களவோடு காதல் 5#
அத்தியாயம் 5
வீராவை சுடலை அங்கிருந்து இழுத்து செல்ல
“டேய் என் கையை விடு டா” என்று வீரா கத்தி கொண்டே வர அதை எதையும் கண்டுகொள்ளாமல் அவன் புல்லட்டில் ஏறி அமர்ந்த சுடலை “மாப்பிள்ளை வா போலாம்” என்று கூற அவன் வண்டியில் ஏறாமல் கோபத்துடன் நிற்க அனைவரும் வீட்டின் உள்ளே சென்று அவன் முகத்தில் அடிப்பதை போல கதவை அடைக்க “சொன்னா கேளு வா டா இங்க நின்னு உன் மாமன் வீட்டுக்கு காவல் காக்க போறியா” என்று கேட்க அவனும் வேறு வழியேயின்றி ஏறி அமர்ந்தான் போகும் போது கூட அவன் மனம் கேட்க்கவில்லை தன் மாமன் மகளின் அப்பாவியான முகம் அவன் கண்ணில் வந்து கொண்டே இருந்தது.
“பாவம் டா என் அக்கா மவள் பைத்தியம் மாதிரி எல்லாரையும் நம்புறா” என்று அவன் கூற
“அது அவள் தலை விதி அதை யாரால மாத்த முடியும் இப்படி ஒரு பொறுக்கி பயலுக்கு வாக்கப்படனும்ன்னு அவள் தலையில எழுதியிருக்கு” என்று அவன் கூற
“இல்லை டா எதாவது பண்ணி இந்த கல்யாணத்தை நிறுத்தியே ஆகனும் வேற மாப்பிள்ளை பார்த்து கட்டி வச்சிரலாம்ன்னு பார்க்குறேன்” என்று வீரா கூற “சார் நீங்க என்ன பண்ண நினைச்சாலும் அது எதுவும் நடக்காது இங்க” என்று அவன் கூற.
“இப்போ என்ன தான் டா பண்றது” என்று அவன் யோசித்து கொண்டே இருக்க “மாப்பிள்ளை என் கிட்ட ஒரு ரோசனை இருக்க அதை சொன்னா நீ என்ன அடிக்க மாட்டேன்னு சத்தியம் பண்ணு சொல்றேன்” என்றான் சுடலை “என்னன்னு சொல்லு அடிக்க மாட்டேன்” என்று அவன் கூற “உன் மாமனுக்கு இருக்க செல்வாக்குக்கு உன் மாமன் மகளை எவனும் கட்ட மாட்டான் அந்த மாப்பிள்ளை ஒன்னும் லேசு பட்ட ஆளு இல்லை அவனும் பெரிய ஆளுன்னு தான் பேசிக்கிறாங்க
ஏன் நீயே அந்த புள்ளையை கட்டிக்க கூடாது” என்று கூற அவன் பின்னந்தலையில் அமர்ந்த வாக்கிலேயே வீரா ஒரு அடி போட ஒரு கணம் வண்டி நிலை தடுமாறி செல்ல தன்னை சமாளித்து கொண்டு சுடலை மீண்டும் வண்டியை ஓட்டியவன்.
“டேய் இதுக்கு தான் உனக்குலாம் நல்லதே சொல்றது இல்லை எதிர்ல வந்த லாரி மேல ஏத்தி இருந்தா இந்நேரம் ரெண்டு பேரும் மேல போய் சேர்ந்து இருப்போம் உனக்கு என்னடா ஒன்டி கட்டை எனக்கு மூனு புள்ளைங்க இருக்கு டா” என்று அவன் கூற “அதெல்லாம் சரி வராது வேற எதாவது வழி இருந்தா சொல்லு” என்று அவன் கேட்க “இப்ப நான் என்ன அப்படி தப்பா சொல்லிட்டேன் அந்த புள்ளை பார்க்க தங்கசிலை மாதிரி இருக்கு ஊரு இளவட்டத்துல பாதி பேரு கண்ணு அந்த புள்ளை மேல தான் இருக்கு எனக்கு மட்டும் இப்படி ஒரு அக்கா மவள் இருந்துச்சு முதல் நாளே தூக்கிட்டு போய் தாலி கட்டி இருப்பேன் பாவம் அந்த புள்ளை அந்த குடிக்கார பய கிட்ட மாட்டி அது வாழ்க்கை சீரழியனும்ன்னு எழுதி இருக்கு” என்று கூற.
ஏனோ வீராவின் மனம் மிகவும் பதறியது அவன் மற்ற அக்கா பிள்ளைகளை விட இருப்பதிலேயே சாது இவள் ஒருத்தி தான் அது மட்டுமல்ல அவன் பின்னே “மாமா மாமா” என்று சுற்றி திரிபவளும் இவள் தான் அவன் மனம் கலங்க என்ன செய்வது என்று தெரியாமல் தவித்தான் இந்த அளவுக்கு பதட்டத்தை அவன் வாழ்நாளில் இதுவரை அவன் அடைந்ததே இல்லை மனம் முழுக்க மாமன் மகள் நினைவு மட்டுமே இருந்தது.
அதேநேரம் பெண்ணவளும் அவள் மாமனை பற்றி தான் நினைத்து கொண்டு இருந்தாள்
‘எதுக்கு இந்த மாமா இப்படி கத்தி அசிங்கப்படுத்துறாரு’ என்று நினைத்து கொண்டே இருக்க அவளின் தாய் அவளின் அருகில் வந்து அமர்ந்தார் “பாப்பா அந்த கிறுக்கு பய சொன்னதையே நினைச்சிக்கிட்டு கிடக்காத மாப்பிள்ளையை பத்தி நாங்க விசாரிச்சிட்டோம் அப்ப அப்போ குடிப்பாரு அவ்வளவு தான் அதுவும் இல்லாம நம்ம குடும்ப நிலைமை என்னன்னு உனக்கே தெரியும்” என்று கூற “அம்மா எனக்கு அதெல்லாம் பிரச்சனை இல்லை நீங்க என்னை கிணத்துல பிடிச்சு தள்ளி விட்டாலும் நான் விழுவேன்” என்று கூற தன் மகளை நினைத்து மனதில் பெருமை பட்டு கொண்டார் முத்துச்செல்வி.
வீரா வீட்டுக்கு வந்த பின்னும் அவன் மனம் மட்டும் தெளியவில்லை ரெங்கநாயகி மகனை பார்த்தவருக்கு ஏதோ சரியில்லை என்று தோன்ற அவன் உள்ளே சென்ற பின்
சுடலையை பிடித்து கொண்டார் “டேய் அவனுக்கு என்ன டா ஆச்சு கிறுக்க பய மாதிரி போறான்” என்று கேட்க “அவனுக்கு கிறுக்கு தான் பிடிச்சு போச்சு ஆத்தா” என்று நடந்த அனைத்தையும் கூற “ஆத்தே என்ன டா சொல்ற என் பேத்தி பாவம் டா” என்று கண்ணீர் விட “நீ கண்ணீர் விட்டு என்னதுக்கு புரையோசனம் உன் மவள் மருமனுக்கே அக்கறை இல்லை இவன் தான் பைத்தியக்காரன் மாதிரி அந்த புள்ளைக்கு மாப்பிள்ளை பார்த்து கல்யாணம் பண்ணி வைக்க போறேன்னு பேசிக்கிட்டு சுத்துரான்
அவன் கல்யாணம் பண்ணி வச்சா உன் மவள் மருமகன் சும்மா இருப்பாங்களா அந்த புள்ளை தாலியை கழட்டி கிடாசிட்டு இன்னொரு கல்யாணம் பண்ணி வைப்பாங்க” என்று கூற
“ஆமாம் டா அவன் பண்ண கூடியவன் தான்” என்றார் மனம் கலங்க.
“அதுக்கு தான் நீ அந்த புள்ளையை கட்டிக்கடான்னு சொன்னேன் உன் மவன் அடிச்சிப்புட்டான் ஆத்தா” என்றான் சோகமே உருவாய் “அந்த எடுபட்ட பய திருந்தவே மாட்டான் டா வூடு நீ பத்திரமா வீட்டுக்கு போ” என்று கூற அவனும் அங்கிருந்து கிளம்பினான் ரெங்கநாயகி தன் மகனை நினைத்து வேதனையுடனே உள்ளே சென்றார்.
மறுநாளில் இருந்து ஊர் திருவிழா தொடங்க ஆரம்பித்தது அன்று இரவு கூத்து போட வெளியூரில் இருந்து ஆட்கள் வரவழைக்கப்பட்டு இருந்தனர் அவர்கள் வீராவின் தோப்பு வீட்டில் தான் தங்கியிருந்தனர் அவன் வீட்டு பக்கத்தில் தான் கோவில் என்பதால் அனைவரும் அங்கே தான் இருந்தனர் அன்றைய நாள் பெண்கள் முளைப்பாறி சுமந்து வரிசையாக சென்று கொண்டு இருக்க வீரா தன் புல்லட்டில் மீது சாய்த்து கொண்டே அங்கே நடக்கும் நிகழ்வுகளை வேடிக்கை பார்த்து கொண்டு இருந்தான்.
அதில் ஒருத்தியாக அவன் அக்கா மகள் கண்மணியும் நடந்து வந்து கொண்டிருந்தாள் தன் தோழிகளுடன் பேசிக் கொண்டே நடந்து வந்தவளை எதார்த்தமாக திரும்பிய வீரா பார்த்துவிட்டான் அவளை பார்த்தவன் பார்த்தபடியே தான் இருந்தான் பெண்ணவள் சிவப்பு நிற பட்டு புடவை அணிந்து நீளக்கூந்தலை விரித்து விட்டு பூ வைத்து இருந்தாள் பக்கத்தில் இருந்த தோழியுடன் ஏதோ பேசிக் கொண்டே நடந்து வர ஏனோ அவன் கண்ணுக்கு அவள் மட்டும் தனியாக தெரிந்தாள் அவள் செய்கை அவளின் கண் அசைவு என்று அனைத்தும் அவனுக்கு ஸ்லோ மோஷனில் தெரிவதை போல ஒரு பிரம்மை தோன்றியது.
முளைப்பாரியை நடுவில் வைத்து பெண்கள் அனைவரும் கும்மியடிக்க கண்மணியும் அவர்களுடன் சேர்ந்து கொள்ள அவளையே கண் வெட்டாமல் பார்த்து கொண்டிருந்தான்
அப்போது அவன் பக்கத்தில் வந்து ரங்கநாயகி
“என் பேத்தி எம்புட்டு அழகா இருக்கா பார்த்தியா டா” என்று கேட்க உடனே தன் பார்வையை மாற்றினான் வீரா.
“அப்படி ஒன்னும் பெருசா இல்லை” என்று அவன் கூற “கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை” என்றவர் அங்கிருந்து சென்று விட இப்போது சாவகாசமாக வேடிக்கை பார்க்க ஆரம்பித்தான் ஆம் உண்மையிலேயே அவள் அழகாக தான் இருந்தால் தாவணி பாவாடையில் சிறுபிள்ளை போல இருந்தவள் இப்போது புடவையில் ஏதோ பெரிய பெண்ணை போல இருந்தாள் அவள் மூக்கில் இருந்து வரை மூக்குத்தி கூட ஒளி வீசியது
அவளின் அழகான சிரிப்பும் ஆணவனை ரசிக்க வைத்தது அவளை பார்த்து கொண்டே இருந்தவனுக்கு நேரம் போனதே தெரியவில்லை பெண்கள் அனைவரும் கிளம்பி செல்ல அவளும் அவர்களுடன் செல்ல அவனுக்கு மிகுந்த வருத்தமாக இருந்தது.
மீண்டும் அன்றைய இரவு நாடகத்துக்கு அனைவரும் வர அவன் கண்கள் அவனே அறியாமல் கண்மணியை வலை வீசி தேட
“என்ன மாப்பிள்ளை யாரையோ தேடுற மாதிரி இருக்கே” என்று சுடலை கேட்க “யாரையும் இல்லை நம்ம சுந்தரமூர்த்தி அண்ணன் மாதிரி இருந்தது அதான் பார்த்தேன்” என்றான்
“அதோ பாரு சுந்தரமூர்த்தி அண்ணேன்” என்று கண்மணியை அவன் கைக் காட்ட மன்னவன் முகம் மலர்ந்தது.
அவன் பார்வை பெண்ணவளிடம் இருக்க சுடலைக்கு ஏதோ புரிந்ததை போல இருக்க தன் மனைவி பக்கத்தில் சென்று அமர்ந்து கொண்டான் வீரா இப்போதும் தன் அக்கா மகளையே பார்த்து கொண்டு இருக்க ஒரு கட்டத்தில் பெண்ணவளுக்கு உறக்கம் வர அவள் எழுந்து நடந்து தனியே செல்ல அவளின் பின்னே வந்த வீரா அவளின் கைப்பிடித்து இழுத்தான் அங்கே கலைஞர்கள் உடை மாற்ற திரை அமைக்கப்பட்டு இருக்க அதன் உள்ள இருவரும் இருக்க பெண்ணவள் கத்த போக அவளின் வாயை தன் கையால் முடினான் வீரா
“நான் தான் டி” என்று கூறிவிட்டு கையை எடுக்க “என்ன மாமா” என்று அவள் பயந்த விழிகளுடனே கேட்க அவனே அறியாமல் அவளின் மையிட்ட விழிகளை பார்த்தவன் நிகழ் காலத்தை மறந்து விட அவளின் “மாமா” என்ற அழைப்பில் சுயநினைவுக்கு வந்தான்.
“நீ அந்த பொறுக்கி பயல கல்யாணம் பண்ணிக்க கூடாது” என்க “மாமா என்னால அப்பா அம்மாவை மீறி எதுவும் பண்ண முடியாது” என்று அவள் அதையே கூற வீரா அவள் அடுத்த வார்த்தை பேசும் முன் “என்னை கட்டிக்கிறியா டி” என்று கேட்க பெண்ணவள் தன் முட்டை கண்ணை விரித்து அதிர்வுடனே பார்க்க “கேட்டதுக்கு பதில் சொல்லு டி” என்று கேட்க “இல்லை என்னால முடியாது அம்மா தேடும் வழியை விடுங்க” என்று கூறிவிட்டு அவனை விட்டு செல்ல போக அவனோ அவளின் கையை பிடிக்க பெண் வாடையே இல்லாமல் இருந்தவனுக்கு அவளின் குண்டு மல்லியின் மணம் அவனை சுண்டி இழுக்க அவளின் அருகில் நெருங்கி நிற்க “ஏன் என்னை பிடிக்கலையா” என்று கேட்க “பிடிக்கும் ஆனா” என்று அவள் இழுக்க அவளை இன்னும் நெருங்கி இருந்தான் வீரா.
“ஆனா” என்று அவன் கேட்க “கல்யாணம் பண்ணிக்க பிடிக்காது” என்று கூறிவிட்டு செல்ல போக அவனுக்கு சுள்ளென்று கோபம் வந்தது “ஊர் பெயர் தெரியாத பரதேசியை கட்டிப்ப ஆனா என்னைய கட்டிக்க மாட்ட அப்படி தான” என்று கேட்க அவளோ பயந்து திருதிருவென விழிக்க அவள் பயந்ததில் அவளின் இதழ்கள் துடிக்க அவன் பார்வை அவளின் குட்டி இதழுக்கு வந்தது இருவரும் முத்தமிடும் தூரத்தில் இருக்க அவன் மனம் ‘கொடுத்துரு கொடுத்துரு’ என்று கூப்பாடு போட அடுத்த நொடி அவன் முரட்டு இதழ்கள் அவளின் குட்டி இதழை சிறைப்பிடித்தது அவள் கண்கள் அதிர்ச்சியில் விரிய அவனை தள்ளி விட முயல அவனா அவளை விடுபவன் முதல் முத்தத்தையே அழுத்தமாக அவள் இதழில் பதிக்க பெண்ணவள் திணறினாள் அவன் பற்களில் அவளின் கீழ் இதழ் சிறைப்பட்டு சிக்கி தவிக்க அவளுக்கு லேசாக வலிக்க எச்சிலால் அந்த இதழுக்கு ஒத்தடம் கொடுத்து அவளின் வாய் வழியே உமிழ்நீரை உயிர் வரை உறிஞ்சி எடுக்க பெண்ணவளின் நாவே வரண்டு போக ஆரம்பித்தது அவளோ அவனுடன் போராட
“மாப்பிள்ளை” என்று அழைத்து கொண்டே சுடலை அந்த பக்கமாக வர ஆணவன் பட்டென அவளிடம் இருந்து விலக அவளோ மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கி நிற்க “இந்தாரு டி இந்த நிமசத்துல இருந்து நான் மட்டுந்தேன் உனக்கு புருசன் வேற எவனும் இல்லை உன் கழுத்துல தாலின்னு ஒன்னு ஏறுனா அது என் கையால மட்டும் தான் ஏறும் குறுக்க எவன் வந்தாலும் வெட்டி போட்டுட்டு போய்ட்டே இருப்பேன்” என்று கூற அவளோ அவனை பார்த்து முறைத்தவள் அங்கிருந்து பயந்து ஓடியேவிட்டாள்.