வித்தாரக்கள்ளியை வென்றவன் அத்தியாயம் 1 “மாப்பிள்ளை எங்க யா வந்தாரா இல்லையா” என்று அங்கிருந்த கூட்டத்தில் ஒரே சலசலப்பாக இருக்க “மாப்பிள்ளை வந்துட்டாரு” என்ற குரல் வர அனைவரும் வாசலை பார்த்தனர் அங்கே ஒரு அரை டிரெளசர் கையில்லா பனியனுடன் கண்கள் சிவந்து தலை முடியெல்லாம் கலைந்து நேற்று குடித்த போதை கூட தெளியாமல் நடந்து வந்தான் சேது என்கிற சேதுபதி “எப்படியோ மாப்பிள்ளை வந்துட்டாரு” என்று அங்கிருந்த அனைவரும் தங்களுக்குள் கிசுகிசுக்க அவன் தந்தை அவனை முறைத்து பார்த்தார் “இவன் எங்க அப்பா பெயர் காப்பாத்துவான்னு இவனுக்கு போய் எங்க அப்பா பெயரு சேதுபதின்னு வச்சேன் பாரு என்னை சொல்லனும்” என்று தலையில் அடித்து கொண்டார். அங்கிருந்த வாண்டு ஒன்று மணப்பெண்ணின் அறையின் உள்ளே ஓடி “அக்கா மாமா வந்துட்டாரு” என்று கூற பெண்ணவளின் கண்களில் லேசாக கண்ணீர் எட்டி பார்த்தது “இவனுக்கு கல்யாணம் ஒன்னு தான் கெடு” என்று…