களவோடு காதல்

களவு 3

 

 

 

வேல்பாண்டி தன் மகளின் கையை பிடித்து அழைத்து கொண்டு சென்றவர் அவளை காரில் அமர வைத்து வீட்டுக்கு கூட்டிச் சென்றார் இருவரும் வீடு வந்து சேர முத்துச்செல்வி சமையலறையில் சமைத்து கொண்டு இருக்க கணவனும் மகளும் வீட்டிற்க்குள் வருவதை பார்த்தார் மகள் தலை முடியெல்லாம் கலைந்து சோர்வுடனே இருப்பதை பார்த்தவர் “என்னாச்சி டி முகம் ஏதோ சோர்வா இருக்கு” என்று சாதாரணமாக கேட்க வேல்பாண்டி நடந்ததை கூற அவரோ பதட்டத்துடன் தன் மகள் அருகில் ஓடி வந்தவர் 

 

“அவன் உன்னைய எதாவது பண்ணுனா டி” என்று கேட்க “இல்லை மா” என்று கண்மணி தலையசைக்க “இந்த பாரு இப்ப சொல்றது தான் ஊர்ல நீ யார் கிட்ட வேணும்ன்னாலும் பேசு அவன் கிட்ட மட்டும் பேசாத அவன் ஒரு சரியான முரடன் ரெளடி பய அவங்க கண்ணுலையே படக்கூடாதுன்னு தான் உன்னை ஹாஸ்ட்டல்ல சேர்த்தேன் இப்போ அந்த படுபாவி உன் கிட்ட வந்து பேச வேற செய்யுறானா” என்று முத்துச்செல்வி புலம்ப.

 

 

 

“விடு முத்து ஒரு மாசம் தான அதுக்கு அப்புறம் அவள் தான் அவள் மாமியார் வீட்டுக்கு போய்டுவாளே” என்று அவர் கணவர் வேல்பாண்டி கூற “இல்லைங்க இருந்தாலும் எனக்கு பயமா இருக்க அவங்க சங்காத்தமே நமக்கு வேண்டாம்ங்க போதும் நாம பட்ட வரைக்கும்” என்றார் முத்துச்செல்விக்கு எதற்க்காக தன் தம்பி மீதே இத்தனை வெறுப்பு என்று அவர்களுக்கு மட்டும் தான் தெரியும்

 

“சரி விடு பழசையெல்லாம் எதுக்கு பேசிக்கிட்டு இனிமே உன் மாமன்ங்காரன் வந்து பேசுனா அப்பா கிட்ட வந்து சொல்லுமா” என்றார் வேல் பாண்டி அவளும் பதிலுக்கு சரியென்று தலையை ஆட்டி வைத்தாள்.

 

 

 

அதேநேரம் வீரய்யாவும் அவன் நண்பன் சுடலையும் வீடு வந்து சேர்ந்தனர் பொருட்களை எல்லாம் வாங்கி முடித்து சுடலை மட்டும் தனியே ரெங்கநாயகியிடம் சென்று 

 

“ஆத்தா இன்னைக்கு உன் இரண்டாவது மவள் மகள் உன் பேத்தியை பார்த்தோம்” என்று கூற 

 

“யாரு கண்மணியவா” என்று அவர் ஆர்வத்துடனே கண்களில் ஒளி மின்ன கேட்க “ஆமாம் நல்லா வளர்ந்துருச்சு அந்த புள்ளை காலேஜ் படிப்பை முடிச்சிருச்சாம் இனிமே இங்கன தான் இருக்குமாம் மாப்பிள்ளை பார்க்க போறாங்களாம்” என்று கூற அவரின் முகம் வாடியது இருப்பினும் அதை வெளிக்காட்டி கொள்ளாமல் “சரி” என்றார் ஆர்வம் இன்றி “உன் மவன் போய் பேசுனான்” என்று கூறி மீண்டும் அவர் முகத்தில் ஒளி வந்தது “அப்படியா என்ன டா பேசுனான்” என்று அவர் ஆர்வமாக கேட்க 

 

“எங்க உன் பேத்தி அவனை பேச வூட்டுச்சு மயங்கி பொத்துன்னு அவன் மேலேயே விழுந்துருச்சு” என்றான்.

 

 

 

“என்ன டா சொல்ற” என்று அவர் பதட்டமடைய 

 

“ஒன்னும் இல்லை சாதாரண மயக்கம் தான் உன் மவன் அழகுல மயங்கிருச்சு போல அதுக்கே உன் மருமவன் வேல்பாண்டி வானத்துக்கும் பூமிக்கும் குதிச்சிக்கிட்டு கிடக்காரு” என்றான் சுடலை 

 

“அவன் எப்பவும் அப்படி தான் எடுபட்ட பய என் கும்பத்தையே ரெண்டாக்கிப்புட்டான் என் மகளை இந்த நாளு வர என் கிட்ட பேச விடாம பண்ணிட்டான் படு பாவி” என்று கண்கள் கலங்கியவர் தன் கண்ணீரை புடவை முந்தானையில் துடைத்து கொண்டார்

 

மூக்கை உறிஞ்சி கொண்டே “என் பேத்தி எப்படி டா இருக்கா” என்று கேட்க “அந்த புள்ளைக்கு என்ன நல்லா துடைச்சு வச்ச விளக்கு மாதிரி அம்புட்டு அழகா இருக்கு அங்க இருந்த இளவட்ட பயலுக புரா கண்ணும் அந்த புள்ளை மேல தான் சின்ன வயசுல மூக்கு சளி சிந்தாம அங்கிட்டு இங்கிட்டும் சுத்திக்கிட்டு கிடந்த புள்ளையா அதுன்னு எனக்கே ஆச்சரியமா போச்சுன்னா பார்த்துக்கவேன்” என்று அவன் கூற ரெங்கநாயகியின் பார்வை மாறியது அவனை எரிப்பதை போல அவர் பார்க்க பயந்து அமைதியாகியவன் தன் பாக்கெட்டில் இருந்த பட்டன் போனை எடுத்து கொண்டு வராத போனை காதில் வைத்து கொண்டு 

 

“இதோ இப்போவே வரேன்” என்று கூறிக் கொண்டே அங்கிருந்து சென்றுவிட்டான்.

 

 

 

“இவனை முதல்ல வூட்டுக்குள்ள சேர்க்க கூடாது என் மவனுக்கு கல்யாணம் ஆவாம இருக்குறதுக்கு காரணமே இவன் தான் விளங்காதவன்” என்று புலம்பிக் கொண்டே உள்ளே சென்றார்.

 

 

 

ரெங்கநாயகி வீட்டின் உள்ளே வந்தார் பின்பக்கம் வீரா அங்கிருந்து நெல் மூட்டையை கட்டி எடுத்து அடுக்கி வைத்து கொண்டு இருந்தான் வேலையாக இருந்த மகனின் அருகில் சென்றவர் “ஏலேய் தம்பி உன் அக்கா மவள் கண்மணியை பார்த்தியாமே இன்னைக்கு” என்று கேட்க ஒரு பெரிய மூட்டையை தூக்கி மேலே வைத்தவன் வியர்த்து வடிய கையில்லா பனியனுடன் வேலை பார்த்து கொண்டு இருந்தவன் மூச்சு இறைக்க “யாரு அந்த சுடலை சொன்னனா” என்று கேட்க “எவன் சொன்னா என்ன டா என் பேத்தி எப்படி இருக்கா” என்று கேட்க “அவளுக்கு என்ன நல்லா தான் இருக்கா சின்ன வயசுல குண்டா அழகா இருந்தா இப்போ மெலிஞ்சு ஓணான் மாதிரி இருக்கா” என்று கூறிக்கொண்டே இன்னொரு மூட்டையை எடுத்து சனல் கயிற்றை கொண்டு கட்டிக் கொண்டே பேச “தம்பி அது வந்து….அது வந்து…” என்று அவர் இழுக்க “என்ன ஆத்தா எதுவா இருந்தாலும் வெரசா சொல்லி முடி எனக்கு சோலி கிடக்கு” என்றான் வீரா.

 

 

 

“நம்ம கண்மணியை உனக்கு பொண்ணு கேட்டு போலாமா டா” என்று அவர் கேட்க வீரா செய்யும் வேலையை விட்டுவிட்டு தன் அன்னையை ஒரு முறை பார்த்து முறைத்தவன்

 

“ஏன் ஆத்தா கொஞ்சமாவது மனசாட்சியோட பேசு என் வயசு என்ன அவள் வயசு என்ன” என்று கேட்க “வயசு பொல்லாத வயசு உன் அப்பாருக்கும் எனக்கும் தான் 17 வயசு வித்தியாசம் நாங்க கட்டிக்கல நாலு புள்ளை பெத்துக்கல எனக்கு கல்யாணம் ஆகும் போது வெறும் எனக்கு வெறும் 14 வயசு நீ ம்ன்னு ஒரு வார்த்தை சொல்லு ஊரையே கூட்டிட்டு நான் இப்போவே பொண்ணு கேட்க்க போறேன்” என்று கூற வீராவின் முகம் உடனே இறுகியது 

 

“ஆத்தா போதும் விடு நான் ஒரு தடவை பட்டதே போதும்” என்றான் கோபத்துடன்.

 

 

 

“அது இல்லை டா தம்பி” என்று அவர் ஏதோ சொல்ல வர “ஆத்தா நேத்து நான் ஒத்த வார்த்தை அவள் கிட்ட நின்னு பேச போனதுக்கே அவள் என்னைய பார்த்து மயங்கி விழுந்துட்டா இதெல்லாம் சரி வராது ஏற்கனவே பட்ட காயமே இன்னும் ஆராம கிடக்கு” என்று அவன் கூற “அதுக்குன்னு இப்படி கல்யாணமே பண்ணாம என் உசுர வாங்க போறியா டா நீயி உன் கூட அன்னாடம் சுத்துறானே அந்த சுடலை அவனே கல்யாணம் பண்ணி மூணு புள்ளை பெக்கல ஒன்னுத்துக்கும் வக்கு இல்லாதவனே மூணு புள்ளை பெத்துக்கும் போது உனக்கு என்ன டா குறை” என்று அவர் கேட்க அவன் எதையும் கண்டுகொள்ளாமல் தன் வேலையை பார்க்க ஆரம்பித்தான் ஒரு கட்டத்தில் அவரே கத்தி கத்தி வாய் வலிக்கும் வரை பேசிவிட்டு கண்ணீருடன் உள்ளே சென்றார்.

 

 

 

தன் தாயின் கண்ணீரை பார்த்தும் மனம் இறங்காமல் மனதை கல்லாக்கி கொண்டு வேலை பார்த்து கொண்டு இருந்தான் வீரா அவனுக்கும் திருமணம் செய்து மற்றவர்களை போன்று வாழ வேண்டும் என்ற எண்ணம் தான் ஆனால் என்ன செய்ய திருமணம் என்ற பேச்சை எடுத்தாலே அவன் பட்ட அவமானங்களும் ஏளன பேச்சுகளும் தான் அவன் நினைவுக்கு வந்தது இவனிடம் ஏதோ குறை இருப்பதால் தான் சொந்த அக்கா மகளே இவனை விட்டு ஓடிவிட்டாள் என்று ஊரே பேசியது இவன் முன்னே மரியாதையுடன் பேசுபவர்கள் அவனின் பின்னே கை கொட்டி சிரித்தார்கள் அன்று முடிவு செய்தான் இனி தன் வாழ்வில் திருமணமே வேண்டாம் என்று இன்று வரை மூன்று வருட காலம் இப்படியே ஓடிவிட்டது இனி இருக்கும் குறைந்தபட்ச நாட்களையும் இப்படியே ஓட்டி விடலாம் என்று நினைத்தான் ஆனால் அப்படியே இருந்துவிட முடியுமா என்ன.

 

 

 

மறுநாள் காலை வேல்பாண்டியின் இல்லம்…

 

 

 

வேல்பாண்டியின் ஆஸ்தான ஜோதிடர் வளவன் வாத்தியார் அவர் முன்னே அமர்ந்து இருந்தார் திருமணத்துக்கு பொருத்தம் பார்ப்பதற்க்காக வரவழைத்து இருந்தனர் 

 

அவரும் ஜாதக நோட்டை வைத்து பார்த்து கொண்டே விரலால் எண்ணிக் கொண்டும் நோட்டில் குறிப்பெடுத்து கொண்டும் இருந்தார் 

 

வேல்பாண்டியும் அவரின் மனைவியும் அவரையே தான் பார்த்து கொண்டு இருந்தனர் 

 

ஒரு வழியாக வளவன் வாத்தியார் நிமிர்ந்து பேச ஆரம்பித்தார் “முக்கியமான பொருத்தம் எல்லாம் நல்லா பொருந்தி இருக்கு 7 பொருத்தம் வருது வர்ற வாரம் நாள் நல்லா இருக்கு 10,13,17 இந்த மூணு தேதிக்குள்ள நிச்சயத்தை வச்சிக்கங்க இல்லைன்னா முகூர்த்த நாளுக்கு திரும்ப ஒரு மாசம் காத்து கிடக்கனும்” என்று கூற அப்போது தான் கணவன் மனைவி இருவரின் முகத்திலும் ஒரு தெளிவு வந்தது.

 

 

 

“அப்படியே கல்யாணத்துக்கு நாள் குறிச்சிடலாமே வாத்தியாரே” என்று வேல்பாண்டி கூற “குறிச்சிடலாம் ஆனா ஒரு மாசத்துக்கு அப்புறம் தான் முகூர்த்த நாள் இருக்கு இப்போதைக்கு நிச்சயத்தை முடிங்க நானே வந்து நல்ல நாளா பார்த்து தரேன்” என்றார் “சரி வாத்தியாரே” என்று கூறி அவர் தட்டில் தட்சனையை வைக்க “ஆமாம் கண்மணி எங்க வந்ததுல இருந்து ஆளையே காணும்” என்று அவர் கேட்க “அவள் நம்ம தோட்டதுக்கு துணி துவைக்க போய்ருக்காண்ணே” என்றார் கண்மணியின் தாய் கிராமங்களில் பொதுவாக பெண்கள் துணி துவைக்க வெளியே செல்வது தான்.

 

 

 

கண்மணி தன் தோழிகளுடன் துணியை எடுத்து கொண்டு நடந்து செல்ல அந்த பக்கம் ஏதோ வேலையாக வந்த வீரா தன் தோழன் சுடலையுடன் அவர்கள் எதிரே நடந்து வந்தான் 

 

“மாப்பிள்ளை அங்க பாரு உன் அக்கா மவள்” என்று சுடலை கூற வீராவின் கண்கள் பெண்ணவளிடம் சென்றது எல்லோரும் அவனை கடந்து நடந்து செல்ல அமைதியாக இருந்தவன் சரியாக கண்மணி அவனை கடந்து செல்லும் சமயம் அவளின் கையை பிடித்து கொண்டான் பேச்சு சுவாரசியத்தில் 

 

அனைவரும் அவள் மட்டும் நிற்பதை கவனிக்காமல் சென்று விட அவன் கையில் மாட்டிக் கொண்டாள்.

 

 

 

“ஏன் டி என் அக்கா பெத்த அழகி என்னைய பார்த்தா எப்புடி டி தெரியுது பார்த்த உடனே மயங்கி விழுற என்னைய பார்த்தா மயங்கி விழ சொல்லி உங்க அப்பன் வேல்பாண்டி சொன்னான டி” என்று வீரா அவள் கையை பிடித்து கொண்டே கேட்க “மாமா என் கையை விடுங்க நான் போகனும்” என்று அவள் அவன் முகம் பார்க்க சங்கடப்பட்டு கொண்டே கூற 

 

“கேட்டதுக்கு பதில் சொல்லு டி” என்று அவன் கேட்க “அவ்வளவு கிட்ட முகத்தை வந்து காட்டி பயமுறுத்துனா யாரா இருந்தாலும் பயந்து மயங்கி விழ தான் செய்வாங்க” என்று அவள் கூறிவிட்டு நாக்கை கடித்து கொண்டவள் அவன் கையில் இருந்து தன் கையை உடனே விடுவிக்க போராடி கொண்டே பேச 

 

“பார்த்தியா சுடலை நான் பார்த்து வளர்ந்தது எல்லாம் என் முன்னாடியே வந்து எப்படி பேசுதுன்னு என் மூஞ்சிக்கு என்ன டி குறை இந்த மூஞ்சுக்கு தான் டி சின்ன வயசுல அத்தனை முத்தம் கொடுத்த” என்று கூற பெண்ணவளுக்கு வெட்கம் பிடுங்கி தின்றது “மாமா என் கையை விடுங்க என்ன இப்டிலாம் பேசுறிங்க” என்று கேட்டவள் வலுக்கட்டாயமாக கையை விடுவித்து கொண்டு ஓடியேவிட்டாள் வீரா அவளை பார்த்து சிரித்துக் கொண்டே இருக்க.

 

அத்தியாயம் 4

 

 

 

பெண்ணவள் அங்கிருந்து ஓடி விட சுடலை அவனை வித்தியாசமாக பார்த்தவன் “என்ன டா மாப்பிள்ளை உன் நடவடிக்கை எதுவும் சரியேயில்லையே வயசு புள்ளை கிட்ட போய் முத்தத்தை பத்தி பேசுற அந்த புள்ளைக்கு வேற நிச்சயத்துக்கு தேதி குறிக்க போறாங்களாம் ஊருக்குள்ள பேசிக்கிறாங்க” என்று அவன் கூற “டேய் சும்மா என் அக்கா மக கிட்ட விளையான்டு பார்த்தன் டா” என்று அவன் கூற “அதுக்குன்னு சாதா விளையாட்ட பத்தி கேட்டா பரவாயில்லை நீ விட்டா அப்பா அம்மா விளையாட்டை பத்தியெல்லாம் கேட்ப போலயே” என்று அவன் கேட்க “டேய் அசிங்கமா பேசாத டா” என்று அவன் கூற “யாரு நானு சரி டா” என்றான் சுடலை.

 

 

 

வீரா அவனிடம் பேசிக் கொண்டு இருந்தாலும் அவன் பார்வை பெண்ணவளிடம் தான் இருந்தது ஓடும் அவளை பார்த்து கொண்டே சுடலையுடன் பேசிக் கொண்டு இருந்தவன் தன் சிகையை தன் கையால் களைத்துக் கொண்டே தன் கவனத்தை திசை திருப்பியவன் அங்கிருந்து சென்றான்.

 

 

 

பெண்ணவள் தன் தோழிகளின் அருகில் ஓடி வந்தவள் அவர்களுடன் மூச்சிறைக்க நடந்து 

 

வர அதில் ஒருத்தி “என்ன டி கண்மணி உன் மாமன் கிட்ட பேசி முடிச்சிட்டியா” என்று கேட்க

 

ஆக அனைவரும் கவனித்து விட்டு தான் நடந்து சென்று இருக்கின்றனர் என்று நினைத்தவள் “ம்ம்” என்றாள் “ஏன் டி கண்மணி உன் மாமனே அய்யனாரு சிலை கணக்கா இருக்கும் போது உனக்கு ஏன் வெளியில மாப்பிள்ளை பார்க்குறாக” என்று கேட்க கண்மணி உடனே

 

“நான் வீரா மாமாவை இதுவரை அப்படிலாம் நினைச்சதே இல்லை டி” என்றாள்.

 

 

 

“நினைக்காம தான் வீரா அண்ணேன் முகத்தை கூட பார்க்காம வெட்கப்ப்டடு ஓடி வந்தியா” என்று ஒருத்தி சிரித்து கொண்டே கேட்க

 

“அது என் மாமாவை ரொம்ப நாளுக்கு அப்புறம் பார்த்ததுனால கூச்சமா இருந்துச்சு” என்றாள் 

 

“பாருங்க டி கூச்சமாம்” என்று ஒருத்தி கேட்க

 

இன்னொருத்தி “நீயெல்லாம் எப்படி டி கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்ட” என்று கேட்க 

 

“அது எங்க வீட்ல பார்த்துட்டாங்க என் அப்பா அம்மாவை மீறி நான் இதுவரை எதுவும் பண்ணுனதே இல்லை” என்றாள் “உனக்கு பார்த்து இருக்க மாப்பிள்ளை யாருன்னு தெரியுமா” என்று கேட்க “யாரு” என்று கண்மணி கேட்டாள்.

 

 

 

*அடிப்பாவி மாப்பிள்ளை யாருன்னே தெரியாம தான் கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டியா” என்று கேட்க “என் அப்பா அம்மா எனக்கு எது பண்ணினாலும் நல்லதை தான் பண்ணுவாங்க” என்றாள் பெண்ணவள் 

 

“சரி மாப்பிள்ளை போட்டோவாது பார்த்தியா” என்று அவள் தோழி கேட்க “அதான் அடுத்த வாரம் நிச்சயத்துல பார்க்க போறனே” என்றாள் 

 

அவள் பேச்சை கேட்ட தோழிகள் என்ன இவள் இப்படி இருக்கா என்று ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து கொண்டனர்.

 

 

 

“இப்படிலாம் கண் மூடித்தனமான உன் அப்பா அம்மாவை நம்பாத கண்மணி ஒரு தடவை மாப்பிள்ளையை பத்தி விசாரிச்சிக்க” என்று அவளின் தோழி கூற “அதெல்லாம் இல்லை என் அப்பா அம்மா எனக்கு எப்பவும் நல்லது தான் பண்ணுவாங்க” என்று கூற இவள் திருத்த மாட்டா என்று நினைத்த அவளின் தோழி அதன் பின் அவளிடம் எதுவும் பேசவில்லை தோட்டத்துக்கு சென்று துணியை துவைத்து முடித்துவிட்டு அனைவரும் வீட்டுக்கு கிளம்பினர்.

 

 

 

அடுத்த வாரம் நிச்சயம் என்பதால் கண்மணியின் வீட்டில் இருந்த அனைவரும் ஒவ்வொரு வேலையை கவனித்து கொண்டனர் எல்லோரையும் விட கண்மணியின் அண்ணன் சுரேஷ் வேறு இன்னும் பரபரப்பாக காணப்பட்டான்

 

அதே சமயம் ஊர் திருவிழாவுக்கு காப்பு கட்டப்பட்டது இப்படியாக ஒரு நாள் வீரய்யாவும் சுடலையும் வெளியே வந்திருந்தனர் பிரபல பார் ஒன்றுக்கு செல்ல இருவரும் ஊர் கதைகளை பேசிக் கொண்டே குடித்து கொண்டு இருக்க அவர்கள் எதிரே இருந்தவன் மூச்சு விடாமல் குடித்து கொண்டு இருந்தான் பார்ப்பதற்க்கு ஏதோ வித்தியாசமாக பட வீராவின் அவனிடமே இருந்தது அதை கவனித்த சுடலை.

 

 

 

“மாப்பிள்ளை அது யாருன்னு தெரியுதா” என்று சுடலை கேட்க “தெரியலையே டா யார்ரா இவன், பார்க்க பைத்தியக்காரன் மாதிரி இருக்கான் தண்ணீ கூட கலக்காம இப்படி குடிக்கிறான் சீக்கிரமே குடல் வெந்து போய் சாக தான் போறான்” என்று வீரா புருவத்தை சுருக்கி சந்தேகமாக அவனை பார்த்து கொண்டே கூற “இந்த குடிக்கார பய தான் உன் அக்கா மவளுக்கு பார்த்துருக்க மாப்பிள்ளை” என்று கூற அவன் கண்கள் அதிர்ச்சியில் விரிந்தது “என்ன டா சொல்ற” என்று வீரா அதிர்ச்சி மாறாமல் கேட்க “உண்மையா தான் மாப்பிள்ளை நம்ம பக்கத்து ஊரு தான் பெரிய பணக்காரன் நல்ல வசதி பொண்ணுங்க சவகாசம் குடின்னு இவனுக்கு இல்லாத கெட்ட பழக்கமே இல்லை நல்ல பழக்கம் எதாவது இருக்கான்னு தான் தேடனும் இவன் கிட்ட” என்று கூற வீராவின் முகம் கோபத்தில் சிவந்தது‌.

 

 

 

“ஏன் டா இதெல்லாம் தெரிஞ்சும் அந்த ஆளு பொண்ணு கொடுக்குறானா” என்று அவன் கேட்க “எல்லாம் தெரிஞ்சு தான் கொடுக்குறாங்க உன் மாமன்காரன் துணிக்கடை கொஞ்ச நாளா டல்லா போகுதுல்ல அதனால இப்படி வசதியான வீட்ல கட்டிக் கொடுத்து அந்த மாப்பிள்ளைக்காரன் தங்கச்சியை சுரேஷ்க்கு கட்டி வைக்கிறதா பேச்கிக்கிட்டாங்க பொண்ணு கொடுத்து பொண்ணு எடுக்குறாங்க அந்த சுரேஷ் பய ஏதோ காதலிக்கிறானாம் அதனால அவசர அவசரமா கண்மணி புள்ளை படிப்பை பாதியிலேயே நிறுத்திப்புட்டு கல்யாணம் பண்றாங்க இவங்க கல்யாணம் முடிஞ்ச உடனே சுரேசு கல்யாணம் தான்” என்று கூற “இந்த சுரேசு பயலுக்கு இன்னும் சரியா மீசை கூட முளைக்கலையே டா எல்லாம் தெரிஞ்சும் பெத்த புள்ளை வாழ்க்கையை எப்படி டா கெடுக்குறாங்க இந்த பாவிங்க எங்க அக்காவுக்கு தெரியுமா டா” என்று அவன் கேட்க 

 

“உங்க அக்காவுக்கு சொல்லாம தான் பொண்ணு கொடுப்பாங்க பாரு எல்லாம் பணம் மாப்பிள்ளை பணம் 

 

பணத்தை கண்டா பொனம் கூட வாயை திறக்கும்ன்னு சொல்லுவாங்களே உனக்கு தெரியாது” என்று அவன் கூற வீராவுக்கு சுள்ளென்று கோபம் வந்தது தன் அக்கா மகளின் வாழ்க்கை இப்படி கெட்டு சீரழிய போகிறதே என்று “கிளியை வளர்த்து குரங்கு கையில கொடுக்க போறாங்களா டா” என்று அவன் கேட்க.

 

 

 

“மாப்பிள்ளை ஏற்கனவே அந்த கிளியே சிறையில தான் கிடக்கு அது எந்த சிறையில் கிடந்தா என்ன” என்று அவன் கேட்க வீராவின் முகம் இன்னும் கோபத்தில் சிவந்தது உடனே எழுந்து நின்றவன் தன் வேட்டியை மடித்து கட்டி கொண்டு எழுந்து கொண்டவன் விறுவிறுவென வெளியே செல்ல சுடலையும் அவன் பின்னே ஓடி வந்தான் “டேய் மாப்பிள்ளை எங்க டா போற” என்று கேட்டுக்கொண்டே அவன் வீராவின் பின்னே ஓடி வர அவன் தன் புல்லட்டில் ஏறி அமர்ந்து கொள்ள உடனே அவன் பின்னே அமர்ந்தான் சுடலை புல்லட் அதிவேகத்தில் பறக்க சற்று பயத்துடனே தான் அமர்ந்திருந்தான் சுடலை 

 

“எங்க மாப்பிள்ளை போறோம்” என்று அவன் கேட்க அவன் ஒரு வார்த்தை கூட அவனுக்கு பதில் சொல்லவில்லை.

 

 

 

புல்லட் மட்டும் படுவேகமாக சென்று வேல் பாண்டி வீட்டின் வாசலில் சென்று நின்றது 

 

“டேய் மாப்பிள்ளை இங்க எதுக்கு டா வந்தோம் எதாவது ஏழரையை இழுத்து விட்ராத என் பொஞ்சாதிக்கு தெரிஞ்சா தோலை உருச்சு உப்பு கண்டம் போட்ருவா” என்று அவன் கூற வீரா அவன் கூறி எதையும் காதில் வாங்கவில்லை “யோவ் வீட்ல யாருயா” என்று கத்த அங்கிருந்து யாரும் வெளியே வரவில்லை என்றவுடன் வீராவுக்கு கோபம் வர பக்கத்தில் இருந்த கட்டையை எடுத்தவன் அங்கிருந்த கார் கண்ணாடியை உடைத்தான் 

 

வரிசையாக இருந்த பூந்தோட்டியை காலால் எட்டி உதைக்க “மாப்பிள்ளை வேணாம் டா சொன்னா கேளு போய்டலாம்” என்று சுடலை அவன் கையை பிடிக்க “டேய் விடுடா” என்று கத்திய வீரா.

 

 

 

“வெக்கம் கெட்டவங்களா வெளிய வாங்க டா” என்று கத்த வீட்டில் இருந்த அனைவரும் வெளியே வந்தனர் கண்மணி அங்கே நின்றிருந்த வீராவை பார்த்தவளுக்கு சற்று அதிர்ச்சியாக தான் இருந்தது எதனால் அந்த அதிர்ச்சி என்றால் வீரா இந்த வீட்டு படியை மிதித்து சரியாக பத்து வருடங்களுக்கு மேல் ஆகிறது அவளுக்கு மட்டுமல்ல அங்கிருந்த அனைவருக்குமே அது பேரதிர்ச்சியாக இருந்தது.

 

 

 

“டேய் என்ன டா வேணும் எனக்கு எதுக்கு எங்க வீட்டு முன்னாடி வந்து நிக்குற குடிச்சிட்டு வந்து கலாட்டா பண்றியா” என்று வேல்பாண்டி கேட்க

 

“ஆமாம் கலாட்டா தான் பண்ண வந்துருக்கேன் என் அக்கா மவளுக்கு நீதி கேட்டு வந்துருக்கேன்” என்க பெண்ணவள் அதிர்வுடனே அவனை பார்த்தாள்.

 

 

 

“யாரு யாருக்கு அக்கா” என்று அவன் அக்கா முத்துச்செல்வி கத்த “நம்ம ரெண்டு பேருக்கும் ஒரே ஆத்தா தான ஒரே தாய் வயித்துல தான பொறந்தோம் அப்போ நீ என் அக்கா தான்” என்றவனின் பார்வை தன் மாமனிடம் திரும்பியது “யோவ் உனக்கு ஊர் உலகத்துல வேற மாப்பிள்ளையே கிடைக்கலயா இந்த ஊமைச்சிக்கு கட்டி கொடுக்க அவனே ஒரு பொறுக்கி பய குடிக்கார பய அவனுக்கு போய் பொண்ணு கொடுக்க போற பணம் கொடுத்தா எதை வேணும்ன்னாலும் திண்பியா நீ” என்று கேட்க “என் வூட்டு புள்ளையை நான் எவனுக்கு கட்டிக் கொடுத்தா உனக்கு என்ன வந்துச்சு நாங்க எல்லாம் விசாரிச்சு தான் கட்டி வைக்கிறோம்” என்றார் அவர் மாமா.

 

 

 

“யோவ் ஊரே சொல்லுது அவன் குடிக்கார பயன்னு” என்று வீரா கூற வேல்பாண்டி பார்வை சுடலையிடம் சென்றது “ஊர்ல எவன் தான் குடிக்கல நான் குடிக்கல அந்த மாதிரி தான் அதுவும் எங்க மாப்பிள்ளையை பத்தி எங்களுக்கு நீ யாரு முதல்ல கேள்வி கேட்க வந்துட்டான்” என்று கேட்க “நான் அவள் தாய்மாமன் அவளுக்காக நான் தான் வந்து நிற்பேன் பேசுவேன்” என்று அவன் கத்த 

 

“மாமா இது எங்க குடும்ப பிரச்சனை நீங்க இதுல தலையிடாதிங்க” என்று சுரேஷ் கூற 

 

“வா டா பெரிய மனுசா உனக்கு எல்லாம் வெட்கமா இல்லை உன் வாழ்க்கையை பார்த்தியே உன் தங்கச்சி வாழ்க்கையை பத்தி கொஞ்சமாவது நினைச்சு பார்த்தியா” என்று அவன் கேட்க ”அதெல்லாம் அவரு நல்லவரு தான் நாங்க விசாரிச்சு தான் பொண்ணு கொடுக்குறோம்” என்று சுரேஷ் கூற வீராவுக்கு வந்ததே கோபம் கண்மணி அருகில் சென்றவன் “இந்த பாரு கண்மணி அந்த பையன் சரி கிடையாது நீ மாமாவை நம்பு நானே உனக்கு வேற நல்ல பையனா பார்த்து கட்டி வைக்கிறேன் நீ கிளம்பி நம்ம வீட்டுக்கு போலாம்” என்று கூற.

 

 

 

பெண்ணவள் அதிர்வுடனே அவனை பார்த்தவள் “மாமா நான் வர மாட்டன்” என்றாள் வீரா உடனே அவளை பார்த்து முறைக்க 

 

அவன் முகத்தை பார்த்து பயந்தவள் பார்வையை திருப்பி 

 

“நீங்க பொய் சொல்லாதிங்க மாமா 

 

என் அப்பா அம்மா எனக்கு நல்லது தான் பண்ணுவாங்க” என்று அவள் தலை குனிந்து கொண்டே கூற “இந்த அசிங்கமெல்லாம் உனக்கு தேவையா மாப்பிள்ளை வா நாம போலாம்” என்று சுடலை இழுக்க “அதான் அவளே சொல்லிட்டாளே கிளம்பு” என்றார் அவன் அக்கா.

 

 

 

வீராவின் பார்வை இப்போதும் கண்மணியை விட்டு விலக வேறில்லை “அடியேய் பைத்தியக்காரி நீயே வாயில்லா பூச்சு போய் எவன் கிட்

டையாவது மாட்டி சிக்கி சீரழியாத” என்று வீரா எவ்வளவு கூறியும் அவள் காதில் விழவில்லை “மாப்பிள்ளை வா அது அவங்க குடும்ப பிரச்சனை வா” என்று அவன் நண்பன் சுடலை அவனை அங்கிருந்து இழுத்து சென்றான்‌.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *