காதலின் காவலன் 4 to 6

அத்தியாயம் 4 

 

“எனக்கு இந்த கல்யாணத்துல சுத்தமா விருப்பம் இல்லை எதாவது ஒரு காரணத்தை சொல்லி முதல்ல இந்த கல்யாணத்தை நிறுத்துங்க” என்று அவன் திட்டவட்டமாக கூற அழகரின் அண்ணன் 

தனவேல் “என்ன காரணம் எதுக்காக கல்யாணத்தை நிறுத்த சொல்ற பொண்ணை உனக்கு பிடிக்கலையா” என்று கேட்க. 

 

“ஆமாம் பொண்ணை எனக்கு பிடிக்கல ஏன்னா அவள் என் கிளாஸ்ல படிக்கிற பொண்ணு என்னோட ஸ்டூடன்ட் நான் எப்படி கல்யாணம் அவளை பண்ணிக்க முடியும்” என்று கேட்டான் அழகர்.

 

“ஏன்டா இதை பொண்ணு பார்க்க போன அன்னைக்கே சொல்ல வேண்டியது தான” என்று அழகரின் தந்தை கேட்க 

“அப்பா நான் அன்னைக்கு பொண்ணை பார்க்கவேயில்லை இன்னைக்கு தான் பெண்ணையே பார்த்தேன் அவளை மாதிரி ஒரு மக்கு பொண்ணை என் வாழ்க்கையில நான் பார்த்தே இல்லை நான் கணக்கு வாத்தியார் அவளுக்கு சுட்டு போட்டாலும் கணக்கே வராது அவள் எனக்கு வேண்டவே வேண்டாம் எதாவது பண்ணி இந்த கல்யாணத்தை நிறுத்துங்க அவ்வளவு தான்” என்றவன் அங்கிருந்து வெளியேறினான். 

 

“என்ன டா இவன் இப்படி பேசிட்டு போறான்” என்று அழகரின் தந்தை அவன் அண்ணனிடம் கேட்க “என்னங்க நீங்க அவன் சொல்ற எதையும் கண்டுக்காதிங்க 

பொண்ணு ரொம்ப நல்ல பொண்ணு ஊர்ல அவங்க அப்பாவுக்கும் நல்ல மரியாதை நல்ல குடும்பம் நாமலே தேடினா கூட இப்படி ஒரு சம்மந்தம் கிடைக்காது அதெல்லாம் கல்யாணம் பண்ணி வச்சா சரியா போயிடும் நீங்களும் தான் வாத்தியாரு நான் மழைக்கு கூட பள்ளிக்கூடம் பக்கமே போனது இல்லை நாம நல்லா வாழலையா” என்று அவர் கேட்க “அதுக்கு இல்லை அவனே பிடிவாதக்காரன் எதுக்கு அவனுக்கு பிடிக்காததை செய்யனும்” என்று அவர் கேட்க. 

 

“இப்போ கல்யாணத்தை நிறுத்துனா நம்ம பையனுக்கு யாரு பொண்ணு கொடுப்பா நாள் குறிச்ச அப்புறம் கல்யாணம் நின்னா ராசி இல்லாதவன்னு சொல்ல மாட்டங்க” என்று அவர் கேட்க அவர் கேட்பதும் நியாயமாக தான் இருந்தது அங்கிருந்த அனைவருக்கும் அதுவே தோன்றியது “கொஞ்ச நாள் விடுங்க கால் கட்டு போட்டா அவனே சரியாகிடுவான்” என்றார் அழகரின் தாய் 

அவன் தந்தையும் சரியென்று தலையை ஆட்ட. 

 

அழகர் தன் புல்லட்டை எடுத்து கொண்டு நேரே சென்றது தன் நண்பன் சுரேஷ்சை பார்க்க தான் நேரே சென்று அவன் சட்டையை பிடித்தவன் “டேய் உனக்கு அன்னைக்கே தெரியும் தான அவள் என் ஸ்டுடன்ட்டுன்னு அப்புறம் ஏன் டா என் கிட்ட சொல்லலை” என்று அவன் கேட்க

“டேய் மாப்பிள்ளை உனக்கு தெரியும்ன்னு நினைச்சேன் டா உங்க அப்பாவும் அம்மாவும் சொல்லியிருப்பாங்கன்னு நினைச்சேன் சாரி டா” என்றான் அழகருக்கு தலையே வலித்தது 

அவனுக்கு வரும் மனைவி நல்ல படித்தவளாக இருக்க வேண்டும் பண்பானவளாக இருக்க வேண்டும் என்று மனதில் கோட்டை கட்டி வைத்திருந்தான் 

பெண்ணை பற்றி அவன் வீட்டில் பேசும் போது பள்ளியில் இருக்கிறாள் என்று கூறியவுடன் ஏதோ டீச்சராக வேலை பார்க்கிறாள் என்று தான் நினைத்தான் ஆனால் இப்படி ஒரு திருப்பத்தை அவன் கனவில் கூட நினைத்து பார்க்கவேயில்லை. 

 

அதேநேரம் ஆதினியின் வீடு அவளும் அழகரை பற்றி தான் நினைத்து கொண்டு இருந்தாள் மோதிரம் மாற்றும் போது அவன் பார்த்த பார்வை அவள் கண் முன் வந்து போனது காலம் முழுவதும் அடி வாங்கி தான் சாக போகிறோம் என்று நினைத்தாள் அதை நினைத்தே காய்ச்சல் வந்திருந்தது. 

 

மறுநாள் காலை அவள் காய்ச்சலுடனே பள்ளிக்கு வந்தாள் நெற்றியில் விபூதியால் பட்டை அடித்து கொண்டு 

ஆதினி பயத்துடனே மனதில் கடவுளை வேண்டிக் கொண்டு இருக்க கணக்கு பாட வேளை வர அவளுக்கு காய்ச்சல் இன்னுமே அதிகமானது. 

 

அழகர் வகுப்பின் உள்ளே வந்தவன் பார்வை இன்று முதன் முதலில் ஆதினியிடம் தான் சென்றது அவளை முறைத்து பார்த்தவன் “எல்லாரும் பேப்பர் பேனா எடுங்க முந்தா நாள் நடத்துன கணக்கை இப்போவே எழுதி காட்டுங்க” என்று கூறியவன் கரும்பலகையில் எழுதி போட ஆதினி உயிரை கையில் பிடித்துக்கொண்டு பேப்பர் பேனாவை எடுத்தாள் கண்கள் கலங்கியது அனைவரும் தனித்தனியே சென்று அமர

அவளும் அமர்ந்தாள். 

 

பேப்பரை எடுத்து கேள்வியை எழுதியவளுக்கு அடுத்து என்ன எழுதுவது என்றே தெரியவில்லை அந்த கேள்வியே என்னவென்று அவளுக்கு புரியவில்லை பயத்துடனே அமர்ந்திருந்தவள் எதையாவது எழுதலாம் என்று நினைக்க எதுவும் அவளுக்கு விளங்கவில்லை கண்கள் கலங்க கண்ணீரின் ஒரு துளி பேப்பரில் வந்து விழுந்தது. 

 

அவள் இங்க் பேனாவில் எழுதியிருக்க அந்த இடம் அவள் கண்ணீர் பட்டு அலைந்து போனது ஒவ்வொருவராக எழுதி முடிக்க அழகர் ஒவ்வொருவரின் வினாத்தாளையும் வாங்கி அப்போதே திருத்த ஆரம்பித்தான் அனைவரும் எழுதி முடித்து விட இறுதியாக ஆதினியின் அருகில் வந்தான் அவன் அருகில் வந்து நின்றவுடன் அவளின் கைகள் நடுங்க ஆரம்பித்தது இதயம் படபடத்தது கண்களில் இருந்து கண்ணீர் வெள்ளத்தை போல் பாய ஆரம்பித்தது. 

 

அழகர் டேபிளின் மீது தன் கையால் வேகமாக தட்டியவன் “மா முடிச்சியா இல்லையா” என்று கேட்க அழுதேவிட்டாள் அதற்க்குள் அந்த வகுப்பு முடிய மணி ஒலிக்க வேறு வழியேயின்றி வெளியேறினான் அவனுக்கு கோபம் அவன் தான் மாப்பிள்ளை என்று தெரிந்தும் அவள் திருமணத்துக்கு சம்மதித்தது இருக்கிறாளே என்பதே அவனுக்கு கோபத்தை வரவழைத்து இருந்தது 

அதை எப்படி காட்டுவது என்று தெரியாமல் தான் இன்று அவளை அடி வெளுக்க வேண்டும் என்று தான் நினைத்தான் எப்படியோ ஆதினி தப்பித்தாள்.

 

ஆதினியின் பக்கத்தில் வந்த அவளின் தோழிகள் “ஏன் டி ஆதினி எதுக்கு இப்படி அழுவுற” என்று கேட்டு கிண்டல் அடிக்க “ச்சீ போங்க டி” என்று கத்தி விட்டு அங்கிருந்து ஓடியேவிட்டாள் ஆதினி நேரே ஓடி வந்து கழிவறையின் உள்ளே கதவடைத்துவிட்டு நிற்க இப்போதும் அவள் கைகள் இப்போதும் நடுங்கியது. 

 

இத்தனை பயம் உள்ளவள் திருமணத்துக்கு பிறகு அவனுடன் எப்படி காலம் தள்ள போகிறாளோ அதேநேரம் கோபத்துடனே ஆசிரியர்கள் அறையின் உள்ளே வந்தான் அழகர் அந்த அறையில் விமலா டீச்சர் மட்டும் அமர்ந்திருக்க அங்கு யாரும் இல்லை விமலா டீச்சருக்கு அழகர் என்றால் உயிர் பல முறை அவனிடம் தன் விருப்பத்தை கூறியிருக்க அவன் அவரை கண்டு கொண்டதாக இல்லை. 

 

விமலா டீச்சருக்கு மட்டும் அல்ல அந்த பள்ளியில் இருந்த பல பெண்களுக்கு அவள் மீது ஒரு ஈர்ப்பு இருந்தது காரணம் அவன் எந்த பெண்ணையும் இதுவரை ஏறெடுத்து பார்த்ததில்லை குறிப்பாக அவன் பெண்களிடம் பேசியது கூட இல்லை அவன் உண்டு அவன் வேலை உண்டு என்று இருப்பான். 

 

அவன் தன் இருக்கையில் வந்து அமர 

“அழகர் சார்” என்று விமலா அழைக்க கண்டுகொள்ளாதவனை போல புத்தகத்தை தலை குனிந்து பார்த்து கொண்டு இருந்தான் அவர் மீண்டும் “அழகர் சார்” என்று அழைக்க நிமிர்ந்து பார்த்தவன் அவரை எரித்து விடுவதை போல ஒரு பார்வை பார்த்தவன் “என்ன வேணும் மேடம் உங்களுக்கு” என்று கோபத்துடனே கேட்க அவன் முகத்தை பார்த்தே பயந்தவர் அமைதியாக அமர்ந்து கொண்டார். 

 

திருமணத்துக்கு நாட்களும் நெருங்கி கொண்டே இருந்தது அழகர் வீட்டலும் ஆதினி வீட்டிலும் வேலைகள் தடபுடலாக நடக்க அழகர் எவ்வளவு சொல்லியும் அவர்கள் காது கொடுத்து கேட்பதாக இல்லை ஆதினி வீட்டில் திருமணம் ஆனவுடன் பள்ளியிலிருந்து நிறுத்திவிடுவதாக கூறியிருந்தனர் அவள் யாருக்காக பள்ளிக்கூடம் பக்கம் போகவே கூடாது என்று நினைத்தாளோ அவனே இன்னும் சில நாட்களில் அவளின் கணவனாக மாற போக இனி அவள் பள்ளிக்கு சென்றால் என்ன செல்லாமல் இருந்தால் என்ன. 

 

சேதுபதி முழு நேர தேவதாசாக மாறி தாடி வளர்த்து இரவெல்லாம் குடித்து கொண்டு சுற்றிக் கொண்டு இருந்தான் அன்று ஒரு நாள் அவன் மாந்தோப்பு வழியாக சென்று கொண்டு இருந்தான்.

 

அன்றைய நாள் வார விடுமுறை என்பதால் வள்ளி தன் தோழி மற்றும் பக்கத்து வீட்டு வாண்டுகளுடன் விளையாட சென்றாள் அனைவரும் விளையாட செல்லும் போது தூரத்தில் ஒரு மாமரம் தெரிய அதில் பல மாம்காயும் பழங்களும் காய்ச்சி தொங்க அவளுடன் இருந்த வாண்டுகள் “வள்ளி அக்கா மாங்காய் பறிக்க போலாமா” என்று கேட்க “ம்ம் போலாம் டா” என்றாள் அவள் பதிலுக்கு அவளின் தோழி அமுதா உடனே “அடியேய் அது அது அந்த சேதுபதி வீட்டு மரம் எதாவது சொல்ல போகுது” என்று அவள் கூற 

“சேதுபதி என்னைய எப்பவும் எதுவும் சொல்ல மாட்டான்” என்று கூற “நீ என்னவோ பண்ணு நான் வீட்டுக்கு போறேன் எங்க அம்மா என்னைய தேடும்” என்று கூறிவிட்டு அமுதா அங்கிருந்து கிளம்பி விட “நீ போ டி” என்றவள் 

“நீங்க வாங்க டா நான் பறிச்சி எவன் என்ன சொல்றான்னு பார்ப்போம்” என்றவள் தைரியமாக மரத்தில் ஒரு மாங்காயை பறித்து சாப்பிட்டு பார்க்க “நல்லா இருக்கு டா இரு உங்களுக்கும் தரேன்” என்று மாங்காயை பறித்து போட அப்போது அந்த பக்கமாக வந்தான் சேதுபதி அவனை பார்த்த அந்த சிறுவர்கள் “அய்யய்யோ சேதுபதி மாமா டா ஓடுங்க” என்று கத்தி கொண்டே ஓட.

 

வள்ளி யார் என்று திரும்பி பார்த்தவள் அங்கே வந்து கொண்டிருந்த சேதுபதியை பார்த்து அதிர்ந்து நிலை தடுமாறி கீழே விழ போக 

“பார்த்து டி கீழ விழுந்துட போற” என்று சேதுபதி கூறிக்கொண்டே ஓடி வர அடுத்த கணம் அவள் மரத்தின் உச்சியில் இருந்து கீழே விழ சேதுபதி ஓடி வந்து அவளை தாங்கி பிடித்து கொண்டான் வள்ளி கீழே விழுந்து தான் செத்து விட்டோம் என்று நினைத்து கண்ணை திறந்து பார்க்க சேதுபதி அவளை அணைத்து பிடித்திருந்தான் அவன் கைகளை இடையை சுற்றி வளைத்து பிடித்து இருக்க அவளோ அவன் அணைப்பில் நின்றிருந்தாள் அவள் கால்கள் தரையில் படவில்லை அந்தரத்தில் மிதந்து கொண்டு இருந்தது அவன் உயரத்துக்கு அவளை தூக்கி பிடித்து இருந்தான் தலைவன்.

 

இருவரின் கண்களும் ஒரே ஒரு முறை மட்டும் எதிரெதிரே பார்த்து கொண்டது ஏனோ அவன் கண்களை அவளால் நேராக பார்க்க முடியவில்லை “எ…என்னை கீழே விடு நான் வீட்டுக்கு போகனும்” என்று அவள் திக்கி திணறி கூற சேதுபதி அவளை கொஞ்சம் கொஞ்சமாக கீழே இறக்க அவளின் முன்னெழில்கள் அவன் நெஞ்சில் மோத ஆணவன் மெழுகாக உருக ஆரம்பித்தான்

இப்படியே அவளை தன்னோடு அணைத்தே வைத்திருக்க வேண்டும் என்று தோன்றியது

‘இதெல்லாம் ரொம்ப தப்பு’ என்று அவன் மனசாட்சி அவனிடம் பேச பெண்ணவள் கூச்சத்தில் நெளிய ஆரம்பித்தாள் ஒரு வழியாக அவளை சேதுபதி இறக்கிவிட அவள் அங்கிருந்து ஓட முயல சேதுபதி அவளின் கையை பிடித்தான்.

 

வள்ளி அவனை திரும்பி பார்க்க சேதுபதி கீழே கிடந்த மாங்காய் இரண்டையும் அவளின் கையில் கொடுத்தான் அவளும் அதை கையில் வாங்கி கொண்டு அங்கிருந்து செல்ல முயல 

சேதுபதி அவளின் அருகில் நெருங்கி வர பெண்ணவள் இதயம் வேக வேகமாக துடிக்க ஆரம்பித்தது “அங்கன வயல்ல ஆம்பளைங்க எல்லாம் இருக்காங்க தாவணியை சரி பண்ணிட்டு போ” என்று சத்தமில்லாமல் கிசுகிசுத்துவிட்டு அங்கிருந்து தன் வேட்டியை மடித்து கட்டிக் கொண்டு சென்றான்.

 

வள்ளி அப்போது தான் தன் தாவணியையே பார்த்தாள் அவள் மேலே இருந்து கீழே விழுந்ததில் அவளின் தாவணி ஆங்காங்கே விலகி இருந்தது அவசர அவசரமாக அதை யாராவது பார்த்துவிட போகிறார்கள் என்று நினைத்தவளுக்கு அப்போது தான் நினைவுக்கு வந்தது இவை அனைத்தையும் அவன் பார்த்திரிப்பானே “அய்யய்யோ” என்று முகத்தை சுழித்தவளுக்கு கூச்சமாக 

இருந்தது “இவன் கிட்ட மட்டும் எனக்கு ஏன் இந்த மாதிரியெல்லாம் நடக்குதோ” என்று புலம்பிக் கொண்டே சென்றாள்.

 

சேதுபதி நடந்து வந்தவன் அப்போது தான் மூச்சே விட்டான் சற்றே நேரத்துக்கு முன் அவன் பார்த்த காட்சிகள் அனைத்தும் அவன் மனக்கண்ணில் படமாக வந்து தொலைத்தது 

பொல்லாத உணர்வுகள் அவனை ஆட்டி படைக்க ‘எனக்கு என்ன ஆச்சு’ என்று நினைத்து வருந்தினான் இருவரும் வெவ்வேறு மனநிலையில் சுற்றி கொண்டு இருந்தனர்.

 

மறுநாள் வள்ளிக்கு பதினெட்டாவது பிறந்தநாள் தேன் மிட்டாயுடன் அவனை பார்க்க வந்தாள் ஒரு மஞ்ச பையில் அவன் வெள்ளை சட்டையை துவைத்து அழுக்கில்லாமல் எடுத்து வந்தாள் ஆதினி அவன் காதலை நிராகரித்த அன்று தான் அவனை கடைசியாக அவள் பார்த்தது அதன் பின் இன்று தான் அவன் வீட்டுக்கு வருகிறாள்.

 

இன்னும் சொல்லப்போனால் முதல் முறையாக அவன் வீட்டுக்கு வருகிறாள் 

அவள் வீட்டின் உள்ளே வர வீடே பாழடைந்து கிடந்தது பெண் இல்லாத வீடு பின்னே எப்படி இருக்கும் பெரிய வீடு நல்ல வசதியான குடும்பம் தான் ஆனால் வீடே ஒழுங்கில்லாமல் தான் கிடந்தது நடந்து உள்ளே வந்தவள். 

 

சேதுபதி எங்கு இருக்கிறான் என்று கண்களால் தேடி கொண்டே வரே 

ஒரு அறையின் உள்ளே சென்று பார்க்க 

“இங்கே என்ன பண்ற” என்று தன் கரகரத்த ஒரு குரல் அவள் பின்னே இருந்து கேட்க பதட்டத்துடனே திரும்பினாள் வள்ளி அவளை விட நல்ல உயரமாக இருந்தான் 

யார் என்று சரியாக தெரியவில்லை அந்த அறை இருளாக இருந்ததில் நன்றாக கண்ணை திறந்து பார்க்கும் போது தான் அது சேதுபதி என்றே தெரிந்தது. 

 

“எனக்கு பொறந்தநாள் அதான் உனக்கு தேன்மிட்டாயை கொடுக்க வந்தேன்” என்று அவன் முன் கிண்ணத்தை நீட்ட 

அப்படியே முழு கிண்ணத்தையும் கையில் பிடுங்கி கொண்டான் சேதுபதி 

ஒரு தேன் மிட்டாயை எடுத்து வாயில் போட்டவன் “இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்” என்று கூற அவளும் லேசாக புன்னகைக்க “சரி சரி எங்க டி என் சட்டை” என்று அவன் கேட்க “ஐய்ய உன் சட்டையை நானா போட்டுக்க போறேன் இந்தா” என்று அவன் கையில் கொடுக்க. 

 

“சரி சரி கிளம்பு” என்று அவன் கூற 

“கிளம்ப தான் போறேன் பின்ன இங்க இருந்து உன் கூட குடும்பமா நடத்த போறேன்” என்று முகத்தை திருப்பியவள் அங்கிருந்து வெளியேறினாள் சேதுபதியும் அவளுடன் அறையில் இருந்து வெளியே வர எதிரே அவன் தந்தை வந்தார் இருவரையும் சந்தேகமாக பார்க்க வள்ளி அங்கிருந்து ஓடியேவிட்டாள் சேதுபதி அருகில் வந்தவர் “டேய் இங்க என்ன டா நடக்குது” என்று கேட்க “என்னும் இல்லையே” என்று அவன் கூற “உன் போக்கே சரியில்லை ஊருக்குள்ள என் மானத்தை வாங்கிடாத எவன் முன்னாலையும் என்னால கை கட்டி நிக்க முடியாது பார்த்துக்க” என்று எச்சரித்து விட்டு சென்றார்.

அத்தியாயம் 5  

 

சேதுபதியின் தந்தை அவனை கடந்து செல்ல போக “யோவ் நில்லு” என்று கூறிக் கொண்டே கோபத்துடனே அவரின் குறுக்கே சென்று நின்றான் அவன் அவரை பார்த்து முறைத்து வைக்க அவரோ அவனை கோபத்துடனே பார்த்தார் “உன்னால தான என் அம்மா செத்து போனாங்க பெருசா நல்லவன் மாதிரி வந்து பேசுற எனக்கு அறிவுரை சொல்ற தகுதியே முதல்ல உனக்கு இல்லை 

எனக்கு தெரியும் நான் எப்படி இருக்கனும்ன்னு உன் வேலை என்னவோ அதை பாரு பெருசா வந்துட்டான் பேச” என்றவன் அந்த வீட்டில் இருந்து கோபத்துடனே வெளியேறினான் 

அவன் தந்தை மனம் கலங்க அவனை பார்த்து கொண்டே நின்றிருந்தார். 

 

சிறுவயதில் இருந்தே சேதுபதிக்கு தன் தந்தையை சுத்தமாக பிடிக்காது அவன் தாய் உயிரோடு இருக்கும் போதே இவர் இன்னொரு பெண்ணுடன் இருப்பதை தன் இரு கண்ணால் பார்த்தவன் அவனுக்கு அவன் தந்தையை துளி அளவு கூட பிடிக்காது பணம் சொத்து இருந்ததால் ஊரே அவரை மதித்தாலும் அவனின் தந்தை வயதில் பெண்கள் விஷயத்தில் அப்படி இப்படி இருந்தது ஊருக்கே தெரிந்தது தான் இருந்தது அவரின் முன்னே நன்றாக பேசினாலும் பின்னே பழிப்பவர்கள் தான் அதிகம் அதனால் தான் சேதுபதிக்கு 27 வயதாகியும் யாரும் இதுவரை பெண் கொடுக்கவில்லை. 

 

வீட்டை விட்டு வெளியே வந்து பிறகும் சேதுபதியின் கோபம் அடங்கவில்லை வரப்பில் அமர்ந்து தன் வயலை வேடிக்க பார்த்து கொண்டே இருக்க மீண்டும் அவன் முன் வந்து நின்றாள் வள்ளி இன்று முதல் முறையாக புடவை கட்டி வந்திருந்தாள் 

அவள் சேதுபதியின் வீட்டை விட்டு செல்லும் போது அவன் தாய் புடவை ஒன்றை எடுத்து சென்றிருக்க அதை கட்டி வந்திருந்தாள் அவனிடம் ஆசையோடு காட்ட வந்திருந்தாள். 

 

“ஏய் சேதுபதி” என்று அவள் அழைக்க சத்தம் வந்த திசையில் அவன் திரும்பி 

பார்க்க பெண்ணவளை பார்த்து விழிகளை விரித்தான் அதிர்வுடனே எழுந்து நிற்க 

“இந்த புடவை எனக்கு நல்லா இருக்கா” என்று கேட்டு கொண்டே வெட்கத்துடனே தன் கட்டை விரலால் தரையில் அவள் கோலம் போட அடுத்த கணம் அவள் அருகில் கோபத்துடனே நடந்து சென்றவன் தன் இடையில் இருந்த குறுங்கத்தியை எடுத்து அவள் கழுத்தில் வைத்தான் “எதுக்கு டி என் அம்மா புடவையை எடுத்துட்டு போன” என்று கேட்க அவன் நெருக்கம் அவன் கழுத்தில் வைத்த கத்தியை பார்த்து அவளுக்கு பயம் வர திருதிருவென விழித்தவளின் கண்கள் கலங்கியது அவள் அழுவதை பார்த்தவன் கழுத்தில் இருந்த கத்தியை எடுத்தான் “இதை பாரு வள்ளி உன் போக்கே சரியில்லை உனக்கு ஏத்தவன் நான் இல்லை உனக்கும் எனக்கும் ஏணி வச்சாலும் எட்டாது உன் மனசுல அப்படி எதாவது ஆசையை வளர்த்துக்கிட்டு திரியாத” என்று கோபத்துடனே பேச. 

 

வள்ளிக்கு வந்ததே கோபம் “நீ என்ன பெரிய ரஜினிகாந்த்தா உன் மேல எனக்கு ஆசை வர புடவை நல்லா இருக்கேன்னு எடுத்து கட்டிட்டு வந்தா ரொம்ப பேசுற என் மனசுல எந்த எண்ணமும் இல்லை” என்றவள் அடுத்த கணம் அங்கே இருந்த சோலைக்காட்டு பொம்மை போட்டிருந்த சட்டையை கழட்டியவள் அவனுக்கு மறுபுறம் திரும்பி நின்று புடவையை கண்ணீருடனே கழட்டியவள் சட்டையை மாட்டிக் கொண்டு அவன் மீது புடவையை தூக்கி எறிந்தாள் “நீயே வச்சிக்க உங்க அம்மா புடவையை” என்று அழுது கொண்டே கூறிவிட்டு அங்கிருந்து நடந்து சென்றாள் அவள் கண்களில் இருந்து கண்ணீர் மட்டும் நிற்காமல் வழிந்து கொண்டே இருந்தது எதையோ எதிர்ப்பார்த்து அவள் மனம் ஏமாந்து போய் இருந்தது. 

 

சேதுபதி தன் தாயின் புடவையை கையில் வைத்திருக்க அதில் வள்ளிக்கே உண்டான மணம் வீசியது அதை உள் வாங்க கூட அவன் தயாராக இல்லை கையில் இருந்து தூக்கி வீசினான் இருக்கும் போது ஒரு பொருளின் அருமை தெரியாது இல்லாத போது தான் அதன் அருமை புரியும். 

 

வீட்டுக்கு வந்த வள்ளி அழுகையுடனே சென்று கதவடைத்து கொள்ள அவளின் தாய் அவளை புரியாத ஒரு பார்வை பார்த்தவர் சந்தேகத்துடனே அவளின் பின்னே வந்து கதவை தட்ட எழுந்து வந்து கதவை திறந்தாள் பெண்ணவள் “இப்படியே எங்க டி போய்ட்டு வர” என்று கேட்க “ம்ம் என் மாமியார் வீட்டுக்கு என்னை கொஞ்ச நேரம் தொல்லை பண்ணாத மா” என்று கத்தியவள் மீண்டும் கதவடைத்துவிட்டு கட்டிலில் விழுந்து அழுக ஆரம்பித்தாள். 

 

ஏன் இந்த அழுகை எதற்காக இந்த வருத்தம் என்று அவளுக்கும் அவள் மனதுக்கும் தான் தெரியும். 

 

இங்கே ஆதினி பள்ளிக்கூடம் செல்லவே மாட்டேன் என்று அழுது அடம் பிடிக்க 

அவளின் அப்பத்தா அவளை மிரட்டி அனுப்பி வைத்தார் “கழுதை ஒழுங்கா பன்னிரெண்டாவது பாஸ்சாகு அப்போ தான் உன் புருசனுக்கு கெளரவமா இருக்கும் இல்லைன்னா வாத்தியார் பொண்டாட்டி மக்குன்னு ஊரே பார்த்து சிரிக்கும்” என்று விரட்டி விட அழுது கொண்டே பள்ளிக்கு சென்றாள் அழகரின் கண்ணுக்கே அகப்படாமல் கடைசி இருக்கையின் ஓரத்தில் அமர்ந்து கொண்டாள். 

 

அழகர் ஆதினி திருமண நாளும் வந்தது விடிந்தாள் திருமணம் ஆதினி அழுது கொண்டே இருக்க அவளுக்கு இருமல் ஜலதோஷம் காய்ச்சல் அனைத்தும் அழையா விருந்தாளியாக ஒட்டிக் கொண்டது வள்ளி மணமகள் அறையின் உள்ளே அவளின் கழுத்தில் கை வைத்து தொட்டு பார்க்க “என்ன அக்கா உடம்பு இப்படி அனலா கொதிக்குது” என்று கேட்க

“தெரியலை” என்றாள் ஆதினி

வள்ளிக்கு அவளை பார்க்கவே பாவமாக இருக்க வீட்டுக்கு சென்று கசாயம் எடுத்து வந்து கொடுத்தாள் அதன் பின் கொஞ்சம் பரவாயில்லைமால் இருந்தது. 

 

மறுநாள் காலை அவள் மணக்கோலத்தில் அழகர் பக்கத்தில் வந்து மணமேடையில் அமர அழகர் அவளை கண்களாலேயே எரிப்பதை போல பார்த்தான் சேதுபதி முதல் வரிசையில் அமர்ந்து அவளை பார்த்து கொண்டு தான் இருந்தான் ஐயர் “கெட்டிமேளம் கெட்டிமேளம்” என்று குரல் கொடுக்க அழகர் உதிரி கழுத்தில் தாலி கட்டி முடிக்க அவன் மீது மயங்கி விழுந்தாள் “பொண்ணு மாப்பிள்ளையை பார்த்து மயங்கிருச்சு” என்று சுற்றி இருந்தவர்கள் கிண்டலடிக்க அவள் முகத்தில் தண்ணீர் எழுப்ப பெண்ணவளும் எழுந்தமர்ந்தாள். 

 

மணமக்கள் பெரியவர்களின் காலில் விழுந்து ஆசி பெற்று கொள்ள அவர்களும் வாழ்த்தினர் ஆதினியின் பாட்டி கண்ணீர் விட சடங்குகள் அனைத்தும் நடைபெற அழகர் இஞ்சி தின்ன குரங்கை போல முகத்தை வைத்திருந்தான் இறுதியாக அவள் காலில் அழகர் மெட்டியை மாட்ட பெண்ணவள் பயத்துடனே நின்றிருந்தாள் அனைத்தும் முடிந்து ஆதினியும் அழகரும் மறு வீடு கிளம்பி செல்ல ஆதினி தன் பாட்டியை கட்டி அணைத்து அழுது கொண்டே இருந்தாள் இறுதியாக வள்ளியையும் கட்டிக் கொண்டு அழுக அவளும் அழுதுவிட்டாள். 

 

அழகர் காரில் அமர்ந்திருக்க அவளின் செயல் அவனுக்கு கோபத்தை வரவழைக்க 

“இன்னும் எவ்வளவு நேரம் தான் அழுவிங்க இப்போ வர போறியா இல்லையா” என்று அவன் கத்த ஆதினி பயத்துடனே தன் அப்பத்தாவிடம் இருந்து விலகி கண்ணீரை துடைத்து கொண்டு அவன் பக்கத்தில் வந்து அமர கார் அங்கிருந்து சென்றது. 

 

வள்ளி கார் கண்ணை விட்டு மறையும் வரை பார்த்து கொண்டு இருந்தாள் எப்போதும் போல் இல்லாமல் இன்று புடவை கட்டியிருந்தாள் தன்னை தூரத்தில் யாரோ பார்ப்பதை போல அவளுக்கு தோன்ற திரும்பி பார்த்தாள் அங்கே சேதுபதி தான் நின்றிருந்தான் அவனை பார்த்தவுடன் அவள் முகத்தை திருப்பி கொண்டு சென்று விட சேதுபதியும் அங்கிருந்து சென்றான். 

 

இருவரும் மறுவீட்டுக்கு வந்து சேர அழகர் அண்ணி லதா வந்து இருவருக்கும் ஆலம் சுற்றினாள் இருவரும் உள்ளே வர ஆதினி வருவதற்க்கு முன்னே வேகமாக நடந்து உள்ளே சென்ற அழகர் தன் தோளில் இருந்த பட்டு துண்டை கழட்டி வீசி எறிந்துவிட்டு முன்னே சென்று விட ஆதினி பாவமே உருவாய் நின்றிருந்தாள் வீட்டில் இருந்த ஒருவர் கூட அவனை தடுக்கவில்லை தன் அறையின் உள்ளே சென்று புல்லட்டை சாவியை எடுத்து கொண்டு அங்கிருந்து கிளம்பினான். 

 

ஆதினி அவனையே பார்த்து கொண்டே நிற்க லதா எதுவும் சொல்லாமல் உள்ளே சென்று விட அவரவர் அவர்கள் வேலையை பார்க்க அழகரின் தாயார் மட்டும் அவள் அருகில் வந்தவர் சமாளிக்கும் விதமாக ஒரு நமட்டு சிரிப்பு சிரித்து அவளும் பதிலுக்கு வராத சிரிப்பை முகத்தில் வரவழைத்து உதட்டை வளைக்க “நீ அந்த அறைக்கு போய் கொஞ்சம் நேரம் தூங்கி எழு அது அழகரோட அறை தான்” என்க அவளும் சரியென தலையை ஆட்டி விட்டு சென்று தன் பெட்டியை அந்த அறையில் வைத்துவிட்டு தான் அணிந்திருந்த நகைகளை கழட்டி வைத்துவிட்டு கழுத்தை ஒட்டி இருந்த ஒரு அட்டிகையை மட்டும் போட்டு கொண்டு படுத்து கொண்டாள். 

 

ஆதினி மெல்ல கண்ணை மூடினாள் நேற்றிலிருந்து அவள் சுத்தமாக உறங்கவில்லை அசதியில் படுத்தாள் அவளுக்கு தன்னால் உறக்கம் வந்தது ஆனால் அவளின் கணக்கு வாத்தி கணவன் தான் மனக்கண்ணில் வந்து பயமுறுத்தினான் பதறி அடித்து கொண்டு எழுந்து அமர்ந்தவள் கண்ணீரும் பயத்துடனே அமர்ந்திருந்தாள் அவன் அறையை சுற்றி பார்க்க எங்கும் புத்தகங்களால் நிரம்பி வழிந்து கொண்டே இருந்தது அந்த அறையை பார்த்தே அவளுக்கு பயம் வந்தது சிறு வயதில் இருந்தே அவளுக்கு படிப்பு சுட்டு போட்டாலும் வராது அவள் பன்னிரெண்டாம் வகுப்பு வரை வந்ததே உலக சாதனை தான். 

 

அதேநேரம் அழகர் தன் கோபத்தை அடக்கும் வழி தெரியாமல் பள்ளிக்கு வந்து சேர்ந்தான் ஆசிரியர்கள் அறையின் உள்ளே வந்து தலையில் கை வைத்து அவன் அமர்ந்திருக்க அவனுடன் வேலை செய்யும் மணிகண்டன் உள்ளே வந்தார் பட்டு வேட்டி சட்டையில் தலையில் கை வைத்து அமர்ந்திருந்தவன் அருகில் சென்றவர் “என்ன சார் இன்னைக்கு தான உங்களுக்கு கல்யாணம் இங்க வந்து உட்கார்ந்து இருக்கிங்க” என்று அவர் கேட்க

அவரை முறைத்து பார்த்தவன் 

“ஏன் ஸ்கூலுக்கு வரக்கூடாதா உங்களுக்கு என்ன சார் பிரச்சனை” என்று முறைப்புடனே கேட்க “கல்யாணம் ஆன முதல் நாளே கல்யாண வாழ்க்கை வெறுத்து போச்சா சார்” என்று மணிகண்டன் அவனின் பக்கத்தில் அமர்ந்து கேட்க “சார் பிளீஸ் கொஞ்சம் நேரம் என்னை தனியா விடுங்க நான் தனியா இருக்க தான் இங்க வந்தேன்” என்றான் கோபத்துடனே அதன் பின் அவரும் எதுவும் கேட்க்கவில்லை மீண்டும் அவன் வீட்டுக்கு நள்ளிரவு ஆனது வீடே அடங்கி இருக்க அவன் அறையில் மட்டும் வெளிச்சம் இருந்தது உள்ளே சென்று பார்க்க அவன் அறை அலங்காரம் செய்யப்பட்டு இருக்க ஆதினி அமர்ந்த படியே உறங்கி வழிந்து கொண்டு இருந்தாள். 

அத்தியாயம் 6

 

அழகருக்கு அவளை பார்த்தவுடனே கோபம் தான் வந்தது அவன் கோபத்துடனே வேகமாக நடந்து வர தரையில் ஊற்றியிருந்த பாலை கவனிக்காமல் காலை வைத்துவிட கால் வழுக்கி விழ போக அவன் வந்த அரவத்தில் சத்தம் கேட்டு பெண்ணவள் கண் விழித்தாள் அழகர் எங்கே கீழே விழுந்து விடுவானோ என்று பயந்து “சார் பார்த்து” என்று அவள் கூற அவளை பார்த்து முறைத்து வைத்தான் 

அழகர்,பெண்ணவள் பயமும் பதட்டத்துடனே எழுந்து நிற்க படுக்கையில் இருந்த பூக்களை பார்த்தவனுக்கு கோபம் வர “இப்போ பூ அலங்காரம் ஒன்னு தான் குறைச்சல்” என்று கத்திவிட்டு படுக்கையில் இருந்த போர்வையை தூக்கி எறிந்தான் அதனுடன் ஒரு தலையணையையும் தூக்கி எறிந்தவன் “போய் படு இனி என் கண்ணுல பட்ட உன்னை தொலைச்சிருவேன்” என்றவன் அங்கிருந்த இருக்கையில் சென்று அமர்ந்தான் உறக்கம் வராமல் அவன் அமர்ந்திருக்க.

 

ஆதினிக்கு அழுகையே வருவதை போல இருந்தது முதல் இரவுக்காக அவள் பட்டு புடவை நகைகள் எல்லாம் அணிந்திருக்க கசகசவென்று இருக்க சரி நகையையாவது கழட்டி வைப்போம் என்று எழுந்து சத்தமில்லாமல் கழட்டி கொண்டே இருக்க திடீரென எங்கிருந்தோ வந்த பூனை அவள் மீது மோதிவிட்டு ஓட “அம்மா” என்று அலறிய ஆதினி தரையில் ஊற்றியிருந்த பாலில் கால் வைத்து விட வழுக்கி விழுந்தாள் சரியாக அழகரின் மடியிலேயே அமர்ந்துவிட்டாள்.

 

அழகர் இதை சற்றும் எதிர்ப்பார்க்கவில்லை பெண்ணவள் அவன் மடியிலேயே அமர்ந்து விட இருவரும் மிகவும் நெருக்கத்தில் இருந்தனர் அவள் சூடியிருந்த கனகாம்பரம் பூவும் மல்லியும் கலந்த வாசனை அவன் மனதை லேசாக்கி இதமாக்கியது அவன் கோபம் சற்றே மட்டுப்பட்டதை போன்ற ஒரு உணர்வு அவளின் கழுத்து வளைவில் ஆங்காங்கே தெரிந்த பூனை முடிகளும் ஒற்றை மச்சத்தையும் அவன் கண்கள் கவனித்தது 

கூடவே அவன் காலையில் கட்டிய பொன் மஞ்சள் தாலியும் அவனை பார்த்து சிரித்தது அவளுக்கு உண்டான மனத்தையும் அவன் உணர்ந்தான் ஏனோ அவனே அறியாமல் அவன் உடலில் எண்ணிலடங்கா மாற்றங்கள் நிகழ்ந்தது.

 

ஆதினி அவன் மடியில் அமர்ந்திருக்கும் போது கூச்சத்தில் நெளிந்தாள் எழுந்து கொள்ள போக அவள் கழுத்து தங்க சங்கிலியின் கொக்கி அவனின் காலர் சட்டை பட்டனில் மாட்டியிருக்க எழுந்து கொள்ள முயன்று முடியாமல் மீண்டும் அவன் மடியிலேயே அமர்ந்தாள் “இரு டி உன் செயினு என் சட்டையில மாட்டியிருக்கு” என்று பல்லை கடித்து கொண்டே கூறினான் அவனே அறியாமல் அவளை உரிமையுடன் டி என்று அழைத்து இருந்தான் மெல்ல அதை எடுக்க முயல அவன் கை அவளின் கழுத்து வளைவில் பட்டது அவன் கொக்கியை நீக்க போராடி கொண்டு இருக்க பெண்ணவள் கூச்சத்தில் நெளிந்து கொண்டே இருந்தாள்‌

அவளின் அசைவு ஆணவனுள் ஏதோ செய்தது இத்தனை வருடமாக பிரம்மச்சாரியாக வாழ்ந்தவன் மனதையே சபலமடையை வைத்தது.

 

அவளுக்கும் உண்மையிலேயே கூச்சமாக தான் இருந்தது எந்த ஆடவனுடனும் அவள் இத்தனை நெருக்கத்தில் இருந்ததும் இல்லை இந்த அளவுக்கு அவளின் கழுத்து வளைவில் எந்த ஆடவனின் கையும் உரசியதும் இல்லை பெண்ணவளுக்கு கூச்சம் வந்து ஒட்டிக் கொள்ள எப்படியோ பிரித்தெடுக்க முயன்று தோற்றுப் போனான் “இதை எப்படி கழட்டுறது” என்று அவளிடமே சந்தேகம் கேட்டான் காரணம் பெண் வாடையே இல்லாமல் வாழ்ந்த அவனுக்கு எப்படி இதெல்லாம் தெரியும் 

“அது சாதாரண கொக்கி தான்” என்றவள் திரும்பி பார்க்க முயன்றாள் ஆனால் அந்த தங்கச் சங்கிலி அவள் கழுத்தை இறுக்கியது 

“இது ரொம்ப இறுக்கமா இருக்கு” என்றான்

“என் கழுத்து இறுகுது சீக்கிரம் கழட்டுங்க சா..” என்று சொல்ல வந்து தடுமாறினாள்.

 

 அழகர் அடுத்த கணம் எதை பற்றியும் யோசியாது தன் பற்களால் கடித்து அந்த கொக்கியை கழட்ட முயன்றான் இப்போது அவன் இதழ்கள் மீசை முடியும் அவளின் கழுத்து வளைவை தீண்ட அவனின் எச்சில் ஈரம் பட்டவுடன் பெண்ணவள் கண்கள் அதிர்ச்சியில் அகல விரிந்தது “நீங்க என்ன பண்றிங்க” என்று அவள் கேட்க அவனிடமிருந்து எந்த வித பதிலும் இல்லை அவ்வப்போது அவன் முரட்டு இதழ்கள் மட்டும் அவளின் கழுத்து வளைவை லேசாக உரசியது அவளின் கண்களில் திடீரென அவன் மீசையுடன் பார்த்த அவனின் முரட்டு இதழ்கள் நினைவுக்கு வர வெட்கம் பிடுங்கி தின்றது.

 

அழகர் ஒரு வழியாக அந்த கொக்கியை தன் சட்டையில் இருந்து பிரித்து எடுத்தான்

அடுத்த கணம் பெண்ணவள் எழுந்து வெளியே ஓடி விட ஆணவன் மனதில் இருந்த குழப்பங்கள் அனைத்தும் தெளிந்து ஏதோ தெளிவு பெற்றதை போன்ற ஒரு உணர்வு வந்தது ஆனாலும் இன்னமும் ஏதோ ஒரு நெருடல் அவன் மனதில் இருக்க தான் செய்தது.

 

அழகருக்கு இப்போது தான் பசி என்ற உணர்வு தனக்கு இருப்பதே நினைவுக்கு வர சாப்பிடுவதற்க்காக கை கழுவ சென்றான் அவன் மீண்டும் அறைக்குள் வரும் போது பெண்ணவளின் சூடியிருந்த பூவின் மணம் அந்த அறையெங்கும வீசுவதை போல அவனுக்கு ஒரு பிரம்மை வந்தது அந்த வாசனையை மனதில் நிரப்பி கொண்டே சாப்பிட ஆரம்பித்தான்.

 

ஆதினி அங்கிருந்து ஓடி வந்தவள் நேரே வீடு பின் வாசலில் வந்து தான் நின்றாள் அவளுக்கு மேல் கீழ் மூச்சு வாங்கியது பயமா பதட்டமா என்று ஏதோ புரியாத உணர்வு ஒன்று அவளை ஆட்டி படைத்தது பின்னே இருந்த அறையில் சென்று நின்றவள் தன் முன்னே இருந்த கண்ணாடியில் அவளின் முகத்தை பார்த்தாள் அவள் முகம் ரத்த சிவப்பாக மாறியிருந்தது ‘என்ன இது என் முகம் இப்படி சிவந்து இருக்கு’ என்று நினைத்தாள் பாவம் தன் முகம் வெட்கத்தில் சிவந்து இருக்கிறது என்று அவள் அறிந்திருக்கவில்லை எவ்வளவு நேரம் அங்கேயே நிற்க முடியும் யாராவது வந்தால் நிச்சயம் எதாவது கேட்ப்பார்கள் என்று நினைத்தவள் தயங்கி தயங்கி அறையின் உள்ளே வந்து ஒரு மூலையில் முழங்கினார்

அழகரும் அவளிடமிருந்து சற்று தள்ளி படுத்தான்.

 

இருவரும் உறங்காமல் வெகு நேரம் விழித்து கிடந்தனர் ‘என்னவெல்லாம் கனவு கண்டேன் ஒரு பன்னிரெண்டாவது கூட பாஸ் ஆகாதவள் போய் என் பொண்டாட்டி எல்லாம் என் நேரம்’ என்று மனதிலேயே புலம்பி கொண்டே படுத்திருந்தான் இன்னமும் வெறுப்பு இருக்க தான் செய்தது.

 

மறுநாள் காலை பொழுது விடிய ஆதினி குளித்து எப்போதும் போல மஞ்சள் பூசி வெளியே வர லதாவும் அவளின் மாமியாரும் சமைத்து கொண்டு இருந்தனர் 

“இந்தா மா உன் புருசனுக்கு காபியை போய் கோடு” என்று அழகரின் அன்னை அவள் கையில் டம்ளரை கொடுக்க ஆதினி அதை கையில் கூட வாங்காமல் ஏதோ யோசனையுடன் நின்றிருக்க “ஆதினி” என்று அழைத்தார் அவர் மீண்டும் சுயநினைவுக்கு வந்தவள் காபியை வாங்கி கொண்டு சென்றாள். 

 

அழகர் நன்றாக உறங்கி கொண்டு இருக்க அவனை எப்படி எழுப்புவது என்று தெரியாமல் தயங்கி நின்றவள் 

மெல்ல “சார் சார்” என்று அழைக்க அவனும் கண் விழித்தான் கண்ணை திறந்தவனின் கண் முன்னே ஆதினியின் முகம் தெரிந்தது  

முகம் முழுக்க மஞ்சள் பூசி அடுக்கு மல்லி சூடியிருந்தவளை பார்த்தான் அவன் கண் முன்னே உசலாடிக் கொண்டு இருந்த பொன் மஞ்சள் தாலியை அப்போது தான் பார்த்தவனுக்கு அப்போது தான் புரிந்தது அவள் அவன் மனைவி என்று. 

 

அழகர் எழுந்து கொள்ளும் போதே கோபத்துடனே எழுந்தவன் அவள் கையில் இருந்த காபியை தட்டி விட்டான் 

“நான் உன் கிட்ட காபி கேட்டானா எல்லாம் என் நேரம் படிக்க துப்பு இல்லை ரெண்டு வருசமா அதே பன்னிரண்டாம் கிளாஸ்லயே உட்கார்ந்து இருக்க ஆனா முகத்துக்கு மட்டும் அரை டஜன் மஞ்சளை அரைச்சி பூசிக்குவ தலையில் பூ வேற ச்சை நேத்தே சொன்னேன் என் கண்ணு முன்னாடி வர்றாதன்னு திரும்ப திரும்ப வந்து எதுக்கு என்னை தொல்லை பண்ற” என்று கத்த அறையின் வெளியே வரை சத்தம் கேட்டது அழகரின் பெற்றோர் அண்ணன் அண்ணி காதிலும் இது விழுந்தது. 

 

அழகர் அறையில் இருந்து வெளியே வந்தவன் குளிக்க செல்ல அனைவரும் அவனையே பார்க்க அங்கிருந்த அனைவரையும் பார்த்து முறைத்தவன் குளிக்க சென்றான் ஆதினிக்கு அறையின் உள்ளே இருந்து வெளியே வரவே அவமானமாக இருந்தது கண்ணீர் மல்க அமர்ந்திருந்தாள். 

 

அழகர் பெற்றோருக்கு இப்போது தான் உரைத்தது தெரியாமல் இருவருக்கும் திருமணம் செய்து வைத்து விட்டோமோ என்று மனக்கவலையாக இருந்தது 

அழகர் குளித்து முடித்துவிட்டு கிளம்பி வெளியே வர அவன் தாய் அவன் அருகில் பேச வந்தார் “தம்பி சாப்பிட வா பா” என்று கூற “எனக்கு எதுவும் வேண்டாம்” என்று கூறிவிட்டு பள்ளிக்கு கிளம்பினான். 

 

“என்னங்க இவன் இப்படி பேசிட்டு போறான்” என்று அழகரின் தாய் தன் கணவரிடம் குறை கூற “நான் அப்போவே சொன்னேன் கேட்டியா மனசுக்கு பிடிக்காத ரெண்டு பேரையும் சேர்த்து வச்சு எதுக்கு கஷ்டப்படுத்தனும் பாவம் அந்த பொண்ணு” என்க அவருக்கும் ஆதினியை பார்க்க பாவமாக தான் இருந்தது அப்போது அவர் மனதில் திடீரென ஒரு யோசனை தோன்றியது “என்னங்க நம்ம பழைய வீடு சும்மா தான இருக்கு பேசாம நாம இவங்க ரெண்டு பேரையும் அங்க குடி வச்சிடலாமா” என்று கேட்க. 

 

“ஏன் டி உன் மவன் இங்கேயே அந்த பொண்ணை முறைச்சிக்கிட்டு திரியுறான் 

தனியா விட்டா விளங்கிடும்” என்றார் அழகரினின் தந்தை “என்னங்க தனியா இருந்தா அவங்களுக்குள்ள கொஞ்சமாச்சும் நெருக்கம் வரும் தனியா அனுப்பி பார்ப்போமே” என்று கூற அவரும் சரியென தலையை ஆட்டினார். 

 

மறுநாளே அவர்களின் உடைமைகள் இடம் மாற்றப்பட அழகரும் ஆதினியும் புது வீட்டுக்கு. குடி பெயர்ந்தனர் அழகர் வீட்டுக்கு பக்கத்து தெருவில் தான் அந்த வீடு இருந்தது அழகருக்கு விருப்பமே இல்லை என்றாலும் அவனின் பெற்றோர் அவனை வற்புறுத்தி அனுப்பி வைத்தனர். 

 

ஒருவரை வற்புறுத்தி இன்னொருவரின் காதல் நேசத்தை வரவழைக்க முடியுமா என்ன…? 

 

ஆதினிக்கு திருமணம் ஆன பின் வள்ளி மிகவும் தனிமையை உணர ஆரம்பித்தாள் 

வள்ளி வீட்டிலும் அவளுக்கு மாப்பிள்ளை தேட ஆரம்பித்தனர் வள்ளி வீட்டில் நல்ல வசதி என்பதால் அவளை மேலும் படிக்க வைக்க அவள் வீட்டில் விருப்பம் இல்லை அதனால் தான் விரைவாக மாப்பிள்ளை தேட ஆரம்பித்தனர். 

 

ஆதினி இடையில் பள்ளிக்கு செல்வதையும் நிறுத்தி இருந்தாள் வள்ளியும் சேதுபதியும் பார்த்து கொள்வதே அரிதான ஒன்றாக இருந்தது அந்த நேரம் தான் ஊருக்குள் திருவிழாவுக்கு காப்பு கட்டி இருந்தனர். 

 

சேதுபதியின் நண்பன் சுடலை வள்ளியின் தோழி சுகன்யாவை ஒரு தலையாக காதலிக்க அவளிடம் காதலை திருவிழா முடிய காதலை சொல்வதாக கூறியிருந்தான் அதற்க்காக சேதுபதியை துணைக்கு அழைத்திருந்தான். 

 

இரவு நேரம் திருவிழா முடிந்து அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருக்க சுகன்யாவும் வள்ளியும் பேசிக் கொண்டே நடந்து வந்தனர் “மாப்பிள்ளை எனக்கு பயமா இருக்கு நீயே எனக்காக சுகன்யா கிட்ட பேசுறியா” என்று அவன் கூற 

“டேய் என்னாலலாம் முடியாது உன் காதலுக்கு நான் ஏன் தூது போகனும் ஏதோ துணைக்கு கூப்பிட்டன்னு தான் வந்தேன் நான் கிளம்புறேன்” என்றான் சேதுபதி அங்கிருந்து கிளம்ப போக அவன் கையை பிடித்து கொண்டான் அவன் நண்பன். 

 

“மாப்பிள்ளை என் வாழ்க்கை பிரச்சனை டா” என்று அவன் கைப்பிடித்து கெஞ்ச அவன் கையில் இருந்த லெட்டரை வேண்டா வெறுப்பாக வாங்கினான் சேதுபதி “சரி நீ இங்கேயே இரு” என்றவன் சுகன்யாவிடம் செல்ல போக அவள் வள்ளியிடம் சொல்லிவிட்டு எங்கோ சென்று விட சரி வள்ளியிடம் கடிதத்தை கொடுக்க போக அந்த நேரம் பக்கத்தில் யாரோ பட்டாசு வெடிக்க வள்ளி அலறி அடித்து கொண்டு அங்கிருந்த சந்தில் ஓடிச் செல்ல பேதுபதியும் அவள் அருகில் வந்தான். 

 

“இதை வச்சிக்கோ” என்று அவள் கையில் கடிதத்தை கொடுக்க அவள் ஒன்றும் புரியாமல் பார்க்க அப்போது சந்தின் உள்ளே ஒரு நாய் உடம்பில் பட்டாசு சுற்றப்பட்டு ஓடி வர சத்தம் கேட்டு பயத்தில் 

பெண்ணவள் அவனை இறுக அணைத்து கொண்டாள் நாயின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கம் இருந்தவர்கள் அங்கே வர இருவரும் அணைத்து கொண்டு நிற்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். 

 

அங்கே அனைவரும் வந்தது கூட தெரியாமல் வள்ளி சேதுபதியை அணைத்து கொண்டு நிற்க அவனும் அவளை இறுக அணைத்து கொண்டு நின்றிருந்தான் அவனே அறியாமல் ஊரே இதை வேடிக்கை பார்க்க வள்ளியின் தாயும் தந்தையும் அங்கே வந்தனர். 

 

“இவனையெல்லாம் எப்படி தான் நம்பி காதலிக்கிறாளுகளோ” என்று ஒருத்தி கூற இன்னொருத்தியோ “இவன் அப்பனே இவள் மேல கை வைக்காம இருந்தா சரி” என்று பேசிக் கொண்டு இருந்தனர். 

 

வள்ளியின் தாய்க்கு வந்ததே கோபம் தன் மகளின் அருகில் சென்றவர் அவளின் கையை பிடித்து இழுத்து அவளை அடி வெளுக்க ஆரம்பித்தார் “அம்மா எதுக்கு என்ன அடிக்குற” என்று அவள் கேள்வி எழுப்ப “என்ன டி இது கையில” என்று அவள் கையில் இருந்த காதல் கடிதத்தை பார்த்து கேட்க அவளோ முதுகின் பின்னே கையை வைத்து கொண்டு அவருக்கு காட்டாமல் மறைக்க 

அவள் தாய் அதை பிடுங்கினார். 

 

வள்ளியின் தந்தை அதை வாங்கி படிக்க 

அந்த காதல் கடிதத்தில் பெயர் குறிப்பிடாமல் இருக்க வள்ளிக்கு தான் சேதுபதி எழுதியிருக்கிறான் என்று நினைத்தார் சேதுபதி கன்னத்தில் ஓங்கி பளார் என்று ஒரு அறைவிட்டார் அடுத்த கணம் வள்ளியின் கன்னத்திலும் அறை விழுந்தது “ஊர்ல உனக்கு காதலிக்க வேற எவனுமேவா டி கிடைக்கல இவன் ஒரு ஆளுன்னு இவனை போய் காதலிச்சிருக்கியே டி பாவி” என்று கேட்க சேதுபதியின் கண்கள் அவன் நண்பனை தேட அவனோ அங்கிருந்து ஓடியேவிட்டான் 

மொத்தத்தில் ஊருக்குள் சேதுபதியும் வள்ளியும் தான் காதலிக்கிறார்கள் என்று நினைத்து கொண்டனர் அனைவரும். 

 

“உனக்கு ஏன் டி இப்புடி புத்தி போகுது” என்று இன்னொரு அறை வள்ளியின் கன்னத்தில் அவள் தாய் அடிக்க “அத்தை அவள் ஒன்னும் தப்பு பண்ணல” என்று சேதுபதி பேச வர “நீ பேசாத டா முறை செய்ய ஆள் இல்லைன்னு உன்னை கூப்பிட்டோம் பாரு உன் புத்தியை காட்டிட்டல்ல எங்களை சொல்லனும் வாடி” என்று வள்ளியின் கையை பிடித்து இழுத்து செல்ல போக “அத்தை மாமா அவள் எந்த தப்பு பண்ணல உங்க மகள் உண்மையாவே நல்லவள்” என்று அவன் கூற. 

 

“ஏன் டா உனக்கு கட்டி கொடுத்து என் பொண்ணையும் பலி கொடுக்க சொல்றியா எதுக்கு டா இப்போ நல்லவன் வேஷம் போடுற ஊர் முன்னாடி எங்க மானத்தை வாங்கிட்டல்ல” என்று கத்தி விட்டு வள்ளியை அவளின் தாயும் தந்தையும் இழுத்து சென்றனர். 

 

வள்ளியை வரும் வழியெல்லாம் அவளின் பெற்றோர் அடித்து இழுத்து செல்ல சேதுபதிக்கு அவளை பார்க்கவே பாவமாக இருந்தது இத்தனை நடந்தும் ஒரு வார்த்தை கூட வாயை திறந்து வள்ளி அவனை காதலிக்கவில்லை என்று சொல்லவேயில்லை மூவரும் வீடு வந்து சேர “இனி உன்னை எவன் டி கல்யாணம் பண்ணிக்குவான்” என்று அவளின் தாய் தலையில் அடித்து கொண்டு அழ வள்ளியின் தந்தை இடிந்து போய் அமர்ந்து இருந்தார். 

 

இனி என்ன நடக்குமோ….

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *