உயிரின் உவமை நீ
அத்தியாயம் 1 ஊரின் மத்தியில் அமைந்திருந்த அந்த பெரிய திருமண மண்டபம் மக்கள் கூட்டத்தால் நிரம்பியிருந்தது ஆனால் அது ஒரு திருமண வீட்டின் சந்தோஷக் கூட்டமாக இல்லை மாறாக அங்கிருந்த ஒவ்வொரு முகத்திலும் அதிர்ச்சியும் பதற்றமும் மட்டுமே தெரிந்தது. “என்ன பொண்ணு மாறியிருக்கு…” என்ற கிசுகிசுப்பு மண்டபம் முழுவதும் பரவியிருந்தது“என்ன பொண்ணு மாறியிருக்கு” என்று தங்களுக்குள் கிசுகிசுத்து கொண்டு இருக்கமணமேடையில் ராயன் அமர்ந்திருக்க அவன் முன்னே எரிந்து கொண்டிருந்த நெருப்பை விட அவன் மனதில் தீப்பிழம்புகள் கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்தது அப்போது அவன் பக்கத்தில் வந்து அமர்ந்தாள் அஞ்சலி கட்டிய தாவணி பாவாடையுடன் அவன் பக்கத்தில் அமர்ந்தவுடன் அவள் உடலும் உள்ளமும் படபடக்க ஆரம்பித்தது பயத்துடனே தான் அமர்ந்திருந்தாள் பெண்ணவள். ஐயர் மந்திரங்களை ஓதிக் கொண்டு இருக்க அஞ்சலியின் தாய் தந்தை ஓரத்தில் கண்ணீர் விட்டு கதறி கொண்டு இருந்தனர் ராயனின் தம்பி அவன் தாயும் அமைதியாக நின்றிருந்தனர். “கெட்டிமேளம் கெட்டிமேளம்”…