கைக்கிளை மாயம் 3,4
அத்தியாயம் 3
சில நிமிடங்களில் ரோஜாவுக்கு அவன் கூற வந்தவைகள் ஓரளவுக்கு புரிய
“ஓ… இப்போ புரியுது மா…சார்” என்று கூற பிரம்மா அவளை ஏறிட்டு பார்த்தவன்
சத்தமில்லாமல் “குட் வெளியே மாமான்னு கூப்பிட்டுக்கோ இங்க சார்ன்னு மட்டும் கூப்பிடு” என்று கூற அவன் வாயிலிருந்து அந்த வார்த்தை வந்ததும் ரோஜாவின் கண்கள் சட்டென்று அவனைப் பார்த்தது.
அதே வார்த்தை…அதே குரல்…அதே மாமன்
அவளுக்கு பழைய நாட்கள் நினைவுக்கு வந்தன அவள் படிக்கும்போது தவறு செய்தால் இப்படித்தான் அவன் சொல்லிக் கொடுப்பான் பிரம்மா அவள் வீட்டிலேயே நன்றாக படிக்க கூடியவன் அதிகம் படித்துவனும் அவன் ஒருவனே அந்த பழைய நாட்களுக்கு மனம் செல்ல “புரியலன்னா கேளு ரோஜா… நான் சொல்லித் தர்றேன்” என்று அவன்
அவளது கண்களில் நீர் தேங்கியது அதை பார்த்த பிரம்மாவின் முகமும் மாறியது.
“என்னாச்சு” என்று கேட்டான் “ஒன்னுமில்லை சார்” என்றாள் கண்ணீரை துடைத்து கொண்டு
“எதாவது பிரச்சனையா” என்று அவன் கேட்க
“இல்ல… கண்ணுல ஏதோ விழுந்துடுச்சு நான் ரெஸ்ட் ரூம் போகனும் பிளீஸ்” என்று கூறிவிட்டு அங்கிருந்து ஓடினாள் பிரம்மாவுக்கு தெரிந்தது அவள் நிச்சயமாக அழுகிறாள் என்று ஆனால் அது எதனால் என்று தான் அவனுக்கு தெரியவில்லை பிரம்மா அவளை சில நொடிகள் நின்று பார்த்துக் கொண்டிருந்தான்.
அவள் எப்போதும் பொய் சொல்லும்போது அவன் கண்களை நேராக பார்க்க மாட்டாள் இத்தனை வருடம் கடந்தும் அவளின்
இந்த பழக்கம் மட்டும் மாறவில்லை
அவன் மனதுக்குள் ஏதோ ஒன்று வலித்தது அவள் எப்போது வருவாள் என்று அதே இடத்தில் நின்றிருந்தான் ஏதோ வேலை செய்பவனை போல பாசாங்கு செய்து கொண்டு.
இங்கே கழிவறை உள்ளே அழுது கொண்டே ஓடி வந்த ரோஜா கண்ணாடி முன்னே சென்று நின்று கொண்டவள் தன் முன் இருந்த வாஷ்பேஷனில் முகத்தை தழுவிக் கொண்டே இருந்தாள் எவ்வளவு கழுவியும் அவளின் கண்ணீர் மட்டும் அடங்கவேயில்லை அவளின் மனதில் இருந்த இத்தனை வருட வலிகள் அத்தனையும் வெளியே வந்தது.
மூன்று வருடங்களுக்கு முன்பு, அவளின் தந்தை வந்து பிரம்மாவை திருமணம் செய்து கொள்ளச் சொன்னபோது, ஒரு நொடி கூட யோசிக்காமல் அவள் சம்மதித்தாள் அப்போது அவள் முதல் வருட நர்சிங் மாணவி ஆனால் அப்போது இருந்த மனநிலையில் அவளுக்கு தன் படிப்பு எதை பற்றியும் அக்கறை இல்லை தன் மாமனை திருமணம் செய்ய போகிறோம் என்றவுடனே பல கனவுகளுடன் மணமேடையில் அமர்ந்திருந்தாள் அதையெல்லாம் நினைத்தவள் தன் கழுத்தில் இருந்த அவள் மாமன் கட்டிய தங்க தாலியையும் எடுத்து பார்த்தவளுக்கு கண்ணீர் பொங்கியது அவளின் கண்ணீர் துளிகளில் ஒன்று அவள் தாலியில் விழுந்தது தன்னால் முடிந்தளவு அழுது முடித்தவள் முகத்தை கழுவிவிட்டு அழுத தடம் தெரியாமல் இருக்க முகத்தை கைக்குட்டையால் துடைத்து கொண்டு வெளியே வந்தாள்.
அவளுக்காகவே பிரம்மா காத்திருக்க அவளின் வேக நடை சற்றே குறைந்தது மெல்ல நடந்து வர “ரோஜா இப்போ ஓகே வா” என்று அவன் கேட்க அவளும் பரவாயில்லை என்பதை போல தலையை ஆட்ட
“சரி போய் observe பண்ணுங்க” என்று கூற
ரோஜா மெல்ல தலையசைத்தாள் ஆனால் ஒரு முறை கூட அவன் முகத்தை மட்டும் பார்க்கவேயில்லை.
“சரி சார்” என்று கூறிவிட்டு அவள் நோட்டை கையில் எடுத்து கொண்டு செல்ல போக
அவள் செல்லத் திரும்பியபோது,
“ரோஜா” என்று அவன் அழைக்க அவள் நின்றாள் “தெரியாத விஷயத்துக்கு பயப்படாதிங்க கேட்டு தெரிஞ்சுக்கனும் Training-க்கு வந்திருக்கிங்க தப்பு பண்ணக்கூடாதுன்னு பயப்படுறதைவிட, தப்பு பண்ணினாலும் அதிலிருந்து கத்துக்கனும்ன்னு நினைக்கனும்” என்று கூற அவள் அவனை நிமிர்ந்து பார்த்தாள்
“சரி சார்” அவள் செல்ல முயன்றபோது பிரம்மா மீண்டும் அழைத்தான்.
“இன்னும் ஒரு விஷயம்” என்றவன்
“நீங்க கொஞ்சம் slow learner-ஆ இருக்கிங்க” என்று கூற அவள் முகம் சுருங்கியது
“சாரி சார்…” என்றாள்
அவன் முகத்தை உர்ரென்று வைத்து கொண்டு, “அதுக்காக வருத்தப்பட வேண்டாம். நான் சொல்லித் தர்றேன்” என்றான் பெண்ணவள் இப்போதும் வாடிய முகத்துடன் இருக்க பிரம்மா அவளை கூர்ந்து கவனித்தான் ஆனால் அவனால் அதையும் கண்டுபிடிக்க முடியவில்லை “சரி நீங்க கிளம்புங்க” என்று கூற அவளும் அங்கிருந்து சென்றாள்.
பிரம்மாவும் அங்கிருந்து செல்ல அப்போது அங்கே வந்த அதே மருத்துவமனையில் வேலை செய்து ராஜ் இவர்களை பார்த்து அதிர்ச்சியடைந்தான் ராஜ் அவனின் உயிர் நண்பன் அவன் இங்கு வேலைக்கு வந்த பிறகு பிரம்மாவே இங்கு வேலைக்கு வந்தான் அவன் இதுவரை எந்த பெண்ணிடமும் இவ்வளவு நெருக்கத்தில் நின்று பேசியது கூட இல்லை அங்கே நின்றிருந்த கல்பனா சிஸ்டரிடம்
“கல்பனா யார் அந்த பொண்ணு” என்று கேட்க “நர்சிங் ஸ்டூடன்ட் டிரையினிங் வந்திருக்காங்க டாக்டர்” என்றார் ‘என்ன டா இது ஆம்பள டாக்டர்ஸ் கிட்டையே முகம் கொடுத்து பேசாதவன் இப்படி ஒரு நர்ஸ் அதுவும் பொண்ணு கிட்ட எப்படி பேசுறான்’ என்று நினைத்தான்.
பிரம்மா அறையின் உள்ளே வந்து அமர்ந்த பிறகு ஏனோ ரோஜாவின் நினைவாகவே இருக்க அந்த வார்ட்டில் இருந்த சிசிடிவியை தன் சிஸ்டம்மில் ஆன் செய்து பார்த்தவன் பெண்ணவள் எந்த வேலையும் ஒரு இருக்கையில் வாடிய முகத்துடன் அமர்ந்திருக்க ‘இவளுக்கு என்ன ஆச்சு’ என்று மனதில் நினைத்தான்.
அந்த நேரம் கதவு தட்டப்படாமல் அவன் அனுமதியின்றி திறக்கப்பட்டது அவனுக்கு தெரிந்துவிட்டது அனுமதி இன்றி கதவை திறந்தால் அது யாராக இருக்கும் என்று அவன் நண்பன் ராஜ் வேறு யார் உள்ளே அவசரமாக வந்தவன் “டேய்…” என்று அழைக்க சிசிடிவி திரையைப் பார்த்துக் கொண்டிருந்த பிரம்மா,
உடனே சிஸ்டத்தை minimize செய்துவிட்டு நிமிர்ந்து பார்த்தான்.
“என்ன டா” என்று எரிச்சலுடன் பல்லை கடித்து கொண்டே கேட்க “என்னடா என்னன்னு கேக்குற கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி நீ யார்கிட்ட பேசிட்டு இருந்த” என்று அவன் கேட்க
பிரம்மாவுக்கு உண்மையிலேயே அவன் என்ன சொல்கிறான் யாரை பற்றி பேசுகிறான் என்று புரியவில்லை “யாரு” என்று கேட்டான்
“அதான் டா அந்த பொண்ணு நீ கூட அந்த பொண்ணுக்கு தனியா கிளாஸ் எடுக்குறியாமே வார்ட் முழுக்க உன்னையும் அந்த பொண்ணையும் பத்தி தான் பேசிக்கிறாங்க” என்றான்.
பிரம்மாவின் முகம் சட்டென்று இறுகியது.
“எந்த பொண்ணு” என்று தெரிந்து கொண்டே கேட்டான் “அட… நடிக்காத டா அந்த நர்சிங் ஸ்டூடன்ட் இப்போ தான் டிரயினிங்க்கு வந்திருக்காங்க போல…” என்று கூற பிரம்மாவின் முகம் மலர்ந்தது “அவளா” என்று கேட்க “ஆமா அவளேதான் யாருடா அவ” என்று கேட்க பிரம்மா சில நொடிகள் அமைதியாக இருந்தான்.
“டிரையினிங் ஸ்டூடன்ட்” என்று பிரம்மா கூற
“அது எனக்கும் தெரியும் நான் கேட்டது… உனக்கு அவளை எப்படி தெரியும்” என்று கேட்க
“எனக்கு தெரியாது டா” என்றான் பிரம்மா சாதாரணமாக ராஜ் அவனை நம்பாத ஒரு பார்வை பார்த்தவன் “அப்படியா”
என்று அவனை சந்தேகமாக பார்த்தான்.
பிரம்மா ஏதோ வேலை பார்ப்பதை போல ஒரு கோப்பை எடுத்து பார்க்க “அப்போ எல்லார்கிட்டயும் பேசாம இருக்குற நீ, அவள்கிட்ட மட்டும் இவ்வளவு நேரம் ஏன் பேசிட்டு இருந்த” என்று கேட்க
“டிரையினிங் சம்பந்தமா பேசினேன் டா” என்றான் பிரம்மா கோப்பை பார்த்து கொண்டே
“அப்படியா பொறுமைன்னா எத்தனை கிலோன்னு கேட்ப அதுக்காக இவ்வளவு பொறுமையா ஒரு பொண்ணுக்கு சொல்லி தர்றியா” என்று கேட்க பிரம்மா அவனை பார்த்து முறைத்தான் “ஏன் டா உனக்கு லார்ட்ஸ் எல்லாம் வேலையே இல்லையா” என்று கேட்க.
“எனக்கு உன்னை கவனிக்கிறது தான் வேலை மச்சி நீ சொல்லு” என்று கேட்ங
“சரி இப்போ நீ என்ன சொல்ல வர” என்று பிரம்மா கோப்பில் இருந்து அவனை பார்த்து முறைத்து கொண்டே கேட்க
“ஒன்னுமில்லை டா…” என்று ராஜ் சிரித்தான் “ஆனா ஒரு விஷயம் மட்டும் புரியல” என்றான்
“என்ன” என்று ஒற்றை புருவத்தை உயர்த்தி கேட்க.
“நீ லேடி ஃபேஷன்ட் கிட்ட கூட கொஞ்சம் டிஸ்ட்டன்ஸ்ல தான் ஹேன்ட்டில் பண்ணுவ ஆனா அந்த பொண்ணு கிட்ட மட்டும் ஏதோ உரிமையோட ஒட்டி நிக்குற நீ வா போன்னு பேசுற உன்னோட முகமே வேற மாதிரி இருந்துச்சு ” அவன் பேச்சை கேட்ட பிரம்மாவின் விரல்கள் மேசையின் மீது மெதுவாக இறுகின.
“உனக்கு அதிகமா யோசிக்கிற பழக்கம் வந்துடுச்சு நீ முதல்ல போய் வேலையை பாரு” என்று கூற “அப்படியா” என்று கேட்டான் ராஜ் அவனை விடாமல் வைத்த கண் வாங்காமல் பார்த்தான் “அப்போ அவளை நீ முதல் தடவை பார்த்தப்போ ஏன் அப்படியே freeze ஆன”
அந்தக் கேள்வியில் பிரம்மாவின் பார்வை ஒரு கணம் மாறியது.
பிரம்மா எதுவும் பேசவில்லை ராஜ் அவனை பார்த்தவன் “உனக்கு அவளை முன்னாடியே தெரியுமா” என்று கேட்க பிரம்மா சில நொடிகள் அமைதியாக இருந்தான் பிறகு பிரம்மா மெதுவாக, “ராஜ்… இந்த விஷயத்தை இத்தோட விட்டுடு”
என்று கூற அந்த பதில் ராஜின் சந்தேகத்தை இன்னும் அதிகப்படுத்தியது.
“ஓஹோ…”
அவன் மெதுவாக சிரித்தான் “ஏதோ இருக்கு”
பிரம்மா அவனை கூர்ந்து பார்க்க,
“நான் சொன்னதை மட்டும் கேளு” என்று அவன் கோபத்துடன் கூற
“சரி டா… இப்போதைக்கு கேக்குறேன்”
என்று கூறிய ராஜ் கதவை நோக்கி நடந்தான்
வாசலுக்கு சென்றவன் மீண்டும் திரும்பிப் பார்த்து, “ஆனா அந்த பொண்ணு உன்னை பார்த்த விதம்… அது மட்டும் சாதாரணமா இல்லடா கொஞ்சம் உஷாரா இரு மயங்கிடாத” என்று எச்சரித்துவிட்டு வெளியேறினான்.
கதவு மூடியதும் பிரம்மா சில நொடிகள் அசையாமல் அமர்ந்திருந்தான் ‘அவள் என்னை பார்த்தாளா’ என்று நினைத்தான்
ராஜ் கேட்ட அந்த வார்த்தை மீண்டும் மீண்டும் அவன் மனதில் ஒலித்தது
அவனுடைய பார்வை இப்போது மீண்டும் CCTV திரைக்குச் சென்றது ரோஜா அங்கே தான் அமர்ந்திருந்தாள்.
வாடிய முகத்துடன்… யாரிடமும் பேசாமல்… தன் கையில் இருந்த நோட்டை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள்
ஆனால் பிரம்மாவுக்கு மட்டும் அவளிடமிருந்து பார்வையை விலக்க முடியவில்லை
இத்தனை வருடங்கள் கடந்தும்…
அவளை பார்த்த அந்த முதல் நொடியிலேயே ஏன் தன் மனம் இப்படி தடுமாறியது
அவளுடைய குரல்… அவளுடைய கண்கள்… அவள் அழுத விழிகள்…
எல்லாமே ஏதோ ஒன்றை அவனுக்குள் கிளறிக் கொண்டிருந்தது அந்த பக்கம் ரோஜாவும் அவனை தான் நினைத்து கொண்டே இருந்தாள் இருவரின் இருப்பும் ஒருவரை ஒருவர் பாதிக்க இது காதலாகுமா…
அத்தியாயம் 4
அன்றைய பொழுது அப்படியே கழிய மாலை நந்தினியும் ரோஜாவும் தங்கள் ஹாஸ்ட்டல் அறைக்கு சென்றனர் ரோஜா கண்ணாடியை பார்த்து தலையை சீவிக் கொண்டு இருக்க நந்தினி அவள் பக்கத்தில் “உனக்கும் அந்த பிரம்மா சாருக்கும் நடுவுல என்ன டி ஓடுது” என்று கேட்க ரோஜாவுக்கு ஒரு கணம் அவள் கேள்வி தூக்கி வாரி போட தன் வேலையை பாதியிலேயே நிறுத்திவிட்டு
“என்ன” என்று கேட்டாள் “நீ ஏன் இப்போ இவ்வளோ ஷாக் ஆகும் அவரு உனக்கு மட்டும் தனியா சொல்லி கொடுத்தாரே அதை பத்தி தான் கேட்டேன்” என்றாள் அவள் சாதாரணமாக “எனக்கு ஒன்னும் தெரியலைன்னு நினைச்சிருப்பாரு அதனால சொல்லி கொடுத்து இருப்பாரு” என்று கூறிவிட்டு அவள் மீண்டும் தன் வேலையை பார்க்க நந்தினி அவளை சந்தேக கண்ணோடு பார்த்து கொண்டே இருந்தாள்.
“சரி சரி… நான் எதுவும் கேட்கலை ஆனா ஏதோ இருக்கு… அதை மட்டும் நான் கண்டுபிடிச்சே தீருவேன்” என்று கூறியவள் எழுந்து தன் உடைகளை எடுத்துக் கொண்டு கிளம்ப ஆரம்பித்தாள் ரோஜா அவளைப் பார்த்து சிரித்தவள்,“உனக்கு வேற வேலையே இல்லையா டி” என்று கேட்க
“இல்ல… இப்போ எனக்கு இதுதான் முக்கியமான வேலை” என்றாள் நந்தினி.
ரோஜா அவளைப் பார்த்து முறைத்தாள்
“அட போடி…” என்று கூறிவிட்டு தன் தலையைச் சீவுவதைத் தொடர்ந்தாள்
அதேநேரம் இரவு டியூட்டி முடிந்து தன் வீடு வந்து சேர்ந்தான் பிரம்மா அவன் எப்போதும் வரும் அவன் வீடு தான் ஆனால் உள்ளே இருக்க முடியாமல் மூச்சு முட்டியது குளியலறை சென்று ஷவரை திறந்து குளிக்க ஆரம்பித்தான் குளித்துவிட்டு வெளியே வந்தவன் தினமும் வாங்கி வரும் அதே உணவு பொட்டலத்தை பிரித்து உண்ண ஆரம்பிக்க இன்று ஏனோ அவன் தாய் நினைவு வந்தது
போனை எடுத்தவன் அவருக்கு அழைக்க நினைத்தான் ஆனால் கையில் போனை வைத்து பார்த்து கொண்டு இருந்தானே தவிர அழைக்கவில்லை தனிமை அவனை கொஞ்சம் கொஞ்சமாக கொள்ள குடிக்க ஆரம்பித்தான் ஆனாலும் அவன் அமைதியடையாமல் இருக்க தன் போனில் ஏதோ ஒரு எண்ணிற்க்கு அழைக்க அடுத்த ஒரு மணி நேரத்தில் ஒரு பெண் வந்து அவன் கதவை தட்ட அவனும் கதவை திறந்தான்.
“என்ன சார் எப்பவும் மாச கடைசியில தான் கூப்புடுவ இன்னைக்கு என்ன மாசம் முதல்லயே கூப்பிடுருக்க” என்று கேட்டு கொண்டே அவள் வந்து அவனை அணைக்க ஏனோ பிரம்மாவால் அவளுடனும் ஒன்ற முடியவில்லை “சரி நீ கிளம்பு” என்க “என்ன சார் இன்னைக்கு ராத்திரி இருக்க வேண்டாமா” என்று கேட்க “வேண்டாம் கிளம்பு” என்றவன் அவள் கையில் பணத்தை கொடுத்து அனுப்பி வைத்தவன் சோஃபாவில் வந்து அமர்ந்தான் அப்போதும் அவன் மனம் நிம்மதி அடைந்த பாடில்லை இரவெல்லாம் உறங்காமல் அவன் விழித்து கிடந்தான் கண்கள் எரிந்ததே தவிர உறக்கம் தான் வந்த பாடில்லை.
அடுத்த நாள் காலை வழக்கம்போல் விடிய பிரம்மா இன்று சற்று அதிகப்படியான ஆரவத்துடனே கிளம்பினான் ஒரு முறைக்கு இரு முறை கண்ணாடியில் தன் முகத்தை பார்த்து கொண்டான் அவன் தன் காரில் மருத்துவமனை வந்தடைய நந்தினி ரோஜா இருவரும் மருத்துவமனைக்கு வந்து சேர்ந்தனர்.
ரோஜா கோவிலுக்கு சென்றுவிட்டு அப்படியே வந்திருந்தவள் தன் டியூட்டிக்கு கிளம்ப வேண்டுமே என்று அவசர அவசரமாக உடை மாற்றும் அறைக்கு சென்று கொண்டிருக்க எதிரே வந்த ஒரு நர்ஸ் அவளை அழைத்தார் “ரோஜா… பிரம்மா சார் உன்னை அவரோட கேபினுக்கு வரச் சொன்னாங்க” என்று கூறிவிட்டு செல்ல அந்த பெயரைக் கேட்டதும் ரோஜாவின் கால்கள் தன்னிச்சையாக நின்றது.
“என்ன விஷயம் சிஸ்டர்” என்று கேட்க
“தெரியல… ஏதோ கேஸ் பத்தி பேசனும்னு சொன்னாங்க” என்று கூறிவிட்டு அந்த நர்ஸ் அங்கிருந்து சென்றுவிட்டார் ரோஜா மெதுவாக பிரம்மாவின் கேபினை நோக்கி நடந்தாள்
கதவைத் தட்டிவிட்டு,“சார்…”
என்று அழைத்தவள் உள்ளே செல்ல, பிரம்மா தன் முன் இருந்த கோப்பிலிருந்து பார்வையை உயர்த்தினான்.
அவளை பார்த்த அந்த நொடியே அவனது பார்வை சில நொடிகள் அவள் மீதே நிலைத்தது காரணம் அவள் தாவணி பாவாடையில் கோவிலுக்கு சென்றுவிட்டு அப்படியே வந்திருந்தாள் ரத்த சிவப்பு நிற தாவணி அடர் பச்சை நிற பாவாடை மற்றும் மேலாடை அணிந்து வானத்தில் இருந்து இறங்கி வந்த தேவதையை போல் இருந்தாள்
பிரம்மா ஒரு கணம் அவளை கண் விலகாமல் பார்த்துவிட்டு பின்னர் தன்னைச் சமாளித்துக் கொண்டு,“வா”என்றான்.
ரோஜா அவன் முன் சென்று நின்றாள்
“என்ன சார்” என்று கேட்க “நேத்து கொடுத்த கேஸ் ஷீட் பார்த்தியா” என்று கேட்க
“பார்த்தனே சார்” என்று அவள் கூற
“அதுல ஒரு சின்ன மிஸ்டேக் இருக்கு”
என்று கூறியவன் கோப்பை அவளிடம் நீட்டினான் ரோஜா அவன் அருகில் வந்து அதை வாங்கி பார்க்க ஆரம்பித்தாள் அவள் எங்கே என்று புரியாமல் பார்க்க “இங்க பாரு…”
என்று பிரம்மா அவளுக்கு அருகில் வந்து நின்றான்.
ரோஜா அவன் சுட்டிக் காட்டிய இடத்தைப் பார்க்க ரோஜாவும் அவனுக்கு சற்று அருகில் வந்தாள் அந்த நொடி இருவருக்கும் இடையே இருந்த தூரம் வெகுவாகக் குறைந்தது
பிரம்மாவின் தோளில் அவளது கை லேசாக உரசியது இருவருமே கோப்பில் கவனமாக இருக்க அதை பார்க்கவில்லை.
“இதையெல்லாம் சரி பண்ணிக்கோங்க” என்று கூற அவளும் சரியென்று தலையை ஆட்டிவிட்டு அங்கிருந்து செல்ல போக பிரம்மா அவனின் வீல் சேரில் அமர்ந்தான் ரோஜா அங்கிருந்து செல்ல முயல அவளின் தாவணி அவன் வீல் சேரின் சக்கரத்தில் மாட்டி விட பெண்ணவள் ஒரு கணம் நிலை தடுமாறி விழ போக அவளின் தாவணியில் குத்தியிருந்த பின் அவிழ்ந்து தாவணியின் மடிப்பு கலைய அது நழுவி விழுவதற்க்குள் அவள் பிடித்து கொள்ள பிரம்மாவின் பார்வை அவனே அறியாமல் கெட்ட பார்வையாக உரிமையுடன் மாற போக அதற்க்குள் பெண்ணவள் தாவணியை இறுக்கிப் பிடித்துக் கொள்ள பிரம்மா எழுந்து நின்று தன் இருக்கையை சரி செய்தான் அப்போது அவள் நிலை தடுமாறியதில் அவளின் கழுத்தில் இருந்த தாலி வெளியே வந்து விழ பிரம்மாவின் கண்விலகமால் அவன் அன்று அவன் அணிவித்த தாலியை பார்த்தது யாருக்கும் தெரியக் கூடாது என்பதற்க்காக தங்கத்தில் கோர்த்து தாலியை அணிந்து இருந்தாள் ரோஜா.
ரோஜா உடனே அவசரமாக திரும்பியவள் தாலியை எடுத்து உள்ளே போட்டு கொண்டு
தாவணியை ஒரு கையால் பிடித்து கொண்டு தன் பையை எடுத்து கொண்டு கதவு திறந்து வெளியே ஓடினாள் அவள் தாவணி அவிழ்ந்து பிரம்மா அறையில் இருந்து ஓடுவதை அங்கே வெளியே நின்றிருந்த இரு செவிலியர்கள் பார்த்தனர்.
“என்ன இந்த பொண்ணு பிரம்மா சார் ரூம்ல இருந்து ஓடி வரா” என்று ஒருவர் கேட்க இன்னொருவர் “வர வர இந்த பிரம்மா சார் போக்கே சரியில்லை மோசமா நடந்துக்குறாரு இந்த அசிங்கத்தையெல்லாம் ஹாஸ்பிட்டல்லையா பண்ணனும்” என்று கூற
“இதையெல்லாம் போய் யார் கிட்டையும் சொல்லிக்கிட்டு இருக்காத என்ன இருந்தாலும் சீனியர் டாக்டர்” என்று அவர் கூற “ம்க்கும் நான் சொல்லலன்னா இந்த ஹாஸ்பிட்டல்ல எந்த விஷயமும் யாருக்கும் தெரியாது பாரு” என்று
பேசிக் கொண்டே அங்கிருந்து சென்றனர் இந்த செய்தி காட்டுத் தீயாக மருத்துவமனை எங்கும் பரவியது பிரம்மாவை மும் ரோஜாவையும் இணைத்து மருத்துவமனை முழுவதும் பேச ஆரம்பித்தனர்.
அதேநேரம் தன் அறையில் இருந்த பிரம்மாவுக்கு எந்த வேலையும் ஓடவேயில்லை
‘எனக்கு என்ன தான் ஆச்சு’ என்று நினைத்தவனின் மனதில் ரோஜாவின் மாசு மருவற்ற முகம் வந்து கொண்டே இருந்தது அதனுடன் சேர்ந்து அவளின் தாவணி விலகும் போது தெரிந்த அவள் அங்க வளைவுகளும் அவளின் கழுத்தில் இருந்த தாலியும் யாருக்கும் தெரியா வண்ணம் செயினில் கோர்த்து போட்டு இருந்தாள்.
‘ஏன் எதுக்காக அவள் இதை கழட்டாம இருக்கா நாலு வருசமா காலேஜ் படிக்குறா யாரும் அவள் காதலிக்கலையா யாரு மேலையும் அவளுக்கு ஈர்ப்பு வரலையா ஒரு வேளை அவங்க வீட்ல கட்டாயப்படுத்தி போட வச்சு இருப்பாங்களோ’ என்று நினைத்தவனுக்கு எந்த வித வேலையும் ஓடவேயில்லை அப்படியே அமர்ந்து இருந்தான்.
ரோஜா உடை மாற்றும் அறைக்குள் ஓடி வந்தவளுக்கு அப்போதும் பயத்தில் இதயம் படபடவென்று அடித்து கொண்டது ‘அவரு என் கழுத்துல இருந்த தாலியை பார்த்து இருப்பாரா என்ன நினைச்சு இருப்பாரு’ என்று நினைத்து கொண்டே இருந்தாள் பதட்டத்துடன் அவள் இதயத்துடிப்பு லப்டப் என்று வெளியே வரை கேட்டது அப்போது அவள் அலைபேசி ஒலிக்க அதை பார்க்க நந்தினி தான் அழைத்திருந்தாள் “ஏன் டி எவ்வளவு நேரம் டிரஸ் மாத்துவ இங்க எல்லாரும் வந்துட்டாங்க வா டி” என்று கூற “இதோ வரேன் டி” என்று சலிப்புடனே கூறியவள் அழைப்பை துண்டித்து விட்டு உடை மாற்றி கிளம்பினாள் அதன் பின் நந்தினியுடனே நேரம் செல்ல அவள் பிரம்மாவை பற்றி நினைக்கவில்லை.
ஆனால் மதியம் சாப்பிட்டு முடித்து வர அவளுக்கு முன்பே வந்து பிரம்மா நின்றிருந்தான் அவனை பார்த்த மறுகணமே அவளின் முகம் மாறியது நந்தினி பின்னே நடந்து வந்தாள் பிரம்மா அவளை பார்த்தவன் எதுவும் பேசவில்லை ஆனால் இன்னொரு மருத்துவன் அவன் பெயர் சத்யா அவன்
“ரோஜா…” என்ற அவன் சத்தமாக அழைக்க அவன் அழைப்பில் அங்கிருந்த அனைவரும் அவனையும் அவளையும் பார்த்தனர் அவளோ அவர்களின் பார்வையை பார்த்து தயங்கி நின்றாள்.
சத்யா சாதாரணமாக அழைத்து தான் ரோஜாவிடம் பேசிக் கொண்டு இருந்தான் ஆனால் பிரம்மாவின் முகம் மட்டும் இறுகியது அது ஏன் என்று அவனுக்கே தெரியவில்லை அவர்களை அவ்வப்போது பார்த்து கொண்டே
பேஷன்ட்டுக்கு போட வேண்டிய மருந்தை எடுக்காமல் வேறு ஒரு மருந்தை கையில் எடுக்க “சார்” என்று அவன் பக்கத்தில் இருந்த செவிலிப்பெண் அழைக்க அதில் சுயநினைவுக்கு வந்தவன் அவரை பார்க்க
“இந்த மருந்து இல்லை சார் இவங்களுக்கு வேறு ஏதோ பெயரை சொல்ல” அப்போது தான் அவன் சுயத்திற்க்கு வந்தான் “சாரி ..சாரி சிஸ்டர்” என்று தடுமாறினான் “நீங்களே பார்த்துக்கோங்க” என்று கூறிவிட்டு அங்கிருந்து விரைவாக வெளியேறினான்.