உயிரின் உவமை நீ 21
அத்தியாயம் 21 அஞ்சலி அங்கேயே கண்ணீருடன் நின்றுகொண்டிருந்தாள் ஒருபுறம் ராயனின் ஏக்கம் சுமந்த பார்வை… மறுபுறம் தன் தாயின் இறுக்கமான பிடி….சில நொடிகள் அவளால் எந்த முடிவும் எடுக்க முடியவில்லை “அஞ்சலி…” என்று ராயன் மீண்டும் அவளை அழைத்தான் அவனது குரலில் இருந்த வலி அப்பட்டமாக தெரிந்தது “நான் பண்ணினது தப்பு தான் டி என்னோட கடந்த காலத்தை உன் கிட்ட சொல்லியிருக்கனும்,” என்று கூறிவிட்டு பேச்சை இடை நிறுத்தியவன் மனம் கலங்கி “இனி நீ தான்னு நான் உனக்காக என் வாழ்க்கையை மாத்திக்கிட்டேன் டி இனி எந்த ஒரு சின்ன விஷயத்தையும் உன் கிட்ட இருந்து மறைக்க மாட்டேன் பிளீஸ் டி என்ன விட்டு போய்டாத சத்தியமா இல்லாத ஒரு வாழ்க்கையை என்னால நினைச்சு கூட பார்க்க முடியலை” என்று அவன் மனம் கலங்க பேச அவளது மனதை இன்னும் அதிகமாக வலித்ததுஅவள் மெதுவாக அவனை ஏறிட்டு பார்த்தாள். “மாமா…”…