மன்மத லீலை 8
அத்தியாயம் 8 மன்மதன் உடனே பெண்ணவளின் அணைப்பில் இருந்து விலகி கழட்டி வைத்த மாலையை மீண்டும் கழுத்தில் அணிந்து கொண்டான் “இனி வரும் பத்து நாட்களுக்கு மட்டும் என்னை விட்டு தள்ளி இரு நிரஞ்சனா இல்லையெனில் நாம் இருவரும் இந்த பூலோகத்திலேயே சிக்கி கொள்ள நேரிடும்” என்றான் மன்மதன் நிரஞ்சனாவும் பதிலுக்கு சரியென என்று தலையை ஆட்டினாள். காதலர்கள் ஒரே வீட்டில் இருந்து தள்ளி இருக்க முடியுமா…காதல் வந்தால் தாமமும் சேர்ந்தல்லவா வரும் இப்படியே அடுத்த வந்த ஒரு வாரமும் கழிந்தது இருவரும் கண்களாலேயே காதல் மொழி பேசி தள்ளி இருந்து கொண்டனர் மன்மதன் வானுலகம் செல்ல இன்னும் இரண்டு நாட்கள் மட்டுமே இருந்தது அன்று காலை மன்மதன் வெளியே பால் வாங்கி வர சென்று இருந்தான் நிரஞ்சனா குளிப்பதற்காக குளியலறைக்கு சென்றாள். தலையில் சீகைக்காய் தேய்த்து குளித்து கொண்டு இருந்தவள் ஷவரை திறக்க முயல தண்ணீர் சுத்தமாக வரவில்லை தண்ணீர்…