கைக்கிளை மாயம் 5,6
அத்தியாயம் 5
பிரம்மா அங்கிருந்து தன் கேபினுக்கு விறுவிறுவென நடந்து வந்து வேகமாக கதவை மூடினான் அவனுக்கு இப்போதும் கோபம் குறையவே இல்லை ‘அவள் யார் கூட பேசுனா எனக்கு என்ன’ என்று தனக்குத்தானே கேட்டுக் கொண்டவனுக்கு அவன் எதற்க்காக கோவப்படுகிறான் என்பதற்க்கான பதில் மட்டும் அவனுக்கு கிடைக்கவேயில்லை.
சத்யா ரோஜாவை அழைத்தது… அவள் அவனிடம் சிரித்துப் பேசியது… இருவரும் ஏதோ பேசிக் கொண்டிருந்தது… எல்லாமே அவன் கண் முன்னால் வந்து கொண்டே இருந்தது “ச்சே…” என்று எரிச்சலுடன் தன் மேசையை கோபத்துடன் தட்டியவன் நாற்காலியில் வந்து அமர்ந்தான் அவனுக்கு தலைவலி ஆரம்பித்திருந்தது மேசையில் இருந்த தண்ணீரை எடுத்துக் குடித்தவன் சில நொடிகள் கண்களை மூடி அமர்ந்திருந்தான்
ஆனால் கண்களை மூடியதும் கூட ரோஜாவின் முகம் தான் நினைவுக்கு வந்தது.
அவளுடைய அந்த அமைதியான முகம்…
அவன் ஏதாவது கேட்டால் உடனே பதில் சொல்லாமல் தயங்கி நிற்கும் விதம்…
இன்று சத்யாவிடம் மட்டும் இயல்பாகப் பேசியது…மீண்டும் அவனுக்குள் கோபம் எழுந்தது ‘அது எப்படி அவன் கிட்ட மட்டும் தெளிவா தயக்கப்படாம பேசுறா ரெண்டு பேருக்கும் எதாவது தொடர்பு இருக்குமோ ஏற்கனவே தெரியுமா இவ்வளவு சாதரணமா பேசுறாங்க’ என்று நினைத்தான்
‘அவங்க காதலிச்சா கூட எனக்கு என்ன ஒருவேளை காதலிக்கிறிங்களா ச்சை இருக்காது’ என்று யோசித்தவன் மனதில் ஒரு ஆயிரம் இல்லை இல்லை பத்தாயிரம் கேள்வி வந்தது அந்த கேள்வியே அவனை எரிச்சலடையச் செய்தது.
அதே நேரம் மருத்துவமனையின் மறுபுறம் ரோஜா தன் வேலையில் மூழ்கியிருந்தாள்
அவளுக்கு பிரம்மாவின் இன்றைய நடவடிக்கைகள் சற்று வித்தியாசமாகத்தான் இருந்தது காலையில் அவளைப் பார்த்த விதம்…பின்னர் சத்யா தன்னிடம் பேசும்போது அவனுடைய முகம் மாறியது அனைத்தையும் அவளும் கவனித்து கொண்டு தான் இருந்தாள்
எல்லாமே அவளுக்கு குழப்பமாக இருந்தது.
“என்னடி இவ்வளவு யோசனை”
என்று அவள் அருகில் வந்த நந்தினி கேட்க,
“ஒன்னுமில்லை” என்றாள் பெண்ணவள்
“அப்புறம் ஏன் முகத்தை இப்படியே வச்சிருக்க உம்முன்னு” என்று கேட்க
“எனக்கு வேலை இருக்கு அதான் நீயும் உன் வேலையை பாரு” என்று கூறிவிட்டு ரோஜா வேறு பக்கம் திரும்பிக் கொண்டாள்.
நந்தினி அவளை சந்தேகமாகப் பார்த்தாள்
“நீ எதையோ மறைக்கிற மாறி இருக்கு” என்று கூற “என்ன இருக்கு” என்று அவள் கேட்க
“அதை நீதான் சொல்லனும்” என்றாள்
“நான் எதையும் மறைக்கல என்னை தொல்லை பண்ணாத” என்றாள் ரோஜா
“சரி விடு ஆனா நான் கண்டுபிடிக்காம விடமாட்டேன்” என்று கூறிவிட்டு நந்தினி சிரித்துக் கொண்டே சென்றாள் ரோஜாவும் அவளைப் பார்த்து சிரித்தாள் அந்த நேரத்தில் அவள் எதிரே வந்த பிரம்மாவின் பார்வை அந்தச் சிரிப்பில் விழுந்தது அவன் நடந்து கொண்டிருந்த கால்கள் ஒரு நொடி நின்றன அவள் சிரிக்கும் போது முகத்தில் தெரிந்த அந்த சந்தோஷத்தைப் பார்த்தவன் ஏனோ சில நொடிகள் அப்படியே பார்த்துக் கொண்டிருந்தான் பின்னர் தன்னைச் சுதாரித்துக் கொண்டு வேறு பக்கம் திரும்பி நடந்தான் இருப்பினும் அவன் மனதில் கோபமும் வந்தது ‘அது எப்படி இவள் மட்டும் சந்தோசமா இருக்கா’ என்று நினைத்தான்.
மதிய நேரம் ரோஜா கேன்டீனில் நந்தினியுடன் சாப்பிட்டுக் கொண்டிருந்தாள்
அப்போது சத்யா அங்கே வந்தவன்,
“ரோஜா, அந்த பேஷன்ட் ஃபைல் பார்த்திங்களா” என்று கேட்டான்
“இல்ல சார் இப்போதான் சாப்பிட உட்கார்ந்தேன்” என்றாள் “சரி, சாப்பிட்டு முடிச்சதும் என்னை வந்து பாருங்க” என்று கூறினான்.
“சரிங்க சார்” என்றாள் அவ்வளவுதான் வேறு எதுவும் பேசவில்லை ஆனால் சில அடி தூரத்தில் நின்றிருந்த பிரம்மாவின் காதுகளில் அந்த உரையாடல் விழுந்தது அவன் முகம் மீண்டும் இறுகியது ‘எதுக்கு இவளையே கூப்பிட்டுட்டு இருக்கான் அப்படி என்ன தான் இவங்க ரெண்டு பேரும் பேசுவாங்க’
என்று நினைத்தவன் தன்னுடைய எண்ணத்தைக் கேட்டதும் தானே சற்று அதிர்ந்தான்.
‘அவள் வேலை தானே செய்றா… அவளை யார் கூப்பிட்டா எனக்கு என்ன’
என்று மீண்டும் தனக்குத்தானே சொல்லிக் கொண்டான் ஆனால் மனம் மட்டும் அதை ஏற்றுக் கொள்ளவில்லை அவன் அங்கிருந்து செல்ல முயன்றான் அப்போது ரோஜா திடீரென்று அவனைப் பார்த்தாள் இருவருடைய பார்வையும் ஒருவரை ஒருவன் சந்தித்தது ரோஜா உடனே பார்வையைத் தாழ்த்திக் கொண்டாள் பிரம்மா மட்டும் அவளைப் பார்த்தபடியே சில நொடிகள் நின்றான் அவள் தன்னைப் பார்த்ததும் ஏன் அப்படி பார்வையைத் திருப்பிக் கொண்டாள் என்ற கேள்வி அவன் மனதில் எழுந்தது
அவளிடம் சென்று ஏதாவது கேட்க வேண்டும் போல இருந்தது ‘ஆமாம் பெரிய இவள் இல் கிட்ட நான் ஏன் போய் பேசனும்’ என்று நினைத்தான் ஆனால் அவளிடம் என்ன கேட்பது என்று அவனுக்கே தெரியவில்லை இறுதியில் எதுவும் பேசாமல் அங்கிருந்து சென்றுவிட்டான் அவன் சென்றதும் நந்தினி ரோஜாவின் முகத்தைப் பார்த்தாள்.
“ஏய்…” என்று அழைக்க “என்ன டி” என்று கேட்டாள் ரோஜா “அவர் உன்னைப் பார்த்துட்டு போறாரு டி” என்றாள் ரோஜா உடனே,
“யாரு” என்று கேட்க “வேற யாரு உன் ஆளு பிரம்மா சார் தான்” என்று கூற ரோஜா அவளை பார்த்து முறைத்தாள் “இந்த மாதிரிலாம் பேசாத இன்னும் ஒரு மாசத்துல நாம இங்க இருந்து போய்டுவோம் ஆனா எல்லாரும் நம்மளை பத்தி என்ன நினைப்பாங்க அவர் எல்லாரையும் தான் பார்ப்பாரு” என்றாள்.
“ஆமா… ஆனா உன்னை மட்டும் கொஞ்சம் அதிகமாத்தான் பார்க்குறாரு போல ஒரு வேளை உன் மேல அவருக்கு காதலோ” என்று கேட்க “நந்தினி…” என்று கத்தியவள் அவளை கோபத்துடனே முறைத்து வைக்க
“சரி சரி… நான் எதுவும் சொல்லல”
என்று சிரித்தவள் மீண்டும் சாப்பிட ஆரம்பித்தாள் ரோஜா எதுவும் பேசாமல் இருந்தாலும் அவளது மனதிலும் அந்தப் பார்வை பதிந்துவிட்டது அன்று மாலை வேலை முடிந்து மருத்துவமனையை விட்டு வெளியேறிய பிரம்மா காரில் வந்து அமர்ந்தான்.
காரை ஸ்டார்ட் செய்தவன் சில நொடிகள் அப்படியே அமர்ந்திருந்தான் அவனது மனதில் மீண்டும் ரோஜாவின் முகம்தான்
‘என்ன ஆச்சு எனக்கு…’ என்று நினைத்தவன் தலையை பின்னால் சாய்த்துக் கொண்டான்.
கடந்த மூன்று வருடங்களாக அவளைப் பற்றி நினைக்காமல் இருக்க முயன்றவன்…
இன்று மட்டும் ஏன் அவளுடைய ஒவ்வொரு அசைவும் தன்னை இவ்வளவு பாதிக்கிறது
அவள் சிரித்தால் அவனுக்கு ஏன் கவனிக்கத் தோன்றுகிறது வேறு ஒருவன் அவளிடம் பேசினால் ஏன் கோபம் வருகிறது
அவளிடம் பேச வேண்டும் என்று ஏன் என் மனம் துடிக்கிறதுஎதற்கும் அவனிடம் பதில் இல்லை.
கடைசியில் காரை வேகமாக ஓட்டியவன்,
“ச்சே…” என்று பற்களைக் கடித்துக் கொண்டான் அவனுக்குத் தெரியவில்லை…
அவன் இத்தனை வருடங்களாக ஓடி ஒளித்து வைத்துக் கொண்டிருந்த உணர்வுகள்…
மீண்டும் அவனைத் தேடி வந்து கொண்டிருக்கின்றன என்று.
அது அன்று அடுத்த நாளும் தொடர்ந்து இன்றும் சத்யா அவளிடம் பேசிக் கொண்டு இருக்க பிரம்மாவுக்கு இவர்கள் இருவருக்கும் என்ன தொடர்பு என்று தெரிந்து கொள்ளும் ஆர்வம் எழுந்தது தன் வேலையை கவனித்து கொண்டே அவர்களை பார்வையால் பின் தொடர்ந்தான் ஒரு கட்டத்தில் இருவரும் சிரித்து பேச அவனுக்கு தலைக்கு மேல் கோபம் ஏறியது “ரோஜா” என்று அழைத்தான்
அவன் குரல் கேட்டு பெண்ணவள் திரும்ப
“என் கேபினுக்கு கொஞ்சம் வாங்க” என்றான்.
ரோஜா அவன் அழைத்ததும் அவன் பின்னே செல்ல “என்ன டி இந்த டாக்டர் இந்த பொண்ணை கேபினுக்கு கூப்பிட்டுட்டே இருக்காரு” என்று இரண்டு செவிலியர்கள் தங்களுக்குள் பேச ரோஜாவின் காதலும் இது விழுந்தது அவள் அறையின் உள்ளே வர பிரம்மா கதவை மூடிவிட்டு உள்ளே வந்து தன் இருக்கையில் கோபத்துடனே அமர்ந்தான்
அவன் கோபத்துடனே அமர்ந்திருக்க “சார் என்ன விஷயம் வர சொன்னிங்களே” என்று கேட்க “நான் சொன்ன வொர்க்லாம் முடிச்சிட்டிங்களா” என்று கேட்க “முடிச்சிட்டேன் சார்” என்றாள் பெண்ணவள்.
“ம்ம்” என்றவன் “சத்யாவை உங்களுக்கு முன்னாடியே தெரியுமா” என்று கேட்க “ம்ம் தெரியும் சார் என் பிரன்ட்டோட அண்ணா தான் சார்” என்றாள் “ஓ அதனால தான் சிரிச்சு சிரிச்சு பேசுறிங்களா” என்று கேட்க “நான் எப்படி பேசுனா உங்களுக்கு என்ன சார்” என்று அவள் பட்டென்று கேட்டு விட அவனுக்கு கோபம் சுள்ளென்று வந்தது “நீ அவன் கிட்ட பேசுறது எனக்கு சுத்தமா பிடிக்கலை இனி நீ அவன் கிட்ட பேசக் கூடாது” என்றான்.
“சாரி சார் நான் ஒன்னும் உங்க அடிமை இல்லை நான் யார் கிட்ட பேசனும் பேச வேண்டாம்ன்னு நீங்க முடிவு பண்ண வேண்டாம்” என்றாள் பிரம்மாவுக்கு உடனே கோபம் வர தன் இருக்கையில் இருந்து கோபத்துடன் எழுந்து நின்றவன் “என்ன டி திமிரா” என்று கேட்க “ஆமாம் நான் யார் கூட பேசனும்ன்னு நீங்க முடிவு பண்ணாதிங்க” என்று கூறிவிட்டு அங்கிருந்து வெளியே செல்ல போக பிரம்மா அவளின் கையை பிடித்து வளைத்தான்.
“நான் தான் டி சொல்லுவேன் நீ யார் கூட பேசனும் பேச வேண்டாம்ன்னு” என்று கூற பெண்ணவள் உண்மையாகவே பயந்துவிட்டாள் அவள் அருகில் நெருங்கி மிகவும் நெருங்கி நிற்க “நான் கத்திடுவேன் வழியை விடுங்க” என்று அவள் கூற “எங்க கத்து டி பார்ப்போம்” என்று கூறிய மறுகணம் பெண்ணவள் கத்த போக அடுத்த கணம் அவளின் இதழ்கள் ஆணவன் வசமானது பெண்ணவள் அவனிடமிருந்து விடுபட போராட அவன் பிடி இறுக்கமாக இருக்க அவளால் அவனிடமிருந்து விலக முடியவில்லை அவன் இதழ்களும் கைகளும் அவன் வசமானது அவன் முரட்டு இதழ்கள் அவளின் குட்டி இதழை கவ்வி முத்தமிட எச்சில் முத்தம் பரிமாறப்பட்டது ஒரு முத்தத்தை கூட இத்தனை முரட்டுத்தனமாக தர முடியுமோ என்று அவனிடமிருந்து தான் கற்றுக் கொள்ள வேண்டும் அவள் கத்துக்குட்டி ஆனால் அவன் பழம் தின்று கொட்டை போட்டவன் அல்லவா அவளின் கீழ் உதட்டை பற் தடம் பதியும் அளவுக்கு கடித்து வைக்க அவளின் இதழில் ரத்தம் கசிந்தது அவள் மூச்சுக்கு சிரமப்படும் அவளின் கையையும் இதழையும் விடுவிக்க அவன் கன்னத்தில் ஓங்கி பளார் என்று ஒரு அறைவிட்டாள் ரோஜா.
பிரம்மா கோபத்துடன் அவளின் கழுத்தை பிடித்தவன் “நான் உன் புருசன் டி நீ கண்டவன் கூட சிரிச்சு சிரிச்சு பேசிட்டு இருக்குறதை என்னால் பார்த்துட்டு இருக்க முடியாது டி நீ யாரு கூட பேசனும்ன்னு நான் தான் முடிவு பண்ணுவேன்” என்று கூற பெண்ணவள் அவன் இலகும் போது அவனை பிடித்து இடித்து தள்ளிவிட்டு அந்த அறையில் இருந்து வெளியேறினாள்.
அத்தியாயம் 6
பிரம்மா தன் இருக்கையில் வந்து அமர்ந்தவனுக்கு இப்போதும் அவன் கோபம் குறையவேயில்லை ‘அவள் யார் கூட பேசுனா எனக்கு என்ன’ என்று நினைத்தவனுக்கு தலை வலித்தது கூடவே பிபியும் அதிகரித்தது உடனே தன் டிராவை திறந்து பிபி மாத்திரையை வாயில் போட்டு கொண்டான் அன்றைய நாள் விடுமுறை எடுத்து கொள்ளலாமா என்று கூட தோன்றியது அந்த அளவுக்கு அவன் கோபம் எல்லை மீற ஆரம்பித்தது இதற்க்கு மேல் மருத்துவமனையில் இருந்தால் சரி வராது என்று நினைத்தவன் வீட்டுக்கு கிளம்பினான்.
ரோஜா அங்கே இருக்க பிடிக்காமல் கண்ணீருடன் தன் விடுதிக்கு சென்றுவிட்டாள் அவளும் மனம் சோர்ந்து வேதனையுடன் தான் இருந்தாள், பிரம்மா தன் வீட்டுக்கு வர அவனுக்கு அங்கேயும் நிம்மதியில்லை என்றவுடனே மாலை தன் வீட்டில் இருந்து வெளியே சென்றான் நட்சத்திர விடுதிக்கு வந்து சேர்ந்தான் அங்கே சாப்பாடு தங்கும் விடுதி மதுபானங்கள் அனைத்தும் இருந்தது அவன் அங்கே குடித்து கொண்டு இருந்தான்.
மாலை வந்த நந்தினி ரோஜாவை வற்புறுத்தி வெளியே அழைத்து சென்றாள்
பிரம்மா இருந்த அதே ஹோட்டலில் ரோஜா அவளின் தோழிகளுடன் ஒரு இடத்தில் சிரித்து பேசிக் கொண்டு இருந்தாள் அவளுக்கு வீட்டில் இருந்து அழைப்பு வர அலைபேசியை எடுத்து கொண்டு வெளியே சென்றாள் பெண்ணவள்
அவளின் தாய் தான் அழைத்து இருந்தது எப்போதும் போல நலம் விசாரித்து முடித்து அவளின் திருமண பேச்சை எடுக்க “அம்மா இதை பத்தி பேசுற மாதிரின்னா என் கிட்ட பேசவே பேசாதிங்க” என்று கூற
“ஏன் டி இன்னுமா அவனை நினைச்சிட்டு இருக்க ஓடி போனவன் திரும்பி வருவான்னு நினைக்கிறியா” என்று பேசிக் கொண்டே இருக்கும் போதே அழைப்பை துண்டித்தாள் அவளின் மனம் வலித்தது வெளியே குளிர் சற்று அதிகப்படியாக இருந்தது அவள் உள்ளே செல்லாமல் வெளியவே நின்று இருந்தாள் அந்த இருளையும் நிலா வெளிச்சத்தையும் ரசித்து கொண்டு இருக்க அவளின் மனதின் பாரம் சற்று குறைந்தது அவள் பின்னே ஏதோ நிழலாடுவதை போன்று உணர்ந்தாள்.
அப்போது அவள் திரும்பி நிற்க அவளின் பிரம்மா தான் நின்றிருந்தான் ரோஜா அவனை பார்த்து அதிர்ந்தவள் “நீ…நீங்க…இங்க எப்படி” என்று தத்தி தடுமாறி கேட்க “நான் சும்மா சாப்பிடலாம்ன்னு வந்தேன்” என்று கூறியவனின் மீது இருந்து மது வாடை வீசியது அதிலேயே அவளுக்கு புரிந்து போனது அவன் குடித்திருக்கிறான் என்று இருப்பினும் அவள் தன்னை சமநிலைப்படுத்திக் கொண்டு “ஓ ஓகே சார்” என்றாள் சாதாரணமாக லேசான புன்னகையுடன் வராத புன்னகையை வரவழைத்து கொண்டு அப்போது அவளின் கையில் இருந்த அலைப்பேசி ஒலிக்க யார் என்று திரையை பார்த்தாள் ரோஜா.
நந்தினி தான் அழைத்திருந்தாள் அவள் அழைப்பு எடுத்து பெண்ணவள் காதில் வைக்க “அடியேய் போன் பேசிட்டு வர உனக்கு இவ்வளவு நேரமா சீக்கிரமா வந்து சேரு” என்று கத்த “இதோ வரேன் டி” என்று கூறிவிட்டு அழைப்பை துண்டித்தாள் அவளின் செய்கையை பிரம்மா கண்விலகாமல் பார்த்து கொண்டு இருந்தான் அவன் இடையளவு மட்டுமே மட்டுமே இருந்தாள் அவனின் குட்டி பொம்மை ஆம் அவளை சிறு வயதில் இருந்தே பொம்மை என்று தான் அழைப்பான் பிரம்மா சிறு வயதில் குட்டியாக கொழுகொழுவென்று இருந்த அவன் மாமன் மகள் அவனின் கண் முன்னே வந்து போனாள்.
ரோஜா வெள்ளை நிற சுடிதாரில் வந்திருக்க அவளின் கழுத்தை பார்த்தான் பிரம்மா அவள் பெரிய தங்க செயின் ஒன்றை அணிந்து இருந்தாள் அப்போது தான் உணர்ந்தான் அது மூன்று வருடங்களுக்கு முன்பு மன்னவன் கட்டிய தாலி என்று ‘இன்னும் இதை இவள் கழட்டி போடலையா ஏன்’ என்று நினைக்க “சார் நான் கிளம்பவா” என்று அவள் கேட்க
“வெளிய வந்தா மாமான்னு கூப்பிட சொன்னனே” என்று அவன் கேட்க “பரவாயில்லை நீங்க எப்பவும் எனக்கு சீனியர் டாக்டர் தான் வழியை விடுங்க” என்று கூறிவிட்டு அவள் அங்கிருந்து அவனை கண்டுகொள்ளாமல் செல்ல பிரம்மாவுக்கு சொல்ல முடியாத அளவுக்கு கோபம் வந்தது
‘இவளுக்கு திமிர் இருக்கனும் நானே வந்து பேசுறேன் என்னை அவமானப்படுத்திட்டு போறா’ என்று நினைத்தான்.
அன்று மாலை டியூட்டி முடிந்து தன் வீட்டுக்கு வந்த பிரம்மாவுக்கு அமைதியாக இருந்த தன் வீட்டை பார்க்க ஏதோ பைத்தியம் பிடிப்பதை போல இருந்தது அங்கிருக்கும் போது மூச்சு முட்ட எழுந்து வெளியே வந்தான் இந்த ஹோட்டலின் பாரில் அமர்ந்து குடித்து கொண்டு இருக்கும் போது அங்கிருந்த ஜன்னல் வழியாக பார்த்தான் அங்கே ரோஜா பின்னே திரும்பி நிற்க அவளை பார்த்தவுடனேயே கண்டுகொண்டான் அது ரோஜா தான் என்று ஏனோ அதுவரை அவன் மனதில் பாரம் குறைந்ததை போல ஒரு உணர்வு பெண்ணவளின் அருகில் வந்து நின்றான் அவள் தன்னை மதிக்காமல் போனது அவனுக்கு கோபத்தை வரவழைத்து இருந்தது.
ரோஜா தன் தோழிகளுடன் வந்து சாப்பிட ஆரம்பித்தாள் பிரம்மாவும் அவளின் பின்னே வந்து பக்கத்தில் இருந்த ஒரு சில இருக்கைகள் தள்ளி இருந்த இருக்கையில் அமர்ந்து அவளை கோபத்துடன் முறைத்து பார்த்து கொண்டே இருந்தான் ரோஜா தன் தோழிகளுடன் பேசிக் கொண்டு இருந்தவள் ஓரக்கண்ணால் அவனை பார்த்தாள்
‘இவரு ஏன் இங்கேயே பார்த்துட்டு இருக்காரு’ என்று நினைத்தாள் ‘போதையில அதனால தான் இப்படி வித்தியாசமா நடந்துக்குறாரு போல’ என்று நினைத்தவள் சாப்பிட்டு முடித்து கையை கழுவி வர எழுந்து சென்றாள் போகும் போது கூட அவனை கண்டு கொள்ளாமல் பெண்ணவள் செல்ல அவனுக்கு இன்னும் கோபம் வந்தது ‘இவளுக்கு எவ்வளவு திமிரு’ என்று பற்களை நரநரவென்று கடித்தவனின் தாடைகள் இறுகியது அவன் கையில் இருந்த கண்ணாடி டம்ளரை அவன் வேகமாக அழுத்தி பிடித்ததில் அது உடைந்து நொருங்கியது அவன் கைகள் கிழித்து ரத்தம் கூட வந்தது.
கடந்த மூன்று வருடமாக அவளை மனைவியாக இல்லை இல்லை ஒரு சக மனிதியாக கூட மதியாமல் ஓடி ஒளிந்து கொண்டு இருந்தவனுக்கு இன்று ஏனோ அவள் ஒரு நிமிடம் கண்டு கொள்ளாமல் இருந்தற்க்கு அத்தனை கோபமும் ஆதங்கமும் எழுந்தது.
பெண்ணவள் கையை கழுவிவிட்டு திரும்பியவள் அங்கிருந்த மின்தூக்கியை தாண்டி நடந்து செல்ல போக ஒரு வலிய கரம் அவளின் லிப்டின் உள்ளே இழுத்தது அவள் யாரென்று அவள் அதிர்வுடனே அவனை நிமிர்ந்து பார்க்க வேறு யார் அவளின் கணவனே தான் இல்லை இல்லை சீனியர் டாக்டர் பிரம்மாவே தான் “என்ன பண்றிங்க மா…” என்று அழைக்க வந்து தன்னை ஒரு நிலைப்படுத்தி “சார்” என்று அவள் முடித்து அவனிடமிருந்து விலகி செல்ல போக அதற்க்குள் அவன் பொத்தானை அழுத்த அந்த லிப்டின் கதவு முடியது அவள் அதிர்வுடனே அவனை “என்ன டி திமிரா நானே வந்து பேசுனா ரொம்ப திமிரு காட்டுற இதுக்கு தான் டி நான் இந்த பொம்பளைங்க பக்கமே போறது இல்லை என்ன நான் உன் பின்னாடி நாய் மாதிரி அலையுனுமா சொல்லு டி” என்று கேட்டுக் கொண்டே அவன் அவளின் கன்னத்தை பிடிக்க அவன் ஒற்றை பிடிக்கே பெண்ணவளின் கன்னம் சிவந்தது.
“என்ன பண்றிங்க சார் வலிக்குது” என்று அவள் கூற “இப்போ கூட சார்ன்னு தான் உன் வாயில வருமா டி ஏன் மாமான்னு கூப்பிட மாட்டியா” என்று அவன் கேட்க ரோஜா அவனை பார்த்து முறைத்தவள் “நீங்க ரொம்ப தப்பு பண்றிங்க வழியை விடுங்க முதல்ல நீங்க குடிச்சிருக்கிங்க இப்போ எதுவும் பேச வேண்டாம்” என்று அவள் கூற
“நான் பேசுவேன் டி இப்போ என்ன பண்ணுவ ஒழுங்கா மாமான்னு கூப்பிடு” என்று கூற
பெண்ணவள் அவனை முறைத்து பார்த்தவள்
இவன் விட மாட்டான் போல என்று நினைத்தவள் “சரி…மாமா.. என்னை.. விடுங்க” என்று கூற அப்போது தான் அவன் அமைதியானான்.
லிப்ட் கீழே வரும் போது எல்லாம் மேலே செல்லும் பட்டனை பிரம்மா அழுத்தி கொண்டே இருந்தான் “ஆமாம் இது என்ன உன் கழுத்துல” என்று அவள் கழுத்தில் இருந்த தங்க சங்கிலியை பார்த்து கேட்க “அது எல்லாம் உங்களுக்கு எதுக்கு வழியை விடுங்க நான் போகனும்” என்று அவள் பட்டனை அழுத்தி வெளியே செல்ல முயல அவளின் கையை இடையோடு சேர்த்து பிடித்து வளைத்தவன்
அவளின் ஆடை உள்ளே இருந்த தாலியை வெளியே எடுத்து போட்டான் அவன் குடித்திருந்த மது அவனுக்கு இவ்வளவு தைரியத்தை கொடுத்து இருந்தது.
“இது நான் கட்டுன தாலி தான” என்று தாலியை கையில் வைத்து கொண்டு கேட்க
“முதல்ல இதை விடுங்க” என்று அவன் கையில் இருந்த தாலியை எடுத்து பின்னே திரும்பி நின்று போட்டு கொண்டாள்.
“சொல்லு டி இது நான் கட்டுன தாலி தான” என்று கேட்க பெண்ணவளுக்கு தலைக்கு மேல் கோபம் வந்தது “சொல்லு டி… இது நான் கட்டுன தாலி தான” என்று அவன் மீண்டும் மீண்டும் கேட்க பிரம்மாவின் குரலில் கோபம் மட்டுமல்ல… மூன்று வருடங்களாக அவன் மனதுக்குள் புதைத்து வைத்திருந்த ஏதோ ஒரு வலியும் கலந்திருந்தது.
ரோஜா அவனை திரும்பிப் பார்த்தாள்.
அவளது கண்களில் இப்போது பயம் இல்லை
கோபம் மட்டுமே இருந்தது
“ஆமாம்…” என்று கத்தினாள்
“ஆமாம் இது நீங்க கட்டுன தாலி தான்” என்று கத்த பிரம்மா அவளைப் பார்த்துக் கொண்டே இருந்தான் அவள் வாயிலிருந்து அந்த வார்த்தையை கேட்க வேண்டும் என்று அவனது மனம் ஏங்கி இருந்தது போல ஏனோ இனம் புரியாத நிம்மதி பிறந்தது.
ஆனால் அடுத்த நொடியே ரோஜாவின் முகத்தில் தெரிந்த வலி அவனை அமைதியாக்கியது “அப்போ ஏன் இன்னும் கழட்டாம இருக்க” என்று அவன் கேட்க
ரோஜா ஒரு நொடி அவனை வெறித்துப் பார்த்தாள் “எதுக்காக கழட்டனும்” என்று அவள் கேட்க அவளது கேள்வியில் பிரம்மா தடுமாறினான்.
“நீ…நானா…மூணு வருஷம்…” என்று அவன் தடுமாற அவனை இடைமறித்தாள்
“மூணு வருஷமா என்னை மனைவியா நினைக்காம இருந்தது நீங்கதானே நான் இல்லை” என்று சொல்லும் போதே
அவளது குரல் நடுங்கியது “என்னை பார்க்க கூட விரும்பாம ஓடி ஒளிஞ்சது நீங்க தான் நான் இல்லை” என்று கூற பிரம்மாவின் முகம் இறுகியது அவளது ஒவ்வொரு வார்த்தையும் அவனுக்குள் எங்கோ சென்று குத்தியது.
“இப்போ மட்டும் இந்த தாலி உங்களுக்கு ஞாபகம் வருதா சார்” என்று கேட்டவள் தன் கழுத்தில் இருந்த தாலியைப் பிடித்துக் கொண்டாள் “இதை நான் கழட்டலன்னு ஏன் நீங்க கேட்க்குறிங்க அதுக்கு உங்களுக்கு என்ன உரிமை இருக்கு இத்தனை வருசமா இந்த ஊர் உலகம் என்னை பத்தி தப்பா பேசுச்சு உங்களை இல்லை” என்றவளின் கண்களில் நீர் தேங்கியது.
“நான் இதை கழட்டனுமா வேண்டாமான்னு நான் தான் முடிவை பண்ணனும் நீங்க இல்லை” என்று அவள் கூற பிரம்மா அவளை அதிர்வுடனே பார்த்துக் கொண்டிருந்தான் அவனிடம் இருந்து எந்த வித பதிலும் இல்லை.
“நான்…” என்று அவன் பேச ஆரம்பிக்க,“போதும் சார் நீங்க எதுவும் பேச வேண்டாம் நான் எதையும் கேட்க்குற மனநிலையில் இல்லை” என்று
ரோஜா அவனை நிறுத்தினாள்.
“நீங்க குடிச்சிருக்கிங்க இப்போ பேசுறது உங்களுக்கே நாளைக்கு ஞாபகம் இருக்காது பத்திரமா வீட்டுக்கு போங்க” என்றவள்
லிப்டின் கதவை நோக்கி திரும்பினாள் அப்போது பிரம்மாவின் குரல் பின்னால் கேட்டது “எனக்கு எல்லாம் ஞாபகம் இருக்கு டி…” அவள் அப்படியே நின்றாள் “நீ சின்ன வயசுல என் பின்னாடி மாமா மாமான்னு சுத்துனது எல்லாம் எனக்கு நியாபகம் இருக்கு டி…”என்று அவன் பேச முடியாமல் தடுமாறினான்.
“என் குட்டி பொம்மையா நீ என் கூட இருந்தது” என்ற அந்த வார்த்தையை கேட்டதும் ரோஜாவின் கண்கள் கலங்கின
அவள் மெதுவாக அவனைத் திரும்பிப் பார்த்தாள் “அந்த பொம்மை எப்போவோ வளர்ந்துட்டா சார்…” என்று கூறிவிட்டு அங்கிருந்து செல்ல போனவள்
“அந்த பொம்மையை நீங்க மூணு வருஷத்துக்கு முன்னாடியே தொலச்சுட்டீங்க சார்” என்றாள்.
அந்த வார்த்தைகள் பிரம்மாவை அசையாமல் நிற்க வைத்தது லிப்டின் கதவு திறந்தது
ரோஜா வெளியேறி சில அடிகள் சென்றுவிட்டாள் பிரம்மா மட்டும் அங்கேயே நின்று அவள் சென்ற திசையை பார்த்துக் கொண்டிருந்தான் அவனது கையில் இருந்து ரத்தம் இன்னும் வழிந்து கொண்டே இருந்தது அதன் வலியை கூட அவன் உணரவில்லை பிரம்மா, ஏனோ அவள் கூறிய வார்த்தைகள் மட்டும் அவன் மனதை உலுக்கி கொண்டே இருந்தது.