தைத்தியனின் தேவதை 8,9,10

அத்தியாயம் 8

மறுநாள் பனிமூடிய காலை பொழுது…

அவந்திகா மெல்லக் கண்களைத் திறந்தாள் சில நொடிகள் அவள் எங்கே இருக்கிறாள் என்பதே அவளுக்கே புரியவில்லை பதறியடித்துக் கொண்டு எழுந்தவள் சுற்றும் முற்றும் பார்த்தாள் அது அவளுடைய அறைதான் அவளுடைய வீடே தான் தன் மேனியைப் பார்த்தவளுக்கு, நேற்று அணிந்திருந்த அதே நைட் டிரஸ்சுடன்தான் தான் இருப்பது தெரிந்தது மெல்ல எழுந்து கொள்ள முயன்றாள் ஆனால் உடல் முழுவதும் அடித்து போட்டதை போல வலித்தது.

அந்த வலி அவளுக்கு நேற்றிரவு நடந்ததை நினைவுபடுத்தியது நேற்று இரவு அவனுடன் தான் இருந்த அனைத்து நிகழ்வுகளும் நினைவுக்கு வந்து அவள் உடலை கூச செய்தது அந்த நினைப்பே அவளின் இதயத்தை வேகமாக துடிக்க வைத்தது அவளின் இதய துடிப்பின் வெளியே வரை கேட்பதை போல ஒரு பிரம்மை எதை பற்றியும் யோசிக்காமல் தட்டுத் தடுமாறி குளியலறைக்குள் சென்றாள்.

ஆடைகள் ஏதுமின்றி தண்ணீரில் நின்றவளின் பார்வை தன்னுடைய இடையில் இருந்த இடுப்பு சங்கிலியின் மீது விழுந்தது நேற்று…அவன்தான் அதை அவளுடைய இடையில் அணிவித்திருந்தான்.

அந்த நினைவு வந்ததும் அவளுக்குள் கோபம் பொங்கியது எப்படியாவது அதை கழற்றி எறிந்துவிட வேண்டும் என்று நினைத்தவள் அதன் கொக்கியைத் தேடினாள் ஆனால்…அந்த இடுப்பு சங்கிலியில் கொக்கியே இல்லை.

“எப்படி இதைக் கழட்டுறது?” என்று தடுமாறியவள், சரி பிய்த்து எறிந்துவிடலாம் என்று முடிவு செய்தாள் சங்கிலியைப் பிடித்து பலமாக இழுத்தாள் ஆனால் அது அவளுடைய கையிலிருந்து அவிழவே இல்லை மீண்டும் முயன்றாள் இன்னும் பலமாக இழுத்தாள் ஒரு கட்டத்தில் அவளுடைய கையே வலிக்க ஆரம்பித்தது.

அப்போது அவளுடைய காதுக்கு மிக அருகில் ஒரு குரல் கேட்டது “நீ என்ன பண்ணினாலும்… அதை கழட்டவே முடியாது டி” என்ற அகோரனின் குரல் அவந்திகா அதிர்ந்தேவிட்டாள் சட்டெனத் திரும்பிப் பார்த்தாள் அங்கே யாருமே இல்லை.

அவளுக்கு கோபம் வந்தது அவசர அவசரமாகக் குளித்து முடித்தவள், பூந்துவாலையைச் சுற்றிக் கொண்டு அறைக்குள் வந்தாள்.

கபோர்டைத் திறந்து ஒரு வெள்ளை நிற சுடிதாரை எடுக்க அவள் கையை நீட்டிய அடுத்த நொடி அவளுடைய கை தட்டிவிடப்பட்டது அதிர்ந்து பின்னால் திரும்பியவள் சுற்றிலும் பார்த்தாள்.

அங்கே யாருடைய உருவமும் தெரியவில்லை ஆனால்…அவளுக்கு நிச்சயமாகத் தெரியும் அவன் அங்கேதான் இருக்கிறான் என்று அவனுக்கே சொந்தமான அந்த வாசனை அறை முழுவதும் வீசியது அவள் கோபமாக சுற்றும் முற்றும் பார்த்தபடி “யாருடா நீ” என்று கத்தினாள்.

“நான் என்ன டிரஸ் போடனும்ங்கிறதைக் கூட நீ தான் முடிவு பண்ணுவியா”அவள் குரலில் கோபம் மட்டுமல்ல வேதனையும் இருந்தது “நீ மனுஷனா மட்டும் இருந்த… உன்னை கொன்னுருப்பேன் டா” என்றவள் சில நொடிகள் அமைதியாக இருந்தவள், அடுத்த கணம் உடைந்து போனாள்.

“பாவி… எதுக்குடா என்னை தினம் தினம் சித்ரவதை பண்ற” என்று அவள் கேட்ட அந்த கேள்வியோடு அவளுடைய கண்கள் கலங்கின அவள் எவ்வளவுதான் தன்னுடைய கோபத்தை மறைக்க முயன்றாலும் அந்தக் கோபத்தின் பின்னால் இருந்த வலி அவளால் மறைக்க முடியவில்லை கண்ணீர் கன்னங்களில் வழிந்தது ஆம் அவளுடைய கோபம் அனைத்தும் அழுகையாக மாறிவிட்டது.

அவளைப் பார்த்துக் கொண்டிருந்த அகோரனின் மனதிற்குள் ஏதோ ஒன்று வலித்தது அவள் மீது அவனுக்கே இரக்கம் சுரந்தது அதோடு சேர்ந்து குற்ற உணர்வும் அவனை துளைத்து எடுத்தது அவள் இப்படி அழுவதற்கு காரணமே தான் தான் என்பதை அவன் அறிந்திருந்தான்.

ஆனால் அவளுடைய கண்ணீரைத் துடைக்கக் கூட அவனால் முடியவில்லை அவந்திகா அழுதுகொண்டே அங்கிருந்த வெள்ளை நிற சட்டையையும், நீல நிற ஜீன்ஸையும் எடுத்துக் கொண்டாள் அதை அணிந்து முடித்தவள், கண்ணாடி முன் நின்றாள் அழுது வீங்கியிருந்த தன் முகத்தைப் பார்த்தவளுக்கு, பெற்றோரின் பார்வை நினைவுக்கு வந்தது.

‘என் முகத்தைப் பார்த்தா அம்மாவும் அப்பாவும் கண்டிப்பா ஏதாவது கேட்பாங்க…’ என்று நினைத்தவள் உடனே முகத்தைக் கழுவினாள் முடிந்த அளவுக்கு தன்னுடைய வாடிய முகத்தை மறைத்துக் கொண்டு அறையை விட்டு வெளியே வந்தாள்.

டைனிங் டேபிளில் வந்து அமைதியாக அமர்ந்து சாப்பிட ஆரம்பித்தாள் அவளை சுற்றி இருந்த அனைவருக்கும் அது ஆச்சரியமாக இருந்தது எப்போதும் வாயாடியாகவும், குறும்பு செய்துகொண்டும் சுற்றிக் கொண்டிருக்கும் தங்கள் மகள் இன்று இவ்வளவு அமைதியாக இருக்கிறாளே யாருக்கும் ஒன்றும் புரியவில்லை.

அவந்திகா மட்டும் எதையும் கண்டுகொள்ளாமல் அமைதியாக சாப்பிட்டு முடித்தாள் சாப்பிட்டு முடித்ததும் அதே அமைதியுடன் வெளியே வந்தாள் அவளுடைய தந்தை ரங்கநாதன், அவளுக்காக காருடன் காத்துக் கொண்டிருந்தார் எதுவும் பேசாமல் காரில் ஏறி அமர்ந்தாள்.

அவளுடைய தங்கை ஆர்த்தி கூட அவளை வித்தியாசமாகப் பார்த்துக் கொண்டிருந்தாள் ‘இவள் உண்மையிலேயே என் அக்காதானா’ என்று தோன்றும் அளவுக்கு அவளுடைய அமைதி ஆர்த்திக்கு புதிதாக இருந்தது‌ கல்லூரி வாசலில் கார் நின்றது.

அவந்திகா அமைதியாக இறங்கி நடந்து சென்றாள் ரங்கநாதன் காரை எடுக்காமல் தன் மகளையே பார்த்துக் கொண்டிருந்தார் அவருடைய மனதிலும் சந்தேகம் எழுந்தது “ஆர்த்தி மா…” என்று அவரின் இளைய மகளை அழைக்க “ம்ம் பா” என்று அவள் கேட்க “உன் அக்காவுக்கு என்னாச்சு” என்று கேட்க ஆர்த்தி சில நொடிகள் அவந்திகா சென்ற திசையை பார்த்து கொண்டிருந்தாள் “எனக்குத் தெரியாது பா…” என்றாள் மெதுவாக.

ரங்கநாதன் இன்னும் சில நொடிகள் மகளையே பார்த்து கொண்டிருந்துவிட்டு, காரை அங்கிருந்து ஓட்டிச் சென்றார் அவந்திகா மட்டும் கல்லூரி வளாகத்திற்குள் நடந்து சென்றாள் அவள் சுற்றும் முற்றும் பார்த்தாள் அங்கிருந்த மாணவர்கள் அனைவரும் மகிழ்ச்சியாக இருந்தனர் சிலர் நண்பர்களுடன் சிரித்துக் கொண்டிருந்தனர் சிலர் ஒருவரை ஒருவர் துரத்திக் கொண்டு ஓடிக் கொண்டிருந்தனர் சிலர் தங்களுடைய கல்லூரி வாழ்க்கையை ரசித்துக் கொண்டிருந்தனர்.

அவர்களைப் பார்த்துக் கொண்டிருந்த அவளுடைய கண்கள் மீண்டும் கலங்கின ‘எனக்கு மட்டும் ஏன் இந்த இழிநிலை’ என்று அவளுடைய மனம் கேட்டது.

சில நாட்களுக்கு முன்பு அவளும் இப்படித்தானே இருந்தாள்? நண்பர்களுடன் சிரித்து குறும்பு செய்து எதைப் பற்றியும் கவலைப்படாமல் தன்னுடைய கல்லூரி வாழ்க்கையை ரசித்து வாழ்ந்து கொண்டிருந்தாள்.

ஆனால் இப்போது அவளுடைய வாழ்க்கையே அவளுக்கு சொந்தமில்லாதது போல மாறிவிட்டது அவள் மெதுவாகத் தன் கண்களில் வழிந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டு முன்னே நடந்தாள் அவளுக்கு பின்னால் அவளுக்குத் தெரியாமல்,அகோரனின் பார்வையும் அவளைத் தொடர்ந்து கொண்டிருந்தது.

மெல்ல நடந்து வந்து வகுப்பறைக்குள் நுழைந்த அவந்திகா யாரையும் நிமிர்ந்து பார்க்காமல் கடைசி இருக்கையில் சென்று அமைதியாக அமர்ந்தாள் எப்போதும் நண்பர்களுடன் சிரித்துப் பேசிக் கொண்டிருக்கும் அவள், இன்று தனியாக அமர்ந்திருப்பதை பார்த்த அவளின் தோழிகள் கூட அவளை வித்தியாசமாக பார்த்தனர்

ஆனால் அவந்திகா எதையும் கண்டுகொள்ளவில்லை அவளுடைய மனம் முழுவதும் வேறு எங்கோ இருந்தது பேராசிரியர் வகுப்பில் பாடம் நடத்திக் கொண்டிருந்தார் அவந்திகா மட்டும் புத்தகத்தைத் திறந்து வைத்துக் கொண்டு வெறுமனே அதையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

அப்போது அவளின் அருகில் இருந்த இருக்கை மெதுவாக அசைந்தது அவந்திகா சட்டெனத் திரும்பிப் பார்த்தாள் அங்கே அகோரன் அவளுக்கு மிக அருகில் அமர்ந்திருந்தான் அவனுடைய முகத்தில் வழக்கமாக இருக்கும் அதே அலட்சிய புன்னகை இருந்தது அவளை பார்த்தபடியே அமைதியாக அமர்ந்திருந்தான்.

அவந்திகாவின் இதயம் படபடவென்று அடித்துக் கொண்டது “நீ…?” என்று அவள் அவள் மெதுவாக கேட்க அவன் எதுவும் பேசவில்லை அவளை பார்த்துக் கொண்டே இருந்தான் அவந்திகா உடனே தன் பார்வையை‌ புத்தகத்தின் மீது திருப்பிக் கொண்டாள்.

“இல்ல… அவன் இங்கே எப்படி வர முடியும்” என்று தனக்குத்தானே சொல்லிக் கொண்டாள் மீண்டும் மெதுவாக அவன் பக்கம் பார்த்தாள் அவன் அங்கேயே தான் இருந்தான் இன்னும் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.

அவளுடைய மூச்சுக்காற்றின் வேகம் அதிகரித்தது “போய்டு இங்க இருந்து” என்று மெதுவாக சொன்னாள் ஆனால் அவன் அசையவேயில்லை “போய்டுன்னு சொல்றேன்ல…” இந்த முறை அவளுடைய குரல் சற்று உயர்ந்தது அருகில் அமர்ந்திருந்த மாணவி அவளை திரும்பிப் பார்த்தாள்.

அவந்திகா அதை கவனிக்கவே இல்லை அவளுடைய பார்வை முழுவதும் அகோரனின் மீதுதான் இருந்தது அவன் மெதுவாக அவளை நோக்கி சாய்ந்தான் அவளுடைய உடல் முழுவதும் நடுங்கியது “எதுக்குடா என்னை விடாம தொல்லை பண்ற” என்று அவள் திடீரென கத்தினாள் அவள் குரலில் வகுப்பறை முழுவதும் அமைதியாகிவிட்டது.

மாணவர்கள் அனைவரும் அவளை தான் பார்த்தனர் ஆனால் அவந்திகா இன்னும் அகோரனையே பார்த்துக் கொண்டிருந்தாள் “எதுக்குடா தினம் தினம் என்னை டார்ச்சர் பண்ற” என்றவளின் கண்களில் கண்ணீர் திரண்டது “என்னை நிம்மதியாவே இருக்க விட மாட்டியா” என்று கத்திக்கொண்டே அவன் இருந்த இடத்தை நோக்கி அவள் கையை நீட்டினாள் அவனை அடிப்பதற்க்காக ஆனால் அவன் அங்கே இல்லை சொல்லப்போனால் அங்கே யாருமே இல்லை‌ ஒரு நாற்காலி மட்டுமே இருந்தது.

அவந்திகா அதிர்ச்சியில் உறைந்து போனாள் அவளுடைய பார்வை அந்த நாற்காலியிலிருந்து சுற்றிலும் இருந்த மாணவர்களிடம் சென்றது‌ அனைவரும் அவளையே வித்தியாசமாக பார்த்துக் கொண்டிருந்தனர்.

ஒருத்தி இன்னொருத்தியின் காதில் ஏதோ கிசுகிசுத்தாள் “என்னாச்சு இவளுக்கு” என்று “யார்கிட்ட பேசுறா” என்று‌ கேட்க “அங்க தான் யாருமே இல்லையே…”என்றாள் அவளின் தோழி அனைவரும் அவளையே பார்த்து முனுமுனுக்க ஆரம்பித்தனர்.

அவந்திகாவின் இதயம் இன்னும் வேகமாகத் துடித்தது “இல்ல… அவன் இங்கதான் இருந்தான்…”‌ என்று அவள் தன்னைத்தானே சமாதானப்படுத்திக் கொள்ள முயன்றாள் “இங்கதான் இருந்தான்…” அவள் நடுங்கிய குரலில் சொன்னாள்.

அப்போது மேசையைத் தட்டியடி‌ அவளின் பேராசிரியர் எழுந்தார் “அவந்திகா” என்று கத்த அவள் அதிர்ந்து அவரை பார்த்தாள் “என்ன ஆச்சு உனக்கு” என்று கேட்க அவந்திகா வாயைத் திறந்து ஏதோ சொல்ல முயன்றாள “மேம்… அவன்…” என்று கையை நீட்டி காட்ட “யாரு அவன்?” என்று கடுமையாகக் கேட்டார்.

அவந்திகா பதில் சொல்ல முடியாமல் திணறினாள் அவள் திரும்பிப் பார்த்தாள் அந்த நாற்காலி வெறுமையாக தான் இருந்தது அவளுடைய கண்களில் கண்ணீர் வழிந்தது “அவன்… இங்க தான் இருந்தான் மேம்…” என்று மெதுவாகக் கூறினாள்.

வகுப்பறையில் மீண்டும் சிலர் சிரிக்க ஆரம்பித்தனர் அதைப் பார்த்த பேராசிரியர் கோபமடைந்தார் “போதும் அவந்திகா” என்றவர் “எதுக்காக இப்படி கத்துன” என்று கேட்க அவந்திகா தலைகுனிந்து நின்றாள்.

“உனக்கு என்ன பிரச்சனைன்னு எனக்கு தெரியாது ஆனா இப்படி கிளாஸ்சை டிஸ்டர்ப் பண்ணா என்னால சும்மா இருக்க முடியாது வெளியே போ” என்றார் அவந்திகா அதிர்ச்சியுடன் அவரைப் பார்த்தாள் “மேம்…” என்று அழைக்க “வெளிய போ அவந்திகா” என்றார் மீண்டும் அந்த வார்த்தை அழுத்தமாக வந்தது அவள் எதுவும் பேசவில்லை கண்ணீரைத் துடைத்துக் கொண்டு தன் புத்தகத்தையும் பையையும் எடுத்தாள் வகுப்பறையில் இருந்த ஒவ்வொருவரின் பார்வையும் அவள் மீது விழுந்தது அவளால் அந்தப் பார்வைகளைத் தாங்க முடியவில்லை தலைகுனிந்தபடியே கதவைத் திறந்து வெளியே வந்தாள் வெளியே வந்ததும் அவளால் தன்னைக் கட்டுப்படுத்த முடியவில்லை.

கண்ணீர் கட்டுக்கடங்காமல் வழிந்தது அவள் தன் வாயைப் பொத்திக் கொண்டு ஓட ஆரம்பித்தாள் யாரும் தன்னைப் பார்க்கக்கூடாது யாரும் தன்னிடம் எதுவும் கேட்கக்கூடாது என்ற ஒரே எண்ணத்துடன் கல்லூரி வழித்தடத்தில் ஓடிக் கொண்டே இருந்தாள் அவளுடைய கண்களில் கண்ணீர் மனதில் பயம் அதையெல்லாம் விட பெரியதாக ஒரு கேள்வி “அவன் உண்மையிலேயே என்னைத் தொடர்ந்து வருகிறானா… இல்லையா” அவந்திகாவுக்கே அதற்கான பதில் தெரியவில்லை.

ஆனால் அவளுக்குப் பின்னால், அந்த வெறிச்சோடிய வழித்தடத்தில் அவளுடைய நிழலோடு சேர்ந்து இன்னொரு நிழல் மட்டும் மெதுவாக நகர்ந்தது அதை பார்த்தவள் பித்து பிடித்தவளை போல ஓடிச்சென்று ஒரு மரத்தின் பின்னே ஒளிந்து கொண்டு அழ ஆரம்பித்தாள்.

‘இது அவன் தானா இல்லை என்னோட பிரம்மையா’ என்று நி

னைத்தவள் கண்ணீருடனே அமர்ந்திருந்தாள்.

அத்தியாயம் 9

 

அன்றைய நாள் முழுவதும் அவந்திகா வகுப்புக்கே செல்லவில்லை

கல்லூரிக்கு அருகில் இருந்த ஒரு சிறிய பூங்காவிலேயே அமைதியாக அமர்ந்திருந்தாள் அங்கே ஆட்கள் நடமாட்டம் இருந்ததால், குறைந்தபட்சம் பகல் நேரத்திலாவது அவளுக்குள் இருந்த பயம் சற்று குறைந்திருந்தது யாராவது தன்னைத் தேடி வருவார்களோ என்ற அச்சத்துடன் சுற்றும் முற்றும் பார்த்துக்கொண்டே அந்த நாளை கடத்தினாள்.

 

ஆனால் இரவு வந்ததும்

அவளுடைய பயம் மீண்டும் உயிர்பெற்றது

அன்றைய இரவும் அகோரன் அவளைத் தன் கண்ணாடி மாளிகைக்கு தூக்கிச் சென்றான்

அவனைத் தடுக்க என்ன செய்வதென்றே தெரியாமல் அவந்திகா தவித்தாள் ஒவ்வொரு இரவும் அவளுடைய பயத்துடனான போராட்டமாகவே மாறியது அந்த இரவும் அவளுக்கு உறக்கம் இல்லை.

 

அடுத்த நாளும் அதே நிலை அதற்கடுத்த நாளும்…இப்படியே நாட்கள் நகர அவந்திகா மனதாலும் உடலாலும் சோர்ந்து போக ஆரம்பித்தாள் இரவெல்லாம் உறங்காமல் இருப்பதால், பகலில் கல்லூரி வகுப்பில் அமர்ந்து படிப்பது அவளால் முடியவில்லை அதனால் கல்லூரிக்குச் செல்லாமல், அந்தப் பூங்காவிலேயே நாள் முழுவதும் இருக்க ஆரம்பித்தாள்.

 

பூங்காவில் ஆட்கள் அதிகமாக இருக்கும் நேரத்தில், ஒரு செடியின் பின்னால் இருந்த கல் மேடையில் அமர்ந்திருப்பாள் சில நேரங்களில் சோர்வு தாங்காமல் அங்கேயே கண்களை மூடி உறங்கிவிடுவாள் மாலை நேரம் வந்ததும் மட்டும் எழுந்து, கல்லூரி வாசலுக்குச் சென்று நிற்பாள் அவளுடைய தந்தை வழக்கம்போல வந்து அவளை அழைத்துச் செல்வார் “என்னம்மா இன்னைக்கு காலேஜ் எப்படி இருந்துச்சு”

என்று அவர் கேட்கும் ஒவ்வொரு முறையும் அவந்திகா தன் முகத்தில் எதுவும் தெரியாதது போல ஒரு சிறிய புன்னகையை மட்டும் பதிலாகக் கொடுப்பாள் உண்மையைச் சொல்ல அவளுக்கு பயமாக இருந்தது அவள் சொல்லப்போகும் விஷயத்தை யாராவது நம்புவார்களா என்ற சந்தேகமும் இருந்தது.

 

அதனால் ஒவ்வொரு நாளும் அவள் தன் பயத்தை தனக்குள்ளேயே புதைத்துக்கொண்டாள் பகலில் அந்தப் பூங்கா மாலையில் தந்தையுடன் வீடு இரவில் அகோரனின் கண்ணாடி மாளிகை இதுவே அவந்திகாவின் வாழ்க்கையாக மாறிவிட்டது.

 

ஒரு நாள்…இரண்டு நாள்…மூன்று நாள்…என்று தொடங்கிய அந்த வேதனை, நாட்கள் செல்லச் செல்ல தொடர்கதையாகவே மாறியது.

 

அவந்திகா பத்து நாட்கள் தொடர்ந்து கல்லூரிக்கு வராமல் இருந்ததால் இறுதியில் கல்லூரி நிர்வாகத்தின் கவனத்திற்கும் அது சென்றது அன்று பிரின்சிப்பல் அவந்திகாவையும் அவளுடைய பெற்றோரையும் அழைத்திருந்தார்.

 

அவளின் பெற்றோர் வந்து அமர்ந்திருக்க அவர்களை பார்த்தவர் பேச ஆரம்பித்தார் “பத்து நாளா உங்க பொண்ணு காலேஜுக்கு வரலையே… என்ன பிரச்சனை”

அவர் கேள்விக்கு அவந்திகா முதலில் அமைதியாகவே இருந்தாள் அவளுடைய விரல்கள் ஒன்றோடு ஒன்று இறுக்கமாகப் பின்னிக்கொண்டன பயத்தில்

அவளின் பெற்றோர் தங்கள் மகளை அதிர்வுடனே பார்த்தனர் அவளின் தந்தை 

“என் பொண்ணை டெய்லி நான் தான் சார் காலேஜ்க்கு கூட்டிட்டு வருவேன் அவள் எப்படி வராம இருப்பா” என்று அவர் கேட்க

“இது உங்க பொண்ணோட அட்டனன்ஸ் நீங்களே எடுத்து பாருங்க” என்று கொடுக்க அவள் எப்போது எல்லாம் கல்லூரிக்கு வராமல் இருந்தாள் என்பது அதில் தெளிவாக குறிப்பிடப்பட்டு இருந்தது.

 

அவர்கள் இருவரும் தங்கள் மகளை அதிர்வுடனே பார்க்க “இதுக்கான பதிலை நீங்க உங்க பொண்ணு கிட்ட தான் கேட்க்கனும்” என்றார் அவர் “அவந்தி மா என்ன இதெல்லாம் நீ நல்லா படிக்குற பொண்ணாச்சே” என்று அவளின் தந்தை கேட்க அவளின் தாய்க்கு கோபம் வந்தது அவள் நிச்சயமாக ஏதோ தப்பு செய்திருக்கிறாள் என்று எழுந்து அவள் அருகில் சென்றவர் மகளின் கன்னத்தில் ‌பளார் என்று ஒரு அறைவிட்டார்.

 

“காலேஜ்க்கு போகாம எங்க டி போய் ஊர் சுத்துன” என்று ஜானகி கேட்க ரங்கநாதன் அவரை தடுத்தார் “ஜானகி எதுவா இருந்தாலும் வீட்ல போய் நேசிப்போம்” என்றவர் 

“சாரி சார் என் பொண்ணுக்காக நான் மன்னிப்பு அவள் இனிமே ஒழுங்கா காலேஜ்க்கு வருவா” என்று கையெடுத்து கும்பிட்டு மன்னிப்பு கேட்டவர் மகளையும் மனைவியையும் அழைத்து கொண்டு அங்கிருந்து சென்றார். 

 

மூவரும் காரில் வரும்போது ஒரு வார்த்தை கூட பேசாமல் வந்தனர் வீட்டுக்கு வந்த மறு கணம் ஜானகி மகளை போட்டு அடி வெளுக்க ஆரம்பிக்க மகளின் முன்னே வந்து தடுத்தார் ரங்கநாதன் “நீ இப்போ அவளை அடிக்கிறதால எதுவும் ஆக போறது இல்லை பொறுமையா உட்கார்ந்து பேசுவோம்” என்றார்.

 

“என்ன பேச சொல்றிங்க நீங்க தான் அவளுக்கு செல்லம் கொடுத்து கெடுத்து வச்சிருக்கிங்க சொல்லு டி எங்க போன” என்று அவளின் மறு கன்னத்திலும் ஓங்கி ஒரு‌ அறை விட “போதும் விடு அவளை” என்று மகளின் முன்னே வந்து தடுத்தவர் “அவந்தி மா சொல்லு நீ எங்க போன இந்த பத்து நாளும் ஏன் காலேஜ் போகல” என்று கேட்க அவள் கண்ணீர் விட்டு கதறி அழ ஆரம்பித்தாள்.

 

“சொல்லு டா காலேஜ்ல எதாவது பிரச்சனையா உன்னை யாராவது எதாவது சொன்னாங்களா அப்பா இருக்கேன் டா சொல்லு” என்று கேட்டார்

அவந்திகா பதிலுக்கு தலையை மட்டும் அசைத்தாள் “இல்லப்பா…” என்றாள்

“அப்போ என்னம்மா உனக்கு பிரச்சனை” என்று கேட்க அந்த ஒரு கேள்வி அவளுடைய மனதுக்குள் புதைத்து வைத்திருந்த எல்லா பயத்தையும் கிளறியது.

 

‘அகோரன்…’ அவன் பெயர் நினைவுக்கு வந்ததும் அவளுடைய உடல் நடுங்கியது

இரவு நேரம் அந்த கண்ணாடி மாளிகை

தன்னைத் தூக்கிச் செல்லும் அவன் அவனுடைய கண்கள் எல்லாமே ஒன்றன்பின் ஒன்றாக அவள் கண்முன்னால் தோன்றின.

 

அவள் தன்னையும் அறியாமல் பின்னால் நகர்ந்தாள் “அவந்தி மா” என்று ரங்கநாதன் பதறி அவளைப் பிடித்துக்கொண்டார்

“என்னம்மா ஏன் இப்படி நடுங்குற” என்று அவர் கேட்க்கும் அவளின் கைகள் நடுங்கியது 

ஜானகியின் கோபமும் அந்த நொடியில் சற்றுக் குறைந்தது.

 

“அவந்தி…” என்று அவரும் அழைத்தார்

ஆனால் அவந்திகா தன் உதடுகளை இறுக்கமாக மூடிக்கொண்டாள்

‘சொல்லிடு… எல்லாத்தையும் சொல்லிடு…’

என்று அவளுடைய மனம் கதறியது.

 

“அப்பா…அது…அப்பா” என்று தடுமாறியவளின் உடல் நடுங்க ஆரம்பித்தது எப்படியோ கொஞ்சமாக பேச ஆரம்பித்தாள்

“தினமும் நைட் ஆனா என்னை ஒருத்தன் தூக்கிட்டு போறான் பா அவ..ன்…அவன் பார்க்க மனுசன் மாதிரி இல்லை ராட்சசன் மாதிரி இருப்பான் ஒரு கண்ணாடி மாளிகை அங்க என்னை தூக்கிட்டு போய்டுவான் 

காலையில நான் எழுந்து பார்த்தா வீட்ல இருப்பேன் இதெல்லாம் ஏன் நடக்குது எதுக்காக நடக்குதுன்னு எனக்கு எதுவும் தெரியாது நைட் எல்லாம் நான் தூங்காம இருக்குறதால காலையில கிளாஸ்க்கு போனா தூக்கம் வரும் அதனால பக்கத்துல பார்க்குக்கு போய் தூங்கிடுவேன்” என்றாள்.

 

அவளது தாயும் தந்தையும் அதிர்ச்சியுடன் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டனர் இருவருக்குமே என்ன சொல்வதென்றே தெரியவில்லை

அவளது தந்தை மட்டும் தன்னைச் சமாளித்துக் கொண்டு மெதுவாகக் கேட்டார்

“சரி… அவன் யாரு” என்று 

அந்த கேள்வியை கேட்டதும் அவந்திகாவின் முகத்தில் மீண்டும் பயம் தெரிந்தது.

 

“எனக்கு தெரியாது பா…”

சிறிது நேரம் தயங்கியவள், நடுங்கும் குரலில் சொன்னாள் “ஆனா… அவன் நைட் நேரத்துல மட்டும் தான் வருவான்…”

அவள் சொன்ன அந்த கடைசி வார்த்தைகள், அந்த அறைக்குள் இருந்த அமைதியை இன்னும் கனமாக்கின.

 

“சரி அவன் நம்ம ஊர் தானா எப்படி இருப்பான்” என்று அவர் கேட்க “அவன் மனுசனே இல்லை பா கருப்பு உருவம் மாதிரி வந்துட்டு மறைஞ்சிடுவான்” என்று கூறி முடிக்கும் முன்னே அவளின் தந்தை அவள் கன்னத்தில் ஓங்கி ஒரு அறைவிட்டார் “என்ன கதையா சொல்ற வயசுக்கு வந்த பிள்ளையாச்சே கை நீட்ட கூடாதுன்னு பார்க்குறேன் இல்லை தோலை உருச்சிருவேன்” என்றார்.

 

“காலேஜ் போக பிடிக்கலன்னு சொல்லு இல்லையா எவனையாவது லவ் பண்றேன்னு சொல்லு பொய்யா பேசுற இந்த கதையெல்லாம் வேற யார் கிட்டையாவது போய் சொல்லு” என்றார்‌ “அப்பா சந்தியமா நான் உண்மையை தான் சொல்றேன்” என்று கண்ணீர் விட்டு கதறி அழ அதை கேட்க்கும் மனநிலையில் அவளின் பெற்றோர் இல்லை‌.

 

அவள் அழுது கொண்டே இருக்க அந்த அறையை வெளியே பூட்டி விட்டு வந்தனர் அவளின் பெற்றோர் “என்னங்க இவள் என்ன என்னவோ சொல்றா” என்று ஜானகி கேட்க

“உன் மகள் பொய் சொல்ல கத்துக்கிட்டா டி காதலிக்கிறேன்னு சொன்னா பிரச்சனை ஆகும்ல்ல அதனால தான் பொய் சொல்றா” என்றார்.

 

“இல்லைங்க எனக்கு என்னவோ உண்மையாவே கெட்ட சக்தி அவளை வந்து தொல்லை பண்ணுதோன்னு தோனுது” என்றார் “என்ன கெட்ட சக்தி” என்று அவர் கேட்க “பேய் பிசாசு அந்த மாதிரி” என்று அவர் கூற அவரை பார்த்து முறைத்தார் ரங்காநாதன்

“இதெல்லாம் நம்பிட்டு இருக்கியா ஜானகி” என்று கேட்க “எதுக்கும் நாம எதாவது ஒரு சாமியார் மாதிரி போய் பார்க்கலாமா அவள் சொல்றது உண்மையா பொய்யான்னு தெரிஞ்சிக்கலாம்ல்ல” என்று கூறினார் அவருக்கும் அது சரியென பட ஆர்த்தி பக்கத்து வீட்டில் விட்டுவிட்டு மூவரும் அன்று மாலையே அவர்கள் குலதெய்வ கோவிலுக்கு சென்றனர்‌.

 

வனத்தின் நடுவே அமைந்துள்ள அந்த கோவிலின் பக்கத்தில் சித்தர் ஒருவர் இருக்க அவரை பார்க்க தான் சென்றனர் அவரின் முன்னே மூவரும் சென்று அமர கண்ணை மூடி அமர்ந்திருந்த அந்த சித்தர் கண்ணை திறந்து பார்த்தார் “யாரு மா நீ உனக்கு என்ன வேணும்” என்று கேட்க ஜானகி கண்ணீருடன் நடந்த அனைத்தையும் கூற ஆரம்பித்தார்.

 

அந்த சித்தரின் பார்வை இப்போது அவந்திகாவிடம் சென்றது அவளை ஒரு பார்வை பார்த்தவுடனேயே அவருக்கு அனைத்தும் புரிந்துவிட்டது தனது பையில் இருந்த கயிற்றை எடுத்தவர் “இந்தா மா இதை கையில கட்டிக்கோ எந்த கெட்ட சக்தியும் உன்னை அனுகாது” என்று கூறி அவந்திகாவிடம் கொடுக்க அவளும் அதை கையில் வாங்கி கொண்டாள் அவளின் தாய் அப்போதே அவளின் கையில் அதை கட்டிவிட அந்த இடத்தில் பலத்த காற்று வீச ஆரம்பித்தது 

அதன் பின் மூவரும் அங்கிருந்து கிளம்ப அனைத்தையும் தூரத்தில் இருந்து பார்த்து கொண்டே இருந்தான் அகோரன் அவனால் அதை த

டுக்க முடியவில்லை அவனை மீறிய ஒரு சக்தி அங்கே ஆட்சி புரிந்து கொண்டு இருந்தது‌‌.

அத்தியாயம் 10

 

அந்த இரவு அவந்திகா தன் அறையில் படுத்திருந்தாள் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள் அழுதழுது சோர்ந்து போய் இன்று தான் நன்றாகவே உறங்கினாள் 

அவள் வலது கையில் சித்தர் கொடுத்திருந்த அந்தக் கயிறு இறுக்கமாகக் கட்டப்பட்டிருந்தது மங்கலான இரவு வெளிச்சத்தில் கூட அந்தக் கயிற்றிலிருந்து ஏதோ ஒரு விசித்திரமான ஒளி மட்டும் அவ்வப்போது மின்னிக் கொண்டிருந்தது.

 

அறையின் ஒரு மூலையில் நின்றிருந்த அகோரன் மெதுவாக அவளை நோக்கி நடந்தான் ஒவ்வொரு அடியும் அவனை அவளிடம் நெருங்கிக் கொண்டே வந்தது

அவன் அவளருகில் சென்று, அவளைத் தூக்குவதற்காக கையை நீட்டிய அந்த நொடி

சட் என்று அவள் கையில் கட்டப்பட்டிருந்த கயிறு திடீரென்று பிரகாசித்தது

அகோரனின் கை அவளைத் தொடுவதற்கு முன்பே ஏதோ ஒரு கண்ணுக்குத் தெரியாத சக்தி அவனைப் பின்னால் தூக்கி வீசியது

அவன் தரையில் விழுந்தான் அதிர்ச்சியுடன் தன் கையைப் பார்த்தான் அவனுடைய விரல்களில் கருமையான புகை எழுந்தது.

 

“இந்தக் கயிறு…”

அவன் கண்கள் அவந்திகாவின் கையை நோக்கி மீண்டும் சென்றது மீண்டும் அவன் சுவற்றில் தூக்கி வீசப்பட்டான் 

அவந்திகாவுக்கு அங்கு நடக்கும் எதுவும் கேட்க்கவில்லை எதுவுமே தெரியாமல் அமைதியாக தூங்கிக் கொண்டிருந்தாள்.

 

அகோரன் மீண்டும் எழுந்து அவளை நோக்கி வந்தான் மீண்டும் அதே சக்தி

அவளைச் சுற்றி ஒரு கண்ணுக்குத் தெரியாத பாதுகாப்பு வட்டம் இருப்பதைப் போல தோன்றியது அவனால் ஒரு அடிகூட அவளை நெருங்க முடியவில்லை

அவன் கோபத்தில் கர்ஜித்தான்

ஆனால் அந்தக் கயிறு மட்டும் அவனை எச்சரிப்பது போல இன்னும் பிரகாசித்து கொண்டே இருந்தது வெறுத்து போய் அங்கிருந்து கிளம்பினான்.

 

அந்த இரவுக்குப் பிறகு…

பல நாட்கள் அகோரனால் அவந்திகாவை நெருங்கவே முடியவில்லை

ஒவ்வொரு முறையும் அவன் அவளருகில் செல்ல முயன்றாலும் அந்தக் கயிற்றின் தெய்வசக்தி அவனைத் தடுத்து நிறுத்தியது

அவந்திகாவுக்கோ எதுவுமே புரியவில்லை

தனக்குத் தெரியாமல் யாரோ தன்னைப் பாதுகாத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதையும் அவள் அறிந்திருக்கவில்லை ஆனால் அன்றிலிருந்து சரியாக ஏழாவது நாள் இரவு…எல்லாமே மாறியது நாட்கள் நகர்ந்தன

ஒரு வாரம் கழிந்தது.

 

அன்றைய காலை நவந்திகாவுக்கு உடலில் ஏதோ மாற்றம் இருப்பது போலத் தோன்றியது

வழக்கமாக இருந்த சோர்வு இல்லை ஒரு விதமான பலவீனம் தலைசுற்றல்

உணவைப் பார்த்தாலே வெறுப்பு அவளுக்கே காரணம் புரியவில்லை.

 

“என்னாச்சு எனக்கு…?”

என்று தன் வயிற்றைத் தொட்டுப் பார்த்தாள்.

அடுத்த சில நாட்களில் அந்த மாற்றங்கள் இன்னும் தீவிரமானது அவளுடைய வயிற்றில் மிகச் சிறிய மாற்றம் ஆனால் அது சாதாரணமாகத் தோன்றவில்லை ஒரு மாதம் கழித்து அவளுடைய வயிறு லேசாக மேடிட ஆரம்பித்தது.

 

அவந்திகா தன் உடலில் ஏற்பட்ட மாற்றங்களை கவனித்து கொண்டு தான் அவளுக்கு உள்ளுக்குள் ஒரு பயம் பிறந்தது

அன்றைய இரவுகளில் நடந்தது அனைத்தும் நினைவுக்கு வந்ததும் அவளுடைய முகம் வெளிறியது “இல்ல… அப்படி இருக்கக் கூடாது…” என்று நினைத்து கொண்டாள்

ஆனால் உண்மை அவள் நினைத்ததைவிட பயங்கரமாக இருந்தது.

 

அவள் கர்ப்பமாக இருந்தாள் அதுவும்…

ஒரு மனிதக் குழந்தை அல்ல அரக்கனின் குழந்தை அரக்க குழந்தைகள்

அவளுக்குள் வளர்ந்து கொண்டிருந்தது அகோரனின் குழந்தை அந்த உண்மை அவளுக்குத் தெரிய வந்த நொடியில் அவளுடைய உலகமே சிதறியது

அதைவிட கொடூரமானது அந்தக் குழந்தை வளர்ந்து கொண்டிருந்த வேகம்.

 

ஒரு மனிதக் குழந்தை மாதங்களாக வளர வேண்டிய நிலையில், அவளுக்குள் அது நாட்களுக்குள் உருவெடுக்க ஆரம்பித்திருந்தது அவள் நடுங்கியபடி வயிற்றின் மீது கையை வைத்தாள்

அப்போது அவளுடைய வயிற்றுக்குள் இருந்து உருவம் மிக மெதுவாக ஒரு அசைந்தது 

அவந்திகாவின் கண்கள் அதிர்ச்சியில் விரிந்தன.

 

“அம்மா…”

என்று பயத்தில் அழைத்தவள், அடுத்த நொடியே மயங்கி கீழே விழுந்தாள்

அவள் விழுந்த சத்தம் கேட்டதும் வீட்டிலிருந்தவர்கள் ஓடி வந்தார்கள் 

அவளைச் சுற்றி அனைவரும் பதறி நின்றனர் 

ஆனால் சில நொடிகளில் அவள் மேடிட்ட வயிற்றைப் பார்த்த அவளுடைய அம்மாவின் முகம் மாறியது அதிர்ச்சி பயம் ஆம் அவள் குழந்தை உண்டாகி மூன்று மாதம் தான் ஆகி இருந்தது ஆனால் ஏதோ ஐந்து மாத வயிற்றை போல இருந்தது அவள் இத்தனை நாள் லூசான ஆடைகளை அணிந்து வீட்டில் யாருக்குமே தெரியாமல் பார்த்து கொண்டாள்.

 

அவள் தாய்க்கே நம்ப முடியாத குழப்பம்

“அவந்திகா” என்று அழைக்கும் போதே 

அவரின் குரல் நடுங்கியது அவள் முகத்தில் தண்ணீரை தெளித்து எழுப்ப பெண்ணவள் கண்ணை திறந்தாள் “உனக்கு… என்ன ஆச்சு”

என்று கேட்டார் அவளால் ஒரு வார்த்தைகூட சொல்ல முடியவில்லை.

 

அவள் வயிற்றின் மீது மட்டும் கை வைத்துக் கொண்டு அழ ஆரம்பித்தாள்

அவளுடைய அப்பா அந்தக் காட்சியை பார்த்ததும் அதிர்ச்சியில் உறைந்து போய் நின்றார் “நான் அப்போவே சொன்னனே இவள் தப்பு பண்ணிடான்னு என் பேச்சை கேட்டியா பேய் பிசாசுன்னு சொன்னியே டி” என்று மனைவியின் கன்னத்தில் ஓங்கி அறைந்தவர் திட்ட ஆரம்பித்தார் அவளின் தங்கைக்கும் இது பேரதிர்ச்சியாக தான் இருந்தது அவளும் அழ ஆரம்பித்தாள் 

“நாலு பேரு என்னடி சொல்லுவாங்க இந்த கன்ட்ராவி எல்லாம் வெளியே தெரிஞ்சா” என்று தலையில் அடித்து கொண்டார் ரங்கநாதன்.

 

அதன் பின் அவந்திகாவை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர் மருத்துவர் அவளை பரிசோதித்து விட்டு வெளியே வந்தார் 

“என்ன சார் உண்மையாவே அந்த பொண்ணுக்கு மூணு மாசம் தான் ஆகுதா வயிறு அஞ்சு மாசம் மாதிரி இருக்கு” என்று அந்த மருத்துவர் கேட்க அவர்களுக்குள்ளே அது அதிர்ச்சியாக தான் இருந்தது “குழந்தை நல்லா வளர்ச்சி அடைஞ்சிருச்சு இனி கலைக்கலாம் முடியாது அப்படி பண்ணினா உங்க பொண்ணுக்கு உயிருக்கு தான் ஆபத்தா முடியும்” என்றார் அந்த மருத்துவர் வேறு வழியின்றி மூவரும் வீடு வந்து சேர்ந்தனர்.

 

மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பிய அன்றே ரங்கநாதன் ஒரு முடிவெடுத்தார்

“இங்க இனிமேல் இருக்கக் கூடாது இந்த விஷயம் யாருக்கும் தெரியக்கூடாது நம்ம ஊர்ல ஒருத்தருக்குத் தெரிஞ்சாலும் போதும்… நாளைக்கே ஊரெல்லாம் பேச ஆரம்பிச்சிடும்”

அவரது குரலில் இருந்த பதற்றம் அனைவருக்கும் புரிந்தது.

 

அதனால் அடுத்த சில நாட்களிலேயே அவர்கள் தங்களுடைய ஊரை விட்டு வெகுதூரத்தில் இருந்த ஒரு சிறிய நகரத்துக்குச் சென்றனர்

அங்கே யாருக்கும் தெரியாத ஒரு பழைய வீட்டை வாடகைக்கு எடுத்துக் கொண்டு தங்கினர் சொத்தை வீட்டை விட்டு வாடகை வீட்டில் வந்து தங்கினார் புது ஊர் புதிய இடம் ஆனால் ரங்கநாதன் மட்டும் தன் ஊருக்கு வேலைக்கு சென்று வந்து கொண்டிருந்தார்.

 

அவந்திகாவின் வயிறு வெளியில் தெரிய ஆரம்பித்துவிட்டதால், அவளை வீட்டை விட்டு வெளியே அனுப்புவதையே அவளது குடும்பத்தினர் தவிர்த்தனர் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் சிலர் புதிதாக குடியேறிய குடும்பத்தைப் பற்றி விசாரிக்க ஆரம்பித்தனர்.

 

“பொண்ணு உங்க மகளா மாசமா இருக்காங்க போல” என்று ஒரு நாள் பக்கத்து வீட்டுப் பெண் கேட்டார்

ரங்கநாதன் சற்றும் தயங்காமல்,

“ஆமா… எங்க மகள்தான் அவளுக்கு கல்யாணம் ஆயிடுச்சு அவளோட ஹஸ்பண்ட் ஃபாரின்ல வேலை பார்க்குறாரு அதனால தான் இப்போ அவ எங்களோட இருக்கா”

என்று பொய் சொல்லி சமாளித்தார்.

 

“அப்படியா எத்தனை மாசம்” என்று கேட்க

அடுத்த கேள்வியில் அவருடைய முகம் இறுகியது “ஆறு மாசம்ங்க” என்றார்

அதை மட்டும் சொல்லிவிட்டு அங்கிருந்து நகர்ந்தார்.

 

அந்த வார்த்தைகள் அவந்திகாவின் காதில் விழுந்தன அவள் தன் அறைக்குள் தனியாக அமர்ந்திருந்தாள் ஜன்னல் வழியாக வெளியே பார்த்துக் கொண்டிருந்தாள் அவளது கண்களில் கண்ணீர் தேங்கியது

தன் வாழ்க்கை எங்கே வந்து நின்றுவிட்டது என்று அவளுக்கே புரியவில்லை

ஒரு காலத்தில் கல்லூரிக்குச் சென்று நண்பர்களுடன் சிரித்துக் கொண்டிருந்த பெண்… இப்போது யாருக்கும் தெரியாத ஒரு வீட்டிற்குள் அடைந்து கிடக்கிறாள்.

 

தன் வயிற்றுக்குள் இருக்கும் உயிரைப் பார்த்தாலே அவளுக்கு பயமாக இருந்தது

அது குழந்தையா அல்லது

அவள் கனவுகளில் பார்த்த அந்த அரக்கனின் உயிரா அவளால் முடிவுக்கு வர முடியவில்லை.

 

மெல்ல தன் வயிற்றின் மீது கையை வைத்தாள் “நீ யாரு…” என்று கண்ணீருடன் கேட்டாள் அவளது குரல் நடுங்கியது

“என்னை ஏன் தேர்ந்தெடுத்த…”

அப்போது வயிற்றுக்குள் இருந்த பிள்ளை மெதுவாக அசைய ஒரு அசைவு ஏற்பட்டது 

அவந்திகா திடுக்கிட்டு கையைப் பின்னால் இழுத்துக் கொண்டாள்.

 

அவளது கண்களில் பயம் பெரிதானது

“வேண்டாம்… என்னை பயமுறுத்தாதே…”

என்று கண்ணீருடன் முனுமுனுத்தாள்

அதே நேரத்தில் கதவுக்கு வெளியே நின்றிருந்த ரங்கநாதன் அவளது குரலைக் கேட்டார் கதவைத் திறந்து உள்ளே பார்த்தார்

படுக்கையின் ஓரத்தில் சுருண்டு உட்கார்ந்திருந்த தன் மகளைப் பார்த்ததும் அவருடைய கோபம்எல்லாம் ஒரு நொடியில் மறைந்தது.

 

அவர் அவளைப் பார்த்துக் கொண்டே நின்றார்

அவந்திகா தலையைத் தாழ்த்திக் கொண்டு அழுது கொண்டிருந்தாள்

அவளது முகத்தில் இருந்த பயத்தையும், கண்களில் இருந்த கண்ணீரையும் பார்த்த அவருடைய மனம் உடைந்தது

எவ்வளவு கோபப்பட்டிருந்தாலும்…

அவள் அவருடைய மகள்

அவளை இப்படி ஒரு நிலையில் பார்க்க அவரால் தாங்க முடியவில்லை.

 

மெதுவாக அவளருகில் சென்று அமர்ந்தார்.

“அவந்திகா…” என்று அழைத்தார்.

அவள் தலையை நிமிர்ந்து பார்த்தாள்

அப்பாவைக் கண்டதும் மீண்டும் அழ ஆரம்பித்தாள் “அப்பா… நான் எந்த தப்பும் பண்ணல என்னை நம்புங்க” என்று கூற அவள் பேச்சை கேட்ட ரங்கநாதனுக்கு கோபம் “இப்போ கூட உன் தப்பை நீ ஒத்துக்கவே மாட்டல்ல” என்றவர் அங்கிருந்து எழுந்து கோபத்துடன் அவளை ஒரு கணம் பார்த்தார் அவரது கண்களிலும் கண்ணீர் நிறைந்தது

“நீ எதுவும் என் கிட்ட பேசாத”

என்றவர் அங்கிருந்து கோபத்துடன் வெளியேறினார்.

 

“உன்னால் தான் என் வாழ்க்கையே போச்சு” என்று அவள் தன் வயிற்றில் அடித்து கொண்டு அழ அவளுக்கே தெரியாமல் அந்த அறையின் இருண்ட மூலையில் ஒரு நிழல் மெதுவாக அசைந்தது அவந்திகாவின் கையில் இருந்த அந்தக் கயிறு மட்டும் யாரோ வருவதை உணர்ந்தது போல மெல்ல பிரகாசிக்கத் தொடங்கியது அழுது கரைந்தவள் அதை கவனிக்கவில்லை அவளை எப்படி நெருங்குவது

என்று தெரியாமல் அந்த ராட்சசன் ஏக்கம் சுமந்த விழிகளுடன் அவளையும் அவள் வயிற்றையும் பார்த்து கொண்டே இருந்தான்.

 

 

 

 

 

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *