காதலின் காவலன் 

அத்தியாயம் 1 1980-க்கு பிந்தைய காலகட்டத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி பன்னிரெண்டாம் வகுப்பின் வகுப்பறை குண்டூசியை கீழே போட்டாள் கூட சத்தம் கேட்க்கும் அளவுக்கு அத்தனை அமைதியாக இருந்தது மாணவ மாணவிகள் பயத்துடன் அமர்ந்து இருந்தனர் மாணவிகள் பயத்தில் வியர்த்து வடிய அமர்ந்திருக்க ஒவ்வொருவரின் வினாத்தாளையும் கொடுத்துக் கொண்டு இருந்தார் கணித ஆசிரியர் சரவணன்.  அடுத்தப்படியாக “வள்ளி” என்று அழைக்க அந்த பெயருக்கு உரியவளோ எழுந்து கொள்ளாமல் பயத்துடனே அமர்ந்து இருந்தாள் “ஏய் வள்ளி இப்போ எழுந்து வர போறியா இல்லையா” என்று ஆசிரியர் சரவணன் மீண்டும் கத்தி அழைக்க வள்ளி கடைசி இருக்கையில் இருந்து பயத்துடனே எழுந்து நின்றாள் வெள்ளை நிற தாவணி பச்சை நிற மேலாடை அதே நிறத்தில் பாவடையுடன் நீளக்கூந்தலை இரட்டை தலைப்பின்னி ரிப்பன் கட்டி  பள்ளி சீருடையில் பயத்தில் படபடக்கும் விழிகளுடனே எழுந்து நின்றாள் அவளின் கண்களில் பயம் தெரிந்தது சரவணன் வாத்தியாரின் முறுக்கு மீசையை பார்த்து…

Premium Reader Subscription

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *