கைக்கிளை மாயம் 10,11
அத்தியாயம் 10 “ஓஹோ அப்போ மேடம் வீட்ல பார்த்த பையனையே கல்யாணம் பண்ணிக்க முடிவு பண்ணிட்டிங்க அப்படி தான அப்போ நான் எதுக்கு டி புருசன்னு குத்துக்கல்லு மாதிரி இருக்கேன்” என்று அவன் கோபத்தில் கத்த “ஆமாம் நான் கல்யாணம் தான் பண்ணிக்க போறேன் இப்போ என்ன அதுக்கு குத்துகல்லு மாதிரி புருசன் இருந்து ஒன்னுத்துக்கும் புண்ணியம் இல்லை” என்று அவள் கோபத்துடனே கூற “நீ நேர்ல மட்டும் இருந்த உன்னை சாகடிச்சிருவேன் டி” என்றான் பிரம்மா கோபத்துடனே “அப்படியாவது என்னை கொன்னுடுங்க நிம்மதியா போய் சேர்ந்துடுவேன் உங்களை கல்யாணம் பண்ணிட்டு நான் அனுபவிக்கிற சித்ரவதை போதும்” என்றாள். அப்போது அவள் பக்கத்தில் பேருந்து நடத்துனர் வந்து நின்றவர் “ஏன் மா டிக்கெட் எடுத்துட்டு புருசனும் பொண்டாட்டியும் சண்டை போடுங்க” என்று கூற அவள் காசை டிக்கெட் எடுக்க அவள் இங்கு தான் வந்து கொண்டு இருக்கிறாள் என்பது அவனுக்கு புரிந்தது…