உயிரின் உவமை 1,2
உயிரின் உவமை நீ
அத்தியாயம் 1
ஊரின் மத்தியில் அமைந்திருந்த அந்த பெரிய திருமண மண்டபம் மக்கள் கூட்டத்தால் நிரம்பியிருந்தது ஆனால் அது ஒரு திருமண வீட்டின் சந்தோஷக் கூட்டமாக இல்லை மாறாக அங்கிருந்த ஒவ்வொரு முகத்திலும் அதிர்ச்சியும் பதற்றமும் மட்டுமே தெரிந்தது. “என்ன பொண்ணு மாறியிருக்கு…” என்ற கிசுகிசுப்பு மண்டபம் முழுவதும் பரவியிருந்தது
“என்ன பொண்ணு மாறியிருக்கு” என்று தங்களுக்குள் கிசுகிசுத்து கொண்டு இருக்க
மணமேடையில் ராயன் அமர்ந்திருக்க அவன் முன்னே எரிந்து கொண்டிருந்த நெருப்பை விட அவன் மனதில் தீப்பிழம்புகள் கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்தது அப்போது அவன் பக்கத்தில் வந்து அமர்ந்தாள் அஞ்சலி கட்டிய தாவணி பாவாடையுடன் அவன் பக்கத்தில் அமர்ந்தவுடன் அவள் உடலும் உள்ளமும் படபடக்க ஆரம்பித்தது பயத்துடனே தான் அமர்ந்திருந்தாள் பெண்ணவள்.
ஐயர் மந்திரங்களை ஓதிக் கொண்டு இருக்க அஞ்சலியின் தாய் தந்தை ஓரத்தில் கண்ணீர் விட்டு கதறி கொண்டு இருந்தனர் ராயனின் தம்பி அவன் தாயும் அமைதியாக நின்றிருந்தனர்.
“கெட்டிமேளம் கெட்டிமேளம்” என்று ஐயர் ராயனின் கையில் தாலியை எடுத்து கொடுக்க ராயன் ஒரு கணம் தயங்கியவன் அதன் பின் எதை பற்றியும் யோசியாமல் பெண்ணவளின் கழுத்தில் தாலியை கட்டி முடித்தான்.
சரியாக இரண்டு மாதங்களுக்கு முன்…
“ஏய் அஞ்சு எலி உங்க வீட்டுக்கு போய் உங்க அப்பாரு சட்டையில இருந்து காசு எடுத்துட்டு வா ரெண்டு பேரும் முட்டாயி வாங்கி திங்கலாம்” என்று அவளின் இடுப்பு அளவு இருந்த சிறுவன் கூற “ரெண்டு ரூவா போதுமா டா அது எப்படி பத்தும் பத்து ரூபா எடுத்துட்டு வரேன்” என்று வீறு கொண்ட வேங்கையாக அஞ்சலி நடந்து சென்றாள் அவளை பார்த்து அங்கிருந்த சிறுவர்கள் சிரித்து வைக்க
அந்த சிறுவனோ “சரியான லூசு டா காசு எடுத்துட்டு வரட்டும் நாம மட்டும் முட்டாயி வாங்கி திங்கலாம்” என்றான் அந்த சிறுவன் தன் சக நண்பர்களுடன்.
அஞ்சலியோ வேக வேகமாக நடந்து வீட்டின் உள்ளே வந்தவள் அங்கே பின் பக்கமாக வேலை செய்து கொண்டு இருந்த தன் தந்தையை எட்டி பார்த்தவள் அவர் சட்டை பையில் இருந்த பத்து ரூபாய் நோட்டுக்கு பதிலாக அம்பது ரூபாய் நோட்டை எடுத்து கொண்டு அந்த சிறுவர்களிடம் ஓடி வர
“அஞ்சலி சூப்பரு போ நீ” என்ற சிறுவன் அவள் கையில் இருந்த பணத்தை பிடுங்கினான்
“சரி வா டா அருணு போய் முட்டாயி வாங்கியாரலாம்” என்று பெண்ணவள் கூற
அடுத்த கணம் அங்கிருந்து பணத்தை எடுத்து கொண்டு ஓடியேவிட்டனர் அந்த சிறுவர்கள்.
“அம்மா” என்று அவள் அழுது கொண்டே நிற்க துடப்பத்தை எடுத்து கொண்டு வேக வேகமாக அவளை அடிக்க வந்தார் அவளின் தாய் சகுந்தலா அதை பார்த்தவள் பதறி அடித்து கொண்டு அங்கிருந்து ஓடப்பார்க்க அடுத்த கணம் அவளின் காதை பிடித்து திருக ஆரம்பிக்க “அம்மா வலிக்குது” என்று அவள் சிறுபிள்ளை போல அழுக துடப்பத்தை எடுத்து அடி வெளுக்க ஆரம்பித்தார் ஊரே சகுந்தலாவை வேடிக்கை பார்த்ததே தவிர யாரும் ஒரு வார்த்தை கூட கேட்க்கவில்லை இது வழக்கமாக நடிப்பது தானே என்று வேடிக்கை பார்க்க பார்த்தனர் அப்போது அங்கிருந்த கூட்டத்தை விலக்கிவிட்டு வந்தான்
அருள்மொழி அஞ்சலி அடி வாங்குவதை பார்த்து பதறியவன் அவர் அருகில் சென்று தடுக்க உடனே அவள் ஓடி வந்து அருளின் பின்னே ஒளிந்து கொண்டாள்.
“மாமா என்னை காப்பாத்து” என்று “அக்கா எதுக்கு வயசுக்கு வந்த பிள்ளையை இப்படி நடு தெருவுல போட்டு அடிக்கிறிங்க” என்று அவன் கேட்க “வயசுக்கு வந்து நாலு வருசம் ஆச்சு இவளுக்கு இளையவளுக எல்லாம் கல்யாணம் பண்ணிட்டு போய்ட்டாளுக இவள் ஒருத்தி மட்டும் இப்படி தெளிவு இல்லாம இருக்காளே ஊரே எங்களை பார்த்து சிரிக்குது எனக்கு இவளுக்கு கண்ணாலம் காட்சி பண்ணனும்ன்னு ஆசை இருக்காது ஒழுங்கா வீட்ல இருந்து நாலு வேலையை கத்துக்கன்னு சொன்னா சின்ன பசங்க கூட சேர்ந்து ஊர் சுத்திட்டு இருக்கா” என்று கண்ணீருடனே பேச
“விடுங்க அவளுக்கு விவரம் அதுக்காக நடு தெருன்னு கூட பார்க்காமல் இப்படி தான் அடிப்பிங்களா” என்று அவரும் கண்ணீரை துடைத்து கொண்டு மகளை அங்கிருந்து அழைத்து சென்றார்.
அஞ்சலி அவள் வீடு வந்ததும் நேரே அவள் வீட்டுக்கு செல்லாமல் எதிர் வீடான அருள் வீட்டுக்குள் ஓடினாள் அருளும் அப்போது தான் வீட்டுக்கு வந்தவன் ஹாலில் இருந்த சோஃபாவில் டீ குடித்து கொண்டு இருக்க
அவன் தாய் செல்வி சமையலறையில் வேலை பார்த்து கொண்டு இருந்தார் நேரே அங்கே ஓடியவள் “அத்தை எனக்கு பசிக்குது” என்று அவள் கூற மறுகணம் அவள் கையில் காபி பிஸ்கெட்டை கொடுக்க அவளும் கல் மேடையில் அமர்ந்து சாப்பிட ஆரம்பித்தாள்.
அப்போது வெளியே கார் நிற்க்கும் சத்தம் கேட்க பதட்டத்துடனே பாதி காபி மற்றும் பிஸ்கெட்டை கல் மேடையில் வைத்தவள் “அத்தை நான் வரேன்” என்று அங்கிருந்து வெளியே ஓடியவள் தன் எதிரே வந்து ராயன் மீது வேகமாக வந்து மோதி விட்டாள் அவன் தடுமாறாமல் நின்றிருக்க பெண்ணவள் நிலை தடுமாறி கீழே விழுந்தாள் அவனை மீண்டும் பார்த்தவள் ஏதோ பேயை பார்த்ததை போல அலறி அடித்து கொண்டு ஓடினாள்.
அவள் ஓடிவதை பார்த்தவனுக்கு எரிச்சல் ராயனுக்கு எரிச்சல் தான் வந்தது “இவள் என்னைக்கு தான் திருத்த போறாளோ” என்று அஞ்சலிக்கு ராயன் என்றாள் சிறுவயதில் இருந்தே பயம் எப்போதும் எதிர் வீடே கதி என்று கிடப்பவள் அவன் வந்தாள் மட்டும் ஓடியே விடுவாள் காரணம் அவன் மீது உள்ள பயம் சிறு வயதில் ஒரு நாள் அவனிடம் வீட்டு பாடம் படிக்க வந்தாள் அப்போது அவன் கல்லூரி படித்து கொண்டு இருந்தான் அவளிடம் ராயன் கேள்வி கேட்க அவளுக்கு ஒன்றும் தெரியவில்லை என்று அவன் அவளை போட்டு அடி வெளுக்க அன்று பள்ளிக்கு முழுக்கு போட்டவள் தான் இன்று வரை பள்ளிக்கூடம் பக்கம் எட்டி பார்க்கவில்லை அன்றிலிருந்து இன்று வரை அவனை பார்த்தாலே தலை தெறிக்க ஓடியே விடுவாள்.
ராமனுக்கு கோபம் தான் வந்தது அவள் மீது
‘இவள் இன்னும் திருந்தல’ என்று மனதில் நினைத்து கொண்டே உள்ளே வர
“ஏன் டா அவளை எப்ப பாரு பயமுறுத்திட்டே இருக்கு பாவம் குழந்தை காபியை பாதியிலேயே வச்சிட்டு போய்ட்டா” என்று அவன் தாய் கேட்க “யாரு நான் அவளை பயமுறுத்துன அப்படி தான மா” என்று அவன் கேட்க “ஆமாம் டா நீ தான்” என்று அவன் மீது குற்றம் சாட்டிவிட்டு மீண்டும் சமையலறைக்கு சென்றார்.
செல்வி அரசு அலுவலகத்தில் ஆபிஸ் அசிஸ்டென்ட்டாக இருந்து ஒய்வு பெற்றவர் இந்த ஊருக்கு கணவர் இறந்தவுடன் அவர் வேலையை வாங்கி கொண்டு இரண்டு பிள்ளைகளுடன் வந்தவர் இங்கேயே வீடு கட்டி செட்டில் ஆகி விட்டார் அவருக்கு இரண்டு மகன்கள் மூத்தவன் ராயன் வயது 29 பெண் தேடிக் கொண்டு இருக்கின்றனர் பி.காம் படித்துவிட்டு சொந்தமாக டிராவல்ஸ் வைத்து இருக்கிறான் அவ்வப்போது அவனே டிரவராகவும் சென்று வருவான்.
சின்னவன் அருள்மெழி வயது 26 ஒரு பைனான்ஸ் கம்பெனியின் லோன் கலெக்ஷன் வேலை செய்து வருகிறான் அஞ்சலி வீட்டுக்கு எதிர் வீட்டில் இருப்பதால் அவள் என்றாள் இவர்கள் வீட்டில் இருக்கும் அனைவருக்கும் பிடிக்கும் ஒரு பெண்பிள்ளை இல்லாத குறையை தீர்த்து வைத்தாள் சிறுவயதில் இருந்தே இங்கே தான் சாப்பிடுவாள் தூங்குவாள் படிப்பாள் அஞ்சலி அந்த அளவுக்கு தெளிவு இல்லாமல் வளர்ந்ததால் அவளின் தாய் அவளை எங்கேயும் விட மாட்டார் செல்வி வீட்டை தவிர.
அஞ்சலி தன் வீட்டுக்கு ஓடி வந்தவள் தன் அறையின் உள்ளே சென்று கதவடைத்து கொண்டாள் அவள் மிகவும் பதட்டத்துடனே இருந்தாள் இதயம் படபடத்தது பக்கத்தில் இருந்த தண்ணீர் பாட்டிலில் இருந்த தண்ணீரை குடித்து தன்னை அசுவாசப்படுத்தி கொண்டாள்.
குலசேகரன்-சகுந்தலா தம்பதியின் ஒற்றை மகள் தான் அஞ்சலி வயது 19 நல்ல வசதியான குடும்பத்தை சேர்ந்தவள் அவள் அப்பா ரைஸ் மில் வைத்திருக்கிறார் அதுமட்டுமின்றி பூர்வீக சொத்தே ஏக போககமாக இருந்தது அனைத்துக்கும் ஒரே வாரிசு அஞ்சலி தான் காரணம் அவள் தாய் இன்னொரு குழந்தை பெற்றாள் உயிருக்கே ஆபத்து என்று மருத்துவர் கூறியதால் இந்த ஒரு குழந்தையே போதும் என்று நினைத்தனர் அதுவும் அவள் பத்து வருட காத்திருப்புக்கு பின் தான் அவளின் தாய் தந்தைக்கு பிறந்தாள் என்பதால் சற்று அதிகப்படியான பாசம் அவள் பள்ளிக்கூடம் செல்ல மாட்டேன் என்று அடம்பிடிக்க வீட்டிலேயே இருக்க வைத்துவிட்டனர் என்ன கொஞ்சம் தெளிவு இல்லாமல் இருந்தாள் அதனால் ஊரில் இருக்கும் சின்ன குழந்தைகள் இருந்து பெரியவர்கள் வரை அவளை பெயரை சொல்லி தான் அழைப்பார்கள் அவள் இவ்வளவு பெரிய பெண்ணாகியும் தெளிவில்லாமல் இருப்பதை எண்ணி அவளின் பெற்றொர் மனம் வருந்தி கொண்டிருந்தனர்.
செல்வி எதிர் வீட்டில் இருந்தாலும் ஏனோ அஞ்சலி மீது பயங்கர அன்பு உடையவர் அவளை அவருக்கு மிகவும் தனக்கு ஒரு பெண் பிள்ளை என்ற ஏக்கத்தை தீர்த்து வைத்தாள் பெண்ணவள்.
சகுந்தலா ஏதோ வேலை செய்து கொண்டு இருந்தவர் “அஞ்சலி அஞ்சலி” என்று அழைக்க அவளும் அங்கே வந்தாள் “என்ன மா” என்று கத்திக் கொண்டே “ஏன் டி வாசல் பெருக்காம கிடைக்கு துணி துவைக்காம கிடைக்கு என்ன நினைச்சிட்டு இருக்க உன் மனசுல போய் சட்டு பூட்டுனு வேலையை பாரு” என்க அவளும் ஒவ்வொரு வேலை வேலையாக செய்ய ஆரம்பித்தாள்.
இரவாகி விட எப்போதும் போல சீரியல் பார்க்க செல்வி வீட்டுக்கு ஓடினாள் ராயன் தன் அறையில் இருக்க அருள் வேலைக்கு சென்றிருந்தான் செல்வி ஹாலில் இருந்த சோபாவில் அமர்ந்து சீரியல் பார்த்து கொண்டு இருந்தார் அவர் பக்கத்தில் ஓடி வந்து அஞ்சலி அமர்ந்து கொண்டாள் “இந்த ரோகினி ஏன் தான் இப்படி இருக்காளோ” என்று செல்வி கூற
“ஆமாம் அத்தை” என்று அவளும் பதிலுக்கு கூற இருவரும் ஆவென்று டிவியை பார்த்து கொண்டிருந்தனர்.
ராயன் தன் போனில் எதையோ பார்த்து கொண்டே வந்தவன் அஞ்சலியை பார்த்தவுடன் அங்கேயே நின்றவன் “அம்மா பசிக்குது” என்றான் செல்வி அவனை திரும்பி பார்த்து முறைக்க அஞ்சலி அவன் குரல் கேட்டு பயத்துடனே அமர்ந்து இருந்தாள்
“அம்மா பசிக்குது மா” என்று அவன் மீண்டும் கத்த “டேய் பசிக்குதுன்னா நீயே போய் போட்டு சாப்பிடு” என்று கூறியவர் மீண்டும் சீரியலை பார்க்க ராயன் அவரை முறைத்தவன்
அஞ்சலி பக்கத்தில் இருந்த தனியே இருந்த இருக்கையில் அமர அவ்வளவுதான் அஞ்சலியின் பதட்டம் அதிகமானது ஓரக்கண்ணால் ராயனை பார்த்தவளுக்கு உள்ளுக்குள் ஏதோ செய்தது வயிற்றை புரட்டியது படபடவென்று அடித்து கொள்ள “அத்தை நான் அப்புறமா வரேன்” என்று கூறியவள் அங்கிருந்து கிளம்பினாள்.
அத்தியாயம் 2
அஞ்சலி தன் வீட்டின் உள்ளே வந்தவள் தனக்கு என்று ஒதுக்கப்பட்டு இருந்த அறையின் உள்ளே சென்று படுத்து கொண்டாள் அப்போது அவள் எதிரே மாட்டியிருந்த புகைப்படம் கண்ணில் பட்டது அதில் இரு குடும்பமும் இருந்தது சிறுவயதில் ஏதோ ஒரு பொங்கல் திருவிழாவில் எடுக்கப்பட்டு இருந்தது அதில் ராயன் 20 வயது பெரிய பையனாக இருக்க அவன் பக்கத்தில் அஞ்சலி பத்து வயதில் ரெட்டை ஜடையுடன் ஈ என்று இளித்து கொண்டே நின்றிருந்தாள் அதை பார்த்தவுடன்
அவளே அறியாமல் அவள் முகத்தில் மெல்லிய புன்னகை வந்தது படுக்கையில் இருந்து எழுந்தவள் ராயனின் உருவத்தை தன் கையால் தொட்டு பார்த்து கொண்டே இருந்தாள் அப்போது அவளின் தாய் வெளியே இருந்து கதவை தட்டினார் “அடியேய் வா வந்து கொட்டிக்கோ” என்று கூற
“எனக்கு வேண்டாம் மா நான் தூங்க போறேன்” என்று கூறிவிட்டு சென்று படுக்கையில் விழுந்தாள் அவள் கண்கள் மட்டும் அந்த புகைப்படத்தில் இருந்து விலகவேயில்லை.
அஞ்சலிக்கு அந்த புகைப்படம் என்றால் மிகவும் பிடிக்கும் ஏன் இவ்வளவு பிடிக்கும் என்று அவளுக்கே தெரியாது எல்லோருடைய புகைப்படத்தையும் விட அந்த ஒற்றை புகப்படத்தை பத்திரமாக சுவற்றில் மாட்டி வைத்திருந்தாள் ராயன் முகத்தைப் பார்த்தாலே அவள் மனதுக்குள் ஏதோ ஒரு சந்தோஷம் பிறக்கும் அது காதலா, பாசமா, இல்ல வெறும் பிடிப்பா என்று அவளுக்கே புரியவில்லை பத்து வயதுக்கு பிறகு அவன் முகம் பார்த்து பேசியது கூட இல்லை ஆனால் அவன் மீது மட்டும் அத்தனை பிரியம்
அவன் கார் வந்த சத்தம் கேட்டாலே ஜன்னல் வழியாக எட்டிப் பார்ப்பாள்,அவன் சிரித்தால் அவளையும் அறியாமல் சிரித்துவிடுவாள் இரண்டு நாள் அவன் ஊரில் இல்லையென்றால், “ராயன் மாமா எப்போ வருவாரு?” என்று செல்வியிடம் கேட்டுக் கொண்டே இருப்பாள் அவன் எவ்வளவு திட்டினாலும், அவன் மீது மட்டும் அவளுக்கு ஒரு நாளும் கோபம் வந்ததில்லை.
பெண்ணவளின் மனதில் அவன் நினைவுகள் அனைத்தும் நிறைந்து கிடந்தது அவன் முகத்தை பார்த்து பேச கூட வெட்கம் அவன் பக்கத்தில் வந்து நின்றால் உதறல் எடுக்கும் என்ன தான் தெளிவில்லாமல் பகுத்தறிவு இல்லாமல் இருந்தாலும் இவை அனைத்தும் பருவ வயதில் வரும் மாற்றமா இவை எதையும் அறியாத பேதையாக அவள் இருந்தாள் அது மட்டுமல்ல அவள் பார்த்து வளர்ந்த ஒற்றை ஆண்மகனும் அவன் ஒருவனே.
இரவு சாப்பிடாமல் கூட படுத்தவள் அப்படியே உறங்கியும்விட்டாள் அதே நேரம் ராயன் வீட்டில்
“அது என்ன டா அஞ்சலி உன்னை பார்த்தாலே பயந்து ஓடுருறா அவளை ஏன் டா இப்படி மிரட்டி வச்சிருக்க” என்று ராயனின் தாய் அவனிடம் கேட்க “அம்மா நான் அவளை எதுவும் பண்ணவேயில்லை அவள் தான் என்னை பார்த்தாலே வித்தியாசமா நடந்துக்குறா” என்றான் ராயன் பதிலுக்கு.
“என்னவோ போ என்னன்னே தெரியலை டா உனக்கு ஒரு வரனும் சரியா அமைய மாட்டேங்குது நான் நேத்து நம்ம ஜோசியரை போய் பார்த்தேன் அவரு நம்ம குலதெய்வக் கோவிலுக்கு போய் கிடா வெட்டி பொங்கல் வச்சா எல்லாம் கை கூடி வரும்ன்னு சொன்னாரு நாம இந்த வாரத்துல ஒரு நாள் போய்ட்டு வந்துரலாமா” என்று கேட்க அவனும் சரியென்று தலையை ஆட்டினான்.
அந்த வார இறுதியில் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் உறவினர்கள் எல்லோரிடமும் அழைப்பு விடுக்க அனைவரும் வந்தனர் ஆனால் அஞ்சலி வீட்டில் மட்டும் அவள் பெற்றோரால் வர முடியவில்லை காரணம் அவர்கள் வயலில் வேலை இருந்தது செல்வி உடனே “நான் அஞ்சலியை கூட்டிட்டு போறனே சகுந்தலா” என்று கேட்க “அய்யோ அக்கா அதெல்லாம் வேண்டாம் நாங்க இல்லாம எப்படி அவள் எதாவது சேட்டை பண்ணுவா” என்று அவர் கூற “ஆன்ட்டி அதான் அம்மா இருக்காங்க நான் இருக்கேன்ல்ல நாங்க பத்திரமா பார்த்துக்குறோம்” என்று அருள் கூற அவரும் ஒரு மனதாக சரி என்றார்.
மறுநாள் காலை அனைவரும் அழைத்து செல்ல லாரி வந்திருக்க அனைவரும் ஏறினர் சகுந்தலா மகளுக்கு தாவணி கட்டி அனுப்பி விட அவளும் வந்தாள் ராயன் அங்கிருந்த சிறுவர் சிறுமிகளை லாரியில் ஏற்றிக் கொண்டு இருக்க அஞ்சலி அப்போது தான் அவனை கவனித்தாள் அவளும் ராயனும் ஒரே நிறத்தில் உடை அணிந்து இருந்தனர் ஆம் அவள் அடர் நீல நிற பட்டு தாவணி அணிந்திருக்க அவனும் அதே நிறத்தில் சட்டை அணிந்து இருந்திருந்தான் அவனை பார்த்து கொண்டே அவள் வந்து நிற்க அனைவரும் லாரியில் ஏறிக் கொண்டு இருந்தனர்.
செல்வியும் லாரியில் தான் இருந்தார் “அஞ்சலி வா டி” என்று அவர் மேலே இருந்து கொண்டே அழைக்க ராயன் பக்கத்தில் வந்து நின்றவள் எப்படி ஏறுவது என்று தெரியாமல் தயங்கி நின்றாள் காரணம் அஞ்சலி வெறும் ஐந்தடி உயரம் உடையவள் அதனால் எப்படி ஏறுவது என்று தெரியாமல் விழி பிதுங்கி நிற்க ராயன் ஒரு கணம் கூட யோசியாமல் அவளை சிறுபிள்ளையை தூக்குவதை போல அவள் இடையை பிடித்து லாரிக்குள் தூக்கி நிற்க வைத்தான் ஒரே ஒரு கணம் அவன் இரும்பு கை அவள் இடையில் பட்டவுடன் அஞ்சலியின் இதயம் வேக வேகமாகத் துடித்தது அவனைப் பார்க்கத் துணியாமல் தலைகுனிந்து நின்றாள்
“பார்த்து ஏறு பாப்பா கீழே விழுந்துடாத அம்மா கூட போய் நில்லு ” என்று சாதாரணமாகச் சொல்லிவிட்டு, அடுத்த குழந்தையைத் தூக்கச் சென்றான்.
ராயன் பொறுத்தவரை அது ஒரு சாதாரண செயல் ஆனால் அஞ்சலிக்கோ அந்த சில நொடிகளின் தொடுகை அவள் மனதை விட்டு அகலவே இல்லை.
ஒரு வழியாக அனைவரும் லாரியில் ஏறிக் கொள்ள இறுதியாக பொங்கல் வைக்க தேவையான பொருட்கள் ஒரு ஆடு பலி கொடுக்க விறகு தண்ணீர் கேன்கள் என்று அனைத்தும் ஏற்ப்பட்டது காரணம் அவர்கள் செல்லும் கோவில் காட்டின் நடுவே இருந்ததால் அனைத்தையும் வீட்டில் இருந்தே எடுத்து சென்றனர் ராயனும் அருளும் பைக்கில் வந்தனர்.
அஞ்சலிக்கு இது தான் தன் பெற்றோர் இல்லாத முதல் பயணம் அவள் படு குஷியாக வந்தாள் சுற்றி இருந்த மரம் செடி கொடிகளை ஜாலியாக வேடிக்கை பார்த்து கொண்டே வந்தாள் பெரிசுகள் அனைத்தும் ஊர் கதை பேசிக் கொண்டு வந்தது சிறு பிள்ளைகள் விளையாடி கொண்டே வந்தனர் ஒரு வழியாக காட்டின் நடுவே இருந்த கோவிலை அனைவரும் வந்தடைந்தனர்.
முதல் வேலையாக பொங்கல் வைக்க குழம்பு வைக்க என்று அனைத்து பொருட்களும் ஏற்பாடு செய்யப்பட்டது பெண்கள் கற்கள் வைத்து நெருப்பு மூட்டி பொங்கல் வைத்து கொண்டு இருக்க அஞ்சலி அனைத்தையும் ஆவென்று வேடிக்கை பார்த்து கொண்டே இருக்க செல்வி அவளை பார்த்தவர்
“அஞ்சலி அந்த தாம்பூல தட்டை எடு” என்று கூற
அவரோ வெள்ளம் துருக்கி வைத்திருந்த தட்டை கூற பெண்ணவளோ சாமிக்கு படைப்பதற்க்காக விபூதி குங்குமம் வைத்திருந்த தட்டை எடுத்து வர வழியில் கற்கள் இருப்பதை கவனிக்காமல் வர கால் தடுக்கி விட கையில் இருந்த தட்டை கீழே போட்டு விட சத்தம் கேட்டு அனைவரின் பார்வையும் அவளிடம் வந்தது.
அனைவரும் அவளையே பார்த்தனர் “அய்யோ! என்னடி பண்ணிட்ட இது என்ன அபசகுணம் மாதிரி” என்று ஒரு பெண் கூற “இந்த லூசு பொண்ணை எதுக்கு கூட்டிட்டு வந்திங்க?” என்று ராயனின் சொந்தக்கார பெண்மணி ஒருவர் கேட்க மற்றொருவரோ “பூஜையையே கெடுத்துட்டாளே!” என்று புலம்ப.
இன்னொரு பெண்மணி “நீ எதுக்கு இங்க வந்த சும்மா வீட்டுல இருந்திருக்க வேண்டியதுதானே” என்று கேட்க.
செல்விக்கோ அனைவரும் அஞ்சலியை திட்டி தீர்ப்பதை பார்த்து மனம் வலித்தது இருப்பினும் சொந்த பந்தங்களை எதிர்த்து பேச முடியாமல் நின்றிருந்தார் அஞ்சலியை பார்க்கவே மிகவும் பாவமாக இருந்தது.
அங்கிருந்த வயதான பெண்மணி ஒருவர் இன்னும் ஒரு படி மேலே போய்
“ஏன் டி அறிவுக்கெட்டவளே செல்வி வெள்ளம் வச்சிருந்த தட்டை எடுத்துட்டு வர சொன்னா நீ எதுக்கு இதை எடுத்துட்டு வந்த பொம்பளை பிள்ளை சொல்றதை சரியா காதுல வாங்க வேண்டாம்” என்று கத்த அங்கிருந்த அனைவரும் இதுதான் சமயம் என்று அவளை திட்ட ஆரம்பித்தனர் காரணம் செல்வியின் உறவினர்கள் யாருக்கும் அவளை பிடிக்கவே பிடிக்காது உடனே அஞ்சலி அழுக ஆரம்பிக்க அவளின் கண்கள் கலங்க ஆரம்பித்தது அப்போது அங்கே வந்த ராயனின் பார்வை அஞ்சலியிடம் தான் முதலில் சென்றது அவளின் அழுது விழிகளை பார்த்தவன்.
“என்னாச்சு இங்க?” என்று கேட்டான் அங்கிருந்த பெண்களில் ஒருவர்
“உன் அம்மா கூட்டிட்டு வந்த பொண்ணு பூஜை பொருளை கீழே போட்டு உடைச்சிட்டா” என்று குறை கூற ராயன் அஞ்சலியைப் பார்த்தான் அவள் தலைகுனிந்து, கண்ணீரை அடக்க முயன்று நின்றாள்.
அவன் அமைதியாக கீழே கிடந்த பொருட்களை எடுத்து வைத்துவிட்டு,
“வேணும்ன்னு யாரும் தப்பு பண்ண மாட்டாங்க தெரியாம நடந்ததுக்காக இவ்வளவு பேரு சேர்ந்து அவளை திட்டனும்ன்னு அவசியம் இல்லையே பாவம் சின்ன பொண்ணு ஏதோ தெரியாம பண்ணிட்டா” என்றான்.
“ஆனா தம்பி நல்லது நடக்க போகும் போது இது கெட்ட சகுனம் மாதிரி தான” என்று அந்த பெண்மணி ஏதோ கூற வர “போதும் அக்கா எனக்கு இதுல எல்லாம் பெருசா நம்பிக்கை இல்லை போய் எல்லாரும் வேலையை பாருங்க” என்று அவன் கூற அவனின் குரலில் இருந்த அழுத்தத்திலும் கடுமையிலும் அங்கிருந்த அனைவரும் அமைதியாகிவிட்டனர்.
அஞ்சலி மெதுவாக அவனை ஏறிட்டு பார்த்தாள் “பயந்துட்டியா பாப்பா?” என்று அவன் கேட்க அவளோ கண்ணீருடன் ஆமாம் என்று தலையை மட்டும் ஆட்டினாள்.
“அழாத இனிமே எதை எடுக்கனும்ன்னாலும் என்னையோ அருளையோ கூப்பிடு”
அவள் மீண்டும் சரி என்று தலையை ஆட்டினாள் “டேய் அருள் இங்க வா டா” என்று தம்பியை அழைக்க அவனும் அங்கே வந்தான்
“அம்மாவுக்கு எது வேணும்ன்னாலும் கொஞ்சம் எடுத்து கொடு கூட இருந்து வேலை செய்” என்க அவனும் தன் தாய்க்கு உதவி செய்தான் இதையெல்லாம் பார்த்து கொண்டு இருந்த செல்வியின் மனதில் ஒரு நிம்மதி தோன்றியது.
“இவளை எப்பவும் திட்டிக்கிட்டே இருப்பான்… ஆனா யாராவது இவளை காயப்படுத்தினா சும்மா இருக்க மாட்
றானே பரவாயில்லை இந்த பையனுக்கு அஞ்சலி மேல பாசம் இருக்கு…” என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டார்.