உயிரின் உவமை நீ 22

அத்தியாயம் 22

 

அருள் பதட்டத்துடன் வீட்டின் உள்ளே வந்தவன்

“அண்ணா அஞ்சலி இந்த ஊரை விட்டே போறா” என்று ராயனிடம் கூற “போனா போகட்டும் டா விடு கட்டாயப்படுத்தி யாரையும் நம்ப கூட இருக்க வைக்க முடியாது” என்றான்‌ ராயன் அருளால் அவனிடம் அதன் பிறகு எதுவும் சொல்லவும் கேட்க்கவும் அருளால் முடியவில்லை தன் அண்ணனின் நிலையை நினைத்து மனம் வருந்தியவன் அங்கிருந்து கிளம்பி சென்றான்.

 

அவன் தாயும் மகனை நினத்து கண்ணீர் விட்டவர் அங்கிருந்த சாமி படத்தின் முன்னே நின்று அழ ஆரம்பித்தார் “நான் உனக்கு என்னை குறை வச்சேன் என் மகன் எவ்வளவு நல்லவன் அவனுக்கு தான் இப்படி எல்லாம் நடக்கனுமா” என்று அழுக ராயன் இடிந்து போய் அமர்ந்து இருந்தான்.

 

அஞ்சலியின் தாய் சகுந்தலா அவளை தன் தாய் வீட்டில் விட்டுவிட்டு தன் வீட்டிற்க்கு வந்தார் நாட்கள் அதன் போக்கில் நகர்ந்தன ராயன் முன்பாவது வீட்டிற்க்கு வருவான் அவ்வப்போது அனைவரிடமும் பேசுவான் இப்போது எல்லாம் வீட்டிற்க்கு வருவதையே நிறுத்தி இருந்தான் கடையிலேயே படுத்து உறங்க ஆரம்பித்தான் உண்மையை சொல்ல வேண்டுமானால் அவனுக்கு வீட்டுக்கு வரவே பிடிக்கவில்லை எதிர் வீட்டை பார்க்கும் போது எல்லாம் அழகு மனையாளின் நினைவு வந்தது அதனுடன் சேர்ந்து அவள் மீது அதிகப்படியான கோபமும் வந்தது காரணமே இல்லாமல் அவளை வெறுக்க அவன் மனம் ஒப்பவில்லை அதனாலேயே பெரும்பாலும் அவன் வீட்டுக்கு வருவதையே தவிர்த்தான்.

 

அன்று ஒரு திருமணத்துக்காக அவன் வேன் ஓட்ட சென்றான் பக்கத்து ஊரில் திருமணம் இன்று இரவு வரவேற்பு நிகழ்ச்சி காலை திருமணம் என்று இருந்தது திருமணம் நடக்கும் வீட்டின் வாசலில் வேனை நிறுத்திய ராயன் விருந்தினரை ஏற்றி செல்ல தயாராக வேனை நிறுத்திவிட்டு வெளியே வந்து ஒரு மூலையில் நின்றிருந்தான் ஒவ்வொருவராக வேனில் ஏற அவர்களில் ஒருத்தியாக அஞ்சலியும் தன் பாட்டியுடன் வந்தாள் ராயன் அவளை பார்க்கவில்லை ஆனால் அஞ்சலி அவனை பார்த்தாள் மீசை தாடி மழிக்காமல் முன்பு இருந்த கலை இன்றி கையில் போனுடன் நின்றிருந்தான்.

 

அஞ்சலி அவனை ஏக்கம் சுமந்த விழிகளுடன் பார்த்தவள் அவனிடம் சென்று பேசவில்லை அவனை பார்த்து கொண்டே வேனில் ஏற 

“அஞ்சலி ஏறு” என்று அவள் பாட்டி கூற அஞ்சலி என்ற குரலில் ராயன் ஆர்வத்துடன் நிமிர்ந்து பார்க்க அஞ்சலி வேனில் ஏறுவதை பார்த்தவனின் முகம் உடனே மலர்ந்தது ஆனால் மறுகணமே அவள் மீது கோபம் தான் வந்தது.

 

‘என்னை தனியா தவிக்க விட்டுட்டு போனவளை பத்தி நான் ஏன் நினைக்கனும்” என்று நினைத்தவன் கோபத்துடனே வேனில் ஏறி வந்து டிரைவர் சீட்டில் அமர்ந்தான் அஞ்சலி வேறொரு இருக்கையில் அமர்ந்து இருந்தவள் அவனை பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தில் “பாட்டி அங்க உட்கார்ந்துக்குறேன்” என்று கூறிவிட்டு அவள் ராயனின் நேர் எதிரே இருந்த இருக்கையில் அமர்ந்தவள் அவனை ஏக்கம் சுமந்த விழிகளுடன் பார்த்தவள் அவன் அவளை பார்க்கும் போது எங்கோ பார்ப்பதை போல முகத்தை திருப்பி கொண்டாள்.

 

ராயன் அவளை கண்களால் எரித்து விடுவதை போல பார்க்க அஞ்சலியின் கண்கள் கலங்க ஆரம்பித்தது அஞ்சலியின் அருகில் அவள் தோழி வந்து அமர்ந்தவள் “என்ன டி அந்த டிரைவரேயே பார்த்துட்டு இருக்க அஞ்சலி” என்று கேட்க அவள் ஒன்னுமில்லை என்று தலையை ஆட்டியவள் சாதாரணமாக இருப்பதை போல தன்னை காட்டிக் கொண்டாள்.

 

வேனில் அனைவரும் அமர வேன் அங்கிருந்து மண்டபம் நோக்கி கிளம்பியது ராயன் தன் கருமமே கண்ணாக வேனை ஓட்டிச் செல்ல பெண்ணவள் அவனை பார்த்து கொண்டே வந்தாள் அவளின் கண்கள் கலங்க “என்ன டி அழற” என்று அவளின் தோழி கேட்க ராயனின் காதுகளுக்கும் அனைத்தும் கேட்டது “ஒன்னுமில்லை டி காத்து காத்துல தூசி வந்துருச்சு” என்றாள் ராயனை தன் கண்ணால் பார்த்து கொண்டே.

 

வேன் மண்டபத்தை வந்து அடைய அனைவரும் இறங்க ஆரம்பித்தனர் அஞ்சலியின் பாட்டி வேனில் இருந்து “அஞ்சலி வா டி” என்று அழைக்க “பாட்டி நீங்க முன்னாடி போங்க நான் பாத்ரூம் போய்ட்டு வரேன்” என்றாள் “வா நானும் வரேன்” என்றார் அவர் பதிலுக்கு “இல்லை பாட்டி இங்க தான நான் போய்ட்டு வரேன் நீங்க போங்க” என்று கூற அவரும் பக்கத்தில் இருந்த கழிவறையை பார்த்தவர் “சீக்கிரமா வா டி” என்று கூறிவிட்டு அங்கிருந்து கிளம்பினார்.

 

அவள் எப்போது செல்வார் என்று காத்திருந்தவள் அவள் பாட்டி அங்கிருந்து சென்றவுடன் மண்டபத்தில் இருந்து வெளியே ஓடி வந்தாள் அங்கே ராயன் வேனை நிறுத்திவிட்டு ஒரு மூலையில் நின்றிருக்க 

“மாமா மாமா” என்று அவள் அழைக்க அவள் பேசியதை காதில் கூட வாங்காமல் அவன் அப்படியே நின்றிருக்க “மாமா என் கிட்ட பேச மாட்டிங்களா” என்று கேட்டவள் அழுக ஆரம்பிக்க “யாரு மா நீ என் கிட்ட வந்து எதுக்கு அழுதுட்டு இருக்க யாராவது பார்த்தா என்னை தான் தப்பா நினைப்பாங்க” என்று அவன் கூற 

“மாமா என் நியாபகம் கூட உங்களுக்கு வரலையா” என்று பெண்ணவள் கண்ணீர் விட 

ராமனுக்கு கோபம் வந்தது அவளை பார்த்து முறைத்து வைக்க அஞ்சலி அப்பாவியாக அழுது கொண்டே இருக்க அங்கே வந்தவர்கள் அனைவரும்‌ அவர்களை பார்த்து கொண்டே செல்ல ராயன் அவளின் கைப்பிடித்து இழுத்து சென்றவன் இரண்டு வேன்களுக்கு இடையே இருந்த சந்தில் இழுத்து சென்றான்.

 

அங்கே முழுதாக இருட்டாக ஆள் நடமாட்டம் அற்று இருக்க “என்ன தான் டி வேணும் உனக்கு உன்னை தேடி வந்தா வேண்டாம்ன்னு ஓடிப்போய் உன் ஆத்தா பின்னாடி ஒளிஞ்சிக்குற இவள் சங்காத்தமே வேண்டாம்ன்னு ஒதுங்கி நின்னா மாமா மாமான்னு வந்து ஒட்டிக்கிற என்ன தான் டி உன் பிரச்சனை” என்று அவன் கேட்க அவளோ ஓவென்றா அழுக ஆரம்பித்தாள் அவளை சமாதானம் செய்யும் வழியறியாமல் ராயன் தவிக்க அவளோ “மாமா சாரி என்னை மன்னிச்சிடுங்க எனக்கு நீங்க மட்டும்‌ தான் வேணும்” என்று கூறிவிட்டு அவனை இறுக அணைத்து கொள்ள அவள் திடீரென்று அணைப்பாள் என்று எதிர்ப்பார்க்காதவன் அதிர்ந்து போய் அப்படியே நின்றிருந்தவனின் கண்களும் லேசாக கலங்கியது.

 

அவனோ அறியாமல் அவளை இறுக அணைத்து இருந்தான் காற்று நுழைய முடியாத அளவுக்கு அவளை இறுக அணைத்தான் அவளின் இடையில் கைக் கொடுத்து தன் உயரத்துக்கு தூக்கியவன் அவளின் இதழில் தன் இதழை பொருத்த பெண்ணவளின் கால்கள் அந்தரத்தில் மிதக்க 

அவளின் கண்கள் அதிர்ச்சியில் விரிந்தது அந்த வேனில் அவளை சாய்த்தவன் முத்தமிட்டு கொண்டே அவளின் இடையில் கை நுழைத்து அழுத்தி பிடிக்க பெண்ணவள் வலியில் “ம்ம்” என்று சிணுங்க அவளால் மூச்சு கூட விட முடியாமல் தவிக்க அவன் மூச்சு காற்றை கொடுத்து அவளை சுவாசிக்க வைத்தான்.

 

அவன் கைகள் அவளின் புடவை உள்ளே இடை மேலே மலை முகட்டை பிடிக்க அவன் வேகத்தில் பெண்ணவள் தடுமாறி அங்கே யாரோ இருவர் பேசிக் கொண்டே அவர்களின் பேச்சு சத்தம் கேட்டு ராயன் அவளிடமிருந்து விலகியவன் அவளை தூக்கி சென்றவன் ஒளிந்து நிற்க அவர்கள் இருவரும் பேசிக் கொண்டே அங்கிருந்து செல்ல “அஞ்சலி நீ மண்டபத்துக்கு போ” என்று ராயன் கூற அஞ்சலி அவன் கையை பிடித்து கொண்டவள் 

“மாமா” என்று அவனை விட்டு பிரிய முடியாது ஏக்கம் சுமந்த விழிகளுடன் நிற்க “நீ போ டி நான் வரேன்” என்று கூறிய பின் தான் அவள் அங்கிருந்து சென்றாள் அவனை திரும்பி திரும்பி பார்த்து கொண்டே அங்கிருந்து சென்றாள்.

 

ராயன்‌ முகத்தில் மெல்லிய புன்னகை மலர்ந்தது அவள் மனதில் இருந்த அத்தனை கோபமும் அவளின் ஒற்றை முத்தத்தில் மறைந்து போனது வசியம் செய்தவனை போல பெண்ணவளின் பின்னே நடந்து செல்ல அஞ்சலி மட்டும் குழப்பத்துடனே நடந்து சென்றாள் மண்டபத்தின் உள்ளே இருவரும் நடந்து செல்ல ராயன் தூரத்தில் இருந்து அவளை பார்க்க ‘மாமா இன்னமும் என் மேல கோபத்துல தான் இருக்காரு போல’ என்று நினைத்தவளின் முகம் வாடியது கோபமாக இருப்பவன் தான் இறுக்கி அணைத்து இதழை கடித்து முத்தமிடுகிறானா பாவம் அந்த குழந்தை குமரிக்கு அந்த அளவுக்கு அறிவு இல்லை இன்னமும் தன் கணவன் கோபத்துடன் தான் இருக்கிறான் என்று நினைத்தாள்.

 

ராயன் நெடிய ஆறு மாதங்களுக்கு பிறகு பெண்ணவளை பார்க்கிறான் இத்தனை நாட்கள் அவன் தான் அவள் கோபமாக இருந்தானா என்று கேட்டாள் நிச்சயமாக அவனுக்கு தெரியவில்லை மனையாளின் காலடியில் சரணாகதி அடைந்திருந்தான் அவள் உடுத்தியிருந்த பிங்க் நிற பட்டு புடவையில் பிரெளன் நிற பெரிய பார்டர் வைத்து அத்தனை அழகாக இருந்தது.

 

அவளின் அப்பாவியான முகம் அவளை இன்னும் இன்னும் அவனை நேசிக்க வைத்தது முகமே வாடி இருந்தது கண்களின் கீழே கருவளையம் இருக்க ‘இவள் நைட் தூங்குறாளா இல்லையா’ என்று நினைத்தான் நன்றாக கொழு கொழுவென்று இருப்பவள் காய்ந்த கருவாடை போல இருந்தாள் அவளும் தன்னை நினைத்து வருந்தி கலங்கியிருக்கிறாள் என்பது அவனுக்கு புரிந்தது அவளை தானும் காயப்படுத்தி விட்டோமோ என்று வருத்தமடைந்தான்.

 

அனைவரும் சாப்பிட செல்ல பெண்ணவள் அவர்களில் ஒருத்தியாக நடந்து ராயன் அவளின் கைப்பிடித்து இழுத்தான் யாருமற்ற இடத்திற்க்கு அவள் இழுத்து செல்ல இதை தூரத்தில் இருந்து பார்த்த அவளின் அண்ணன் முறை உள்ள ஒருவன் அவர்கள் பின்னேயே 

“யாரு டா நீ எங்க ஊரு பிள்ளையை கைப்பிடிச்சு இழுத்துட்டு போற” என்று கேட்க 

அடுத்த நொடி ராயன் பெண்ணவளின் இதழில் முத்தமிட்டவன் அவனை நிமிர்ந்து பார்த்தவன் 

“அவள் கழுத்துல தாலி கட்டுனவன் அவளோட புருசன் உனக்கு எதாவது பிரச்சனையா” என்று கேட்க அதன் பின் அவன் எதுவும் கேட்க்காமல் அங்கிருந்து சென்றான்.

 

அஞ்சலி அவனை பார்த்தவள் அவளின் கண்கள் கலங்க ஆரம்பித்தது “மாமா நீங்க இன்னமும் என் மேல கோவமா தான் இருக்கிங்களா” என்று கேட்க அவளின் கண்கள் கலங்கி

விட்டால் அழுது விடுவேன் என்பதை போல் இருந்தது.

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *