உயிரின் உவமை 5,6

அத்தியாயம் 5

 

அதிகாலை ஐந்து மணி…

 

காலை ஆறு மணிக்கு முகூர்த்தம் குறிக்கப்பட்டிருந்ததால், திருமண மண்டபமே அதிகாலையிலிருந்தே பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது செல்வியும் அருளும் வந்த உறவினர்களை வரவேற்றுக் கொண்டிருக்க, சமையலறை முழுவதும் காலை உணவு, இனிப்புகள், காபி என்று வேலைகள் மும்முரமாக நடந்துகொண்டிருந்தன.

 

ராயன் மணமகன் அறையில் தயாராகிக் கொண்டிருந்தான் அவனுடன் கல்லூரி நண்பர்கள் அனைவரும் கிண்டல் செய்து சிரித்தபடி அவனைச் சுற்றி நின்றிருந்தனர்

மறுபுறம் அஞ்சலி, அதிகாலையிலேயே வந்து செல்விக்கு உதவியாக எல்லா வேலைகளையும் பார்த்துக் கொண்டிருந்தாள். 

 

அவளது பெற்றோர்களும் மண்டப வேலைகளில் பிஸியாக இருந்தனர்

அந்த நேரத்தில்…

மணமகள் அறையின் கதவு பாதியாகத் திறந்து கிடப்பதை பார்த்த ரம்யாவின் தாய், “இன்னும் ரெடி ஆகலையா?” என்று சிரித்தபடி உள்ளே நுழைந்தார்.

 

அடுத்த நொடியே…

அவரின் சிரிப்பு மொத்தமாக மறைந்தது

அறைக்குள் யாருமே இல்லை

டிரஸ்ஸிங் டேபிளின் மேல் ஒரு வெள்ளை நிறக் கடிதம் மட்டும் இருந்தது

கைகள் நடுங்க அதை எடுத்துப் படித்தவர், அடுத்த கணமே,

“ஐயோ…!” என்று கதறியபடி தரையில் அமர்ந்து தலையில் அடித்து கொண்டு அழ ஆரம்பித்தார்.

 

அந்த சத்தம் கேட்டு ரம்யாவின் தந்தை உள்ளே ஓடிவந்தார்

“என்னாச்சு?” என்று பதறிக் கேட்டவர், அவரது கையிலிருந்த கடிதத்தை வாங்கிப் படித்ததும் முகமே வெளிறிப்போனது.

 

“அம்மா… அப்பா… என்னை மன்னிச்சிடுங்க. எனக்கு பிடிச்சவரோட நான் போறேன். என்னைத் தேடாதீங்க…”

சில நொடிகளில் அந்தச் செய்தி மண்டபம் முழுவதும் பரவியது.

 

என்ன நடந்தது என்று தெரியாமல் உறவினர்கள் அனைவரும் மணமகள் அறை முன் கூட ஆரம்பித்தனர் அந்த சலசலப்பு கேட்டதும் அஞ்சலியும் அங்கே ஓடி வந்தாள்

அதே நேரத்தில் நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்த ராயனையும் யாரோ அவசரமாக அழைத்துச் சென்றனர்.

 

அறைக்குள் வந்தவன், அந்தக் கடிதத்தை வாங்கிப் படித்த அடுத்த நொடியே அப்படியே உறைந்து நின்றான் அவன் முகத்தில் இருந்த மணமகனின் புன்னகை ஒரே நொடியில் காணாமல் போயிருந்தது

அதைப் பார்த்த செல்வி, “என்னப்பா…? என்னாச்சு…?” என்று பதறியபடி கடிதத்தை வாங்கிப் படித்தவர், கண்கள் இருண்டு அப்படியே மயங்கி சரிந்தார்.

 

“அம்மா…!”

என்று ராயனும் அருளும் அலறியபடி அவரைத் தாங்கிப் பிடித்தனர் மண்டபம் முழுவதும் ஒரே பரபரப்பு “பொண்ணு ஓடிப்போய்ட்டாளாம்…”

“இப்போ என்ன பண்ணப் போறாங்க?”

“இவ்வளவு பெரிய அவமானம்…”

என்று ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக பேசிக்கொள்ள ஆரம்பித்தனர்.

 

கூட்டத்தின் நடுவே நின்றிருந்த அஞ்சலியின் பார்வை மட்டும்… உடைந்து நின்ற ராயனின் முகத்தை விட்டு ஒரு நொடி கூட விலகவில்லை அவன் கண்களில் தெரிந்த அந்த வலியைப் பார்த்தவளின் இதயமும் சேர்ந்து நொறுங்கியது.

 

செல்வி மயங்கி விழுந்ததை பார்த்த ரம்யாவின் பெற்றோர் அதிர்ந்தனர் அவர் முகத்தில் தண்ணீர் தெளிக்க மெல்ல கண்ணை திறந்தார் அவர் பக்கத்திலேயே அஞ்சலி கையை பிடித்து கொண்டு அமர்ந்து இருந்தாள் ரம்யாவின் பெற்றோர் கையெடுத்து கும்பிட்டனர் கண்ணீருடன் “அம்மா எங்களை மன்னிச்சிடுங்க மா” என்று மன்னிப்பு கேட்க செல்வி எதையும் பேச முடியாமல் அமர்ந்து இருந்தார்.

 

அருளுக்கு அண்ணன் அம்மாவை நினைத்து மிகவும் வருத்தமாக இருந்தது அவனும் வாயடைத்து போய் நின்றிருந்தான் ராயன் வாயையே திறக்கவில்லை அமைதியாக இறுகி முகத்துடனே நின்றிருந்தான்.

 

மண்டபத்தில் இருந்தவர்கள் “என்ன காரணமா இருக்கும் பொண்ணு ஏன் ஓடிப்போச்சு” என்று பேச “யாருக்கு தெரியும் மணமேடை வரைக்கும் வந்து கல்யாணம் நின்னா அடுத்து கல்யாணம் நடக்குறதே கஷ்டம்” என்று பேசிக் கொண்டு இருக்க செல்வியின் கண்கள் கலங்கியது ராயன் அவமானம் தாங்க முடியாமல் மணமகன் அறைக்கு சென்று அமர்ந்து கொண்டான்.

 

செல்வி மெல்ல அஞ்சலியின் கையை இறுகப் பிடித்தார் சில நொடிகள் அவள் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தவர், பிறகு சகுந்தலாவை நோக்கித் திரும்பினார்

“சகுந்தலா… நான் ஒரு விஷயம் கேட்கப் போறேன் தயவுசெய்து என்னை தப்பா நினைக்காத…” என்க

“என்னக்கா…?” என்று கேட்டார் சகுந்தலா.

 

“என் பையனுக்கு… உன் பொண்ணை கல்யாணம் பண்ணி வைக்கிறியா…?”

“என்னக்கா சொல்றிங்க…அஞ்சலியா… அவள் சின்ன பொண்ணு அக்கா” என்று சகுந்தலா கூறிவிட்டு அதிர்ச்சியில் தடுமாற,

சகுந்தலா கணவருக்கு உடனே கோபம் வந்தது

“இது என்ன பேச்சு மா…? உங்க அவசரத்துக்காக எங்க பொண்ணு வாழ்க்கையை முடிவு பண்ணிட முடியாது!” என்று கோபமாகக் கூறினார்.

 

“என் பையன் இந்த அவமானத்தை தாங்க மாட்டான் சகுந்தலா… அவன் எந்தத் தப்பும் செய்யல பாவம் அந்த பொண்ணு செஞ்ச தப்புக்கு என் பையன் வாழ்க்கையே அழிஞ்சு போகக் கூடாது உங்க பொண்ணை என் மருமகளா இல்ல, என் மகளா நான் பார்த்துக்கிறேன்…” என்று செல்வி கையெடுத்து கும்பிட்டு கேட்டார்.

 

“அம்மா… போதும் எனக்காக நீங்க யார்கிட்டயும் கையேந்தாதிங்க” என்ற ராயனின் குரல் அங்கே இருந்த அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தது “யாரோ செஞ்ச தப்புக்காக இன்னொரு பொண்ணோட வாழ்க்கையை பழி வாங்குற அளவுக்கு நான் சுயநலவாதி இல்லை அஞ்சலி இப்போ தான் வாழ்க்கையை புரிஞ்சுக்க வேண்டிய வயசுல இருக்கா இந்த பேச்சை இதோட விட்டுருங்க” என்றான் கோபத்துடன்.

 

ராயன் பேச்சை கேட்ட அங்கிருந்த அனைவரும் திகைத்து போய் நிற்க அவன் தம்பி அருள் அவன் பக்கத்தில் வந்தான் “அண்ணா அம்மா பாவம் அவங்களுக்கு 60 வயசுக்கு மேல ஆகிடுச்சு சொன்னா கேளு அவங்க மனசைலையும் உடல்லையும் வேம்பு இல்லை அஞ்சலி ரொம்ப நல்ல பொண்ணு அவளை கல்யாணம் பண்ணினா உன் வாழ்க்கை ரொம்ப நல்லாருக்கும்” என்க ராயனின் மனம் லேசாக இலக ஆரம்பித்தது.

 

அப்போது ராயனின் மாமா அவன் அருகே வந்தவர் “ஆமாம் டா ராயா அருள் சொல்றதும் சரி தான் மணமேடை வரைக்கும் வந்து கல்யாணம் நின்னா எல்லாரும் உன்னை தான் தப்பா பேசுவாங்க என் அக்கா பாவம் டா அவர்களுக்காகவாது கொஞ்சம் யோசி” என்றார்.

 

செல்வி மகன் அமைதியாக இருப்பதை பார்த்தே அவனுக்கு சம்மதம் என்பதை புரிந்து கொண்டார் போல அஞ்சலியின் தந்தையிடம் பேச ஆரம்பித்தார் “அண்ணா ராயனை நீங்க சின்ன வயசுல இருந்து பார்க்குறிங்க அவன் எப்படிப்பட்டவன்னு நான் சொல்லி தான் உங்களுக்கு தெரியனும்ன்னு இல்லை எதிர் வீட்லயே இருந்தா அவளை நீங்களும் பார்த்த மாதிரி இருக்கும் ஏற்கனவே என் வீட்டுல மகள் இல்லாத குறையை அவள் தான் தீர்த்து வைக்கிறா இனிமேலும் அவன் எனக்கு மருமகள் இல்லை மகள் தான் யோசிச்சு சொல்லுங்க” என்று கூறினார்.

 

சகுந்தலா உடனே தன் கணவரை தனியே அழைத்து சென்றவர் “என்னங்க ராயன் ரொம்ப நல்ல பைன்ங்க நம்ம அஞ்சலிக்கு பொருத்தமா இருப்பான் சரின்னு சொல்லுங்க” என்று கூற “அது இல்லை டி அவள் சின்னப்பிள்ளை இன்னும் விவரம் பத்தலை” என்று அவர் கூற “நான் உங்களை கட்டும் போது எனக்கு 15 வயசு அதுமட்டும் இல்லை செல்வி அக்கா ரொம்ப நல்ல மாதிரி அஞ்சலியும் நம்ம எதிர்வீட்லேயே இருந்தா நாமளும் கவலை இல்லாம இருப்போம்” என்றார் சகுந்தலா.

 

அதன் பின் அவர் மட்டும் என்ன சொல்வது 

“இப்ப நம்ப சொந்தக்காரங்க யாரையும் கூப்பிடலையே டி” என்று அவர் கூற 

“என்னங்க அதுக்கு ஒரு வரவேற்பு வச்சிருவோம் எல்லாரும் வந்து பார்த்துட்டு போகட்டும்” என்க அவரும் சரி என்றார்.

 

அனைவரும் சம்மதம் சொல்ல ராயன் இப்போது பேச ஆரம்பித்தான் “நீங்க அஞ்சலி கிட்ட ஒரு வார்த்தை கேளுங்க அவள் முழு மனசோட சம்மதம்ன்னு சொன்னா எனக்கும் சம்மதம்” என்றான்

உடனே அங்கிருந்த அனைவரின் பார்வையும் அஞ்சலியிடம் வந்தது அனைவரும் அவளையே பார்க்க அவள் மிகவும் பதட்டமடைந்தாள்.

 

செல்வி முகம் மலர “அஞ்சலி மா உனக்கு மாமாவை கட்டிக்க சம்மதமா” என்று கேட்டார் அவர் கேள்வியில் அஞ்சலியின் இதயம் படபடவென துடித்தது பயத்துடனே அமர்ந்து இருந்தாள் செல்வி அவள் அமைதியாக இருப்பதை பார்த்தவர் “அஞ்சலி மா… நான் உன்னை கட்டாயப்படுத்த மாட்டேன் உனக்கு விருப்பம் இல்லன்னா தைரியமா சொல்லிடு யாரும் உன்னை தப்பா நினைக்க மாட்டாங்க ஆனா… உனக்கு சம்மதம்ன்னா வெளிப்படையா சொல்லு” என்றார்.

 

அஞ்சலியின் இதயம் வேக வேகமாகத் துடிக்க ஆரம்பித்தது அவள் முதலில் தன் தாயை ஏறிட்டு பார்த்தாள் பிறகு தந்தையைப் பார்த்தாள் இறுதியாக ராயனை பார்த்தாள்

ராயனும் அமைதியாகவே அவளைப் பார்த்துக் கொண்டிருந்தான் அவன் முகத்தில் வற்புறுத்தல் இல்லை… முடிவு முழுவதும் அவளுடையது என்ற அமைதி மட்டுமே இருந்தது.

 

அவன் இப்படி நிற்பது பெண்ணவளுக்கு வலியை கொடுத்தது தன் ராயன் மாமா வருத்தப்படக்கூடாது என்று நினைத்தவள்

சில நொடிகள் அமைதியாக நின்றாள், 

செல்வி கண்ணீர் விடுவதை பார்த்தவளின் கண்களில் இருந்து வழிந்து ஓட கண்ணீரைத் துடைத்து கொண்டவள் மெதுவாகத் தலைகுனிந்தபடியே “எனக்கு… சம்மதம் அத்தை…” என்று நடுங்கிய குரலில் சொன்னாள்.

 

அவள் அந்த ஒரு வார்த்தை சொன்ன அடுத்த நொடியே, செல்வியின் கண்களில் ஆனந்தக் கண்ணீர் பெருகியது அவர் அஞ்சலியை இறுக அணைத்துக் கொண்டார்

“என் மகளே…” என்று உணர்ச்சியுடன் சொல்ல, அங்கே இருந்த பெரியவர்கள் அனைவரும் நிம்மதியாக பெருமூச்சு விட்டனர்

அதற்குள் ஐயர் வந்து, “முகூர்த்த நேரம் நெருங்கிடுச்சு சீக்கிரம் மணமக்களை மேடைக்கு அழைச்சிட்டு வாங்க,” என்று கூறினார்.

ராயனுக்கே அஞ்சலி சம்மதம் சொன்னது எதிர்பாராத அதிர்ச்சியாக தான் இருந்தது தன்னை பார்த்து பயந்து ஓடுபவள் எப்படி சம்மதம் சொல்வாள் என்று நினைத்தான் அவள் மறுத்துவிடுவாள் என்றே நினைத்திருந்தவன், ஒரு கணம் அவளையே அமைதியாகப் பார்த்தான் ஆனால் இப்போது யோசிக்க நேரமில்லை.

“முகூர்த்ததுக்கு நேரமாகுது நல்ல நேரம் முடியும் முன்னாடி பொண்ணு மாப்பிள்ளையை அழைச்சிட்டு வாங்கோ” என்று ஐயர் மீண்டும் நினைவூட்ட, அனைவரும் அவசரமாக அவசரமாக மணமேடைக்கு வந்தனர்.

ராயன் பட்டு வேஷ்டி சட்டையில் மணமேடையில் வந்து அமர்ந்தான் மறுபுறம் அஞ்சலியோ உடை மாற்ற நேரமில்லாததால் செல்வி வாங்கிக் கொடுத்திருந்த தாவணி பாவாடையிலேயே மணமேடையை நோக்கி நடந்து வந்தாள் அவள் எடுத்து வைத்த ஒவ்வொரு அடியும் அஞ்சலிக்கு கனமாக தான் இருந்தது இது வரை கனவில் கூட நினைத்திராத ஒரு தருணம் இப்படி நிஜமாகும் என்று அவள் ஒருநாளும் எதிர்பார்க்கவில்லை அவள் மணமேடையில் வந்து அமர சில நிமிடங்களுக்கு முன்பு ஓடி ஆடி வேலை செய்து கொண்டிருந்த எதிர் வீட்டு பெண் அடுத்த நிமிடமே மணப்பெண்ணாக மாறி அதே மேடையில் மாலையும் கழுத்துமாக அமர்ந்திருக்க ஒரு சிலருக்கு ஆச்சரியம்.

அப்போது தான் தாமதமாக வந்த சில உறவினர்கள், மணப்பெண் மாறியிருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர் “அட… இது அந்தப் பொண்ணு இல்லையே…”

“என்னாச்சு…?”

“அவள் ஓடிப்போயிட்டாளாம்… அதான் எதிர் வீட்டுப் பொண்ணையே கல்யாணம் பண்ணுறாங்களாம்…” என்று கிசுகிசுக்க ஆரம்பித்தனர்.

அந்த வார்த்தைகள் ஒவ்வொன்றும் அஞ்சலியின் காதில் தெளிவாகவே விழுந்தது. அவளது விரல்கள் நடுங்கின தலைகுனிந்து அமர்ந்திருந்தவளின் கண்களில் மீண்டும் கண்ணீர் எட்டிப் பார்த்தது.

அதை கவனித்த ராயனின் மனம் இறுகிப் போனது ‘எந்தத் தவறும் செய்யாத இவள் இன்னைக்கு எல்லாருடைய பார்வைக்கும் பேச்சுக்கும் ஆளாகிட்டாளே…’ என்று உள்ளுக்குள் வேதனைப்பட்டான்.

ஆனால் நடந்ததை மாற்ற முடியாது ஐயர் மந்திரங்களை ஓத ஆரம்பித்தார் “மாங்கல்யத்தை எடுத்துக்கோங்க மாப்பிள்ளை…” என்று கூற, ராயன் தங்கத் தாலியை கையில் வாங்கினான்.

ஒரு கணம் அஞ்சலியைப் பார்த்தான் அவளோ தலை குனிந்து அமைதியாக அமர்ந்திருந்தாள் அடுத்த நொடியே…மேளச் சத்தம் முழங்க, “கெட்டிமேளம்… கெட்டிமேளம்…”என்ற ஐயரின் குரலோடு, மூன்று முடிச்சிட்டு அஞ்சலியின் கழுத்தில் தாலியைக் கட்டினான் ராயன்.

அந்த நொடி முதல் அஞ்சலி, ராயனின் மனைவியானாள் அவளது கண்களில் இருந்து வழிந்த இரண்டு துளி கண்ணீர் மஞ்சள் கயிற்றின் மீது விழுந்து கரைந்தது அந்தக் கண்ணீரில் காதலும் இரு

ந்தது…பயமும் இருந்தது…அதே நேரத்தில், புரியாத ஒரு புதிய வாழ்க்கையின் தொடக்கமும் இருந்தது.

அத்தியாயம் 6

 

திருமணம் நல்லபடியாக முடிய மணமக்கள் பெரிவர்களின் காலில் விழுந்து வணங்கி ஆசி பெற்றனர் செல்வி காலில் விழ அவரோ கண்ணீருடனே அஞ்சலியை அணைத்து கொண்டார் அஞ்சலியின் பெற்றோரும் ஆனந்த கண்ணீர்விட்டனர் தங்கள் மகளை ஒரு நல்ல இடத்தில் கட்டி கொடுத்துவிட்டோம் என்று அதன் பின் அனைவரும் வந்து வாழ்த்து கூறிவிட்டு புகைப்படம் எடுத்து கொள்ள இருவரும் நெருங்கி நிற்பதை போல சூழ்நிலை வந்தது அஞ்சலி அவனை நெருங்கி நிற்க அவனின் இடையவளவு இருந்தால் அவள் ராயனின் அருகில் இத்தனை நெருக்கத்தில் அவள் ஒரு நாளும் இருந்ததே இல்லை அவன் சாதாரணமாக தான் இருந்தான் அவள் கூச்சத்துடன் நின்றிருந்தாள்.

 

அங்கே வந்திருந்த பொடுசுகள் அஞ்சலியின் அருகில் வந்து “ஏய் அஞ்சு எலி இனிமே எங்க கூட விளையாட வர மாட்டியா” என்று கேட்க ராயன் அவர்களை பார்த்து முறைத்து அவர்கள் அங்கிருந்து ஓடியேவிட்டனர் புகைப்படங்கள் எடுத்து முடிக்க இருவரும் சாப்பிட சென்றனர் அங்கே இருந்த புகைப்பட கலைஞர் “சார் 

மேடம்க்கு ஊட்டுங்க” என்க அவன் இலையில் இருந்த லட்டை பெண்ணவளுக்கு ஊட்ட அவன் விரல்கள் அவள் இதழில் பட பெண்ணவள் கூச்சத்துடனே முகம் சிவந்து சாப்பிட ஆரம்பித்தாள்.

 

“மேடம் நீங்க சாருக்கு ஊட்டுங்க” என்று அந்த புகைப்பட கலைஞர் கூற அவள் இப்போது தயக்கம் மற்றும் கூச்சத்துடனே அவனுக்கு ஊட்ட அவனோ அவளை கண் விலகாமல் பார்த்து கொண்டே மென்று விழுங்கினான்

அவன் பார்வையே பெண்ணவளுக்கு பயத்தை கொடுத்தது அவன் சாதாரணமாக தான் பார்த்தான் அவளுக்கு தான் அவன் பார்வை ஏதோ செய்தது.

 

அதன் பின் இறுதியாக அஞ்சலி வீட்டார் ராயன் வீட்டார் மட்டும் இருக்க அனைவரும் புகைப்படம் எடுத்து கொண்டனர் இறுதியாக ராயனையும் அஞ்சலியையும் ஜோடியாக புகைப்படம் எடுக்க மண்டபத்தின் வெளியே இருந்த தோட்ட பகுதிக்கு அழைத்து சென்றனர்.

“சார்… கிட்ட வாங்க. மேடம் நீங்களும் தான்…” என்று புகைப்படக் கலைஞர் சிரித்தபடியே கூற அஞ்சலி மெதுவாக தயக்கம் மற்றும் கூச்சத்துடனே ராயன் அருகே வந்து நின்றாள் “இன்னும் கொஞ்சம் கிட்ட வாங்க மேடம்… இப்படித் தள்ளி நின்னா போட்டோ நல்லா வராது…” என்று அவர் மீண்டும் கூற,அவள் தயக்கத்துடன் இன்னும் ஒரு அடி முன்னேறினாள்.

இருவருக்கும் இடையில் இருந்த இடைவெளி இப்போது முற்றிலுமாகக் குறைந்தது இருவரும் முத்தமிடும் தூரத்தில் இருக்க “சார்… மேடம் தோள்ல கை போடுங்க…”அந்த வார்த்தையைக் கேட்டதும் அஞ்சலி அதிர்ச்சியுடன் ராயனைப் பார்த்தாள்.

ராயன் ஒரு நொடி புகைப்படக் கலைஞரைப் பார்த்துவிட்டு, எந்தவித தயக்கமும் இல்லாமல் மெதுவாக அவளது தோளின் மீது கை வைத்தான் அவன் விரல்கள் தோளைத் தொட்ட அந்த நொடியே, அஞ்சலியின் உடல் மெல்ல சிலிர்த்து அடங்கியது இதயம் வேகமாக துடிக்க ஆரம்பித்தது தலைநிமிர்ந்து அவனைப் பார்க்கக்கூட அவளால் முடியவில்லை தயக்கத்துடன் தலை குனிந்து நிற்க “சூப்பர்… இப்போ இரண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் பார்த்து சிரிங்க…” ராயன் இயல்பாக அவளைத் திரும்பிப் பார்த்தான்.

ஆனால் அஞ்சலியோ அவன் கண்களைச் சந்திக்க முடியாமல் வெட்கத்தில் தலைகுனிந்தாள் “அய்யோ மேடம்… இப்படி தலைகுனிஞ்சா எப்படி? கொஞ்சம் சாரை பாருங்க…”அவர்கள் அருகில் நின்றிருந்த அனைவரும் சிரிக்க, செல்வி“அஞ்சலி… ஒரு தடவை என் பையனை பாருடி…” என்று சிரித்தபடி சொல்ல, ‘இந்த அத்தை வேற’ என்று மனதில் நினைத்தவள் மெல்ல நிமிர்ந்து ஒரே ஒரு நொடி மட்டும் ராயனின் கண்களைப் பார்த்தாள் ராயனும் அவளின் கையிட்ட விழிகளை பார்த்தான்.

அதே நொடியில் புகைப்படக் கலைஞரின் கேமரா மின்னியது “சூப்பர்” என்று அவர் மகிழ்ச்சியுடன் கூறினார் அதன்பிறகு இன்னும் சில புகைப்படங்கள் எடுத்து முடித்துவிட்டு,“ஓகே சார்… முடிஞ்சிடுச்சு…” என்று கூறினார்.

அந்த நேரத்தில், மண்டப வாசலில் நின்றிருந்த கார் தயாராக இருப்பதை பார்த்த செல்வி,“ராயா… நேரம் ஆகுது பா வீட்டுக்கு கிளம்பலாம்…” என்று அழைத்தார்.

ராயன் அமைதியாகத் தலையசைத்துவிட்டு காரை நோக்கி நடந்தான் அஞ்சலியோ தன் கழுத்தில் புதிதாக ஏறியிருந்த தாலியை ஒரு முறை விரல்களால் தொட்டுப் பார்த்தாள்.

‘இது… நிஜமா…?’ என்ற எண்ணத்துடன், தன் வாழ்க்கையே இந்த சில மணி நேரத்தில் தலைகீழாக மாறியிருப்பதை இன்னும் முழுமையாக உணர முடியாமல், மெதுவாக அவன் பின்னால் நடந்து சென்றாள் இருவரும் காரில் ஏறிக் கொள்ள கார் அங்கிருந்து கிளம்பியது இப்போது தான் அனைவரின் மனதிலும் நிம்மதியே வந்தது.

மணமக்கள் இருவரும் வந்து நிற்க பக்கத்து வீட்டு பெண்மணி வந்து ஆலம் சுற்றினார் அஞ்சலியை பார்த்து சிரித்தவர் “சும்மாவே இந்த வீட்ல தான் இருப்பாள் இனி அம்மா வீட்டு பக்கம் எட்டி கூட பார்க்க மாட்டா” என்று அஞ்சலியை கிண்டலிடித்தனர்.

மணமக்கள் இருவரும் சோபாவில் வந்து அமர ராயன் கழுத்தில் இருந்த மாலையை கழட்டி ஓரமாக வைத்தான் அவனை பார்த்த அஞ்சலியும் மாலையை கழட்டி போக அவளின் தலைமுடியில் மாலை சிக்கி கொள்ள அவள் இழுக்க இழுக்க வராமல் இருக்க ராயனே அவளின் முடியை சரி செய்து கழட்டி விட பெண்ணவள் கூச்சத்தில் நெளிந்தாள்.

அஞ்சலியை பூஜை அறையில் விளக்கு ஏற்ற வைத்தனர் அதன் பின் இருவருக்கும் பால் பழம் வழங்கப்பட ராயன் கையில் பாலை கொடுத்தனர் “ராயா பாலை குடிச்சிட்டு அஞ்சலிக்கு கொடு” என்று கூற அவன் பாலை குடித்துவிட்டு பெண்ணவளுக்கு கொடுத்தான் மீண்டும் பழம் சாப்பிட்டு விட்டு மீதியை அவளிடம் கொடுக்க அவளும் சாப்பிட்டாள்.

“கொஞ்ச நேரம் வேணும்ன்னா போய் தூங்கிட்டு வா அஞ்சலி” என்று செல்வி கூற அவளும் பதிலுக்கு பூம்பும் மாட்டை போல தலையை ஆட்டிவிட்டு செல்வி அறைக்கு போக “அஞ்சலி ஆனா புருசனுக்கு ரூம்க்கு போ இனி அது தான் உன் ரூம்” என்று கூற அஞ்சலி ராயனின் அறையின் உள்ளே சென்றாள் அஞ்சலி மாலையை ஒரு மூலையில் வைத்தவள படுக்கையில் சென்று அமர்ந்தாள்‌.

ஒரு நாளைக்கு குறைந்தது பத்து முறையாவது செல்வி வீட்டுக்கு வராமல் அஞ்சலி இருக்க மாட்டாள் ஆனால் ஒரு முறை கூட அவள் ராயன் அறைக்கு செல்லவே மாட்டாள் அப்படியே வந்தாலும் அவன் அறையில் என்ன இருக்கிறது என்று கூட பார்க்க மாட்டாள் இன்று தான் முதல் முறையாக அறையை சுற்றி பார்க்க ஆரம்பித்தாள்.

மிகவும் சாதாரணமாக தான் இருந்தது அந்த அறை ஆனால் எடுத்த பொருட்கள் எடுத்த இடத்தில் வைக்கப்பட்டு இருந்தது அவன் படுக்கை பக்கத்தில் அவள் வீட்டில் இருப்பதை போல ஒரு புகைப்படமும் இருந்தது அதில் சிறு வயது அஞ்சலியும் இருந்தாள் அவள் அதை எடுக்க முயல் அவள் கழுத்தில் இருந்த தாலி அவள் முன்னே வந்தது அதை பார்த்தவள் தன் கையில் தாலியை வைத்து பார்த்தாள் ‘நான் ராயன் மாமா பொண்டாட்டியா’ என்று நினைத்தவளுக்கு உள்ளுக்குள் ஏதோ செய்தது சொல்ல முடியாத ஒரு உணர்வு அவளை ஆட் கொண்டது எவ்வளவு நேரம் உட்கார்ந்தே இருக்க முடியும் ஒரு கட்டத்தில் உறக்கம் வர படுத்து உறங்க ஆரம்பித்தாள்.

சிறிது நேரத்துக்கு பிறகு அறையின் உள்ளே ராயனும் வந்தான் அவள் உறங்கி கொண்டிருப்பதை பார்த்தவன் அவளின் கள்ளம் கபடம் இல்லா முகத்தை பார்த்து கொண்டே நின்றான் அதன் பின் சென்று உடை மாற்ற ஆரம்பித்தான் இலகுவான டி ஷர்ட் மற்றும் டிராக் பேன்ட் அணிந்தவன் அவள் பக்கத்தில் வந்து படுத்து தானும் உறங்க ஆரம்பித்தான்.

காலை வரை இருந்த பரப்பு இறுக்கம் எதுவும் இப்போது அவன் மனதில் இல்லை இத்தனை நாட்கள் திருமணத்துக்காக அலைந்து திரிந்த சோர்வு மட்டுமே உடலில் எஞ்சி இருந்தது அதனால் கண்ணை முடியவுடன் உறங்க ஆரம்பித்தான் மாலை வரை இருவரும் உறங்கி கொண்டே இருக்க செல்வி வந்து தான் கதவை தட்டினார்‌ “ராயா அஞ்சலி” என்று கதவை தட்டிக் கொண்டே இருக்க முதலில் ராயன் தான் கண்விழித்தான் உறக்கத்தில் இருந்து எழுந்தவன் தூக்க கலக்கத்துடனே சென்று கதவை திறந்தான்.

“என்ன அம்மா” என்று கேட்டான் “டேய் அஞ்சலியை எழுப்பி கூட்டிட்டு வா டா நைட்டு சடங்கு இருக்குல்ல கிளம்பனும்” என்க ராயன் கதவடைத்துவிட்டு உள்ளே வந்தான் அங்கே படுத்திருந்த அஞ்சலியை பார்த்து அதிர்ந்தேவிட்டான் படுக்கையில் இஷ்டத்துக்கு புரண்டு புரண்டு அவள் படுத்திருக்க அவளின் இடைப்பகுதியில் இருந்த தாவணி விலகி அவளின் குட்டி தொப்பை வெளியே இடையில் இருந்த தங்க இடுப்பு சங்கிலியும் தெரிந்தது அதை பார்த்தவனின்‌ மூச்சே நின்றுவிட்டது இதுநாள் வரை பெண் வாடையே இல்லாமல் இருந்தவன் தன் மனைவியை இப்படி ஒரு கோலத்தில் பார்த்து தடுமாற தான் செய்தான் இருப்பினும் உடனே தன்னைத் தானே சமாளித்தவன், “லூசு… தூக்கத்துல கூட ஒழுங்கா படுக்க மாட்டாளா…” என்று முனுமுனுத்தபடியே, எந்தத் தவறான எண்ணமும் இல்லாமல் அவளது தாவணியை சரியாக இழுத்துவிட்டான்.

மீண்டும் அவளை எழுப்பினான் “அஞ்சலி அஞ்சலி” என்று அவன் அவளை எழுப்ப “என்ன மா வேணும் உனக்கு எனக்கு தூக்கம் வருது” என்று கூறியவள் தன் தாய் தான் தன்னை எழுப்புகிறார் என்று நினைத்து புரண்டு படுக்க மீண்டும் அவளை எழுப்பினான் இந்த முறை கையில் தட்டி எழுப்ப பெண்ணவள் மெல்ல எழுந்தாள் படுக்கும் போது தாவணியின் பின்னை கழட்டி வைத்துவிட்டு படுத்திருக்க இப்போது அவள் எழுந்தவுடன் தாவணி நழுவ பார்க்க உடனே பிடித்து கொண்டவள் கொட்டாவி விட்டு கொண்டே கண்ணை திறக்காமல் மூடிக்கொண்டே “என்ன மா வேணும்” என்று கேட்க “அஞ்சலி அம்மா உன்னை கூப்பிட்டாங்க” என்று ராயன் கூற அவன் குரல் கேட்டவுடனே பட்டென்று கண்ணை திறந்தாள் தன் எதிரே இருந்த ராயனை பார்த்தவுடனே அலறி அடித்து கொண்டு ஓடப்போக தட்டு தடுமாறி கீழே விழப்போனாள் அந்த நேரம் சரியாக ராயன் அவளின் இடையில் கை நுழைத்து பிடித்து கொள்ள அவன் கைப்பட்டவுடன் பெண்ணின் உடல் சிலிர்த்தது அவளின் பொன் மஞ்சள் தாலி அவன் சட்டை பட்டனில் மாட்டிக் கொண்டது அப்போது தான் அவளுக்கு நினைவே வந்தது இன்று காலை தனக்கு திருமணமானது உடனே தாலியை பதட்டத்துடனே எடுக்க முயல அ

வளால் அது முடியவில்லை.

 

 

 

 

 

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *