உயிரின் உவமை நீ 12
அத்தியாயம் 12
பெண்ணவள் என்ன நடக்கிறது என்று தெரியாமலேயே அவன் முத்தத்துக்கு ஈடு கொடுக்க அவனோ அவளின் இடையில் கைக்கொடுத்து தன் உயரத்துக்கு தூக்கி வாகாக முத்தமிட்டு கொண்டு இருந்தான் வீடே சத்தமில்லாமல் இருக்க அவன் வேகமான மூச்சு காற்றின் சத்தம் மட்டும் கேட்டு கொண்டே இருந்தது.
அப்போது வெளியே வந்த அவனின் தம்பியும் தாயும் கதவை தட்ட அந்த சத்தத்தில் சட்டென்று அவளிடம் இருந்து பதறி அடித்து கொண்டு விலகினான் ராயன் தன் தலையை கோபத்துடனே கோதியவன் தான் தவறு செய்துவிட்டோம் அவளுக்கு நேரம் கொடுத்து இருக்க வேண்டும் என்று நினைத்தான் கதவு மீண்டும் மீண்டும் தட்டப்பட வெளியே சென்று கதவை திறந்தான்.
அப்போது பார்த்து சரியாக மின்சாரமும் வர
“என்ன அஞ்சலி சாப்பிட்டியா” என்று கேட்டுக் கொண்டே உள்ளே வர அவளோ திருதிருவென விழித்து கொண்டே பேயறைந்ததை போல் நின்றிருந்தாள் ராயன் சாதாரணமாக சென்று சோஃபாவில் சென்று எதுவுமே நடக்காததை போல அமர்ந்திருந்தான் “உன் கிட்ட தான டி கேட்க்குறேன் வாயில என்ன கொழுக்கட்டையா வச்சிருக்க” என்று கேட்க “சா..சாப்…சாப்பிட்டேன் அத்தை” என்றாள் தட்டுத்தடுமாறி அதன் பின் எதுவும் பேசாமல் தன் அறையின் உள்ளே ஓடி இழுத்து போர்த்தி கொண்டு படுத்திருந்தாள்.
ராயன் மெதுவாக அவள் பின்னேயே அறையின் உள்ளே வந்து கதவடைத்தான் பெண்ணவள் உறங்குவதை போல நடிக்க
ஆணவன் கதவடைக்கும் சத்தம் கேட்டு அவள் உடல் ஆடியது பயத்தில் அவள் பக்கத்தில் வந்து படுத்து கொண்டான் அவள் மறுபுறம் திரும்பி படுத்திருக்க அவள் சுதாரித்து கண்ணை இறுக மூடிக்கொண்டாள் ராயனுக்கு உறக்கமே வரவில்லை கண்ணை மூடி படுத்த அஞ்சலி எப்போதோ உறங்கி இருந்தாள்.
ராயன் தான் உறக்கம் வராமல் புரண்டு புரண்டு படுத்து கொண்டு இருந்தான் மறுநாள் காலை பொழுது புலற அஞ்சலியின் வீட்டில் இருந்து அவளின் தாய் தந்தை வந்திருந்தனர் காரணம் ஆடி மாதம் தொடங்கி இருப்பதால் அவளை தங்கள் வீட்டுக்கு அழைத்து செல்ல வந்திருக்க பெண்ணவள் ஏதோ வெளியூருக்கு செல்வதை போல ஆர்வமாக கிளம்பினாள் போகுமு போது ராயனிடம் ஒரு வார்த்தை கூட சொல்லாமல் போக அவனுக்கு உடனே கோபம் வந்தது.
தன்னிடம் சொல்லாமல் கூட செல்கிறாளே என்று ராயன் அவளை பார்த்து கொண்டே இருக்க அஞ்சலி வாசலுக்கு செல்லும் வரை அவளையே பார்த்து கொண்டிருந்தான் தன்னை ஒரு முறையாவது திரும்பி பாராப்பாளா என்று அவளோ அவனை திரும்பி கூட பார்க்காமல் தன் வீட்டுக்கு சென்றாள்.
ராயனின் முகம் உடனே வாடி அங்கிருந்து உடனே வெளியே சென்றான் அஞ்சலி வீட்டின் உள்ளே வந்தவுடன் சகுந்தலா மகளிடம் சென்றவர் “அஞ்சலி மா” என்று அழைக்க
“என்ன மா” என்று கேட்டாள் அவள்
“இன்னும் ஒரு மாசத்துக்கு எதிர் வீட்டுக்கு போக கூடாது” என்றார் “ஏன் மா” என்று அவள் அதிர்வுடனே கேட்க “ஆடி மாசம் புருசன் பொண்டாட்டி ஒன்னா இருக்க கூடாது டி” என்றார் அவளின் தாய்.
“ஏன் இருக்க கூடாது” என்று அவள் கேட்க
“ஆமா இப்போ நீ உன் புருசன் வீட்ல இருந்தா உனக்கு சித்திரை மாசம் குழந்தை பிறக்கும் அதுக்காக தான் சொல்றேன்” என்றார்
“அது ஏன்” என்று அவள் மீண்டும் “உன் கிட்ட பதில் சொல்ல என்னால முடியாது நாளையில இருந்து ஒரு மாசத்துக்க நீ உன் மாமியார் வீட்டுக்கு போக கூடாது அவ்வளவு தான்” என்றார்.
சகுந்தலாவின் பேச்சைக் கேட்ட அஞ்சலி அமைதியாக நின்றாள்
“ஒரு மாசமா…?” என்று மெதுவாகக் கேட்டவளின் குரலில் ஏமாற்றம் மறையவில்லை முகமும் வாடியது ஏனோ மனம் வலித்தது அவள் சிறு வயதில் இருந்தே எதிர் வீட்டுக்கு செல்லாமல் ஒரு நாள் கூட இருந்ததில்லை.
“ஆமாடி ஆடி மாசம் முடிஞ்சதுக்கு அப்புறம் உன் மாமியார் வீட்டுக்குப் போயிக்கலாம் அதுவரைக்கும் இங்கதான் இருக்கணும் இது நம்ம வீட்டுப் பழக்கம்.”
அஞ்சலி தலையசைத்தாலும், அவளின் மனம் முழுவதும் ராயனிடமே இருந்தது எப்படி ஒரு மாசம் ராயன் மாமாவை பார்க்காம இருக்க முடியும் என்று நினைத்தாள் “அடியேய் நான் எங்கேயாவது வெளிய போய் இருக்கும் போது எதிர் வீட்டுக்கு போகனும்ன்னு நினைச்ச காலை ஒடைச்சிருவேன்” என்றார் அவளின் தாய் பதிலுக்கு அவளும் சரியென்று தலையசைத்தாள் மனதில் ‘நான் எப்படி ராயன் மாமாவை பார்க்காம இருப்பேன்’ என்று நினைத்தாள்.
அப்போது அந்த வீட்டின் வெளியே ஏதோ ஒரு பைக் சத்தம் கேட்க உடனே அஞ்சலி தன் அறையின் உள்ளே ஓடி ஜன்னல் வழியாக எட்டி பார்க்க அது ராயன் அல்ல வேறு யாரோ ஏமாற்றத்துடன் வந்து கட்டிலில் அமர்ந்தாள்.
ராயன் வெளியே கோபத்துடன் சென்றவன் இரவு வரை வீட்டுக்கு வரவேயில்லை அஞ்சலி தன் கணவனை காண ஜன்னல் பக்கம் நின்று சோர்ந்து போனாள் வரும் போது கூட ஒரு வார்த்தை சொல்லிவிட்டு வரவேயில்லை என்று வருத்தமாக இருந்தது.
நள்ளிரவு வேளையில் தான் ராயன் வீடு வந்து சேர்ந்தான் தன் பைக்கை வீட்டு வாசலில் நிறுத்தியவன் கண்கள் ஒரே ஒரு முறை எதிர்வீட்டை பார்த்தது விளக்குகள் அனைத்தும் அணைக்கப்பட்டு இருக்கு அவனுக்கு கோபம் தான் வந்தது அதுக்குள்ள தூங்கிட்டாளா என்று கோபத்துடன் வீட்டின் உள்ளே வந்தான் படுக்கையில் படுத்தவனின் பக்கத்தில் இருந்த இடம் வெறுமையாக இருக்க அவனுக்கு கோபம் தான் வந்தது கட்டிலில் படுக்க பிடிக்காமல் ஹாலில் சென்று படுத்து கொண்டான்.
அஞ்சலி ஜன்னல் நின்று நின்று பார்த்தவள் அப்படியே தரையில் படுத்து உறங்க ஆரம்பித்தாள் மறுநாள் காலை ராயன் வருவானா எழுந்து நின்று பார்த்து கொண்டே இருக்க “இன்னும் என்னடி பண்ணிட்டு இருக்க வந்து குளி” என்று அவளின் தாயின் குரல் கேட்க முகத்தை தூக்கி வைத்து கொண்டு உள்ளே வந்தாள் பெண்ணவள்.
அவள் குளிக்க குளியலறையின் உள்ளே நுழையும் முன் வெளியே இருந்த கண்ணாடியை அதில் தெரிந்த தன் உருவத்தை பார்த்தவளுக்கு நேற்று ராயன் தன் இதழில் முத்தமிட்டது நினைவுக்கு கூடவே வெட்கமும் வந்தது குளிக்க சென்றவள் அவசர அவசரமாக குளித்து முடித்து மீண்டும் வெளியே வந்தாள் இப்போதும் பைக் சத்தம் கேட்க வெளியே ஓடி சென்று பார்த்தாள் இப்போதும் ராயன் வரவில்லை ‘மாமா ஏன் வெளியவே வர மாட்டேங்குறாரு’ என்று மனதில் நினைத்தவள் உம்மென்று உள்ளே வந்தாள்.
ராயன் காலையிலேயே ஒரு சவாரிக்கு சென்றிருந்தான் திருப்பதி வரை செல்லும் வேலை ஏனெனில் அவன் டிரைவர்கள் வேலையாக இருக்க இந்த டிரிப்புக்கு அவன் தான் சென்றிருந்தான் அதிகாலை 5 மணிக்கே கிளம்பிவிட்டான் அது தெரியாமல் பெண்ணவள் வாசலையே வந்து எட்டி எட்டி பார்த்து கொண்டே இருந்தாள்.
அவன் இல்லை என்ற வருத்தத்துடன் அமர்ந்திருந்தாள் மாலை வரை அப்படியே இருக்க அவளின் தங்கை முறையுள்ள அவளின் சித்தப்பா மகள் அவளின் வீட்டுக்கு வந்தாள் அவளுடன் சிறிது விளையாடியவள் சோர்ந்து போய் அமர்ந்திருக்க இருவரும் டிவி பார்த்து கொண்டு இருந்தனர் அதில் ஒரு பாடல் ஓட திரையில் இருந்த நாயகனும் நாயகியும் கையில் குழந்தையுடன் இருக்க அதை பார்த்த அந்த பெண் “அக்கா உங்களுக்கு இன்னும் கொஞ்ச நாள்ல இந்த மாதிரி குட்டி பாப்ப்பா பொறக்கும்ல்ல” என்று கூற அஞ்சலி அந்த திரையையே ஆவென்று பார்த்தாள் ஏனோ அவளின் கண்ணுக்கு அந்த திரையில் ராயனும் அஞ்சலியும் கையில் குழந்தையுடன் நிற்பதை போல ஒரு பிரம்மை தோன்றியது.
“அக்கா அக்கா” என்று அவள் கத்தி அழைக்க அதில் சுயநினைவுக்கு வந்தவள் “என்ன டி” என்று கேட்டாள் “அக்கா உனக்கு பாப்பா பொறந்தா எனக்கு விளையாட கொடுப்பியா” என்று கேட்க “கொடுக்கிறேன் டி” என்றாள் அஞ்சலி.
அஞ்சலி அவள் சென்ற பிறகு தன் அறைக்கு வந்தவள் கதவை மூடிவிட்டு தன் வயிற்றில் துணி ஒன்றை சுற்றி வைத்து பார்க்க அவள் வயிறு பானையை போல தெரிந்தது
‘எனக்கும் மாமாவுக்கும் இன்னும் கொஞ்ச நாள்ல பாப்பா பொறக்குமா’ என்று நினைத்து தனக்கு தானே சிரித்து கொண்டாள்.
இரவு வேளையில் அவளின் தாயின் போனுக்கு ராயன் மனம் கேட்க்காமல் அழைத்தான் சகுந்தலா பட்டன் போனை எடுத்தவர் “சொல்லுங்க மாப்பிள்ளை இதோ இப்போவே கொடுக்கிறேன்” என்று கூறிக் கொண்டே தன் மகளிடம் போனை எடுத்து கொண்டு கொடுத்தார்.
அஞ்சலி போனை வாங்கியவுடன் அவர்களுக்கு தனிமை கொடுக்க எண்ணி அங்கிருந்த சென்றார் “என்ன பண்ற டி” என்று அவன் கேட்க “சும்மா தான் மாமா இருக்கேன்” என்றாள் இன்னும் நாலு வார்த்தை சாப்பிட்டியா தூங்குனியா என்று நலம் விசாரிக்க அவளும் அனைத்துக்கும் பதில் கூறினாள்.
“நீங்க எங்க இருக்கிங்க மாமா” என்று கேட்க “திருப்பதில” என்றான் “என் கிட்ட சொல்லிட்டு போக மாட்டிங்களா நான் எவ்வளவு நேரம் தெரியுமா ஜன்னல் பக்கத்துலையே நின்னுட்டு இருந்தேன்” என்றாள் உண்மையான வருத்தத்துடன் அவள் தன்னை தேடினாள் என்பதே அவனுக்கு மகிழ்ச்சியை கொடுத்தது.
“மாமா நான் உங்க கிட்ட ஒன்னும் கேட்க்கவா” என்று அவள் தயக்கத்துடனே கேட்க “என்ன” என்று அவன் கேட்க “நமக்கு எப்போ குட்டி பாப்பா பொறக்கும்” என்று கேட்க அவள் கேட்க கேள்வியில் அவள் கணவன் அதிர்ந்துவிட்டான் “எதுக்கு கேட்க்குற” என்று தன்னை சமாளித்து கொண்டு கேட்க
“நாம ரெண்டு பேரும் முத்தா கொடுத்தோம்ல்ல முத்தா கொடுத்தா உடனே குழந்தை பொறக்கும்ல்ல அதனால தான் கேட்டேன்” என்றாள்.
அவள் கூறியவுடன் அவன் எண்ண ஓட்டம் நேற்றைய நிகழ்வுக்கு சென்று அவனை முச்சடைக்க வைத்தது ‘அடிப்பாவி’ என்று மனதில் நினைத்து கொண்டவன் “முத்தா கொடுத்தா குழந்தை பொறக்கும்ன்னு உனக்கு யாரு சொன்னா” என்று கேட்க “அந்த நாலாவது வீட்டு பரிமளா அக்கா தான்” என்று கூற அவனின் இதழில் மெல்ல புன்னகை மலர்ந்தது “முத்தா கொடுத்தால்லாம் குழந்தை பிறக்காது அதுக்கு வேற பண்ணனும்” என்றான்.
“என்ன பண்ணனும் மாமா” என்று அவள் கேட்க
“அதை நான் உனக்கு நேர்ல வந்து சொல்லி தரேன்” என்று கூறினான்.