களவோடு காதல் 1,2

அத்தியாயம் 1

“வீரா வீரா” என்று அங்கிருந்த கூட்டம் மொத்தமும் அதிர அங்கே வரிசை வரிசையாக சிறியது முதல் பெரியது அடுக்கி வைக்கப்பட்டு இருந்த இளவட்டக்கல்லை தன் தோளில் தூக்கிப்போட்டு கொண்டே வந்தான் வீரா என்கிற வீரய்யா “என்ன அண்ணே அவன் தூக்குற வேகத்தை பார்த்தா எல்லாத்தையும் தூக்கி போட்ருவான் போல அவசரப்பட்டு பொண்ணை கொடுக்குறேன்னு வாயை விட்டுட்டிங்களே அண்ணே” என்று அவன் கூற 

அவனை திரும்பி பார்த்து முறைத்தார் வேல்பாண்டி இறுதியாக 125 கிலோ எடையுள்ள கல்லை தூக்க நெருங்கினான் வீராவின் முகம் முழுக்க ஏற்கனவே வியர்த்து வடிந்து இருக்க அந்த கல்லை தூக்கியவன் கை கழுத்து நரம்புகள் புடைத்தது முகம் இறுகியது புருவங்கள் உயர்ந்து பல்லை கடித்து கொண்டே தூக்கியவன் “விட்றாத டா வீரா” என்று கத்திக் கொண்டே ஒரு வழியாக அந்த பெரிய இளவட்ட கல்லை கழுத்து வரை கஷ்டப்பட்டு தூக்கி பின்னே போட்டான்.

அதுவரை குண்டூசி போட்டால் கூட சத்தம் வரும் அளவுக்கு அமைதியாக இருந்த அந்த மக்கள் கூட்டம் ஆர்ப்பரித்து ஆரவாரம் செய்ய ஆரம்பித்தது ஒலிப்பெருக்கியில் “இந்த போட்டியில் வீரா என்கிற வீரய்யா வெற்றி பெற்றதால் கையோடு அவரின் திருமணத்தையும் அனைவரும் பார்த்துவிட்டு செல்லுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம்” என்ற அறிவிப்பு வர வீராவின் அழுத்தமான பார்வை கூட்டத்தில் ஒருத்தில் பயத்துடனே நின்றிருந்த தன் மாமன் மகள் கண்மணியின் பதிந்தது அவள் உடனே அங்கிருந்த தோழியின் பின்னே ஒளிந்து கொள்ள பொன் மஞ்சள் தாலி எடுத்து வரப்பட 

வேல்ப்பாண்டிக்கு உடனே கோபம் வர

“அதெல்லாம் முடியாது ஏதோ விளையாட்டுக்கு வினையாக்க பார்க்குறங்களா இந்த காட்டு பயலுக்கு என் மவள் கேட்க்குதா” என்று அவர் கத்த கூட்டத்தில் ஒரே சலசலப்பு ஏற்பட்டது.

“இங்க பாரு மாமா எல்லாம் தெரிஞ்சு தான உன் பொண்ணை போட்டிக்கு வச்ச ஒழுங்கா என் மச்சானுக்கு உன் பொண்ணை கட்டி கொடு” என்றான் வீராவின் தோழன் சுடலை 

“ஆமாம் பா எல்லாம் தெரிஞ்சு தான உன் பொண்ணை போட்டிக்கு வச்ச” என்று வயதில் மூத்த ஒருவர் மீசைக்காரர் பேச “அப்போ உன் மவளை அந்த காட்டுப்பயலுக்கு கட்டிக் கொண்டு யா” என்று வேல்ப்பாண்டி கூற அங்கே ஒரே கைக்கலப்பானது.

வீரா அங்கே நடத்த சண்டையெல்லாம் கவனிக்கும் மனநிலையில் இல்லை அவன் பார்வை அவன் அவளிடம் மட்டுமே இருந்தது 

அங்கே ஊரே கலவரமாகி கொண்டு இருக்க பக்கத்தில் இருந்தவன் கையில் இருந்த தாலியை பிடுங்கியவன் பெண்ணவளை பார்த்து கொண்டே அவளை நெருங்கி வர கண்மணி இதயம் படபடவென அடித்து கொண்டது “மாமா வேண்டாம்” என்று அவள் திக்கி திணறி கூற அதையெல்லாம் கண்டு கொள்ளும் மனநிலையில் இல்லை அவள் கழுத்தில் தாலி கட்டி முதல் முடிச்சை போட கண்மணி அவன் கையை பிடித்து தடுத்தவள்

அவன் கையில் கண்ணீருடனே வேக வேகமாக அடிக்க வீரா அவளின் கண்களை மையலுடன் பார்த்து கொண்டே அடுத்த முடிச்சை போட வேல்பாண்டி இந்த காட்சியை பார்த்தவர் 

“டேய் படுபாவி என் மகளை விடு டா” என்று கத்தி கூப்பாடு போட அவரை யாரும் கண்டுகொள்ளவில்லை சுடலை அவரின் கையை பிடித்து தடுக்க அவரால் எதுவும் செய்ய முடியவில்லை இனிதாக திருமணம் நடந்து முடிந்தது.

கண்மணி அழுது கொண்டே வீராவை பார்த்து முறைத்தவள் அவன் நெஞ்சில் தன் கையால் ஓங்கி வேக வேகமாக அடித்தாள் அவள் அடிப்பது கூட அவனுக்கு சுகமாக தான் இருந்து லேசான புன்னகையுடனே அவளின் அடியை வாங்கி கொண்டிருந்தான்.

இன்றிலிருந்து சரியாக ஒரு மாதத்துக்கு முன்பு..

“அடேங்கப்பா நாலு பேரா” என்று அந்த தரகர் வாயை பிளக்க “எலேய் எடுபட்ட பயலே கண்ணு வைக்காத உன் கண்ணை புடுங்கி கடையடுப்புல வைக்க” என்று ரெங்கநாயகி கத்த அந்த தரகர் வாயை மூடிக் கொண்டார் 

“சரி ஆத்தா மாப்பிள்ளை என்ன பண்றாரு பொண்ணுக எல்லாம் என்ன பண்ணுதுக” என்று கேட்க மூத்தவள் ரேணுகாதேவி நம்ம பக்கத்து ஊர்ல தான் கட்டிக் கொடுத்து இருக்கு அவள் புருசன் கந்து வட்டி பைனான்ஸ் வச்சிருக்காரு பேத்திக்கு கல்யாணம் முடிஞ்சுருச்சு என்று கூறும் போதே அவரின் குரலில் ஒரு சோகம் தெரிந்தது பேரன் சந்தோசு பத்தாம் வகுப்பு இரண்டாவது முத்துச்செல்வி அவளை நம்ம ஊர்லயே கட்டி கொடுத்துருக்கேன் அவள் புருசன் ஜவுளிக்கடை வச்சிருக்காரு ஒரு மவன் சுரேஷ் அவங்க அப்பாரு கடையை பார்த்துக்குறான்

இரண்டாவது பேத்தி காலேஜ் போக போறா கண்மணி மூணாவது என் மவன் வீரய்யா நாலாவது என் மவள் பொன்னரசி கண்டமன்னூருல கட்டிக் கொடுத்து இருக்கேன் அவுக புருசன் மரக்கடை வச்சிருக்காரு ஒரு மவன் ஸ்கூல் படிக்குறான் பிள்ளைக எல்லாம் மூலைக்கு ஒன்னா கட்டி கொடுத்தாச்சு அதுகளுக்கும் பிள்ளைக பொறந்து எல்லாம் பண்ணியாச்சு தான்” என்று கூற 

“அப்போ மாப்பிள்ளை தம்பிக்கு வயசு கூடயோ” என்று அவர் கேட்க “அவ்வளவு ஒன்னும் வயசு எல்லாம் ஆகிடல வர ஆடி வந்தா 34” என்று தரகர் தலையில் இடியை இறக்க “ஆத்தே 34-ஆ” என்று அவன் வாயை பிளக்க.

“என்ன பண்ண என் புருசன் வருசத்துக்கு ஒரு புள்ளைய கொடுத்துட்டு போய்ட்டாரு அவன் ஒத்த ஆளா இருந்து அக்கா எல்லாத்தையும் வயசுக்கு வந்ததும் கரை சேர்த்து முடிக்கிறதுக்குள்ள வயசு ஏறிப் போச்சு” என்றார் கண்ணீர் மல்க 

தரகர் அவரை பாவமாக பார்த்தவர் 

“சரி ஆத்தா மாப்பிள்ளைக்கு என்ன சோலின்னு சொல்லவேயில்லையே” என்று கேட்க “அவன் எட்டாவது வரை தான் படிச்சிருக்கான் அதுக்கு பொறவு வேலைக்கு போக ஆரம்பிச்சிட்டான் என்ன கலெக்ட்டரு வேலையா பார்க்க போறான் விவசாயம் தான் காடு கழனி இரண்டு வீடு 20 பசு மாடு 10-20 ஆடு கோழி எல்லாத்தையும் பார்த்துக்குறான் ஒரு ரைஸ் மில்லு இருக்கு” என்று கூற “அடேங்கப்பா அப்ப நல்ல வசதி தான் போல உன் மவனுக்கு பொண்ணு கிடைச்சிருச்சுன்னு நினைச்சிக்க ஆத்தா” என்று கூறியவர் தன் பையை கையில் வைத்து கொண்டு வெளியே செல்ல போக அவன் குறுக்கே வந்து நின்றான் வீரா என்கிற வீரய்யா.

அவன் மீது மோதிய தரகரால் அவனை அன்னார்ந்து தான் பார்க்க முடிந்தது ‘இவன் என்ன பனை மரத்துல பாதி உசரம் இருக்கான்’ என்று நினைத்து கொண்டே அவனை பார்க்க அவனும் அவரை தான் பார்த்தான் 

திராவிட நிறத்தில் சிவந்த கண்களுடன் 

மலை மாமிசத்தை போன்று உடலை வளர்த்து இருந்தான் பார்க்கவே படு பயங்கரமாக வேறு இருந்தான் அவன் கத்தி போன்ற கூர்மையான கண்கள் அவரையே பார்க்க “சார் வழியை வூடுங்க” என்று அவர் கூற“யாருய்யா நீ என் வீட்டுக்கு வந்துட்டு போற” என்று அவன் கேட்க “நான் தரகருங்க பக்கத்து ஊரு இந்த வூட்டுல இருக்கானே வீரய்யா அவனுக்கு பொண்ணு பார்க்க சொல்லி கேட்டு வுட்டாங்க அதான் வந்தேன்” என்று கூறி முடிக்கும் முன்னே அவன் கன்னத்தில் ஓங்கி பளார் என்று ஒரு அறைவிட்டான் வீரய்யா “யாருங்க நீங்க என்னை எதுக்கு அடிக்கிறிங்க” என்று அந்த தரகர் கேட்க மீண்டும் அவர் கன்னத்தில் பளார் பளார் என்று அறை விழ “அய்யோ ஆத்தா காப்பாத்துங்க” என்று கூற அங்கே ஓடி வந்தார் அவன் தாய் ரெங்கநாயகி.

“எலேய் தம்பி வூட்டுரு பாவம் வயசானவரு நான் தான் உனக்கு பொண்ணு பார்க்க வர சொன்னேன்” என்று அவர் கெஞ்சிய பிறகு தான் அவன் அவரை விட்டான் “இனிமே இந்த பக்கம் உன்னை பார்த்தேன் உன் உடம்புல இருக்க நாலு நல்லி எலும்பு கூட இருக்காது ஓடு” என்று விரட்ட அவரும் பயத்துடனே வெளியே ஓடியேவிட்டார் ஓடிச்சென்று ஊர் எல்லையில் தான் நின்றார் அங்கிருந்த டீக்கடையில் தண்ணீரை வாங்கி குடித்த பின் லேசாக அசுவாசம் அடைந்தார்.

அவர் டீக்கடை பென்ஜ்ஜில் அமர்ந்திருக்க அவர் பக்கத்தில் இருந்தவரின் கன்னத்தை பார்த்து “அடி பலமோ” என்று கேட்க 

“ஆமா உங்களுக்கு எப்படி தெரியும்” என்று கேட்க “இதோட ஏழாவது” என்று அவரின் எதிரே இருந்த ஒருவன் கூற “தினமும் ஒரு தரகரு போயி அந்த வீரா வீட்டுக்கு அடி வாங்கிட்டு வர்றது தான் வேலையே” என்று அவர் பக்கத்தில் இருந்தவர் கூற “நீங்க என்ன தம்பி சொல்றிங்க” என்று அவர் கேட்க “அவனே ஒரு ஏழரை நாட்டு சனி அவன் கிட்ட போய் சீண்டி பார்க்கலாமா” என்று ஒருவன் “சிங்கத்தோட வாயில தலை வைக்கிறதும் அவன் வீட்டுக்கு போறதும் ஒன்னுதேன் சரியான முரடன் நாலு அறை வூட்டுட்டு தான் சேதி என்னன்னு கேட்பான் காட்டுப்பய கல்யாணம் பண்ண மாட்டேன்னு மொட்டை பயலா சுத்திக்கிட்டு திரியுறான் அவன் வூட்டுக்கு போய்ட்டு வர்றியே இருந்தாலும் உனக்கு தைரியம் தான்” என்று அவர் கூற அந்த தரகருக்கு நெஞ்சுவலியே வந்துவிடும் போல் இருந்தது.

“சீக்கிரமா இங்க இருந்து ஓடி போய்டு இல்லை இன்னும் பத்து நிமிசத்துல புல்லட்டுல இங்க வந்து நிற்பான்” என்று கூற தண்ணியை கூட முழுதாக குடிக்காமல் வந்த பஸ்சை பிடித்து ஓடியேவிட்டார் அந்த தரகர்.

அவர்கள் கூறியதை போல பத்து நிமிடத்தில் புல்லட்டில் அங்கே வந்து நின்றான் வீரய்யா

அவன் வந்தவுடன் அங்கிருந்தவர்கள் பேப்பர் படிப்பதை போல பார்த்து கொண்டு இருக்க அவன் தன் வண்டியை முறுக்கி கொண்டே நிற்க அவர்களை பார்த்து முறைத்தான் அடுத்த இரண்டு நிமிடம் அங்கேயே இருந்தவன் அதன் பின் அங்கிருந்து கிளம்பினான் அப்போது தான் அங்கிருந்தவர்கள் மூச்சு விடவே செய்தனர்.

“இவன் திமிரு என்னைக்கு தான் அடங்குமோ” என்று ஒருவன் கூற “வூடுங்கய்யா இவன் திமிரை அடக்க கடவுள் யாரையாவது அனுப்பாமலா இருப்பாரு” என்று கூறினான் இன்னொருவன்‌ “எங்க இவன் எவளயாவது கட்டுனாவது எவளாவது வந்து இவனை அடக்கி வைப்பாளுக அது இந்த ஜென்மத்துல நடக்காது போல” என்று பேசிக் கொண்டு இருந்தனர்.

வீரய்யாவின் புல்லட் வீட்டுக்கு வர அவன் எதிர் வீட்டில் பாட்டு சத்தம் கலைக்கட்டியது என்னவென்று அவன் பார்க்க எதிர் வீட்டில் இருக்கும் தங்கராசின் இளைய மகள் மஞ்சள் நீராட்டு விழா பேனர் அவன் கண்ணுக்கு தென்பட்டது தங்கராசும் வீரய்யாவும் பரம எதிரிகள் சொந்தத்தில் வீரய்யாவுக்கு மாமா முறை தான் ஆனால் இருவருக்கும் சுத்தமாக ஒத்துவராது தங்கராசுக்கு மூன்று மகள்கள் மூத்தவளை கட்டி கொடுத்துவிட மகள் இரண்டாவது மகள் பள்ளியில் படிக்கிறாள் அவளுக்கு தான் மஞ்சள் நீராட்டு விழா‌‌ ஊரையே கூட்டி விமர்சியாக விழா நடந்து கொண்டிருந்தது வீரய்யா வீட்டை தவிர ஊரில் இருந்த அனைவரையும் அழைத்து விருந்து வைத்திருந்தார் வேல்பாண்டி.

அவர்கள் வீட்டை ஒரு பார்வை பார்த்து கொண்டு வீட்டின் உள்ளே வந்தான் வீரய்யா உள்ளே அவன் தாய் ரெங்க நாயகி பாத்திரங்களை போட்டு உடைத்து கொண்டே ஒப்பாரி வைத்து கொண்டு “எய்யா‌ சுடலை மாடா நான் உனக்கு என்ன குறை வச்சேன் ஊருல எல்லார் வூட்டுலையும் விசேஷம் நடக்குது…எனக்கு மட்டும் ஏன் இறக்கமே காட்ட மாட்டேங்குற எத்தனை நாளைக்கு இந்த வூட்டுல சோறாக்கி குழம்பு வச்சு சீழ் பட போறானோ” என்று அழுது கொண்டே வேலை பார்த்து கொண்டு இருந்தார் அவன் தாய் ரெங்கநாயகி.

வீரய்யா வீட்டின் உள்ளே வந்தவனுக்கு தன் தாயின் பேச்சு கோபத்தை வரவழைக்க “ஆத்தா இப்போ எதுக்கு ஒப்பாரி வச்சிட்டு இருக்க உன்னை எவன் இந்த வேலையெல்லாம் செய்ய சொன்னான்” என்று வீரய்யா கேட்க ஒரு கரண்டி பறந்து வந்து அவனை தாண்டி சென்று விழுந்தது அதற்க்கு மேல் அவன் எதுவும் பேசவில்லை 

“அந்த சிறுக்கி ஓடி‌ போய்ட்டான்னு இன்னைக்கு வரைக்கும் கண்ணாலம் கட்டாம சுத்திக்கிட்டு கிடக்கான் கோயில் மாடு மாதிரி இந்த அதிசயம் எங்கயாவது வழங்குமா ஊர் உலகத்துல வேற பொண்ணே இல்லையா எல்லாம் என் நேரம் அந்த ஆளு நிம்மதியா போய் சேர்ந்துட்டான் என்னையும் கூட்டிட்டு போயிடு சாமி இவன் கிட்ட மல்லுக்கட்ட என்னவா முடியல” என்று கத்தி கொண்டே இருந்தார்.

ஆம் சரியாக மூன்று வருடங்களுக்கு முன்பு ஊரையே கூட்டி வீரய்யாவுக்கு திருமணம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது அவன் மூத்த அக்கா மகளுடன் அவனுக்கும் அவளை மிகவும் பிடித்து தான் இருந்தது அவளோ தன் காதலனுடன் ஓடிவிட அன்று வெறுத்தவன் தான் திருமணத்தை இன்று வரை திருமணம் செய்து கொள்ளவேயில்லை ஏனோ திருமணம் என்ற பேச்சை எடுத்தாலே எதற்க்கும் அஞ்சாத வீரய்யாவுக்கே சற்று அச்சமாக தான் இருந்தது 

இந்த ஒரு காரணத்தை வைத்தே அவனுக்கு வந்த வரன்கள் அனைத்தும் தட்டி கழிய ஒரு கட்டத்தில் திருமணமே வேண்டாம் என்ற நிலைக்கு அவனே தள்ளப்பட்டான் இன்று வரை திருமணமே வேண்டாம் என்று சுற்றிக் கொண்டு இருக்கிறான்.

அத்தியாயம் 2

வீரய்யா நினைவுகள் மெல்ல பின்னோக்கி சென்றது அன்றைய நாள் அவன் அக்கா மகள் அவன் காலை பிடித்து அழுத காட்சி அவன் கண் முன்னே வந்து போனது யாருக்கும் தெரியாமல் அவளை அழைத்து சென்று அவளை அவன் காதலுடன் சேர்த்து வைத்ததே வீரய்யா தான் தன் அக்கா மகள் தன் காலை பிடித்து அழுத காட்சி இன்றும் அவன் நினைவில் இருக்க தான் செய்தது, மீண்டும் பாத்திரம் உருட்டும் சத்தத்தில் சுயநினைவுக்கு வந்தவன்.

“இந்த வீட்ல ஒரு நாளாவது மனுசன் நிம்மதியா இருக்க முடியுதா வீடா இது உன் புருசன் உன் தொல்லை தாங்க முடியாம தான் சீக்கிரமா போய் சேர்ந்துட்டான் போல” என்றவன் புலம்பிக் கொண்டே அங்கே சாப்பிடுவதற்க்காக தரையில் அமர்ந்தான்

நேற்று வைத்த பழைய சோற்றை பாத்திரத்தில் எடுத்து வந்து அவன் முன் வைத்தார் அவன் தாய் அதற்க்கு தொட்டுக்க வெறும் வெங்காயம் பச்சை மிளகாய் இருந்தது.

“என்ன ஆத்தா இது” என்று அவன் கேட்க 

“இந்த வயசான காலத்துல என்னால இதை தான் செய்ய முடியும் உனக்கு சுடு சோறு கறி குழம்பு வேணும்ன்னா எவளையாவது புடிச்சி இழுத்துட்டு வா அவள் ஆக்கி கொட்டுவா என்னை வூட்டுரு சாமி” என்று கண்ணீருடன் முந்தானையில் மூக்கை துடைத்து கொண்டே கூறினார்.

தன் தாயை பார்த்து முறைத்த வீரய்யா “எனக்கு சோறே வேணாம் ஆள வூடு” என்று கூறிவிட்டு அங்கிருந்து கிளம்பினான் ஊரே அவனை பார்த்து பயந்தாலும் அவன் தாய் மட்டும் அவனை கண்டு அசர மாட்டார் எப்போதும் இருவருக்கும் முட்டிக்கொள்ளும் தன் மாட்டு பண்ணைக்கு தான் சென்றான் அங்கிருந்த கயிற்று கட்டிலை எடுத்து படுத்தவனுக்கு பக்கத்தில் இருந்த வயலில் வந்த சில்லென்ற காற்று இதத்தை கொடுக்க அமைதியாக படுத்திருந்தான் வானத்தை பார்த்து கொண்டே.

பலநாள் இரவை வீரய்யா இங்கு தான் கழிப்பான் ஊரை பொறுத்த வரை அவன் ஒரு முரடன் கோபக்காரன் ஆனால் உண்மையிலேயே அவன் யார் எப்படிப்பட்டவன் என்பதை அவன் ஒருவன் மட்டுமே அறிவான்.

மறுநாள் காலை பொழுது மெல்ல விடிய “அண்ணே அண்ணே” என்று எழுப்பினான் அவன் பண்ணையில் வேலை பார்க்கும் பசுபதி அதில் மெல்ல கண்ணை திறந்தான் வீரய்யா “ராத்திரியெல்லாம் இங்கனயே தூங்கிட்டிங்களான்னே ஆத்தா உங்களை தேடிக்கிட்டு இருந்துச்சு சீக்கிரமா வூட்டுக்கு போங்கண்ணே” என்று கூற அவனோ அவனிடம் எதுவும் பேசாமல் அங்கிருந்து  எழுந்து சென்றான் என்று கூறவும் இல்லை எழுந்து சென்றவன் முகத்தை கழுவி குளித்து வந்தான் அவன் வீட்டுக்கு அவன் தாய் ரெங்க நாயகி சமையலறையில் அடுப்பு ஊதிக் கொண்டு இருந்தார்.

அவன் வீட்டில் உள்ளே வந்து உடை மாற்றி கிளம்பி போக “எய்யா நான் பெத்த ராசா ஒரு வா சாப்பிட்டு போயா” என்று அழைக்க தன் தாயை எரிப்பதை போல ஒரு பார்வை பார்த்தவன் “இன்னைக்கு ஊர் சந்தை அங்க வேலை இருக்கு நீயே தின்னு” என்று கூறிவிட்டு வெளியே கிளம்பினான்.

ஒவ்வொரு வார வெள்ளிக்கிழமையும் அவர்கள் ஊரில் சந்தை போடுவார்கள் காய்கறி பழங்கள் வீட்டு உபயோக பொருட்கள் ஆடு மாடு என்று‌ அனைத்தும் அங்கு கிடைக்கும் சொல்லப்போனால் அந்த சந்தையில் கிடைக்காதது என்று எதுவும் இல்லை வீரய்யா புல்லட்டில் வந்து இறங்க அவனுக்கு அங்கிருந்தவர்கள் மரியாதையுடன் வணக்கம் வைத்தனர் அவனும் பதிலுக்கு தலையசைத்துவிட்டு சென்றான் அவனுக்கு முன்பே வந்து அவனுக்காக காத்திருந்தார் அவன் நண்பன் சுடலைமுத்து “என்ன டா மாப்பிள்ளை எவ்வளவு‌ நேரமா உனக்காக நின்னுட்டு இருக்கேன் நீ ஆடி அசைஞ்சு வர புள்ளைக்குட்டி இருக்க நானே வந்துட்டேன் ஒன்டிக்கட்டை உனக்கு வர்ற இவ்வளவு நேரமா” என்று கேட்க வீரா அவனை பார்த்து முறைக்க அதில் பயந்தவன் “சரி வா டா மாப்பிள்ளை நமக்குள்ள என்ன” என்று கூறி சுடலைமுத்து சமாளிக்க இருவரும் சந்தையை சுற்ற ஆரம்பித்தனர் வீராவுடன் ஊர் சுற்றிய அனைவருக்கும் திருமணம் முடிந்துவிட்டது அவன் ஒருவனை தவிர.

ஒரு இடத்தில் ஆடு மாடுகள் விற்பனைக்கு வைக்கப்பட்டு இருக்க வீரா வேட்டியை மடித்து கட்டிக் கொண்டு அங்கே சென்றவன் 

“சினை மாடு ஆரம்ப விலை 10000 ரூபா ஏலம் கேட்க்குறவங்க கேட்க்கலாம்” என்று கூற ஒவ்வொருவராக விலையை கேட்க வீராவும் 

பதிலுக்கு “12000” என்று கூறினார் வேல்பாண்டி அதாவது அவனின் இரண்டாவது அக்கா முத்துச்செல்வியின் கணவர் இருவரும் எலியும் பூனையுமாக தான் இருப்பார்கள் ஊரில் வீரய்யாவுக்கு எதிரிக்கா பஞ்சம் அவர் எதிரே நின்றவன் “15000” என்றான் 

இவனும் பதிலுக்கு சும்மா இல்லாமல் 

வீரா அவரை முறைத்து பார்த்து கொண்டே 

“30000” என்க அவர் பதிலுக்கு “50000” என்க இறுதியில் மாடு “80000” க்கு முடிக்கப்பட இறுதியாக அது வேல்பாண்டி வசமானது அவர் முகத்தில் அப்படி ஒரு புன்னகை கர்வம் அதே கர்வத்துடன் மீசையை முறுக்கினார்.

வீரா பக்கத்தில் நின்றிருந்த அவன் நண்பன் 

சுடலை முத்து “என்ன டா மாப்பிள்ளை இப்படி ஆகி போச்சு” என்று கேட்க “ஏன் டா வீட்ல எழு எட்டு சினை மாடு இருக்கும் போது நான் ஏன் டா புது மாடு வாங்க போறேன் சும்மா விளையான்டு பார்த்தேன் மாமா கிட்ட” என்று அவன் கூற வேல்பாண்டி அவனை முறைத்து பார்த்தார் “என்ன மாமா வரட்டா” என்று அவரை பார்த்து சிரித்து கொண்டே வீரய்யா கூற அவருக்கு வந்ததே கோபம் அவனை பார்த்து முறைக்க இவன் அவரை கண்டுகொள்ளாமல் அங்கிருந்து சென்றான் செல்லும் வீட்டுக்கு தேவையான பொருட்கள் அனைத்தையும் வாங்கி கொண்டு தன் நண்பனுடன் நடந்து சென்று கொண்டிருந்தனர் அப்போது அவர்கள்  எதிரே தாவணி பெண்கள் கூட்டம் நடந்து வந்து கொண்டு இருக்க “மாப்பிள்ளை அங்க பாத்தியா வேல்பாண்டி மாமா  மவள் போறதை” என்று சுடலை கூற வீராவின் கண்கள் எதார்த்தமாக அங்கே பார்த்தது அங்கிருந்த தாவணி பெண்களில் அவள் யார் என்று அவனுக்கு தெரியவில்லை காரணம் அவள் சிறுவயதில் இருந்தே விடுதியில் தங்கி படித்திருந்தாள் அது மட்டுமின்றி இரு குடும்பத்துக்கும் போக்குவரத்து இல்லை என்பதால் பெண்ணவளை பார்த்தே பல வருடங்கள் ஆகி இருந்தது.

“எங்க டா மாப்பிள்ளை” என்று அவன் கேட்க 

“அதான் அங்க போகுதே நாவல் பழ கலரு தாவணி” என்று அவன் கூற வீரா கண்களுக்கு அவள் தாவணி தெரிந்ததே தவிர அவள் தெரியவில்லை அவளின் முகம் மட்டும் மறைந்துவிட்டது பெண்ணவள் நேரே தன் தந்தையிடம் நடந்து சென்றாள் அவளின் தந்தை அவளை பார்த்தவர் “என்ன கழுதை எல்லாம் வாங்குனியா இல்லையா” என்று கேட்க “இல்லைப்பா இன்னும் வளையல் மட்டும் வாங்கலை பா” என்றாள் 

“அந்தா மூலையில ஒரு கடை இருக்கே அங்கன போய் வாங்கிட்டு வெரசா வா” என்று கூற அவளும் அங்கிருந்து கடையை பார்த்து கொண்டே நடந்து சென்றாள்.

அப்போது அங்கே தன் நண்பனுடன் வந்தான் வீரா “எலேய் மாப்பிள்ளை திரும்ப வருது அந்த நாவல் பழ தாவணி” என்று கூற வீரய்யாவுக்கு அவளை பார்த்தே ஆக வேண்டும் என்ற ஆவல் எழ அவன் கண்கள் அந்த வளையல் கடை பக்கம் சென்றது அவளும் அவளின் தோழிகளுடன் நடந்து வர வீரா தன் தோழனுடன் அந்த கடையில் ஏதோ வாங்குவதை போல நடந்து சென்றவன் பெண்ணவளை எப்படியோ பார்த்து விட அவளும் அவனை பார்த்தாள் “என் அக்கா மவளா மா நீயி என்னைய தெரியுதா நான் தான் வீரா மாமா” என்று அவன் கூறி முடிக்க பெண்ணவள் அதிர்வுடனே பார்த்தவள் அடுத்த கணம் தலை சுற்றி அவன் மீதே மயங்கி விழ 

வீரா அவளை அணைத்து பிடித்து கொண்டான்.

“டேய் அந்த புள்ளை பாட்டுக்கு சிவனேன்னு வளையல் வாங்கிட்டு இருந்துச்சு அது கிட்ட வந்து பேசுறேன்னு பயமுறுத்தி இப்படி மயங்கி விழ வச்சிட்டியே அவங்க அப்பனுக்கு தெரிஞ்சா நம்மளை உயிரோட வச்சு குழியில போட்டு புதைச்சிருவான் மாப்பிள்ளை” என்று அவன் புலம்பிக் கொண்டே இருக்க

“டேய் வாய்க்கு வாய் பேசாம தண்ணீ எடுத்துட்டு வா டா” என்று அவனை விரட்டி விட அதற்க்குள் அங்கே கூட்டம் சேர ஆரம்பித்தது 

பதட்டத்தில் பெண்ணவளின் பெயர் கூட வீரய்யாவுக்கு நினைவில் வரவில்லை 

“அம்மாடி கண்ணு” என்று அவளின் கன்னத்தை தட்டி எழுப்ப முயற்சிக்க அவள் அப்போதும் கண்ணை திறக்காமல் கிடக்க 

அதற்க்குள் தண்ணீருடன் ஓடி வந்தான் பெண்ணவள் முகத்தில் வேகமாக தெளிக்க அவளின் விழிகள் மூடிய இமைகளில் மெல்ல மெல்ல அசைந்தது “மாப்பிள்ளை கண்ணு அசையுது” என்றான் சுடலை அதற்க்குள் வேல்பாண்டி வளையல் கடையில் கூட்டமாக இருப்பதை பார்த்து அங்கே இருந்த கூட்டத்தை விலக்கிவிட்டு வர தன் மகள் மயங்கி வீரய்யா மடியில் கிடப்பதை பார்த்தவர் 

“என் மவளை என்ன டா பண்ணுன பாவி” என்று கத்திக் கொண்டே அவன் முதுகில் அடிக்க “யோவ் மாமா நான் எதுவும் பண்ணலயா” என்று வீரய்யா கத்த அதற்க்குள் பெண்ணவள் கண்ணை திறந்தாள்.

“அப்பா..அப்பா” என்று அவள் தடுமாறி கொண்டே அழைக்க “கண்மணி அம்மாடி இவன் உன்னைய எதாவது பண்ணுனா சொல்லு மா” என்று அவளின் கன்னத்தை தொட்டு கேட்க “இல்லை பா மயக்கம் தான்” என்றாள் அவள் தடுமாற்றத்துடனே ஆணவன் பார்வை பெண்ணவளிடம் தான் இருந்தது அவளின் முகத்தில் தெரிந்த பதட்டம் அவனை பார்த்த பார்வை அனைத்தும் அவன் மனதில் பதிந்தது அவள் மூச்சு விட சிரமப்படுவதை போல தெரிந்தது அதை உணர்ந்தவன் அங்கிருந்த கூட்டத்தை பார்த்த வீரா “யோவ் இங்கன என்ன ஆடலும் பாடலும் நிகழ்ச்சியா நடக்குது போங்க யா எல்லாம் சோலியை பார்த்துக்கிட்டு” என்று கத்த அனைவரும் அங்கிருந்து சென்றனர் வீரா எழுந்து பெண்ணவளையும் நிற்க வைத்தான்.

வேல்பாண்டி அவனை முறைத்து கொண்டே தன் மகளின் கைப்பிடித்து அழைத்து சென்றார் வீரா அவரை பொருட்டாக மதிக்கவில்லை

ஆனால் அவரின் பார்வை மட்டும் மாறவில்லை

சுடலை அவன் முதுகை சுரண்டியவன்

“ஏன் டா மாப்பிள்ளை ஏற்கனவே அந்த ஆளுக்கு உன்னைய பிடிக்காது இதுலாம் தேவையா” என்று அவன் கேட்க “என் அக்கா மவளை பார்த்து எவ்வளவு நாள் ஆச்சு பேச தான் டா போனேன் அவள் சின்ன வயசுல இருந்தே பயந்த சுபாவம் அதான் மயங்கி விழுந்துட்டா” என்றான் “சரி டா நீ பேச போன அந்த புள்ளை தான் உன்னைய பார்த்து பயந்து மயங்கி விழுந்துருச்சே அவங்க அப்பன் விட்டா உன்னையும் என்னையும் கொல்ற மாதிரி பார்த்துட்டு போறான் இதெல்லாம் தேவையா மாப்பிள்ளை” என்று கேட்க அவன் பதிலுக்கு எதுவும் பேசவில்லை அவன் பார்வை அங்கே நடந்து சென்ற நாவல் பழ தாவணி மீதே இருந்தது அக்கா மகள் என்ற பாசம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *