அசுரனின் மோகினியே
அசுரனின் மோகினியே – 1
அந்த திருமண மண்டபம் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. மேளதாளங்கள் முழங்க, உறவினர்களின் சிரிப்பும் பேச்சுமாக மண்டபமே பரபரப்பாக இருந்தது. மணமேடையில் மணமகனும் மணமகளும் அமர்ந்திருக்க, புகைப்படக்காரர்கள் அவர்களைச் சுற்றிச் சுற்றி வந்து புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தனர்.
ஆனால் மணப்பெண் மோகனாவுக்குத்தான் இந்த ஆரவாரம் எல்லாம் சுத்தமாகப் பிடிக்கவில்லை.
தன் கழுத்தில் போட்டிருந்த கனமான நகைகளும், அலங்காரமும், முகத்தில் பூசப்பட்டிருந்த ஒப்பனையும் அவளுக்கு எரிச்சலைத்தான் கொடுத்தது. இந்தக் கல்யாணத்தில் அவளுக்குச் சுத்தமாக விருப்பமே இல்லை. ஒரு மாதத்திற்கு முன்னேதான் அமெரிக்காவிலிருந்து இந்தியா வந்திருந்தாள். அவளுக்கு அவளுடைய அப்பா ராஜசேகரன் மீது பாசம் அதிகம். தன் மகள் தன் பேச்சை மீற மாட்டாள் என்ற நம்பிக்கையில், அவளுடைய விருப்பத்தைக் கேட்காமலேயே தன் பிசினஸ் பார்ட்னரின் மகனான சூர்யாவுக்குக் கல்யாணம் பண்ணி வைப்பதாகப் பேசி முடித்துவிட்டார்.
அவள் இந்தியா வந்ததும், அவளுக்குக் கல்யாணம் முடிவு பண்ணியிருப்பதைச் சொல்லி சூர்யாவின் போட்டோவைக் காட்டினார். போட்டோவைப் பார்த்தவளுக்கு ஏனோ சூர்யாவைப் பிடிக்கவேயில்லை. அவளுக்கு மேற்படிப்பு படிக்கத்தான் ஆசை.
“அப்பா, நான் பிஜி படிக்கணும். எனக்குக் கல்யாணம் வேணாம் பா!” என்று மோகனா சொல்ல..
அவரோ, “நீ கல்யாணம் பண்ணிட்டுப் படி கண்ணு. நான் என் நண்பனுக்கு வாக்குக் கொடுத்துட்டேன். இந்தக் கல்யாணம் நடந்தே தீரணும்!” என்றார் சற்று அழுத்தமான குரலில்.
“இல்லப்பா, நான் படிக்கணும். கல்யாணத்துல எனக்கு இண்ட்ரஸ்ட் இல்ல!” என்றவள் பிடிவாதமாக சொல்ல
“கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணிட்டேன்டா. நீ இப்போ இப்படிச் சொன்னா, என் மானம் மரியாதையெல்லாம் காத்துல பறக்கும்” என்றார் ராஜசேகரன்.
“என்னைக் கேட்டுகிட்டுத்தானே நீங்க கல்யாண ஏற்பாடு பண்ணியிருக்கணும்?” என்று அவள் வாதாட..
“நீ என் பேச்சை மீற மாட்டேன்னு நம்பினேன். இப்போ இந்தக் கல்யாணத்துக்கு நீ சம்மதம் சொல்லலைன்னா, நான் தூக்கு போட்டு செத்துப்போயிடுவேன்!” என்றார்.
தன் தந்தையின் அந்த பேச்சை கேட்டு மோகனா பதறிவிட்டாள் “அப்பா, என்ன பேசுறீங்க? இன்னொரு முறை இப்படிப் பேசாதீங்க! இப்போ என்ன, நான் கல்யாணத்துக்குச் சம்மதம் சொல்லணும், அவ்வளவுதானே? சரி, உங்க விருப்பப்படியே கல்யாணதுக்கு சமாதிக்குறேன்!” என்று சொல்லிவிட்டு அறைக் கதவை மூடிக்கொண்டாள்.
மோகனாவின் அம்மா மீனாட்சியோ, “பொண்ணுக்குப் பிடிக்காத கல்யாணத்தை ஏன் பண்ணி வைக்கணும்? அவளுக்குப் படிக்கத்தானே ஆசை?” என்று ராஜசேகரனிடம் கேட்டதும்
“உன் வேலையைப் பாருடி” என்று சத்தம் போட்டுவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டார் அவர்.
எப்படா இந்தக் கல்யாணம் முடியும்? எப்போ இந்த அலங்காரத்தை எல்லாமே களைச்சு போட்டுவிட்டு நிம்மதியாக இருப்போம்? என்று மனதிற்குள் புலம்பிக் கொண்டிருந்தாள் மோகனா.
அவளுடைய முகத்தில் திருமணக் களைப்பு கொஞ்சமும் இல்லை. ஆனால் அவளை யாரும் பெரிதாகக் கவனிக்கவில்லை.
சீருடையில் கம்பீரமாக நின்றிருந்தான் ஆதித்யன்.
அவனது முகத்தில் இறுக்கம், பார்வையில் கூர்மை, பேச்சில் அதிகாரம் என அவனைப் பார்த்தாலே எதிரில் நிற்பவர்கள் ஒருமுறை யோசித்துத்தான் பேசுவார்கள். அவன் ஒரு போலீஸ் அதிகாரி. குற்றவாளிகளிடம் இரக்கம் காட்டாதவன். தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் தயங்காமல் நடவடிக்கை எடுப்பவன். ஆனால் அவனுடைய கோபத்திற்கு முன்னால் அவனுடைய நண்பர்கள்கூடத் தள்ளித்தான் நிற்பார்கள்.
தன் மொபைலை எடுத்துத் தாய்க்கு அழைத்தான் ஆதித்யன்.
அம்மா எங்க இருக்கீங்க
என்னடா தெரியாத மாதிரி கேட்குற. என்ன அண்ணா வீட்டு கல்யாணம் நடக்குது மண்டபத்துல இருக்கேன்
“அம்மா, நம்மை அவமானப்படுத்தியவங்க வீட்டு விஷேசத்துல உங்களுக்கு என்ன வேலை வீட்டுக்கு வாங்க” என்றான் குரல் இறுக
வீடு தேடி வந்து பத்திரிகை வைச்சு இருக்காரு நான் எப்படி கல்யாணத்துக்கு வராம இருக்க முடியும். நான் நாளைக்குத்தான் வருவேன்!” என்றவர் பிடிவாதமாக சொல்ல
“கல்யாணம் முடிஞ்சாத்தானே, அம்மா!” என்று இதழைக் கடித்தான் ஆதித்யன்.
“டேய், என்னடா சொல்ற?”
“நீங்க சீக்கிரம் வீட்டுக்கு வாங்க. உங்ககிட்டப் பேச வேண்டியிருக்கு.” என்றான் அவர் அங்கே இருக்கக்கூடாது என்ற எண்ணத்தில்
“என்ன பேசணும்? இப்பயே சொல்லு.”
“ஃபோன்ல சொல்ல முடியாது மா. நேர்ல வாங்க, சொல்றேன்.”
“டேய், உனக்கு எப்பப் பாரு இதே வேலையாப் போச்சு! நான் வரமாட்டேன் போடா!” என்று சொல்லிவிட்டு கமலாம்பாள் போனை வைக்க..
அழைப்பைத் துண்டித்துவிட்டு மொபைலை மேசை மீது வைத்தான் ஆதித்யன். அப்போது தன் தாய் முன்பு சொன்ன வார்த்தைகள் அவனுடைய நினைவுக்கு வந்தன.
“என் அண்ணா வீட்டுக்கு உனக்காகப் பொண்ணு கேட்டு போனேன்டா. ஆனா, அவரு போலீஸ்காரனுக்குப் பொண்ணு தரமாட்டேன்னு சொல்லிட்டாரு.
‘அதுவும் இல்லாம, என் பொண்ணு ஒரு நாள் செலவு பண்ணுற பணம்தான் உன் மகன் வாங்குற சம்பளம். என் மகள் உன் வீட்டுல வந்து வாழ முடியாது. அவளுக்கு ஏசி இல்லாம தூக்கமே வராது. நான் என் மகளுக்கு என்னோட வசதிக்கு ஏத்த மாதிரி என்னோட பிசினஸ் பார்ட்னர் பையனுக்குக் கல்யாணம் பேசி முடிச்சுட்டேன்!’ என்று முகத்தில் அடித்தாற்போல சொல்லி அனுப்பிவிட்டாரு!” என்று கமலாம்பாள் கண்ணீருடன் சொல்லியிருந்தார்.
“என் மகனுக்கு என்ன குறைச்சல்? அவன் போலீஸ் வேலை பார்க்கிறான். நல்ல சம்பளம் வாங்குறான். ஆனா, எங்க வசதி போதாதுன்னு என் அண்ணன் பொண்ணைக் கொடுக்க மாட்டேன்னு சொல்லிட்டாரே!” என்று தன் தாய் கண்ணீர் விட்டதை நினைத்துப் பார்த்த ஆதித்யனின் முகம் இறுகியது.
அவனுடைய அப்பா உயிருடன் இல்லை. அந்த நிலையில் தன்னையும் தன் தாயையும் அவமானப்படுத்தியதோடு, தங்களுக்குச் சேர வேண்டிய சொத்தையும் கொடுக்காமல் ஏமாற்றியிருந்தார் ராஜசேகரன்.
எங்களுக்குக் கொடுக்க வேண்டிய சொத்தைக் கொடுக்காம ஏமாத்திட்டு, இப்போ எங்களுக்கு வசதி இல்லன்னு அவமானப்படுத்துறாரா? எப்படி உங்க பொண்ணு கல்யாணத்தை நடத்துறீங்கன்னு பார்க்குறேன்! என்று பற்களைக் கடித்த ஆதித்யன்..
உடனே தன் நண்பன் கார்த்திக்குக்கு அழைத்தான்.
“டேய் கார்த்திக், என் மாமன் மகள் இன்னைக்கு நாமக் கடத்துறோம்!” என்றான் உதட்டில் விஷமப் புன்னகையுடன்.
“டேய்! என்னடா சொல்ற? நாம போலீஸ்டா! பொண்ணைக் கடத்துறதெல்லாம் தப்புடா!”
“டேய், நான் சொல்றதைச் செய்! மத்ததெல்லாம் நான் பார்த்துக்குறேன்!” என்று கட்டடளை போட..
“மச்சான், நீ சீரியஸாதான் சொல்றியா?”
“நான் எப்பவும் சீரியஸ்தான்! உனக்குத் தெரியாதா?” என்றான் ஆதித்யன்.
அவன் சொன்ன விதத்தைப் பார்த்த கார்த்திக் தலையில் கைவைத்துக் கொண்டான்.
“ஐயோ, உன்னோட இருக்கிறதே பெரிய தண்டனைடா!” என்று.
திருமண வரவேற்பு முடிந்து உறவினர்கள் ஒவ்வொருவராகக் கிளம்பிக் கொண்டிருக்க, மோகனாவோ தன் அறைக்கு சென்றாள்.
அவள் தலையில் வைத்திருந்த மலர்களைக் கழற்ற முயன்றபடி கண்ணாடி முன் அமர்ந்திருந்தாள்.
அப்போது அறைக்குள் யாரோ வருவது தெரிந்தது.
“யாரு?” என்று திரும்பிப் பார்ப்பதற்குள், அவளுக்கு முன்னால் வந்து நின்றான் ஆதித்யன்.
அவளுக்குச் சுதாரிப்பதற்குக்கூட நேரம் கொடுக்காமல், அவளுடைய மூக்கருகே மயக்க மருந்தைத் தெளித்தான்.
அவள் பதறி விலக முயன்றாள்.
“ஏய்… நீ யாரு…?” அவளுடைய வார்த்தைகள் முழுமை பெறுவதற்குள் கண்கள் சுழன்று, உடல் தளர்ந்தது.
அவள் சரிந்து விழுவதற்கு முன்பாகத் தாங்கிப் பிடித்தவன், அவளைத் தூக்கிக்கொண்டு அறையை விட்டு வெளியேறினான்.
மண்டபத்தின் பின்புறத்தில் காரைத் தயாராக வைத்திருந்த கார்த்திக், ஆதித்யன் வருவதைப் பார்த்ததும் கதவைத் திறந்தான்.
“டேய், சீக்கிரம் ஏறு!”
மோகனாவைப் பின் இருக்கையில் படுக்க வைத்துவிட்டு காரில் ஏறினான் ஆதித்யன்.
“மச்சான், என்னடா இது? உண்மையிலேயே கடத்திட்டியா?”
“ஆமா கடத்திட்டேன் காரை சீக்கிரம் எடு” என்றான்
“அடப்பாவி! நான் உனக்கு உதவி செய்ய வந்தேனே தவிர, கடத்தல் கேஸ்ல மாட்டிக்க வரலடா!”
“ரொம்பப் பேசாம வண்டியை ஓட்டு!”
கார்த்திக் தலையசைத்தபடி காரைச் எடுத்தான்
காரின் பின் இருக்கையில் மயக்கத்தில் கிடந்த தன்னுடைய முறைப்பெண்ணை ஒருமுறை திரும்பிப் பார்த்தான் ஆதித்யன்.
அவளுடைய முகத்தில் விழுந்திருந்த கூந்தலை ஒதுக்கிவிட்டான்
-
police story