காதலின் காவலன் 9
அத்தியாயம் 9 சேதுபதியும் வள்ளியும் தம்பதிகளாக கோவில் வாசலை விட்டு வெளியே வரவும், வள்ளியின் சொந்த பந்தங்களும் அவளது தாய் தந்தையும் அங்கே வந்து சேரவும் சரியாக இருந்தது தன் மகளின் கழுத்தில் புதிதாக மஞ்சள் தாலி தொங்குவதை பார்த்த வள்ளியின் தாய்க்கு கட்டுக்கடங்காத கோபம் வந்தது. “ஏன் டி… நான் பெத்த மூதேவி உனக்கு எவ்வளவு திமிரு இருந்தா என் முன்னாடியே அவன் கையை பிடிச்சுட்டு வந்து நிப்ப உனக்கு சோடி போட்டு நிக்க வேற ஊர்ல வேற எவனும் கிடைக்கலையா இவன் தான் கெடச்சானா ஆக்கங்கெட்டவளே” என்று கத்தியபடி அவளை வசைப்பாடிக் கொண்டே ஓடிவந்தவர், வள்ளியின் தலை முடியை கொத்தாகப் பிடித்து இழுக்க முயன்றார் ஆனால் அதற்குள் சேதுபதி வள்ளியின் கையை இறுக்கமாகப் பிடித்துக் கொண்டான் அவனது கையை விடாமல் வள்ளியும் இறுக்கமாகப் பற்றிக் கொண்டாள். அந்த ஒரு பிடியில் அவளுக்கு இருந்த பயமும், தன்னைக் காப்பாற்ற யாராவது…