மன்மதன் லீலை 3

அத்தியாயம் 3

 

நிரஞ்சனா தன் ஸ்கூட்டியில் அமர்ந்தவள்

“மதன் பின்னாடி உட்காருங்க” என்றாள் 

மன்மதனோ இது என்ன வாகனம் என்று ஸ்கூட்டியை புதிதாக பார்ப்பவனை போல பார்க்க “மதன் உட்காருங்க நமக்கு நேரம் இல்லை கடை மூடுறதுக்குள்ள கிளம்பனும்” என்றாள் நிரஞ்சனா. 

 

“பெண்ணே இதில் எப்படி உட்கார வேண்டும் எனக்கு தெரியவில்லையே” என்று கேட்டு கொண்டே அவன் திரு திருவென விழிக்க நிரஞ்சனா அவனுக்கு எப்படி உட்கார வேண்டும் என்று சொல்லி கொடுக்க அவனும் அமர்ந்து கொண்டான் மன்மதனுக்கு ஸ்கூட்டியில் செல்வது கூட பிடித்து தான் இருந்தது எதிர் காற்று சில்லென்று வீச அவன் முகத்தில் மோதிய 

காற்றை ரசித்து கொண்டே வந்தான் நிரஞ்சனாவின் கூந்தலும் காற்றில் பறக்க 

அத்தனை வாசனையாக இருந்தது அவளின் தலை முடி ‘என்னே ஒரு நறுமணம்’ என்று நினைக்க அவன் கழுத்தில் இருந்த மாலையில் இருந்து மின்சாரம் தாக்கியது அடுத்த நொடி மன்மதன் பெண்ணவளை விடுத்து சுற்றி வேடிக்கை பார்க்க ஆரம்பித்தான்.

 

இருவரும் சாலையில் சென்று கொண்டிருக்க இரு காவலர்கள் இருவரையும் கை நீட்டி தடுத்து நிறுத்தினர் நிரஞ்சனா சடன் பிரேக் அடித்து வண்டியை நிறுத்த மன்மதன் உடல் மொத்தமாக பெண்ணவளின் உடலோடு ஒட்டி மீண்டது மன்மதன் உடனே பின்னே தள்ளி அமர்ந்து கொள்ள அப்போதும் அவன் உடலில் மின்சாரம் பாய்ந்தது அந்த காவலர் மன்மதனை பார்த்து “உங்க மாஸ்க் எங்க சார் மாஸ்க் இல்லாம வெளியே வரக்கூடாதுன்னு தெரியாதா கவர்மென்ட் ஆர்டர்” என்று அவர் கேட்க 

மன்மதனுக்கு ஒன்றும் புரியவில்லை 

“மாஸ்க்” என்றாள் என்ன பெரியவரே என்று கேட்க அந்த காவல் ஆய்வாளர் அவனை எரிப்பதால் போல பார்க்க “யாரு யா அடிக்கிற வெயில்ல வந்து உயிரை எடுத்துட்டு மாஸ்க் எடுத்து போடு இல்லை ஃபைன் கட்டிட்டு கிளம்பு” என்றார். 

 

நிரஞ்சனா உடனே “சார் என் கிட்ட மாஸ்க் இருக்கு” என்று கூறியவள் அவனிடம் கொடுத்து “மதன் மாஸ்க்கை போடுங்க” என்று கொடுக்க அவன் அதை எப்படி போடுவது என்று தெரியாமல் அவன் திரு திருவென விழிக்க நிரஞ்சனா தன் தலையில் அடித்து கொண்டவள் வண்டியை நிறுத்திவிட்டு கீழே இறங்கி “நீங்க ஏன் ஏதோ வேற உலகத்துல இருந்து வந்த மாதிரி நடந்துக்குறிங்க” என்று கேட்டு கொண்டே அவனுக்கு மாஸ்க் அணிவித்தாள். 

 

அதன் பின் காவலர் இருவரையும் அனுப்பி விட “எதற்க்காக பெண்ணே இந்த முகமூடி” என்று கேட்க “ஊர் முழுக்க கொரானா பரவிக் கிட்டு இருக்கு அதுக்காக தான்” என்றாள் நிரஞ்சனா “கொரோனான்னா என்ன” என்று அவன் புரியாமல் கேட்க

“அது ஒரு தொற்றுவியாதி மதன் உயிருக்கே ஆபத்து” என்றாள் நிரஞ்சனா “எங்கள் உலகில் இது போன்ற எந்த வியாதியும் பரவியது இல்லையே என்ன விந்தை இது பூலோகத்தில் இல்லாத பிரச்சனையே இல்லை போல” என்று மன்மதன் புலம்பிக் கொண்டே வந்தான். 

 

இருவரும் காய்கறி சந்தைக்கு செல்ல அங்கிருந்து அனைவரும் முகமூடி அணிந்திருப்பதை ஆவென்று பார்த்தான் 

மன்மதன் நிரஞ்சனா காய்கறி பழங்கள் பால் மளிகை என்று ஒரு வாரத்துக்கு தேவையான அனைத்து பொருளையும் வாங்கி கொண்டு இருந்தாள் எங்கும் மக்கள் கூட்டம் அலைமோதிக் கொண்டு இருந்தது மக்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்க அலைமேதிக் கொண்டு இருந்தனர். 

 

‘இந்த மக்கள் எங்குமே தனியே செல்ல மாட்டார்களா எங்கு பார்த்தாலும் கூட்டம் புகை நாற்றம்’ என்று மனதில் புலம்பிக் கொண்டு இருந்தான் மன்மதன் அவன் கையில் நிரஞ்சனா ஒரு கட்டைப்பையை கொடுக்க அவனும் அதை வாங்கி கொண்டான். 

 

இருவரும் அங்கிருந்து கடற்கரை பக்கம் செல்ல மாலை சூரியன் விண்ணை விட்டு மறைய சூரியனின் கதிர்கள் தங்க நிறத்தில் மின்ன கடல் அலைகளை மணலில் அமர்ந்து பார்த்து ரசித்து கொண்டு இருந்தாள் நிரஞ்சனா மன்மதன் கட்டைப்பையை தூக்கி முடியாமல் தூக்கி வந்து அவள் பக்கத்தில் அமர்ந்தான் 

‘இந்த பெண் என்னை வேலைக்காரனாக்கி விட்டு இங்கு வந்து அழகாக வேடிக்கை பார்த்து கொண்டு இருக்கிறாளே’ என்று நினைத்தான். 

 

நிரஞ்சனா இருவருக்கும் ஐஸ்கிரீம் வாங்கி வந்தாள் “இந்தாங்க மதன் சாப்பிடுங்க” என்று கொடுக்க “என்ன இது” என்று அவன் ஐஸ்கீரிமை கையில் வைத்து கொண்டு சந்தேகமாக பார்த்து கொண்டே கேட்க “ஐஸ்கிரீம் தான் சாப்பிடுங்க நல்லா இருக்கும்” என்று கூற அவள் எப்படி சாப்பிடுவது என்று அவனுக்கு சொல்லி கொடுத்தாள் அவனும் சாப்பிட 

“மிகவும் சுவையாக இருக்கிறது பெண்ணே இத்தனை சுவையான உணவை எங்க உலகத்தில் நான் சாப்பிட்டதே இல்லை” என்று அவன் ஆச்சரியமாக பேச 

“நீங்க ரொம்ப வித்தியாசமா நடந்துக்குறிங்க மதன்” என்றாள் நிரஞ்சனா சாப்பிட்டு கொண்டே இருவரும் கொஞ்ச தூரம் நடந்து சென்றனர். 

 

அப்போது அங்கிருந்து படகு பின்னே ஒரு காதல் ஜோடி அமர்ந்திருக்க அவர்கள் இருவரும் துப்பட்டாவால் முகத்தை மூடிக் கொண்டு ஏதோ செய்து கொண்டு இருக்க அதை தூரத்தில் இருந்து பார்த்த மன்மதன் 

தன் முன்னே நிரஞ்சனாவின் கையை பிடிக்க “என்ன மதன்” என்று அவள் கேட்டாள் “பெண்ணே அவர்களுக்கும் தொற்றுவியாதியா முகத்தை முழுதாக மூடி இருக்கிறார்களே” என்று கேட்க. 

 

நிரஞ்சனா அங்கே நடந்து கொண்டிருந்த காட்சியை பார்த்தவளுக்கு முகம் சங்கடமாக மாறியது “அவங்க ரெண்டு பேரும் பேசிட்டு இருக்காங்க மதன்” என்று அவனிடம் சமாளிக்கும் விதமாக 

“என்ன பேசிட்டு இருக்காங்க” என்று அவன் புரியாமல் கேட்க “உண்மையாவே உங்களுக்கு ஒன்னுமே தெரியாதா மதன்” என்று அவள் சங்கடத்துடனே கேட்க “தெரியவில்லையே” என்றான் மன்மதன். 

 

“உங்களுக்கு கல்யாணம் ஆகிருச்சா” என்று அவள் கேட்க “இதற்க்கும் திருமணத்துக்கும் என்ன சம்பந்தம் எனக்கு இன்னும் திருமணமாகவில்லை” என்றான்

“இது கல்யாணத்துக்கு அப்பறம் நடக்குற விஷயம்” என்று நிரஞ்சனா கூற ஏதோ புரிவதை போல இருந்தது மன்மதனுக்கு கூர்ந்து கவனிக்க அந்த ஆடவனின் கைகள் அந்த பெண்ணின் இடையை தடவிக் கொண்டு இருக்க அப்போது தான் அவனுக்கே புரிந்தது அங்கு என்ன நடக்கிறது என்று அவன் முகமும் அஷ்ட கோணலாக மாற “மன்னித்து விடு பெண்ணே” என்று கூறினான். 

 

அதன் பின் இருவரும் வீடு வந்து சேரவே மாலை ஆகியது நிரஞ்சனா மீண்டும் குளித்து உடை மாற்றி இரவு உடைக்கு மாறி வர மன்மதன் சோபாவில் அமர்ந்திருப்பதை பார்த்தவள் “மதன் போய் குளிச்சிட்டு வந்துருங்க இல்லைன்னா கொரானா வந்துரும்” என்று அவனுக்கு பயம் வந்தது ‘இந்த பெண் வேறு என்னை பயமுறுத்தி கொண்டே இருக்கிறாள்’ என்று மனதில் நினைத்தவன் “என்னிடம் மாற்றுடை இல்லை பெண்ணே” என்றான் மன்மதன். 

 

“இருங்க வரேன்” என்று கூறிவிட்டு நிரஞ்சனா தன் தந்தையின் உடைகளில் ஒன்றை எடுத்து வந்து அவன் கையில் கொடுத்தாள் “இது என் அப்பாவோடது தான் போட்டுக்கங்க” என்றாள் 

“நன்றி பெண்ணே” என்று கூறிவிட்டு குளிக்க சென்றான் அவன் குளிக்க சென்ற பின் நிரஞ்சனா ஹாலில் டிவி பார்த்து கொண்டு இருக்க பக்கத்து குட்டி பையன் வருண் வீட்டின் உள்ளே வந்து விளையாடிக் கொண்டு இருந்தான் நிரஞ்சனா டிவி பார்ப்பதில் அவனை கவனிக்கவில்லை. 

 

வருண் நிரஞ்சனா அறையின் உள்ளே விளையாடி கொண்டு இருந்தவன் பக்கத்து அறையில் இருந்த குளியலறையில் மன்மதன் குளித்து கொண்டு இருக்க காரை எடுத்து கொண்டு “டூர் டூர்” என்று கத்திக் கொண்டே அந்த அறையின் உள்ளே சென்று விளையாடியவன் மன்மதன் குளியலறையில் தாழ்ப்பாள் போடாமல் குளித்து கொண்டு இருக்க அந்த கதவின் வெளியே காரை வைத்து விளையாடி கொண்டு இருக்க. 

 

நிரஞ்சனா அந்த அறையின் உள்ளே வந்தவள் “வருண் உன் மம்மி கூப்பிடுறாங்க கிளம்பு” என்று கூற அவனும் அங்கிருந்து வெளியே ஓடினான் நிரஞ்சனா அங்கே நிற்கவும் கதவை திறந்து கொண்டு மன்மதன் டவலுடன் வெளியே வரவும் சரியாக இருந்தது அவன் கார் மீது கால் வைக்க வழுக்கி நிரஞ்சனா மீதே விழுந்தான். 

 

நிரஞ்சனா தரையில் விழுந்து கிடக்க அவள் மீது மன்மதன் விழுந்து கிடந்தான் 

மன்மதன் உடல் முழுக்க ஈரமாக இருந்தது கண்கள் நிரஞ்சனாவை பார்த்தது அவளும் இவனை தான் பார்த்தது அவன் கண்கள் சற்று எல்லை மீறி அவளின் கழுத்துக்கு கீழே தன்னை அறியாமல் செல்ல அவனுக்கு இந்த முறை மின்சாரம் தாக்கவேயில்லை அவன் நெஞ்சில் மோதி இருந்த மென்மைகளின் அழுத்தத்தில் தன்னை தொலைத்தவன் மெய் மறந்து இருக்க அவனுக்கு சுத்தமாக மின்சாரம் தாக்கவேயில்லை அவன் படு குஷியாகி விட “மதன் பிளீஸ் எழுத்துருங்க மூச்சு விட முடியலை” என்று அவள் மூச்சுக்கு திணறி கொண்டே கூற அப்போது தான் சுயநினைவுக்கு வந்து எழுந்தான் மன்மதன் “மன்னித்து விடு பெண்ணே எதன் மீதோ காலை வைத்தேன் வழுக்கி விட்டது” என்று கூற “பரவாயில்லை இருக்கட்டும்” என்றாள் நிரஞ்சனா. 

 

அதன் பின் நிரஞ்சனா வெளியே சென்று விட அவனின் யோசனை மொத்தமும் கழுத்தில் இருந்த மாலை மீது தான் இருந்தது கண்ணாடி முன்னே சென்று மாலையை குனிந்து பார்த்தவன் தன் உடலை துடைத்து கொண்டு உடை மாற்றி வெளியே வந்தான் நிரஞ்சனா கிச்சனில் சமைத்து கொண்டு இருக்க கபோர்டில் எதையோ எடுக்க கையை தூக்க அவளின் டிஷர்ட்டின் இடையில் தெரிந்த வெண்ணிற இடையை பார்க்க மின்சாரம் தாக்கியது. 

 

‘என்ன டா இது’ என்று மன்மதன் நினைத்தவன் திரையில் ஓடிய ஏதோ ஒரு முத்தக் காட்சியை ஆவென்று பார்க்க மீண்டும் மின்சாரம் தாக்கியது “ஆஆ” என்று கத்தியவன் யோசனையுடனே நடந்து செல்ல வெளியே நல்ல மழை வெளுத்து வாங்கி கொண்டு இருந்தது அதை பார்த்தவன் சற்று நேரம் சென்று வேடிக்கை பார்த்து கொண்டிருந்தான் ஓரமாக நின்றிருந்தவன் மீது மழைச்சாரல் உடல் நனைந்தது மீண்டும் உள்ளே வந்து அதே முத்தக் காட்சியை பார்க்க இப்போது மின்சாரம் பாயவில்லை அப்போது தான் அவனுக்கு ஒன்று புரிந்தது உடலில் ஈரம் இருக்கும் போது அவனுக்கு மின்சாரம் தாக்கவில்லை உடல் ஈரம் குறைந்தால் மின்சாரம் தாக்கியது ஒரு வழியாக அரிய கண்டுபிடிப்பை மன்மதன் கண்டுபிடித்தான். 

 

 

 

 

 

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *