மன்மத லீலை 10

அத்தியாயம் 10

 

அன்றொரு நாள் நிரஞ்சனா மருத்துவமனை பரிசோதனைக்காக வெளியே வந்தாள் அவளின் ஐந்து மாத மேடிட்ட வயிறு லேசாக வெளியே தெரிய ஆரம்பித்து இருந்தது அதனால் அவள் இப்போது எல்லாம் காட்டன் புடவை கட்ட ஆரம்பித்து இருந்தாள் வரிசையில் இருக்கையில் அமர்ந்து மருத்துவருக்காக காத்திருக்க ஒரு வயதான பெண்மணி அவரின் மகளுடன் வந்து அவள் பக்கத்தில் அமர்ந்தார் நிரஞ்சனாவை பார்த்து புன்னகைக்க அவளும் பதிலுக்கு புன்னகைத்தாள் “எத்தனை மாசம் மா” என்று கேட்க “அஞ்சு மாசம் ஆன்ட்டி” என்றாள். 

 

“எங்க உன் கூட யாரும் வரலையா தனியாவா வந்த” என்று கேட்க “ஆமாம் ஆன்ட்டி” என்றாள் பதிலுக்கு அந்த பெண்மணி நிரஞ்சனாவின் கழுத்தை பார்த்தார் அவள் சிறிய செயின் மட்டுமே அணிந்து இருந்தாள் காலை பார்க்க அதில் மெட்டி இல்லை “உனக்கு இன்னும் கல்யாணம் ஆகலையா” என்று கேட்க அவளோ பதிலுக்கு அவரை சங்கடத்துடனே பார்த்தவள் “இல்லை” என்று கூற அந்த பெண்மணி அவளை ஒரு வேண்டாத புழுவை பார்ப்பதை போல பார்த்துவிட்டு அந்த இருக்கையில் இருந்து எழுந்து தன் மகளை அழைத்து கொண்டு வேறு ஒரு இருக்கையில் சென்று அமர்ந்து கொண்டார். 

 

நிரஞ்சனாவின் கண்கள் அவமானத்தில் கலங்கியது அவள் அவரை பார்க்க அவரோ முகத்தை திருப்பி கொண்டார் மீண்டும் செக்கப் முடிந்து அவள் வீட்டுக்கு வந்து சேர தலை சுற்றுவதை போல இருந்தது சென்று சோபாவில் அமர்ந்தவள் அப்படியே மயங்கிவிட்டாள்.

 

மன்மதன் அவளை பார்த்தவன் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்தவன் மிகவும் பதட்டமடைய ஆரம்பித்தான் தன் சக்தியை உபயோகித்து வானில் இருந்து மழை வரவழைக்க ஜன்னல் பக்கத்தில் இருந்து மழை துளிகள் அவள் முகத்தில் பட்டு எழுந்து கொள்ள இதற்க்கு மேல் முடியாது என் மனைவியையும் குழந்தையையும் பாதுகாப்பது என் கடமை என்று மனதில் கூறிக்கொண்ட மன்மதன்

நிரஞ்சனா படும் வேதனை தாங்க முடியாமல் வேக வேகமாக மகாமுனிவரை பார்க்க சென்றான். 

 

மகாமுனிவரோ கடும் தவத்தில் இருக்க “இதற்க்கு வேறு மாற்று வழியே இல்லையா” என்று வாய்விட்டே கதற 

நாரதன் அவன் முன் தோன்றினார் “மன்மதா உன் பிரச்சனையை நான் தீர்த்து வைக்கிறேன்” என்று கூற அவனோ அங்கிருந்து கோபத்துடனே செல்ல அவன் கையை பிடித்தார் நாரதர். 

 

“என்னிடம் சொல்” என்று கூற அவனும் நடந்த அனைத்தையும் கூற “இதற்க்கு என்னிடம் ஒரு வழி இருக்கிறது” என்றார் அவர் “என்ன வழி” என்று அவன் கேட்க

“நீ மன்மதனாக அல்லாமல் புதிதாக ஒரு மனித அவதாரம் எடுத்து உன் மனைவியை காண செல் அவளை கவனித்து கொள் நீ உண்மையை மட்டும் தானே சொல்லக் கூடாது அவளை கவனித்து கொள்ளலாம் அல்லவா” என்று கூற “இது எப்படி சாத்தியம் நாரதா மகாமுனிவருக்கு தெரிந்தால் இன்னும் ஏழு எட்டு சாபத்தை என் மனைவி பிள்ளைகளுக்கும் சேர்த்து பார்சல் செய்து விடுவார்” என்றான் மன்மதன். 

 

“பரவாயில்லையே நன்றாக மானுடர்களின் மொழியில் பேசுகிறாயே மன்மதா” என்று கூற “ஒன்றரை மாதங்கள் அங்கே சுற்றி திரிந்து இருக்கிறேன் இது கூட பேசவில்லை என்றால் எப்படி தேவையில்லாது பேசாமல் நீங்கள் வழியை கூறுங்கள்” என்று கூற “வேறு வழியேயில்லை வேறு அவதாரத்தில் உன் மனைவியை சென்று பார்த்துக் கொள் இதற்க்கு இது தான் வழி” என்று கூறிவிட்டு நாரதர் சென்று விட மன்மதன் பலத்த யோசனைக்கு பிறகு ஒரு அவதாரம் எடுத்தான். 

 

மாணிக்கம் என்ற அவதாரத்தில் மனித உருவில் அவன் முன்பு இருந்ததை போல் அவன் மனைவி முன்னே சென்றான் அவளுக்கு தான் இவனை அடையாளம் தெரியாதே அதனால் அதே உருவத்தில் சென்றான் அவன் நள்ளிரவு வேளையில் பேருந்துக்காக காத்திருக்க இவன் ஒரு ஆட்டோக்காரனை போல அவள் முன் வர அவளும் ஆட்டோவுக்கு கையை காட்டிவிட்டு ஏறிக் கொண்டாள். 

 

அவள் எதுவும் சொல்லாமாலேயே அவள் வீடு வந்து இறக்கி விட்டவன் அவளின் உடமைகளை தூக்கி வந்து வீடு வரை விட்டுச் சென்றான் அவளும் நன்றி சொல்லிவிட்டு உள்ளே செல்ல போக பணம் கொடுக்கவேயில்லையே என்று நினைத்தவள் வெளியே அதற்க்குள் அவன் சென்றுவிட்டான். 

 

மறுநாள் வீட்டு வேலைக்கு நிரஞ்சனா ஆட்கள் கேட்டிருக்க ஒவ்வொருவராக வந்தனர் அந்த வரிசையில் மாணிக்கம் அதாவது மன்மதனும் வந்தான் இறுதியாக  

“நான் பொண்ணுங்களை மட்டும் தான் வேலைக்கு கேட்டு இருந்தேன்” என்றாள் பெண்ணவள் “தெரியும் மேடம் நான் மாசமா இருக்கவங்களையும் குழந்தையையும் நல்லா பார்த்துப்பேன் என் அக்கா கூட மாசமா இருந்தப்போ நான் தான் பார்த்துக்கிட்டேன்” என்றான். 

 

“இல்லை பரவாயில்லைங்க வேண்டாம்” என்றாள் நிரஞ்சனா இருப்பினும் அவனை எங்கேயோ பார்த்ததை போல தோன்ற “நீங்க நேத்து வந்த அந்த ஆட்டோ டிரைவர் தான” என்று கேட்க “ஆமாம் மேடம் நான் கார் கூட ஓட்டுவேன்” என்றான் “ஏன் நேத்து காசு வாங்கல இப்போ வாங்கிக்கங்க” என்று கேட்க “நான் மாசமா இருக்க பொண்ணுங்க கிட்ட காசு வாங்க மாட்டேன் மேடம்” என்றான் அவன் நல்ல மனது அவளுக்கு பிடித்து விட “நீங்க இப்போ ஆட்டோ ஓட்டலையா” என்று அவள் கேட்க 

“இல்லை மேடம் அதனால தான் இந்த வேலையை கேட்க வந்தேன் இப்போ இந்த வேலையும் இல்லைன்னா ஊர்ல இருக்க என் அம்மாவை எப்படி பார்த்துப்பேன் னு தெரியலை மேடம்” என்றான் வாடிய முகத்துடன். 

 

நிரஞ்சனாவுக்கு அவனை பார்கக் பாவமாக இருக்க “சரி வீட்ல சமைக்கனும் வீடு கிளின் பண்ணனும் டிரஸ் வாஷ் பண்ணனும் பாத்திரம் கழுவனும் எல்லாமே நீங்க தான் பண்ணனும் டாக்டர் என்னை எந்த வேலையும் செய்யக்கூடாதுன்னு சொல்லியிருக்காங்க நீங்க பண்ணுவிங்களா” என்று கேட்க “கண்டிப்பா மேடம் எல்லாமே பண்ணுவேன்” என்றான் மன்மதன். 

 

“ஓகே அப்போ நாளையிலருந்து வேலைக்கு வந்துருங்க” என்று கூற “தேங்க்ஸ் மேடம்” என்று கூறிவிட்டு சென்றான் மன்மதன்

ஏனோ நிரஞ்சனாவுக்கு அவனை எங்கோ பார்த்த்தை போல பல நாள் பழகியதை போல தோன்றியது ஆனால் அவனிடம் அதைப்பற்றி அவள் கேட்க்கவில்லை அவனை பார்க்கும் போது மட்டும் ஒரு இனம் புரியாத உணர்வு அவளை ஆட் கொண்டது எல்லாம் நாரதனின் வேலை தான் அவளுக்கு கொஞ்சம் கொஞ்சமாக நினைவுகளை வரவழைத்து கொண்டு இருந்தான் இது மன்மதனுக்கு தெரியாது.

 

மறுநாள் அவன் வேலைக்கு வர “வாங்க மாணிக்கம்” என்றாள் நிரஞ்சனா அவனும் தலையசைத்துவிட்டு வர “வீடு மாப் போடனும்” என்று கூற அவனும் “சரிங்க மேடம்” என்று கூறிவிட்டு வேலையை பார்க்க ஆரம்பித்தான் நிரஞ்சனா காபி போட்டு கொண்டு இருந்தாள் மன்மதன் ஹாலில் மாப் போட்டு கொண்டு இருந்தான் நிரஞ்சனா அவனை பார்த்து கொண்டே காபி எடுத்து வர வழியில் தண்ணீர் இருக்க அதை பார்க்காமல் வந்தவள் கால் தடுக்கி விழ போக ஓடி வந்த மன்மதன் “நிரஞ்சனா என் அன்பே” என்று கத்திக் கொண்டே அவளின் இடையை வளைத்து தன்னோடு சேர்த்தணைத்து பிடித்து கொண்டான். 

 

நிரஞ்சனாவுக்கு அவன் தொடுகை புதிதாக இருப்பதை போல தோன்றவில்லை ஏதோ பல நாள் பழகியவனை போல தோன்ற அவனை பார்த்து கொண்டே நிற்க “பார்த்து வாங்க மேடம்” என்று கூறிவிட்டு தன் வேலையை பார்க்க ஆரம்பித்தான். 

 

நிரஞ்சனா மெல்ல மேடிட்ட வயிற்றுடன் சோபாவில் சென்று அமர்ந்தவள் மன்மதனையே பார்த்து கொண்டிருந்தாள் அவனை எங்கோ பார்த்ததை போல அவளுக்கு மீண்டும் மீண்டும் தோன்ற “நாம இதுக்கு முன்னாடி எங்கேயாவது மீட் பண்ணிருக்கோமா மாணிக்கம்” என்று கேட்க மன்மதன் திருதிருவென விழிக்க “இல்லையே மேடம் ஏன் கேட்க்குறிங்க” என்று கேட்க. 

 

“இல்லை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கு” என்றாள் சோர்வுடனே வயிற்றில் கை வைத்து கொண்டு இப்போது அவளுக்கு எட்டாம் மாதம் தொடங்கி இருந்தது காலும் வீங்கி வேறு இருந்தது அவளின் கால் வீக்கத்தை பார்த்த மன்மதன் மனம் வலிக்க ஒரு பக்கெட்டில் சுடுநீர் எடுத்து வந்து “மேடம் காலை இதுல வச்சிக்கங்க” என்றான் வெதுவெதுப்பான தண்ணீர் அவளின் காலுக்கு இதமாக இருக்க “தேங்க்ஸ்” என்றாள் பெண்ணவள். 

 

நாரதன் அனைத்தையும் மேலிருந்து பார்த்து சிரித்து கொண்டு இருந்தான் “இனி தான் கதையே இருக்கிறது மன்மதா” என்று மன்மதன் பெண்ணவளை ஒரு வேலை கூட செய்ய விடாமல் அவனே அனைத்தையும் கவனித்து கொண்டான் காலை சமைத்து மாத்திரை மருந்துகளை வேலைக்கு கொடுத்து என்று தாய் இல்லா குறையை தீர்த்து வைத்தான். 

 

எட்டு மாத பானை வயிற்றை வைத்து கொண்டு நிரஞ்சனா தான் ஒழுங்காக படுக்க முடியாது நடக்க முடியாது சிரமப்பட்டாள் அன்று அவளுக்கு செக்கப் இருக்க மன்மதனே அவளை லிப்ட்டில் கீழே அழைத்து சென்றான்.

 

அவனை பார்த்த அந்த குடியிருப்பில் வசிக்கும் குழந்தைகள் “அங்கிள்” என்று ஓடி வர மன்மதனுக்கு பயம் வந்தது நிரஞ்சனா தான் யாரென்று கேட்டு விடுவாளோ என்று “நான் அப்புறம் வரேன் பசங்களா” என்று கூறிவிட்டு அவளை காரில் அழைத்து சென்று கதவை மூடி டிரைவர் சீட்டில் வந்து அமர்ந்தான் அப்போது தான் அவனுக்கு சீராக மூச்சு வந்தது. 

 

“ஆமா நீங்க வந்து ஒரு வாரம் தான ஆகுது மாணிக்கம் உங்களை எப்படி இந்த பசங்களுக்கு தெரியும்” என்று அவள் கேட்க 

“ஒரு நாள் கீழே வந்து விளையாடினேன் மேடம் அதனால தெரிஞ்சு இருக்கும்” என்று சமாளித்தான் இருவரும் மருத்துவமனை செல்ல அங்கிருந்த கணவன் மனைவியை பார்த்தவளின் பெண்ணவளின் முகம் வாடியது அதை மன்மதனும் கவனிக்க தவறவில்லை அவன் கை அவளை அணைத்து கொள்ள துடித்தாளும் அமைதியாக இருந்தான் நமக்கான நாள் வரும் என்று தனக்கு தானே சொல்லிக் கொண்டான். 

 

மருத்தவர் அவளை பரிசோதித்து குழந்தை ஆரோக்கியமாக இருப்பதாக கூற மகிழ்வுடன் வெளியே வந்தாள் நிரஞ்சனா 

மன்மதனும் நிரஞ்சனாவும் பேசிக் கொண்டே வர அவர்கள் எதிரே அனு வந்தாள் அவளை பார்த்த மன்மதன் “நிரஞ்சனா மேடம் நீங்க போங்க நான் கார் எடுத்துட்டு வரேன்” என்று கூறிவிட்டு அங்கிருந்து ஓடியேவிட்டான். 

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *