களவோடு காதல் 6,7
அத்தியாயம் 6
பெண்ணவள் அங்கிருந்து ஓடுவதை பார்த்த சுடலை ‘இது கண்மணி தான’ என்று நினைத்தவன் சந்தேகமாக பார்த்து கொண்டே திரையின் பின்னே ஓடி வர அங்கே நின்றிருந்த நண்பனை பார்த்து அதிர்ச்சியுடன் விழி விரிக்க “நீ இங்க என்ன டா பண்ற அந்த புள்ளை கண்மணி என்ன இங்க இருந்து அலறி அடிச்சிக்கிட்டு ஓடுது ஏதோ களவாணி பய தான் அந்த புள்ளையை ஏதோ பண்ணிட்டானோன்னு பதறி அடிச்சிக்கிட்டு ஒடி வந்து பார்த்தா உள்ள இருந்து நீ வர” என்று கேட்க வீராவுக்கு புதிதாக வெட்கமெல்லாம் வந்து தொலைத்தது வீராவை பார்த்து அதிர்ந்தவன்.
“என்ன டா பண்ணுன அந்த புள்ளைய உன் மூஞ்சே சரியில்லையே” என்று அதிர்ச்சி மாறாமல் சந்தேகமாக கேட்க அவன் அப்போதும் அவனை பார்த்து அசடு வழிய “போச்சு போச்சு நீ அந்த புள்ளையை என்னவோ பண்ணிட்ட உன் மாமன்ங்காரன் தேடி வந்து நம்மளை வெட்ட போறான் பாரு அந்த புள்ளைக்கு பார்த்தா மாப்பிள்ளை வேற பெரிய ஆளுன்னு சொன்னாங்க அவனும் அருவாளோட வர போறான்” என்று பயத்தில் உலற.
“ஏன் அந்த ஆளு கிட்ட மட்டும் தான் அருவா இருக்கா அவன் நம்பள வெட்டுற வரை நம்ம கை என்ன புளியங்கா பறிச்சிட்டு இருக்குமா வா டா” என்று நண்பனின் தோள் மீது கைப்போட்டு அழைத்து செல்ல “உன் நடவடிக்கையே சரியில்லையே டா மாப்பிள்ளை அப்படி என்ன தான் டா பண்ணுன அந்த புள்ளையை” என்று அவன் கேட்க “ஏன் டா மூனு புள்ளை பெத்துருக்க இது கூட தெரியாமலா பெத்த” என்று அவனை பார்த்து கொண்டே வீரா குறும்புடனே கேட்க அவன் கண்கள் அதிர்ச்சியில் விரிந்தது ‘அடப்பாவி’ என்று நினைத்தான் “அந்த பிள்ளை வீட்டுக்கு போய் அவங்க அப்பன் ஆத்தா கிட்ட சொல்லிட்டா என்ன டா பண்ணுவ” என்று அவன் கேட்க “எனக்கு தெரியாதா டா என் அக்கா மவளை பத்தி அப்படியே அவள் சொன்னாலும் எனக்கு எந்த விசனமும் இல்லை ஏன்னா அவள் கழுத்துல தாலி கட்டப்போறதே நான் தான்” என்றான் “இது எப்ப இருந்து டா நீ நடத்து மாப்பிள்ளை” என்று கூற அவன் தோளில் கைப்போட்டு மகிழ்ச்சியுடனே சென்றான் வீரா.
இருவரும் அவரவர் வீட்டுக்கு கிளம்ப வீராவின் இதழில் இப்போதும் பெண்ணவள் சாப்பிட்டு கொண்டு இருந்த புளிப்பு மிட்டாயின் சுவை தெரிந்தது கரடுமுரடாக இருந்த முகத்தில் லேசாக புன்னகை கூட வந்தது அந்த முத்தத்தை நினைத்து அதை நினைத்து கொண்டே படுக்கையில் விழுந்தான் போர்வையை இழுத்து போர்த்தியவனுக்கு உறக்கம் தான் வந்த பாடில்லை பெண்ணவளின் இதழ் முத்தம் மட்டும் போதவில்லை அவள் மொத்தமும் வேண்டுமென்று தோன்றியது உறங்காமல் புரண்டு புரண்டு படுத்த மகனை ரெங்கநாயகி ஆவென்று பார்த்தார் பெண் வாடையே இல்லாமல் இருந்தவனுக்கு இப்போது ஒரு பெண்ணை முழுதாக மென்று விழுங்கி ஏப்பம் விடும் ஆர்வம் வந்தது அவளை நினைத்தாலே உடலின் வெப்பம் அதிகரிப்பதை அவனால் தடுக்கவே முடியவில்லை பெண்ணவளை நினைத்து கொண்டே கண்ணை மூடினான்.
கண்மணி பதட்டத்துடனே வீட்டின் உள்ளே ஓடி வந்தாள் அவளுக்காக காத்திருந்த அவளின் தாய் “என்ன டி எதுக்கு இப்படி ஓடி வர உன் கூட வந்த மலரு தேனு எல்லாம் எங்க” என்று கேட்க
“அது…அவங்களுக்கு எல்லாம் தூக்கம் வருதுன்னு கிளம்பிட்டாங்களா நானும் அப்படியே கிளம்பி வந்துட்டேன் மா” என்றாள் கண்மணி.
அவர் அப்போதும் அவளை சந்தேகமாக பார்த்தவர் “என்ன உன் தலை முடியெல்லாம் கலைஞ்சு இருக்கு” என்று கேட்க அவளின் நினைவுகள் உடனே பின்னோக்கி சென்றது அவள் மாமன் அவளின் இதழில் முத்தமிடும் போது அவன் கைகள் அவளின் பின்னந்தலை முடியை பிடித்து கசக்கி இருக்க அவன் பலத்துக்கு அவளின் தலை முடி கலைந்து அலங்கோலமாகி இருந்தது.
“என்ன டி அப்படியே பேய் அறைஞ்ச மாதிரி நிக்குற” என்று அவர் கேட்க “காத்து…மா.. வரும் போது காத்து அதிகமா இருந்துச்சு மா அதான் கலைஞ்சு போச்சு” என்றாள் சமாளிக்கும் விதமாக “இதுக்கு தான் அர்த்த சாமத்துல வெளிய போகுதுன்னு சொன்னேன் கேட்டியா போய் படுத்து தூங்கு” என்று கூற அவளும் தப்பித்தால் போதும் என்ற நோக்கில் ஓடியேவிட்டாள்.
அறையின் உள்ளே சென்று கதவடைத்து கொள்ள அவளுக்கு இப்போதும் பதட்டம் குறைந்த பாடில்லை அவள் கை நடுங்கி கொண்டே இருந்தது ‘இந்த மாமா என்ன என்னவோ சொல்றாரு’ என்று நினைத்தவளுக்கு பயத்தில் வியர்த்து வடிந்தது ‘அப்பா அம்மாவுக்கு தெரிஞ்சா என்ன ஆகுறது’ என்று நினைத்தவளுக்கு இன்னும் பயம் வந்தது
‘பேசாம அப்பா கிட்ட மட்டும் சொல்லலாம’ என்று நினைத்தவளுக்கு ‘வேண்டாம் பிரச்சனை பெருசாகிடும்’ என்று தனக்கு தானே கூறிக்கொண்டவள் கைகள் அனிச்சையாக அவளின் இதழை வருடியது
‘இந்த மாமா கிட்டயே இனி போக கூடாது இது ரொம்ப ரொம்ப தப்ப’ என்று நினைத்து கொண்டாள் பெண்ணவள் சென்று படுக்கையில் விழ அவளின் பக்கத்தில் இருந்த பொம்மையை கட்டிக்கொண்டே படுத்திருந்தவளுக்கு உறக்கம் தான் வந்த பாடில்லை பயம் தான் வந்தது கண்ணை மூடினாள் முத்தமிடும் போது அவளின் கண் எதிரே இருந்த மாமனின் முகம் மட்டும் வந்து கொண்டே இருந்தது.
மறுநாள் காலை பொழுது மெல்ல விடிய ஊருக்கு முன்பே எழுந்த வீரா வயலுக்கு தண்ணீர் பாய்ச்சி விட்டு வந்தவன் குளித்து உடை மாற்றியவன் எப்பொழுதும் அணியும் அதே வெளுத்து போன சட்டையை அணியாமல் புதிதாக வெள்ளை சட்டையை அணிந்தான் வெள்ளை வேட்டி அணிந்து ஒரு மணி நேரம் கண்ணாடி முன்னே நின்று ஏதோ மைனரை போல கிளம்ப அவன் தாய் ரெங்கநாயகி அவனை ஆச்சரியமாக பார்த்தார் “எங்க டா போற” என்று கேட்க “மில்லுக்கு” என்று அவன் கூற
“என்னது மில்லுக்கா” என்றவர் அதிர்ச்சியுடன் அவனை வைத்த கண் வாங்காமல் பார்த்தார் தன் மகனின் உடை மாற்றத்தை கண்டு மனதில் ஏதோ ஒரு மூலையில் நிம்மதி பிறந்தது.
மில்லுக்கு சென்று பார்வையிட்டு முடித்தவன் புல்லட்டை எடுத்து கொண்டு தன் அக்காவின் வீட்டு தெருவிலேயே வட்டமடித்து கொண்டே இருந்தான் கண்மணி வெளியே வர மாட்டாளா என்று வழி மேல் விழி வைத்து காத்திருந்தான் பெண்ணவளின் தரிசனம் ஒரு முறையெனும் கிடைக்காதா என்று எதிர்ப்பார்த்து காத்திருக்க அவளும் வெளியே தன் துணியை கூடையில் அழுக்கு துணியை எடுத்து போட்டு கொண்டு துணி துவைக்க கிளம்பினாள்.
இது தான் சமயம் என்று நினைத்தவன் அவள் வருவதற்க்கு முன்பே அவளின் தோட்டத்துக்கு வண்டியை விட்டவன் அவளுக்காக காத்திருக்க அவன் அலைபேசி ஒலித்தது யார் என்று பார்க்க அவன் நண்பன் சுடலை தான் அழைத்து இருந்தான் போனை அட்டென்ட் செய்து “சொல்லு டா மாமா” என்று கூற
“எங்க இருக்க மாப்பிள்ளை” என்று கேட்க
“இன்னைக்கு வயல்ல ஒரே வேலை டா அங்கன தான் இருக்கேன்” என்றான்
“ஓ அப்படியா நானும் வயலுக்கு வெளிய தான் நிக்குறேன் நிமிர்ந்து பாரு” என்க தோட்டத்தின் வெளியே இருந்த சுற்றுச்சுவர் பக்கத்தில் நின்ற அவன் நண்பன் அவனை பார்த்து சிரிக்க வீரா அவனை பார்த்து முறைக்க சரியாக அங்கே கண்மணியும் துணிக்கூடையுடன் நடந்து வந்தாள்.
“ஓஹோ இது தான் செதியா நீ நடத்து மாப்பிள்ளை ஆனா அந்த புள்ளைக்கு இன்னும் இரண்டு நாள்ல நிச்சயம் அதையும் நியாபகம் வச்சிக்கோ” என்று கூற வீராவுக்கு கோபம் வந்தது “டேய் போடா” என்று அவனை விரட்ட
“பார்த்து மாப்பிள்ளை கல்யாணத்துக்கு முன்னாடியே புள்ளை பெத்துட போற கொஞ்சம் உஷாரா இரு எதாவது சந்தேகம்ன்னா கூப்பிடு” என்று கிண்டலாக கூற “போ டா முதல்ல இங்க இருந்து” என்று அவனை விரட்டி அடிக்க அவனும் அங்கிருந்து சென்றான்.
பெண்ணவள் தோட்டத்தின் கதவை திறந்து உள்ளே வந்தவள் துணி கூடையை கீழே வைத்து விட்டு தண்ணீரை திறக்க அவளின் பின்னே நடந்து வந்தான் வீரா பெண்ணவள் அவனை கவனிக்காமல் நின்று கொண்டு இருக்க அவளை பின்னிருந்து அணைத்தான் உடனே அவள் பதட்டத்துடனே திரும்பி பார்க்க
அங்கே நின்றிருந்த தன் மாமனை பார்த்து அதிர்ந்தவள் “என்ன பண்றிங்க மாமா என்னை விடுங்க” என்று அவள் கூற அவன் அணைப்பு இன்னும் இறுகியது அவளின் இடையை பிடித்து தன்னோடு அவளை சேர்த்து அழுத்தி பிடிக்க “மாமா யாராவது பார்த்துட போறாங்க வர வர உங்க போக்கே சரியில்லை” என்று கூறியவளின் கண்கள் இங்கும் அங்கும் மேய்ந்து சுற்றி முற்றி பார்த்தது அவர்கள் இருவரையும் முல்லை கொடி மறைத்து இருக்க பெரிதாக யாராலும் பார்க்க முடியாது அந்த பக்கம் சுற்றிலும் வயல் இருந்ததால் பெரிதாக வயலில் வேலை செய்பவர்கள் மட்டும் தான் வந்து போவார்கள் என்பதால் ஆட்கள் நடமாட்டம் கூட இல்லை.
“ஏன் டி என்னை பார்த்தா எப்பவும் பயந்து கிட்டே தான் இருப்பியா உனக்கு இந்த காதல் கத்திரிக்காய் எல்லாம் வரவே வராதா” என்று அவன் கேட்க அவளோ அவனை பார்த்து முறைத்தாள் “இன்னும் ரெண்டு நாள்ல எனக்கு நிச்சயம் இந்த மாதிரியெல்லாம் என் கிட்ட பேசாதிங்க” என்று அவள் கூற “நிச்சயம் வேணும்ன்னா பண்ணட்டும் ஆனா கல்யாணம் என் கூட தான் நடக்கும்” என்று அவன் கூற அவளுக்கு கோபம் வந்தது “மாமா இந்த மாதிரியெல்லாம் என் கிட்ட பேசுனா நான் எங்க அப்பா கிட்ட சொல்லிடுவேன் பார்த்துக்கோங்க” என்று அவள் விரல் நீட்டி மிரட்ட “உங்க அப்பன் பெரிய இவன் போய் சொல்லு” என்றவனின் கண்கள் அவளின் ஏறி இறங்கிய புருவத்தை பார்த்தது கண்கள் அப்படியே அவளை பார்த்தது அவளின் கலைந்திருந்த தலைமுடியை பார்த்தவன் கண்கள் இப்பொழுது அவளின் ஆடைக்கு வந்தது.
“இது என்ன டி நீ எட்டாம் கிளாஸ் படிக்கும் போது எடுத்த பாவடை சட்டையெல்லாம் இப்போ போட்டுக்கிட்டு சுத்துற” என்று அவன் மெல்லிய புன்னகையுடனே கேட்க “அது எப்படி உங்களுக்கு தெரியும்” என்று அவள் கேட்க
“வாங்கி கொடுத்தவனே நான் தான் எனக்கு தெரியாதா” என்று அவன் கேட்க
“அந்த அளவு இப்போ வர சரியா இருக்கா டி” என்று கேட்டவனின் பார்வை அவள் மேனியில் எல்லையை தாண்டி உரிமையுடன் மேய பெண்ணவள் அவன் பார்வையை கண்டு பதட்டத்துடன் திரும்பி கெண்டாள்.
அது அவனுக்கு இன்னும் வசதியாக போக அவளின் இடையை வளைத்து பிடித்து கொண்டே அவளின் கழுத்து வளைவில் முகம் புதைத்தவன் “கல்யாணம் பண்ணிக்கலாமா டி என் கூடவே வந்துர்றியா” என்று அவளின் கழுத்து வளைவில் முகம் புதைத்து சிறு சிறு முத்தங்களை கொடுத்து கொண்டே அவன் கேட்க பெண்ணவளுக்கு கூச
“மாமா நீ..நீ..ங்க பண்ற எதுவும் சரியேயில்லை” என்று அவள் திக்கி திணறி கூச்சத்துடன் கூற
“என்ன சரியில்லை டி எப்போ டா உன் கழுத்துல தாலி கட்டி உன்னை தூக்கிட்டு போயி குடும்பம் நடத்துவேன்னு இருக்கு எனக்கு இப்படிலாம் எவளை பார்த்தும் தோனுனதே இல்லை தெரியுமா டி” என்று வீரா கூற.
கண்மணியோ அவன் மீசை முடி உரசுவதால் கூசி சிலிர்த்து அடங்கியவள் “பொய் சொல்லாதிங்க நீங்க திவ்யா அக்கா கூட கல்யாணம் வரைக்கும் பேனவரு தான” என்று கேட்ட மறுநிமிடம் அவன் முகம் இறுகியது அவளை விட்டு விலகியவன் “ஏன் நீ யாரையாவது காதலிக்கிறியா” என்று கேட்க
“இல்லையே நான் யாரையும் காதலிக்கலை என்னை கட்டிக்க போற வரை தான் நான் காதலிப்பேன் அவரை தான் எனக்கு பிடிக்கும்” என்று கூற “அது நான் தான் டி என் அழகி” என்று அவளின் கன்னத்தை பிடித்து கிள்ளியவன் அவள் பட்டு கன்னத்தை பிடித்து சற்று அழுத்தமாக கிள்ளி விட.
“ஆஆஆ” என்று அவள் கத்த அவளின் கன்னம் சிவந்து விட “என்ன டி இதுக்கே உன் கன்னம் இப்படி சிவக்குது மத்ததுக்கு எல்லாம் அவ்வளவு தான் போலையே” என்று கூற
“என்ன மத்தது” என்று அவள் அறியாப்பிள்ளையாக கேட்க “எல்லாத்தையும் கல்யாணம் முடிஞ்சு நானே செல்லி தரேன் டி” என்றவன் அவள் அப்பாவியான பேச்சில் மயங்கி அவளின் இதழில் முத்தமிட போக பெண்ணவள் அவன் எண்ணம் உணர்ந்து தன் கையை குறுக்கே வைத்து தடுத்து இருவருக்கும் இடைவெளி ஏற்படுத்த அவன் அவளின் உள்ளங்கைக்கு முத்தமிட்டு விட அந்த நேரம்அங்கே யாரோ வர தோட்டத்தின் கேட் திறக்கும் சத்தம் கேட்க “அய்யய்யோ மாமா யாரோ வர்றாங்க” என்று அவள் பதற.
அத்தியாயம் 7
“இரு டி எதுக்கு பயப்படுற” என்றவன் எட்டி பார்க்க அவள் தோழிகளை பார்த்தவன்
‘இவளுக தானா’ என்று மனதில் நினைத்து கொண்டே சாதாரணமாக நடந்து செல்ல அவர்கள் இருவரும் அதிர்வுடனே வீராவை பார்த்தனர்.
வீரா அவர்களை கண்டுகொள்ளாமல் சாதாரணமாக நடந்து சென்று தன் புல்லட்டில் ஏறி செல்ல அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டே கண்மணி அருகில் நடந்து வந்தனர் “அடியேய் கண்மணி இங்க என்ன நடக்குது” என்று கேட்க “என்ன நடக்குது” என்று அவள் ஒன்றும் தெரியாதவளை போல அவர்களிடம் கேட்க “வீரா அண்ணா எதுக்கு இங்க வந்துட்டு போகுது” என்று அவர்கள் கேட்க “எனக்கு எப்படி தெரியும் எதாவது வேலையா வந்துருப்பாரு” என்று கூறியவள் அவர்களை கண்டுகொள்ளாமல் துணியை கல்லில் எடுத்து வைத்து துவைக்க “உங்க தோட்டத்துல அவருக்கு என்ன டி வேலை” என்று கேட்க “எனக்கு எப்படி தெரியும்” என்று அவள் கேட்க அவர்கள் அவளை நம்பாத ஒரு பார்வை பார்க்க அவளோ சாதாரணமாக இருப்பதை போல காட்டி கொண்டாள்
துணியை துவைத்து கொண்டே இருக்க அவள் மனதில் மட்டும் பய பந்து உருண்டோடி கொண்டு இருந்தது.
அடுத்து வந்த இரண்டு நாட்களும் அவள் வீட்டை விட்டே வெளியே வரவேயில்லை தன் மாமனுக்கு பயந்து, வீரா தான் அவளை பார்க்க முடியாமல் மனம் வருந்தி கொண்டு இருந்தான் சரியாக சாப்பிட முடியாமல் தூங்காமல்
அவன் பண்ணையிலேயே கிடக்க ரெங்கநாயகிக்கு ஒன்றும் புரியவில்லை தன் மகனின் நடவடிக்கையை பார்த்து இரண்டு நாட்களுக்கு முன் புது மாப்பிள்ளை போல் சுற்றி கொண்டு இருந்தவன் இன்று ஏன் இப்படி முகத்தை தூக்கி வைத்து இருக்கிறான் என்று அன்று மாலை சுடலை வீட்டுக்கு வர
“ஏன் டா என் மவனுக்கு என்ன ஆச்சு டா
ரெண்டு நாளா ஏதோ பேய் பிடிச்ச மாறியே திரியுறான் சரியா தூங்க மாட்டறான் சாப்பிட மாட்றான் வீட்டுக்கு பக்கம் கூட வர மாட்டுறான்” என்று சுடலையிடம் கேட்க.
“ஆத்தா அவனுக்கு பேய் எல்லாம் பிடிக்கல உன் பேத்தியை தான் புடிச்சு இருக்கு” என்று கூற அவர் வாயை பிளந்துவிட்டார் “என்ன டா சொல்ற” என்று அதிர்ச்சி குறையாமல் கேட்க
“ஆமாம் ஆத்தா உன் பேத்தி கண்மணி மேல் உன் மவனுக்கு கிறுக்கு பிடிச்சு போச்சு அந்த புள்ளை ரெண்டு நாளா வீட்டை விட்டே வெளிய வரலை அதேன் அவன் அந்த புள்ளையை பார்க்காம மந்திரிச்சு விட்ட மாதிரியே அலையுறான்” என்று கூற அவரின் முகம் மலர்ந்தது “அப்படியா அப்போ வா நாம எல்லாரும் சேர்ந்து பொண்ணு கேட்க போலாம்” என்று கூற.
“ம்க்கும் பொண்ணு கேட்டு போனா உடனே உன் மருவமவனும் மகளும் அடடே வாங்க உங்களுக்கு தான் பொண்ணு கொடுக்க காத்து கிடக்கோம்ன்னு சொல்ல போறாங்க பாரு போவியா அங்குட்டு நாம போய் அந்த புள்ளையை தூக்கிட்டு வந்தா தான் உண்டு” என்க அவரின் முகம் வாடியது “நீ ஒன்னும் கவலைப்படாத ஆத்தா உனக்கு சிரமம் வைக்காம உன் மவனே தூக்கிட்டு வந்துருவான் போய் நல்லா சாப்பிட்டு தெம்பா இரு” என்க அவரின் முகம் மலர்ந்தது
“நான் வேற இவன் கல்யாணம் பண்ண ஒத்துக்கிட்டான்னா ஒரு ராவு கோவில்ல வந்து தங்குறேன்னு குலசாமி கிட்ட வேண்டி இருக்கேன் டா” என்று கூற “அதெல்லாம் கல்யாணத்துக்கு அப்புறம் போ ஆத்தா முதல்ல கல்யாணம் முடியட்டும் அவன் போற வேகத்தை பார்த்தா புள்ளையோட தான் கல்யாணம் பண்ணுவான் போல” என்றான் அதன் பின் அவர் அவனை பற்றி விசாரிக்கவில்லை அவரும் நிம்மதியுடனே வீட்டுக்குள் சென்றார்.
அன்றைய நாள் காலை கண்மணியின் நிச்சயதார்த்தம் இனிதே ஆரம்பமானது நிச்சயம் அவள் வீட்டிலேயே ஏற்பாடு செய்யப்பட்டு இருக்க முத்துச்செல்வி தன் தாய் வீட்டில் இருந்து ஒருவரை கூட அழைக்கவில்லை அவரின் சகோதரிகளை கூட அழைக்கவில்லை பெண்ணவள் தன் அறையில் தோழிகளுடன் கிளம்பி கொண்டு இருந்தாள் அவளின் தாய் தந்தை வெளியே இருந்து அனைவரையும் வரவேற்று கொண்டு இருந்தனர் அவன் அண்ணன் ஓடி ஆடி இதர வேலைகளை கவனித்து கொண்டு இருந்தான்.
அப்போது அவர்கள் வீட்டின் வாசலில் தன் புல்லட்டில் நண்பன் சுடலையுடன் வந்து இறங்கினான் வீரா அவனை பார்த்த அவனின் அக்கா மற்றும் அவரின் கணவர் முறைக்க அவன் எதையும் கண்டுகொள்ளாமல் நடந்து வந்தவன் “என்ன அக்கா வீட்ல விசேஷம் வச்சிருக்க என்னைய எல்லாம் கூப்புட மாட்டியா” என்று கேட்க இருவர் முகத்திலும் ஈ ஆடவில்லை இருந்தாலும் சொந்தபந்தங்கள் முன் எந்த பிரச்சனையும் வேண்டாம் என்று அமைதியாக இருந்தனர்.
வீரா வீட்டின் உள்ளே வர அவனுடன் சுடலையும் வந்தான் அங்கே விளையாடி கொண்டு இருந்த குழந்தைகளிடம் “பொண்ணு எங்க” என்று சுடலை கேட்க “அக்கா மேல கிளம்பிக்கிட்டு இருக்காங்க” என்று கூற
வீரா யாரையும் கண்டுகொள்ளாமல் மேலே செல்ல அனைவரும் நிச்சய பரபரப்பில் இருக்க அவனை யாரும் கண்டுகொள்ளாமல் இருக்க அவன் மேலே கண்மணி அறைக்கு சென்றான்.
அங்கே அவளுடன் அவள் தோழிகள் இருக்க கதவை திறந்து அதிரடியாக உள்ளே வந்தவனை அதிர்வுடனே பார்க்க “எல்லாரும் கொஞ்சம் வெளிய இருங்க மா” என்று கூற அனைவரும் உடனே வெளியே சென்றனர் வீரா கதவை மூடிவிட்டு உள்ளே வர பெண்ணவள் அடர் பச்சை நிற பட்டு புடவை கட்டி அழகாக கிளம்பி இருக்க அவனை பார்த்து பதட்டத்துடனே எழுந்து நிற்க அவள் அருகில் ஒவ்வொரு அடியாக அவள் பயந்துடனே பின்னே சென்று சுவற்றில் மோதி நின்றாள்.
வீராவின் பார்வை மையலுடன் அவள் மீது படிந்தது பச்சை நிற புடவை கட்டி அணிகலன் அணிந்து காதில் தங்க ஜிமிக்கி ஆட பயந்த விழிகளுடன் நின்றிருந்தவளை பார்த்தவனுக்கு இப்போதே தாலி கட்டி தூக்கி சென்று விடலாமா என்று தோன்றியது உண்மையில் இந்த இரண்டு நாளும் அவன் பைத்தியமாகி தான் இருந்தான் அவளை பார்க்காமல்.
அவன் ஒவ்வொரு அடியாக நெருங்கி நெருங்கி அவளுக்கு மிகவும் நெருக்கமாக நூல் அளவு இடைவெளியில் வந்து நிற்க
“மாமா வெளிய தான் எங்க அப்பா அம்மா இருக்காங்க தெரியும்ல்ல” என்று கூற
“இருந்தா இருந்துட்டு போகட்டும்” என்றான் வீர சாதாரணமாக “எதுக்கு இப்படி வந்து நிக்குறிங்க” என்று அவள் கேட்க “எதுக்குன்னு உனக்கு தெரியாதா” என்று ஒற்றை புருவத்தை மட்டும் உயர்த்தி அவன் கேள்வி கேட்க
“எதுக்கு இந்த மாதிரியெல்லாம் பண்றிங்க எனக்கு உங்களை கல்யாணம் பண்ணிக்கலாம் விருப்பமே இல்லை மாமா” என்றாள்.
அடுத்த கணம் வீராவின் முகம் மாறியது இருப்பினும் அவளின் இடையை வளைத்து பிடித்து தன் அருகில் இழுத்தவன் அவளின் கண்ணை பார்த்து கொண்டே அவளின் இதழை நெருங்கி முத்தமிட முதலில் வெறுத்தாலும் அவளும் அவனுக்கு ஒத்துழைப்பு கொடுக்க இரண்டு நாள் பிரிவில் அவனை பார்க்காமல் அவளுக்கும் ஏதோ ஒன்று மனதை போட்டு பிசைந்து கொண்டே தான் இருந்தது அது அத்தனைக்கும் விடை கிடைத்ததை போல அவனுடன் இணைய அவன் கைகள் அவளின் புடவை மறைக்க தவறிய மென் இடையை அழுத்தி பிடித்து பிசைய அவன் கைகள் கொஞ்சம் கொஞ்சமாக மேல் ஏறி அவளின் மத்திய பிரதேசத்தை அடைய அவளோ அவன் கையை தட்டிவிட அவனோ அவளின் கையை விலக்கி ஆடை மேலேயே அவளின் அங்க வளைவுகளை கையாலேயே அளந்து பார்க்க அவளோ கூச்சத்தில் நெளிய இருவரும் முத்தத்தில் லயித்து இருக்க பெண்ணவள் அவன் சட்டை காலரை இறுக்கமாக பிடித்து கொண்டு கண்ணை மூடிக்கொண்டாள் அப்போது அவளின் அறை கதவு தட்டப்பட்டது.
அவளின் தோழி மலர் தான் கதவை தட்டினாள் கதவு தட்டும் சத்தத்தில் சுயநினைவுக்கு வந்த வீரா அவளை விட்டு விலகி சென்று லேசாக கதவை திறந்து “என்ன மா” என்று கேட்க
“கீழ அவளை வர சொல்றாங்க அண்ணா” என்று கூற “வருவா” என்று கூறிவிட்டு வீரா கதவை அடைத்துவிட்டு உள்ளே வர பெண்ணவள் முகம் அவனை பார்க்க முடியாமல் தடுமாற “உனக்கு என்ன பிடிக்கல” என்று கேட்க அவளால் அவன் முகத்தை பார்க்கவே முடியவில்லை வெட்கம் பிடுங்கி தின்றது.
“இதே விஷயத்தை நான் வேற எவள் கிட்டையாவது பண்ணியிருந்தா அவள் கால்ல கிடக்குற செருப்ப கழட்டி என்னை அடிச்சிருப்பா ஒரு பொண்ணு உரிமை இருக்கவனுக்கு மட்டும் தான் தன்னேயே கொடுப்பா இப்ப சொல்லு எனக்கு தான எல்லா உரிமையும் இருக்கு” என்று கேட்க அவளால் உண்மையில் அவனிடம் பேசவே முடியவில்லை அவன் தொட்டால் உருகி குழையும் தன் மேனியையும் தன்னையும் அவளால் சத்தியமாக தடுக்க முடியவில்லை என்பது தான் உண்மை அவனை பார்க்க முடியாமல் திணற மீண்டும் கதவு தட்டப்பட்டது இந்த முறை அவள் தாய் தட்டினார்.
“பாப்பா என்ன பண்ற கீழ கூப்புடுறாங்க பாரு” என்று கூற “மாமா இங்கேயே இருங்க” என்று அவனை கதவின் பின்னே மறைய வைத்தவள் லேசாக கதவை திறந்து “என்ன மா” என்று கேட்க “கீழ் கூப்புடறாங்க வா” என்று அவளை அழைத்து செல்ல அவளோ அவனை பின்னே திரும்பி பார்த்து கொண்டே சென்றாள்.
அவளின் தோழிகள் இருவரும் “நான் அப்போவே சொன்னல்ல இவங்க ரெண்டு பேருக்கும் நடுவுல என்னவோ இருக்குன்னு” என்று பேசிக் கொண்டனர், பெண்ணவள் சென்று மணமகனின் பக்கத்தில் நிற்க வீராவும் வந்து அவள் எதிரே நின்றான் அவள் ஒரு முறை கூட தன் பக்கத்தில் இருந்த மணமகனை பார்க்கவில்லை அவள் பார்வை மொத்தமும் மன்னவனிடம் மட்டும் தான் இருந்தது பெண்ணவள் அவனையே பார்க்க அவனும் அவளை தான் பார்த்தான் பக்கத்தில் இருந்தவனை வெட்டி போட்டுவிடலாம் என்று கூட தோன்றியது அப்போது அவன் அருகில் வந்த சுடலை “இந்த மாப்பிள்ளை கைக்குட்டை துடைச்சிக்க” என்று கூற “எதுக்கு டா” என்று அவன் எரிச்சலுடனே கேட்க “அந்த புள்ளை கண்மணியோட உதட்டு சாயம் உன் உதட்டுல ஒட்டி இருக்கு பாரு உன் மாமன் பார்க்க போறான்” என்று கூற உண்மையிலேயே வீராவுக்கு வெட்கம் வர அவசர அவசரமாக தன் இதழை துடைத்து கொண்டான்.
.