உயிரின் உவமை நீ 7,8
அத்தியாயம் 7
“அய்யய்யோ” என்றாள் விட்டாள் அழுதுவிடும் தோனியில் அவள் வேக வேகமாக பிடித்து இழுக்க “ஏய் இரு பாப்பா இப்படி இழுத்தா தாலி கையோட வந்துரும்” என்க அவன் சொன்னதும் பயந்து அப்படியே அசையாமல் நின்றாள் ராயன் தன் சட்டை பட்டனில் மாட்டியிருந்த தாலியை மெல்ல பிரித்து எடுக்க
“தே…தேங்க்ஸ்…மா…மா” என்று வெட்கம் பதற்றம் கலந்த முகத்துடனே கூறியவள் அடுத்த கணம் விட்டால் போதும் என்று அந்த அறையில் இருந்து வெளியே ஓடியேவிட்டாள்.
அவள் ஓடிய வேகத்தை பார்த்த ராயன் மனதில் ‘இனிமே இவளை வச்சு எப்படி சமாளிக்க போறனோ’ என்று நினைத்தவன் தானும் அவள் பின்னேயே வந்தான்
அவளுக்காகவே வெளியே காத்திருந்தார் அவளின் தாய் சகுந்தலா “இவ்வளவு நேரமா டி ஒரு பொம்பளை தூங்குவ” என்று கேட்டார் அவள் எதுவும் சொல்லாமல் நிற்க செல்வி அவள் அருகில் வந்தவர் “நீ போய் குளிச்சிட்டு வா அஞ்சலி” என்று கூறியவர் அவள் கையில் உடையை அவளும் குளிக்க சென்றாள்.
அவள் குளித்து முடித்து வெளியே வர அவள் தாய் அவனுக்காகவே வெளியே காத்திருந்தவர் அவளுக்கு புடவை கட்டி விட ஆரம்பித்தார் அதனுடன் அறிவுரைகளையும் சொல்ல ஆரம்பித்தார் “இந்த பாரு அஞ்சலி இனி நீ சின்னப்பிள்ளை கிடையாது ஒரு குடும்பத்துக்கு வாழ வந்துட்ட இனிமே நீ பொறுப்பா இருக்கனும் உன் வீட்டுக்காரர் மாமியார் என்ன சொன்னாலும் கேட்டு நடக்கனும் புரியுதா” என்று கூறிக் கொண்டே புடவையை கட்டி விட அவளும் சரியென்று தலையை ஆட்டினாள்.
“என்ன புரிஞ்சுது” என்று அவர் கேட்க
“ராயன் மாமா செல்வி அத்தை என்ன சொன்னாலும் கேட்க்கனும்” என்று கூறினாள்
“ம்ம் ஒழுங்கா இரு” என்றார் அவர் புடவை கட்டி முடிக்க புடவை கட்டி முடிந்ததும், அஞ்சலி தன் புடவையை இங்கும் அங்கும் இழுத்துப் பார்த்தவள், “அம்மா… இந்தப் புடவை கழன்று விழுந்துட்டா நான் என்ன பண்றது…?” என்று உண்மையான பயத்தோடு கேட்டாள்.
அந்தக் கேள்வியைக் கேட்டு சகுந்தலாவுக்கு சிரிப்பே வந்துவிட்டது “அப்படியெல்லாம் விழாது ஒருவேளை கழன்றா… உன் வீட்டுக்காரர்கிட்ட சொல்லு அவர் சரி பண்ணிவிடுவார்…” என்றார்.
அஞ்சலி புரியாமல் கண்களைச் சிமிட்டினாள்
“யாருகிட்ட சொல்லணும்…?” என்று மீண்டும் கேட்டாள் “உன் வீட்டுக்காரர்கிட்டதான் வேற எந்த ஆம்பளைகிட்டயும் கேட்கக் கூடாது”
“ஏன்…?” என்றாள் “ஏன்னா… அவர் உன் புருஷன்” உடனே அஞ்சலிக்கு இன்னொரு சந்தேகம் வந்தது “ஆனா அம்மா… எந்த ஆம்பளைகிட்டயும் பேசக்கூடாதுன்னு நீங்கதானே சொல்லியிருந்தீங்க…?”சகுந்தலா தலையில் கை வைத்துக்கொண்டார்.
“அட லூசு… அது வேற ஆம்பளைங்க உன் புருஷன் வேற அவர்கிட்ட பேசலாம்… உதவி கேட்கலாம்… அவர் சொல்றதைக் கேட்கலாம் என்ன புரிஞ்சுதா?”என்று கூற
“ஓ…” என்று நீட்டி சொன்னவள், இப்போது தான் புரிந்தது என்பது போல சிரித்தபடி தலையை ஆட்டினாள் அவளது குழந்தைத்தனமான முகத்தைப் பார்த்த சகுந்தலா, “கடவுளே… இவளை நீதான் காப்பாத்தணும்…” என்று மனதிற்குள் வேண்டிக்கொண்டார்.
அதன் பின் இருவரும் உள்ளே வர தன் மகளுக்கு வீட்டில் இருந்த அனைத்து நகைகளையும் அணிவித்தார் சகுந்தலா தலையில் பூ வைத்து அலங்காரம் செய்து முடிக்க தானே தன் மகளின் அழகை மனதில் மெச்சி கொண்டார்.
அதற்க்குள் ராயனும் குளித்து கிளம்பி வர இருவரையும் கோவிலுக்கு விளக்கு வைக்க அனுப்பி வைத்தனர் ராயன் பைக்கை எடுத்து கொண்டு காத்திருக்க ன் பைக்கை வெளியே எடுத்துவந்து காத்திருந்தான்.
சில நொடிகளில் வீட்டுக்குள் இருந்து அஞ்சலி மெதுவாக வெளியே வந்தாள்
அவளைப் பார்த்தவன் ஒரு கணம் கண் சிமிட்ட மறந்து அப்படியே அவளை பார்த்துக் கொண்டிருந்தான் இதுவரை தாவணி பாவாடையில் குழந்தை போல துள்ளி ஓடி ஆடித் திரிந்தவள், இன்று பட்டுப் புடவையில், கழுத்தில் அவன் கட்டியிருந்த மஞ்சள் தாலியுடன் புதுமணப் பெண்ணாக அவன் கண்முன்னே வந்து நின்றாள்.
மாநிற அழகி முகத்தில் மஞ்சள் பூசி எந்த வித அலங்காரமும் இல்லாமலேயே அழகாக இருந்தாள் நெற்றியில் சிறிய குங்குமம், தலையில் மல்லிப்பூ, கழுத்தில் புதிதாக மின்னிய தாலி… மூக்கில் இருந்து மூக்குத்தி அவளை இன்னும் அழகாகக் காட்டியது அவன் தான் அவளை ஆவென்று பார்த்து கொண்டிருந்தான்.
ஆனால் அவளோ புடவை கட்டிய பழக்கமே இல்லாததால் ஒவ்வொரு அடியையும் பார்த்துப் பார்த்து எடுத்து வைத்து தடுமாறாமல் நடக்க முயன்று கொண்டிருந்தாள்
அவன் அருகில் வந்து நின்றவளைப் பார்த்த ராயன், “உட்காரு…” என்றான் சுருக்கமாக.
அவன் ஒரு வார்த்தை சொன்னதுமே, “சரி…” என்று தலையாட்டியவள் அவசரமாக பைக்கில் ஏறி அமர்ந்தாள்.
ஆனால் அவனைத் தொடக்கூட தயங்கினாள்
பைக்கின் பின்புற கம்பியை இரண்டு கைகளாலும் இறுகப் பிடித்துக் கொண்டு, இருவருக்கும் நடுவே இன்னொரு ஆள் உட்காரும் அளவுக்கு இடைவெளி விட்டு அமர்ந்திருந்தாள் அதை உணர்ந்த ராயன், பின்னால் அவள் பின்னால் திரும்பிப் பார்த்து
“இவ்வளவு தள்ளி உட்கார்ந்தா முதல் ஸ்பீட் பிரேக்கர்லயே கீழே விழுந்துடுவ…” என்று அவன் கடினமான குரலில் கூறினான்.
அஞ்சலி உடனே கொஞ்சம் தள்ளி அமர்ந்தாள்
கோவிலுக்கு செல்லும் வழியில் இருந்த பள்ளத்தில் ராயன் ஏற்றி இறக்க ஒரு கணம் தடுமாறியவள் அவன் தோலை கெட்டியாக பிடித்து கொண்டாள் மாலை நேர காற்று வீச இருவரும் கோவிலுக்கு வந்து சேர்ந்தனர்.
அஞ்சலியின் கையில் அவளின் தாய் ஒரு கூடையை கொடுத்து அனுப்பியிருக்க அதிலிருந்து விளக்கை எடுத்து அவள் ஏற்றி வைக்க அஞ்சலி சாமியை பார்த்து கையெடுத்து கும்பிட்டாள் ராயனுக்கு பெரிதாக நம்பிக்கை இல்லாததால் அமைதியாக நின்றிருந்தான் அவள் என்ன தான் செய்கிறாள் என்பதை பார்த்து கொண்டே
அவளோ கண்ணை மூடி ஏதோ முனுமுனுத்துக் கொண்டு இருந்தாள் “தேங்க்ஸ் சாமி ராயன் மாமா இனி என்னை விட்டு எங்கேயுமே போக மாட்டாரு” என்று கூறிக் கொண்டு இருந்தாள்.
அவள் சாமி கும்பிட்டு முடிக்க இருவரும் நடந்து சென்றனர் கோவிலுக்கும் அவர்கள் பைக் நிறுத்தி வைத்திருந்த இடத்துக்கும் ஒரு அரை மீட்டர் தூரம் இருக்க நடந்து சென்றனர் அஞ்சலி கையில் விபூதியை வைத்து கொண்டே தயக்கத்துடனே அவன் அருகில் சென்றாள் அவனிடம் எப்படி கொடுப்பது என்று தெரியாமல் தவித்தாள் ‘மாமாக்கு விபூதி வைச்சா ரொம்ப நல்லது’ என்று நினைத்தவள் ஒரு வழியாக தைரியத்தை வரவழைத்து கொண்டு “மாமா விபூதி” என்று அவனிடம் கையை நீட்ட “எனக்கு இதுல எல்லாம் நம்பிக்கை இல்லை” என்று அவன் கூற
அவளின் முகம் உடனே வாடிவிட்டது முகத்தை தூக்கி வைத்து கொண்டே தான் மட்டும் விபூதியை வைத்து கொண்டு அவன் பின்னே வந்து அமர்ந்தாள்.
இருவரும் மீண்டும் பயணத்தை தொடங்க இந்த முறையும் அஞ்சலி ஓரத்தில் அமர்ந்தவள் கம்பியை பிடித்துக் கொண்டாள் அப்போது ஒரு வேகத்தடை வர அஞ்சலி விழப்போவதை போல தடுமாறினாள் அவளை கண்ணாடி வழியாக பார்த்த ராயனுக்கு கோபம் தான் வந்தது ‘ஏன் இவள் என்னை தொட மாட்டாளா’ என்று மனதிலேயே அவளை கரித்து கொட்டியவன் “கம்பியை பிடிக்காத என் சட்டையை பிடிச்சிக்கோ இல்லைன்னா கீழே விழுந்துடுவ” என்று அவன் சாலையை பார்த்து கொண்டே கூற அஞ்சலி உடனே “உங்க சட்டையை பிடிச்சா சட்டை கசங்கிடும் மாமா” என்று தயக்கத்துடனே கூற “இன்னொரு சட்டை மாத்திகலாம் ஒழுங்கா பிடிச்சிக்கோ இல்லை கீழே விழுந்துருவ” என்று அவன் கூற அவனின் முதுக பக்கம் அவன் சட்டையின் ஓரத்தை அவள் பிடித்து கொள்ள “அதை பிடிச்சா நீ அடிக்குற காத்துல பறந்து தான் போவ” என்று கூற.
அவள் ஒழுங்காக அவன் சட்டையை பிடித்து கொண்டாள் ஒரு வழியாக இருவரும் வீடு வந்து சேர்ந்தனர் அவர்கள் வீடு வந்து சொந்த பந்தங்கள் அவளை பார்த்துவிட்டு சென்றனர்
அதில் வந்த பெண்ணொருத்தி “எப்படியோ சகுந்தலா இவள் புத்தி இல்லாம இருக்காளே இவளுக்கு எங்க இருந்து மாப்பிள்ளை கிடைக்க போகுதுன்னு ஊரே பேசுச்சு ஒரு வழியா நல்ல வரன் அமைஞ்சிடுச்சு” என்று சொல்லிவிட்டு செல்ல சகுந்தலா முகம் சுருங்கியது இருப்பினும் அவர் வெளியே காட்டிக்கொள்ளவில்லை.
இரவு ஒரு பெட்டியில் அஞ்சலியின் துணிமணிகளை எடுத்து வந்து அவளின் தாய் ராயன் வீட்டில் வைத்தார் இரவு அவர்கள் இருவருக்கும் அஞ்சலி வீட்டில் தான் முதல் இரவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது
அவள் வயதை ஒத்த திருமணமான பெண்கள் சிலர் வந்தனர்.
“அஞ்சலியை ரெடி பண்ணி அனுப்புங்க… நேரம் ஆகுது…” என்று சகுந்தலா சொல்ல, அஞ்சலிக்கு புரியாமல் அவர்களையே பார்த்தாள் “எதுக்கும்மா ரெடி பண்ணணும்…?” என்று அப்பாவியாகக் கேட்டாள்
அந்தக் கேள்வியைக் கேட்ட அங்கிருந்த பெண்கள் அனைவரும் சிரித்துவிட்டனர்.
“இவளுக்கு ஒன்னுமே தெரியாது போல ராயன் அண்ணா பாவம்…” என்று ஒருத்தி சிரித்தபடி கூற, அஞ்சலி இன்னும் குழப்பமாக,
“என்ன தெரியனும்…?” என்று கேட்டாள்.
சகுந்தலா மெதுவாக அவள் தோளில் கை வைத்தார் “ஒன்னுமில்லை… நீ உள்ளே வா.”
அறைக்குள் அழைத்துச் சென்று கதவை முடியதும், அஞ்சலி மீண்டும் கேட்டாள்
“அம்மா… எல்லாரும் ஏன் சிரிச்சாங்க என்னை எங்க அனுப்பப் போறிங்க எனக்கு பயமா இருக்கு” என்று அவள் கேட்க
சகுந்தலா அவள் கன்னத்தை வருடியவர்
“அது உன்னை ஒரு சடங்குக்கு அனுப்ப போறோம் கல்யாணம் எல்லா பொண்ணுங்களும் இதை பண்ணுவாங்க இன்னைக்கு நீ உன் வீட்டுக்காரர் ரூம்ல தான் தூங்கனும்” என்றார்.
“அது அம்மா நான் காலையிலேயே தூங்கிட்டேனே…” என்று அவள் அப்பாவியாகச் சொல்ல,சகுந்தலா மெல்ல சிரித்தவர்
“இது ஒரு சடங்கு உனக்கே போக போக புரியும்” என்றார் “அம்மா எனக்கு நீ இல்லைன்னா தூக்கம் வராதே” என்று அவள் கூற.
“இனிமே நீ என் கூட தூங்க கூடாது உன் வீட்டுக்காரர் கூட தான் தூங்கனும்” என்று அவர் கூற அஞ்சலியின் பயம் முகத்தில் அப்பட்டமாக தெரிந்தது
“ராயன் மாமா கூடவா” என்று அதிர்வுடனே அவள் கேட்க “ஆமா” என்றார்
“அவரு என்னை எப்ப பாரு திட்டிட்டே இருப்பாரே இன்னைக்கு கோவில்ல விபூதி கொடுத்தேன் அதை கூட அவரு வச்சிக்கல தெரியுமா மா” என்று கூற சகுந்தலா உடனே
“அவன் ரொம்ப நல்ல பையன் அஞ்சலி போக போக சரி ஆகிடும்” என்று கூற
“அவரு என்னை திட்ட மாட்டாருல்ல” என்று அவள் அப்பாவியாக கேட்க.
“அதெல்லாம் திட்ட மாட்டாரு வா” என்று அவளை வெளியே அழைத்து சென்றார் அவளின் வயது சொந்தக்கார பெண்கள் அவளை சூழ்ந்து கொண்டனர் சகுந்தலா அவர்களிடம் “சொல்லிக் கொடுத்து அனுப்புங்க” என்று கூறிவிட்டு சென்றார்.
“நா
ங்க பார்த்துக்குறோம் அத்தை” என்றனர் அவர்கள் சகுந்தலாவிடம் சிரித்து கொண்டே.
அத்தியாயம் 8
சகுந்தலா தலை மறையும் வரை அமைதியாக இருந்த அந்த பெண்கள் அவர் அங்கிருந்து சென்றவுடன் “ஏன் டி அஞ்சலி உனக்கு எதுவுமே தெரியாதா” என்று கேட்க “அம்மா ஏதோ சடங்கு சொன்னாங்களே அதுவா” என்று அவள் கேட்க அனைவரும் அவளை பார்த்தா சிரித்து வைக்க “ஆமாம் சடங்கு தான் ஆனா நீயும் உன் புருசனும் விடிய விடிய இன்னைக்கு முழிச்சு இருக்கனும்” என்றாள்.
அஞ்சலி படு சிரீயசாக முகத்தை வைத்து கொண்டு “உண்மையாவா” என்று கேட்க “ஆமாம்” என்றனர் சிரிக்காமல் “தூங்காம என்ன பண்ணனும்” என்று கேட்க சத்தமாக சிரித்தனர் அங்கிருந்த அனைவரும் “ஒன்னும் இல்லை டி கண்ணாமூச்சு விளையாடனும் அவ்வளவு தான்” என்று கூற “ஓ” என்றாள் “சரி சரி நேரமாச்சு நீ கிளம்பு” என்று அவள் கையில் பாலை கொடுத்து அனுப்பி அறையின் உள்ளே தள்ளி விட அவர்கள் தள்ளி விட்ட வேகத்தில் அவளின் கையில் இருந்த சொம்பில் இருந்த பால் தரையில் சிந்த அவள் தடுமாறி கீழே விழ போக ராயன் வந்து அவளை பிடித்து கொண்டான்.
“என்னாச்சு உனக்கு” என்று கேட்க “அது அம்சா அக்கா இருக்காங்கல்ல அவங்க என்னை… என்னைய…புடிச்சு தள்ளி விட்டுட்டாங்க” என்றாள் அப்பாவியாக.
“சரி சரி வா” என்று கதவடைத்துவிட்டு வந்தவன் படுக்கையில் அமர்ந்தான் அஞ்சலி அப்படியே நிற்க “வா வந்து உட்காரு” என்றான் அவள் கணவன் அந்த அறையே அலங்காரம் செய்யப்பட்டு இருக்க படுக்கை முழுக்க பூவாக இருந்தது அறையே மல்லிகையின் மணம் வீசிக் கொண்டிருந்தது மேசை மீது பால் சொம்பை வைத்தவள் அவன் அருகில் வந்து அமர்ந்தாள் “இன்னைக்கு என்ன நாளுன்னு தெரியுமா” என்று ராயன் கேட்க “ம்ம் தெரியும் முதல் ராத்திரி” என்று அவள் கூற அவனுக்கே பேரதிர்ச்சியாக இருந்தது.
“உனக்கு எப்படி இதெல்லாம் தெரியும்” என்று அவன் கேட்க “அதுவா எல்லா நாடகத்துலையும் வருமே நானும் அத்தையும் பார்ப்போம்” என்றாள் “ஓஹோ அப்போ முதல் இரவுல என்ன பண்ணுவாங்கன்னு தெரியுமா” என்று கேட்டான் ராயன் “ஓ தெரியுமே முதல்ல பால் குடிப்பாங்க அப்புறம் பேசுவாங்க காலையில எழுந்து குளிச்சிட்டு வருவாங்க அப்புறம் எல்லாரும் அவங்களை கிண்டல் பண்ணுவாங்க உங்களுக்கு இது கூட தெரியாதா” என்று கேட்டாள் அஞ்சலி.
ராயன் சில நொடிகள் அவளை அமைதியாக பார்த்து கொண்டே இருந்தான் அவள் பதிலை கேட்டவுடனே அவன் முகம் மாறியது “அஞ்சலி…” என்று மெதுவாக அழைத்தான் “ம்ம்…” என்றாள் அவளும் பதிலுக்கு “நான் உன்கிட்ட ஒரு விஷயம் சொல்லணும்” என்க “சொல்லுங்க மாமா” என்றாள்.
அவன் எழுந்து நின்று ஆழமாக மூச்சை இழுத்து வெளியே விட்டவன் “நான்… நான் உன்னை பிடிச்சு போய் இந்த கல்யாணத்தை பண்ணல என் அம்மாவோட ஆசைக்காகத்தான் இந்த கல்யாணத்துக்கு சம்மதிச்சேன்” என்றான் அவன் கூறிய வார்த்தையை கேட்டவுடன் அஞ்சலியின் சிரிப்பு மெதுவாக மறைந்தது.
“அப்படின்னா… உங்களுக்கு என்னை பிடிக்காதா மாமா அதனால தான் என்னை திட்டிட்டே இருந்திங்களா மாமா” என்று தயக்கத்துடன் கேட்டாள்.
“அப்படி இல்லை… பிடிக்கலைன்னும் சொல்ல முடியாது ஆனா காதல்னு சொல்லுற அளவுக்கு இல்லை.. இன்னும் அந்த உணர்வு எனக்கு வரலை எனக்குன்னு வர போற மனைவி எப்படியெல்லாம் இருக்குனும்ன்னு நான் ஒரு கனவு கண்டு வச்சிருந்தேன் ஆனா எனக்கு குழந்தையே மனைவியா வருவான்னு நினைச்சு கூட பார்க்கல” என்றவன் சில நொடிகள் அமைதியாக அவளை பார்த்தான் அவள் கையில் புடவையை முந்தானையை சுற்றி விளையாடி கொண்டு இருந்தாள்.
ராயனே மீண்டும் பேச ஆரம்பித்தான்
“அஞ்சலி நான் சொல்ல வர்றது உனக்கு புரியுமான்னு கூட எனக்கு தெரியலை உனக்கும் எனக்கும் ஒரு பத்து வயசு வித்தியாசம் இருக்கு நீ இன்னும் சின்ன பொண்ணு மாதிரி இருக்க நடந்துக்குற,
இந்தக் கல்யாணத்தை பத்தி உனக்கு புரியுற வயசும் இது இல்லை அது புரிஞ்சிக்குற பக்குவமும் உன் கிட்ட சுத்தமா இல்லை
கொஞ்ச நாள் கழிச்சு நாம ரெண்டு பேரும் விவாகரத்து வாங்கிக்கலாம் அதுக்கப்புறம் உனக்கு நல்ல பையனா பார்த்து நானே கல்யாணம் பண்ணி வைக்கிறேன் உன் வாழ்க்கை நல்லா இருக்கனும்… அதுதான் எனக்கு முக்கியம்” என்று அவன் கூறி முடிக்க.
அஞ்சலிக்கு அவன் பேசியது எதுவும் விளங்கவில்லை விவாகரத்து என்ற வார்த்தை மட்டும் மனதில் ஓடிக் கொண்டிருந்தது “விவாகரத்துன்னா இந்த புருசன் பொண்டாட்டி பிரிஞ்சு போவாங்களே அதுவா மாமா” என்று அவள் கேட்க “ஆமாம்” என்றான் ராயன்
உடனே அஞ்சலியின் கண்கள் கலங்கியது
“நான் உங்களை விட்டு போக மாட்டேன் மாமா” என்றாள் தேம்பி கொண்டே”இப்போ எதுக்கு அழற நான் உன் நல்லதுக்கு தான் சொல்றேன்” என்றான் ராயன்.
“இல்லை நீங்க தான் என் புருசன் நீங்க தான் இதை கட்டுனிங்க” என்று அவள் தாலியை எடுத்துக் காட்ட “பார்த்தியா நீ இப்போ கூட சின்னப்பிள்ளைன்னு நிருபிக்குற சொன்னா புரிஞ்சிக்கோ அஞ்சலி என் கூட வாழுற அளவுக்கு பக்குவம் இல்லை பத்து வயசு குழந்தை கூட உன்னை விட தெளிவா இருக்கும் எனக்கு வர போனவள் தெளிவா இருப்ப படிச்சு இருப்பா இந்த குடும்பத்தை வழிநடத்துவான்னு நினைச்சேன் ஆன உன்னை பார்த்துக்கவே இங்க ரெண்டு பேரு வேணும் அதுமட்டும் இல்லை” என்றவன் ஒரு கணம் அமைதியாக இருந்தான் சற்று தயங்கவும் செய்தான் “உனக்கு செக்ஸ்ல ஏ பி சி டி கூட தெரியலை முதல்ல உனக்கு ஆண் பெண் இணக்கம்ன்னா என்னன்னு தெரியுமான்னு கூட எனக்கு தெரியலை
இன்னொரு விஷயம் நீங்க எல்லாம் நினைக்குற மாதிரி நான் நல்லவன் இல்லை என் வாழ்க்கையில ஒருத்தி இருந்தா ஆனா அவள் இப்போ இல்லை அவளோட நினைவுகள்ல இருந்து நான் வெளிய வர முடியாம தவிச்சிட்டு இருக்கேன் என் அம்மா தான் என்னை வற்புறுத்தி கல்யாணத்துக்கு சம்மதிக்க வச்சாங்க” என்று கூற.
பெண்ணவளோ அழுவதை நிறுத்தவேயில்லை தேம்பி தேம்பி அழுக ஆரம்பித்தாள் அவளே அறியாமல் அஞ்சலி அவனை காதலிக்க ஆரம்பித்து இருந்தாள் ஆனால் அதை அவள் இன்னும் உணரவில்லை ஏனோ குழந்தை குமரியாக இருந்தாலும் அவனின் வார்த்தைகள் அவளுக்கு வலிக்க தான் செய்தது “நான் இன்னொரு கல்யாணம் பண்ணிக்கிற ஐடியாவுலையும் இல்லை அஞ்சலி, அது மட்டும் இல்லை நீ இன்னமும் என் கண்ணுக்கு என்னோட குட்டி அஞ்சலியா தான் தெரியுற அதே பத்து வயசு அஞ்சலியா உன்னை ஏத்துக்குற அளவுக்கு மனசும் எனக்கு இல்லை சோ நாம ரெண்டு பேரும் சேர்ந்து வாழுற மாதிரி இப்போதைக்கு நடிப்போம் ஏன்னா என் அம்மாவுக்கு ஏற்கனவே ஒரு தடவை ஹார்ட் அட்டாக் வந்துருக்கு பாவம் அவங்க சிங்கில் மதர்ரா எங்க ரெண்டு பேருக்காக நிறைய கஷ்டப்பட்டு இருக்காங்க என் பிரண்ட் ஒருத்தவங்க லாயரா இருக்காங்க அவங்க கிட்ட நான் பேசுறேன் அடுத்து என்ன பண்ணலாம்ன்னு சாரி அஞ்சலி” என்றவன் அவள் பதிலை கூட கேட்க்காமல் சென்று படுத்தான்.
அஞ்சலி தான் எதற்க்காக அழுகிறோம் என்று கூட தெரியாமல் அழுது கொண்டே வந்து அவன் பக்கத்தில் படுத்தாள் அன்றைய இரவு அவளுக்கும் அவள் கணவனுக்கும் தூங்கா இரவாகி போனது விடியும் தருவாயில் இருவரும் உறங்க ஆரம்பித்தனர்.
மறுநாள் காலை செல்வி வந்து கதவை தட்ட அந்த சத்தத்தில் இருவரும் கண் விழித்தனர்
“இதோ வரேன் அத்தை” என்று அஞ்சலி குரல் கொடுத்து கொண்டே கதவை திறக்க போக ராயன் அவளின் கையை பிடித்தான் “அம்மா இதோ வரோம் மா” என்றான் ராயன்.
“இப்படியே எங்க போற” என்றான் ராயன் கோபத்துடனே “அத்தை கூப்பிடுறாங்க மா…மா..” என்றாள் திணறலாக “உனக்கு கொஞ்சமாவது அறிவு இருக்கா நீ இப்படி வெளிய போன எல்லாரும் என்ன நினைப்பாங்க” என்றவன் அவளை ஒரு முறை பார்த்தான் புடவையின் மடிப்பு கூட கலையாமல் தலையில் வைத்து பூ கூட வாடவில்லை “முதல்ல உன் புடவை முந்தானையில இருக்க பின்ன கழட்டு” என்றான் அவளும் ஒரு நொடி கூட யோசிக்காமல் கழட்டி விட அடுத்த கணம் முந்தானை சரிந்து விழ ஒரே ஒரு நொடியேனும் அவன் பார்வை முன்னெழிலில் பதிந்து மீண்டது.
‘ஆள் தான் சிறுசா இருக்கா’ என்று நினைத்தவன் திரும்பி நின்று கொண்டான் “முந்தானையை எடுத்து மேல போடு” என்றான்
அவளும் உடனே போட்டு கொள்ள இப்போது மீண்டும் திரும்பியவன் “உன் நெத்தியில இருக்க குங்குமத்தை கலைச்சி விடு” என்றான் அவளோ புரியாமல் திருதிருவென விழிக்க
அவளின் குங்குமத்தை அவனே கலைத்தான் தலையில் இருந்த பூவை கழட்டி கசக்கி படுக்கையில் வீசி எறிந்தான் புதிதாக கட்டிய புடவை முந்தானையை சரி செய்ய தெரியாமல் அவள் தடுமாறி நின்றாள் “மாமா இது கழலுது சரி பண்ணி விடுங்க” என்றாள்.
“வெளிய போ அம்மா சரி பண்ணி விடுவாங்க” என்றான் அவளும் முந்தானையை பிடித்து கொண்டே வெளியே வந்து “அத்தை மாமா தான் புடவையை கழட்ட சொன்னாரு இப்போ சரி பண்ணி விட சொன்னா மாட்டேங்குறாரு” என்று கொஞ்சலாக “அடிப்பாவி” என்று நினைத்தார் செல்வி “சரி நீ போய் முதல்ல குளி” என்று அனுப்பி வைத்தார் அவளும் குளிக்க சென்றாள் அவள் பின்னே ராயன் வெளியே வர “நல்லபடியாக அனைத்தும் முடிந்து விட்டது” என்று அவரும் நினைத்து கொண்டார்.
அதன் பின் அஞ்சலி குளித்து முடித்தவள் அவள் தாய் கொடுத்த காட்டன் சுடிதாரை அணிந்து வெளியே வந்தாள் அவள் வந்த பின் ராயனும் குளிக்க சென்றாள் அங்கே கழட்டி எறிந்த ஆடைகள் சிதறி கிடக்க “ஏய் அஞ்சலி” என்று கத்தினான் அவளும் அவன் கத்தியதில் என்னவோ ஏதோ என்று பதறி அடித்து கொண்டு ஓடி வந்தாள்.
குளியலறையின் உள்ளே வந்தவள் கால் வழுக்கி விழ போக ராயன் அவளை பிடித்து கொண்டான் “நீ என்னைக்கு தான் டி தரையை பார்த்து நடப்பு” என்று கேட்க “அய்யய்யோ சாரி மாமா” என்றாள் சிரித்து கொண்டே “ஒழுங்கா உன் டிரஸ்சையெல்லாம் எடுத்து வச்சிட்டு போ நான் குளிக்கனும்” என்று கூறியவன் அதே இடத்தில் அவனும் கால் வைத்துவிட நிலை தடுமாறி இருவரும் தடுக்கி கீழே விழுந்தனர் ராயன் கீழே இருக்க அவன் மேல் பெண்ணவள் விழுந்து கிடந்தாள்
அவள் விழுந்த வேகத்தில் இருவரின் மேனியும் உரசிக் கொள்ள மேலே கிடந்தவளின் சுடிதாரின் கழுத்து பகுதியின் இறக்கம் சற்று அதிகப்படியாக இருக்க அவன் பார்வை தடுமாறியது ஒரு கணம் பின் சுதாரித்து கொண்டு “ஏய் எழுந்துரு ” என்று அவன் கத்திக் கொண்டே எழுந்து கொண்டான்.
அவள் துப்பட்டா போடாமல் சுற்றி கொண்டு இருக்க “எங்க உன் துப்பட்டா” என்று அவன் கேட்க “உள்ள இருக்கு மாமா” என்று அவள் கூற “போய் ஒழுங்கா துப்பட்டா போட்டுட்டு வா எல்லாரும் இருக்காங்கல்ல” என்று விரட்டிவிட்டான் அவளும் “சாரி மாமா” என்று கூறிவி
ட்டு அங்கிருந்து சென்றாள்.