காதலின் காவலன் 3
அத்தியாயம் 3 அடுத்த நாள் காலை வள்ளி வயிற்றுவலி என்று பள்ளிக்கு மட்டம் போட்டு விட அன்று தப்பித்தோம் என்று நினைத்து கொண்டாள் அடுத்து வந்த இரண்டு நாட்களும் வயிற்றுவலி என்று சொல்லியே பள்ளிக்கூடம் பக்கம் எட்டி பார்க்கவில்லை வள்ளி மூன்று நாட்களுக்கு பிறகு நான்காம் நாள் மீண்டும் பள்ளிக்கு வந்தாள் அவளுடன் தாமரையும் வந்தாள் இருவரும் ஒத்தையடி பாதை வழியாக பேசிக் கொண்டே நடந்து வந்து கொண்டு இருக்க குறுக்கே வந்து நின்றான் ராஜதுரை. அவனை பார்த்த வள்ளி பயந்து நடுங்க தாமரை தைரியமாக நின்றாள் ராஜதுரை வள்ளியை பார்த்து கொண்டே கையில் தேன் மிட்டாயுடன் வந்தான், தாமரை அவன் கலர் கலர் மைனர் சட்டையை பார்த்து நமட்டு சிரிப்பு சிரித்து வைக்க அவளை முறைத்து கொண்டே வந்தவன் வள்ளி அருகில் சென்றான். “வள்ளி உனக்காக தான் தேன் மிட்டாய் வாங்கி வந்தேன் உனக்கு ரொம்ப பிடிக்கும் இல்லை” என்று…
1 comment
Nice