காதலின் காவலன் 7to 8

அத்தியாயம் 7

சேதுபதிக்கு இப்போது வரை குழப்பமாக தான் இருந்தது ஏன் வள்ளி ஒரு வார்த்தை கூட அவள் தாய் தந்தையிடம் மறுத்து பேசவில்லை என்று அவளின் இந்த நிலைக்கு தான் தானே காரணம் என்ற குற்ற உணர்ச்சியுடன் நின்றிருந்தான். 

அதேநேரம் வள்ளியின் தந்தை வள்ளியின் கையை பிடித்து இழுத்து சென்று அவளை அறையின் உள்ளே தள்ளி கதவை அடைத்து வெளியே பூட்டி வைத்தார் “அவள் எதுக்காகவும் இந்த அறையை விட்டு வெளிய வரவேக்கூடாது அவள் படி தாண்டுனா ஆத்தா மகள் ரெண்டு பேர் காலையும் வெட்டிருவேன், இன்னும் ஒரே வாரத்துல அவளுக்கு மாப்பிள்ளை பார்ப்பேன் யாரை காட்டுறனோ அவனுக்கு அவள் கழுத்தை நீட்டனும் கேட்டுச்சா” என்று அறையின் உள்ளே இருந்த வள்ளிக்கு கேட்டுக்கும் வண்ணம் பேசியவர் அங்கிருந்து வெளியே சென்றார். 

அறையின் உள்ளே இருந்த வள்ளி கத்தவில்லை ஏன் அழ கூடவில்லை எந்த வித எதிர்ப்பையும் காட்டாமல் அமைதியாக அமர்ந்திருந்தாள் அவள் மனதில் ஆயிரம் எண்ணங்கள் ஓடிக் கொண்டு இருந்தது. 

அவள் தந்தை சென்ற பின் கதவை திறந்து அவளின் தாய் உள்ளே வந்தார் “ஏன் டி அறிவுக் கெட்டவளே சும்மா பொய்க்குவாது நான் அவனை விரும்பலன்னு உங்க அப்பன் கிட்ட சொல்ல வேண்டியது தான டி” என்று கூறிக் கொண்டே அழ “நான் ஏன் பொய் சொல்லனும் நான் கட்டுனா அவனை தான் கட்டிப்பேன் இல்லை கழுத்தை அறுத்துட்டு செத்து போய்டுவேன்” என்று தீர்க்கமான பார்வையுடனே கூற அவளின் தாய்க்கு வந்ததே கோபம் பக்கத்தில் இருந்த துடப்பத்தை எடுத்து அடி பின்னி விட துடப்பம் தான் பிய்ந்து கீழே விழுந்ததே தவிர அடி வாங்கியவளின் கண்ணீல் இருந்து ஒரு துளி கண்ணீர் வெளியே வரவில்லை. 

அவள் தாய்க்கே அவளை பார்க்க பாவமாக இருக்க அவளின் அருகில் வந்தவர் 

“என் சாமில்ல அவன் உனக்கு வேணாம் டி அம்மா அப்பாகிட்ட பேசுறேன் உனக்கு ஒரு நல்ல மாப்பிள்ளையா பார்த்து வைக்கிறேன் நீ சரின்னு மட்டும் சொல்லு” என்று கூறிவிட்டு அவள் முகத்தை பார்க்க

“நீங்க அடிச்சாலும் கொன்னாலும் அவனை தான் நான் கட்டிப்பேன் என் கழுத்துல தாலின்னு ஒன்னு ஏறுனா அது சேதுபதி கையால மட்டும் தான்” என்றாள் 

அவள் பதிலை கேட்ட அவளின் தாயின் கண்கள் அதிர்ச்சியில் விரிந்தது 

“உன்னை கொன்னா தான் டி நீ அடங்குவ” என்று கத்தியவர் பக்கத்தில் கிடந்த அவர் கணவரின் பச்சை நிற பெரிய பெல்ட்டை எடுத்து அவள் சதையே கிழிந்துவிடும் அளவுக்கு அடிக்க அவளோ அழவில்லை கத்தவில்லை மாறாக அத்தனை வலியையும் இதழ் கடித்து பொறுத்து கொண்டாள் அவள் பற்தடம் பட்டு கீழ் உதட்டில் இருந்து ரத்தம் கூட கசிந்தது ஒரு கட்டத்தில் அவள் தாயே அவளுக்கு பாவம் பார்த்து பெல்ட்டை தூக்கி எறிந்தவர் தலையில் அடித்து கொண்டு அழ ஆரம்பித்தார் “எதுக்கு டி இப்படி அடி வாங்கி சாவுற பாவி மகளே ஒரு வேலை கூட செய்ய விடாம பொத்தி பொத்தி வளர்த்தனே” என்று அழுக அவள் முடிவுடன் தான் இருந்தாள் உடலில் அத்தனை ரத்த காயங்கள் இருந்தும் சோர்ந்து போய் துவண்டு விழாமல் சுவரையே வெறித்து பார்த்து கொண்டு இருந்தாள். 

அழகரின் இல்லம்…

அழகரும் ஆதினியும் தனிக் குடித்தனம் வருவதற்க்காக பொருட்கள் அனைத்தும் காலையிலேயே மாட்டு வண்டியில் எடுத்து வந்து புது வீட்டில் இறக்கி வைக்கப்பட்டன அழகரின் பெற்றோர் கிளம்பி விட ஆதினி சமயலறையில் அனைத்தையும் எடுத்து வைத்து கொண்டு இருந்தாள் அழகர் பெரிய பொருட்கள் அனைத்தையும் மூட்டை கட்டி எடுத்து வைத்து கொண்டு இருந்தான். 

கட்டிலில் மலைபோல் கிடந்த அழகரின் உடைகளை கோபத்துடனே மடித்து வைத்து கொண்டு இருந்தான் “இப்போ எதுக்காக இரண்டாவது நாளே தனிக் குடித்தனம் அனுப்பி வச்சு என் உயிரை எடுக்குறாங்க” என்று புலம்பிக் கொண்டே அனைத்தையும் எடுத்து வைத்து கொண்டு இருந்தான் 

சமையலறை பாத்திரங்கள் சிலவற்றை  படுக்கையறையின் உள்ளே வைத்திருக்க ஆதினி அதை எடுப்பதற்க்காக வந்தாள் 

அழகர் அதை ஏதோ தேவையில்லாத மூட்டை என்று நினைத்து பரன் மேலே எடுத்து வைத்திருக்க சத்தமில்லாமல் ஒரு மர ஸ்டூலை போட்டு அதன் மேலே ஏறி எடுக்க முயன்றாள் அப்போது அழகர் ஏதோ எடுப்பதற்க்காக நடந்து வர நிலை தடுமாறி 

அவன் மீதே விழுந்தாள். 

அவள் விழுந்த வேகத்தில் இருவரும் படுக்கையில் இருந்த மெத்தை மீது விழுந்தனர் அதனால் இருவருக்கும் பெரிதாக அடி படவில்லை பெண்ணவள் அழகர் மீது விழுந்து கிடக்க அவளின் 

முன்னெழில்கள் அவன் நெஞ்சில் அம்பாக 

பாய்ந்து அவன் இதயத்தை குத்தி கிழித்து பதம் பார்த்தது அவளின் ஒற்றை நெற்றி முடியின் அசைவில் கிறங்கி தடுமாற ஆரம்பித்தான் இத்தனை நாள் எந்த பெண்ணையும் ஏறெடுத்து பார்க்காதவன் முதல் முறையாக ஒரு பெண்ணாள் அவன் சலனப்பட ஆரம்பித்தான் ஒரே ஒரு கணம் மட்டுமே தடுமாறினான் அடுத்த கணம் அவளின் இடையை வளைத்து பிடித்து எழுப்பி நிற்க வைத்தவன். 

“ஏன் டி அறிவு கெட்டவளே கண்ணை எங்க வச்சிருக்க மேல வந்து விழுற இப்படி விழுந்தா நான் மயங்கிடுவேன்னு உனக்கு எவன் டி சொன்னா” என்று கேட்க 

“சார் நான் மேல இருந்த பாத்திரத்தை தான் எடுக்க வந்தேன் நீங்க தான் என் வந்து விழுந்திங்க” என்று கூற அழகருக்கு வந்ததே கோபம் அவளின் காதை பிடித்து திருகினான் “சார் மோருன்னு இனிமே கூப்பிட்ட தொலைச்சிருவேன்” என்க 

“ஆஆஆ வலிக்குது சா..” என்று வாய் வரை வந்த வார்த்தையை தடுத்து நிறுத்தியவள் 

“வலிக்குது விடுங்க” என்று கண்கள் அவள் காதில் இருந்து கையை எடுத்தான் அவனை பார்த்து முறைத்தவள் தான் எடுக்க வந்த பாத்திரத்தை எடுத்து கொண்டு சத்தமே இல்லாமல் வெளியே செல்ல 

“ஏய் நில்லு டி” என்று கூற பெண்ணவள் பயத்துடனே திரும்பினாள். 

“ஆமாம் மாமியார் வீட்ல இருந்து வெளிய வந்துட்டோம்ன்னு ஜாலியா இருக்க மாதிரி தெரியுது ஒழுங்கா நாளையில இருந்து பள்ளிக்கூடம் கிளம்புற வழியை பாரு ஒழுங்கா படிச்சு இந்த வருசம் பாஸ் ஆகுற இல்லைன்னா வாத்தியார் பொண்டாட்டி மக்குன்னு ஊரே பேசும் புரியுதா” என்று கேட்க “புரியுதுங்க” என்று அவள் வேக வேகமாக தலையை ஆட்டி வைக்க “என்ன புரிஞ்சுது” என்று அவன் கேட்க 

“வாத்தியார் பொண்டாட்டி மக்குன்னு சொல்லுவாங்க” என்று அவள் கூற விறுவிறுவென அவள் அருகில் வந்து தலையில் நறுக்கென்று கொட்டி வைத்தவன் “அறிவுகெட்டவளே இவ்வளவு பேசுனேன் இது மட்டும் தான் உன் காதுல விழுந்துச்சா ஒழுங்கா என் பாடத்துல பாஸ் ஆகுற வழியை பாரு” என்று கூற அவளும் தலையை கையால் தடவிக் கொண்டே சரியென தலையை ஆட்டினாள். 

அவன் வெளியே செல்ல “எந்த நேரத்துல இந்த கணக்கு வாத்தியை கட்டினனோ அப்போவே என் நிம்மதி போச்சு” என்று புலம்பிக் கொண்டே கண்ணீருடன் துணியை மடித்து கொண்டு இருந்தாள். 

மறுநாள் காலை அழகரின் பள்ளிக்கு கிளம்ப வள்ளி இருவருக்கும் சமைத்து முடித்து மதிய உணவை டப்பாவில் அடைத்து வேலையை முடித்து யூனிபார்ம் தாவணி பாவடையுடன் வியர்த்து வடிய மஞ்ச பையை எடுத்து கொண்டு வர அவள் கணவனோ அவளின் எதிரே கூலாக விசிலடித்து கொண்டே தன் முழங்கை சட்டையை மடித்து விட்டு கொண்டே நடந்து வந்தான். 

அவனுக்கான மதிய சாப்பாடு டப்பாவை அவன் கையில் கொடுக்க “என்னது இது” என்று அவன் ஒற்றை புருவத்தை உயர்த்தி கேட்க “மதிய சாப்பாடு சா” சார் என்று கூற வந்து நாக்கை கடித்து தடுத்தவள் “மதிய சாப்பாடுங்க” என்று கூறிவிட்டு அவள் கூறிவிட்டு வெளியே கிளம்ப போக “காலையில சாப்பாடு யாரு உங்க அப்பன் கந்தன் வந்து போடுவானா” என்று கேட்க “அது இல்லைங்க பள்ளிக்கூடத்துக்கு நேரமாச்சு” என்று அவள் கூற 

“ஆமா அப்படியே பள்ளிக்கூடத்துக்கு சீக்கிரமா போய் மொத பென்ஜில உட்கார்ந்து படிச்சி கிழிச்சி பாஸ் ஆகி ஸ்கூல்ல முதல் மார்க் வாங்க போற போய் படிக்குற பசங்களை வேடிக்கை தான பார்க்க போற எனக்கு சாப்பாடு போட்டுட்டு போ” என்று கூற 

அழகர் வந்து அமர்ந்தான். 

ஆதினி அவனுக்கு சாப்பாடு எடுத்து வந்து பரிமாற அவன் சாப்பிடும் வரை காத்திருக்க அவன் வேண்டுமென்றே பொறுமையாக சாப்பிட ஒரு வழியாக வேக வேகமாக நடந்து அவள் பள்ளிக்கு வந்து சேர்ந்தாள் ஆனால் அவளுக்கு முன்பே அழகர் பள்ளிக்கு சென்றுவிட்டான். 

ஆதினி பள்ளி வாசலில் வந்து நிற்க கேட்டின் வெளியே நிற்க வைக்கப்பட பாவமாக நின்றிருந்தாள் ஒரு அரை மணி நேரம் அனைவரும் நிற்க வைத்து வசைபாடிய பின் தான் அவளின் உடற்பயிற்சி ஆசிரியர் அவளை உள்ளேயே அனுமதித்தார் எப்படியோ அவள் தன் இருக்கையில் சென்று அமர அழகரின் பாட வேளை வந்தது. 

அவன் உள்ளே வர அனைவரும் எழுந்து நின்றனர் ஆனால் ஆதினியோ கடைசி இருக்கையில் அமர்ந்து உறங்கி கொண்டு இருந்தாள் நேற்று முழுவதும் வீட்டில் இருந்த பொருட்களை எடுத்து அடுக்கி உறங்கவே இரவு இரண்டானது அதனால் அசதியில் அவள் உறங்கியிருக்க அழகரின் பார்வை அவளிடம் சென்றது அவளை முறைத்து வைத்தான் அவளின் பக்கத்தில் இருந்த அவளின் வகுப்பு தோழி அவளை உலுக்கி எழுப்ப ஆதினி மெல்ல கண்ணை திறந்தாள் அப்போது தான் கவனித்தாள் தன் எதிரே நின்றிருந்த அவள் வாதாதியார் புருசனையே பார்த்தாள்  உடனே அடித்து பிடித்து கொண்டு அவள் எழுந்து கொள்ள அழகர்  இன்னும் அவளை கையை கட்டிக் கொண்டு முறைத்து பார்த்து கொண்டு இருந்தான். 

“வீட்ல நல்லா சாப்பிட வேண்டியது முகத்துல ஒரு டஜன் மஞ்சளை அரைச்சி பூசிக்க வேண்டியது அப்புறம் மதியம் ஸ்கூல்ல வந்து சாப்பிட்டு எவனோ பைத்தியக்காரன் வந்து பாடம் நடத்தி கத்திட்டு போறான்னு படுத்து தூங்க வேண்டியது நீயெல்லாம் எதுக்கு பள்ளிக்கூடத்துக்கு வந்து என் உயிரை எடுக்குற வெளியே போ” என்று தன் சொந்த வெறுப்பை அவள் மீது கொட்ட பெண்ணவள் உம்மென்று முகத்தை வைத்து கொண்டு வெளியே சென்றாள். 

அன்றிலிருந்து தினமும் அவள் பள்ளிக்கு வரும் போது எல்லாம் அவளை திட்டுவதும் அடிப்பதுமாக தன் சொந்த வெறுப்பை காட்டி கொண்டு இருந்தான் அழகர்.

இதற்க்கு அனைத்திற்க்கும் முற்று புள்ளி வைக்கும் நாளும் வந்தது அவர்கள் திருமணம் முடிந்து இருபதாவது நாள் ஆடி மாதம் பிறந்திருக்க அவளை அழைத்து செல்ல அவளின் பெற்றோர் வர ‘போய் தொலையட்டும்’ என்று நினைத்த அழகர் அவளை மகிழ்ச்சியுடன் அனுப்பி வைத்தான்

அவனை விட ஆதினி மகிழ்ச்சியுடன் கிளம்பினாள் ‘இந்த வாத்தி கிட்ட இருந்து தப்பிச்சா போதும் டா சாமி’ என்று கிளம்பினாள்.

அத்தியாயம் 8

சேதுபதி சுடலையின் வீடு தேடி செல்ல அவனோ அங்கே இல்லை அவன் வந்தால் நிச்சயமாக அடி வெளுத்துவிடுவான் என்று சுடலை ஓடி ஒளிந்து கொண்டு இருந்தான்

சேதுபதியின் கையில் சுடலை கிடைத்தால் அவனை கொன்று விடும் ஆத்திரத்தின் தான் அவன் அலைந்து கொண்டு இருந்தான் அதனாலேயே அவன் கண்ணில் அகப்படாமல் கண்ணாமூச்சி ஆடிக் கொண்டு இருந்தான் அவன் தோழன். 

சேதுபதி பல முறை வள்ளியை பார்க்க எவ்வளவோ முயற்சி செய்தான் ஆனால் அவனால் அவளை பார்க்கவே முடியவில்லை ஒரு கணம் கூட அவளை வெளியே வராமல் அவளின் பெற்றோர் பார்த்து கொண்டனர். 

வள்ளியின் வீடு… 

வள்ளியை அடித்து அடித்தே அவளின் உடல் முழுவதும் வீங்கி இருந்தது முகமெல்லாம் ஆங்காங்கே காயமாகி இருந்தது ஆனால் அதற்க்கு மருந்திடவோ அல்லது மருத்துவமனைக்கு கூட்டிச்செல்லவோ அவளின் பெற்றோர் ஒரு நிமிடம் நினைக்கவில்லை அன்றைய நாள் வள்ளியை பெண் பார்க்க மாப்பிள்ளை வீட்டில் இருந்து வந்திருந்தனர் அதில் அந்த ஊரில் உள்ள பெண்கள் ஆண்கள் கூட சிலர் வந்திருந்தனர். 

மூன்று நாட்களுக்கு பிறகு வள்ளி அன்று தான் குளிக்கவே அனுமதிக்கப்பட்டாள் அவள் கழிப்பறை செல்ல கூட அவளின் தாய் அல்லது பாட்டி யாராவது உடன் வந்து கதவின் வெளியே காத்து கிடந்தனர் வீட்டு காவலில் சிறை வைக்கப்பட்டிருந்தாள். 

வள்ளி குளிக்க செல்ல அவள் உடலில் அத்தனை காயங்கள் இருந்தது அவள் மேனியில் தண்ணீர் பட்டவுடன் அவள் உடல் எரிந்தது “ஸ்ஸ்” என்று முனகியவள் முகத்தை கழுவி உடை மாற்றி வெளியே வர அவளுக்கு புடவை உடுத்தி பூ வைக்க இன்று தான் அவள் முகத்தையே கண்ணாடியில் பார்த்தாள் அவள் நெற்றியில் பெல்ட்டால் அடித்த காயம் இருக்க கன்னத்தில் அவள் தந்தை அடித்த காயம் அச்சு அப்படியே பதிந்து இருந்தது இதழின் ஓரத்திலும் காயம் இருந்தது. 

அவள் தலையில் அடுக்கு மல்லிகை கனகாம்பரம் பூவை ஹேர்பின்னால் அழுத்தி அவள் தாய் குத்த “ஆஆ அம்மா” என்று வலியில் கத்த “அங்க போய் எதாவது பேசுன உங்க அப்பன் உன்னையும் என்னையும் வெட்டி போட்டுருவான் சபையில எங்க மானத்தை வாங்கிடாத பெரியவங்க என்ன செஞ்சாலும் உன் நல்லதுக்கா தான் இருக்கும்” என்று கூற அவளோ எந்த வித எதிரொலிப்பையும் தன் முகத்தில் காட்டாமல் கண்ணாடியில் தன் முகத்தை பார்த்து கொண்டு இருந்தாள் 

ஒரு வாரமாக சாப்பிடாமல் இருந்ததில் நன்றாகவே உடல் மெலிந்து முகம் வாடி இருந்தது ஏற்கனவே அவள் ஒல்லியான உடல் வாகு உடையவள் இப்போது இன்னும் மெலிந்து போய் இருந்தாள். 

“இவ்வளவு பேசுறியே ஏதாவது வாயை திறக்குறாளா பாரு எல்லாம் நீ கொடுத்த செல்லம்” என்று அவளின் பாட்டி புலம்பிக் கொண்டு இருந்தார் அப்போதும் அவள் வாயை திறக்கவில்லை. 

எப்படியோ அவளை அலங்காரம் செய்து வள்ளியின் தாய் அவளை வெளியே அழைத்து வந்தார் அங்கு பெண் பார்க்க வந்திருந்தவர்கள் பெண்ணை பார்க்க ஊரில் அக்கம் பக்கம் இருந்தவர்களும் அவளை பார்த்தனர் அவளை பார்த்த மறுநொடி தங்களுக்குள் கிசுகிசுத்தனர் 

“இந்த வீரப்பன் முரடன்னு ஊருக்கே தெரியும் ஒத்த புள்ளையை போட்டு இந்த அடியா அடிப்பான்” என்று பேசிக் கொண்டு இருந்தனர். 

மாப்பிள்ளை வீட்டார் பெண்ணின் முகத்தை பார்த்தவர்களுக்கு முகத்தில் ஈ ஆடவில்லை காரணம் அவள் முகத்தில் இருந்த காயங்கள் தான் “பெரியவங்களுக்கு விழுந்து கும்பிடு டி” என்று அவளின் பாட்டி கூற பெண்ணவள் சிரமத்துடன் விழுந்து கும்பிட்டாள் அவளின் உடலில் இருந்த காயங்கள் அவள் விழுந்து வணங்க ஒத்துழைக்கவில்லை கண்ணீருடனே விழுந்து எழுந்தாள். 

அனைவரும் பேச “அப்புறம் என்னங்க கல்யாணத்துக்கு நாளை குறிச்சிடலாமாங்க” என்று வீரப்பன் அதாவது வள்ளியின் தந்தை கேட்க மாப்பிள்ளையின் தாய் தந்தை ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து கொண்டனர் 

காரணம் முகத்தில் இருந்த காயங்கள் அவளை வற்புறுத்தி நிற்க வைத்து இருக்கின்றனர் என்பது அங்கிருந்த அனைவருக்கும் தெரிந்தது அவள் சோக முகம் அவள் விழுந்து வணங்கவே சிரமப்பட்டது என்று அனைவருக்கும் புரிந்து போனது.

“நாங்க வீட்டுக்கு போய் பேசிட்டு கடுதாசி போட்றோம்ங்க” என்று கூற “அப்போ சரிங்க” என்று வீரப்பன் தலையை ஆட்ட அனைவரும் அங்கிருந்து கிளம்பினர். 

அவர்கள் கிளம்பிய மறுகணம் வீரப்பன் விறுவிறுவென மகள் அருகில் வந்தவர் அவளின் கன்னத்தில் ஓங்கி பளார் என்று அறை விட அவரின் ஒற்றை அடிக்கே சுருண்டு விழுந்தாள் பெண்ணவள் “மூதேவி வந்தங்க முன்னாடி சிரிச்ச முகமா நிற்க முடியாது உன்னால” என்று கேட்க அங்கிருந்த அனைவருக்கும் அவளை பார்க்கவே பாவமாக இருந்தது. 

“யோவ் வீரப்பா எதுக்கு யா பொட்ட பிள்ளையை போட்டு இந்த அடி அடிக்குற ஏதாவது ஒன்னு கிடக்க ஒன்னு ஆக போகுது தர்மா ஆஸ்பத்திரிக்காவது கூட்டிட்டு போயா” என்று அங்கிருந்த பெரியவர் கூற “யோவ் அது என் மவள் நான் அடிப்பன் கொல்லுவேன் உங்களுக்கு என்ன வந்துச்சு போங்கயா உங்களை எல்லாம் எவன் கூப்பிட்டான்” என்று கத்த அனைவரும் அங்கிருந்து சென்றனர். 

அங்கிருந்தவர்கள் தங்களுக்குள் கிசுகிசுத்து கொண்டே பாவமாக அவளை பார்த்துவிட்டு சென்றனர் அதிலிருந்த பெரியவர் ஒருவர் நேரே சேதுபதி வீட்டுக்கு சென்றார். 

அவன் வீட்டின் உள்ளே வந்தவர் “யோவ் சேதுபதி” என்று கத்தி கொண்டே வர

“என்ன சித்தப்பு இந்த நேரத்துல” என்று அவன் கேட்க “உனக்கு கொஞ்சமாச்சும் மனசாட்சி இருக்கா” என்று கேட்க அவனுக்கு ஒன்றும் புரியவில்லை அவர் என்ன சொல்கிறார் என்று “நான் என்ன பண்ணினேன் எதாவது புரியும் படியா சொல்லு சித்தப்பு” என்று கேட்டான். 

“அந்த வீரப்பன் பொண்ணை விட்டு தான் தொலையேன் அந்த புள்ளை அடி வாங்கியே செத்துடுவா போல” என்று கூற

சேதுபதிக்கு இது பேரதிர்ச்சி தான்

“என்ன சித்தப்பு சொல்ற வள்ளிக்கு என்னாச்சு” என்று கேட்க அவர் நடந்த அனைத்தையும் கூற ஆரம்பித்தார் “அந்த புள்ளை கட்டுனா உன்னைய தான் கட்டுவேன் இல்லை கழுத்தறுத்துட்டு செத்து போய்டுவேன்னு சொல்லுயிருக்கு வீரப்பனும் அவன் பொஞ்சாதியும் அவளை அடிச்சே கொன்னுடுவாங்க போல பாவம் 

முகமெல்லாம் காயம் இன்னைக்கு கூட வந்த மாப்பிள்ளை பிடிக்கலன்னு சொல்ல அதுக்கும் அந்த பொண்ணை எல்லார் முன்னாடியும் போட்டு நாய் அடிக்குற மாதிரி அடிக்குறான் தயவு செஞ்சு அந்த பிள்ளையை நிம்மதியா இருக்க விடுயா பாவம்” என்று கூற. 

அவர் கூறியதை கேட்ட சேதுபதியின் முகம் கோபத்தில் சிவந்தது வேட்டியை மடித்து கட்டி கொண்டு தன் வீட்டு பரன் மேல் இருந்த வீச்சு அரிவாள் ஒன்றை எடுத்து கொண்டு அங்கிருந்து கோபத்துடனே சென்றான் “டேய் சேதுபதி எதுவும் பண்ணிடாத டா” என்று அந்த பெரியவர் கத்தி கொண்டே வர வேக வேகமாக நடந்து சென்றான் அவன். 

நேரே வள்ளி வீட்டுக்குள் நடந்து சென்றான் அவன் எதிரே வள்ளியின் தாய் வந்து அவனை தடுக்க முயன்றவர் 

“டேய் நீ எதுக்கு டா என் வீட்டுக்குள்ள வர” என்று கேட்க அவரை வேகமாக இடித்து தள்ள அவரோ ஒரு மூலையில் சென்று விழுந்தார். 

வள்ளி எங்கு இருக்கிறாள் என்று ஒவ்வொரு அறையாக தேடியவன் அவள் எந்த அறையிலும் இல்லை என்றவுடன் அங்கே ஒரு அறை பூட்டி இருக்க அதன் பூட்டை அரிவாளால் உடைத்தவன் உள்ளே சென்று வள்ளியை பார்த்தான். 

பெண்ணவளை பார்த்த கணம் அந்த ஆறடி ஆண் மகனின் மனம் கலங்கியது முகமெல்லாம் காயத்துடன் கலையிழந்து இருந்தவளை பார்க்கவே பாவமாக இருந்தது எப்போதும் அவனை கிண்டலடித்து கேலி பேசி சிரித்து கொண்டு இருக்கும் அவளை பார்த்தே பழகியவனுக்கு இப்போது அவளின் இந்த நிலையை பார்த்து மனம் வருந்தியது. 

ஒரு நிமிடம் கூட யோசியாமல் என்னுடன் வா என்று கூட கேட்க்காமல் அவளை தூக்கி தன் தோளில் போட்டவன் வெளியே வந்தான் வள்ளியின் தந்தை வெளியே சென்றிருக்க அவளின் உறவுக்கார ஆண்கள் குறுக்கே வந்தனர். 

அதில் கோபத்துடனே அவன் முன்னே வர அரிவாளால் அவன் கையில் வெட்ட அடுத்த நிமிடம் அவன் சரிந்து கீழே விழ அவனை பார்த்தே அனைவரும் பயந்து ஒதுங்கி நின்றனர். 

“எவனாவது குறுக்க வந்திங்க வெட்டி வீசிட்டு போயிட்டே இருப்பேன்” என்றவன் அவளை நேரே தூக்கி சென்றது மருத்துவமனைக்கு தான் ஒரு மைல் தூரம் தாண்டி இருந்த மருத்துவமனைக்கு நடந்தே சென்றான். 

அவளை மருத்துவமனையில் அனுமதிக்க அவளை பரிசோதித்த அந்த பெண் மருத்துவர் வெளியே வந்து சேதுபதியை திட்டி தீர்க்க ஆரம்பித்தார் “அறிவு இல்லை பார்க்க காட்டான் மாதிரி இருக்க மாட்டை அடிக்குற மாதிரி அந்த பொண்ணை அடிச்சி வச்சிருக்க உடம்புல எல்லா இடமும் காயமா இருக்க உன் மேல போலீஸ் கம்ப்ளைன்ட் கொடுத்தா தான் சரி வரும்” என்று அவனை திட்டி தீர்க்க வள்ளி எழுந்து மெல்ல நடந்து வந்தவள் “அவரு எதுவும் பண்ணல டாக்டர்” என்று கூற அப்போது தான் அவர் அமைதியானார்

“அப்போ யார் மா உன்னை அடிச்சாங்க” என்று கேட்க “என் அம்மா அப்பா” என்றாள் தலை குனிந்து அழுகையுடனே. 

“அடக்கடவுளே வா மா முதல்ல போய் போலீஸ் கம்ப்ளைன்ட் கொடுப்போம் எதுக்காக உன்னை அவங்க அடிச்சாங்க” என்று கேட்க “மேடம் அதெல்லாம் வேண்டாம் இது எங்க குடும்ப பிரச்சனை நீங்க மருந்தை மட்டும் கொடுங்க” என்றாள் அந்த மருத்துவரோ தலையில் அடித்து கொண்டு செல்ல மருந்தை வாங்கி கொண்டு இருவரும் ஊருக்குள் நடந்து சென்றனர் ஊரே அவர்களை வேடிக்கை பார்க்க வள்ளி வீட்டு தெரு வர அவள் வேறு வழியே இல்லாமல் மனம் வலிக்க அவள் வீட்டுக்கு செல்ல போக சேதுபதி அவள் கைப்பிடித்து தடுத்தான். 

அவள் என்னவென்று அவன் முகம் பார்க்க அங்கே பக்கத்தில் இருந்த கோவிலுக்கு அவளின் கைப்பிடித்து அழைத்து சென்றான் அவள் ஒன்று புரியாமல் அவனை பார்க்க அங்கே அம்மனின் கழுத்தில் இருந்த தாலியை எடுத்து அவள் கழுத்தில் கட்டி மூன்று முடிச்சிட்டு முடிக்க 

இன்ப அதிர்ச்சியில் கண்ணீர் மல்க அவனை பெண்ணவள் பார்க்க ஊரே இந்த திருமணத்தை வாயை பிளந்து பார்த்தது. 

செய்தி கேள்விப்பட்டு வள்ளியின் மொத்த குடும்பமும் அங்கு வந்து சேர்ந்தது அதற்க்குள் திருமணம் முடிந்து இருவரும் மணமக்களாக வெளியே வந்தனர். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *