உயிரின் உவமை நீ 9,10
அத்தியாயம் 9
ராயன் தன் தலையில் அடித்து கொண்டு குளிக்க ஆரம்பித்தான் அஞ்சலி ஓடிச்சென்று துப்பட்டா போட்டு வந்தாள் “மாமா” என்று குளியலறையின் கதவை தட்ட தலைக்கு ஷாம்பு போட்டு கொண்டு இருந்தான் ராயன் “மாமா கதவை திறங்க” என்று அவள் கூற “என்ன அஞ்சலி வேணும் உனக்கு” என்று அவன் கேட்க “கதவை திறங்க மாமா” என்று கூற தன் முகத்தை மட்டும் கழுவி பக்கத்தில் கிடந்த டவலை எடுத்து இடையில் கட்டியவன் கதவை திறந்து “என்ன” என்று கேட்டான்
“துப்பட்டா போட்டுட்டேன் மாமா” என்று கூற
“இவளை” என்று கூறிவிட்டு பற்களை கடித்து கொண்டவன் “சரி கிளம்பு” என்று கூற.
“மாமா… அங்க… அங்க ஒரு பூச்சி”
“எங்கே?” என்று ராயன் திரும்பிப் பார்த்தான்
“உங்க கைல… இங்க…” என்று பதட்டமாகச் சுட்டிக்காட்டினாள் அவன் பார்க்கும் முன்பே அந்தச் சிறிய பூச்சி அவன் தோள்பக்கம் ஊர்ந்தது “அய்யோ! அசையாதிங்க மாமா… கடிச்சிடும்…” என்று சொல்லிக்கொண்டே, அவள் கவனமாக அவன் தோளில் தட்டினாள்
பூச்சி கீழே விழாமல் மறுபக்கம் ஓட, அதை விரட்ட வேண்டும் என்ற அவசரத்தில் அவள் கைகள் அவன் தோள், கை, முதுகு என்று மாறிமாறி ஊர்ந்து சென்றது.
அவளின் கை அவன் மேனியெங்கும் பட அவனுக்கு கூச்சம் வந்தது பெண்ணவளும் அவன் அருகில் நெருங்கி அஞ்சலி பூச்சியை எக்கி பிடிக்க முயலும் போது அவளின் கனியாத கனிகள் அவன் மேனியை உரசி இம்சை செய்ய “அஞ்சலி… போதும்… நானே பாத்துக்கறேன்…” என்று அவன் சங்கடத்துடன் சொன்னான்.
“இல்ல மாமா… இன்னும் ஓடுது!” என்று அவள் தீவிரமாக பூச்சியை தேடினாள்
அவள் முகத்தில் இருந்த அப்பாவித்தனத்தை பார்த்த ராயனுக்கு சிரிப்பதா அழுவதா என்று தெரியவில்லை சங்கடமாகவும் இருந்தது
இறுதியில் பூச்சி தரையில் விழுந்து ஓடிவிட்டது.
“ஐ போயிடுச்சு மாமா” என்று வெற்றி பெற்ற குழந்தை போல கைத்தட்டினாள்
ராயன் இப்போது தான் பெருமூச்சு விட்டான்
“உன்னை சமாளிக்கிறதுதான்… இந்த பூச்சியை சமாளிக்கிறத விட கஷ்டம்…” என்று முனுமுனுத்தான் “என்ன மாமா?” என்று அவள் புரியாமல் கேட்க,”ஒன்னுமில்லை… வெளிய போ… நான் குளிச்சுட்டு வரேன்…” என்று சிரமப்பட்டு கொண்டே.
அவள் வெளியே சென்ற பின் தான் அவனுக்கு நிம்மதியாகவே இருந்தது ஒரு வழியாக குளித்து முடித்து வெளியே வந்தவன் சாப்பிட அமர்ந்தான் அவன் தரையில் அமர்ந்ததும் சகுந்தலா தான் சமைத்து எடுத்து வந்த அனைத்தையும் டேபிளில் அடுக்கினார்
“எதுக்கு ஆன்ட்டி இவ்வளவு” என்று அவன் கேட்க “சாப்பிடுங்க மாப்பிள்ளை” என்றார் பாசத்துடன் பரிமாறி ராயன் சாப்பிட்டு கொண்டே இருக்க அவன் பக்கத்தில் வந்து அமர்ந்தாள் அஞ்சலி அவளும் தான் சாப்பிட்டு கொண்டு இருந்தாள்.
எப்போதும் அதிகமாக வாய் பேசும் அஞ்சலி இப்போது அமைதியாக சாப்பிட அவளின் தாய்க்கே ஆச்சரியமாக தான் இருந்தது மனம் குளிர தன் மகளையும் மருமகனையும் பார்த்தார் அத்தனை நிம்மதியாக இருந்தது இத்தனை நாட்கள் தன் மகளை எத்தனையோ பேர் கேலி கிண்டல் செய்திருக்க இன்று அவளுக்கு திருமணம் முடிந்து தன் கணவனுடன் அமர்ந்திருப்பதை பார்க்க அத்தனை மகிழ்ச்சியாக இருந்தது.
ராயன் சாப்பிட்டு முடித்தவன் தன் அறைக்கு சென்று உடை மாற்றி கிளம்பி வர அவனை பார்த்த செல்வி “எங்க டா கிளம்பிட்ட” என்று கேட்க “வேலைக்கு தான்” என்றான்
“ஏன் டா நேத்து தான கல்யாணம் முடிஞ்சுது அஞ்சலியை எங்கேயாவது வெளியே கூட்டிட்டு போலாம்ல்ல” என்று கேட்க ராயன் ஒரு கணம் அமைதியாக இருந்தவன் “சரி மா அவளை கிளம்பி வர சொல்லு” என்று கூற அவளும் சென்று கிளம்பி வந்தாள்.
அஞ்சலி இதுவரை பெரிதாக வெளியே சென்றதே இல்லை என்பதால் ஆர்வமாக கிளம்பி வந்தாள் அவளின் தாய் அவளுக்கு தலை பின்னி பூ வைத்து புது சுடிதார் போட வைத்து அனுப்பி வைத்தார் ராயன் பைக்கை ஸ்டார்ட் செய்ய பெண்ணவளும் வந்து அவன் பின்னே அமர்ந்தாள் “பாய் மா பாய் அத்தை ” என்று சிரித்த முகத்துடன் கிளம்பினாள்.
சகுந்தலா செல்வி இருவரும் அவர்களை மகிழ்ச்சியுடன் வழியனுப்பி வைத்தனர்
பைக்கில் வந்து கொண்டு இருந்த அஞ்சலி ஆர்வத்துடன் “மாமா நாம் எங்க போறோம் படத்துக்கா” என்று கேட்க “இல்லை ஒரு முக்கியமான இடத்துக்கு போறோம்” என்றான் ராயன்.
அவள் அதன் பின் எதுவும் கேட்க்காமல் அமைதியாக வந்தாள் எங்கே போக போகிறோம் என்ற ஆவல் மட்டும் அவன் கண்ணில் தெரிந்தது இருவரும் வந்து சேர்ந்ததோ கார்த்திக் வழக்கறிஞர் என்ற பெயர் பலகை கொண்ட வீட்டுக்கு தான்
அஞ்சலிக்கு எதுவும் புரியாமல் அவன் பின்னே வர கார்த்திக் ராயனை பார்த்தவன் “வாங்க வாங்க” என்றான்.
வீட்டில் அவன் மட்டும் இருக்க காபி போட்டு எடுத்து வந்து கொடுக்க இருவரும் குடித்தனர் “என்ன மச்சான் நேத்து தான் கல்யாணம் முடிஞ்சுது இன்னைக்கு என்னை பார்க்க வந்துருக்க” என்று அவன் கேட்க “கார்த்தி கொஞ்சம் தனியா போய் பேசலாமா” என்று அவன் கேட்க “சரி வா” என்று அவனை தன் அறைக்கு அழைத்து செல்ல “மாமா நானும் வரேன் பயமா இருக்கு” என்று அஞ்சலி கூற
“ஒரு பத்து நிமிசம் நீ டிவி பார்த்துட்டு இரு” என்று கூறிவிட்டு ராயன் அவனுடன் அறைக்குள் சென்றான்.
கதவை மூடி வைத்த கார்த்திக் தன் நாற்காலியில் வந்து அமர்ந்தான் “சொல்லுடா ராயா.. என்ன அவ்வளவு அவசரம்…நேத்து கல்யாணம் முடிச்சிட்டு இன்னைக்கு வந்துருக்கு எதாவது பிரச்சனையா” என்று கேட்க ராயன் ஆழமாக மூச்சை இழுத்தான் அதன் பின் பேச ஆரம்பித்தான்
“எனக்கு டிவோர்ஸ் வேணும் கார்த்தி”
ஒரு நொடி கார்த்திக் அதிர்வுடனே அவனை பார்த்தான்.
“என்னடா சொல்ற நேத்து தான கல்யாணம் ஆச்சு அதுக்குள்ள உனக்கு கல்யாண வாழ்க்கை சளிச்சு போச்சா” என்று கேட்க
“எனக்கு கல்யாணத்துல சுத்தமா விருப்பம் இல்லை” என்றான் ராயன் “நீ இன்னும் அந்த பல்லவியை மறக்கலையா” என்று கேட்க “அதுவும் தான் ஆனா” என்றவன் நேற்று இரவு அஞ்சலியிடம் பேசிய அனைத்தையும் இங்கேயும் ஒப்புவித்து முடித்தவன் “அதனாலதான் இப்பவே என்ன பண்ணணும்னு தெரிஞ்சுக்கலாம்ன்னு உன்னை பார்க்க வந்தேன்” என்றான்.
“டேய் நீ என்ன லூசா அந்த பொண்ணை பார்த்தாலே தெரியுது இன்னசன்ட்டுன்னு இன்னும் குழந்தை மாதிரி இருக்கா அவளோட வாழ்க்கையை நான் கெடுக்க விரும்பல ஒழுங்கா கிளம்பு இங்க இருந்து” என்றான்
கார்த்திக் நாற்காலியில் இருந்து எழுந்து கொள்ள “நான் உனக்கு தான டா பிரன்ட்டு எதாவது பண்ணு” என்றான் ராயன்.
கார்த்திக் அவனை பார்த்து முறைத்தவன் “மச்சான்… உனக்கு சட்டம் தெரியுமா தெரியாதாஇப்பவே டிவோர்ஸ் வாங்க முடியாது” என்றான் கார்த்திக்
ராயன் உடனே புருவம் சுருக்கினான்
“ஏன்?” என்று கேட்டான்.
“இந்திய சட்டப்படி, சாதாரண Mutual Divorce-க்கு குறைந்தபட்சம் ஒரு வருடம் கல்யாண வாழ்க்கை முடிஞ்சிருக்கனும் நேத்து கல்யாணம் பண்ணிட்டு இன்னைக்கு கோர்ட்டுக்கு போனா, மனுவே ஏத்துக்க மாட்டாங்க” என்று கூற ராயன் அவற்றை அதிர்ச்சியுடன் பார்த்தான்.
“இப்போ என்ன டா பண்றது?” என்று அவன் கேட்க “அவசரப்படாத முதல்ல ஒரு வருஷம் ஆகனும் அதுக்குள்ள நீங்க என்ன முடிவு எடுக்கிறிங்களோ அதை அப்புறம் பார்த்துக்கலாம் ஆனா இப்போ சட்டப்படி உடனே டிவோர்ஸ் கிடைக்காது” என்றான் கார்த்திக் திட்டவட்டமாக.
ராயன் என்ன செய்வது என்று தெரியாமல் குழம்பி போய் அமர்ந்திருந்தான்
“நான் அவளை ஏமாத்த விரும்பல கார்த்தி அதனால தான் இந்த முடிவுக்கு வந்தேன்” என்றான் “அப்படின்னா அவளை காயப்படுத்தாத நண்பனா சொல்றேன் ராயா… அந்த பொண்ணுக்கு நேரம் கொடு உனக்கும் நேரம் கொடு ஒரு வருஷத்துக்கு அப்புறமும் உன்னோட முடிவு மாறலன்னா, நானே கோர்ட்டுல நின்னு உனக்கு டிவோர்ஸ் வாங்கித் தர்றேன் ஆனா இப்பவே அவ வாழ்க்கையை முடிவு பண்ணுற உரிமை உனக்கு இல்லை.. உன்னை உயிருக்கு உயிரா காதலிச்சவளே வேற ஒருத்தனை கல்யாணம் பண்ணிக்கிட்டு நிம்மதியா இருக்கா அப்புறம் உனக்கு என்ன பிரச்சனை” என்று அவன் கேட்க.
ராயன் அப்போது அமைதியாக இருக்க “இன்னொரு விஷயம்… நீ சொல்ற மாதிரி அவ குழந்தைதான் ஆனா குழந்தை மனசை உடைக்குறது ரொம்ப சுலபம் அந்த உடைஞ்ச மனசை திரும்ப ஒட்ட வைக்கிறது தான் கஷ்டம் உனக்கு பல்லவி கொடுத்த அதே வலியை நீ அஞ்சலிக்கு கொடுக்காத” என்றான்.
“கார்த்தி என்னால பல்லவியை மறக்கவே முடியலை டா மனசுல அவளை வச்சிக்கிட்டு இவளை என்னால ஏமார்த்த முடியலை டா” என்றான் ராயன் உண்மையான வருத்தத்துடன்
“பல்லவியை மறக்க முடியலன்னு சொல்ற சரி ஆனா பல்லவி உன்னோட கடந்த காலம் அஞ்சலி உன்னோட நிகழ்காலம் கடந்த காலத்துக்காக நிகழ்காலத்தை பலி கொடுக்காத அவள் பாவம் டா வெளியே உனக்காக அவள் காத்துக்கிட்டு இருக்கா போ” என்றான் கார்த்தி.
இருவரும் வெளியே வர “மாமா வந்துட்டிங்களா நாம படத்துக்கு போலாமா” என்று பெண்ணவள் கேட்க குழந்தை மனசை உடைக்காதே என்று அவன் நண்பன் கூறிய வார்த்தை நினைவுக்கு வர அவனும் சரியென தலையை ஆட்டியவன் “மச்சான் நான் வரேன் டா” என்று கூற “வரேன் அண்ணா” என்று அஞ்சலி கூற இருவரும் அங்கிருந்து சென்றனர்.
ராயன் அஞ்சலியுடன் பைக்கில் செல்ல அஞ்சலி ஜாலியாக வேடிக்கை பார்த்து கொண்டே வர அவன் மனதில் தான் ஆயிரம் எண்ணங்கள் ஓடிக் கொண்டிருந்தது பைக்கை ஓட்டிக் கொண்டு வந்த ராயனின் மனம் மட்டும் அமைதியாக இல்லை ஒரு பக்கம் பல்லவியின் நினைவுகள் அவனை விடாமல் துரத்திக் கொண்டிருந்தன மறுபக்கம், எதுவும் அறியாமல் பின்னால் அமர்ந்து குழந்தையைப் போல வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த அஞ்சலியின் அப்பாவித்தனம் அவன் மனதை ஏதோ செய்தது தான் தவறு செய்துவிட்டோமோ என்ற ஒரு கேள்வி அவன் மனதை போட்டு குடைய ஆரம்பித்தது பல வித யோ
சனையுடனே வந்தவன் எதிரே வந்த பைக்கை கவனிக்காமல் சென்று மோதினான்.
அத்தியாயம் 10
ராயன் சாலையில் கவனமில்லாமல் எதிரே வந்த பைக்கில் மோதி விட இருவரும் நிலை தடுமாறி கீழே விழுந்தனர் அவன் பெரிதாக வேகமாக செல்லாததால் காயம் எதுவும் இல்லை ஆனால் ராயன் வலது நெற்றியில் காயம் பட்டு ரத்தம் வர ஆரம்பித்தது அதை பார்த்த “மா…மா…உங்க நெத்தியி ரத்தம்” என்று கண்கள் கலங்க கூறியவளின் கண்கள் இருட்டி கொண்டு வர அப்படியே மயங்கி அவன் மீது சரிந்தாள்.
“”பாப்பா…அஞ்சலி…” என்று அவன் அவளின் கன்னத்தில் தட்டி எழுப்ப அவளோ கண்விழிக்கவேயில்லை ராயனின் பதட்டம் அதிகரிக்க என்ன செய்வது தெரியாமல் தவித்து கொண்டு இருக்க அங்கே சாலையில் சென்றவர்களின் உதவியுடன் அவளை மருத்துவமனைக்கு கொண்டு மருத்துவர் அவளை பரிசோதித்தவர் “ஒன்னுமில்லை சாதாரண மயக்கம் தான் அதிர்ச்சியில மயங்கி இருக்காங்க டிரிப்ஸ் போட்ருக்கோம் கொஞ்ச நேரத்துல கண் முழிச்சிடுவாங்க” என்று கூறினார்.
ராயன் தன் தலையில் இருந்த காயத்துக்கு தையல் போட்டு கொண்டு இருந்தான் அப்போது அஞ்சலி தன் அறையில் கண்விழித்தாள் கண்ணை திறந்தவுடனே அவளுக்கு ராயன் நினைவு தான் வந்தது “மாமா மாமா” என்று அவனை சுற்றி முற்றி தேடினாள் அவன் அங்கு இல்லை என்றவுடன் உடனே எழுந்து செல்ல முயல கையில் டிரிப்ஸ் போடப்பட்டு இருக்க அதை கழட்டி தூக்கி எறிந்தவள் “மாமா மாமா” என்று பைத்தியம் பிடித்தவளை போல ஓட ஆரம்பித்தாள் அவள் கையில் இருந்து ரத்தம் சொட்டிக் கொண்டே இருக்க பக்கத்து அறையின் உள்ளே அவனை தேடி நுழைந்தாள் அந்த அறையில் ராயனுக்கு கட்டுப்போட்டு முடித்திருக்க “பாப்பா என்னாச்சு ஏன் ஓடி வந்த கையில ரத்தமா இருக்கு” என்று அவன் கேட்டு கொண்டே இருக்க “மா…மா உங்களுக்கு ஒன்னும் இல்லைல்ல” என்று திக்கி திணறி அழுது கொண்டே கேட்டவளின் முகம் முழுக்க வியர்த்து இருந்தது அவள் மிகவும் பதட்டமாக இருப்பது அவனுக்கு புரிந்தது.
“எனக்கு ஒன்னும் இல்லை பாரு நான் நல்லா தான் இருக்கேன்” என்று அவளோ அவனை இறுக அணைத்து கொண்டவள் அவனின் மார்பில் சாய்ந்து “உங்களுக்கு என்னவோ ஏதோன்னு நான் ரொம்ப பயந்துட்டேன் மாமா” என்றாள் கண்ணீர் மல்க கூற அவளை எப்படி தேற்றுவது என்றே அவனுக்கு தெரியவில்லை மீண்டும் மருத்துவர் அவளின் கையிலும் கட்டுப்போட்டு வீடு வந்து சேர இரவானது.
இருவரும் இரவு வீடு வந்து சேர செல்வி ஏதோ வேலை செய்து கொண்டே டிவி பார்த்து கொண்டு இருக்க இருவரும் தலையில் கையில் கட்டுடன் வர அதிர்ந்தேவிட்டார்
“ராயா என்னாச்சு” என்று கேட்டு கொண்டே அவர்கள் அருகில் வர சகுந்தாலாவும் அவரின் கணவரும் மகளையும் மருமகனையும் பார்த்துவிட்டு அங்கே வந்து சேர்ந்தனர்.
“மாப்பிள்ளை அஞ்சலி என்னாச்சு உங்களுக்கு” என்று கேட்க அவன் நடந்த அனைத்தையும் அவர்களிடம் கூற சகுந்தலா கோபத்துடன் மகளை பார்த்தார் அவளின் உடை முழுக்க ரத்தமாக இருக்க “ஏன் டி அறிவுகெட்டவளே இப்படியா பண்ணுவ” என்று அவர் தன் மகளை திட்ட ராயனுக்கு கோபம் வந்தது “ஆன்ட்டி விடுங்க அவள் ஏதோ தெரியுமா தான பண்ணுனா பாவம் அவளுக்கு என்ன தெரியும்” என்று கேட்க செல்வி வாயை பிளந்துவிட்டார்
‘என்ன டா இது இவன் ஒரே நாள்ல பொண்டாட்டிக்கு இப்படி சப்போர்ட் பண்றான்” என்று நினைத்தார்.
சகுந்தலா ராயன் பேசிய பின் ஒரு வார்த்தை கூட பேசவில்லை இரவு சாப்பிட அனைவரும் அமர அஞ்சலிக்கு செல்வி ஒரு ஸ்பூன் எடுத்து வந்து கொடுத்தார் அவள் சாப்பிட சிரமப்பட்டு பாதி சாப்பிடிலேயே “போதும் அத்தை” என்று எழுந்து கொண்டாள் அதையெல்லாம் கவனித்து கொண்டு இருந்த ராயன் அவள் பின்னேயே தட்டை எடுத்து சென்றவன் அவள் தட்டை சிங்கில் வைக்க போக “அஞ்சலி இங்க தட்டை கொடு” என்று ராயன் அவளை நெருங்கி வந்து வாங்கினான்.
“அவள் ஒன்றும் புரியாமல் அவனை பார்க்க”
“ஆ காட்டு” என்று அவன் கூற அவளும் ஆ என்று வாயை திறக்க “நல்லா திற டி” என்று கூறியவன் சாப்பாட்டை பிசைந்து யாருக்கும் தெரியாமல் சமையலறையில் ஊட்ட ஆரம்பித்தான் அவளும் பசிக்கு நன்றாக சாப்பிட ஆரம்பித்தாள் ஒரு கட்டத்தில் “போதும் மாமா இதுக்கு மேல சாப்பிட்டா வயிறு வலிக்கும்” என்று கூற “ஒழுங்கா வாயை திற இன்னும் ரெண்டு வாய் தான்” என்று மிரட்டி ஊட்டினான் அவள் சாப்பிடும் போது தெரியாமல் அவன் கையை கடித்து விட
“ஆ என்ன டி பண்ற” என்று அவன் கத்தி கொண்டே கையை எடுக்க “அய்யோ மாமா தெரியாம கடிச்சிட்டேன்” என்று கூறியவளின் கண்கள் கலங்கியது “வலிக்குதா மாமா” என்று அவள் கேட்க “இல்லை டி இனிக்குது” என்றான் அவன் கையை உதறிக் கொண்டே இருக்க அஞ்சலிக்கு அவனை பார்க்கவே பாவமாக இருந்தது.
அஞ்சலி உடனே அவன் கையை பிடித்தவள் அவன் விரலை எடுத்து தன் வாயில் அஞ்சலி வைத்து கொள்ள அவள் அவன் விரலை தன் வாயில் வைத்த அந்த நொடி, ராயனின் உடல் முழுவதும் மின்சாரம் பாய்ந்தது போல சிலிர்த்தது ஒரு கணம் என்ன செய்வதென்றே புரியாமல் அவளையே பார்த்துக்கொண்டிருந்தான் “என்ன டி பண்ற” என்று கூறிக்கொண்டே அவள் வாயில் இருந்து தன் விரலை எடுக்க “மாமா எங்க அம்மா கையை கத்தில வெட்டி ரத்தம் வந்தா இப்படி தான் பண்ணுவாங்க அதனால தான் இப்படி பண்ணினேன்” என்றாள் “அது ரத்தம் வந்தா இப்படி பண்ணுவாங்க சரியான லூசு” என்றவன் கையை கழுவிக் கொண்டு அங்கிருந்து வெளியே சென்றான்.
‘அய்யோ மாமா பாவம்’ என்று மனதில் நினைத்தாள் பெண்ணவள் ராயன் வெளியே வர அவன் தம்பி அருள் அவன் குறுக்கே தட்டை எடுத்து கொண்டு வந்தான் “என்ன அண்ணா பொண்டாட்டிக்கு திருட்டத்தனமா சாப்பாடு ஊட்டியாச்சா” என்று கூறிவிட்டு சிரிக்க
‘இவன் ஒருத்தன்’ என்று மனதில் நினைத்தவன் தன் அறைக்கு சென்றான்.
அஞ்சலியும் சாப்பிட்டு முடித்து அறையின் உள்ளே வந்தாள் ராயன் அவளை பார்த்தவன்
“மாத்திரை போட்டியா” என்று கேட்க “அய்யய்யோ மாமா மறந்துட்டேன்” என்று தலையில் கை வைத்தவள் மாத்திரையை போட்டு கொண்டு வந்து அவன் பக்கத்தில் படுத்தாள் இரவு ராயன் உறங்கி கொண்டிருக்க அஞ்சலி தூக்கத்தில் கையை அசைக்க அவளுக்கு வலி எடுத்தது “ஸ்ஸ்” என்று சினுங்கி கொண்டே படுத்திருக்க ராயன் எழுந்து அமர்ந்தான்.
“அஞ்சலி” என்று அவள் தோளில் கை வைக்க அவளும் எழுந்தாள் “என்ன ஆச்சு” என்று கேட்க “கை வலிக்குது மாமா” என்க அவன் எழுந்து லைட்டை போட்டவன் அவள் கையை பார்க்க அவளின் கையில் லேசாக ரத்தம் கசிந்து இருந்தது “டாக்டர் நாளைக்கு தான் டி ஹாஸ்பிட்டல் வர சொல்லி இருக்காங்க” என்றவன் எழுந்து முதலுதவி பெட்டி எடுத்து கட்டை அவிழ்த்து சுத்தம் செய்து மருந்து போட
“ஸ்ஸ்ஆஆ மாமா” என்று வலியில் துடிக்க எப்படியோ மருந்தை வைத்து முடித்தான்.
“இனிமேலாவது இந்த மாதிரி வேலையெல்லாம் பண்ணாத டி எதுக்கு அவ்வளவு அவசரம்” என்று கேட்டு கொண்டே அனைத்தையும் எடுத்து வைக்க “உங்களுக்கு எதாவது ஆகிருந்தா என்ன மாமா பண்றது நான் ரொம்ப பயத்துட்டேன் தெரியுமா மாமா” என்று கூற அவன் முகம் மாறியது இவளுக்கு தன் மேல் இவ்வளவு பிரியமா என்று மனதில் நினைத்தான்.
அவன் மீண்டும் வந்து படுக்கையில் அமர
“அஞ்சலி தூங்கு” என்றான் அவளும் படுத்து கொள்ள விளக்கை அணைத்து விட்டு அவன் படுக்க “மாமா” என்று அவள் அழைத்தாள்
“என்ன டி” என்று அவன் கேட்க “நான் உங்களை கட்டிப்பிடிச்சு படுத்துக்கவா மாமா” என்று அவள் கேட்க அவன் அதிர்வுடனே விடிவிளக்கின் வெளிச்சத்தில் அவள் முகத்தை பார்த்தான் ஆம் அவள் உண்மையில் பயந்ததை போல தான் இருந்தாள்.
“எனக்கு ரொம்ப பயமா இருக்கு மாமா” என்று கூறிக் கொண்டே அவன் பதிலை எதிர்ப்பார்க்காது அவனை நெருங்கி படுத்தாள் அவன் மார்பில் தலை வைத்து ஒற்றை கையை அஞ்சலி அவன் மார்பில் போட்டு மார்பில் முகம் புதைத்து ஒரு குழந்தையை போல சுருண்டு படுத்துக் கொண்டாள் அவளின் கைகள் அவன் சட்டையை இறுகப் பற்றியிருந்தது ராயனுக்கு ஒரு பக்கம் அவளை விலக்க வேண்டும் என்று தோன்றியது ஆனால் அவளின் பயம் நிறைந்த முகத்தை நினைத்தவுடன் அந்த எண்ணமே மறைந்துவிட்டது.
மெதுவாக அவளின் தலையை வருடியவன், முகத்தில் விழுந்திருந்த முடிக்கற்றைகளை காதோரமாக ஒதுக்கி வைத்தான் அந்த ஸ்பரிசத்திலேயே அஞ்சலி தூக்கத்திலேயே இன்னும் கொஞ்சம் அவனோடு ஒட்டிக் கொண்டாள்.
“லூசா டி எதுக்கு இவ்வளவு பயப்புடுற” என்று மெல்ல அவளிடம் கேட்க “நான் தூங்கும் உங்களுக்கு எதாவது ஆகிடுச்சுன்னா என்ன பண்றது மாமா அதான் பயமா இருக்கு” என்றாள் கண்ணை மூடிக் கொண்டே சற்று நேரத்தில் அவள் அமைதியாக உறங்குவதை பார்த்தவன், அருகில் இருந்த போர்வையை எடுத்து அவள் மீது நன்றாக போர்த்திவிட்டான் அவளுக்குக் காயம் பட்ட கை தன் நெஞ்சின் மீது அழுந்தாமல் இருக்க, மிகவும் கவனமாக அவளின் கையைச் சரிசெய்தான்.
அந்த நொடி, அவள் மேல் இருந்த பரிதாபம் கொஞ்சம் கொஞ்சமாக பாசமாக மாறுவதை அவனே உணர்ந்தான் ஆனால் அதை அவன் தான் மனம் ஏற்க மறுத்தது
பெண்ணவள் அசைந்து படுக்க அழகு பொக்கிஷங்கள் அவன் நெஞ்சில் பதிய ஆணவனுக்கு மூச்சே நின்றுவிட்டது அவளின் சீரான மூச்சு காற்று அவன் கழுத்து வளைவில் பட அவன் தான் உறங்க முடியாமல் தவிக்க ஆரம்பித்தான்.
இத்தனை நெருக்கத்தில் அவன் முன்னாள் காதலியுடன் கூட அவன் படுத்ததேயில்லை
முதல் முறையாக ஒரு பெண் அவனை இறுக அணைத்து கொண்டு படுத்திருந்தாள் அதுவும் அவன் மனைவி ‘இவள் ஏன் மேல் பைத்தியம் மாதிரி சுத்திட்டு இருக்கா’ என்று நினைத்தவனுக்கு பதில் கிடைக்கவில்லை
யோசித்து கொண்டே அவஸ்தையுடன் படுத்திருந்தான்.
இரவெல்லாம் அவன் உறங்காமல் அவளோ அவனுடன்
இருக்கும் நிம்மதியில் நன்றாக உறங்கி இருந்தாள்.