இங்க என்ன டா நடக்குது”  என்று கேட்க “என்னும் இல்லையே” என்று அவன் கூற “உன் போக்கே சரியில்லை 

ஊருக்குள்ள என் மானத்தை வாங்கிடாத எவன் முன்னாலையும் என்னால கை கட்டி நிக்க முடியாது பார்த்துக்க” என்று எச்சரித்து விட்டு சென்றார்.

அத்தியாயம் 5  

 

ராஜதுரையின் தந்தை அவனை கடந்து செல்ல போக “யோவ் நில்லு” என்று கூறிக் கொண்டே கோபத்துடனே அவரின் குறுக்கே சென்று நின்றான் அவன் அவரை பார்த்து முறைத்து வைக்க அவரோ அவனை கோபத்துடனே பார்த்தார் “உன்னால தான என் அம்மா செத்து போனாங்க பெருசா நல்லவன் மாதிரி வந்து பேசுற எனக்கு அறிவுரை சொல்ற தகுதியே முதல்ல உனக்கு இல்லை 

எனக்கு தெரியும் நான் எப்படி இருக்கனும்ன்னு உன் வேலை என்னவோ அதை பாரு பெருசா வந்துட்டான் பேச” என்றவன் அந்த வீட்டில் இருந்து கோபத்துடனே வெளியேறினான் 

அவன் தந்தை மனம் கலங்க அவனை பார்த்து கொண்டே நின்றிருந்தார். 

 

சிறுவயதில் இருந்தே ராஜதுரைக்கு தன் தந்தையை சுத்தமாக பிடிக்காது அவன் தாய் உயிரோடு இருக்கும் போதே இவர் இன்னொரு பெண்ணுடன் இருப்பதை தன் இரு கண்ணால் பார்த்தவன் அவனுக்கு அவன் தந்தையை துளி அளவு கூட பிடிக்காது பணம் சொத்து இருந்ததால் ஊரே அவரை மதித்தாலும் அவனின் தந்தை வயதில் பெண்கள் விஷயத்தில் அப்படி இப்படி இருந்தது ஊருக்கே தெரிந்து தான் இருந்தது அவரின் முன்னே நன்றாக பேசினாலும் பின்னே பழிப்பவர்கள் தான் அதிகம் அதனால் தான் ராஜதுரைக்கு 27 வயதாகியும் யாரும் இதுவரை பெண் கொடுக்கவில்லை. 

 

வீட்டை விட்டு வெளியே வந்து பிறகும் ராஜதுரையின் கோபம் அடங்கவில்லை வரப்பில் அமர்ந்து தன் வயலை வேடிக்க பார்த்து கொண்டே இருக்க மீண்டும் அவன் முன் வந்து நின்றாள் தாமரை இன்று முதல் முறையாக புடவை கட்டி வந்திருந்தாள் 

அவள் ராஜதுரையின் வீட்டை விட்டு செல்லும் போது அவன் தாய் புடவை ஒன்றை எடுத்து சென்றிருக்க அதை கட்டி வந்திருந்தாள் அவனுக்காக அசையோட காட்ட வந்திருந்தாள். 

 

“ஏய் ராஜதுரை” என்று அவள் அழைக்க சத்தம் வந்த திசையில் அவன் திரும்பி 

பார்க்க பெண்ணவளை பார்த்து விழிகளை விரித்தான் அதிர்வுடனே எழுந்து நிற்க 

“இந்த புடவை எனக்கு நல்லா இருக்கா” என்று கேட்க அடுத்த கணம் அவள் அருகில் கோபத்துடனே நடந்து சென்றவன் தன் இடையில் இருந்த குறுங்கத்தியை எடுத்து அவள் கழுத்தில் வைத்தான் “எதுக்கு டி என் அம்மா புடவையை எடுத்துட்டு போன” என்று கேட்க அவன் நெருக்கம் அவன் கழுத்தில் வைத்த கத்தியை பார்த்து அவளுக்கு பயம் வர திருதிருவென விழித்தவளின் கண்கள் கலங்கியது அவள் அழுவதை பார்த்தவன் கழுத்தில் இருந்த கத்தியை எடுத்தான் “இதை பாரு தாமரை உன் போக்கே சரியில்லை உனக்கு ஏத்தவன் நான் இல்லை உனக்கும் எனக்கும் ஏணி வச்சாலும் எட்டாது உன் மனசுல அப்படி எதாவது ஆசையை வளர்த்துக்கிட்டு திரியாத” என்று கோபத்துடனே பேச. 

 

தாமரைக்கு வந்ததே கோபம் “நீ என்ன பெரிய ரஜினிகாந்த்தா உன் மேல எனக்கு ஆசை வர புடவை நல்லா இருக்கேன்னு எடுத்து கட்டிட்டு வந்தா ரொம்ப பேசுற என் மனசுல எந்த எண்ணமும் இல்லை” என்றவள் அடுத்த கணம் அங்கே இருந்த சோலைக்காட்டு பொம்மை போட்டிருந்த சட்டையை கழட்டியில் அவனுக்கு மறுபுறம் திரும்பி நின்று புடவையை கண்ணீருடனே கழட்டியவள் சட்டையை மாட்டிக் கொண்டு அவன் மீது புடவையை தூக்கி எறிந்தாள் “நீயே வச்சிக்க உங்க அம்மா புடவையை” என்று அழுது கொண்டே கூறிவிட்டு அங்கிருந்து நடந்து சென்றாள் அவள் கண்களில் இருந்து கண்ணீர் மட்டும் நிற்காமல் வழிந்து கொண்டே இருந்தது எதையோ எதிர்ப்பார்த்து அவள் மனம் ஏமாந்து போய் இருந்தது. 

 

ராஜதுரை தன் தாயின் புடவையை கையில் வைத்திருக்க அதில் தாமரைக்கே உண்டான மணம் வீசியது அதை உள் வாங்க கூட அவன் தயாராக இல்லை கையில் இருந்து தூக்கி வீசினான் இருக்கும் போது ஒரு பொருளின் அருமை தெரியாது இல்லாத போது தான் அதன் அருமை புரியும். 

 

வீட்டுக்கு வந்த தாமரை அழுகையுடனே சென்று கதவடைத்து கொள்ள அவளின் தாய் அவளை புரியாத ஒரு பார்வை பார்த்தவர் சந்தேகத்துடனே அவளின் பின்னே வந்து கதவை தட்ட எழுந்து வந்து கதவை திறந்தாள் பெண்ணவள் “இப்படியே எங்க டி போய்ட்டு வர” என்று கேட்க “ம்ம் என் மாமியார் வீட்டுக்கு என்னை கொஞ்ச நேரம் தொல்லை பண்ணாத மா” என்று கத்தியவள் மீண்டும் கதவடைத்துவிட்டு கட்டிலில் விழுந்து அழுக ஆரம்பித்தாள். 

 

ஏன் இந்த அழுகை எதற்காக இந்த வருத்தம் என்று அவளுக்கும் அவள் மனதுக்கும் தான் தெரியும். 

 

இங்கே வள்ளி பள்ளிக்கூடம் செல்லவே மாட்டேன் என்று அழுது அடம் பிடிக்க 

அவளின் அவளை மிரட்டி அனுப்பி வைத்தார் “கழுதை ஒழுங்கா பன்னிரெண்டாவது பாஸ்சாகு அப்போ தான் உன் புருசனுக்கு கெளரவமா இருக்கும்” என்று விரட்டி விட அழுது கொண்டே பள்ளிக்கு சென்றாள் சரவணன் கண்ணுக்கே அகப்படாமல் கடைசி இருக்கையின் ஓரத்தில் அமர்ந்து கொண்டாள். 

 

வள்ளி-சரவணன் திருமண நாளும் வந்தது விடிந்தாள் திருமணம் வள்ளி அழுது கொண்டே இருக்க அவளுக்கு இருமல் ஜலதோஷம் காய்ச்சல் அனைத்தும் அழையா விருந்தாளியாக ஒட்டிக் கொண்டது தாமரை மணமகள் அறையின் உள்ளே அவளின் கழுத்தில் கை வைத்து தொட்டு பார்க்க “என்ன அக்கா உடம்பு இப்படி அனலா கொதிக்குது” என்று கேட்க

“தெரியலை” என்றாள் வள்ளி 

தாமரைக்கு அவளை பார்க்கவே பாவமாக இருக்க வீட்டுக்கு சென்று கசாயம் எடுத்து வந்து கொடுத்தாள் அதன் பின் கொஞ்சம் பரவாயில்லைமால் இருந்தது. 

 

மறுநாள் காலை அவள் மணக்கோலத்தில் சரவணன் பக்கத்தில் வந்து மணமேடையில் அமர சரவணன் அவளை கண்களாலேயே எரிப்பதை போல பார்த்தான் ராஜதுரை முதல் வரிசையில் அமர்ந்து அவளை பார்த்து கொண்டு தான் இருந்தான் ஐயர் “கெட்டிமேளம் கெட்டிமேளம்” என்று குரல் கொடுக்க சரவணன் வள்ளி கழுத்தில் தாலி கட்டி முடிக்க அவன் மீது மயங்கி விழுந்தாள் _

“பொண்ணு மாப்பிள்ளையை பார்த்து மயங்கிருச்சு” என்று சுற்றி இருந்தவர்கள் கிண்டலடிக்க அவள் முகத்தில் தண்ணீர் எழுப்ப பெண்ணவளும் எழுந்தமர்ந்தாள். 

 

மணமக்கள் பெரியவர்களின் காலில் விழுந்து ஆசி பெற்று கொள்ள அவர்களும் வாழ்த்தினர் வள்ளியின் பாட்டி கண்ணீர் விட சடங்குகள் அனைத்தும் நடைபெற சரவணன் இஞ்சி தின்ன குரங்கை போல முகத்தை வைத்திருந்தான் இறுதியாக அனைத்தும் முடிந்து வள்ளியும் சரவணமும் மறு வீடு கிளம்பி செல்ல வள்ளி தன் பாட்டியை கட்டி அணைத்து அழுது கொண்டே இருந்தாள் இறுதியாக தாமரையையும் கட்டிக் கொண்டு அழுக அவளும் அழுதுவிட்டாள். 

 

சரவணன் காரில் அமர்ந்திருக்க அவளின் செயல் அவனுக்கு கோபத்தை வரவழைக்க 

“எவ்வளவு நேரம் அழுவிங்க இப்போ வர போறியா இல்லையா” என்று அவன் கத்த 

வள்ளி பயத்துடனே தன் அப்பத்தாவிடம் இருந்து விலகி கண்ணீரை துடைத்து கொண்டு அவன் பக்கத்தில் வந்து அமர கார் அங்கிருந்து சென்றது. 

 

தாமரை கார் கண்ணை விட்டு மறையும் வரை பார்த்து கொண்டு இருந்தாள் எப்போதும் போல் இல்லாமல் இன்று புடவை கட்டியிருந்தாள் தன்னை தூரத்தில் யாரோ பார்ப்பதை போல அவளுக்கு தோன்ற திரும்பி பார்த்தாள் அங்கே ராஜதுரை தான் நின்றிருந்தான் அவனை பார்த்தவுடன் அவள் முகத்தை திருப்பி கொண்டு சென்று விட ராஜதுரையும் அங்கிருந்து சென்றான். 

 

இருவரும் மறுவீட்டுக்கு வந்து சேர சரவணன் அண்ணி லதா வந்து இருவருக்கும் ஆலம் சுற்றினாள் இருவரும் உள்ளே வர வள்ளி வருவதற்க்கு முன்னே வேகமாக நடந்து உள்ளே சென்ற சரவணன் தன் தோளில் இருந்த பட்டு துண்டை கழட்டி வீசி எறிந்துவிட்டு முன்னே சென்று விட வள்ளி பாவமே உருவாய் நின்றிருந்தாள் வீட்டில் இருந்த ஒருவர் கூட அவனை தடுக்கவில்லை தன் அறையின் உள்ளே சென்று புல்லட்டை சாவியை எடுத்து கொண்டு அங்கிருந்து கிளம்பினான். 

 

வள்ளி அவனையே பார்த்து கொண்டே நிற்க லதா எதுவும் சொல்லாமல் உள்ளே சென்று விட அவரவர் அவர்கள் வேலையை பார்க்க சரவணன் தாயார் மட்டும் அவள் அருகில் வந்தவர் சமாளிக்கும் விதமாக ஒரு நமட்டு சிரிப்பு சிரித்து அவளும் பதிலுக்கு வராத சிரிப்பை முகத்தில் வரவழைத்து உதட்டை வளைக்க 

“நீ அந்த அறைக்கு போய் கொஞ்சம் நேரம் தூங்கி எழு அது சரவணனோட அறை தான்” என்க அவளும் சரியென தலையை ஆட்டி விட்டு சென்று தன் பெட்டியை அந்த அறையில் வைத்துவிட்டு தான் அணிந்திருந்த நகைகளை கழட்டி வைத்துவிட்டு படுத்து கொண்டாள். 

 

வள்ளி மெல்ல கண்ணை மூடினாள் நேற்றிலிருந்து அவள் சுத்தமாக உறங்கவில்லை அசதியில் படுத்தாள் அவளுக்கு உறக்கமா வந்தது அவளின் கணக்கு வாத்தி கணவன் தான் மனக்கண்ணில் வந்து பயமுறுத்தினான் பதறி அடித்து கொண்டு எழுந்து அமர்ந்தவள் கண்ணீரும் பயத்துடனே அமர்ந்திருந்தாள் அவன் அறையை சுற்றி பார்க்க எங்கும் புத்தகங்களால் நிரம்பி வழிந்து கொண்டே இருந்தது அந்த அறையை பார்த்தே அவளுக்கு பயம் வந்தது சிறு வயதில் இருந்தே அவளுக்கு படிப்பு சுட்டு போட்டாலும் வராது அவள் பன்னிரெண்டாம் வகுப்பு வரை வந்ததே உலக சாதனை தான். 

 

அதேநேரம் சரவணன் தன் கோபத்தை அடக்கும் வழி தெரியாமல் பள்ளிக்கு வந்து சேர்ந்தான் ஆசிரியர்கள் அறையின் உள்ளே வந்து தலையில் கை வைத்து அவன் அமர்ந்திருக்க அவனுடன் வேலை செய்யும் மணிகண்டன் உள்ளே வந்தார் பட்டு வேட்டி சட்டையில் தலையில் கை வைத்து அமர்ந்திருந்தவன் அருகில் சென்றவர் “என்ன சார் இன்னைக்கு உங்களுக்கு கல்யாணம் தான இங்க வந்து உட்கார்ந்து இருக்கிங்க” என்று அவர் கேட்க

அவரை முறைத்து பார்த்தவன் 

“ஏன் ஸ்கூலுக்கு வரக்கூடாதா உங்களுக்கு என்ன சார் பிரச்சனை” என்று முறைப்புடனே கேட்க “கல்யாணம் ஆன முதல் நாளே கல்யாண வாழ்க்கை வெறுத்து போச்சா சார்” என்று மணிகண்டன் அவனின் பக்கத்தில் அமர்ந்து கேட்க “சார் பிளீஸ் கொஞ்சம் நேரம் என்னை தனியா விடுங்க நான் தனியா இருக்க தான் இங்க வந்தேன்” என்றான் கோபத்துடனே அதன் பின் அவரும் எதுவும் கேட்க்கவில்லை மீண்டும் அவன் வீட்டுக்கு நள்ளிரவு ஆனது வீடே அடங்கி இருக்க அவன் அறையில் மட்டும் வெளிச்சம் இருந்தது உள்ளே சென்று பார்க்க அவன் அறை அலங்காரம் செய்யப்பட்டு இருக்க வள்ளி அமர்ந்த படியே உறங்கி வழிந்து கொண்டு இருந்தாள். 

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *