தைத்தியனின் தேவதை
அத்தியாயம் 1 “அம்மா அம்மா வலிக்குது என்னால் முடியலை” என்று அவந்திகா பிரசவவலியில் துடித்து கொண்டிருந்தாள் அவளின் தாய் ஒன்றும் புரியாமல் மகளை உடனே அக்கம்பக்கத்தினர் உதவியுடன் மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தார் அவரும் அவர் கணவரும் பதட்டத்துடன் நின்றிருக்க பெண் மருத்துவர் அங்கே சிகிச்சைக்காக ஓடி வர “டாக்டர் என் பொண்ணை எப்படியாவது காப்பாத்தி கொடுங்க” என்று கெஞ்சினார் கல்யாணி மருத்துவர் அவருக்கு பதில் கூறாமல் அந்த பிரசவ அறையை நோக்கி ஓடினார். அங்கே அவந்திகா “அம்மா ஆஆ வலிக்குதே” என்று கத்தி கதறி அழுது கொண்டே இருந்தாள் “மேடம் அந்த பொண்ணுக்கு குழந்தை உண்டாகி ஆறே மாசம் தான் ஆகுது ஆனா..ஆனா..அவள் வயிறு ஏதோ பத்து மாசத்தை போல இருக்கு அது மட்டும் இல்லை அவளுக்கு பிரசவ வலி வந்துருச்சு” என்றார் பயத்துடனே அந்த செவிலியர். “நகருங்க நான் பார்க்குறேன்” என்று மருத்துவர் அவளை தொட்டு பார்க்க ஆம் அது…