உயிரின் உவமை நீ 15,16
அத்தியாயம் 15
“மாமா யாரோ வந்துட்டாங்க” என்று அவள் அலறி அவனை தன்னிடம் இருந்து விலக்கு பார்க்க அவனும் “ம்ப்ச்ச்” என்று சலித்து கொண்டே அவளிடமிருந்து விலகினான்
“என்ன டி” என்று கேட்க “மாமா அம்மா வந்துட்டாங்கன்னு நினைக்கிறேன் எனக்கு ரெம்ப பயமா இருக்கு அம்மா உங்களை இங்கு பார்த்தா கண்டிப்பா திட்டுவாங்க” என்றாள் பயந்த விழிகளுடன்.
“ஒன்னும் இல்லை டி பயப்படாத நீ போய் கதவை திற நான் பின் பக்கமா வெளியே போறேன்” என்றவன் பின் பக்கமாக செல்ல போனவன் அஞ்சலி அப்படியே சென்று கதவை திறக்க போக ஓடி வந்து அவளின் மேல் இருந்த தாவணி அவன் கைப்பட்டு கசங்கி இருக்க அதை சரி செய்தவன் “இப்போ போய் கதவை திற” என்று கூறிவிட்டு அங்கிருந்து வெளியேறினான்.
அஞ்சலி சென்று கதவை திறக்க அவளின் தாயும் தந்தையும் தான் நின்றிருந்தனர்
“கதவை திறக்க எவ்வளவு நேரம் டி” என்று கேட்க “தூங்கிட்டேன் மா” என்றாள் சமாளிக்கும் விதமாக அதன் பின் அவர்கள் அவளிடம் எதுவுமே கேட்க்கவில்லை அவளுக்கும் அப்போது தான் அப்பாடா என்று இருந்தது தன் அறையின் உள்ளே சென்று கதவடைத்தாள் வெட்கத்துடனே சென்று கதவடைத்தாள்.
அஞ்சலி தானகவே சிரித்தாள் தானகவே வெட்கப்பட்டாள் சாப்பிட மறந்தாள் உறக்கம் துளைத்தாள் தன்னவன் மீது காதல் பித்தில் சுற்றிக் கொண்டு இருந்தாள் தன்னவனை நினைக்கும் முகம் சிவந்துவிட்டது அடுத்த ஒரு வாரமும் அப்படியே அலைந்து கொண்டு இருந்தாள் ஜன்னல் வழியாக தன் கணவன் வரும் போதெல்லாம் எட்டி பார்ப்பாள் அவனும் அவளின் ஒற்றை பார்வைக்காக தான் தவம் கிடப்பான் இந்த பிரிவு கூட ஒரு வித சுகமாக தான் இருந்தது ஒருவர் மற்றவரின் நினைப்பில் சுற்றிக் கொண்டு இருப்பது கூட சுகமான அவஸ்தையாக தான் இருந்தது.
ஆடி திருவிழா ஊரில் ஆரம்பமாக ஊரே கலைக்கட்டியது அன்று இரவு முளைப்பாரி வைத்து அனைவரும் தங்கள் வேண்டுதலை படைக்க சென்று கொண்டு இருந்தனர் ராயன் அப்போது தான் வேலை முடித்து வந்தான்
பெண்ணவள் காஃபி கலர் பட்டு புடவை கட்டி பூச்சூடி வெளியே வர ராயன் அவளை பார்த்தவன் அவளை பார்த்த மாத்திரத்தில் அப்படியே உறைந்து போய் நின்றான்.
அஞ்சலி சாதாரணமாக தான் இருந்தாள் அவன் தான் பித்து பிடித்ததை போல ஆனான் அவள் முளைப்பாரியை தூக்கி அவளின் பின்னேயே அவனும் சென்றான் நடுவில் முளைப்பாரி வைத்து பெண்கள் சுற்றி கும்மியடிக்க ஆரம்பித்தனர்.
பெண்கள் அனைவரும் முளைப்பாரியை சுற்றி நின்று கும்மியடிக்க ஆரம்பித்தனர் கும்மியின் ஓசையோடு அவர்களின் கொலுசு சத்தமும், வளையல் சத்தமும் ஒன்றாக கலந்து அந்த இரவு நேரத்தையே அழகாக்கிக் கொண்டிருந்தது அஞ்சலியும் அவர்களுடன் சேர்ந்து கும்மியடிக்க ஆரம்பித்தாள்
அவள் அணிந்திருந்த காஃபி நிற பட்டுப்புடவை ஒவ்வொரு முறை அவள் சுற்றும் போதும் மெதுவாக அசைந்தது தலையில் சூடியிருந்த மல்லிகைப்பூவின் வாசனை காற்றோடு கலந்து அவனைத் தாக்கியது.
ராயனின் கண்கள் மட்டும் அவளை விட்டு நகரவே இல்லை அவளைப் பார்க்கக்கூடாது என்று மனதுக்குள் எத்தனை முறை சொல்லிக் கொண்டாலும் அவன் விழிகள் அவளையே தேடிக் கொண்டிருந்தன அவளும் அவனை ஒரு முறை பார்த்தாள் அவன் தன்னைப் பார்த்துக் கொண்டிருப்பதை உணர்ந்ததும் அவளின் கன்னங்கள் மெதுவாக சிவந்தன உடனே பார்வையைத் தாழ்த்திக் கொண்டு மற்ற பெண்களுடன் சேர்ந்து கும்மியடிக்க ஆரம்பித்தாள்.
அதை பார்த்த ராயனின் உதட்டில் மெல்லிய புன்னகை மலர்ந்தது “இப்படியே பார்த்துட்டு இருந்தா ஊருக்கே தெரிஞ்சிடும்…”
அவனருகில் நின்ற நண்பன் கிண்டலாக சொல்ல, ராயன் அவனை முறைத்துப் பார்த்தான் “நீ உன் வேலையை மட்டும் பாரு.”
“நான் என்னடா பண்றேன் நீ தான் அந்த பொண்ணையே விழுங்குற மாதிரி பார்த்துட்டு இருக்க அது உன் பொஞ்சாதி தான்” என்று கூற ராயன் பதில் சொல்லாமல் மீண்டும் அஞ்சலியை பார்த்தான்.
அவள் இப்போது அவனைப் பார்க்காமல் இருப்பது போல நடித்துக் கொண்டிருந்தாலும், சில நொடிகளுக்கு ஒருமுறை அவளின் கண்கள் அவனைத் தேடி வந்ததை அவன் கவனிக்காமல் இல்லை இருவருக்கும் இடையில் வார்த்தைகள் எதுவும் இல்லை
ஆனால் அந்த பார்வைகளே ஆயிரம் வார்த்தைகளைப் பேசிக் கொண்டிருந்தன.
சிறிது நேரத்தில் கும்மி முடிந்து பெண்கள் முளைப்பாரியை எடுத்துக் கொண்டு கோவிலை நோக்கி நகர ஆரம்பித்தனர் அஞ்சலியும் முளைப்பாரியை தூக்கிக் கொண்டு கூட்டத்தோடு நடந்தாள் ராயன் மட்டும் கூட்டத்தில் இருந்தபடியே அவளுக்குப் பின்னால் நடந்து கொண்டிருந்தான்.
அவள் நடக்கும் ஒவ்வொரு அடியையும் அவன் பார்வை தொடர்ந்து கொண்டிருந்தது
கோவிலை அடைந்ததும் அனைவரும் முளைப்பாரியை வைத்து விட்டு சாமி தரிசனம் செய்ய ஆரம்பித்தனர் அந்த கூட்டத்தில் அஞ்சலி சற்றுத் தள்ளி தனியாக நின்று கொண்டிருந்தாள் அப்போது ராயன் மெதுவாக அவளருகில் வந்து நின்றான்.
“என்ன மாமா…”அவள் யாருக்கும் கேட்காத அளவுக்கு மெதுவாக கேட்டாள்
“ஒன்னுமில்லை” என்றான்
“அப்புறம் எதுக்கு இங்க வந்தீங்க” என்று அவள் கேட்க “உன்னை பார்க்கத்தான்”அந்த ஒற்றை வார்த்தையில் அவளின் முகம் முழுவதும் வெட்கம் பரவியது.
“எப்ப பார்த்தாலும் என்னையே பார்த்துட்டு இருக்கிங்க…” என்று அவள் கேட்க
“என் பொண்டாட்டி நான் பார்க்குறேன் உனக்கு என்ன டி” என்றான் அவளை பார்த்து சிரித்தபடியே “ஒரு வாரமா உன்னை சரியா பார்க்க முடியல இன்னைக்கு பார்த்ததும் பார்வையை திருப்பவே முடியல” என்றான்
அவள் பதில் சொல்லாமல் தன் புடவையின் முந்தானையை விரல்களால் சுருட்டிக் கொண்டாள்.
“மாமா…” என்றாள் “ம்ம்ம்” என்றான் அவன் பதிலுக்கு அவளை பார்த்து கொண்டே
“இங்க யாராவது பார்த்துடப் போறாங்க மாமா” என்று கூற “பார்த்தா என்னடி” என்று கேட்க
“அம்மாவுக்குத் தெரிஞ்சா…”
அவள் பயந்தபடி சுற்றிப் பார்க்க, ராயன் சிரித்தான்.
“அவங்க பார்க்குறதுக்கு முன்னாடியே நான் போயிடுறேன் நீ வீட்டுக்கு வந்துட்டு உங்க வீட்டு மாடிக்கு வரியா” என்று கூற
அவள் எதுவும் சொல்லாமல் தலை குனிந்தாள் யோசித்து பின் “வரேன் மாமா” என்றாள்
அவன் மெதுவாக அவளருகில் குனிந்து,
“இன்னைக்கு ரொம்ப அழகா இருக்க”
என்று கூறிவிட்டு கூட்டத்திற்குள் சென்று மறைந்தான்.
அவன் சென்ற திசையையே பார்த்துக் கொண்டிருந்த அஞ்சலியின் முகத்தில் மீண்டும் அந்த வெட்கப் புன்னகை மலர்ந்தது
அவளுக்கு அந்த திருவிழா சாமி வேண்டுதலுக்காக மட்டும் இல்லை
தன் மனதில் ஏற்கனவே குடியேறிவிட்ட தன் கணவனை மீண்டும் பார்த்த மகிழ்ச்சிக்காகவும் அந்த இரவு மறக்க முடியாததாக மாறிப் போனது.
இரவு அனைவரும் உறங்கிய பிறகு திருட்டு பூனையை போல தன் வீட்டின் மொட்டை மாடிக்கு வந்து சேர்ந்தாள் அஞ்சலி நிலவின் வெளிச்சத்தில் அங்கே பார்க்க அவளின் கணவன் இல்லை என்றவுடன் அந்த இடமே வெறுமையாக இருக்க தன்னவன் வரவில்லை போல என்ற ஏக்கத்துடன் அவள் அங்கிருந்து செல்ல அவளின் இடையை ஒரு கைப்பிடித்து வளைத்தது அந்த பிடியே சொன்னது அது அவள் கணவன் தான் என்று பெண்ணவள் மூச்சு வாங்க ஆர்வமும் மகிழ்ச்சியும் கலந்த சிரிப்புடன் திரும்ப ஆணவன் அவளின் இடையை பிடித்து தன்னோடு பெயர்த்து அணைத்தான் “மாமாவுக்காக வந்தியா” என்று கேட்க அவளும் வெட்கத்துடனே ஆமாம் என்று தலைகுனிய அவளின் ஒற்றைக் கல் மூக்குத்தி இருளில் மின்னியது அதை பார்த்தவனுக்கு காதல் பொங்கி வழிய “அழகா இருக்க டி” என்றவன் அவள் நெற்றியில் முத்தமிட்டான்.
“மாமா போதும் அம்மா வந்துடுவாங்க எதுக்கு கூப்பிட்டிங்கன்னு சொல்லுங்க இல்லைன்னா நான் கிளம்புறேன்” என்றவள் அவனிடமிருந்து விலகி முயன்றாள் அவளை இழுத்து அணைத்தவன் “எங்க டி ஓட பார்க்குற ஏதோ ஆசையே இல்லாத மாதிரி எனக்கு மட்டும் தான் ஆசை பாரு” என்று கூறியவன் அவளை பார்த்து கொண்டே அவளின் இதழில் முத்தமிட போக அவள் குறுக்கே கை வைத்து தடுத்தாள்
“மாமா இன்னும் ஒரு வாரத்துல நானே உங்க வீட்டுக்கு வந்துடுவேன்” என்றாள்.
“அதுல என்னடி கிக் இருக்கு இந்த மாதிரி திருட்டுத்தனமா உன்னை பார்த்து கிஸ் பண்ணி” என்று கூறிக் கொண்டே அவளை முத்தமிட போக “மாமா அம்மா வந்துடுவாங்க” என்று அவனிடமிருந்து விலகி ஓட போக அவளின் கைப்பிடித்தவன் “நாளைக்கு என் பிறந்தநாள் எனக்கு என்ன பரிசு கொடுப்ப” என்று அவன் கேட்க “உங்களுக்கு என்ன வேணும் மாமா” என்று அவள் கேட்க
“நீ தான் வேணும்” என்றான்.
அவள் கண்கள் அகல விரிய “நீ தான் எனக்கு வேணும் பிறந்தநாள் பரிசா உன்னைய நீ எனக்கு தருவியா” என்று கேட்க அவளுக்கும் ஒன்றும் புரியவில்லை “என்ன மாமா சொல்றிங்க” என்று அவள் கேட்க “நாளைக்கு அம்மாவும் அருளும் ஊருக்கு போறாங்க எங்க வீட்ல யாரும் இருக்க மாட்டாங்க நைட் தான் வருவாங்க நீ வரீயா” என்று கேட்க
“அய்யோ இவ்வளவு தானா மாமா நான் வரேன் நான் கூட என்னவோ ஏதோன்னு பயந்துட்டேன் கண்டிப்பா அம்மாவுக்கு தெரியாம வரேன்” என்று கூறிவிட்டு அங்கிருந்து ஓடிச்சென்றாள்.
அவள் ஓடிச் செல்வதையே பார்த்துக் கொண்டிருந்த ராயன் தலையில் கை வைத்துக் கொண்டு சிரித்தான்
“இவளுக்கு எதுவுமே புரியலையா… இல்ல புரிஞ்சும் புரியாத மாதிரி நடிக்கிறாளா”
என்று தனக்குத்தானே முனுமுனுத்தவன், அவள் சென்ற திசையையே பார்த்துக் கொண்டிருந்தான்.
அவளோ மாடிப்படிகளில் இறங்கிக் கொண்டிருந்தாலும் அவளின் மனம் மட்டும் ராயனிடமே இருந்தது
“நாளைக்கு அவர் பிறந்தநாள்…”
என்று நினைத்தவளின் முகத்தில் தானாகவே புன்னகை மலர்ந்தது
அதே நேரம் ராயன் தன்னை முத்தமிட்டது நினைவுக்கு வர அவளின் முகம் சட்டென்று சிவந்தது.
‘என்ன மனுஷன் இவர்… எப்ப பார்த்தாலும் என்னை வெட்கப்பட வைக்கிறாரே ரொம்ப மோசம் பா இந்த மாமா’ என்று நினைத்து கொண்டே தன் அறைக்குள் சென்று கதவை அடைத்தாள் ஆனால் அன்றிரவு முழுவதும் அவளுக்கு உறக்கமே வரவில்லை ஏனோ அவனை நினைத்தாலே உறக்கம் வர மறுத்தது ராயனுக்கும் அதே நிலை தான் பொழுது எப்போது விடியும்
என்று இருந்தது
நேரத்தை முயற்சி செய்து நெட்டி தள்ளிக் கொண்டு இருந்தான்.
அத்தியாயம் 16
மறுநாள் காலை பொழுது யாருக்கும் காத்திராமல் மெல்ல விடிந்தது ராயன் வழக்கத்தை விட காலையிலேயே குளித்து முடித்தவன் தன்னை ஒரு முறைக்கு இரு முறை கண்ணாடியில் நின்று பார்த்து கொண்டான் அவன் மீசை முடியின் ஓரத்தை முறுக்கிவிட்டு கொண்டான் பல வருடம் கழித்து தன்னை தானே ரசித்து கொண்டான் காலையிலேயே அவன் தாயும் தந்தையும் வீட்டில் இருந்து விசேஷத்துக்கு கிளம்பியிருக்க அவன் மட்டும்
உடல் நிலை சரியில்லை என்று பொய் உரைத்துவிட்டு வீட்டிலேயே இருந்து கொண்டான்.
அவன் கண்கள் அவ்வப்போது எதிர் வீட்டை பார்த்து கொண்டே இருந்தது இங்கே அஞ்சலி காலையிலேயே குளித்து தனக்கு பிடித்த தாவணி ஒன்றை கட்டிக் கொண்டு இருக்க அவள் அறையின் உள்ளே வந்த அவளின் தாய்
“அஞ்சலி நீயே கிளம்பிட்டியா சீக்கிரமா வா” என்று கூற அவளின் கண்கள் அதிர்ச்சியில் விரிந்தது “எங்க மா” என்று பதட்டத்துடனே கேட்க “அது தான் ஊருக்கு வெளியே ஒரு இடம் வாங்குனோமே அதை பெயர்ல எழுதனும் அதுக்கு தான் பத்திரம் பதிவு பண்ண போகனும்” என்று கூற “அம்மா நாம நாளைக்கு போகலாமா” என்று அவள் கேட்க “அடியேய் உன் பெயர்ல தான் அந்த இடத்தை எழுத போறோம் நீயே இல்லைன்னா எப்படி” என்று அவர் கேட்க “அம்மா நாம நாளைக்கு போலாமா” என்று அவள் மீண்டும் கேட்க
“இன்னைக்கு தான் டி நாள் நல்லா இருக்கு வா” என்று அவளை வெளியே அழைத்து செல்ல பெண்ணவளுக்கு கண்கள் கலங்கி கண்ணீரே வந்தது அவள் வெளியே ராயனும் அவளை வெளியே வந்து பார்க்க அவள் அவனின் தாய் தந்தையுடன் ஆட்டோவில் எங்கோ கிளம்பி செல்ல அவ்வளவு தான் ராயனுக்கு தன் மனைவி மீது கட்டுக்கடங்காமல் கோபம் வந்தது.
அவன் கோப முகத்தை பயத்துடனே பார்த்து கொண்டே பெண்ணவள் அங்கிருந்து சென்றாள் ராயன் தன் கோபத்தை அடக்கும் வழி தெரியாமல் அங்கிருந்து வெளியே சென்றான் வீட்டில் இருக்கவும் அவனுக்கு பிடிக்கவில்லை ஒரு மதுபான கடைக்கு சென்று குடிக்க ஆரம்பித்தான் தான் எவ்வளவு சொல்லியும் வேண்டுமென்றே அவள் வெளியே சென்று இருக்கிறாள் என்பதே அவன் கோபத்தை இன்னும் தூண்டியது.
அந்த நேரம் அவனின் தாய் அவனுக்கு அலைபேசியில் அழைத்தவர் “ராயா நானும் தம்பியும் இன்னைக்கு உன் சித்தி வீட்லையே தங்கிட்டு காலையில வரோம் உடம்ப பார்த்துக்கோ” என்று கூறிவிட்டு அழைப்பை துண்டித்தார் ராயன் எதுவும் பேசாமல் அமைதியாக அழைப்பை துண்டித்தான் மீண்டும் வீட்டுக்கு வந்து சேர்ந்தான்.
இப்படி ஒரு பிறந்தநாளை அவன் எதிர்ப்பார்க்கவேயில்லை காலை கனிந்து மாலை பொழுது வரை மீண்டும் அவன் அலைபேசி ஒலித்தது அதை எடுத்து தூக்க கலக்கத்துடனே காதில் வைத்தான் “தம்பி நான் அஞ்சலி அம்மா பேசுறேன் நாங்க இங்க ரிஜிஸ்டர் ஆபிஸ் வந்தோம் அஞ்சலிக்கு கொஞ்சம் உடம்பு சரியில்லை நீங்க அவளை வீட்டுக்கு கூட்டிட்டு போறிங்களா இங்க பக்கத்துல ஒரு துக்கம் நாங்க அங்க போகனும்” என்றார் ராயன் உடனே படுக்கையில் இருந்து சலிப்புடனே எழுந்தவன்
“சரி ஆன்ட்டி வரேன்” என்று கூறிவிட்டு அழைப்பை துண்டித்தவன் உடையை மாற்றி கொண்டு வெளியே வந்தான்.
அவன் பைக்கை எடுத்து விரைவாக அங்கே செல்ல அஞ்சலி தாவணியால் மூடிக்கொண்டு நடுக்கத்துடன் அமர்ந்து இருந்தாள்
“நாங்க வர நேரமாகும் தம்பி உங்க வீட்டுக்கே கூட்டிட்டு போட்டுங்க” என்று அவளின் தந்தை கூற ராயன் முறைப்புடனே பைக்கில் அமர்ந்திருக்க அஞ்சலி அவன் பின்னே ஏறி அமர்ந்தாள்.
ராயன் அவளை கண்டுகொள்ளாமல் பைக்கை ஓட்டிச் செல்ல அவளின் முகம் வாடியது அவளுக்கு உண்மையிலேயே காய்ச்சல் அடித்தது அவளை நேரே ஒரு மருத்துவமனை ஒன்றுக்கு அழைத்து சென்றவன் மருந்து மாத்திரைகளை வாங்கி கொடுத்துவிட்டு வீட்டுக்கு அழைத்து வந்தான் பெண்ணவள் படுக்கையில் சுருண்டு கிடக்க அவனோ குடித்த போதை தெளிய எண்ணி குளியலறைக்கு குளிக்க சென்றான்.
அஞ்சலி உறங்கி கொண்டிருந்தாள் அப்போது திடீரென மின்சாரம் தடை பட அவளுக்கு வியர்த்து வடிய வீடே இருளாகி இருந்தது
“மாமா” என்று பயத்துடனே கத்த ஆரம்பித்தாள்
ராயன் குளித்து கொண்டு இருந்தவன்
“அஞ்சலி நான் இங்க தான் இருக்கேன்” என்று கத்தி கொண்டே இருக்க “மாமா நீங்க எங்க இருக்கிங்க” என்று கேட்டு கொண்டே அவள் இருளில் நடத்து வர “இங்க தான் டி” என்று கூறிக் கொண்டே ராயன் வேக வேகமாக தலையில் தண்ணீரை ஊற்றிக் கொண்டவன் பூந்துவாலை ஒன்றை கட்டிக் கொண்டு கதவை திறந்து வெளியே வந்தான்.
பெண்ணவள் பயத்துடனே அவனை ஓடி வந்து அவனை கட்டிக் கொள்ள அவளை மறுகணம் அவனிடமிருந்து விலக்கி நிறுத்தினான்
“என்னை தொடாத டி” என்று அவன் கோபத்துடனே கர்ஜிக்க “மாமா” என்று அவள் பாவமாக அழைக்க அந்த வீட்டின் நிலவின் வெளிச்சம் வந்து கொண்டு இருக்க இருவரின் முகமும் ஓரளவுக்கு பழகியது இருவருக்கும்
“காலையிலருந்து உனக்காக எவ்வளவு நேரம்
காத்திட்டு இருந்தேன் உன்னால எனக்கு ஒரு சின்ன சந்தோசத்தை கூட கொடுக்க முடியலைன்னா நீ எதுக்கு டி பொண்டாட்டின்னு இருக்க” என்று அவன் கேட்க
“மாமா அம்மா அப்பா தான் என்னைய கூட்டிட்டு போனாங்க நானா போகல நான் வர மாட்டேன்னு தான் சொன்னேன் அவங்க தான் கேட்க்கல தெரியுமா” என்று சொல்லும் போதே அவளின் கண்கள் கலங்கியது.
“ஏன் டி உன் அப்பா அம்மாவை கூட சமாளிக்க முடியாதா உன்னால போதும் நீ எதுவும் என் கிட்ட பேசாத நான் போய் மெழுகுவர்த்தி எடுத்துட்டு நீ போய் நிம்மதியா தூங்கு” என்று கூறிவிட்டு மெழுகுவர்த்தி ஒன்றை ஏற்றி வைத்தவன் உடை மாற்ற செல்ல அவன் பின்னேயே வால் பிடித்து கொண்டு அவன் மனைவி வந்தாள் “மாமா சொல்றதை கேட்கவே மாட்டிங்களா” என்று அவள் கேட்டு கொண்டே அவன் பின்னே வர “வெளிய போ டி நான் டிரஸ் மாத்தனும்” என்று அவன் கோபத்துடன் கூற “நான் போக மாட்டேன் இங்க தான் இருப்பேன்” என்று அவள் பிடிவாதமாக கூறினாள்.
அவன் உடையை மாற்றி கொண்டு இருக்க அவளும் முகம் சுளிக்காமல் அங்கேயே நின்றாள் “மாமா நாம் ரெண்டு பேரும் தப்பு பண்ணலாமா” என்று கேட்க வேட்டியை அணிந்து கொண்டு இருந்தவனின் கண்கள் அதிர்ச்சியில் விரிந்தது “என்ன” என்று அதிர்வுடனே கேட்க “மாமா நாம் தப்பு பண்ணலாம்” என்று கூற அவன் கோபம் சற்றே தனிந்து முகத்தில் மெல்லிய புன்னகை மலர்ந்தது சட்டையை கூட போடாமல் வெற்று உடம்புடன் பெண்ணவளின் இடையை பிடித்து தன் அருகில் இழுத்தான் “என்ன கேட்ட” என்று மீண்டும் கேட்க “நான் சொன்னது உங்க காதுல விழுந்துச்சு” என்றாள்.
அவளும் அவன் அருகில் நெருங்கி நின்றவள்
“தப்பு பண்றதுனா என்னன்னு தெரியுமா” என்று அந்த மெழுகின் வெளிச்சத்தில் அவளின் இதழை பார்த்து கொண்டே ஆணவன் கேட்க “ஆ தெரியும் மூணாவது வீட்டு சரளா அக்கா சொன்னுச்சு தப்பு பண்ணினா தான் குழந்தை பிறக்குமாம்” என்றாள் ஏதோ எல்லாம் தெரிந்தவளை போல பெண்ணவளின் மேனி அவன் வெற்றுடம்புடன் உரச அவளின் ஆடையை தாண்டியும் உடல் அனலாக கொதித்தது அவளின் உடல் சூட்டை உணர்ந்தவன் “இதெல்லாமா டி அவங்க கிட்ட கேட்ப” என்று கேட்க “நான் கேட்க்கல அவங்க தான் சொன்னாங்க நான் முத்தம் கொடுத்தா குழந்தை பிறக்கும் தானேன்னு கேட்டேன் அதுக்கு அவங்க தான் சொன்னாங்க தப்பு பண்ணினா தான் குழந்தை பிறக்கும்ன்னு நாம் தப்பு பண்ணினா குழந்தை பிறக்கும்ல்ல” என்று அவள் சிறுபிள்ளையாக அனைத்தையும் ஒப்புவிக்க அவளின் குழந்தை தனம் ஆணவனை மயக்கி அவளின் காலடியில் விழ வைத்தது.
அவள் சுவரோடு சுவராக ஒட்டி நிற்க அவனோ அவளின் இடையை வளைத்து பிடித்து நிற்க பெண்ணவள் அவனை அன்னார்ந்து பார்த்து பேசிக் கொண்டு இருந்தாள் “அதெல்லாம் இருக்கட்டும் எங்க டி என் பிறந்தநாள் பரிசு” என்று அவன் கேட்க “நீங்க நான் தானா வேணும்ன்னு கேட்டிங்க அதான் நானே வந்துட்டேன்” என்றாள் அவனோ அவள் பேச்சை எங்கே கவனித்தான் அவளை அடித்து வீழ்துவதை போன்ற பார்வையுடனே அவளை பார்த்தான் அவன் கண்கள் அவளின் முகத்தில் பூத்திருந்த வியர்வையை கவனித்தது.
மின்சாரம் அவளின் நெற்றி முழுவதும் வியர்வை பூத்திருந்தது அவன் கண்கள் மெல்ல கீழ் இறங்கி அவளின் பேசும் குட்டி இதழ்களை கவனித்தது அவன் கண்கள் இன்னும் கீழே இறங்கி செல்ல அவளின் தாவணி திரை மறைத்திருந்த இரட்டை கொங்கைகளுக்கு சென்றது அதற்க்கும் கீழே அவன் கண்கள் அவளின் இடைக்கு செல்ல அவன் பார்வையை பார்த்தவளுக்கு பயம் தொற்றிக் கொண்டது.
“மாமா எனக்கு தண்ணீ தாகமா இருக்கு” என்று கேட்டு முடிக்கும் முன்னே அவளின் இதழ்கள் ராயனால் சிறை செய்யப்பட்டது அடுத்த கணம் அவளை தன் இரும்பு கரங்களால் தூக்கியவன் முத்தமிட்டு கொண்டே அவளை படுக்கையில் கிடத்தினான் அவன் மொத்த பாரமும் அவளின் மேனியில் பட அவன் உடல் பருமனை மொத்தமாக தாங்க முடியாமல் பெண்ணவள் தடுமாற ஆரம்பித்தாள்.
அவன் இதழ்கள் அப்போதும் அவளை விட்டு விலகவேயில்லை அவள் மூச்சுக்கு திணறி திண்டாட அவள் மேல் இருந்த தாவணியை தூக்கி எறிந்தான் அது ஒரு மூலையில் சென்று பெண்களுக்கே உரித்தான வெட்கம் வர அவள் தன் கையால் மேனியை மூடிக் கொண்டாள் ஆணவன் அவளின் கையை உயர்த்தி பிடிக்க
“மாமா எனக்கு பயமா இருக்கு என்னை என்ன பண்ண போறிங்க” என்று அவள் கேட்க
“நீ தான டி தப்பு பண்ணலாமா மாமான்னு அஞ்சலி பாப்பா மாதிரி கேட்ட” என்று அவன் கேட்க “இல்லை மாமா எனக்கு பயமா இருக்கு” என்று கூற “மாமா உன்னை கஷ்டப்படுத்துவனா டி நீ அழகு பொண்டாட்டில்ல” என்று கூறிக் கொண்டே அவளின் கழுத்து வளைவில் முகம் புதைத்து எச்சில் முத்தமிட பெண்ணவள்
கொஞ்சம் கொஞ்சமாக மயங்கி கிரங்க ஆரம்பித்தாள்.