தீண்டும் தீ நீ 1-5

தீண்டும் தீ நீ…

 

அத்தியாயம் 1

 

“கீழ் சாதிக்கார நாதாரி உனக்கு எவ்வளவு திமிரு இருந்தா எங்க ஊரு புள்ளையை காதலிச்சு கல்யாணம் பண்ணுவ நாய் கூட நாயை தான் கல்யாணம் பண்ணுது டா ஆனா இந்த மனுச பயலுக தான் சாதி விட்டு மதம் விட்டு கல்யாணம் பண்ண துடிக்கிறிங்க இனம் இனத்தோட தான் டா சேரனும்” என்று கோபத்துடன் கத்திக் கொண்டே தன் புடவையை தூக்கி இடையில் சொருகிய பாண்டியம்மா தன் எதிரே மண்டியிட்டு காயத்துடன் அரை உயிருடன் இருந்தவன் நெஞ்சில் ஓங்கி மிதித்தார்.

 

அவனோ அவரை எதிர்க்க கூட சக்தி இன்றி தரையில் பொத்தென்று விழுந்தான் 

“இனி எவனாச்சும் இந்த காதல் கண்ட்ராவின்னு ஊரு பக்கம் வந்திங்க அவனுங்களுக்கும் இதான் கதி இவன் தலையை வெட்டி ஊர் எல்லையில கொண்டு போய் போடுங்க டா அப்ப தான் நாலு பேருக்கு புத்தி வரும்” என்று தன் ஆட்களை நோக்கி கத்தியவர் தன் ரத்தம் படிந்த கையை கழுவ கூட மனமின்றி குளிக்க சென்றார் அந்த ஆடவன் மீது இருந்த ரத்தம் தன் உடையில் இருப்பதை பார்த்து எரிச்சலுற்றவர் எரிந்து கொண்டிருந்த அடுப்பில் தன் உடையை தூக்கி எறிந்தார்.

 

பாண்டியம்மா வயது 60 அந்த ஊரின் பெரிய தனக்காரர்களில் ஒருவர் உயர் சாதியை சேர்ந்த பெண்மணி அவரின் உடலில் ரத்தத்துக்கு மாற்றாக சாதி என்னும் சாக்கடை தான் ஓடிக் கொண்டிருந்தது சாதி என்னும் சாக்கடையில் மூழ்கி கிடக்கும் அரிய வகை பிராணிகளில் இவரும் ஒருவர்‌ ஊரில் யாராவது காதல் திருமணம் செய்தால் முதல் வேலையாக சென்று பிரித்து வைப்பதும் கட்டப்பஞ்சாயத்து செய்வதும் தான் இவரின் முழு முதல் வேலை அதன் பின் கிடைக்கும் நேரங்களில் தன் வயல் தோட்டம் ரைஸ் மில் சொத்துகளையும் பார்த்து கொள்கிறார்.

 

இவருக்கு மூன்று மகன்கள் அதன் பின் தவமாய் தவம் இருந்து ஒரு மகளையும் ஈன்றார் என்ன தான் கொடிய அரக்கியாக இருப்பினும் அவரும் தாய் தானே மகள் இதழினி மீது உயிரையே வைத்திருந்தார்.

 

இதழினி பிறந்தவுடன் ஊருக்கே கிடா வெட்டி விருந்து வைத்தார் பெண்ணவளை கையில் வைத்து தாங்கினார் மகளுக்கு அனைத்திலும் சுதந்திரம் இருந்தது ஆனால் வீட்டை விட்டு வெளியே செல்லவும் படிக்கவோ உலக அறிவை வளர்த்துக் கொள்ளவோ சுத்தமாக சுதந்திரம் என்பது இல்லை ஏனெனில் அவள் குழந்தையாக இருக்கும் போது ஒரு ஜோதிடர் 

இதழினியின் பதினெட்டாவது வயது வரை ஒரு கண்டம் இருப்பதாக கூறி இருக்க மூடநம்பிக்கையில் ஊறி போய் கிடந்த பாண்டியம்மா அவளை வெளியே அனுப்பாமல் வீட்டின் உள்ளேயே பூட்டி வைத்திருந்தார் தங்க கூண்டில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் கிளியை போல இதழினியின் நிலை இருந்தது.

 

தங்கைக்கு திருமணம் செய்த பிறகு தான் மூவேந்தரும் திருமணம் செய்வதாக முடிவெடுத்து இருந்தனர் பெண்ணவளின் பதினெட்டாவது வயது முடிந்து இன்று பத்தொன்பதாவது வயது ஆரம்பமாக மாப்பிள்ளை பார்க்கும் படலம் ஆரம்பமானது.

 

இதழினிக்கு சிறு வயதில் இருந்தே வெளி உலகம் எப்படி இருக்கிறது என்று சுத்தமாக தெரியாது அவளுக்கும் எல்லோரையும் போல வெளியே செல்ல வேண்டும் என்பது வெகு நாள் ஆசை ‌கனவு அவளுக்கு மாப்பிள்ளை பார்த்து கொண்டிருப்பதால் திருமணம் செய்து கொண்டால் வெளி உலகத்தை பார்க்கலாம் என்ற ஆசை திருமணம் என்றவுடனே உடனே தலையை ஆட்டினாள்.

 

பாண்டியம்மா வீட்டின் நுழைந்தவர் கதவை தடாலடியாக திறந்து ஒரு வைர அட்டிகையை எடுத்து வந்து அவள் கையில் அணிவித்தார் “பிறந்தாள் வாழ்த்துக்கள் இதழினி பாப்பா” என்று கூற அவளும் மெல்ல புன்னகைத்தாள் “அம்மா என்னை எப்போ வெளியே விடுவிங்க” என்று அவள் குழந்தையை போல் மழலை மொழியில் கேட்க “உனக்கு கல்யாணம் ஆன பிறகு” என்றார் அவரும் லேசான புன்னகையுடனே மகளை பார்த்து உடனே அவள் முகத்தை தூக்கி வைத்து கொண்டு “இதையே தான் ஒவ்வொரு வருசமும் சொல்றிங்க மா” என்றாள் வருத்தத்துடன்.

 

“இந்த வருசம் உண்மையாவே நீ கல்யாணம் பண்ணிட்டு இந்த உலகத்தையே சுத்தி பார்க்கலாம் அதுவரை உன் தோழி கூட சமையல் கத்துக்கோ வீட்டு வேலை செய்ய கத்துக்கோ அது தான் ஒரு பொண்ணுக்கு உண்மையான அழகு” என்று மகளின் கன்னத்தை தட்டி கொடுத்தவர் “அம்மாவுக்கு வெளிய கொஞ்சம் வேலை இருக்கு கண்ணு நான் அப்புறமா வரேன்” என்று கூறிவிட்டு சென்று விட சோகமே உருவாய் மகள் அமர்ந்து கொண்டாள் பாண்டியம்மாவை பொறுத்த வரை பெண்களுக்கு படிப்பு என்பதே தேவையற்ற ஒன்று என்று நினைத்து கொண்டு இருந்தார் வீட்டு வேலையும் சமையலும் தான் அவர்களின் ஆக சிறந்த கடமை என்றும் நினைத்தார் ஒரு பெண்ணாக இருந்தும் அவர் மனநிலை இப்படி தான் இருந்தது.

 

அப்போது அவள் அறையின் உள்ளே வந்தாள் அவளின் தோழி கயல்விழி “இதழு பிறந்தநாள் வாழ்த்துக்கள் புள்ளை” என்று அவள் கைப்பிடித்து குலுக்க அவள் முகத்தில் எந்த வித எதிரொலிப்பையும் காட்டாமல் உம்மென்று அமர்ந்து இருக்க “என்ன புள்ளை உம் முகம் வாட்டமா இருக்கு” என்று அவள் கேட்க அவள் எதுவும் பதில் பேசவில்லை.

 

அவள் மீண்டும் மீண்டும் இதழினியை தொல்லை செய்ய “உனக்கு தெரியாதா என் பிரச்சனை என்னன்னு” என்று அவள் கேட்க 

“விடு இதழு உனக்கு தான் கண்ணாலம் ஆக போகுதே உன் ராஜகுமாரன் வந்து உன்னை ஊர் எல்லாம் நகர்வலம் கூட்டிட்டு போவான்” என்று கூறிவிட்டு சிரிக்க இதழினி அவளை பார்த்து முறைத்து வைத்தாள்.

 

அதே நேரம் ராணுவ முகாம், அதிகாலை 4:45 மணி பனிமூட்டம் முழு மைதானத்தையும் மூடியிருந்தது அந்த பனிமூட்டத்தைப் கிழித்து கொண்டு நடந்து வந்தான் மேஜர் வீர்சிங் வயது முப்பத்திரண்டு

ஆறு அடி மூன்று அங்குல உயரம் சுமார் தொண்ணூறு கிலோ எடை தினமும் பல மணி நேர உடற்பயிற்சி செய்ததால் செதுக்கப்பட்ட இரும்பு போன்ற உடற்கட்டு அகன்ற தோள்கள் பாறை போன்ற மார்பு, வில்லை போன்ற வளைந்த கைகள் வலது புருவத்தின் மேல் இருந்த சிறிய தழும்பு, அவன் பார்த்த பல போர்க்களங்களின் அமைதியான சாட்சி.

 

அடர்த்தியான மீசை கச்சிதமாக வெட்டப்பட்ட தலைமுடியே அவன் பட்டாளத்துக்காரன் என்பதை பறை சாற்றியது வீரத்துக்கு பெயர் போன பஞ்சாப் மண்ணில் பிறந்தவன் யாரையும் நேராக ஊடுருவிப் பார்க்கும் கூர்மையான கண்கள் முகத்தில் சிரிப்பு இருந்தாலும், அதற்குப் பின்னால் ஒரு கட்டுப்பாடும் கம்பீரமும் தெளிவாகத் தெரிந்தது பச்சை நிற ராணுவ சீருடை அவனுக்காகவே தைக்கப்பட்டது போல் கச்சிதமாகப் பொருந்தியிருந்தது மார்பில் அணிந்திருந்த வீரப் பதக்கங்கள் அவன் நாட்டுக்காகச் செய்த தியாகங்களின் அமைதியான சாட்சிகளாக மின்னின.

 

“லெப்ட்… ரைட்… லெப்ட்…!” என்று வீர் சிங்கின் குரல் கணீர் என்று வெளியே வர அவன் முன் இருந்த நூற்றுக்கணக்கான ராணுவ வீரர்கள் அவன் கட்டளைக்கு பணிந்து நின்றனர்

அவன் முதுகின் பின்னால் கைகளை கட்டியபடி நின்று கட்டளையிட அவனை பயத்துடனும் மரியாதையுடனும் அந்த வீரர்கள் பார்த்து கொண்டு இருந்தனர் அவன் கட்டளைக்கு செவி சாய்த்து காலை நேர பயிற்சிக்கு வந்திருந்தனர்.

 

அவன் கூர்மையாக அனைவரையும் கவனித்து கொண்டு இருக்க அனைவரும் காலை நேர ஓட்டத்தில் ஈடுபட்டு கொண்டு இருந்தனர் அதில் ஒரு வீரன் ஓடிக்கொண்டே இருக்கும் போதே தடுமாறி கீழே விழுந்தான் உடனே

அவனைச் சுற்றி இருந்தவர்கள் சிரிக்க ஆரம்பித்தார்கள்.

 

வீர் சிங் ஒரு வார்த்தை கூட பேசவில்லை

மெதுவாக அவன் அருகில் சென்று கையை நீட்டினான் “எழுந்திரு” என்க அந்த வீரனும் எழுந்தான் அடுத்த நொடி…

“ஒரு ராணுவ வீரர் கீழே விழலாம்…ஆனா விழுந்த இடத்திலேயே கிடக்கிறவன் தான் தோல்வியாளன்,எழுந்து மீண்டும் ஓடுறவன் தான் ஒரு உண்மையான வீரன்” என்று தமிழில் தெள்ள தெளிவாக பேச அந்த தமிழ் உச்சரிப்பைக் கேட்ட அனைவரும் ஒரு நொடி ஆச்சரியமாகப் பார்த்தார்கள்.

 

ஒரு இளம் ராணுவ வீரன் சிரித்தபடி,

“சார்… நீங்க பஞ்சாபி தானே? இவ்வளவு அழகா தமிழ் பேசுறிங்களே!”

என்று கேட்க வீர் சிங் அவனை முறைத்து பார்தவன் “அதை தெரிஞ்சு சார் என்ன பண்ண போறிங்க” என்று அவனை முறைத்து பார்த்து கொண்டே கேட்க அவன் பார்வையை பார்த்தே அவன் அமைதியாகி விட அதன் பின் அனைவரும் ஓட ஆரம்பித்தனர்.

 

“வேகத்தைக் குறைக்காதிங்க… போர்க்களத்துல மூச்சு வாங்க நேரம் கிடைக்காது… உடம்பு சோர்ந்தாலும் மனசு சோரக் கூடாது‌ ரன் ரன்” என்று அவன் கம்பீரமான குரலில் பேச அனைவரும் வேகமாக ஓடிக் கொண்டிருந்தனர்.

 

வீர்சிங் பிறந்தது பஞ்சாப்பில் தான் ஆனால் அவன் தாய் ஒரு தமிழ்ப்பெண் அவனின் தாய் தந்தை இருவரும் காதல் திருமணம் செய்தவர்கள் என்பதால் நன்றாகவே தமிழ் பேசுவான்,அந்த நேரம் பார்த்து எமர்ஜென்சி அலாரம் ஒலித்தது ஒரு ஜீப் வேகமாக காற்றை கிழித்து கொண்டு அங்கே வந்து நின்றது.

 

அதிலிருந்து வேகமாக இறங்கிய ராணுவ வீரன் ஒருவன் வீர் சிங்கிடம் சென்று 

“மேஜர் மலைப்பகுதியில் ஒரு நிலச்சரிவு சில கிராம மக்கள் சிக்கியிருக்காங்க உடனே ரெஸ்க்யூ டீம் கிளம்பனும்” என்று கூட வீர்ரின் முகம் உடனே தீவிரமடைந்தது வீர்சிங் ஒரு பார்வையால் அனைவரையும் அளந்தான்.

 

“Attention!”

 

ஒரே நொடியில் அனைவரும் நிமிர்ந்து நின்றனர்.

 

“அந்த மாவட்டத்தில் கடுமையான நிலச்சரிவு ஏற்பட்டிருக்கிறது பல பொதுமக்கள் மண்ணுக்குள் சிக்கியிருக்காங்க உடனே நாம அங்க போகனும் ரெஸ்க்யூ கிட், மருத்துவ உபகரணங்கள், கயிறுகள், அவசர உபகரணங்கள்… எல்லாத்தையும் எடுத்துக்கிட்டு கிளம்பி வாங்க உங்க எல்லாருக்கும் பத்து நிமிசம் தான் டைம் அதுக்குள்ள இங்க எல்லாரும் வரனும் இது என்னோட ஆர்டர் ” என்று அவன்‌ கூற

“யெஸ் சார்!” என்று நூற்றுக்கும் மேற்பட்ட வீரர்கள் ஒரே குரலில் முழங்க…

பனியை கிழித்தபடி ராணுவ வாகனங்கள் வரிசை கட்டி மலைப்பாதையை நோக்கி சென்றன அங்கிருந்த அனைத்து மக்களையும் தங்களால் முடிந்த வரை காப்பாற்றினர் அங்கிருந்த மக்களின் அழு குரலையும் மரண ஓலங்களையும் பார்த்த வீரர்களின் மனம் வலித்தது.

 

ஆனால் வீர்சிங் மட்டும் எதையும் கண்டுகொள்ளாமல் தன் கடமையில் மட்டும் கவனமாக இருந்தான் அனைவரும் மீண்டும் ராணுவ பயிற்சி மையத்துக்கு வந்து சேர்ந்தனர்.

 

வீர்சிங்கும் தனக்கு என்று ஒதுக்கப்பட்டு தனி குவார்ட்டஸ்சின் உள்ளே வந்தான் குளியலறை‌ சென்று குளித்து விட்டு வந்தவன் தன் அலைபேசியை அப்போது தான் கையில் எடுத்தான் திரையை பார்க்க அவன்‌ தந்தையின் சக தோழர் அவனுடைய கார்டியன் ஆன ஓய்வுபெற்ற ராணுவ வீரர் பிரதாப் அழைத்து இருந்தார்.

 

அவருக்கு அழைக்க முதல் ரிங்கிலேயே அழைப்பை எடுத்தார் “சார் எப்படி இருக்கிங்க” என்று வீர் கேட்க “நான் நல்லா இருக்கேன் வீர் ஒரு நல்ல விஷயத்துக்காக தான் கால் பண்ணினேன் எங்க சொந்தத்துலேயே ஒரு நல்ல பொண்ணு இருக்கா உன்னை மாதிரேயே அவளுக்கும் அப்பா அம்மா இல்லை ஹோம்ல தான் வளர்ந்து இருக்கா பேசி முடிச்சிடலாமா” என்று கேட்க “உங்களுக்கு பிடிச்சா எனக்கும் பிடிச்ச மாதிரி தான் சார்” என்றான்‌ வீர்.

 

“ஓகே வீர் அப்போ கல்யாணத்துக்கு தேதி குறிச்சிடலாம் வர மாசம் பத்தாம் தேதி நாள் நல்லா இருக்கு நீ லீவ் எடுத்துட்டு வந்துரு” என்று கூற “சார் கல்யாணம் மட்டும் என் அம்மாவோட ஊர்ல வச்சிடலாமே” என்று கூற “கண்டிப்பா நீ வந்து ஒரு தடவை பொண்ணை மட்டும் பார்த்துட்டு போ” என்று கூற “வேண்டாம் சார் நீங்க பார்த்துட்டிங்கல்ல அது போதும் நான் நேரா கல்யாணத்துக்கு வந்துட்டுறேன்” என்றான்.

 

“சரி பா அப்போ பொண்ணு போட்டோ மத்த விவரம் எல்லாம் வாட்சாப்ல அனுப்பி வைக்கிறேன் பார்த்துடு” என்று கூறிவிட்டு அழைப்பை துண்டித்தார் வீர்சிங் சமையலறை சென்று தனக்கு தேவையான உணவை சமைத்து கொண்டு இருக்க வாட்சாப்பில் மெசேஜ் வந்தது அதை அவன் எடுத்து பார்க்க போக அவன் கை வழுக்கி பக்கத்தில் பக்கெட்டில் இருந்த தண்ணீரின் உள்ளே போன் விழ பதட்டத்துடனே போனை எடுத்தான்‌ நன்றாக துடைத்து விட்டு போனை ஆன் செய்ய அந்த அலைபேசி செயலிழந்துவிட்டது.

 

சரி எப்படியும் பிரதாப் சார் பார்த்தால் சரியாக

தான் இருக்கும் என்று நினைத்து அடுத்த வேலையை பார்க்க ஆரம்பித்தான்.

அத்தியாயம் 2

 

வீர்சிங் தாய் தந்தை இருவரும் அவனுடைய பதினெட்டாம் வயதில் ஒரு விபத்தில் இறந்துவிட அவனை கார்டியனாக இருந்து வளர்த்தவர் பிரதாப் தான் அவன் தந்தையின் நண்பர் வீர தன் கல்லூரி படிப்பை முடித்தது எல்லாம் தமிழ்நாட்டில் தான் முடித்தான் பிரதாப் தான் அவனை ராணுவத்தில் சேரும் படி சொன்னது அவர் என்ன சொன்னாலும் எப்போதும் வீர் ஏற்றுக் கொள்வான் அவர் தான் வற்புறுத்தி அவனை திருமணம் செய்து கொள்ளவும் சொல்ல அவன் தாயை போல தனக்கு ஒரு தமிழ் பெண் தான் மனைவியாக வர வேண்டும் என்றான் வீர் அதன் படியே பெண்ணை பார்த்தும் இருந்தார் அதனால் தான் பெண்ணை பார்க்காமலேயே சரி என்று கூறி இருந்தான்.

 

நாட்களும் நகர்ந்தன பத்தாம் தேதிக்கு முந்தைய நாள் தான் வீர்சிங் கிளம்பினான் பிரதாப் அவனின் தாயின் சொந்த ஊருக்கு பெண்ணை அழைத்து கொண்டு நேராக வந்து விடுவதாக கூறியிருக்க அவனும் மறுநாள் காலை அங்கு வந்து சேர்ந்தான்

அன்று‌ நல்ல முகூர்த்த நாள் என்பதால் நிறைய ஜோடிகள் அங்கே திருமணத்துக்காக வந்திருந்தனர் அனைவரையும் பார்த்து கொண்டே வீர் ஒரு ஐயருடன் காத்திருந்தான்.

 

அதேநேரம் இதழினிக்கும் அன்று தான் திருமணம் அதே மலைக்கோயிலில் 

அந்த கோவிலின் உள்ளே ஒரு பெரிய ஹாலில் ஒவ்வொரு இடமும் திரை போடப்பட்டு ஒவ்வொரு மணமக்களுக்கும் ஒதுக்கப்பட்டு இருந்தது ஆறாவது டோக்கன் வீர்சிங்குக்கு ஒதுக்கப்பட்டு இருக்க இதழினி மேக்கப் போடுவதற்க்காக ஒப்பனை கலைஞர் ஒருவர் அழைத்து சென்றிருந்தார் காரில் மேக்கப் முடித்து இருவரும் மலை மேலே நடந்து வந்தனர் இதழினி முதல் முறையாக வெளியே வந்திருந்தவளுக்கு அத்தனை மகிழ்ச்சி இனி எப்போதும் சுதந்திர பறவையாக இருக்க போகிறோம் என்று‌ அவள் நடந்து வர பாதி வழியில் அவளுடன் வந்த ஒப்பனை கலைஞர் 

“மேடம் ஆறாவது டோக்கன் அங்க தான் உங்களுக்கு கல்யாணம் ஒரு அர்ஜன்ட் கால் பேசிட்டு வரேன்” என்று அவள் பேசிக் கொண்டு இருந்தாள்.

 

இதழினி பயத்துடனே மேலே நடந்து வந்தாள் அவளும் மாப்பிள்ளை யார் என்று இப்போது வரை பார்க்கவில்லை பாண்டியம்மா அவளுக்கு சொல்லவும் இல்லை அதே நேரம் வீர்சிங் பிரதாப்புக்கு அழைக்க அவர் பதட்டத்துடனே அழைப்பை எடுத்தவர் “வீர் என் பையனுக்கு ஆக்சிடென்ட் ஆகிடுச்சு பா நான் அங்க போய்ட்டு இருக்கேன் கல்யாண பொண்ணை ஆட்டோவில் அனுப்பிட்டேன் சிவப்பு பட்டு புடவை கட்டிட்டு வருவாங்க அவள் பெயர்” என்று கூறும் போது பக்கத்து இடத்தில் “கெட்டிமேளம் கெட்டிமேளம்” என்று கூற நாதஸ்வரம் மற்றும் மேளம் அடிக்க அவனுக்கு ஒன்றும் கேட்க்கவில்லை சரி என்று கூறி அழைப்பை துண்டித்தான்.

 

வீர்சிங் மணப்பெண்ணுக்காக காத்திருக்க 

இதழினியும் நடந்து வந்தாள் அவளுக்கு 

ஆறாம் டோக்கன் எது என்று தெரியவில்லை மழைக்கு கூட பள்ளிக்கூடம் வராதவளுக்கு எப்படி தெரியும் அந்த கோவிலுக்கு இரண்டு வாயில் இருக்க முன் பக்க வாயிலில் வீர் காத்திருந்தான் பின் பக்க வாயிலில் இதழினிக்கு திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டு இருக்க அவள் அண்ணன் அங்கே காத்திருந்தான்.

 

இதழினி முன் பக்க வாயிலுக்கு வந்தாள் அங்கே ஒரே கூட்டமாக இருக்க அக்கூட்டத்தில் இருந்த ஒருவனிடம் சென்று “அண்ணா ஆறாம் நம்பர் எங்க இருக்கு” என்று கேட்க 

“இது தான்” என்று அவர் கைக்காட்டிய இடத்துக்கு செல்ல வீர் அங்கே நின்றிருந்தான் சிவப்பு நிற புடவையில் இதழினி வந்து நிற்க 

அங்கே நின்றிருந்த வீர்ரை பார்த்தவள் அவன் தான் மாப்பிள்ளை என்று பயத்துடனே நிற்க 

“நீங்க தானா கல்யாண பொண்ணு” என்று அவன் கேட்க “ஆமாம்” என்று தலையை ஆட்டினாள்.

 

“அப்பாடா ஒரு வழியா கல்யாண பொண்ணு வந்தாச்சா இன்னும் அஞ்சு நிமிஷத்துல முகூர்த்த நேரம் முடிய போகுது சீக்கிரமா வாங்கோ” என்று ஐயர் இருவரையும் அவசரப்படுத்தி அமர வைக்க இதழினிக்கு சந்தேகம் தன் அண்ணன் தாய் எங்கே என்று 

வீர்ரிடம் கேட்க்கலாம் என்று திரும்பி அப்போது தான் அவன் தலையில் இருந்தால் டர்பனை கவனித்தாள் ‘இது என்னது தலையில’ என்று யோசிக்க “என்னங்க..” என்று அவள் ஏதோ பேச வர “அம்மாடி காலம் புரா பேச தான போறேல் மாலை வாங்கி போட்டுக்கங்க நல்ல நேரம் முடிய போறது” என்று அவர் கூற.

 

அவளும் மாலையை வாங்கி அவன் கழுத்தில் அணிவிக்க முயல அவன் உயரமாக இருக்க அவளால் முடியவில்லை அவள் சிரமப்படுவதை பார்த்து தலைகுனிந்து மாலையை வாங்கி கொண்டான் வீர் 

அவன் கையில் மாலையை கொடுக்க அவனும் அணிவித்தான் இறுதியாக தாலியை அவன் கையில் அதையும் அவளை பார்த்து கொண்டே கட்டினான் அவளும் தலை குனிந்து ஏற்றுக்கொண்டாள் “ரெண்டு பேரும் சந்தோசமா இருங்க” என்று ஐயர் வாழ்த்தினார்.

 

இருவரும் அக்னியை வலம் வந்து முடிக்க 

“சார் நான் கிளம்பிறேன் எனக்கு இன்னொரு முகூர்த்தம் இருக்கு” என்று ஐயர் கூற தன் பாக்கெட்டில் இருந்த பணத்தை எடுத்து கொடுத்தான் வீர் இதழினி அவனை ஓரக்கண்ணால் பார்த்தாள் வேட்டி சட்டை இன்றி பேன்ட் சட்டை அணிந்திருந்தான் 

‘என்ன இவரு கல்யாணத்துக்கு கூட பட்டு வேட்டி சட்டை போடல’ என்று மனதில் நினைத்தவள் கேட்க்கவில்லை.

 

ஐயர் கிளம்பி விட “உன் பெயர் என்ன” என்று அவன் கேட்க ‘என் பெயர் கூட இவருக்கு தெரியாதா’ என்று மனதில் நினைத்தவள் 

“இதழினி” என்று கூற “ம்ம்” என்றான் முகத்தில் எந்த வித எதிரொலிப்பையும் காட்டாது 

“சரி நாமளும் கிளம்பலாமா” என்று அவன் கேட்க “எங்க யாரையும் காணும் எல்லாரும் எங்க போனாங்க” என்று அவள் மொட்டையாக கேட்க அவள் பக்கத்தில் திருமணம் செய்தவர்களை தான் கேட்க்கிறாள் என்று நினைத்தவன் “அவங்க எல்லாரும் வீட்டுக்கு போய்ருப்பாங்க” என்று அவன் கூறினான்.

 

இதழினி ‘அதுக்குள்ள ஏன் இவங்க வீட்டுக்கு போனாங்க’ என்று நினைத்து கொண்டே இவனுடன் நடந்து வந்தாள் அதன் பின் இருவரும் மலையில் இருந்து கீழே இறங்கி வந்தனர் அங்கிருந்த காரில் ஏறிச் செல்ல 

தூரத்தில் இதழினியின் சொந்தக்காரர் ஒருவர் இதை பார்த்துவிட்டார் உடனே மலை மீது ஏறி சென்றார் அங்கே அவளின் அண்ணனும் தாயும் காத்திருந்தனர் “என்ன இவ்வளவு நேரம் ஆகுது இன்னும் இதழினி வரலை” என்று அவள் மூத்த அண்ணன் தர்மதுரை கேட்க இரண்டாவது அண்ணன் சிங்கதுரை அந்த மேக்கப் ஆர்ட்டிஸ்ட்க்கு அழைக்க அது பிசி பிசி என்று வந்தது.

 

இதழினி உறவினர் மேலே வந்து சேர்ந்தவர் 

தர்மனின் அருகில் ஓடியவர் “தர்மா உன் தங்கச்சி அங்க எவனோ ஒருத்தன் கூட தாலி கட்டிக்கிட்டு காருல ஏறி போறா பா” என்று கூற அவளின் அண்ணன்கள் ஒருவரை ஒருவர் பார்த்து கொள்ள பாண்டியம்மாவுக்கு பேரதிர்ச்சி “சிறுக்கி முண்ட போய் அவளை புடிங்கடா” என்று பாண்டியம்மா கத்த மூவரும் கீழே ஓடி காரில் ஏறி சென்றனர் அந்த உறவினரையும் அழைத்து கொண்டு ஆனால் அவர்கள் எங்கு தேடியும் கிடைக்கவேயில்லை.

 

வீர்சிங் நேரே இதழினியை ஊருக்கு பத்து கிலோமீட்டர் தள்ளி தான் தங்கியிருந்த ஹோட்டல் அறைக்கு அழைத்து சென்றான் 

இருவரும் அறையின் உள்ளே வர வீர் கதவடைத்துவிட்டு டக்கின் செய்து இருந்த தன் சட்டையை வெளியே எடுத்து விட்டு டர்பனை கழட்டி வைத்து விட்டு ஷூவை கழட்டி விட்டு படுக்கையில் விழுந்தான் இதழினி ஒரு மூலையில் நின்று கொண்டே அவனை பார்த்தவள் “என்னங்க இது” என்று டர்பனை காட்டி கேட்டாள் “பஞ்சாபி சைட்ல பசங்க எல்லாம் இதை தலையில கட்டுவாங்க” என்றான்.

 

“ம்ம்” என்ற இதழினி அது ஏதோ பக்கத்து ஊர் என்று நினைத்தாள் “நீ ஏன் நிக்குற டிரஸ் சேன்ஜ் பண்ணிட்டு தூங்கு சாய்ந்திரம் நாம ஊருக்கு போகனும்” என்றான் “நான் எதுவும் டிரஸ் எடுத்துட்டு வரல” என்றாள் அவள் 

வீர்ரின் மனதிலா பாவம் துணி வாங்க கூட வசதி இல்லை போல என்று நினைத்தான்.

 

“சரி நான் வாங்கி தரேன் நீ கொஞ்ச நேரம் தூங்கு” என்றான் “என்னங்க நாம வீட்டுக்கு போகலையா” என்று அவள் கேட்க “சாய்ந்திரமா கிளம்பிடுவோம்” என்றான் அவன் பதிலுக்கு “சரி” என்றவள் அவன் பக்கத்தில் படுத்து கொண்டாள் முதல் முறையாக ஒரு ஆணின் பக்கத்தில் படுக்கிறாள் அவள் அண்ணன்கள் சிறு வயதில் இருந்தே அவளின் பக்கத்தில் படுக்க மாட்டார்கள்.

 

சற்று நேரம் உறக்கம் வராமல் புரண்டு புரண்டு படுத்தள் நேற்று இரவு திருமண பயத்தில் தூங்காததால் இப்போது நன்றாக உறங்க ஆரம்பித்தாள் ஒரு பக்கம் அவளின் அண்ணன்கள் இதழினியை தேடி அலைந்து கொண்டு இருந்தனர் பாண்டியம்மா மகளை கண்டுபிடித்தாள் கொன்று விடும் ஆத்திரத்துடனே இருந்தார் இறுதியாக ஒப்பனை கலைஞரை அழைத்து விசாரிக்க 

“மேடம் நான் சரியா தான் போக சொன்னேன் அவங்க வேணும்ன்னே வேற ஒருத்தரை கல்யாணம் பண்ணிருக்காங்க ஒருவேளை அது அவங்களை லவ் பண்ற பையனா இருக்கும்” என்றார் இப்போது இதழினி காதலித்து தான் ஓடியிருக்கிறாள் என்று உறுதி செய்யப்பட்டது அந்த கோவிலில் விசாரிக்க அவனை பற்றிய எந்த விவரமும் தெரியவில்லை ஏனெனில் பிரதாப் தான் அந்த கோயிலில் பெயர் கொடுத்து இருந்தார்.

 

மாலை வீர் அவளை எழுப்பும் போது தான் சுயநினைவுக்கே வந்தாள் இதழினி முகத்தை கழுவி கழுத்தில் இருந்த கவரிங் நகையை கழட்டி வைத்தாள் பாண்டியம்மா தான் வெளியே நகையை போட்டு வர வேண்டாம் என்று சொல்லியிருந்தார் காரணம் மாலை வரவேற்பு நிகழ்ச்சியின் போது நகை அணிந்து கொள்ளலாம் என்றிருந்தார்.

 

காதில் சிறிய தோடுடன் புடவையை சரி செய்து கொண்டு அவள் கிளம்பி கொண்டு இருக்க சட்டை பட்டனை போட்டு கொண்டே அவளின் பின்னே வந்து நின்றான் வீர் இருவரும் கண்ணாடி முன்னே நிற்க பெண்ணவள் தன் நீண்ட கூந்தலை முன்னே போட்டு பின்னி கொண்டு இருந்தாள் இந்த நிமிடம் தான் வீர் அவளை நன்றாக கவனித்தான் இதழினி நம் தமிழ் பெண்கள் நிறத்தில் குட்டியாக இருந்தாள் சொல்லப்போனால் அவன் இடையளவு மட்டும் தான் இருந்தாள் வட்ட முகம் இதழுக்கு கீழே இடது பக்கம் இருந்த சிறிய மச்சம் அதற்க்கு மேலே இருந்த அவள் சிவந்த இதழ்கள் மாசுமருவற்ற முகம் அவளின் நீண்ட கூந்தல் என்று அவளை ரசிக்க ஆரம்பித்தான் அவன் மனைவி என்று பறைசாற்றும் விதமாக அவன் காலை அணிவித்த மஞ்சள் கயிறு என்று அத்தனை அழகாக இருந்தாள்.

 

அவன் பார்வை மனைவியை விட்டு விலகவேயில்லை அப்போது பார்த்து அவன் அலைப்பேசி ஒலித்தது கார்க்காரன் தான் அழைத்து இருந்தான் இப்போது இன்னொரு கார் வந்து நின்றது இருவரும் ஒரு வழியாக ராணுவ முகாம் இருந்த மலை பிரேதசத்துக்கு வந்து சேர்ந்தனர் இரவெல்லாம் பெண்ணவள் அவன் தோளில் சாய்ந்து தூங்கி வழிந்து கொண்டே வர இதழினியை தன் மடியிலேயே படுக்க வைத்து கொண்டான் தன் மனைவி கீழே விழுந்து விடாமல் இரவெல்லாம் கண்விழித்து அவள் கையை கெட்டியாக பிடித்து கொண்டே வந்தான்.

 

 பிரதாப் அவனுக்கு அலைபேசியில் அழைக்க 

“சார் பையன் எப்படி‌ இருக்கான்” என்று விசாரிக்க “நல்லா இருக்கான் வீர் கல்யாணம் நல்லபடியா முடிஞ்சுதா” என்று அவர் விசாரிக்க 

“ம்ம் முடிஞ்சுது சார்” என்றான் அதற்க்குள் அவரை மருத்துவர் அழைக்க “நான் அப்புறம் பேசுறேன் வீர்” என்று கூறிவிட்டு அழைப்பை துண்டித்தார்.

அத்தியாயம் 3

 

மறுநாள் காலை இருவரும் அவர்களின் குவாரட்டஸ்க்கு வந்து சேர வீட்டின் உள்ளே நுழைந்தனர் இதழினி சுற்றி முற்றி பார்க்க 

“இனி இது தான் நம்ப வீடு” என்று வீர் அவன் அவளின் தோளில் கைப்போட்டு அவளோ கூச்சத்தில் நெளிந்தாள் ஆண் வாடையே இல்லாமல் இருந்தவளுக்கு அவன் நெருக்கம் ஏதோ செய்ய பெண்ணவள் பயத்தோடு கூச்சத்தோடும் விலகி நிற்க முயற்சிக்க அவளின் அவஸ்தையை புரிந்து கொண்டு அவனும் விலகி நின்றான்.

 

“நாம ஏன் எங்க வீட்டுக்கு போகவேயில்லை” என்று அவள் கேட்க வீர் அவளை புரியாமல் ஒரு பார்வை பார்க்க “வீர் சார் வீர் சார்” என்று வெளியே இருந்து யாரோ அழைக்க அவன் கவனம் வெளியே சென்றது “ஒரு நிமிசம்” என்று கூறிவிட்டு அவன் வெளியே சென்றான் அங்கே யாரோ ஒருவர் வந்து அவனிடம் முகவரி ஏதோ கேட்டு விசாரித்து கொண்டிருக்க அவனும் பேசி முடித்துவிட்டு 

உள்ளே வந்தவன் குளித்து உடை மாற்றி 

நேரே கடைக்கு கிளம்பி சென்றான் இப்போதைக்கு தேவையான பேஸ்ட் பிரஷ் ஒரு இரண்டு நைட்டி மட்டும் வாங்கி வந்து அவளிடம் கொடுத்தான்.

 

அவளும் பல் துலக்கி குளித்து முடித்து வர இருவருக்கும் சாப்பாடு தயாராக இருந்தது 

அவளுக்கோ ஆச்சரியம் டைனிங் டேபிளையே ஆவென்று பார்க்க “நான் தான் சமைச்சேன் சாப்பிடு இதழினி” என்றான் “ஆம்பளைங்க எல்லாம் சமைப்பாங்களா” என்று அவளின் ஆகப்பெரும் சந்தேகத்தை கேட்க “சமைக்கிறதுல என்ன ஆம்பள பொம்பளை வேணும்ங்குறவங்க சமைச்சு சாப்பிட வேண்டிய தான்” என்று கூற அவளுக்கே ஆச்சரியமாக தான் இருந்தது.

 

அவன் சப்பாத்தியும் முட்டையில் கீமாவும் செய்திருக்க இருவரும் சாப்பிட்டனர் இருவரிடமும் எந்த வித பேச்சு வார்த்தையும் இல்லை பெண்ணவள் ஒரே ஒரு சப்பாத்தி மட்டும் சாப்பிட “இது போதுமா” என்று அவன் கேட்க “போதும் என்று தான் சாப்பிடுவேன் எப்பவும்” என்றாள் அவனோ அவளுக்கு எதிர்மறையாக எழு எட்டு சாப்பாத்திகளை உள்ளே தள்ளி முடிக்க அவள் அவனை ஆச்சரியமாக பார்த்தாள் 

அதன் பின் வீர் அவளிடம் “இதழினி கிளம்பு கடைக்கு போய் டிரஸ் வாங்கிட்டு வரலாம்” என்று கூற அவளும் கிளம்பினாள் வெளியே செல்கிறோம் என்றவுடன் அவள் ஆர்வத்துடனே கிளம்பி வெளியே வந்தாள் அப்போது வீர்ரின் அலைப்பேசி ஒலிக்க அதை எடுத்து காதில் வைத்தான் அவன் தோழன் கார்த்திக் அழைத்திருந்தான் “சாரி டா மச்சான் கல்யாணத்துக்கு வர முடியலை நாளைக்கு கண்டிப்பா என் மனைவியோட வீட்டுக்கு வரேன்” என்றான் “பரவாயில்லை டா நீ பொறுமையா வா” என்றான்‌ வீர் பதிலுக்கு

“சரி நேத்து நைட் எப்படி போச்சு” என்று விசாரிக்க “ட்ரவால்லையே போச்சு” என்றான் வீர் பதிலுக்கு “அடப்பாவி இன்னும் எதுவும் நடக்கலையா” என்று கேட்க “இல்லை டா நான் அப்புறம் கூப்பிட்டுறேன்” என்று அழைப்பை துண்டித்தான் வீர்.

 

இதழினி வெளியே வந்தவள் நல்ல குளிராக இருக்க பட்டுபுடவையின் முந்தானையை போர்த்தி கொண்டு நிற்க “உட்காரு” என்று அவன் தன் பின் இருக்கையை காட்ட எப்படி உட்காருவது என்று தெரியாமல் பெண்ணவள் தடுமாற அவனே அமர சொல்லிக் கொடுத்தான் அவன் பைக்கின் பின் இருக்கையில் அவளும் அமர்ந்து கொண்டாள் இருவரின் மேனியும் உரச.

 

வீர்சிங்குக்கு இந்த புது வித உணர்வும் பிடித்து தான் இருந்தது பல நாள் தனியே வெளியே சென்று பழகியவனுக்கு இன்று தன் மனைவியுடன் வெளியே கிளம்புவது அத்தனை நிம்மதியாக இருந்தது இந்த உலகில் தனக்கென ஒருத்தி இருக்கிறாள் என்ற நிம்மதி 

இருவரும் ஒரு துணிக்கடைக்கு செல்ல அங்கே அவளுக்கு ஸ்வெட்டர் சுடிதாரை வீர் வாங்க இது என்ன துணி “இதெல்லாம் நான் போட மாட்டேன்” என்றாள் அவள் சுடிதாரை காட்டி “அப்பறம் என்ன போடுவ” என்று அவன் கேட்க “புடவை தாவணி தான் போடுவேன்” என்றாள்.

 

அவனும் சரி அவளுக்கு பிடித்ததே வாங்குவோம் அனைத்து ரெடிமேட்டாக வாங்கி கொண்டான் இறுதியாக இதர ஆடைகள் பக்கம் செல்ல அவளிடம் அளவு கேட்டாள் அவளோ திருதிருவென விழித்தாள் அந்த பெண்மணி அவளை பார்த்தவர் அவரே அவளுக்கு தேவையான அளவில் அனைத்தையும் எடுத்து கொடுத்தார் இருவரும் வரும் வழியிலேயே சாப்பிட்டு முடிக்க மாலை ஆனது வீட்டுக்கு கிளம்ப அதற்க்கு முன் வீர் ஒரு தங்க நகை கடைக்கு அவளை அழைத்து சென்று அவளுக்காக தங்கத்தில் மெட்டி வாங்கினான் “வெள்ளில தான மெட்டி போடுவாங்க” என்று அவள் கேட்க

“நான் என் பொண்டாட்டிக்கு தங்கத்துல தான் போடுவேன்” என்று வீர் கூற பெண்ணவளுக்கு அவன் பேச்சு ஆச்சரியத்தை கொடுத்தது ஒரு‌ நிமிடம் கூட யோசியாமல் அவள் காலை தன் மடியில் வைத்து மெட்டியை போட்டு அளவு பார்க்க அவள் தான் எல்லோரும் பார்க்கிறார்கள் என்று கூச்சப்பட்டாள் ஆனால் அவனோ வெகு சாதாரணமாக தான் இருந்தான் என் மனைவிக்கு நான் வாங்குகிறேன் என்ற நினைப்பில்.

 

இருவரும் பைக்கில் அமர்ந்து பயணப்பட வரும் வழியில் வீர் பூ வாங்கி கொண்டான் அவளுக்காக,மாலை ஒரு நான்கு மணிக்கே அங்கே இருட்ட ஆரம்பித்தது அவர்கள் செல்லும் வழியிலேயே மழை பொழிய ஆரம்பிக்க இருவரும் ஓடிச்சென்று ஒரு தகர தடுப்பின் கீழே நின்றனர் குளிரில் நடுங்கி கொண்டே.

 

வீர் தான் அணிந்திருந்த ஜாக்கெட்டை கழட்டி மனைவிக்கு அதையும் அவள் அணிந்து கொண்டாள் இருப்பினும் அது சின்ன தகர தகடு என்பதால் இருவரும் மழையில் நனையாமல் இருக்க ஒருவரை ஒருவர் இடித்து கொண்டு நிற்க்கும் நிலை தான் வந்தது பெண்ணவள் குளிரில் இன்னும் இன்னும் அவன் பக்கம் ஒட்டி நிற்க

ஆணவன் அடங்கி கிடந்த உணர்வுகள் கொஞ்சம் கொஞ்சமாக துளிர் விட ஆரம்பித்தது.

 

ஒரு கட்டத்தில் இதழினி உடல் நடுங்க ஆரம்பித்தது இது போன்ற குளிர் பிரதேசத்துக்கு அவள் இதுவரை வந்ததே இல்லை என்பதால் நடுங்கி கொண்டே இருக்க ஆணவன் அவளை தன் அருகில் இழுத்து இறுக அணைத்து கொள்ள முதலில் அவள் கூச்சப்பட அவள் உடல் நடுங்குவதை பார்த்தவன் தன் கையில் இருந்த குடையை விரித்து பிடித்தான் மழைச்சாரல் அடிக்காமல் இருக்க இன்னும் அவளை இறுக்கி அணைத்து கொள்ள அவள் உடலின் குளிர் கொஞ்சமே கொஞ்சம் அடங்கியது 

அப்போதும் குளிரில் அவளின் சின்னஞ்சிறிய இதழ்கள் நடுங்கி கொண்டே இருக்க அவனின் பார்வை முதல் முறையாக தாபத்துடனே அவளின் இதழை பார்த்தது சிவந்து இருந்த இதழ்களின் துடிப்பை பார்த்தவனுக்கு அவள் மீது இரக்கமும் தாபம் சேர்ந்து வந்தது 

அதில் தன் வசம் இழந்தவன் அவளின் இடையை பிடித்து தன்னோடு இன்னும் இறுக்கி அணைத்து அவளை பிடிக்க பெண்ணவள் குளிரில் அவனை கையால் அணைத்து அவனுள் இன்னும் புதைந்து கொண்டாள்.

 

அவளின் துடிக்கும் இதழை பார்த்தவன் ஒரு நொடி தன்னை அடக்க முயன்றான் ஆனால் அந்த நெருக்கமும், குளிரும் அவள் நடுங்கி அவனை இறுகப் பற்றிக்கொண்டதும், அவன் மனக்கட்டுப்பாட்டை உடைத்தது அவள் என் மனைவி எனக்கு தான் எல்லா உரிமையும் என்ற எண்ணம் வந்தது.

 

வீர்ரின் கண்கள் கள்ளனாக மாறி இரண்டு பக்கம் சாலையை கவனித்தது ஆள் நடமாட்டமே இல்லை என்பதை உறுதி செய்தவன் அங்கே அவர்கள் இருவர் மட்டுமே நிற்க தான் பிடித்திருந்த குடையை லேசாக சாய்த்து இருவரும் தெரியாத படி பிடித்தான் ஏற்கனவே மழை பெய்து முழுதாக இருட்டி இருக்க பெண்ணவள் உணரும் முன்னே அவளின் நடுங்கி கொண்டு இருந்த குட்டி இதழில் தன் இதழை பொருத்தினான் அவளோ இங்கு என்ன நடக்கிறது என்று தெரியாமல் குளிரில் நடுங்கி கொண்டே அவனுடன் இணைய அவளின் பருத்த கீழ் உதட்டை மென்று விழுங்கி எச்சில் பருகி தன் இதழில் விழுங்கி கொள்ள அவளின் கண்கள் அதிர்ச்சியில் விரிந்தது அவனின் கைகள் அவளின் வெற்றிடையை அழுத்தி பிடிக்க அவன் முரட்டு பிடியில் “ம்ம்ம்” என்று அவள் வலி தாங்க முடியாமல் துடிக்க மெல்ல தன் இதழை எடுத்து கொண்டான் தலைவன் அவள் இதழ் துடிப்பும் இப்போது அடங்கி இருந்தது.

 

இதழினி அவனை பயத்துடனே பார்க்க அவளின் கண்கள் கலங்கியது “என்னாச்சு இதழினி” என்று அவன் கேட்க “எதுக்காக இந்த மாதிரி பண்ணிங்க” என்றாள் தேம்பி கொண்டே “ஏன் நான் முத்தம் தான கொடுத்தேன் என்னாச்சு பிடிக்கலையா” என்று அவன் கேட்க “பிடிக்கல கன்னத்துல தான முத்தம் கொடுப்பாங்க வலிக்குது” என்றாள்

‘அடிப்பாவி இவளுக்கு எதுவுமே தெரியாதா’ என்று மனதில் நினைத்தவன் அதை அவளிடம் கேட்க்கவில்லை.

 

இதழினிக்கு ஆண் பெண் இணக்கம் பற்றிய அறிவு சுத்தமாக இல்லை அவள் இன்னமும் கண்ணீர் விட்டு கொண்டு இருக்க அவள் கண்ணீரை துடைத்தவன் “இனிமே கன்னத்துலையே முத்தம் கொடுக்கிறேன் போதுமா” என்று கூறினான் அவள் பதிலுக்கு எந்த வித எதிர்வினையும் காட்டவில்லை.

 

அதற்க்குள் மழை நின்று விட இருவரும் வீட்டுக்கு கிளம்பினர் வரும் வழியில் ஒரு வேகத்தடையில் தலைவன் வண்டியை ஏற்றி இறக்க பெண்ணவள் பயத்துடனே அவன்‌ இடையில் கைக்கொடுத்து அவனை இறுக அணைத்து கொள்ள அவனுக்கும் இந்த நெருக்கம் பிடித்து தான் இருந்தது.

 

இருவரும் வீடு வந்து சேர குளிர் தாங்க முடியாது வீர் உள்ளே நுழைந்தவுடன் தன் உடையை கலைய பெண்ணவள் அவனை பார்க்க கூச்சப்பட்டு கொண்டே அறையின் உள்ளே சென்று உடை மாற்றி முகம் கழுவி வந்தாள் அவன் வாங்கி வந்த நைட்டியில் ஒன்றை அணிந்து கொண்டு சமையலறைக்கு சென்று சமைக்க ஆரம்பித்தாள்.

 

வீர் தலையை துவட்டி கொண்டே சமையலறையின் உள்ளே வர அவளுக்கு உதவி செய்ய வர பெண்ணவள் அவனை பார்த்து அதிர்ந்தாள் அவன் கையில்லாத பனியனும் அரை டிரெளசருடன் வந்து நிற்க பெண்ணவள் பயத்துடனே நின்றாள் அவன் அவளுக்கு காய்கறி வெட்டி கொடுக்க அவளும் அவனுடன் இணைந்து வேலை செய்தாள்.

 

சமைத்து கொண்டே இருக்கும் போது பெண்ணவள் அவனையே ஓரக்கண்ணால் பார்த்து கொண்டே சமைத்தாள் அவள் வழக்கமான ஆண்களை போல அவன் இல்லை ராணுவ வீரன் அவன் உடற்கட்டும் உயரமும் அவளை பிரம்மிக்க வைத்தது அவன் முறுக்கு மீசை சிரிப்பதற்க்கு கூட கடன் கேட்க்கும் அவன் உர்ரென்ற முகம் அதை பார்த்து கொண்டு சமையல் வேலை பார்க்க அவன் உடலில் ஆங்காங்கே இருந்த தழும்புகளை பாராத்து அதிர்ந்தாள் அந்த நேரம் அவள் மீது கொதித்து கொண்டு இருந்த சாம்பரை ருசி பார்க்க எடுக்க கரண்டியில் இருந்த குழம்பை கையில் ஊற்றிக் கொண்டாள்.

 

கொதிக்கும் குழம்பு அவள் கையில் பட்டவுடனே அவள் வலியில் துடிக்க “அம்மா” என்று அழுது கதற வீர் பதறி விட்டான் உடனே அவள் கையை சில்லிட்டு இருந்த தண்ணீரில் அவளை அழைத்து வந்து கையை துடைத்து மருந்திட ஆரம்பித்தான் “பார்த்து வேலை செய்ய வேண்டியது தான” என்று அவன் கடிந்து கொள்ள பெண்ணவள் அவனை ஆச்சரியமாக பார்த்தாள்.

 

அவள் நினைவுகள் பின்னோக்கி சென்றது அவள் ஒரு நாள் சமைக்கும் போது இதே போன்று கையை சுட்டு கொள்ள அவள் அழுததற்க்கு அவள் தாய் அடி வெளுத்து வாங்கி விட்டார் “பொட்டை பிள்ளை வேலையில கவனமா இருக்கனும்” என்று சொல்லி கொண்டே அடித்தது நினைவுக்கு வந்தது.

 

“நீ ரெஸ்ட் எடு நானே சமைக்கிறேன்” என்று அவன் கூற “இல்லை பரவாயில்லைங்க நானே சமைக்கிறேன்” என்று அவள் கூற “சொன்னா கேட்க மாட்டியா” என்று அவன் கோபத்துடன் பேச அவள் அமைதியாகிவிட்டாள் அதன் பின் வீர் சமைத்து எடுத்து வந்தவன் அவள் உள்ளங்கை கொப்பளித்து இருக்க தானே ஊட்டியும் விட்டான் அவன் செயலை பார்த்தவளின் கண்கள் கலங்கியது அவள் தாயின் வளர்ப்பை பொறுத்த வரை கணவன் என்றால் மனைவியை வேலை வாங்குவார்கள் அடிப்பார்கள் உதைப்பார்கள் மனைவி அவர்களை எதிர்த்து பேசவே கூடாது அவர்கள் என்ன கொடுமை செய்தாலும் வாங்கி கொள்ள வேண்டும் இது தான் அவளுக்கு தெரிந்தது வீர்ரின் செயலை பார்த்து அவளுக்கு கண்ணீர் தான் வந்தது.

 

“என்னாச்சு கண்ணு கலங்குது” என்று அவன் கேட்க “கை வலிக்குது” என்றாள் “சரி நீ சாப்பிட்டு தூங்கு சரி ஆகிடும்” என்றான் சாமாதானமாக வீர்ரை பொறுத்த வரை அவன் ஒரு அனாதை இனி தனக்கு எல்லாமுமாக மனைவி தான் இருக்க போகிறாள் அதனால் அவளை நன்றாக பார்த்து கொள்ள வேண்டும் என்று நினைத்தான்.

அத்தியாயம் 4

 

ஊரெங்கும் தேடியும் இதழினி கிடைக்கவேயில்லை வேறு வழியேயின்றி காவல் நிலையம் சென்றனர் பாண்டியம்மாவும் அவரின் மகன்களும் அவர் காவல் நிலையத்தின் உள்ளே வந்தவுடன் இன்ஸ்பெக்டர் தன் இருக்கையில் இருந்து எழுந்து நின்று வணக்கம் “வாங்க மேடம் என்ன விஷயம் வர்றாதவங்க வந்து இருக்கிங்க” என்று கேட்க மூத்தவன் தர்மதுரை தான் பேசினான் “சார் என் தங்கச்சியை ரெண்டு நாளா காணும் வெளியே விசாரிச்சதுல அவள் யாரோ ஒருத்தனை கல்யாணம் பண்ணிக்கிட்டதா சொல்றாங்க” என்று அவன் கூற.

 

“கவலையை விடுங்க எண்ணி ஒரே வாரத்துல உங்க பொண்ணு உங்க வீட்ல இருப்பா” என்று கூற அவர்களும் நிம்மதியாக கிளம்பினர் 

அவர்கள் கிளம்பிய பின் 

கான்ஸ்டபிள் ஒருவர் அவர் அருகில் வந்து 

“சார் கம்ப்ளைன்ட் எழுதிக்கவா” என்று கேட்க பதிலுக்கு அந்த இன்ஸ்பெக்டர் 

“யோவ் சும்மா இருய்யா அந்த பொண்ணு எங்கயாவது கல்யாணம் பண்ணி நிம்மதியா வாழட்டும் இவங்க கிட்ட புடிச்சு கொடுத்து அந்த பொண்ணை கொலை பண்ணவா தேடுற மாதிரி நடிப்போம் போ வேற போய் வேலையை பாரு” என்றார் அந்த இன்ஸ்பெக்டர் அவர் பாண்டியம்மாவின் செயல்கள் அனைத்தையும் பார்த்து கொண்டு தானே இருக்கிறார் அவருக்கு தெரியாதா என்ன நடக்கும் என்று.

 

பாண்டியம்மா குடும்பத்தார் தலை மறையும் அமைதியாக இருந்தவர்கள் அவர் அங்கிருந்து சென்ற பின் வெளியே காவலுக்கு நின்றிருந்த காவலர்கள் இருவர் தங்களுக்குள் பேசிக் கொண்டனர் “ஊர்ல எத்தனை பேரோட பாவத்தை வாங்கி கட்டியிருப்பா அதான் அவள் பொண்ணு ஓடிப் போய்ட்டா” என்று கூற இன்னொருவரோ “பொத்தி பொத்தி வீட்டுக்குள்ளேயே வச்சிருந்தாங்க சார் எவனோ வந்து கொத்தா தூக்கிட்டு போய்ட்டான்” என்றார் சிரித்து கொண்டே.

 

பாண்டியம்மா மற்றவர்களுக்கு செய்த பாவ கணக்கின் பலனோ என்னவோ இவை அனைத்தையும் மொத்தமாக அனுபவிக்க போவது பெண்ணவள் மட்டும் தான்.

 

அதேநேரம் இங்கே வீர்ரின் இல்லம் இரவாகி விட அவன் படுப்பதற்க்காக படுக்கையறைக்கு வந்தவான் பெண்ணவள் போர்வையின் சுருண்டு கிடந்தாள் அவளின் பற்கள் தந்தியடித்தது குளிர்பிரதேசம் என்பதால் அவளால் தாக்கு பிடிக்க முடியவில்லை நடுங்கி கொண்டே படுத்திருக்க விளக்கை அணைத்து விட்டு அவள் பக்கத்தில் வந்து படுத்தான் வீர் அந்த சிறிய படுக்கை இருவரும் படுக்க இடமில்லாமல் போக ஒருவரை ஒருவர் ஒட்டிக் கொண்டே படுத்திருக்க வேண்டிய சூழ்நிலை வந்தது காரணம் வீர்ரின் பெரிய உருவம் அந்த படுக்கை மொத்தத்தையும் அடைத்து கொள்ள 

பெண்ணவள் சுருண்டு போய் ஒரு மூலையில் கிடந்தாள் இதுவரை தனியாக இருந்தவனுக்கு ஒன்றும் இப்போது மனைவி இருந்ததால் 

‘புது கட்டில் வாங்கனும் போல’ என்று நினைத்தான்.

 

ஒரே ஒரு பெரிய போர்வை மட்டுமே அந்த வீட்டில் இருக்க அதில் பாதி வீர் எடுத்து போர்த்தி கொண்டான் ஒரு கட்டத்தில் குளிர் தாங்க முடியாமல் பெண்ணவள் போர்வையின் உள்ளேயே அவனை அணைத்து கொண்டு படுத்தாள் இருவரின் கால்களும் பின்னிக் கொண்டது அவளின் சில்லிட்டு இருந்த காலுக்கு அவன் சூடான கால் விரல்கள் இதத்தை கொடுக்க காலால் பின்னிக் கொண்டே படுத்திருந்தாள்.

 

அவள் சாதாரணமாக தான் இருந்தாள் வீர்ரால் தான் சாதாரணமாக இருக்க முடியவில்லை பெண்ணவளின் இரட்டை அஞ்சனங்கள் அவன் நெஞ்சில் பட்டு அவன் தூக்கத்தை கலைக்க அவள் அவ்வப்போது அசைந்து கொண்டே படுக்க பஞ்சும் நெருப்பும் பக்கத்தில் இருக்க தீப்பற்றி எரிந்தது கடந்த முப்பது வருடமாக தவ செய்யும் முனிவனை போல தன் வேலை காரணமாக தவமிருந்தவனுக்கு பெண்ணவளின் நெருக்கம் எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றியதை போல இருந்தது என்ன இருந்தாலும் இன்று முதல் இரவு அல்லவா பெண்ணவள் அவன் வாங்கி வந்த மல்லிகைப் பூவை சூடியிருக்க அதன் மணமும் அவனை அவள் பால் விழ வைத்தது.

 

மெல்ல அவன் அவள் புறம் திரும்பி படுக்க அவளோ முத்தமிடும் தூரத்தில் இருந்தாள் இருவரும் முகமும் பக்கத்தில் பக்கத்தில் இருந்தது மூக்கில் அவளின் ஒற்றை கல் பதித்த வைர முக்தி இருளில் மின்ன பெண்ணவள் கண்ணை மூடி படுத்திருந்தாள் ஆனால் உறங்கவில்லை அதிகப்படியான குளிரால் அவளால் உறங்க முடியவில்லை ஊரில் மிதமான கால நிலையில் இருந்து பழகியவளுக்கு இந்த மலை பிரதேச குளிர் சுத்தமாக சேரவில்லை மெல்ல அவளின் இடையோடு கை நுழைத்து தன்னோடு சேர்த்து வீர் அணைக்க அவளும் கண் விழித்தாள்.

 

வீர் அவளை விழுங்குவதை போல பார்க்க 

அவன் பார்வை அவளுக்கு பயத்தை கொடுக்க

“என்னங்க நீ…நீங்க தூங்கலையா” என்று தட்டுத் தடுமாறி அவள் கேட்டு விட இல்லை என்று இடம் வலமாக தலையை ஆட்டியவன் 

“இன்னைக்கு நமக்கு பர்ஸ்ட் நைட்ல” என்று கூற “அப்படின்னா” என்று புரியாமல் கேட்க

ஒரு வேளை அவளுக்கு ஆங்கிலம் தெரியவில்லையோ என்று நினைத்தவன் 

“முதல் இரவு” என்று கூற அவளோ முதல் ராத்திரி என்பதை தான் அப்படி கூறுகிறான் என்று நினைத்தவள் “ம்ம்” என்று தலையை ஆட்டி வைக்க.

 

“நான் பொறந்ததுல இருந்தே தனியா இருக்கேன் இதழினி நிறைய நாள் எனக்கு ஒரு தம்பியோ தங்கச்சியோ இருந்தா நல்லா இருந்திருக்குமேன்னு தோனும் அந்த மாதிரி ஒரு நிலைமை நம்ம குழந்தைங்களுக்கு வரக்கூடாது குறைஞ்சது ஒரு அஞ்சு குழந்தையாவது நாம பெத்துக்கனும்” என்று அவன்‌ கூற அவளும் சரியென்று தலையை ஆட்டினாள் தலையும் புரியாமல் வாலும் புரியாமல்.

 

“நான் ஒரு பத்து நாள் லீவு எடுத்துருக்கேன்” அதுக்கான வேலையை பார்க்கலாமா என்று அவன் மோகத்துடனே கேட்க அதற்க்கும் அவள் தலையை ஆட்டியவள் அவன் அவளை நெருங்கி அணைக்க உடலில் சற்று குளிர் அடங்கியது அவளுக்கும் அப்பாடா என்று இருக்க அப்படியே கண்ணை மூடி உறங்க ஆரம்பித்தாள் “இதழினி இதழினி” என்று அவன் எழுப்ப அவளிடம் அசைவேயில்லை இன்று தொடர்ச்சியாக பயணம் செய்த களைப்பில் நன்றாக உறங்க ஆரம்பித்தாள்.

 

வீர்ரின் நிலையோ என்ன டா இது என்பதை போல ஆனது அவன் கூறிய அனைத்தையும் கதை கேட்பதை போல கேட்டு பெண்ணவள் உறங்கி இருந்தாள் இதில் அவன் மேல் ஒரு காலை போட்டு வேறு அவள் உறங்க அவன் நிலை தான் மோசமாகி போனது அய்யோ என்று ஆனது அவனும் கண்ணை மூடி உறங்கினான் மறுநாள் காலை 

பொழுது மெல்ல விடிய முதலில் வீர் தான் முதலில் கண்விழித்தான் அதிகாலை எழுந்து பழகியவன் கண்ணை திறக்க பெண்ணவள் இன்னும் உறக்கம் கலையாமல் அவன் நெஞ்சத்தை மஞ்சமாக்கி தலை வைத்து படுத்திருந்தாள்.

 

அவளை பார்த்தவுடன் அவனே அறியாமல் அவனின் முகத்தில் மெல்லிய புன்னகை மலர்ந்தது மெல்ல எழுந்து சென்று உடை மாற்றி வெளியே ஜாகிங்‌ சென்றான் அவன் குளிரில் ஓடி தன் காலை நேர உடற்பயிற்சியை முடித்து சோர்வுடன் வீட்டின் உள்ளே வர வீடு தாழ்ப்பாள் போடாமல் திறந்து இருந்தது யோசைனயுடனே அவன் உள்ளே வந்தான் தன் மனைவி எங்கே என்று தான் முதலில் அவன் கண்கள் முதலில் தேடியது.

 

அவள் அங்கே இல்லை எங்க போய்ருப்பா என்று யோசனையுடனே அவன் பின்பக்கம் சென்று பார்க்க அங்கே பக்கத்து வீட்டு குழந்தையுடன் விளையாடிக் கொண்டிருந்தாள் 

அவர்கள் பக்கத்து வீட்டில் ஒரு வேற்று மொழி குடும்பம் இருந்தது அங்கே மூன்று வயது ஒரு குட்டி பெண் குழந்தை இருந்தது அந்த குழந்தை எப்போது வீர்ரை பார்த்தாலும் பயந்து ஓடி விடும் முதல் முறையாக அந்த குழந்தை அவன் வீட்டின் உள்ளே வந்து அவன் மனைவியுடன் விளையாடுவது ஆச்சரியமாக தான் இருந்தது.

 

பின் பக்கம் இருந்த மணல் பகுதியில் கட்டங்கள் போட்டு பெண்ணவள் நொண்டி விளையாடி கொண்டு அந்த குழந்தையும் அவளை ஆரவாரத்துடனே கத்தி கொண்டே வேடிக்கை பார்த்து கொண்டே இருந்தது இதழினியும் அந்த குழந்தைக்கு தனக்கு தெரிந்தை சைகையால் சொல்லி கொடுக்க அந்த குழந்தையும் அவளை போல விளையாட அந்த காலை நேர விடியலே அத்தனை இனிமையாக இருந்தது வீர்ருக்கு தனக்கும் இப்படி ஒரு குழந்தை இருந்தால் எப்படி இருக்கும் என்று அவன் கற்பனை விரிந்தது.

 

ஏனோ வீர்ருக்கு இதழினியை முதல் முறை பார்த்தவுடனே பிடித்துவிட்டது, அவன் அவளையும் பார்த்து ரசித்து கொண்டே தான் இருந்தான் குளிர் சற்று அதிகப்படியாக இருக்க அவன் சட்டை ஒன்றை மேலே மாட்டிக் கொண்டு படு சீரியசாக விளையாடிக் கொண்டிருந்தவளை பார்த்தவனுக்கு மெல்ல புன்னகை வந்தது அப்போது அவன் நிற்பதை அந்த பக்கத்து வீட்டு குழந்தை பார்த்து விட அலறி அடித்து கொண்டு அங்கிருந்து வெளியே ஓடியது “ஏய் பாப்பா நில்லு” என்று இதழினி கத்தி கொண்டே ஓடி வர அப்போதும் அந்த குழந்தை நிற்காமல் ஓடியேவிட்டது

அப்போது தான் இதழினி அங்கே நின்றிருந்த தன் கணவனை பார்த்தாள் தடுமாறி மெல்ல நடந்து வர “காபி குடிக்கலாமா” என்று அவன் கேட்க அவளும் சரியென தலையை ஆட்ட அவனே காபி போட்டு எடுத்து வர அவள் சோபாவில் அமர்ந்து இருந்தாள்.

 

அவள் எதிரே இருந்த இருக்கையில் அமர்ந்த வீர் அவள் கையில் காபியை கொடுக்க அவளும் குடிக்க ஆரம்பித்தாள் 

“இதழினி உனக்கு எந்த ஹீரோ பிடிக்கும்” என்று சாதாரணமாக பேச அவளுக்கு அவன் கேட்பது ஒன்றும் புரியவில்லை “அப்படின்னா” என்று புரியாமல் கேட்க என்ன டா இது என்று நினைத்தவன் “நீ படமெல்லாம் பார்க்க மாட்டியா” என்று கேட்க அவளோ இல்லை என்பதை போல தலையை ஆட்டினாள்.

 

“அப்போ நீ என்ன தான் பண்ணுவ” என்று அவன்‌ காபியை குடித்து கொண்டே கேட்க

“சமைப்பேன் வேலை செய்யுவேன் தூங்குவேன்” என்றாள் “வெளியலாம் போக மாட்டியா அவுட்டிங் ஃபிரண்ட்ஸ்சோட” என்று கேட்க “ம்ஹிம் எங்கயும் போக மாட்டேன்” என்றாள் அவள் பேச்சு அவனுக்கு வித்தியாசமாக பட்டது சரி தனியே வளர்ந்தவள் இப்படி தான் இருப்பாள் போல என்று நினைத்தான் “நீ என் கிட்ட கூச்சப்படலாம் தேவையில்லை நல்லா பேசலாம்” என்றான் அவளும் பதிலுக்கு சரியென்று தலையை ஆட்ட இவனுக்கு தலை தான் வலித்தது ‘என்ன டா இவள் ஒரு வார்த்தை கூட அவளா வாயை திறந்து பேச மாட்றா’ என்று நினைத்தான் அவளை எப்படி தன்னிடம் பேச வைப்பது என்று தெரியாமல் விழி பிதுங்கி அமர்ந்திருந்தான்‌.

 

ஆனால் அவள் விஷயத்தில் ஏதோ ஒன்று சரியில்லை என்று அவன் உள்ளுணர்வு மட்டும் சொல்லிக் கொண்டே இருந்தது அவளை பற்றி கேட்க்கலாம் என்றாள் அவள் பல விஷயத்துக்கு திருதிருவென விழிக்க தான் செய்தாள் இனி என்ன செய்வானோ.

அத்தியாயம் 5

 

இதழினி காபியை குடித்து முடித்தவள் எழுந்து குளியலறைக்கு குளிக்க சென்றாள் அவள் குளியலறையின் உள்ளே சென்று கதவடைத்து கொள்ள ‘இனி இவள் கிட்ட என்னத்த பேசுறது’ என்று நினைத்தவன் உடை மாற்றிவிட்டு சமையலறைக்கு சென்றான் அவள் வருதற்க்குள் சரி காய்கறியாவது வெட்டி வைக்கலாம் என்று நினைத்தவன் அந்த வேலையை பார்க்க திடீரென பெண்ணவள் அலறும் சத்தம் வெளியே வரை கேட்டது.

 

என்னவோ ஏதோவென்று ஆணவன் அலறி அடித்துக் கொண்டு ஓடியவன் குளியலறையின் கதவை வேக வேகமாக தட்டினான் “இதழினி இதழினி கதவை திற என்னாச்சு” என்று அவன் வேக வேகமாக தட்ட மெல்ல கதவு திறந்தது உள்ளே சென்று பார்த்தான் பெண்ணவள் குளிப்பதற்க்காக தன் உடையை கலைந்து இருப்பாள் போல கையில் கிடைத்த ஒரு பூந்துவாலையை கட்டிக் கொண்டு ஷவரை திறந்து இருக்க அது பனி பிரதேசம் என்பதையும் மறந்து அவள் ஷவரை திறந்து இருக்க பெண்ணவள் உடலை உறைய வைக்கும் பனி நீர் பட்டு அவள் உடல் முழுக்க ஊசி குத்துவதை போன்று வலித்து இருக்க அதில் அலறி கத்தியிருந்தாள்.

 

வீர் வேக வேகமாக அவள் அருகில் ஓடியவன் ஷவரில் இருந்து வந்து கொண்டு இருந்த தண்ணீரை நிறுத்திவிட்டு அவளை பார்க்க அவளோ குளிரில் நடுங்கி கொண்டே இருக்க பற்கள் தந்தியடித்தது உடல் நடுங்கி கொண்டே இருந்தது ஒரு நிமிடம் கூட யோசிக்காமல் அவளை ஏதோ பூ மூட்டையை தூக்குவதை போல இரு கையாளும் தூக்கியவன் படுக்கையறையில் உள்ளே தூக்கி சென்றவன் ரூமில் இருந்த ஹீட்டரை ஆன் செய்ய அப்போதும் அவள் குளிரில் நடுங்கி கொண்டே இருப்பதை பார்த்து அவளின் பூந்துவாலையை கழட்டி எறிய பார்க்க பெண்ணவள் அவன் கையை பிடித்து தடுக்க “பைத்தியக்காரி இதை கட்டி இருந்தா கொஞ்ச நேரத்துல குளிர்ல உறைஞ்சு போய் செத்துருவ” என்று கடிந்து கொண்டே கூறியவன் அவளின் பூந்துவாலையை கழட்டி எறிந்துவிட்டு படுக்கையில் இருந்த பெரிய போர்வையை அவளுக்கு போர்த்திவிட்டான் அவன் மனதில் கடமை மட்டுமே இருந்தது எந்த வித அத்து மீறிய பார்வையும் இல்லை.

 

அவளிடமிருந்து அவன் விலகி செல்ல போக அவளோ அவன் கையை பிடித்து கொள்ள 

அவளை ஏதோ புரிந்து கொண்டவனை போல வீர் அவள் பக்கத்தில் அமர்ந்து கொள்ள 

பெண்ணவள் அவனை நெருங்கி வந்து அவன் முன்னே அமர்ந்து கொள்ள அவனும் அவளின் பின்னே இருந்து இடையை அழுத்தி பிடித்து தன்னோடு அவளை சேர்த்தணைத்து கொண்டான் அறையே ஹீட்டரால் கொஞ்சம் கொஞ்சமாக சூடானது ஒரு கட்டத்தில் பெண்ணவள் அவன் மடியில் அமர்ந்து இருக்க விடாமல் அவளை அணைத்து கொண்டே அம்ர்ந்திருந்தான் ஒரு குழந்தையை போல அவன் இதழுக்கு நேராக அவளின் பட்டு கன்னம் இருக்க அவளின் சில்லிட்டு இருந்த அவளின் கன்னம் அவ்வப்போது அவன் இதழை வந்து உரச அதன் குளுமையை அவன் இதழ்களும் உணர்ந்தது ஆணவன் கடமையை விடுத்து கணவனாக மாற ஆரம்பித்தான்.

 

எந்த பெண்ணையும் இதுவரை ஏறெடுத்து பார்க்கதவனுக்கு பொல்லாத எண்ணங்கள் எல்லாம் தோன்றி பேயாட்டம் போட்டது அது அவன் மனைவி என்ற உரிமையா என்னவோ ஒன்று அவனை ஆட்டி படைத்தது வீர் தன்னை சமன்படுத்தும் வழியறியாது “இதழ்” என்று அவன் மோகத்துடன் அழைக்க “ம்ம்” என்றாள் அவள் குளிரில் நடுங்கி கொண்டே.

 

“உன் குளிர் போக நான் ஒரு வழி சொல்லவா” என்று கேட்க அவளோ நடுங்கி கொண்டே 

“எ…எ…ன்ன” என்று அவள் நடுங்கி கொண்டே கேட்க அவள் காதில் ஆணவன் ஏதோ கூற பெண்ணவளின் முகம் ரத்த நிறத்தில் சிவந்துவிட்டது அவள் வெட்கத்தில் தன்னையே இதழந்தவன் அடுத்த கணம் அவன் இதழுக்கு அருகில் இருந்த அவளின் மென் இதழ்கள் அவனின் வன் இதழால் சிறைப்பட்டது அவள் சுதாரித்துக் முன்னே சிறையிடப்பட்டது

ஒரு ஆங்கில முத்தம் கச்சிதமாக ஆணவனால் வழங்கப்பட்டது அந்த ஒற்றை போர்வைக்குள் இருவரும் அடங்க பெண்ணவளின் பாதுகாக்கப்பட்ட சொத்துகள் அவன் மேனியில் உரச தீக்குச்சியே இன்றி தீ மூட்டப்பட்டது குளிர் அதிகமாக இருந்ததால் அவளின் ஒத்துழைப்பு அமோகமாக இருந்தது முத்தத்தோடு முடிந்துவிடுமா அவன் மோகம் 

அவளின் மொத்தத்தையும் மொத்தமாக கேட்டது.

 

அவன் கைகள் மெல்ல மெல்ல போர்வையின் உள்ளே நுழைந்து அத்து மீறி அளவிட பெண்ணவள் பயத்தோடு அவனிடமிருந்து விலக பார்த்தாள் அவளுக்கு இந்த உணர்வுகள் எல்லாம் புதிது முதல் முறையாக ஒரு ஆண் பெண் இணக்கத்தை பற்றி அறிந்த அவளுக்கு மோகத்தோடு சேர்ந்து பயமும் வந்தது 

வீர் அவளின் இதழில் இருந்து விலகியவன் அவள் காது மடலில் தன் மீசை முடி உரச “நான் கண்டிப்பா உன்னை காயப்படுத்த மாட்டேன் இதழ் என்னை நம்பு” என்று கூற அவள் அவனுள் மெல்ல அடங்க அவன் இதழ்கள் இடம் மாறி இப்போது அவளின் கழுத்து வளைவுக்கு செல்ல பெண்ணவள் இறுக்கமாக கண்ணை மூடிக் கொண்டாள்.

 

அந்த நேரம் வீட்டின் காலிங் பெல் அடிக்கும் சத்தம் கேட்க இருவரும் அதிர்ந்து விலகினர் 

வீர் அவளின் இடையி கைக்கொடுத்து தூக்கி தரையில் அமர வைக்க மீண்டும் மீண்டும் காலிங் பெல் அடிக்கப்பட்டது “நீ சீக்கரம் டிரஸ் மாத்து” என்ற வீர் பெண்ணவள் கைப்பட்டு கசங்கி இருந்த தன் சட்டையை சரி செய்து கொண்டே அறையின் கதவடைத்துவிட்டு வெளியே சென்றான்.

 

வீர் வெளியே வந்து கதவை திறக்க அவன் நண்பன் கார்த்திக்கும் அவன் மனைவி ஹோமாவும் நின்றிருந்தனர் “அடடே வா மா வா டா” என்று அழைக்க இருவரும் மெலிதான புன்னகையுடன் வீட்டின் உள்ளே வர “உட்காருங்க” என்று அவன் சோபாவை கையை காட்ட இருவரும் சென்று அமர வீர் சமையலறை உள்ளே சென்று தண்ணீரை எடுத்து வந்து கொடுக்க இருவரும் குடித்தனர்.

 

“எங்க டா தங்கச்சி” என்று கார்த்தி கேட்க 

“அவள் டிரஸ் சேன்ஜ் பண்ணிட்டு இருக்கா இதோ அவளே வந்துட்டா” என்று கூற தாவணி பாவாடை அணிந்து கொண்டு சிறு பிள்ளை போல வந்து நின்றாள் இதழினி அவளை பார்த்த ஹேமா “என்னங்க பொண்ணை பார்த்தா ரொம்ப இன்னசன்ட் மாதிரி இருக்கு” என்று கார்த்தி காதில் கூற “அவங்க வில்லேஜ்ல அப்படி தான் இருப்பாங்க” என்றான் “இருந்தாலும் ரெண்டு பேருக்கும் வயசு வித்தியாசம் கூட அதிகமா இருக்கு மாதிரி இருக்கு” என்று கேட்க “எனக்கு என் டி தெரியும் சும்மா இரு டி” என்றான் மெலிதாக சிரிப்பதை போல முகத்தை வைத்து கொண்டு கார்த்தி.

 

இதழினி அவர்கள் இருவரையும் பார்த்து திருதிருவென விழிக்க வீர் அவளின் கையை பிடித்தவன் “இவங்க என்ன பிரண்ட்ஸ் இதழினி இவன் கார்த்தி இது அவங்க மனைவி ஹேமா ரெண்டு பேரும் என்னோட காலேஜ் மெட் தான்” என்றான் இதழினிக்கு அரைகுறையாக அவர்கள் தன் கணவனின் நண்பர்கள் என்று புரிந்தது மெலிதாக அவர்களை பார்த்து சிரித்து வைக்க அவர்களும் சிரித்தனர்.

 

“நீங்க பேசிட்டு இருங்க” என்ற வீர் 

“கார்த்தி வா நாம இன்னைக்கு சேர்ந்து சமைப்போம்” என்று தன் நண்பனை இழுத்து செல்ல அவனும் அவனுடன் சென்றான் 

“எனக்கு என்ன டா சமைக்க தெரியும் என்னை போய் துணைக்கு கூப்புடுற” என்று அவன் கேட்க “சும்மா வா டா” என்று அவனை இழுத்து சென்றான்.

 

ஹேமா அவளை பார்த்தவள் “இதழினி வாங்க உட்காருங்க” என்று கூற அவளோ தயக்கத்துடனே அவள் பக்கத்தில் வந்து அமர்ந்தாள் இருவரும் எதுவும் பேசாமல் இருக்க அவள் கூச்சப்படுகிறாள் என்று அவளே பேச ஆரம்பித்தாள் “வீர் ரொம்ப நல்ல பையன் இதழினி அவனோட அப்பா அம்மா அவனுக்கு விவரம் தெரியும் போதே இறந்துட்டாங்க சோ அவன் வேலை பார்த்துக்கிட்டே தான் படிச்சான் ரொம்ப பொறுப்பா இருப்பான்” என்று கூறியவள் அவள் முகத்தை ஒருமுறை பார்க்க அவள் முகத்தில் ஒரு அதிர்ச்சி தெரிந்தது அவனுக்கு அப்பா அம்மா இல்லை என்பதே அவளுக்கு இப்போ தான் தெரியும்.

 

“உனக்கு கூட அப்பா அம்மா இல்லை தான” என்று கேட்க “அப்பா இல்லை அக்கா ஆனா அம்மா” என்று கூறும் போதே கார்த்தி அங்கே வந்தான் “ஏய் ஹேமா நீ கூட என்னை இவ்வளவு வேலை வாங்குனது இல்லை டி இவன் என்ன வேலை வாங்கி கொல்றான் டி” என்று புலம்ப “கார்த்தி நாங்க ரெண்டு பேரும் பேசிட்டு இருக்கோம் எதுக்கு டா வந்து தொல்லை பண்ற போ அங்க” என்று அவன் முதுகில் அவள் அடிக்க பெண்ணவள் அவளை ஆச்சரியமாக பார்த்தாள் “என்ன அக்கா நீங்க உங்க வீட்டுக்காரர் பெயர் சொல்லி கூப்பிடுறிங்க இதெல்லாம் ரெம்ப தப்பு” என்று இதழினி படு தீவிரமாக முகத்தை வைத்து கொண்டு கூற.

 

“யார் சொன்னா இதெல்லாம் தப்புன்னு ஹஸ்பன்ட்டை பெயர் சொல்லி கூப்பிடுறது ஒன்னும் அவ்வளவு பெரிய தப்பு இல்லை இன்னும் சொல்ல போனா அவன் என் புருசன் தான் எஜமானும் இல்லை நான் அவனுக்கு அடிமையும் இல்லை” என்று அவள் கூற

இதழினியின் நினைவுகள் உடனே பின்னோக்கி சென்றது ஒரு நாள் அவள் அவளின் அண்ணன் பெயரை சொல்லி அழைத்ததை பார்த்த அவளின் தாய் பெல்ட்டை எடுத்து இதழினியை அடி வெளுத்துவிட்டார் 

“ஒரு பொம்பளை புள்ளை ஆம்பளை புள்ளை பெயரை சொல்லி கூப்பிடலாமா கூப்பிடலாமா” என்று கேட்டுக் கொண்டே அடி வெளுத்தது இன்னமும் அவள் நினைவில் இருந்தது.

 

அதற்க்குள் வீர் அங்கே வந்தவன் “எல்லாருக்கும் நூடுல்ஸ் ரெடி பண்ணியிருக்கேன் வாங்க சாப்பிடலாம்” என்று அழைக்க அனைவரும் டைனிங் வந்து அமர்ந்து பேசிக் கொண்டே சாப்பிட இதழினி அந்த நூடுல்ஸ்சை சாப்பிட தெரியாமல் விழிக்க வீர்ரே அவளுக்கு எப்படி சாப்பிட வேண்டும் சொல்லி கொடுத்தான் கார்த்தியும் ஹேமாவும் அவளை பாவமாக பார்த்தனர் ‘பாவம் அனாதை பொண்ணு இதை கூட சாப்பிட்டது இல்லை போல’ என்று நினைத்தனர் ஆனால் உண்மை என்னவென்றால் அவள் வீட்டில் இந்த உணவுகளை ஒரு போதும் அவள் தாய் செய்து கொடுத்தது இல்லை என்பது தான் உண்மை.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *