களவோடு காதல் 8,9
அத்தியாயம் 8
வீரா கைக்குட்டையால் தன் இதழை துடைத்துவிட்டு அசடு வழிந்து கொண்டே
தன் நண்பன் சுடலையிடம் கொடுக்க
“எனக்கு வேண்டாம் மாப்பிள்ளை உனக்கு தான் அடிக்கடி தேவைப்படும் நீயே வச்சிக்க” என்க வெட்கம் அழையா விருந்தாளியாக வந்து அவன் முகத்தில் ஒட்டிக் கொண்டது வீராவின் முகத்தில் தெரிந்த வெட்கத்தை பார்த்தவன் “என்ன மாப்பிள்ளை வெட்கமெல்லாம் படுற பார்த்து மாப்பிள்ளை கல்யாணத்துக்கு முன்னாடியே புள்ளை பெத்துற போற” என்று கூற “ஏன் நான் பெத்தா என்ன என் வயசுல உனக்கு மூனு புள்ளை இல்லை நான் ஒரு புள்ளை பெத்துக்கிட்டா உனக்கு என்ன” என்று உண்மையான கோபத்துடன் கேட்க
“அடப்பாவி நான் எதுவும் பேசுல டா நீ மேடையில இருக்க பொண்ணு மாப்பிள்ளையை பாரு” என்று கூற வீராவின் பார்வை இப்போது மீண்டும் பெண்ணவளிடம் வந்தது.
பெண் வீட்டார் மாப்பிள்ளை வீட்டார் இருவரும் நிச்சய தாம்பூலத்தை மாற்றி கொள்ள மணமக்கள் இருவரும் மணமேடையில் அமர்ந்திருந்தனர் மருந்துக்கு கூட கண்மணி தன் பக்கத்தில் இருந்தவனை பார்க்கவில்லை
அவள் பார்வை மொத்தமும் அங்கே முன் வரிசையில் அமர்ந்து கால் மேல் கால் போட்டு தன் நண்பன் சுடலையிடம் பேசிக்கொண்டு இருந்த வீராவிடம் தான் இருந்தது பட்டு வேட்டி சட்டையில் ஏதோ அவன் தான் மாப்பிள்ளை போல் கிளம்பி வந்திருந்தான் பல முறை அவள் பார்த்து பழகிய முகம் தான் ஆனால் இன்று தான் முதல் முறையாக நிதானமாக பார்க்கிறாள் பட்டு வேட்டி சட்டையில் சுருள் முடியுடன் மாநிறத்துக்கு சற்று குறைவான நிறத்தில் இருந்தான் உண்மையை செல்லப்போனால் அவன் மாநிறம் தான் ஆனால் வெயில் மழை என்று பாராமல் வயலில் நின்று வேலை பார்த்ததில் நிறம் குறைந்து இருந்தது அவன் முறுக்கி விட்ட மீசையும் லேசான மழிக்கப்படாத தாடி
சட்டையில் மேல் இரண்டு பட்டன்கள் திறந்து கிடக்க காற்று வாங்கி கொண்டு இருந்தான்
‘இவரால மட்டும் எப்படி ஒன்னுமே நடக்காத மாதிரி சாதாரணமா இருக்க முடியுது’ என்று நினைத்தாள் ஏனோ தன் பக்கத்தில் இருந்தவனுடன் அமர்ந்திருப்பது கூட அவளுக்கு அருவருப்பை கொடுத்தது.
அவளின் தோழி மலர் அவள் அருகில் வந்தவள் அவள் உதட்டில் கலைந்து இருந்த உதட்டு சாயத்தை சரி செய்துவிட்டு “அடியேய் கண்மணி கொஞ்சமாவது சாதாரணமா இருக்க பாரு டி வீரா அண்ணாவேயே பார்த்துக்கிட்டு இருக்காத எல்லாரும் உன்னை தான் பார்க்குறாங்க” என்று அவள் காதில் மட்டும் கேட்க்கும் படி கூறிவிட்டு சென்றாள்.
அப்போது தான் அவளுக்கே புரிந்தது அவள் தன் மாமனை மட்டும் பார்த்து கொண்டே இருப்பது தன் பார்வையை மெல்ல கஷ்டப்பட்டு திசை திருப்பினாள் நிச்சய தாம்பூலம் மாற்றப்பட்ட பின் மாப்பிள்ளை பெண் இருவரிடமும் நிச்சய மோதிரம் கொடுக்கப்பட பெண்ணவள் கையை பிடித்தான் அந்த மாப்பிள்ளை வீராவுக்கு எங்கிருந்து தான் அத்தனை கோபம் வந்ததோ உடனே எழுந்து நிற்க சுடலை அவனை பிடித்து கொண்டான் “டேய் மாப்பிள்ளை எதுவும் பிரச்சனை வேண்டாம் டா” என்று கூறிக் கொண்டே இருக்கும் போதே கண்மணி அந்த மாப்பிள்ளை பையனின் கையில் இருந்த தன் கையை எடுத்து கொள்ள மோதிரம் கீழே விழுந்தது உடனே அதை கீழே குனிந்து எடுத்த கண்மணி “நானே போட்டுக்கிட்டேன்” என்று தன் விரலில் அந்த மோதிரத்தை விரைவாக மாட்டிக் கொண்டாள்.
அந்த மணமகன் அவளை வித்தியாசமாக பார்க்க கண்மணி அவன் கையை கூட பிடிக்காமல் மோதிரத்தை மட்டும் மாட்டிவிட இனிதாக நிச்சயம் முடிந்தது வீரா கண்மணியை முறைத்து கொண்டே நிற்க பெண்ணவளுக்கு பயம் வந்து தொற்றி கொண்டது அதன் பின் அனைவரும் சாப்பிட கிளம்ப கண்மணி “எனக்கு தலை வலிக்குது மா நான் ரூமுக்கு போகவா” என்று கேட்டுவிட்டு தன் தாயை பார்க்க அவள் தாய் அவளை பார்த்து முறைத்தவர் “மாப்பிள்ளை என்ன நினைப்பாரு டி ஒழுங்கா வா ரெண்டு பேரும் ஜோடியா ஒரு நாலு போட்டோ எடுத்துக்கங்க” என்று கூற “அம்மா ரொம்ப தலை வலிக்குது மா” என்றாள் அவள் கூறியது அந்த மாப்பிள்ளை சிதம்பரத்தின் காதிலா விழுந்து விட “என்னாச்சு கண்மணி” என்று கேட்க
“அது..தலைவலிக்குது” என்றாள் அவன் முகத்தை கூட பார்க்காமல் “சரி நீ போய் ரூம்ல ஓய்வு எடு” என்று கூற அவள் தாய் ஏதோ கூற வர “பரவாயில்லை அத்தை நீ போ கண்மணி” என்க விட்டால் போதும் என்பதை போல
அறைக்குள் ஓடியேவிட்டாள் இங்கேயே இருந்தாள் எப்படியும் அவள் மாமன் நிச்சயமாக எதாவது பிரச்சனை செய்துவிடுவான் என்ற பயம் அவளுக்கு.
வீரா அவளை முறைத்து கொண்டே நிற்க அவன் பார்வை கூட அவளை பின் தொடர்வதை போல ஒரு உணர்வு அதனுடன் பயம் அவசர அவசரமாக ஓடி தன் அறைக்குள் புகுந்து கதவடைத்து கொண்டாள் அப்போதும் அவளின் மனம் சீரான பாடில்லை இதயம் படபடவென அடித்து கொள்ள அனைவருக்கும் சாப்பிட வெளியே பந்தல் போடப்பட்டு இருக்க
அனைவரும் வெளியே இருந்தனர் பந்தியை கவனித்து கொண்டு இருந்த வீரா இரண்டு இரண்டு படிகட்டுகளாக தாவி ஏறி பெண்ணவளின் அறையின் வெளியே நின்று கதவை தட்ட அவன் தட்டும் தினுசிலேயே தெரிந்துவிட்டது அது யார் என்று உடனே கதவை திறக்க யோசித்து கொண்டே தயக்கத்துடனே அவள் கதவை திறக்க அடுத்த நிமிடம் கதவை திறந்து கொண்டே புயலென உள்ளே வந்தான் அவள் மாமன்.
பெண்ணவள் பயத்துடனே பின்னே செல்ல அவன் அவளை நெருங்கி வர “வா டி என் வீட்டுக்கு போலாம் போற வழியிலையே எதாவது ஒரு கோவில்ல தாலியை கட்டிட்றேன் கிளம்பு” என்றவன் பேசிக்கொண்டேஅவள் கையை பிடித்து அவள் விரலில் இருந்த மோதிரத்தை கழட்டி தூக்கி எறிந்தான் “எவ்வளவு தைரியம் இருந்தா என் முன்னாடியே அவன் உன் கையை பிடிப்பான்” என்று கூறிவிட்டு கோபத்துடன் பல்லை கடித்தவன்
“வா போலாம்” என்று அவளின் கையை பிடித்து இழுத்து செல்ல போக அவன் கையில் இருந்த தன் கையை எடுக்க அவள் போராடி கொண்டு இருந்தாள்.
“மாமா இதெல்லாம் சரி வராது நீங்க வீட்டுக்கு போங்க என் அப்பா அம்மாவுக்கு தெரிஞ்சா அவ்வளவு தான் பெரிய பிரச்சனை ஆகிடும்” என்று கூற “என்ன டி சரி வராது என்ன சரி வராது என்னையே கண்ணு விலகாம திங்குற மாதிரி பார்த்தியே ஏன் உன் பக்கத்துல இருந்தானே அந்த காண்டாமிருகம் அவனை பார்க்க வேண்டி தான எதுக்கு டி என்ன பார்த்த” என்று கேட்க “அது..அது நீங்க எதாவது பிரச்சனை பண்ண போறிங்களோன்னு பயத்துல பார்த்தேன்” என்றாள் கண்மணி தடுமாற்றத்துடனே வெளியே வந்தது அவள் குரல்.
“ஓஹோ அப்போ என்னை பிடிக்கல அப்படி தான” என்று கேட்டு கொண்டே அவன் அருகில் நெருங்கி வர அவளோ பயந்த விழிகளுடன் அவனை பார்த்தாள் அவன் சத்தமாக பேச கீழே இருந்து யாராவது வந்து விடுவார்களோ என்ற பயம் அவளுக்கு அழுகையே வந்துவிட
அவளை பார்த்த மறு கணம் வீராவின் மொத்த கோபமும் குறைந்தது அவள் மீது இரக்கம் சுரந்தது “எதுக்கு டி இப்போ அழற” என்று கேட்க அவள் இன்னும் தேம்பி தேம்பி அழுக ஆரம்பித்தாள் “ஏன் எல்லாரும் சேர்ந்து என்னை இப்படி சித்ரவதை பண்றிங்க” என்று கேட்க அவனால் அவளிடம் அதற்க்கு மேல் அவளிடம் வாதம் செய்ய முடியவில்லை அவனால் அவள் கன்னத்தில் வழிந்த கண்ணீரை துடைத்தவன் “சொன்ன கேளு டி தங்கம் நீ அழறத என்னால பார்க்க முடியல நாம ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கலாம் உன்னை மாமா நல்லா பார்த்துக்க மாட்டனா சொல்லு டி” என்று கேட்டுவிட்டு அவளின் கன்னத்தை பிடித்து முகத்தை பார்க்க “என் அப்பா அம்மா சம்மதிக்க மாட்டாங்க மாமா நீங்க வேற பொண்ணை…” என்று கூறி முடிக்கும் முன் அவள் கன்னத்தில் பளார் என்று ஒரு அறை விழுந்தது.
அவன் கோபத்தை அடக்கும் வழி தெரியாமல் இன்னொரு அறை விட போனவன் தன்னை தானே அடக்கி கொண்டு “சரி டி நீ வரவே வேண்டாம் உன்னையை எப்படி கல்யாணம் பண்ணனும்ன்னு எனக்கு தெரியும்” என்றவன்
தன் கழுத்தில் இருந்த தங்க செயினை எடுத்து அவள் கழுத்தில் மாட்டியவன் “உனக்கும் எனக்கும் நிச்சயம் முடிஞ்சு போச்சு இனி நீ என் பாதி பொண்டாட்டி சீக்கிரமே உன் கழுத்துல தாலியை கட்டுவேன்” என்று அவளின் அருகில் நெருங்கி நின்று அவன் பேசிக் கொண்டு இருக்க “ஏய் கண்மணி சாப்பிட வரலையா நீ” என்று கூறிக் கொண்டே அறையின் உள்ளே வந்தாள் மலர்.
கதவு திறந்து இருந்ததால் அவள் சாதாரணமாக உள்ளே வந்து விட இருவரும் நின்றிருந்த நெருக்கத்தை பார்த்து அவள் விழி விரிக்க அவளை பார்த்தவுடனே இருவரும் விலகி நிற்க மலர்விழி இருவரையும் இப்போது இன்னும் அதிர்வுடன் பார்க்க “மாமா வெளிய போங்க” என்றாள் கெஞ்சுவதை போல கண்மணி.
வீராவும் இங்கிருந்து அவளை சங்கடப்படுத்த வேண்டாம் என்று நினைத்தவன் வெளியே சென்றுவிட்டான் மலர்விழி அவன் சென்றவுடன் பெண்ணவளை பார்த்தவள்
“இங்க என்ன டி நடக்குது வீரா அண்ணா எதுக்கு அடிக்கடி உன் அறைக்கு வந்துட்டு போகுது அப்படி என்ன தான் உங்க ரெண்டு பேருக்குள்ள நடக்குது” என்று கேட்க கண்மணி உடனே அழுது கொண்டே ஓடிச்சென்று தன் தோழியை அணைத்து கொண்டாள்.
மலர்விழியும் அவளை சமாதானம் செய்ய நடந்த அனைத்தையும் கூற “நீ இதையெல்லாம் ஏன் என் கிட்ட சொல்லவே இல்லை அப்போ உனக்கும் வீரா அண்ணாவை புடிக்குமா” என்று அவள் கேட்க அவளிடம் எந்த வித பதிலும் இல்லை “எனக்கு தெரியாது” என்றாள்
கண்ணீருடனே “இப்படி சொன்னா எப்படி டி ஒருவேளை உனக்கு பார்த்துருக்க மாப்பிள்ளையை பிடிச்சிருக்கா” என்று அவள் கேட்க “நான் அவரு முகத்தை கூட பார்க்கல” என்றாள் அழுது கொண்டே “அதான் தெரியுமே அங்க நீ வீரா அண்ணாவை தவிர யாரையும் பார்க்கலன்னு” என்றாள் கண்மணி உடனே அவளை அதிர்ந்து பார்த்தாள்.
அத்தியாயம் 9
கண்மணி எதுவும் பேசாமல் இருக்க அவளை பார்த்த மலர் “சொல்றேன்னு தப்பா நினைக்காத கண்மணி உன் அப்பா அம்மா உனக்கு நல்லது பண்ற மாதிரி எனக்கு தோனல டி வெளிய அந்த மாப்பிள்ளை சிதம்பரத்தை தப்பு தப்பா பேசிக்கிறாங்க நீ உன் மாமாவேயே கல்யாணம் பண்ணிக்க பாரு இன்னும் அப்பா அம்மா அண்ணா ஆட்டுக்குட்டின்னு நினைச்சிட்டு இருக்காத” என்று கூற அவள் எதுவும் பதில் பேசவில்லை அமைதியாக இருக்க அப்போது பார்த்து அறையின் உள்ளே வந்தார் அவளின் தாய் முத்துச்செல்வி “பாப்பா கீழ நம்ம சொந்தக்காரங்க எல்லாம் உன்னை பார்க்கனும்ன்னு சொல்றாங்க வா” என்று கூறி அவளின் கைப்பிடித்து அழைத்து செல்ல மலரால் அதற்க்கு மேல் அவளிடம் எதுவும் பேச முடியவில்லை ஆனால் கண்மணியை பார்க்க அவளுக்கு பாவமாக இருந்தது.
கண்மணி கீழே வந்தவள் முகம் தெளிவேயில்லாமல் இருந்தது அவளே அறியாமல் அவளின் கண்கள் அவளின் மாமனை தேடி அலைந்து கொண்டிருந்தது
அவள் கண்களால் எங்கு தேடியும் அவள் மாமன் கிடைக்கவேயில்லை அவன் அங்கு இல்லை அவன் எப்போதோ தன் நண்பனுடன் கிளம்பியிருந்தான் ஏனோ அவன் இல்லாமல் போனதில் அவள் முகம் சோர்ந்துவிட்டது ஒருவழியாக விழா முடிய பெண்ணவள் சாப்பிடாமல் கூட தன் அறைக்குள் சென்று முடங்கி கொண்டாள் காரணமே இன்றி சோகமாக இருந்தாள்.
அதேநேரம் வீரா சுடலையுடன் ஊரின் எல்லையில் இருந்த அரசமரத்தின் அடியில் அமர்ந்திருந்தான் அன்று சுடலையின் கடைசி மகனுக்கு பிறந்தநாள் என்பதால் நிறைய சாப்பிட வாங்கி வந்திருந்தான் நண்பனுக்காக அதனுடன் சேர்ந்து சரக்கும் இருந்தது முதல் சுற்றில் குடித்து முடித்த சுடலை “என்ன மாப்பிள்ளை ஏதோ ஆழ்ந்த யோசனையில இருக்க போல” என்று கேட்க அவனோ அப்போதும் அமைதியாக இருக்க அவன் அலைபேசி ஒலித்தது யார் என்று பார்க்க அவன் முதல் அக்கா ரேணுகாதேவி தான் அழைத்திருந்தார் அழைப்பை எடுத்து காதில் வைத்தவன்.
“சொல்லு அக்கா” என்று கூற “ஏன் டா ஊர் உலகத்துல உனக்கு காதலிக்க கல்யாணம் பண்ண வேற பொண்ணே வா டா கிடைக்கல போயும் போயும் அந்த வேல்பாண்டி மவள் தான் கிடைச்சாளா அம்மா எல்லாத்தையும் சொல்லுச்சு அந்த பொண்ணு நமக்கு வேணாம் டா தம்பி அந்த கண்மணி அப்பன் தான் நம்ப குடும்பத்தையே பிரிச்சான் பாவி நீ ம்ம்ன்னு ஒரு வார்த்தை சொல்லியிருந்தா உனக்காக ஆயிரம் பொண்ணை நான் பார்த்து கொடுத்துருப்பனே டா” என்று கூற அடுத்த கணம் அழைப்பை துண்டித்தான் வீரா.
அதன் பின் யாரும் அவன் எண்ணுக்கு அழைக்காத படி இருக்க போனை ஆஃப் செய்து போட்டான் “என்ன மாப்பிள்ளை யாரு” என்று கேட்க “ரேணுகா அக்கா” என்றவன் தன் எதிரே இருந்த சரக்கு பாட்டிலை குறுகுறுவென பார்த்தவன் ஒரு பாட்டிலை முழுதாக தன் வாயில் சரித்து குடிக்க “மாப்பிள்ளை அப்படியே குடிக்காத டா வயிறு எரியும்” என்று கூறிக்கொண்டே இருக்க அவன் முழுதாக குடித்து முடித்தான் “எனக்கு என்ன டா குறைச்சல் நல்லா தான இருக்கேன் என்னை ஏன் டா எவளுக்குமே பிடிக்க மாட்டேங்குது நீயெல்லாம் கல்யாணம் பண்ணி குடும்பம் குழந்தை குட்டின்னு நிம்மதியா வாழல நான் அப்படி என்ன டா பண்ணுனேன் உங்களுக்குலாம் சாதாரணமா நடக்குற ஒரு நல்ல விஷயம் கூட ஏன் எனக்கு நடக்க மாட்டேங்குது கிடைக்கவும் மாட்டேங்குது
அவள் அப்பன் ஆத்தாவுக்கு பிடிக்கலையாம் அதனால நான் வேண்டாமாம் அரைக்கா படி மாதிரி இருந்துக்குட்டு எப்படி பேசுறா தெரியுமா டா” என்று கூறியவனின் கண்கள் கலங்கியது வேதனையில் உண்மையில் அழுதேவிட்டான் மன வேதனையில் ஒரு
ஆணின் அழுகை தனக்கு பிடித்தவளுக்காக மட்டுமே வரும்.
அவன் அழுவதை சுடவையும் கண்கள் கலங்க அழுக ஆரம்பித்தான் “வூடு மச்சான் அழாத அவளுக்கு உன்னை பிடிக்கலன்னா என்ன இந்த உலகத்துல அந்த புள்ளை மட்டும்
தான் இருக்கா உனக்கு நல்ல பொண்ணா பார்த்து நான் கட்டி வைக்கிறேன் மாப்பிள்ளை” என்று அவன் கூற வீரா அவன் கன்னத்தில் ஓங்கி ஒரு அறை விட “எதுக்கு டா இப்போ என்னைய அடிச்ச” என்று சுடலை கன்னத்தில் கை வைத்து கொண்டே கேட்க.
“என் அக்கா மவளுக்கு என்னை புடிக்காதுன்னு நான் எப்போ டா சொன்னேன் அவளுக்கு என்னை ரொம்ப பிடிக்கும்” என்றான் வீரா அவளை மனதில் நினைத்துக் கொண்டே
“ஆனா கல்யாணம் பண்ண மட்டும் புடிக்காது அப்படி தான மாப்பிள்ளை” என்று கேட்க
வீரா மீண்டும் அவனை அடிக்க கையை ஓங்கி கொண்டு வர கீழே குனிந்து தப்பித்தான் சுடலை “அவளுக்கு என்னைய ரொம்ப புடிக்கும் என்னை கல்யாணம் பண்ணவும் புடிக்கும் நான் கொடுக்குற முத்தத்துக்கே முகம் சிவந்து என்னை பார்ப்பா பாரு ஒரு பார்வை இவள் தான் டா இவள் காலடியிலேயே விழுந்து கிடந்தா போதும்டான்னு தோனும்” என்றான் வீரா பெண்ணவளை நினைத்து மையலுடன்
“இது மட்டும் தானா இன்னும் வேற எதாவது இருக்கா மாப்பிள்ளை” என்று அவன் கேட்க
வீரா முகம் வெட்கத்தை தத்தெடுத்து கொண்டது “இருக்கு ஆனா நான் அதை ஏன் டா உன் கிட்ட சொல்லனும்” என்று கேட்டவன் அங்கே வாழையிலையில் பொறித்து வைத்து இருந்த சிக்கனை வாயில் வைத்து மென்று விழுங்கியவன் சாப்பாட்டையும் சேர்த்து சாப்பிட்டு முடிக்க “சரி வா மாப்பிள்ளை வீட்டுக்கு கிளம்புவோம்” என்று சுடலை கேட்க.
“நான் வரலை நான் என் பொஞ்சாதியை பார்க்க போறேன்” என்றான் வீரா போதையுடனே “வேண்டாம் மாப்பிள்ளை இந்த நேரத்துல அங்க போய் எதாவது பிரச்சனை ஆகிட போகுது” என்று சுடலை கூற அவன் கூறிய எதையும் காதில் வாங்காமல் தன் புல்லட்டில் ஏறி அமர்ந்தவன் ஸ்டார்ட் செய்து தன் அக்கா மகளை காண சென்றான்.
புல்லட்டை அந்த தெருவின் முன்னே இருந்த ஒரு தோட்டத்தில் விட்டவன் வேட்டியை மடித்து கட்டிக் கொண்டு நடந்து சென்றான் முன் வாசல் வழியே சென்றால் நிச்சயமாக எல்லோரும் எழுந்துவிடுவார்கள் என்று அவனுக்கு தெரியும் அதானலேயே பின்பக்க வழியாக மேலே சென்றான்.
கண்மணி அறையின் வாசலுக்கு சென்று கதவை தட்ட கை வைக்க அது தன்னால் திறந்து கொண்டது பெண்ணவள் உறங்காமல் படுத்து கொண்டு விடிவிளக்கின் வெளிச்சத்தில் தன் கழுத்தில் இருந்த தங்க சங்கிலியை பார்த்து கொண்டே படுத்திருக்க
அவன் வந்த அரவம் கூட அவளுக்கு தெரியவில்லை வீரா தெளிவாக கதவை தாழிட்டுவிட்டு உள்ளே வந்தவன் தன் செருப்பை கழட்டி தூக்கி எறிந்தவன் பெண்ணவள் அருகில் வந்து படுக்கையில் படுத்து கொள்ள கண்மணி ஏதோ தன் பக்கத்தில் அசைவதை போல உணர்ந்தவள் திரும்பி பார்க்க அங்கிருந்த
வீராவை பார்த்து பயந்தவள் “அம்மா” என்று பயத்தில் கத்தி விட அவள் அந்த வார்த்தையை முடிக்கும் முன்னே அவளின் இதழை முத்தமிட்டு இருந்தான் வீரா.
கண்மணி அவசர அவசரமாக அவன் இதழில் இருந்து விலகியவள் “மாமா முதல்ல இங்க இருந்து கிளம்புங்க யாராவது வந்துட போறாங்க” என்று கூற “இங்க எவன் டி வர போறான்” என்று அவளை மையலுடன் பார்த்து கொண்டே கூற “இல்லை அப்பா இல்லை அம்மா வருவாங்க” என்று அவளே அறியாமல் அவன் சட்டை பட்டனை வருடி கொண்டே கொஞ்சலாக கூற “யாரும் வர மாட்டாங்க டி” என்று கூறிக்கொண்டே அவளின் முகத்தின் முன்னே வந்து விழுந்த ஒற்றை முடியை காது மடலில் ஒதுக்கியவன் “இன்னும் எவ்வளவு நாளு தான் டி நான் இப்படியே ஒன்டி கட்டையா இருக்குறது எனக்கும் எல்லாரையும் பார்க்கும் போது புள்ளை குட்டின்னு வாழனும்ன்னு தோனுது டி” என்று கேட்டான் அவளின் கீழ் இதழை அழுத்தமாக வருடி கொண்டே விட்டால் அவளின் உதட்டு ரேகையை கையால் வருடியே எடுத்து விடுவதை போல அவன் விரலின் அழுத்தம் இருந்தது.
“நீ இல்லாம ராவுல எல்லாம் தூக்கம் வர மாட்டேங்குது டி” என்று அவன் கூற
“குடிச்சிங்களா மாமா” என்று அவள் அவன் சட்டை காலரை பிடித்து கொண்டே கேட்க
“ஆமாம் ரொம்ப குடிச்சேன் எல்லாம் உன்னால தான் டி” என்றான் “ஏன் நான் என்ன பண்ணுனேன்” என்று கேட்டவளின் கை இப்போதும் அவன் சட்டையில் தான் இருந்தது.
“ஆமாம் ஒரே ஒரு வார்த்தை என்னை கட்டிக்கிறேன்னு சொன்னியா டி நானும் எத்தனை நாளைக்கு தான் டிஇப்படியே சுத்த முடியும் சொல்லு டி எனக்கு புள்ளை குட்டின்னு வாழனும்ன்னு ஆசையா இருக்கு உன்னை மாதிரி ஒரு பொண்ணு என்னை மாதிரி ஒரு பையன் பெத்துக்கலாமா டி” என்று கேட்டுக் கொண்டே அவளின் மையிட்ட விழிகளை பார்த்தவனுக்கு தாபம் தலை தூக்க அவளின் இதழை கவ்வி மென்று விழுங்க ஆரம்பித்தான்.
மறுநாள் காலை வேளை மெல்ல விடிய சூரிய ஒளியே கண்மணியின் அறையின் உள்ளே வந்திருந்தது இப்போதும் எழுந்து கொள்ளாமல் குப்பற படுத்து உறங்கி கொண்டிருந்தான் வீரா சூரிய ஒளி முகத்தில் சுள்ளென்று அடித்ததில் மெல்ல கண்ணை திறந்தான் வீரா, குளியலறையில் இருந்து தலைக்கு குளித்துவிட்டு கண்மணி புது பெண்ணை போல வெளியே வந்தாள் கிளி பச்சை நிற பாவடை தாவணி அவளை பார்த்தவன் பார்த்தபடியே படுத்திருக்க “மாமா நீங்க சீக்கிரமா கிளம்புங்க எங்க அம்மா வந்துட பேறாங்க” என்று கண்மணி கூற வீரா அவளை பார்த்து புன்னகையுடனே எழுந்து நிற்க “அய்யோ மாமா” என்று திரும்பி நின்றாள் கண்மணி அவன் ஆடைகள் மூலைக்கு ஒன்றாக கிடக்க
“அய்யய்யோ நான் என்ன டி இப்படி இருக்கேன்” என்று கேட்டுக் கொண்டே வீரா தன் வேட்டியை எடுத்து சுற்றிக் கொள்ள
“நீங்க தான் எல்லாத்தையும் கழட்டி போட்டிங்க” என்றாள் திரும்பி நின்று கொண்டே.
“எப்படி டி நமக்குள்ள எதாவது நடந்துச்சா” என்று கேட்டு கொண்டே தன் மேனியை பார்க்க அவன் மேனியெங்கும் பெண்ணவளின் நக்கீறல் இருந்தது படுக்கையோ அலங்கோலமாக கிடந்தது அவனுக்கு ஏதோ மனம் உருத்த அவனுக்கு ஏதோ கொஞ்சம் கொஞ்சமாக நினைவுக்கு வந்தது
“அய்யோ மாமா எதுவும் நடக்கல முதல்ல இங்க இருந்து கிளம்புங்க” என்று பெண்ணவள் கத்த வீரா குழப்பத்துடனே எழுந்து உடை மாற்ற ஆரம்பித்தான் தன் மூளையை தூசி தட்டி என்ன நடந்திருக்கும் என்று யோசிக்க அவனுக்கு ஏதோ அனைத்தும் கனவில் நடந்ததை போல இருக்க இரவு வந்த வழியே யாருக்கும் தெரியாமல் குழப்பத்துடனே வெளியே சென்றான் உண்மையில் நேற்று இரவு என்ன நடந்தது.