தைத்தியனின் தேவதை 15,16
அத்தியாயம் 15
அறைக்குள் வந்த அவந்திகாவுக்கு உடல் மிகவும் சோர்வாக இருந்தது படுத்து உறங்க முயற்சி செய்தாள் கண்கள் எரிந்ததே தவிர, உறக்கம் வரவில்லை அவளின் பெற்றோரின் நினைவாகவே இருந்தது தொடர்ந்து மூன்று நாட்களாக குழந்தைகளை கவனித்துக் கொண்டது சரியாக உறங்காமல் இருந்ததால் உடல் சோர்வாக இருக்க படுக்கையில் படுத்தாள் சில்லென்ற காற்று அந்த வனப்பகுதியில் இருந்து வர மெல்ல கண்ணை மூடினாள் இன்று படுத்ததும் உடல் அப்படியே தளர்ந்து போனது கண் மூடிய அடுத்த நொடியே உறங்கிவிட்டாள்.
ஒரு மணி நேரம் கூட ஆகியிருக்காது
அவளுடைய பிள்ளைகள் இருவரும் ஒரே நேரத்தில் அழுது கதற, திடுக்கிட்டு எழுந்தாள்
அடுத்த கணமே மின்னலைப் போல அங்கே வந்து நின்றான் அகோரன்.
அவன் திடீரென தன் முன்னால் வந்து நிற்க, பெண்ணவளின் இதயமே ஒரு கணம் நின்றது போல இருந்தது கண்கள் இரண்டும் அகல விரித்து, பயத்துடன் அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள் “உனக்கு உதவி செய்யத்தான் வந்தேன்” என்றான்
அழுது கொண்டிருந்த ஒரு குழந்தைக்கு விளையாட்டு காட்ட ஆரம்பித்துவிட்டு, அடுத்த நொடியே பிள்ளையை தூக்கி கொண்டு வெளியே சென்றுவிட்டான்.
அவன் சென்ற பிறகுதான் அவந்திகாவுக்கு மூச்சே வந்தது ‘அப்பாடா… என்ன இவன் பேய் மாதிரி வந்து நிக்கிறான்’ என்று மனதிற்குள் புலம்பியவள், குழந்தையைத் தூக்கி பசியாற்ற ஆரம்பித்தாள் குழந்தைகள் இரண்டும் அசுரப் பசியில் இருந்தன அவளை விடாமல் தொல்லை செய்து கொண்டே இருந்தன சாதாரணமாக இருக்கும் குழந்தைகளே இந்த நேரத்தில் பாடாய்ப்படுத்தி எடுக்கும் அசுரக் குழந்தைகள் என்றால் சொல்லவா வேண்டும்
ஒருவழியாக இரு குழந்தைகளையும் உறங்க வைத்து, தொட்டிலில் படுக்க வைத்தாள்.
அப்போதுதான் அவளுடைய வயிறு அவளுக்கு பசியை உணர்த்தியது ‘பசிக்குதே… இப்போ என்ன பண்றது’ என்று நினைத்த மறுகணமே
ஒரு நொடியில் அவள் பெரிய டைனிங் டேபிளின் முன் இருந்த இருக்கையில் வந்து அமர்ந்திருந்தாள் அவள் முன்னால் ஓடுவது, ஊர்வது, பறப்பது என சகல வகையான உணவுகளும் அணிவகுத்துக் கிடந்தன.
கந்தா அவளுக்குப் பரிமாறிக் கொண்டிருக்க, பெண்ணவள் பசியின் வேகத்தில் சாப்பிட ஆரம்பித்தாள் அகோரன் அவளுக்கு அருகிலேயே அமர்ந்து, கன்னத்தில் கையை ஊன்றியபடி அவளையே தான் பார்த்துக் கொண்டிருந்தான்.
ஆனால் பசியின் வேகத்தில் இருந்த அவந்திகா அவனை கவனிக்கவே இல்லை
கோழிக் காலை கடித்துக் இழுத்து சாப்பிட்டு, எலும்பை அப்படியே தூக்கி வீசிக் கொண்டிருந்தாள் காரம் தாங்க முடியாமல் கண்கள் கலங்கின முகம் சிவந்தது இருந்தும் சாப்பிடுவதை மட்டும் நிறுத்தவே இல்லை
‘பாலூட்டும் தாய்மார்களுக்கு இவ்வளவு பசி இருக்குமா’ என்று அகோரனுக்கே ஆச்சரியமாக இருந்தது ஆம் அவள் சாதாரண நாட்களில் இவ்வளவு சாப்பிட்டு அவன் பார்த்ததே இல்லை அவளுக்கு அகோர பசி
அவனுக்கே போட்டியாக சாப்பிடும் அளவுக்கு சாப்பிட்டுவிட்டு இறுதியாக ஒரு பெரிய ஏப்பத்தையும் விட்டாள் அவந்திகா அப்போதுதான் தன் அருகில் அமர்ந்திருந்த அகோரனை பார்த்தாள்.
“அம்மா” என்று அலறியேவிட்டாள் அவனை பார்த்தவளுக்கு மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கியது பயத்தில் கை, கால்கள் எல்லாம் உதற ஆரம்பித்தன என்னதான் தான் ஒரு தைரியமானவள் என்பதைப் போல அவள் காட்டிக் கொண்டாலும், அகோரனைப் பார்த்தவுடனே பயம் அவளுக்கு அழையா விருந்தாளியாக வந்து ஒட்டிக் கொள்வது என்னவோ உண்மைதான்.
கந்தா உடனே அவளிடம் வந்து சமாதானப்படுத்தினாள் “ஒண்ணுமில்லை எஜமானி அம்மா… பயப்படாதிங்க” என்று
அவந்திகா உடனே அங்கிருந்து எழுந்து செல்ல முயன்றாள் ஆனால் அவள் எழுவதற்குள் அகோரன் அவளுடைய கையைப் பிடித்து இழுத்து மீண்டும் இருக்கையில் அமர வைத்தான்.
“உன் கிட்ட கொஞ்சம் பேசணும்”
என்றான் அவன் குரலில் இருந்த தீவிரத்தை உணர்ந்த கந்தா, அவர்களுடைய தனிமையை மதித்து அங்கிருந்து உள்ளே சென்றாள்
அவந்திகா அவனைப் பார்த்தபடியே அமர்ந்திருந்தாள்.
“எ… எ… என்ன” அவளுடைய வார்த்தைகள் கூட தந்தியடித்தன அகோரன் ஒரு நொடி கூட தயங்காமல் அவளுடைய கண்களைப் பார்த்தான் “நாம ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கலாமா” என்று கேட்க
அவந்திகாவின் கண்கள் அப்படியே ஆச்சரியத்தில் விரிந்தன.
‘அடப்பாவி’ என்று நினைத்தாள்
ரெண்டு பிள்ளைகளைப் பெற்றெடுத்த பிறகு திருமணத்தைப் பற்றி பேசும் ஒரே ஆண்மகன் இவனாகத்தான் இருக்க முடியும் என்று நினைத்தாள் “இ… இப்போ என்ன திடீர்னு”
என்று அவள் தடுமாறிக் கொண்டே கேட்க
“இல்லை… தோனுச்சு” என்றான் அகோரன் சாதாரணமாக அவன் சர்வசாதாரணமாக பதில் சொல்ல, அவள் புரியாமல் அவனை பார்த்தாள்.
“குழந்தைங்க பிறந்துட்டாங்க நாளைக்கு அவங்க நம்ம ரெண்டு பேருக்குள்ள என்ன உறவுன்னு கேட்டா… என்ன பண்றது” என்று கூற அவந்திகாவுக்கு அவன் பேச்சைக் கேட்டு என்ன சொல்வதென்றே தெரியவில்லை கோபம் தான் வந்ததே ஆக பிள்ளைகளுக்காக திருமணத்தை பற்றி கேட்க்கிறான்
என்று மனதிற்குள் நினைத்தவள், அவனை கோபத்துடனே பார்த்தாள்.
அவளுடைய பார்வையைப் புரிந்து கொண்டவன், உதட்டின் ஓரத்தில் சிறு திமிர் புன்னகையைச் சிந்தினான்
“என்ன என்னை அப்படி பார்க்குற” என்று கேட்டவன் அவனும் சில நொடிகள் அவளையே பார்த்துக் கொண்டிருந்தவன், ஆழ்ந்த குரலில் சொன்னான்.
“இந்த ஜென்மம் மட்டும் இல்லை… இன்னும் ஏழேழு ஜென்மத்துக்கும் நான் தான் உன் கணவன் நீ தான் மனைவி”
என்ற அகோரனின் வார்த்தைகளைக் கேட்டதும் அவந்திகாவின் முகம் மாறியது
அவனுடைய திமிரான பேச்சு அவளுக்குள் இருந்த கோபத்தை இன்னும் தூண்டியது.
“நான் உன்னை கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்” என்று அவள் அழுத்தமாகக் கூறினாள் அகோரனின் புருவம் உடனை சுருங்கியது “ஏன் எதுக்காக” என்று அவன் கேட்க “உன்னை எனக்கு சுத்தமா பிடிக்கல”
என்றாள் அவன் கண்களை நேருக்கு நேராக பார்த்து அடுத்த நொடியே அகோரனின் கண்களில் தீப்பரவியது அவனுடைய விழிகள் இரண்டும் தீயைக் கக்குவது போல மாறின.
அவந்திகா ஒரு கணம் பயந்தாள்
ஆனால் அடுத்த நொடியே தன்னை நிலைப்படுத்திக் கொண்டாள்
“எனக்கு உன்னை கல்யாணம் பண்ணிக்க சுத்தமா விருப்பம் இல்லை” என்று அழுத்தமாகக் கூறியவள், உடனே குரலை உயர்த்தி “கந்தா” என்று அழைத்தாள்.
சில நொடிகளில் கந்தா அவளருகில் வந்து நின்றாள்“சொல்லுங்க மா” என்று கேட்க
“என்னை குழந்தைங்க ரூமுக்கு அழைச்சிட்டு போ” என்று அவள் சொன்னதும் கந்தா அவளை அழைத்துக் கொண்டு அறைக்குள் சென்றாள் அவந்திகா சென்ற திசையையே அகோரன் அசையாமல் பார்த்துக் கொண்டிருந்தான் சில நொடிகளில் அவன் கண்களில் தீ குறைந்தது அவனுக்கு அவளின் திமிர் பேச்சு கூட பிடித்தது அவன் முரட்டு இதழ்கள் லேசாக வளைந்தது அவளை ரசிக்க ஆரம்பித்து இருந்தான் அவனை கண்டால் பயந்து நடுங்கும் அவந்திகாவை விட தன் கண்களை நேராக பார்த்து பேசும் அவந்திக்காவை அவனுக்கு மிகவும் பிடித்தது.
அவள் மறைந்த பிறகும் அவனுடைய பார்வை அந்த அறையின் கதவிலேயே நிலைத்திருந்தது அவளுடைய “பிடிக்கல” என்ற வார்த்தை மட்டும் அவன் காதுக்குள் மீண்டும் மீண்டும் ஒலித்துக் கொண்டே இருந்தது அவனை முதல் முறையாக எதிர்த்து நின்று கண்ணை பார்த்து பேசும் ஒரே பெண் இவள் தான் அவள் திமிரையும் ரசிக்க ஆரம்பித்து இருந்தான்.
அப்போது அவனுக்கு பின்னால் இருந்து வந்த அவனுடைய சூனியக்கார பாட்டி, அவன் அருகில் வந்து நின்றார் “அகோரா…” என்று அவருடைய குரலில் இருந்த கண்டிப்பு அவனை அங்கேயே நிற்க வைத்தது அகோரன் மெதுவாகத் திரும்பிப் பார்த்தான்.
“என்ன பாட்டி” என்று கேட்க “உன் நடவடிக்கை எதுவுமே எனக்குப் புரியவே இல்லை நீ யாருன்னு மறந்துட்டியா இந்த ராட்சச இனத்துக்கே தலைவன் நீ, உன்னோட ஒரு வார்த்தைக்காக ஆயிரம் பேர் உயிரைக் கூட கொடுப்பாங்க அப்படிப்பட்ட நீ ஒரு பெண் உன்னைப் பார்த்து ‘பிடிக்கல’ன்னு சொல்லிட்டு எழுந்து போறதைப் பார்த்துட்டு சும்மா நின்னுட்டு இருக்க” என்று கேட்க அகோரன் அமைதியாக இருந்தான்.
“பெண்கள் எப்போதும் ஆண்களுக்கு அடங்கி இருக்கனும் அதுவும் உன்னை மாதிரி ஒரு தலைவனுக்கு மனைவியாக வரப்போகிறவள் உன் முன்னாடி இப்படிப் பேசுறது நல்லதில்லை கேவலம் மனித இனத்தில் பிறந்தவளுக்கு இத்தனை திமிரா…அவள் உன்னையே எதிர்த்துப் பேசுறா..” என்ற பாட்டியின் வார்த்தைகளுக்கு அகோரனுடைய விழிகள் சற்றே இறுகின.
“அவள் என்னை மதிக்கனும்னு நான் எப்போ கேட்டேன்” என்று அவன் கேட்க அவன் கேட்ட விதத்தில் பாட்டியே ஒரு நொடி அமைதியானார்
“அகோரா நான் என்ன சொல்ல வர்றேன்னு கேளு” என்று அவர் கூற வர “அவள் என்னை பயந்து பார்க்க வேண்டிய அவசியமும் இல்லை என்னை பிடிக்கலன்னு சொன்னா… அது அவளோட விருப்பம் என்னோட மேலையும் தப்பு இருக்கு அவளோட விருப்பம் இல்லாம நான் அவளை தீண்டி இருக்கேன் அவளுக்கு அவகாசம் கொடுக்கனும்” என்றான்.
“அவளை நீ கல்யாணம் பண்ணிக்கனும்ன்னு நினைக்குற தான்” என்று அவர் கேட்க அகோரனுடைய உதட்டில் மிக மெல்லிய புன்னகை தோன்றியது “நினைக்கிறேன்” என்றான்.
“அப்போ அவளை உன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரனும்” என்ற அந்த வார்த்தையை கேட்டதும் அவனுடைய முகம் மாறியது “அவளை கட்டுப்படுத்தி எனக்கு மனைவியாக்குறதுல எனக்கு எந்த விருப்பமும் இல்லை பாட்டி” என்றவன் அவர் பதிலை எதிர்பாராமல் அங்கிருந்து சென்றான்.
அதேநேரம் அவந்திகா அறைக்குள் குழந்தைகளுக்கு அருகில் அமர்ந்திருந்தாள் அவளின் மனம் மட்டும் அமைதியாக இல்லை ‘என்ன இவன்… திடீர்னு வந்து கல்யாணம் பண்ணிக்கலாமான்னு கேக்குறான்’ என்று நினைத்தவள் அவள் கண்களை மூடியபடி பெருமூச்சை இழுத்து வெளியே விட்டாள்.
‘அதுவும் ஏழேழு ஜென்மத்துக்கும் நான் தான் கணவன்னு வேற சொல்றான் என்னை பயமுறுத்துறதுக்காகத்தான் அப்படிச் சொன்னானா’ என்று அகோரனை பற்றி நினைக்க அவளின் இதயம் படபடத்தது அவனைப் பார்த்தாலே ஏன் தனக்கு இவ்வளவு பயம் வருகிறது என்று அவளுக்கே புரியவில்லை.
ஆனால் இன்று முதல் முறையாக…அவனுடைய கண்களில் கோபத்தைவிட வேறொன்றை அவள் பார்த்திருந்தாள் அது என்னவென்று மட்டும் அவளால் புரிந்து கொள்ள முடியவில்லை.
அதே நேரம் அறையை விட்டு தொலைவில் சென்ற அகோரனும் அவந்திகாவின் வார்த்தைகளையே நினைத்துக் கொண்டிருந்தான் ‘உன்னை எனக்கு சுத்தமா பிடிக்கல’ அந்த வார்த்தை அவன் காதுகளில் மீண்டும் மீண்டும் ஒலித்தது.
அவனை பார்த்தாலே நடுங்கும் பெண்களையே அவன் பார்த்துப் பழகியவன் ஆனால் அவந்திகா அவனை பார்த்து பயந்தாள் நடுங்கினாள் ஆனாலும் அவன் கண்களை நேராகப் பார்த்து தைரியமாக பேசினாள் அவனுடைய உதடுகள் மீண்டும் வளைந்தன “பிடிக்கலையா…” மெதுவாக முனுமுனுத்தவன் பால்கனி வழியே வானத்தைப் பார்த்தான்.
அந்த ராட்சச இனத்தை பொருத்த மட்டில் ஒரு பெண்ணை பிடித்திருக்கிறது என்றால் அடுத்த கணம் அவளை தூக்கி வந்து மனைவியாகவோ ஆசை ராணியாகவோ அவன் முன்னோர்கள் வைத்து கொள்வார்கள் ஆனால் அவர்களிடம் அகோரன் சற்றே மாறுபட்டான்.
அத்தியாயம் 16
அகோரன் வெகுநேரமாக அந்த இரவையும், வானில் தெரிந்த நட்சத்திரங்களையும் பார்த்துக்கொண்டிருந்தான் அவனுடைய மனதில் வேறு எந்த எண்ணமும் இல்லை தன் பிள்ளைகளின் நினைவு மட்டும் வந்து கொண்டிருக்க, இரவு உறங்குவதற்காக அவந்திகா இருந்த அறையை நோக்கி நடந்தான் உண்மையைச் சொல்லப்போனால், அது அவனுடைய அறைதான் இப்போது அவனுடைய மனைவியும் பிள்ளைகளும் அந்த அறையில் இருந்ததால், அது அவர்களுடைய அறையாக மாறியிருந்தது.
அவந்திகாவும் இன்னும் உறங்காமல் பால்கனியை ஒட்டியிருந்த இருக்கையில் அமர்ந்திருந்தாள் தொட்டிலில் அவளுடைய இரண்டு பிள்ளைகளும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தனர் இரவு வந்தாலே அவளுக்குத் தெரியாமல் ஒரு பயம் வந்து ஒட்டிக்கொள்ளும் அதனால் பல நாட்களாக இரவை உறங்காமலேயே கழித்துக்கொண்டிருந்தாள் கம்பளியை நன்றாகப் போர்த்திக்கொண்டு, பால்கனிக்கு வெளியே தெரிந்த பனிப்பொழிவை அமைதியாக ரசித்துக்கொண்டிருந்தாள் வெளியே முழுவதும் பனிமூட்டம் சூழ்ந்திருந்தது வெள்ளை மழையைப் போல பனித்துளிகள் தொடர்ந்து விழுந்துகொண்டிருந்தன அந்த வனப்பகுதியே கனவுலகம் போல காட்சியளித்தது வானில் தெரிந்த மேகங்கள் கூட வித்தியாசமாக நீல நிறத்தில் இருந்தன ஆனால் அந்த அழகான காட்சியை ரசித்துக்கொண்டிருந்த அவந்திகாவின் மனதில் மட்டும் ஆயிரம் எண்ணங்கள் ஓடிக்கொண்டிருந்தன.
‘குறைந்தபட்சம் என்னோட படிப்பையாவது முடிச்சிருக்கலாம்… இனிமேல் என்ன பண்றது இந்தக் குழந்தைகளை எப்படி வளர்க்கப் போறேன்’ என்ற கேள்விதான் மீண்டும் மீண்டும் அவளுடைய மனதை குடைந்துகொண்டிருந்தது அதே நேரம் படார் என்று அந்த அறையின் கதவு திடீரென திறக்கப்பட்டது.
சட்டென பெண்ணவளுக்குத் தூக்கிவாரிப் போட்டது அதிர்ச்சியுடன் திரும்பிப் பார்த்தவளின் பார்வை, அங்கே வந்துகொண்டிருந்த அகோரனின் மீது விழுந்தது ‘இவன் எதுக்கு இங்கே வரான்’ என்று நினைத்தவளின் மனதில் அடுத்த கணமே பலவிதமான கற்பனைகள் அவளுடைய மனதில் ஓட ஆரம்பித்தன.
இரவு நேரம் அவன் திடீரென அறைக்குள் வருவது அந்த நினைவுகளே அவளுடைய பழைய பயத்தை மீண்டும் கிளறிவிட்டன அவளுடைய முகம் வெளிறியது பயந்த விழிகளுடன் அவனையே பார்த்துக்கொண்டிருந்தாள்.
ஆனால் அடுத்த நொடியே தன்னுடைய பயத்தை மறைத்து தைரியத்தை வரவழைத்துக்கொண்டு, “நீ எதுக்காக இங்க வந்த” என்று அவனை நிமிர்ந்து பார்த்துக் கேட்டாள் தன் இடையளவுக்கு கூட இல்லாமல் இருக்கும் அவளைப் பார்த்த அகோரனின் உதட்டில் மெல்லிய புன்னகை மலர்ந்தது.
“எதுக்கு வருவாங்க தூங்கத்தான்” என்றான் அவன் சர்வசாதாரணமாக பதில் சொல்ல, அவந்திகாவின் கண்கள் அதிர்ச்சியில் விரிந்தன ‘என்னது’ என்று நினைத்தவள் “நீ… நீ போய் உன் ரூம்ல தூங்கு எதுக்காக இங்க வந்த” என்று கேட்டாள் திக்கி திணறி.
“இது என்னோட ரூம்”என்றவன் படுக்கையை நோக்கி நடந்தான் “உனக்கு வேணும்னா நீ வெளியே போ” என்று சொன்னவனின் கையைப் பிடித்தாள் அவந்திகா “ஒழுங்கா வெளியே போ” அகோரன் மெதுவாக அவளை நோக்கித் திரும்பிப் பார்த்தான்.
“முடியாது” என்று திட்டவட்டமாகக் கூறியவன், அதற்கு மேல் அவளிடம் வாக்குவாதம் செய்யாமல் குழந்தைகள் உறங்கிக்கொண்டிருந்த தொட்டிலை நோக்கிச் சென்றான் தன் பிள்ளைகள் இருவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பதைப் பார்த்ததும் அவனுடைய முகத்தில் அறியாமலேயே ஒரு நிறைவு தோன்றியது அவன் தன் சட்டையைக் கழற்றி ஓரமாக எறிந்தான்.
அவனுடைய முதுகில் இருந்த அந்த வித்தியாசமான உருவத்தைப் பார்த்ததும் அவந்திகா சட்டென முகத்தைத் திருப்பிக்கொண்டாள் அதைப் பார்த்த அகோரனின் முகத்தில் மெல்லிய புன்னகை வந்து போனது திரும்பாமேலேயே அவளின் முகபாவனைகள் அனைத்தும் அவனுக்கு புரிந்தது அவன் அந்தப் பெரிய படுக்கையின் ஒரு ஓரத்தில் சென்று படுத்துக்கொண்டான்.
‘இந்தக் குளிர்ல எப்படி இவன் சட்டையை கழட்டிட்டு படுக்குறான்’ என்று நினைத்தவள், அடுத்த நொடியே தனக்குத்தானே பதில் சொல்லிக்கொண்டாள் ‘ஆமா… இவன் தான் மனுஷனே இல்லையே இவனுக்கு எப்படி குளிரும்’ என்று நினைத்தாள் மெல்ல நடந்துசென்று ஒரு மெத்தை விரிப்பையும், தலையணையையும் எடுத்துக்கொண்டு தரையில் வந்து படுத்தாள்.
அவளைப் பார்த்த அகோரனுக்கு சிரிப்புதான் வந்தது அவனுடைய இனத்தவர்களுக்கு இந்தக் குளிர்தான் உயிருக்கு உகந்தது ஆனால் அவள் மனித இனத்தில் பிறந்தவள் இப்படி குளிர்ந்த தரையில் படுத்தால் அவளுடைய உடல் நிச்சயம் தாங்காது அதை நினைத்தபடியே அவளைப் பார்த்துக்கொண்டிருந்தான் அவந்திகா தன் மீது இரண்டு மூன்று கம்பளிகளைப் போர்த்திக்கொண்டாள் இருந்தும் குளிர் தாங்கவில்லை உடல் முழுவதும் நடுங்கிக்கொண்டே இருந்தது எப்படியோ கண்ணை மூடிக்கொண்டாள்.
சிறிது நேரத்தில் அவளுக்கு திடீரென ஏதோ மிதப்பதைப் போன்ற உணர்வு ஏற்பட்டது ஆனால் அந்த உணர்வை அவள் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை கண்ணை மூடியபடியே இருந்தாள் சில நொடிகளிலேயே அவளுடைய உடலைத் தழுவியிருந்த குளிர் மெல்ல குறைய ஆரம்பித்தது அவள் அறியாமலேயே ஆழ்ந்த உறக்கத்திற்குள் சென்றுவிட்டாள்.
காலைப்பொழுது யாருக்காகவும் காத்திருக்காமல் மெல்ல விடிய ஆரம்பித்தது தொட்டிலில் இருந்த குழந்தையின் அழுகைச் சத்தம் கேட்டு அவந்திகா மெல்ல கண்களைத் திறந்தாள் அவள் ஏதோ பாறையின் மீது தலை வைத்து படுத்திருப்பதைப் போல உணர்ந்தாள்.
கண்ணை கசக்கிக்கொண்டு மெதுவாகப் பார்த்தவளுக்கு அப்போதுதான் உண்மை புரிந்தது அவள் அகோரனின் நெஞ்சைத் தலையணையாக வைத்துக்கொண்டு, அவன் மார்பில் சுருண்டு படுத்திருந்தாள்.
“அய்யோ” என்று அதிர்ச்சியில் அடித்துப்பிடித்துக்கொண்டு எழுந்தாள் உடலை அசைத்த அடுத்த நொடியே அவளுடைய உடலில் வலி பரவியது பிள்ளைகள் பிறந்து சரியாக நான்கு நாட்கள்தான் ஆகியிருந்தன உடலில் இருந்த காயங்கள் கூட இன்னும் முழுமையாக ஆறவில்லை வலி தாங்க முடியாமல் அவளுடைய கண்கள் லேசாகக் கலங்கின அந்த நேரத்தில் அவள் அழுகையை கவனித்த அகோரன் உடனே எழுந்து அமர்ந்தான்.
“அவந்திகா… உனக்கு வலிக்குதா” என்றவனின் குரலில் இருந்த பதட்டம் பெண்ணவளுக்கே புதிதாக இருந்தது ஆனால் அவந்திகாவிடமிருந்து எந்தப் பதிலும் வரவில்லை கண்களில் இருந்து கண்ணீர் மட்டும் வழிந்தது அதைப் பார்த்த அகோரனின் முகம் இறுகியது.
நேற்று இரவு அவள் தரையில் படுத்திருந்ததைப் பார்த்தவன், அவள் குளிர் தாங்க மாட்டாள் என்பதை உணர்ந்து அவள் உறங்கிய பிறகு நள்ளிரவில் அவளைத் தூக்கிக்கொண்டு வந்து படுக்கையில் படுக்க வைத்ததும் அவன்தான் அதோடு அவளுடைய உடல் குளிரில் நடுங்காமல் இருக்க அவளைத் தன்னுடைய மார்போடு அணைத்துக்கொண்டு படுத்திருந்தான்.
இப்போது அவளுடைய கண்ணீர் துளிகள் அவனுடைய கையில் விழுந்துகொண்டிருந்தன அதைப் பார்த்தவனுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை எப்படியும் அவள் தன்னிடம் பதில் பேச மாட்டாள் என்பது புரிந்து போனது “காந்தா” என்று அவன் குரல் உயர்ந்தது.
அடுத்த கணமே மின்னல் வேகத்தில் காந்தா அங்கே வந்து நின்றாள் “எஜமானே…” என்று அவள் கேட்க “அவந்திகாவை பாருஅவளுக்கு வலி அதிகமா இருக்கு” என்று கூறியவன், தொட்டிலில் அழுதுகொண்டிருந்த குழந்தையை நோக்கி திரும்பினான்.
“நான் குழந்தைகளைப் பார்த்துக்கிறேன்” என்று சொல்லி குழந்தையை மெதுவாகத் தூக்கிக்கொண்டான் அழுதுகொண்டிருந்த அந்தக் குழந்தை அதன் சட்டையை நனைத்துவிட்டது அகோரன் அதைப் பற்றியெல்லாம் கவலைப்படவில்லை உடனே பிள்ளைக்கு உடை மாற்றி தன் குழந்தையைத் தோளில் சாய்த்துக்கொண்டு மெதுவாகத் தட்டிக்கொடுத்தான்.
காந்தா அவந்திகாவை அழைத்துக்கொண்டு அறையிலிருந்து வெளியே செல்ல ஆரம்பித்தாள் ஆனால் அந்த நேரத்திலும் அகோரனின் எண்ணம் முழுவதும் அவந்திகாவின் அழுத விழிகளிலேயே இருந்தது அவள் வலியால் கண்ணீர் விட்டதை நினைத்துக்கொண்டிருந்தவனின் முகம் மெல்ல மாறியது அவன் தன் கைகளில் இருந்த குழந்தையைப் பார்த்தான்.
பிறகு கதவை நோக்கிப் பார்த்தான் அவளுக்கு என்னவாயிற்றோ என்று அவன் மனம் மிகவும் பதட்டமடைய ஆரம்பித்தது அந்த நேரம் அவன் பாட்டி அறையின் உள்ளே வந்தவர் “நம்ப இனத்துல இருக்க பொண்ணா இருந்திருந்தா பிள்ளை பெற்ற மறுநாளே வேட்டையாட போயிருப்பா இந்த மனித இனத்தில் இருப்பவர்கள் எல்லாம் தைரியமற்றவர்கள் கோழைகள் தான் அகோரா” என்று கூற அகோரனுக்கு அவன் பாட்டி மீது கோபம் அவன் கண்கள் தீ பரவ பாட்டி பயந்து வெளியே சென்றார்.
அவனே தன்னவளுக்கு என்னவாயிற்றோ பதட்டத்துடன் இருக்க பாட்டி எரியும் நெருப்பில் எண்ணெய்யை ஊற்றி கொண்டு இருந்தார் அவந்திகாவுக்கு வயிறு மிகவும் வலிக்க காந்தாவுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை தனக்கு தெரிந்த மூலிகையை கொடுக்க வலி நின்ற பாடில்லை காரணம் அவளுக்கு மனிதர்களுக்கு ஏற்படும் வலியை பற்றி தெரியவில்லை அவந்திகா வலியோடு “காந்தா நான் குளிச்சிட்டு வரேன் ஹாஸ்பிட்டல் போறேன்” என்று கூற அவளும் சரி சென்றாள் பெண்ணவள் குளித்து முடித்து உடை மாற்றி வர காந்தா அகோரனிடம் விஷயத்தை அகோரனும் பிள்ளைகளை அழைத்து கொண்டு காரில் மனைவியுடன் மருத்துவமனைக்கு விரைந்தான்.
அகோரன் புயல் வேகத்தில் காரை ஓட்ட அடுத்த பத்து பதினைந்து நிமிடத்தில் மருத்துவமனை வந்து சேர்ந்தனர் மருத்துவர் பெண்ணவளை பரிசோதித்தவர் “ஒன்னுமில்லை டெலிவரி முடிஞ்சு எல்லா பொண்ணுங்களுக்கும் வர பெயின் சீக்கிரமே சரியாகிடும் நான் கொடுக்குற மாத்திரையெல்லாம் நேரத்துக்கு கொடுங்க” என்று கூற அகோரனும் சரியென தலையை ஆட்டினான் பிள்ளைகளை கையில் வைத்து கொண்டு.
மருத்துவர் மருந்துகளை எழுத செல்லும் முன் “உன் பெயர் என்ன மா” என்று கேட்க “அவந்திகா” என்றாள் “உன் ஹஸ்பன்ட் பெயர்” என்று கேட்க அவள் பார்வை அகோரனிடம் சென்று மீண்டது அவன் “அகோ..” என்று சொல்ல வர “அசோக்” என்றாள் அவரும் பெயரை எழுதி மாத்திரை மருந்துகளை எழுதி முடிக்க அகேரனின் முகம் இறுகியது அவந்திகா அவன் கையில் இருந்த மகனை வாங்கி கொள்ள.
அகோரன் மாத்திரை மருந்துகளை பிள்ளையை கையில் வைத்து கொண்டே வாங்கி வந்தான் காரில் அமர்ந்தவன் அவந்திகாவிடம் திரும்பி “என் பெயர் சொல்ல கூட உனக்கு பிடிக்கலையா” என்று இறுகிய முகத்துடன் அவன் கேட்க அவந்திகா அவனை திரும்பி பார்த்து முறைத்தவள் “அகோரன்னு ஒரு பேரு அதை வெளிய சொன்னா என்னை பத்தி எல்லாரும் என்ன நினைப்பாங்க அதான் மாத்தி சொன்னேன் இனிமே உங்க உலகத்தை விட்டு வெளிய வந்தா அசோக்ன்னே சொல்லி பழகிக்கோ” என்று அவள் கூற அகோரனின் முகம் மாறியது அவளை பார்த்தவன் முறைப்புடனே முகத்தை தூக்கி வைத்து கொண்டு காரை ஓட்டினான் “அசோக்” என்று ஒரு முறை அவளுக்கு கேட்க்காமல் சொல்லிப்பார்த்து கொண்டான்.
“எனக்கு பசிக்குது” என்று அவள் கூற செல்லும் வழியில் இருந்த ஒரு தள்ளுவண்டி கடை பக்கம் வண்டியை நிறுத்தியவன் பிள்ளையை அவள் மடியில் வைத்துவிட்டு சாப்பாட்டு தட்டுடன் வந்து அவள் பக்கத்தில் வந்து அமர்ந்தான் அவள் பிள்ளைகளை கையில் வைத்து கொண்டு தானே அவளுக்கு முறைப்புடன் ஊட்டி விட ஆரம்பித்தான் அவனுக்கு ஏதோ பிடிக்காததை போல முகத்தை வைத்து இருந்தாலும் இந்த நிமிடம் இப்படியே நீளாதா என்று தோன்றியது அவன் வாழ்வே திருப்தியடைந்ததை போன்ற ஒரு உணர்வை அவனுக்கு கொடுத்தது.