உயிரின் உவமை நீ 20
அத்தியாயம் 20
அதே நேரம் எதிர் வீட்டிலும் இதே நிலைதான் நீடித்தது அஞ்சலி தன் அறைக்குள் சென்று கதவை மூடிக்கொண்டு கதறிக் கதறி அழுது கொண்டிருந்தாள் இத்தனை நாள் தன்னிடம் ராயன் காட்டிய அன்பு மொத்தமும் பொய்யா என்ற எண்ணமே அவள் மனதை சிதைத்துக் கொண்டிருந்தது அவர்களின் இனிமையான நாட்களை நினைத்து வருந்தி அழுது கொண்டே இருந்தாள்.
அவளது தாய், மகள் அழுவதைப் பார்த்து அழுவதா… இல்லை, இனி தன் மகளுக்கு என்ன செய்வது என்று யோசிப்பதா என்று தெரியாமல் தவித்துக் கொண்டிருந்தார்.
ஒரே தெருவில் எதிரெதிர் வீடுகளில் இருந்தாலும்… அன்று முதல் முறையாக ராயனும் அஞ்சலியும் ஒருவருக்கொருவர் வெகு தொலைவில் இருப்பது போல உணர்ந்தனர்.
ஒரு பக்கம் ஏமாற்றப்பட்ட வலி…
மறுபக்கம் இத்தனை நாள் மறைத்து வைத்திருந்த உண்மை வெளியே வந்த வேதனை இரண்டு வீடுகளிலும் அந்த இரவு தூங்கா இரவாகிப் போனது அழுகையைத் தவிர வேறு எந்த சத்தமும் கேட்கவில்லை. அந்த இரவு இரு வீடுகளின் கதவுகளும் மூடப்பட்டே இருந்தன ஒருவர் கூட வெளியே வரவில்லை மறுநாள் காலை, யாரைப் பற்றியும் கவலைப்படாமல் மெல்லப் பொழுதும் புலர்ந்தது.
அருளுக்கு வேலை இருந்ததால், காலையிலேயே அவன் கிளம்பத் தயாரானான் ராயன் அதே சோஃபாவில் அமர்ந்திருப்பதைப் பார்த்தவன், அவன் தோளில் கை வைத்து
“அண்ணா… வருத்தப்படாத எல்லாம் சரியாகிடும்” என்று ஆறுதலாகக் கூறிவிட்டு அங்கிருந்து கிளம்பினான் தன் அண்ணனைப் பார்க்கவே அவனுக்குப் பாவமாக இருந்தது.
அருள் அங்கிருந்து கிளம்பியதும், ராயனுக்கு என்ன தோன்றியதோ தெரியவில்லை… ஒரு முடிவுடன் எழுந்து நின்றவன் நேராக எதிர் வீட்டை நோக்கி நடந்தான் அஞ்சலியின் வீட்டிற்குள் சென்றபோது, அவளது தாய் பின்புறத்தில் இருந்த மாடுகளுக்குத் தண்ணீர் வைத்துக் கொண்டிருந்தார் அவளது தந்தையும் ஏதோ வேலையாக வெளியே சென்றிருந்தார்.
அஞ்சலி மட்டும் வீட்டில் இருந்தாள்
இரவெல்லாம் அழுது கொண்டே இருந்ததால், அப்படியே தூங்கி இருந்தாள் காலை எழுந்ததும் முகத்தைக் கழுவிவிட்டு வந்து, தன் அறை கட்டிலில் அமைதியாக அமர்ந்திருந்தாள்
கண்கள் முழுவதும் அழுததன் தடம்
மனம் முழுவதும் ராயனின் நினைவுகள் அவளுக்கு எதிரே இருந்த ஜன்னல் வழியாக ராயனின் வீடு தெரிந்தது.
அந்த வீட்டைப் பார்த்ததும், அவளது கண்களில் மீண்டும் கண்ணீர் தேங்கியது
‘என்னை இவ்வளவு நாள் ஏமாத்திட்டு இருந்திங்களா மாமா’ என்று நினைத்தவளின் கண்களில் கண்ணீர் பெருகியது
முகத்தை இரு கைகளாலும் மூடிக்கொண்டு மீண்டும் அழத் தொடங்கினாள்.
அதே நேரத்தில்அவளது அறைக் கதவை வேகமாகத் திறந்து கொண்டு ராயன் வந்தான்
அந்த சத்தம் கேட்டு அஞ்சலி நிமிர்ந்து பார்க்க…
கதவின் அருகில் ராயன் நின்று கொண்டிருந்தார் அவனைப் பார்த்ததும் அஞ்சலி அதிர்ச்சியடைந்தாள்.
அஞ்சலி பதட்டத்துடன் கட்டிலில் இருந்து இறங்கி நின்றாள் “மாமா நீங்க எதுக்கு இங்க வந்திங்க உங்களை எனக்கு பிடிக்கலை போங்க” என்றாள் கண்ணீருடனே ராயனக்கு வந்ததே கோபம் அவள் அருகில் வேக வேகமாக நடந்து வந்தவன் அவளை சுவரோடு சுவராக சாய்த்தவன் “எதுக்கு டி என்னைப் பிடிக்கலை சொல்லு டி… வாயைத் திறந்து சொல்லு இத்தனை நாள் என் கூட இருந்தியே… நான் உன் கிட்ட நடிச்ச மாதிரி உனக்கு எப்பவாவது தோணுச்சா சொல்லு டி”
என்று ஆவேசமாகக் கேட்டான்
அவளோ கண்ணீருடன் தலை குனிந்து நின்றாள்.
“என்ன பாரு டி…”
என்று கூறியவன், அவளது கன்னத்தை மெதுவாகப் பிடித்து முகத்தை நிமிர்த்தினான்
அவளும் அவனைப் பார்த்தாள்
ராயனின் கண்களில் இருந்த வலியைப் பார்த்ததும், அவளால் அவன் பார்வையைத் தாங்க முடியவில்லை.
அவள் இடம் வலமாகத் தலையை அசைத்து,
“இல்லை…”
என்பதைப் போலக் கூறினாள்
அதைக் கேட்டதும் ராயனின் குரல் சற்று தனிந்தது “அப்புறம் எப்படி நீ நினைச்ச உன்னை விட நான் அவளை அதிகமா நேசிச்சேன்னு எப்படி நினைச்ச”
சில நொடிகள் அவளைப் பார்த்தவன், வலியுடன் கூறினான்.
“அவள் என்னோட கடந்த காலம்… நீ மட்டும் தான் என் நிகழ்காலம்” அவனது வார்த்தைகள் அஞ்சலியை குழப்பத்தில் ஆழ்த்தின
அவள் அவனைப் புரியாத ஒரு பார்வை பார்த்தாள் அவளது முகத்தில் இருந்த குழப்பத்தைப் பார்த்த ராயன் பெருமூச்சு விட்டான்.
“என்ன நடந்துச்சுன்னு நான் சொல்றேன் டி…”
என்றவன், இத்தனை நாள் யாரிடமும் முழுமையாகச் சொல்லாத அந்த உண்மையை அஞ்சலியிடம் சொல்ல ஆரம்பித்தான்
ராயன் சொல்லச் சொல்ல, நடந்த அனைத்தையும் ஒன்றுவிடாமல் கேட்டுக் கொண்டிருந்தாள் அஞ்சலி.
அவளுடைய மனதில் இருந்த சந்தேகங்கள் கொஞ்சம் கொஞ்சமாக விலக ஆரம்பித்தன
சில நொடிகள் அமைதியாக இருந்தவள், கண்ணீருடனே அவனைப் பார்த்து,
“மாமா… நீங்க உண்மையைத்தான் சொல்றிங்களா” என்று கேட்டாள்.
ராயன் அவளைப் பார்த்தபடியே,
“ஆமாம் டி… என்னைப் பார்த்தா பொய் சொல்ற மாதிரியா தெரியுது” என்று கேட்டான்
அவள் மெதுவாகத் தலையை அசைத்து,
“இல்லை…” என்றாள் அவளது கண்களில் இன்னும் கண்ணீர் இருந்தது.
அந்தக் கண்ணீரில் இப்போது ஏமாற்றம் மட்டும் இல்லை ராயனை இழந்துவிட்டதாக நினைத்திருந்த மனதில்
மீண்டும் ஒரு சிறிய நம்பிக்கை பிறந்திருந்தது இருப்பினும் மனதில் சிறு குழப்பம் அஞ்சலி ராயனையே பார்த்துக் கொண்டிருந்தாள் இத்தனை நேரம் அவன் சொன்ன வார்த்தைகள் அவளது மனதிலேயே ஓடிக் கொண்டிருந்தன அவனை நம்புவதா… இல்லை மீண்டும் தன் மனதை ஏமாற்றிக் கொள்வதா என்று அவளுக்கே புரியவில்லை.
அந்த நேரத்தில்…
“அஞ்சலி” என்று வெளியிலிருந்து அவளது தாய் அந்த அறை கதவைத் தட்டினார் அஞ்சலி திடுக்கிட்டு ராயனைப் பார்த்தாள்.
“அம்மா கூப்பிடுறாங்க…” என்றவள் அவனை விட்டு விலகி கதவை நோக்கி நடந்தாள் மீண்டும் கதவு தட்டப்பட்டது “அஞ்சலி… கதவைத் திறடி” என்று அவர் பதட்டத்துடனே கதவை தட்டினார் காரணம் மகள் வேதனையில் தப்பான முடிவை எடுத்துவிடுவாளோ என்ற பயம் மீண்டும் மீண்டும் கதவு வேக வேகமாக கட்டப்பட அஞ்சலி அவசரமாக கதவைத் திறந்து வெளியே வந்தாள்.
“என்னம்மா” என்று கேட்டாள் அவளின் பின்னே இருந்த ராயனையும் அவர் அப்போது தான் பார்த்தார் அவர் ராயனைப் பார்த்ததும் முகம் கடுகடுவென மாறியது “இவன் எதுக்குடி இங்கே வந்திருக்கான்” என்று கோபமாகக் கேட்டார்.
அஞ்சலி உடனே,“அம்மா… அது…”என்று பேசவே தயங்கினாள் “ஏன் நான் பொண்டாட்டியை பார்க்க வரக்கூடாதா” என்று ராயனும் பதிலுக்கு கோபத்துடன் கேட்க “என்ன டி இதெல்லாம் நான் கேட்கிறது உன் காதுல விழலையா இவன் எதுக்கு உன் ரூம்க்குள்ள வந்தான் நீ இன்னும் திருந்தலையா இன்னுமா அவனை நம்பிக்கிட்டு இருக்க” என்று அவளது தாய் கோபத்துடன் கேட்டார்.
அஞ்சலி நடந்த அனைத்தையும் சொல்ல ஆரம்பித்தாள் “அம்மா… மாமா என்ன நடந்துச்சுன்னு எல்லாமே சொன்னாரு அவர் சொல்றது உண்மைதான் மா அவரு நல்லவரு மா” என்று அவள் சொல்லி முடிப்பதற்குள் அவளது கன்னத்தில் ஒரு அறை விழுந்தது ராயன் அவரை வந்து தடுக்க அவர் சற்று அமைதியானார்.
“என் டி உன்னை ஊரே பைத்தியம்ன்னு சொல்லுது நான் ஒரு நாள் கூட அப்படி சொன்னது இல்லை என்னையும் அப்படி சொல்ல வச்சிடாத அவன் என்ன சொன்னாலும் நம்புவியா ஆம்பளை ஆயிரம் பொய் சொல்லுவான் நீ திரும்பவும் நம்பி ஏமாறனும்ன்னு நினைக்கிறியா” என்று அவர் கேட்க அஞ்சலியின் மனதில் குழப்பம் வந்தது அவள் சந்தேகமாக ராயனை ஒரு பார்வை பார்த்தாள்.
“அவன் வந்து உன்கிட்ட நாலு வார்த்தை நல்லா பேசினா போதும்… உடனே நம்பிடுவியா அவன் என்ன சொன்னாலும் நம்புவியா உன்னை பைத்தியம்ன்னு நினைச்சு அவன் என்ன வேணும்ன்னாலும் சொல்லுவான் அதையெல்லாம் நம்புவியா” என்று கேட்க அந்த வார்த்தைகள் அஞ்சலியின் மனதை வலிக்கச் செய்தது.
“அம்மா… அப்படியெல்லாம் சொல்லாதிங்க. மாமா என்னை ஏமாத்தல…” என்று அவள் கூற “வாயை மூடு டி பைத்தியக்காரி” என்றுஅவள் தாய் கோபமாகக் கூறினார்.
“நேத்து என்ன நடந்துச்சுன்னு மறந்துட்டியா இவ்வளவு அழுதுட்டு இருந்தியே இப்போ அவன் வந்து இரண்டு வார்த்தை சொன்னதும் எல்லாத்தையும் மறந்துட்டியா” என்று கேட்க அஞ்சலியின் கண்கள் கலங்கின.
ராயன் இதுவரை அமைதியாகவே நின்றிருந்தவன், அவளது தாயைப் பார்த்து “அத்தை… நான் அஞ்சலியிடம் பொய் சொல்லல நடந்த உண்மையை மட்டும்தான் சொன்னேன்” என்றான்.
“நீங்க எதுவும் சொல்ல வேண்டாம் என் பொண்ணு வாழ்க்கைல இருந்து நீங்க தள்ளி இருந்தாலே போதும்” என்றார் கோபத்துடனே ராயன் தன் கோபத்தை அடக்கி கொண்டு சில நொடிகள் அமைதியாக இருந்தான் அஞ்சலியைப் பார்த்தவன் “அஞ்சலி… நீ என் வீட்டுக்கு வா” என்றான் அந்த வார்த்தையைக் கேட்டதும் அவளது தாய்க்கு உடனே கோபம் பொங்கி வர “நீ எங்கேயும் போக வேணாம் டி நீ இங்கேயே இரு” என்று கூறினார்.
“அம்மா…” என்று அவள் தவிப்புடனே அவரை அழைக்க “அவன் சொல்றதை நம்பாத அவன் உன்கிட்ட பொய் சொல்றான் நீ நம்ப வீட்டிலேயே இருந்துக்கோ காலம் புறா அம்மா உனக்கு சோறு நீ என்னைக்கு எங்களுக்கு சுமை இல்லை” என்றார்.
அஞ்சலி இருவரையும் மாறி மாறிப் பார்த்தாள் ராயனின் முகத்தில் அவளை அழைத்துச் செல்ல வேண்டும் என்ற தவிப்பு தெரிந்தது அவளது தாயின் முகத்தில் மகளை இழந்துவிடக்கூடாது என்ற பயம் தெரிந்தது.
“இந்த ரெண்டாம் தார வாழ்க்கையெல்லாம் நமக்கு சரி பட்டு வராது அவன் முதல் பொண்டாட்டி வந்து கூப்பிட்டா அவன் போய்ட்டான்னா என்ன பண்ணுவ” என்று கேட்டார் அவள் தாய் அவளின் கையை கெட்டியாக பிடித்து கொண்டு அஞ்சலி அந்தக் கையையேப் பார்த்தாள்.
பிறகு ராயனைப் பார்த்தாள் அவளது மனம் தவிக்க ஆரம்பித்தது ஒருபுறம் தாயின் பாசம்…மறுபுறம் ராயனின் காதல்…யாரை நம்புவது என்று தெரியாமல் அவள் அங்கேயே கண்ணீருடன் நின்றாள்.
ராயனும் அவளைப் பார்த்துக் கொண்டிருந்தான் அவள் தன்னுடன் வருவாளா இல்லை…தாயின் வார்த்தையைக் கேட்டு தன்னை விட்டு விலகிப் போவாளா என்று “அஞ்சலி மா நீ மாமாவை நம்ப மாட்டியா” என்று ஏக்கம் சுமந்த விழிகளுடன் அவளை பார்க்க பெண்ணவளின்
கண்ணில் இருந்து கண்ணீர் வந்தது தாயின் பிடி அவளின் கையை மேலும் இறுக்கியது.
1 comment
Anjali ennadi panna pora