உயிரின் உவமை நீ 23
அத்தியாயம் 23 ராயன் அவளை பார்த்து சிரித்தேவிட்டான் அவன் சிரிப்பதை பார்த்தவளுக்கு கோபம் வர சிறு குழந்தையை போல் திரும்பி நின்றாள் “இன்னுமா டி நான் கோபமா இருக்கேன்னு நினைக்குற” என்று கேட்க அழுகையுடன் பெண்ணவள் திரும்பியவள் “மாமா அப்போ என் மேல உங்களுக்கு கோபம் இல்லையா” என்று அவள் கேட்க “இருந்துச்சு நீ என்னை விட்டு போகும் போது ஆனா நான் உன்னை பார்த்த பிறகு என் கோபம் எல்லாம் காத்துல கரைஞ்சு போச்சு உன் மேல இருக்க காதல் மட்டும் தான் மிச்சம் திரும்பவும் நம்ம வாழ்க்கையை முதல்ல இருந்து வாழ ஆரம்பிக்கலாமா டி” என்று கேட்க பெண்ணவள் அவனை இறுக அணைத்து கொண்டாள் அன்றைய இரவு வரவேற்பு முடிந்து அனைவரும் வேனில் வர ராயன் காதலுடன் மனையாளை பார்க்க அவளும் அவனுக்கே நேர் எதிரே அமர்ந்து அவனை சைட் அடித்து கொண்டே வர அனைவரும் ஊர் வந்து…