தீரா காதல் 1,2

தீரா காதல்

 

அத்தியாயம் 1

 

பரபரப்பான காய்கறி சந்தை இன்று வார சந்தை என்பதால் சற்று அதிகப்படியான கூட்டம் இருக்க தான் செய்தது கூட்டத்தோடு கூட்டமாக மக்கள் அங்கே நடந்து சென்று கொண்டிருந்தனர் அங்கிருந்த அனைவரையும் இடித்து தள்ளி விட்டு கொண்டு ஒருவன் தன் உயிரை கையில் பிடித்து கொண்டு தலை தெறிக்க ஓடி வந்து கொண்டு இருந்தான் அவன் உடல் எங்கும் ரத்த காயங்கள் இருந்தன அவனை துரத்தி கொண்டே நான்கைந்து ரெளடிகள் ஓடி வர ஒரு இடத்தில் அவன் தடுமாறி கீழே விழ அவன் முன் தன் வேட்டியை மடித்து கட்டிக் கொண்டு வெள்ளை வேட்டி சட்டை சகிதம் கழுத்தில் ஐந்தடுக்கு தங்க சங்கிலி இடது கையில் தங்க நிற கைக்கடிகாரம் வலது கையில் தங்க காப்புடன் அவன் வலது கையில் தங்கமயில் என்ற பெயர் பச்சை குத்தியிருந்தது அவன் திறந்து கிடந்த சட்டை பட்டனின் வழியே இடது நெஞ்சில் ஒரு பெண்ணின் உருவம் வரையப்பட்டு இருந்தது தன் வேட்டியை மடித்து கட்டிக் கொண்டு கையில் அருவாளுடன் வந்து நின்றான் சக்திவேல். 

 

சக்திவேல் பிரபல ரவுடி கட்டப்பஞ்சாயத்து ரெளடிசம் என்று அனைத்திற்கும் பெயர போனவன் மினிஸ்டரின் மகன் 

வயது 30 இன்று கூட அவனுக்கு எதிராக கோர்ட் படியேறி சாட்சி சொல்ல வந்த ஒருவனை கொல்வதற்க்காக தான் வந்திருந்தான் “ஐய்யோ அண்ணா என்னை வூட்டுருங்க நான் பிள்ளை குட்டிக்காரன்” என்று அவன் காலை பிடித்து கெஞ்ச அவன் சட்டையை பிடித்து தூக்கியவன் “பிள்ளை குட்டிக்காரன் எதுக்கு டா கோர்ட்டுக்கு வர என் மேல முப்பது கேஸ்சு இருக்கு ஒருத்தன் கூட இதுவரை சாட்சி சொல்ல வந்ததே இல்லை அதுலையே தெரிய வேண்டாமா நான் யாருன்னு” என்று கேட்க “அண்ணேன் ஏதோ தெரியாம வந்துட்டேன்” என்று அவன் முன் கையெடுத்து கும்பிட அவன் கையில் ஓங்கி வெட்டினான் ரத்தம் வடிய அலறி கொண்டே தரையில் விழுந்தான் அவன் அங்கிருந்த அனைவரும் இதை பார்த்தும் அதில் ஒருவர் கூட ஏன் என்று அவனிடம் தட்டி கேட்க்கவில்லை காவலர்கள் பார்த்தும் அவனை கண்டுகொள்ளவில்லை அவனை எதிர்க்கும் தைரியம் அங்கிருந்த யாருக்கும் இல்லை. 

 

தன் முகத்தில் இருந்த ரத்த கறையை தன் சட்டையில் துடைத்து கொண்டவன் தன் டாடா சுமோவில் வீட்டிற்க்கு சென்றான் 

மாளிகை போன்று இருந்த வீட்டின் உள்ளே அவன் தாய் பாண்டியம்மா சோபாவில் அமர்ந்து கொண்டு வெற்றிலையில் சுண்ணாம்பு தடவி வாயில் வைத்து மென்று கொண்டு இருந்தார் பாண்டியம்மாவுக்கு மூன்று மகன்கள் முதலில் பிறந்த இருவருக்கும் திருமணம் முடிந்து விட சக்திவேலுக்கு மட்டும் தான் இன்னும் திருமணமாகவில்லை. 

 

வீட்டின் உள்ளே ரத்த கறையுடன் வந்த மகனை பார்த்தவர் “எவ்வளவு நேரமா டா நான் காத்துக் கிடக்குறது நல்ல நேரம் முடியறதுக்குள்ள போக வேண்டாமா” என்று கத்தி கொண்டு இருந்தார்

“வரேன் இரு மா” என்று தன் கட்டை குரலில் கூறிய சக்திவேல் குளியலறையின் உள்ளே சென்று குறித்து முடித்து வர அனைவரும் கிளம்பினர். 

 

குடும்பமே சேர்ந்து சக்திவேலுக்கு பெண் பார்க்க சென்றது இல்லை இல்லை அவன் மனைவியை பார்க்க சென்றனர் ஆம் சுமார் பத்து வருடத்துக்கு முன்பு அப்போது சக்திவேலுக்கு 20 வயது இருக்கும் அப்போதே அவன் அண்ணன்மார்க்ளுக்கு திருமணமாகி இருந்தது பாண்டியம்மாவின் தந்தை வைத்தீஸ்வரன் உடம்புக்கு முடியாமல் சீரியசாக இருந்தார். 

 

பாண்டியம்மா குடும்பம் அவரை பார்க்க சென்றது பாண்டியம்மாவின் சொந்த அண்ணன் சுதாகர் மனைவி ஜானகி அவரின் மகள் தங்கமயில் மற்றும் மகன் அருணுடன் அங்கு வந்திருந்தார் தன் தங்கையை பார்த்தவுடன் அவர் முகத்தை சுளித்தார் காரணம் சுதாகருனுக்கு தங்கை குடும்பத்தை கண்டாலே ஆகாது அவர் படித்து முடித்து அரசு ஊழியராக வேலை செய்ய அவர் மனைவியும் அரசு ஊழியராக தான் இருந்தார்

படித்த குடும்பம் ரெளடிசம் கட்டப்பஞ்சாயத்து என்று சுற்றி கொண்டு இருக்கும் தங்கை குடும்பத்தை கண்டாலே ஆகாது இருவரும் பேசிக் கொள்வது கூடயில்லை. 

 

மகன் குடும்பம் மகள் குடும்பத்தை பார்த்து கண்ணீர் வடித்தார் வைத்தீஸ்வரன் 

எங்கே இருவரும் கடைசி வரை பேசாமலேயே இருந்து விடுவார்களோ

என்று பயந்தவர் தன் இளைய பேரன் சக்திவேலை பார்த்தவர் அவனின் கையை பிடித்து “எனக்காக ஒன்னு பண்ணுவியா சக்திவேலு தாத்தாவோட கடைசி ஆசை” என்று கேட்க “சொல்லுங்க தாத்தா என்ன பண்ணனும்” என்று அவன் கேட்க பக்கத்தில் நின்றிருந்த பேத்தி தங்கமயிலின் கையை பிடித்தவர்

“எனக்காக என் பேத்தியை கட்டிக்கிறியா ராசா” என்று கண் கலங்க கேட்க. 

 

பாண்டியம்மா உடனே “என்ன பா இப்படி கேட்டுடிங்க என் மவனை தவிர என் அண்ணன் மகளை யார் கட்டுவா” என்று கேட்க சுதாகரன் உடனே தன் மகளின் கையை பிடித்து இழுத்து தன் அருகில் நிறுத்தி வைத்து கொண்டார். 

 

சக்திவேல் ஒரு கணம் கூட யோசியாமல் 

“நான் கட்டிக்கிறேன் தாத்தா” என்று கூற 

வைத்தீஸ்வரன் மெல்ல எழுந்து அமர்ந்தவர் தன் கழுத்தில் இருந்த தங்க சங்கிலியை கழட்டி “இது தங்கமயிலு கழுத்துல போடு” என்க சுதாகரனுக்கு உடனே கோபம் வந்தது “அப்பா அவள் சின்னப்பிள்ளை என்ன பண்றிங்க” என்று கோவப்பட “அண்ணன் நம்ப அப்பாவோட கடைசி ஆசை” என்று பாண்டியம்மா கூற. 

 

“அதெல்லாம் முடியாது என் மகள் கழுத்துல எவனும் எதையும் போடக் கூடாது” என்று அவர் கூற அவரின் மனைவி ஜானகி தான் அவரை சமாதானம் செய்தார் “என்னங்க பாவம்ங்க மாமா செயின் தான போட சொன்னாரு போட்டா போட்டுட்டு போகட்டும்” என்று அவருக்கு மட்டும் கேட்க்கும் குரலில் கூற அவரும் தந்தையின் முகத்தை பார்த்தவர் மனம் மாறி விட. 

 

சக்திவேல் தங்கமயிலின் கழுத்தில் தங்க சங்கிலியை அணிவித்து தன் மனைவியாக ஏற்றுக் கொண்டான் பத்து வயது தங்க மயிலுக்கு அப்போது என்ன நடக்கிறது என்று தெரியவில்லை மாமன் தன் கழுத்தில் செயின் போடுகிறான் என்று தான் நினைத்தாள் ஆனால் பத்து வருடங்கள் கழித்து வந்து அதே மாமன் வந்து தன்னை தொல்லை செய்ய போகிறான் என்று அவள் அறிந்திருக்க வாய்ப்பில்லை. 

 

மறுநாள் வைத்தீஸ்வரன் இறந்து விட அவரின் உடல் நல்ல முறையில் அடக்கம் செய்யப்பட்டது அடுத்த ஒரு மாதத்தில் சுதாகரன் அவர் மனைவியுடன் டிரான்ஸ்பர் வாங்கி கொண்டு வேறு ஒரு ஊருக்கு சென்று செட்டிலாகிவிட்டார். 

 

அதன் பின் சக்திவேல் தங்கமயிலை பார்க்கவில்லை ஆனால் அவன் மனதில் அவள் தான் மனைவி என்பது மட்டும் ஆழமாக பதிந்து இருந்தது அவளின் சிறு வயது புகைப்படத்தை தன் நெஞ்சில் படமாக வரைந்து வைத்திருந்தான் கையில் அவள் பெயரை பச்சை குத்தினான். 

 

தங்கமயிலுக்கு பதினைந்து வயதாக இருக்கும் போது அவள் பெரிய பெண்ணாகி விட ஒரு லாரி நிறைய சீர் வரிசை எடுத்து சென்று ஊரையே ஆச்சரியப்பட வைத்தான் அன்று அனைவரும் அவளுக்கு சந்தனம் பூசி நூலுங்கு வைக்க சக்திவேலும் வந்து வைத்தான் அவள் கன்னத்தில் அழுத்தமாக பதிந்தது அவன் கைகள் “சீக்கிரமா வளரு டி மாமா எவ்வளவு நாளு தான் உனக்காக காத்து கிடப்பேன்” என்று அவளுக்கு மட்டும் கேட்க்கும் குரலில் அவன் பேச அவளுக்கு ஒன்றும் புரியவில்லை. 

 

அதன் பின் அவளுக்கு பதினெட்டு வயதாக 

உடனே திருமணம் செய்து வைக்க வேண்டும் பாண்டியம்மா பெண் கேட்க 

“அவளுக்கு படிப்பு முடியட்டும்” என்று ஏதேதோ சொல்லி சமாளித்தார் சுதாகரன் ஆனால் அவருக்கோ சக்திவேலுக்கு அவளை திருமணம் செய்து வைக்க துளி அளவு கூட விருப்பம் இல்லை. 

 

நாட்களும் நகர்ந்தது இன்று தங்கமயிலுக்கு 20 வயதாகிவிட்டது அவளும் இன்னும் ஆறு மாதத்தில் கல்லூரி படிப்பை முடிக்க போகிறாள் அதனால் குடும்பமே சேர்ந்து தங்கமயிலை பெண் கேட்க கிளம்பியது பாண்டியம்மா கணவர் செல்லப்பாண்டி மட்டும் சென்னையில் இருக்க அவரால் மட்டும் வர முடியவில்லை. 

 

குடும்பமே இரண்டு மூன்று டாடா சுமோவில் அந்த கவர்மென்ட் குவார்ட்டர்ஸ் வளாகத்தின் வெளியே சென்று நின்றது 

அங்கிருந்த கட்டிடங்களை பார்த்தவர்கள்

“எம்மா இதுல மாமா வீடு எங்க” என்று மூத்தவன் கேட்க “நாலாவது மாடில இரண்டாவது வூடு” என்றார் பாண்டியம்மா வெத்தலையை மென்று கொண்ட அனைவரும் தாம்பூல தட்டுடன் வீட்டின் கதவை சென்று தட்ட ஜானகி தான் வந்து கதவை திறந்தார் பாண்டியம்மா மற்றும் அவர் குடும்பத்தை பார்த்தவர் “வாங்க அண்ணி” என்றார் அதை வெளிக்காட்டி கொள்ளாமல். 

 

ஆண்கள் அனைவரும் வந்து சோபாவில் அமர பெண்கள் தரையில் அமர்ந்தனர் சக்திவேலுக்கு மட்டும் நாற்காலி கொடுக்கப்பட்டது ஜானகி உள்ளே சென்று தன் கணவனை உசுப்ப அவரும் வெளியே வந்தார். 

 

“என்ன விஷயமா வந்துருக்கிங்க” என்று முகத்தை உர்ரென்று வைத்து கொண்டு கேட்க “வேற எதுக்கு என் மருமவள பொண்ணு கேட்க தான்” என்றார் பாண்டியம்மா. 

 

சுதாருக்கு கோபம் வந்தாலும் அதை அடக்கி கொண்டு “பாண்டி சொல்றேன்னு தப்பா நினைச்சிக்காத உன் மவன் வயசு என்ன என் மவள் வயசு என்ன ஏதோ சின்ன வயசுல நடந்ததை இப்போ வரை மனசுல வச்சிட்டு வந்து பொண்ணு கேட்டா எப்படி 

அவளுக்கு நான் ஒரு நல்ல இடமா பார்த்து கட்டி வைக்கலாம்ன்னு இருக்கேன்” என்று கூறியது தான் தாமதம் சக்திவேலுக்கு எங்கிருந்து தான் அவ்வளவு கோபம் வந்ததோ தன் காலின் முன்னே இருந்த தாம்பூல தட்டை உதைத்தவன் 

“யோவ் மாமா வாலிப வயசுல இருந்து உன் மவளை மட்டும் தான் மனசுல நினைச்சிட்டு இருக்கேன் நான் எவ்வளவு கெட்டவனா இருந்தாலும் ஒரு பொண்ணை கூட இதுவரை ஏறெடுத்து பார்த்து இல்லை அவள் தான் பொண்டாட்டி நான் தான் அவள் புருசன்னு வாழ்ந்துட்டு இருக்கேன் இதை யாராலும் மாத்த முடியாது எவ்வளவு தைரியம் இருந்தா என் முன்னாடியே என் பொண்டாட்டிக்கு இன்னொருத்தனை கட்டி வைப்பேன்னு சொல்லுவ குடும்பத்தோட வெட்டி போட்ருவேன்” என்று அருவாளை கையில் எடுத்து கொண்டு கர்ஜிக்க அவனை பார்த்து பயந்தேவிட்டார் 

சுதாகரன் “டேய் சும்மா இரு டா எதுக்கெடுத்தாலும் அருவாளை தூக்கிக்கிட்டு அண்ணன் அந்த மாதிரி எதுவும் பண்ண மாட்டாரு” என்று அவனை அடக்கியவர் “இந்த பாரு அண்ணே வர முகூர்த்தத்துல அஞ்சாம்  தேதி நாளு நல்லா இருக்கு உன் பொண்ணை நீயே கட்டி கொடுத்தாலும் சரி தான் என் மவன் அவளை தூக்கிட்டு போய் தாலி கட்டுனாலும் சரி தான் நீயே பார்த்துட்டு உன் முடிவை சொல்லு நாங்க வரோம்” என்று கூறிவிட்டு பாண்டியம்மா மகன் மருமகளை அழைத்து கொண்டு அங்கிருந்து சென்றார். 

 

அத்தியாயம் 2

 

சுதாகரனும் அவர் மனைவியும் என்ன செய்வது என்று தெரியாமல் விழி பிதுங்கி நின்றிருந்தனர்.

 

அதேநேரம் சக்திவேல் கோபத்துடன் நின்றிருக்க அவனின் வலது கையான அய்யனார் “அண்ணேன் அண்ணினா உங்களுக்கு ரொம்ப பிடிக்குமா” என்று கேட்க அவனை திரும்பி பார்த்தவன்

“அவள் என் உயிரு டா” என்றான்

“அண்ணன் அண்ணி எப்படி இருப்பாங்க” என்று அவன் கேட்க “அவள் தங்க சிலை மாதிரி இருப்பா டா” என்றான் பதிலுக்கு சக்திவேல். 

 

“நீங்க அண்ணியை நேர்ல பார்த்திருக்கிங்களா” என்று கேட்க 

“ம்ம் பார்த்துருக்கனே அவள் சமைஞ்சு உட்கார்ந்த அப்போ ஓலை கட்ட போனேன் அப்போ பார்த்தேன் ஊதா கலர் தாவணியில அம்சமா இருந்தா” என்றான் சக்திவேல் அவளை எண்ணி கொண்டே 

“அண்ணேன் இப்போ பார்த்துருக்கிங்களா” என்று அவன் கேட்க “இல்லை டா படிக்கிற பிள்ளையை எதுக்கு தொல்லை பண்ணிக்கிட்டுன்னு போய் பார்க்கல” என்றான். 

 

“என்ன அண்ணேன் நீங்க காலம் எப்படி போய்ட்டு இருக்கு கல்யாணத்துக்கு தான் இன்னும் நாள் இருக்கே அதுக்குள்ள அண்ணியை உங்களை லவ் பண்ண வைங்க” என்றான் அய்யனார். 

 

“என்ன டா சொல்ற” என்று அவன் அவனை பார்த்து கேட்க “ஆமா அண்ணே இந்த கல்யாணத்துக்கு முன்னாடி இருக்க கொஞ்ச நாள் இருக்கே நல்லா இருக்கும் நானும் என் பொண்டாட்டியும் இப்படி தான் லவ் பண்ணி ஊர் ஊரா சுத்துனோம் கல்யாணத்துக்கு முன்னாடி” என்றான். 

 

“ஓஹோ அதனால தான் உன் பொண்டாட்டிக்கு ஏழு மாசத்துலையே குழந்தை பிறந்துச்சா” என்று அவன் தோளில் கைப்போட்டு கொண்டே கேட்க 

அய்யனார் வெட்கப்பட ஆரம்பித்தான்

“அட சும்மா இருங்கன்னே உங்க கதைக்கு வாங்க அண்ணியை போய் பார்த்துட்டு வரலாம் வாங்க” என்று கூற சக்திவேலும் ஆர்வத்துடனே கிளம்பினான். 

 

பிரபல கல்லூரி வளாகம் மாணவ மாணவிகள் பரபரப்புடனே இங்கும் அங்கும் நடந்து சென்று கொண்டு இருந்தனர் அந்த கல்லூரியின் வாசலில் வெள்ளை நிற 

டாடா சுமோ நான்கைந்து வரிசையாக வந்து நின்றது அதில் முதல் வண்டியில் இருந்து வெள்ளை வேட்டி சட்டையில்  வேட்டியை மடித்து கட்டிக் கொண்டு தன் கையில் இருந்த தங்க காப்பை இழுத்து விட்டு கொண்டு பத்து பதினைந்து அடியாட்களுடன் கல்லூரி வாயிலின் உள்ளே நுழைந்தான் சக்திவேல். 

 

அங்கே நின்றிருந்த செக்யூரிட்டி கையை நீட்டி அவர்களை தடுத்தவன் “வெளி ஆளுங்க யாரும் உள்ள போகக் கூடாது சார்” என்று கூற அடுத்த கணம் சக்திவேலின் அடியாட்கள் தங்களின் முதுகில் இருந்த அருவாளை எடுத்தனர் 

“எங்க அண்ணனையே உள்ள போக கூடாதுன்னு சொல்றியா” என்று ஒருவன் அவரை முறைத்து கொண்டே கேட்க

அவரோ பயந்து நடுங்க ஆரம்பித்தார்

இன்னொருவன் “இந்த காலேஜ்ல தான் எங்க அண்ணன் பொஞ்சாதி அண்ணி படிக்கிறாங்க அவங்களை பார்க்க தான் எங்க அண்ணன் வந்துருக்காரு வழியை விடு டா” என்று மிரட்ட அடுத்த நொடி அவரும் பயந்து ஒதுங்கி நின்றார். 

 

“தங்கமயிலு கிளாஸ் எங்க டா இருக்கு” என்று சக்திவேல் தன் அடியாட்களிடம் கேட்க “அண்ணேன் ஒவ்வொரு கிளாஸ்சா போவோம் எப்படியோ கண்டுபிடிச்சிருவோம்” என்று கூற 

ஒவ்வொரு அறையாக தேடிச் சென்றனர் இறுதியாக தங்கமயிலின் வகுப்பை தேடி கண்டுபிடித்து நுழைய அங்கே அவளின் பக்கத்தில் அமர்ந்து ஒரு மாணவன் புத்தகத்தை வைத்து கொண்டு ஏதோ சந்தேகம் கேட்டு கொண்டு இருந்தான் அதை பார்த்தவன் தன் முதுகில் இருந்த அருவாளை வெளியே எடுத்து அவன் கையில் ஓங்கி வெட்ட அவன் கையில் விழுந்த வெட்டில் அவன் “அம்மாஆஆ” என்று அலறி துடித்தான் “எவ்வளவு தைரியம் இருந்தா என் பொண்டாட்டி பக்கத்துலயே உட்காருவ” என்று கொலைவெறியுடனே கத்த அவனின் அடியாட்கள் கத்தி கொண்டே அவன் அருகில் ஓடிவந்து அவனை அடித்து துவைத்து வெளியே தூக்கி போட்டனர் அதுமட்டுமின்றி மொத்த வகுப்பையும் வெளியே விரட்டி விட்டனர். 

 

அந்த மாணவனின் ரத்தம் சக்திவேலின் சட்டையில் ஒட்டியிருக்க பெண்ணவளை பார்த்து “அடி தங்கமயிலு” என்று சக்திவேல் காதலுடன் அழைத்து கொண்டே அவள் பக்கத்தில் வந்து அமர தங்கமயிலோ அவன் சட்டையில் இருந்த ரத்த கரையை பார்த்தவளின் முகம் வியர்த்து வடிந்தது கை கால் எல்லாம் உதறல் எடுத்தது கண்கள் இருட்டியது பயந்து மேசையிலேயே மயங்கி விழுந்தாள். 

 

தங்கமயிலுக்கு சிறுவயதில் இருந்தே தன் மாமனை கண்டால் பயம் சில நாட்களுக்கு முன்பு அவன் மார்கெட்டில் வைத்து வெட்டிய ஒருவனை தூரத்தில் இருந்து பார்த்தவள் அடுத்த ஒரு வாரம் காய்ச்சலில் படுத்தேவிட்டாள் இப்போது அவனே நேரில் வந்தாள் என்ன செய்வாள். 

 

“தங்கம் தங்கம் எழுந்துரு டி” என்று அவளை உலுக்க அவள் அப்போதும் எழுந்து கொள்ளவேயில்லை தன் பக்கத்தில் இருந்த இருக்கையில் ஒரு தண்ணீர் பாட்டில் இருப்பதை பார்த்தவன் அதை எடுத்து அவள் முகத்தில் தெளித்தவன் அவள் கன்னத்தை தட்டி

“தங்கம் எழுந்து மாமனை பாரு டி” என்று அழைக்க அவளின் கண்ணை மூடியிருந்ததில் கருவிழிகள் லேசாக அசைந்தது மெல்ல கண்ணை திறந்தவள் சக்திவேலின் முகம் இவ்வளவு அருகில் இருப்பதை பார்த்து பயந்து “அம்மாஆஆஆ” என்று கத்தி அலறியவள் எழுந்து அடித்து பிடித்து கொண்டு ஓடி ஒரு மூலையில் அமர்ந்து கொண்டாள். 

 

“தங்கமயிலு நான் தான் டி உன் புருசன் எதுக்கு என்னை பார்த்து பயப்படுற இப்படி எல்லாம் பயந்தா எப்படி டி மாமனுக்கு புள்ளை பெத்து கொடுப்ப” என்று கேட்க அவளோ அதிர்வுடனே அவனை நிமிர்ந்து பார்க்க “என்ன அப்படி பார்க்குற நிறையாலாம் வேண்டாம் ஒரு பத்து புள்ளை போதும் பெரிய அண்ணனுக்கு ரெண்டும் பையன் சின்ன அண்ணனுக்கு ஒரு பையன் நமக்கு மட்டும் வரிசையா பொம்பளை புள்ளை தான் வேணும்” என்று கூறிக் கொண்டு இருக்க அவளின் கண்கள் பயத்தில் அகல விரிந்தது. 

 

“மா… மா…. மாமா எனக்கு இந்த கல்யாணத்துல விருப்பம் இல்லை நிறைய படிக்கணும்” என்று தேம்பலுடன் அழுகையுமாக திக்கி திணறி வந்தது அவள் குரல் “கல்யாணம் வேண்டாம்ன்னு நீ எப்படி சொல்லலாம் நமக்கு தான் ஏற்கனவே கல்யாணம் முடிஞ்சிருச்சே தங்கம் நீ படிக்கனும்ன்னா தாரளமா படி உன்னை எவன் படிக்க வேண்டாம்ன்னு சொன்னான் எனக்கு வயாசாகிட்டே போகுது பொண்டாட்டி இருக்கும் போது புள்ளை வேணும்ன்னு நான் இன்னொருத்தி கிட்ட எப்படி போய் கேட்ப்பேன் அது மட்டும் இல்லை எனக்கு இளையவன்லாம் கல்யாணம் முடிஞ்சு பிள்ளை குட்டின்னு  இருக்கானுக எனக்கும் அப்படி இருக்கனும்ன்னு ஆசை வராதா சொல்லு” என்று கேட்க. 

 

“மாமா நீ வேணும்ன்னா வேற நல்ல பொண்ணா பார்த்து கட்டிக்க மாமா” என்று அவள் கூற அடுத்த கணம் அவள் கன்னத்தில் ஒங்கி பளார் என்று ஒரு அறைவிட்டான் சக்திவேல் அவன் இரும்பு கரங்கள் அவளின் கன்னத்தில் பதிந்து கன்னம் சிவந்து காதில் இருந்து ஏதோ சத்தமெல்லாம் கேட்டது “நான் ஏகபத்தினி விரதன் டி எனக்கு தெரியாதா இன்னொரு பொண்ணை தேடி போக எனக்கு இந்த ஜென்மத்துல நீ மட்டும் தான் எனக்கு பொண்டாட்டி நான் மட்டும் தான் புருசன் புரிஞ்சுதா” என்று அவன் கத்த அந்த வகுப்பறை முழுக்க அவன் குரல் எதிரொலித்தது. 

 

தங்கமயில் கன்னத்தில் கை வைத்து கொண்டு தேம்பி தேம்பி அழுக “வலிக்குதா தங்கம்” என்று அவளின் கன்னத்தை தொட்டு கேட்டவன் “மாமனை கஷ்டப்படுத்துற மாதிரி இனிமே பேசாத டி உனக்கு வலிச்சா எனக்கும் தான் வலிக்குது” என்று கூறிக் கொண்டே இருக்க 

அந்த வகுப்பறையின் கதவு படார் என்று சத்தத்துடனே திறக்கப்பட்டது இருவரும் அங்கே திரும்பி பார்க்க இரண்டு மூன்று காவல் அதிகாரிகள் அங்கே வந்தனர். 

 

“சார் நீங்க தானா” என்று சக்திவேலை பார்த்து பேச “என்ன விஷயம்” என்று கேட்டான் பதிலுக்கு “இந்த காலேஜ்ல இருந்து கம்ப்ளைன்ட் வந்தது அதுக்காக தான் வந்தோம்” என்று கூற “ஓஹோ அதெல்லாம் ஒன்னும் இல்லை” என்று அவன் கூற “சரிங்க சார் அந்த பையன் கையை வெட்டி இருக்கிங்க” என்று தயங்கி தயங்கி கூற “அதெல்லாம் ஒன்னும் பிரச்சனை இல்லை நீயே கவனிச்சிக்க வீட்டுக்கு வந்து காசு மட்டும் வாங்கிட்டு போ” என்றான் “சரிங்க சார்” என்று அவனுக்கு சல்யூட் வைத்துவிட்டு அங்கிருந்து செல்ல தங்கமயில் பயத்துடன் நின்றிருந்தாள். 

 

“தங்கம் இன்னைக்கு எதுவுமே சரியில்லை 

நாளை காலையில மாமா வரேன் நாம கல்யாணத்துக்கு முன்னாடி நிறைய லவ் பண்ணுவோம் வரேன் பாய்” என்று அவளிடம் கூறிவிட்டு அவன் செல்ல பித்து பிடித்தவளை போல நின்றிருந்தாள் பெண்ணவள். 

 

தங்கமயிலுக்கு தெரிந்து போனது அவனை எதிர்த்து இங்கு எதுவும் செய்ய முடியாது என்று அழுத விழிகளை துடைத்து கொண்டு வெளியே வர அவளின் சக மாணவர்கள் அவளை பார்த்து ஒதுங்கி சென்றனர் சொல்லப்போனால் அவள் இருக்கை பக்கத்தில் கூட யாரும் அமரவில்லை. 

 

அவள் விரக்தியுடனே வீடு வந்து சேர அவள் வீட்டின் நடு ஹாலில் சக்திவேல் எட்டி உதைத்து விட்டு சென்ற தாம்பூல தட்டு பூ பழங்கள் புடவை என்று அனைத்தும் சிதறி கிடந்தது அவளின் தாய் ஒரு மூலையில் அழுது கொண்டே இருக்க தந்தை இடிந்து போய்  அமர்ந்திருந்தார். 

 

தங்கமயிலை பார்த்த அவளின் தாய் அவளை கட்டிக் கொண்டு அழ அவளும் அழுதாள் கல்லூரி நடந்த நிகழ்வை கூறி 

இரவெல்லாம் வீட்டில் இருந்த ஒருவர் கூட உறங்கவில்லை மறுநாள் கல்லலூரிக்கு தங்கமயில் செல்லவில்லை அவளுக்கு காய்ச்சல் அடித்தது சக்திவேல் கல்லூரிக்கு வந்து அவளை தேடி ஏமார்ந்தவன் வீட்டுக்கு கிளம்பினான் அடுத்து வந்த ஒரு வாரமும் அவள் வராமல் இருக்க சக்திவேலுக்கு அவளை கொன்றுவிடும் ஆத்திரம் எழுந்தது. 

 

சக்திவேல் கோபத்துடனே காரில் ஏறியவன் நேரே அவள் வீட்டுக்கு சென்றான் அவள் தாய் தந்தை வேலைக்கு சென்றிருக்க தங்கமயில் மட்டும் வீட்டில் இருந்தாள் 

கதவை தட்ட கை வைக்க அது தன்னால் திறந்து கொண்டது விறுவிறுவென நடந்து வேகமாக உள்ளே சென்றவன் அங்கு அவன் கண்ட காட்சியை பார்த்து அப்படியே நின்றுவிட்டான். 

    3 comments

    Leave a Reply to Buvana Buvana Cancel reply

    Your email address will not be published. Required fields are marked *