கைக்கிளை மாயம் 1,2

அத்தியாயம் 1 

 

 

 

விமான நிலையம் எப்போதும் போல மிகவும் பரபரப்புடனே இருக்க தனது கையில் டிராலியை தள்ளிக்கொண்டே நடந்து வந்தான் பிரம்மா ஆறடி மூன்று அங்குல உயரத்தில் திராவிட நிறத்தில் நடந்து வந்தவன் கண்கள் எதையோ வலை வீசி தேடியது தனது கண்ணில் இருந்து மூக்கு கண்ணாடியை சரி செய்தவன் இடது கையை பாக்கெட்டில் விட்டு கொண்டு நடந்து வந்தான்.

 

 

 

அவன் நடந்து வந்து கொண்டே இருக்கும் போதே அவன் குறுக்கே ஓடி வந்தான் அவன் நண்பன் கார்த்தி “ஏலேய் மச்சான் எப்படி இருக்க மன்னிச்சிடு டே வர கொஞ்சம் நேரமாச்ச்சு” என்று கூறி “இட்ஸ் ஓகே வா போலாம்” என்று கூறினான் பிரம்மா 

 

“நீ லண்டனுக்கு போய் ஆளே மாறிட்ட” என்று கூறிக் கொண்டே அவன் கையில் இருந்த பெட்டியை வாங்கியவன் “உள்ள வாசனை தைலம்லாம் இருக்குல்ல” என்று அவனிடம் கேட்க “ம்ம்” என்றான் பிரம்மா.

 

 

 

இருவரும் காரில் ஏறி அமர்ந்து கொள்ள அவன் நண்பன் கார்த்தி பிரம்மாவிடம் கதை அளந்து கொண்டே அனைத்திற்க்கும் ம்ம் கொட்டி கொண்டே வந்தான் அவன் ஐபோனில் எதையோ பார்த்து கொண்டே வர திடீரென அவனுக்கு அழைப்பு வர அதை எடுத்து பார்த்தான் திரையில் ‘Baby’ என்று மின்னியது அழைப்பை எடுத்தவன் குரல் மென்மையாக மாறியது காதில் வைத்தான் மறுபுறம் இருந்து அடுத்த கணம் நச் என்று சத்தத்துடன் இடைவிடாத முத்த சத்தம் கேட்டது 

 

அந்த முத்த சத்தத்தை கேட்டு அவன் இறுகிய முகம் லேசாக மாறியது “பேப் நீ எப்போ வர” என்று அந்த பக்கம் இருந்து சினுங்கியது ஒரு குரல் “நான் இப்போ தான் ஏர்போர்ட்டே வந்தேன் இரண்டு நாள்ல வந்துடுவேன்” என்றான் பிரம்மா.

 

 

 

“மிஸ் யூ” என்று அவள் சிணுங்க பதிலுக்கு 

 

பிரம்மாவும் “நானும் தான் அப்புறம் பேசுறேன்” என்று கூறிவிட்டு அழைப்பை துண்டித்தான் 

 

“என்ன மாப்பிள்ளை பொம்பளை பிள்ளையா” என்று கார்த்தி கேட்க “ஒழுங்கா காரை ஓட்டு டா நீ” என்றான் பிரம்மா முறைப்புடனே.

 

 

 

பிரம்மா வயது 30 லண்டனில் உள்ள ஒரு மருத்துவமனையில் மகப்பேறு மருத்துவனாக பணிபுரிகிறான் அவன் சித்தப்பா மகன் அதாவது அவன் தம்பிக்கு திருமணம் அதற்க்காக தான் இந்தியா வந்திருக்கிறான்

 

பிரம்மா லண்டனில் உள்ள அவன் காதலியுடன் ஒரு வருடமாக லிவ் இன்னில் வாழ்ந்து இது அவன் பெற்றோருக்கு தெரியாது திருமணத்தை பற்றிய பேச்சை எடுக்கும் போது எல்லாம் வேண்டாம் என்று மறுத்து விடுவான் திருமணத்தில் பெரிதாக நாட்டம் நம்பிக்கை இல்லாதவன் இப்போது அவன் இந்தியாவுக்கு வந்ததற்கு திருமணம் மட்டும் காரணமல்ல இன்னொரு முக்கியமான கணக்கும் அவன் மனதில் ஓடிக் கொண்டிருந்தது தன் சொத்தை எல்லாம் தன் பெயரில் மாற்றி எழுது வாங்கி அதையெல்லாம் விற்றுவிட்டு தன் காதலியுடன் செட்டில் ஆக தான் வந்திருந்தான்.

 

 

 

கார் நேரே அந்த பெரிய வீட்டின் முன்னே வந்து நின்றது வீடே விழாக்கோலம் பூண்டு இருந்தது 

 

அனைவரும் ஒரே வீட்டில் ஒரே குடும்பமாக விசிக்கின்றனர் ஊரில் பெரிய குடும்பம் தாத்தா பாட்டி சித்தப்பா சித்தி என்று சொல்லிக் கொண்டே இருக்கலாம் உறவுகளை ஒரு நாள் போதாது அவ்வளவு பெரிய கூட்டம்.

 

 

 

பிரம்மா வந்துவிட்டான் என்றவுடன் அவனின் தாய் வெளியே ஓடிவந்து மகனை உச்சி முகர்ந்துவிட்டார் நெடிய நான்கு வருடங்களுக்கு பிறகு மகனை பார்க்கிறார் அல்லவா ஆனால் பிரம்மாவின் முகத்தில் எந்த வித எதிரொலிப்பும் இல்லை அவன் குடும்பத்துடன் பேசியே மூன்று வருடங்கள் ஆகிறது குறிப்பாக தந்தையுடன் அவன் தந்தை அவனை வெளியே வந்து கூட பார்க்கவில்லை கண்ணீருடன் அவனை உள்ளே அழைத்து சென்றார் அவன் தாய் வீட்டில் இருந்த அனைவருக்கும் அவன் வந்தது மகிழ்ச்சி தான் இருப்பினும் திருமண வேலை அனைவரும் அங்கும் இங்கும் ஓடியாடி வேலை பார்த்து கொண்டிருந்தனர்.

 

 

 

அதன் பிரம்மா தன் அறைக்கு சென்று படுத்து கொள்ள மறுநாள் ஏற்பாடுகள் தயாராக அவனும் பட்டு வேட்டி சட்டையில் கிளம்பி வந்தான் அனைவரும் மண்டபத்துக்கு செல்ல 

 

பிரம்மா மணமகன் அறைக்குள் சென்றான் யாரும் எதிர்ப்பாராத சமயம் அவன் தாய் மாலையை எடுத்து வந்து அவன் கழுத்தில் மாட்டினார் “அம்மா எதுக்கு என் கழுத்தில் மாலையை போடுறிங்க” என்று அவன் கேட்க 

 

“அம்மா முடிவு பண்ணிடாரு டா அவரு பேச்சை மீறி என்னால் எதுவும் பண்ண முடியலை இன்னைக்கு உனக்கு தான் கல்யாணம் என் அண்ணன் மகள் ரோஜா கூட” என்று பயந்து பயந்து கூற.

 

 

 

அவரின் பதிலை கேட்ட பிரம்மாவின் முகம் மாறியது “யாரை கேட்டு முடிவு பண்ணுனிங்க” என்று அவன் மாலையை கழட்டி ஏறிய அப்போது அங்கே வந்த அவன் தந்தை

 

“யாரை கேட்க்கனும் சொல்லு டி நாலு வருசமா துறை வீட்டுக்கு வர மாட்டாரு ஊரே ஒத்த பிள்ளைக்கு கல்யாணம் பண்ணி வைக்க முடியலைன்னு பார்த்து சிரிக்கும் என்னை சும்மா இருக்க சொல்றியா” என்று அவர் கேட்க.

 

 

 

“அம்மா எனக்கு இந்த கல்யாணத்துல சுத்தமா விருப்பம் இல்லை” என்று கூறிவிட்டு அவன் அங்கிருந்து செல்ல போக “என் சொத்துல பத்து பைசா தர மாட்டேன் எல்லாத்தையும் அனாதை ஆசிரமத்துக்கு எழுதி வச்சிருவேன் துரை கிட்ட சொல்லு” என்றார்‌ அந்த பட்டிக்காட்டு தந்தை மீசையை முறுக்கி விட்டு கொண்டே பிரம்மாவின் நடை உடனே தடைப்பட்டது.

 

 

 

“அது எப்படி நீங்க எழுதி வைக்க முடியும் எனக்கு சேர வேண்டியது தான் வந்து தான் ஆகனும்” என்றான் கோபத்துடன் “இது என்ன உன் தாத்தா பாட்டி சம்பாரிச்ச சொத்தா நான் கஷ்டப்பட்டு உழைச்சு சம்பாரிச்சது நான் யாருக்கு வேணும்ன்னாலும் கொடுக்கலாம்” என்றார் அவனின் தந்தை.

 

 

 

பிரம்மாவின் முகம் சிவந்து கோபத்தில் அப்படியே நின்று இருக்க “துரையை வந்து தாலி கட்ட சொல்லு” என்று கூறிவிட்டு செல்ல வேறு வழியேயின்றி அவனும் மாலை மாட்டிக் கொண்டு மணமேடைக்கு வந்து அமர அவன் பக்கத்தில் வந்து அமர்ந்தாள் பெண்ணவள் ரோஜா அவனின் தாய் மாமா மகள் அவளுக்கும் இவனுக்கும் ஏறக்குறைய பத்து வருட வித்தியாசம் இருந்தது ஓடிசலான தேகத்துடன் குழந்தை முகத்துடன் அமர்ந்திருந்தாள் ரோஜா பிரம்மாவை ஒருமுறை வெட்கத்துடனே நிமிர்ந்து பார்த்தாள் சிறுவயதில் இருந்து மனதில் சுமந்த கனவு இன்று நிஜமாகிறது என்று அவள் கண்கள் சொல்லின

 

பிரம்மா எதை பற்றியும் யோசியாமல் தாலியை தன் கையில் வாங்கி அவள் கழுத்தில் கட்டி முடித்தான்.

 

 

 

ரோஜாவோ பல கனவுகளோடு தலை குனிந்து அமர்ந்திருந்தாள் இரு வீட்டு பெற்றோரும் மகிழ்வுடனே நின்றிருந்தனர் திருமணம் முடிந்து இருவரும் எழுந்து கொள்ள பெரியவர்கள் விழுந்து ஆசி பெற அழைக்க பிரம்மா தன் கழுத்தில் இருந்த மாலையை கழட்டி தூக்கி எறிந்தவன் விறுவிறுவென அங்கிருந்து நடந்து சென்றான்.

 

 

 

அங்கிருந்த அனைவரும் அவனை அதிர்வுடனே பார்க்க அவன் நேரே தன் வீட்டுக்கு சென்று தன் உடமைகளை எடுத்து அடுக்கியவன் தனக்கு உடனே கிடைத்த விமானம் ஒன்றை பிடித்து லண்டன் வந்து சேர்ந்தான்.

 

 

 

அந்த சம்பவம் நடந்து சரியாக மூன்று வருடங்களுக்கு பிறகு பிரம்மா இப்போது கொடைக்கானலில் இருந்த ஒரு பெரிய மருத்துவமனையில் மகப்பேறு மருத்துவனாக பணியாற்றி கொண்டு இருந்தான் அன்றைய கேஸ் ஷீட்டுகளை பார்த்து கொண்டே பிரம்மா வெள்ளை நிற கோர்ட்டுடன் நடந்து கொண்டு இருந்தான்.

 

 

 

அந்த நேரம்,”குட் மார்னிங் சார்…”என்ற குரலில் நின்றான் அவன் முன் மருத்துவமனையின் முதன்மை செவிலியர் நின்றிருந்தார்

 

“சார், இன்னைக்கு B.Sc. Nursing Final Year ஸ்டூடன்ட்ஸ் Clinical Training-க்காக வந்திருக்காங்க ஒரு மாசம் உங்க டிப்பார்ட்மென்ட்ல தான் டிரையினிங் எடுக்க போறாங்க” என்று கூறி, அவன் பதிலுக்குக் கூட காத்திருக்காமல் மாணவிகளை அழைத்து வந்தார்.

 

 

 

பத்து, பதினைந்து மாணவிகள் நீல நிற பேன்ட் சட்டை யூனிஃபார்மில் வரிசையாக வந்து நின்றனர் பிரம்மாவின் பார்வை அலட்சியமாக ஒவ்வொருவரையும் கடந்து சென்றது

 

திடீரென்று…மூன்றாவதாக நின்றருந்தவளை பார்த்து நிலைக்குத்தி நின்றது அடுத்த நொடி…

 

அவன் கால்கள் அப்படியே உறைந்து போனது

 

இதயம் படபடவென அடித்து கொண்டது

 

மூன்று வருடங்களாக மறந்து விட வேண்டும் என்று நினைத்த முகம்

 

இன்று அவன் கண்முன்னே நின்றிருந்தது.

 

 

 

ஆம் அது அவளே தான் அவன் மனைவி ரோஜா சிறிய பொட்டு…காதில் சிறிய தோடுடன் கையில் ஏதோ ஒரு நோட்டை வைத்து கொண்டு யூனிபார்ம் அணிந்து எளிமையான முகத்துடன் அதே அமைதியான பார்வையுடன் அவனை பார்க்க தடுமாறி கொண்டே நின்றிருந்தாள் அவனுடைய மனைவி ஆனால் ரோஜா அவனைப் பார்த்த விதத்தில் எந்த வித அதிர்ச்சியும் இல்லை.

 

 

 

அது பிரம்மாவுக்கே இன்னொரு அதிர்ச்சியாக இருந்தது ‘என்னை… இவளுக்கு நம்மள அடையாளம் தெரியலையா’ 

 

என்று மனதுக்குள் நினைத்தவன், ஒரே‌ ஒரு கணம் அதிர்ந்து நின்றவன் அதன் பின் தன்னை சமாளித்து கொண்டான்.

 

 

 

தன் முகத்தில் எந்த வித உணர்வையும் காட்டாமல்,”Training Coordinator யார்? என்று கேட்க “நம்ம கலைவாணி மேடம் சார்” என்றார்

 

“ஓகே Attendance Sheet எடுத்துட்டு என் Cabin-க்கு வாங்க” என்றவன் செல்லும் போது ரோஜாவை மட்டும் அழுத்தமாக ஒரு பார்வை பார்த்துவிட்டு சென்றான் அவன் பதில் சொல்லிவிட்டு விறுவிறுவென அங்கிருந்து நடந்து சென்றான் ஆனால்…

 

அவன் மனதிலோ இரண்டு வருடங்களுக்கு முன்பு நடந்த விஷயங்களில் நிலைத்து இருந்தது அதையெல்லாம் அசை போட்டு கொண்டே தன் கேபினுக்கு வந்து அமர்ந்தான்.

 

 

 

அதேநேரம் ரோஜாவும் அவனையே தான் பார்த்து கொண்டிருந்தாள் அவள் சாதாரணமாக இருந்தாலும் அவளின் இதயம் படபடத்தது கைகள் நடுங்கியது யாரை இந்த மூன்று வருடமாக பார்க்கவே கூடாது என்று 

 

நினைத்தாளோ அவனையே இன்று நேரில் பார்த்ததில் அவளின் அதிர்ச்சி சற்றும் குறையவில்லை அவள் அசையாமல் சிலையாக அதே இடத்தில் நின்றிருக்க 

 

“ரோஜா ரோஜா” என்று அவளின் தோழி நந்தினி அழைக்க அதில் சுயநினைவுக்கு வந்தவள் “என்ன டி” என்றாள் “வா கேன்டின் போலாம்” என்று அவள் அழைத்து செல்ல பேயறைந்ததை போல அவளுடன் சென்றாள் ரோஜா.

 

 

 

ஆனால் அவள் மனதில் ‘அவருக்கு என்னை நியாபகம் இருக்குமா என்னை பத்தி நினைப்பாரா’ என்று மனதில் நினைத்து கொண்டே அவளுடன் வந்தாள்.

 

 

 

அத்தியாயம் 2 

 

 

 

நந்தினி ஏதேதோ பேசிக் கொண்டு இருக்க அவள் காதில் எதுவும் விழுந்த பாடில்லை அசையாமல் அமர்ந்திருந்தாள் “அடியேய்” என்று நந்தினி அவளின் தோளை பிடித்து உலுக்க அப்போது தான் சுய நினைவுக்கே வந்தாள் ரோஜா “ரோஜா உனக்கு என்ன தான் டி ஆச்சு” என்று கேட்க “ஒ….ஒன்னுமில்லை டி” என்றாள் திணறலுடனே.

 

 

 

“சரி விடு அந்த டாக்டர் ரொம்ப ஹேன்ட்சமா இருக்காருல்ல” என்று கூற “எந்த டாக்டர்” என்று அவள் கேட்க “அதான் டி டாக்டர் பிரம்மா” என்றாள் அவள் அப்படி கூறியவுடன் பெண்ணவளுக்கு கோபம் வந்தது இருப்பினும் அதை வெளிக்காட்டி கொள்ளவில்லை அதன் பின் அவள் பிரம்மாவை பற்றியே பேசிக் கொண்டு இருக்க அவளை கொன்று விடலாமா என்று கூட தோன்றியது.

 

 

 

அதே நேரம் பிரம்மாவின் கேபின் கதவு தட்டப்பட்டது “உள்ள வரலாமா சார்?” என்று கேட்க “வாங்க” என்றான்‌ பிரம்மா உள்ளே வந்த சீனியர் செவிலியர் கலைவாணி, வருகைப் பதிவேட்டை அவன் முன் வைத்தார்.

 

“சார்… Training Students Attendance”

 

பதிவேட்டை வாங்கிப் புரட்டிப் பார்த்த பிரம்மாவின் பார்வை ஒரு நொடி ‘ரோஜா’ என்ற பெயரிலேயே நிலைத்து நின்றது. 

 

 

 

அடுத்த நொடியே முகத்தை இயல்பாக மாற்றிக் கொண்டான் “சிஸ்டர்… முதல் வாரம் Case Observation மட்டும் போதும் ரோஜா, நந்தினி… இந்த இரண்டு பேரை மட்டும் என் டிபார்ட்மென்ட்க்கு அனுப்புங்க அடுத்த வாரம் மத்தவங்களையும் Rotation-ல சேர்த்துக்கலாம்” என்றான் அவரும் பதிலுக்கு “ஓகே சார்” என்று கூறிவிட்டு வெளியே வந்தார்.

 

 

 

ரோஜாவும் அவள் தோழியும் கேன்ட்டினில் இருந்து வர அவள் எதிரே வந்த அவளின் அறை தோழி “ரோஜா நந்தினி உங்க ரெண்டு பேரையும் பிரம்மா சார் வர சொன்னாரு” என்று கூறிவிட்டு சென்றாள் “அய்யய்யோ நாம்

 

 எதாவது தப்பு பண்ணிடோமா டி ரோஜா ஒருவேளை நான் அவரை சைட் அடிச்சதை அவரு பார்த்துட்டாரா ” என்று நந்தினி பயத்துடனே கேட்க “அடச்சை பயந்து சாகாத வா” என்று அவளின் கைப்பிடித்து அழைத்து சென்றாள் வரும் வழியெல்லாம் புலம்பிக் கொண்டே வந்தாள்.

 

 

 

இருவரும் அவன் அறையின் வாசலில் நின்று யார் கதவை தட்டுவது என்று சண்டையிட்டு கொண்டு இருக்க அந்த வழியாக சென்ற மருத்துவர் இவர்களை பார்த்து விட ரோஜா உடனே அந்த அறையின் கதவை தட்டினாள் 

 

“கம் இன்” என்ற பிரம்மாவின் குரலை கேட்டு இருவரும் அறையின் உள்ளே வந்தனர்.

 

 

 

அவர்களை நிமிர்ந்து பார்த்தான் பிரம்மா அவன் பார்வை முதலில் ரோஜாவிடம் தான் சென்றது அதன் பின் நந்தினியிடம் வந்தது 

 

“உட்காருங்க” என்றான் இருவரும் அவனுக்கு எதிரே இருந்த இருக்கையில் அமர்ந்து கொண்டர்.

 

 

 

“நீங்க ரெண்டு பேரும் ஒரு மாசம் என் டிப்பார்ட்மெண்ட்ல தான் டிரையினிங் எடுக்கப் போறிங்க இங்க ஒழுக்கம் தான் முக்கியம்

 

நான் சொல்ற Instructions-ஐ பாலலோ பண்ணணும் Patient Details வெளியே Discuss பண்ணக்கூடாது Permission இல்லாம எந்த Procedure-க்கும் கை வைக்கக்கூடாது அன்ட் முக்கியமான விஷயம் என்னை கேட்க்காம‌ லீவ் எடுக்கவே கூடாது” என்று கூறினான்

 

நந்தினி ஆர்வமாக “ஓகே சார்”என்றாள்.

 

 

 

ரோஜாவோ “ஓ..ஒகே சார்” என்றாள் தடுமாற்றத்துடன் அவள் இன்னும் பதட்டத்தில் தான் இருக்கிறாள் என்பது பிரம்மாவுக்கு புரிந்தது அதை கண்டுகொள்ளாமல் அவன் சாதாரணமாக தன் டேபிளில் இருந்த கேஸ் பைல் ஒன்றை எடுத்தவன் “இந்த Patient-ஐ Observe பண்ணுங்க Evening Report என் Table-ல இருக்கணும்” என்று கூறியவன் ரோஜாவிடம் கோப்பை நீட்ட அவளும் வாங்கி கொண்டாள் அவள் வாங்கும் போது ஒரே ஒரு கணம் இருவரின் கைகளும் உரசியது அந்த ஒரு நொடி தொடுதலில், மூன்று வருடங்களுக்கு முன் அவள் கழுத்தில் தாலி கட்டிய தருணம் பிரம்மாவின் நினைவில் மின்னல் போல வந்து மறைந்தது.

 

 

 

ரோஜா உடனே மின்னல் வெட்டியதை போல கையை எடுத்து கொண்டாள் பிரம்மாவின் பார்வை இந்த முறை அழுத்தமாக பதிந்து மீண்டது நந்தினி அந்த பைலை பார்ப்பதிலேயே குறியாக இருக்க அவள் அதை கவனிக்கவில்லை ஆனால் ரோஜா அதை கவனித்தாள் ‘என்ன இப்படி பார்க்குறாரு’ என்று மனதில் நினைத்தாள்‌.

 

 

 

“ரோஜா… நீங்க மட்டும் ஒரு நிமிஷம் இருங்க நந்தினி, நீங்க போகலாம்” என்றான் பிரம்மா நந்தினி ஒன்றும் புரியாமல் இருவரையும் பார்த்து கொண்டே அறையை விட்டு வெளியேறினாள் பிரம்மாவின் பெண்ணவளின் மீது படிய அவளோ அவன் முன் அமர்ந்திருக்க முடியாமல் தடுமாற

 

“எப்படி இருக்க” என்று அவன் கேட்க 

 

அவளோ அவனை பார்க்காமலேயே “நல்லாருக்கேன் மா..சார்” என்றவள் மாமா என்று கூற வந்து நாக்கை கடித்து கொண்டு சார் என்றாள்.

 

 

 

“ஓகே நீ போலாம்” என்று அவன் கூற விட்டால் போதும் என்று அவள் வெளியே செல்ல போக தரையில் இருந்த வயரை கவனியாமல் நடக்க கால் தடுக்கி விழ போக பிரம்மா விழப்போனவளை ஒரு கையால் இடையைத் தாங்கி நிறுத்தினான் இருவருக்கும் ஒரு நூல் அளவு இடைவெளி மட்டும் இருக்க அவன் மீது இருந்து வந்த வாசனை திரவியத்தின் மணம் அவள் மூக்கை துளைக்க அவன் கண்களை நேராக பார்த்தாள் அடுத்த கணம் அவளை ஒழுங்காக நிற்க வைத்த பிரம்மா “இன்னும் உனக்கு பார்த்து நடக்குற பழக்கம் வரலையா” என்று கடிந்து கொள்ள “சாரி மா..” என்று கூற வந்தவள் “சார்” என்று கூறிவிட்டு அங்கிருந்து வெளியேறினாள்.

 

 

 

“என்னடி இவ்வளவு நேரம் என்ன கேட்டாரு” என்று நந்தினி கேட்க “ஒன்னுமில்லை… டிரைனிங் பத்திதான் சொன்னாரு” என்றாள் 

 

“அய்யய்யோ நான் கூட வேற என்னவோன்னு நினைச்சு பயந்துட்டேன் டி” என்றாள் .

 

 

 

இருவரும் மீண்டும் தங்களது டிப்பார்ட்மென்ட் நோக்கி நடந்து சென்றனர் நந்தினி வழக்கம்போல ஏதோ பேசிக்கொண்டே வர, ரோஜாவின் மனமோ அங்கே இல்லை சில நிமிடங்களுக்கு முன்பு நடந்த சம்பவம் மட்டும் அவள் நினைவில் ஓடிக் கொண்டிருந்தது அவன் தாங்கிய கை…அவன் உடலில் இருந்து வந்த அந்த வாசனை…“இன்னும் உனக்கு பார்த்து நடக்குற பழக்கம் வரலையா…” என்று அவன் சொன்ன வார்த்தை காதுக்குள் மீண்டும் மீண்டும் ஒலித்தது.

 

“ரோஜா…” என்று நந்தினி கத்தி அழைக்க “என்னடி காது வலிக்குது எதுக்கு டி இப்படி கத்துற” என்று அவள் கேட்க “நான் இவ்வளவு நேரமா பேசிட்டு வரேன் நீ எதுவுமே கேக்கவே இல்லை அதனால தான் கத்துனேன்” என்றாள் நந்தினி “சாரி டி… கொஞ்சம் தலை வலிக்குது” என்றாள் “ஓ… அதனால தான் ஒரு மாதிரி இருக்கியா” என்று நந்தினி கேட்க, ரோஜா மெல்ல தலையசைத்தாள் அதே நேரம் அவர்கள் இருந்த வார்டில் ஒரு நோயாளிக்கு திடீரென வலி அதிகரித்தது.

 

“சிஸ்டர்…”என்று நந்தினி அழைக்க, கலைவாணி சிஸ்டர் வேகமாக வந்து நோயாளியை பரிசோதிக்க ஆரம்பித்தார் “ரோஜா, நீங்க இங்க நின்னு observe பண்ணுங்க. என்ன நடக்குதுன்னு எல்லாத்தையும் note பண்ணிக்கோங்க” என்று கூற “சரி சிஸ்டர்” என்றாள் பெண்ணவள் ஒரு நோட்டையும் பேனாவையும் கையில் எடுத்துக் கொண்டாள்.

 

நந்தினியும் அவளருகில் வந்து நின்றாள் சில நிமிடங்கள் கழித்து கலைவாணி சிஸ்டர் சில instructions கொடுத்துக் கொண்டிருந்தார் ரோஜா அனைத்தையும் எழுதிக் கொண்டிருந்தாலும், எதை முதலில் note செய்ய வேண்டும், எதை முக்கியமாக கவனிக்க வேண்டும் என்பதில் அவளுக்கு குழப்பமாக இருந்தது அவள் நந்தினியிடம் மெதுவாக,

 

“இதை எப்படி எழுதனும்னு தெரியல டி…” என்றாள் “எனக்கும் தெரியல டி பேசாம பிரம்மா சார்கிட்டயே கேட்டுக்கலாமா” என்று அவள் கேட்க “வேணாம் டி…” என்றாள் ரோஜா பயத்துடன் “ஏன்” என்று நந்தினி கேட்க “அவர்கிட்ட கேக்கவே பயமா இருக்கு டி” என்றாள் ரோஜா பயந்த முகத்துடனே நந்தினி அவள் முகத்தை பார்த்து சிரித்தவள்“அவரு டாக்டர் தான பேய் இல்லையே” என்று கேட்க ரோஜா அவளை முறைத்தாள் “உனக்கு ஒன்னும் தெரியாது” என்றாள் “எனக்கு என்ன தெரியாது” என்று நந்தினி கேட்க “ஒன்னுமில்லை டி விடு” எனக்கு தான தெரியும் என் பிரச்சனை என்னன்னு என்று மனதில் நினைத்தாள்.

 

அவள் சொல்லி முடிப்பதற்குள் பின்னால் இருந்து ஒரு குரல் கேட்டது “என்ன தெரியாது” இருவரும் சட்டென்று திரும்பிப் பார்த்தனர் அங்கே பிரம்மா தான் நின்றிருந்தான் கழுத்தில் ஸ்டெதஸ்கோப் மாட்டிக் கொண்டு தனது சட்டை பாக்கெட்டில் கையை விட்டு கொண்டு அவன் நிமிர்வுடன் நிற்க ரோஜா பயத்தில் எச்சில் கூட்டி விழுங்கினாள் அவன் கையில் patient file இருந்தது.

 

நந்தினி உடனே,“ஒன்னுமில்லை சார்…”என்று கூறிவிட்டு தப்பித்தால் போதும் என்று வேறு பக்கம் நகர்ந்தாள் பிரம்மாவின் பார்வை ரோஜாவிடம் திரும்பியது “என்ன பிரச்சனை உனக்கு” என்று ஒருமையில் கேட்க “ஒன்னுமில்லை சார்” என்றாள் பெண்ணவள் “அப்படின்னா ஏன் இப்படி நின்னுட்டு இருக்க” என்று கேட்க ரோஜா தயங்கியபடி தன் notebook-ஐ அவனிடம் நீட்டினாள்.

 

“என்ன note பண்ணணும்னு கொஞ்சம் குழப்பமா இருக்கு சார்” என்றாள் பிரம்மா notebook-ஐ வாங்கிப் பார்த்தான் அவன் புருவம் சுருங்கியது “இதுல பாதி information தான் இருக்கு…மீதி எங்க” என்று கேட்க ரோஜாவின் முகம் உடனே வாடியது “சாரி சார்…” என்று கூற “சாரி சொல்லாதிங்க தெரியாததை கேளுங்க தயங்கி கூச்சப்பட்டுக்கிட்டே இருந்தா இங்க ஒன்னுத்தையும் கத்துக்க முடியாது புரியுதா” என்று கூற அவளும் சரியென்று தலையை ஆட்டினாள் அவள் அருகில் இருந்த patient chart-ஐ எடுத்தவன் “வா” என்று கூறிவிட்டு முன்னே நடக்க அவள் தயக்கத்துடன் அவன் அருகில் சென்றாள்.

 

“முதல்ல patient-ஐ observe பண்ணும்போது என்ன பார்க்கணும்னு தெரிஞ்சிருக்கனும் வெறும் pain இருக்கா இல்லையான்னு மட்டும் பார்த்தா போதாது” என்று அவன் ஒவ்வொன்றாக விளக்க ஆரம்பித்தான் ரோஜா மிகவும் கவனமாக கேட்டுக் கொண்டிருந்தாள்.

 

“புரியுதா” என்று அவன் அவளின் முகம் பார்த்து கேட்க பெண்ணவள் தயங்கி “கொஞ்சம் புரியுது சார்” என்றாள் பேனாவை வாயில் வைத்து கடித்து கொண்டே பிரம்மாவின் அவனையும் அறியாமல் அவளின் செவ்விதழுக்கு சென்றது ரோஸ் நிறத்தில் உதட்டு சாயம் பூசாமேலேயே மின்னிக் கொண்டு இருந்த அவளின் குட்டி இதழ்கள் அவனை ஈர்க்க ஒரு கணம் என்ன பேச வந்தோம் என்பதையே மறந்து போனான் “முதல்ல அந்த பேனாவை எடு என்ன இது சின்ன பிள்ளை தனமா” என்று கேட்க அவள் இப்போது ஒழுங்காக நின்றாள்.

 

மீண்டும் ஒழுங்காக அவளுக்கு சொல்லி தர “இப்போ புரியுதா” என்று கேட்க “கொஞ்சமா” அவள் மெதுவாக தலையசைத்தாள் “முழுசா புரியல அப்படி தான” என்று அவன் கேட்க அவள் குழப்பத்துடன் அவனை பார்த்தாள் ஆம் அவள் உண்மையாகவே குழம்பியிருந்தாள் அவன் ஆழமாக மூச்சை இழுத்து வெளியே விட பெண்ணவள் அவன் கூறிய எதுவும் தலையில் ஏறவில்லை வெகு நாட்களுக்கு பிறகு அவனை பார்த்ததில் அவனை மெய் மறந்து பார்த்தாள் அவள் அவன் மூக்கு கண்ணாடி அடர்த்தியான புருவம் மீசை இறுகிய கடினமான உதடுகள் அவன் கழுத்தில் மாட்டியிருந்த தங்க சங்கிலி அவன் சட்டை பட்டன் திறந்து கிடந்ததில் தெரிந்த அவனின் கேசம் என்று பெண்ணவள் அவனை பச்சையாக சைட் அடித்து கொண்டு இருந்தாள் என்ன இருந்தாலும் கணவன் இத்தனை வருடங்களுக்கு பிறகு அவனை பார்க்கிறாள் அவள் வயதுக்கே உண்டான ஹார்மோன் மாற்றம் அனைத்தும் ஒன்று சேர்ந்தது.

 

“சரி… இன்னொரு தடவை சொல்றேன் கவனமா கேளு” என்று அனைத்தையும் மீண்டும் பொறுமையாக விளக்க ஆரம்பித்தான் நந்தினி தூரத்தில் இருந்து இருவரையும் பார்த்துக் கொண்டிருந்தாள்.

 

‘என்ன இது… பிரம்மா சார் ரோஜாவுக்கு மட்டும் இவ்வளவு பொறுமையா சொ

ல்லிக் கொடுக்கிறாரே’ என்று அவள் மனதில் நினைத்துக் கொண்டாள் அவள் மட்டும் அங்கு வேலை செய்யும் ஒரு சிலர் கூட அதையே தான் நினைத்தனர் பெண் என்றால் பத்தடி தூரம் தள்ளி நடப்பவன் இன்று இவ்வளவு நெருங்கி ஒரு‌ பெண்ணுக்கு சொல்லி தருகிறானே என்று.

 

 

 

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *