வைத்தியனின் தேவதை 21,22
அத்தியாயம் 21
அடுத்த நாள் காலை முதலே கண்ணாடி மாளிகை பரபரப்பாக இருந்தது
குழந்தைகளுக்குப் பெயர் சூட்டும் விழாவிற்கான வேலைகள் மாளிகையைச் சுற்றிலும் மும்முரமாக நடந்து கொண்டிருந்தன வீட்டின் முன்புறம் முழுவதும் தோரணங்களும், பூக்களும் அலங்கரிக்கப்பட்டிருந்தன உறவினர்களும், அகோரனுக்கு நெருக்கமானவர்களும் ஒவ்வொருவராக வீட்டிற்கு வர ஆரம்பித்திருந்தனர்.
அவந்திகா குழந்தைகளைத் தயார்படுத்திக் கொண்டிருந்தபோது, அறைக்கதவு திறந்தது அவள் யார் என்று நிமிர்ந்து பார்க்க அகோரன் தான் உள்ளே வந்தான் அவனுடைய கையில் ஒரு அழகான பட்டு புடவை இருந்தது அதை கவரில் வைத்து இருந்தான் அவந்திகா அவனைப் பார்த்துவிட்டு மீண்டும் கண்டுகொள்ளாதவளை போல குழந்தைகளின் பக்கம் திரும்பினாள் அகோரன் அவளருகில் வந்தவன் அந்தப் பையை அவளிடம் சற்று தயக்கத்துடனே நீட்டினான் அதனுடன் அவளுக்கு என்று வாங்கிய தங்க வைர நகைகளும் இருந்தன.
“இது உனக்கு” என்று கொடுக்க
அவள் அவனை நிமிர்ந்து ஒரு பார்வை பார்த்தாள் “என்னது” என்று புருவத்தை சுருக்கி அவள் கேட்க “திறந்து பாரு” என்றான் அகோரன் அவந்திகா தயக்கத்துடன் அந்தப் பையை வாங்கி திறந்தாள் அதற்குள் அழகான ஒரு சேலை இருந்தது அதைப் பார்த்ததும் அவள் ஒரு நொடி அமைதியாக இருந்தாள்.
“இன்னைக்கு இதைக் கட்டிக்கோ” என்று எங்கோ பார்த்து கொண்டு கூறினான், குழந்தைகளுக்காக வாங்கி வந்திருந்த இன்னொரு இரண்டு பைகளையும் அவளிடம் கொடுத்தான் “இது குழந்தைகளுக்கு” என்று கொடுக்க அவந்திகா அவனைப் பார்த்தாள் “நீங்களே வாங்கிட்டு வந்திங்களா” என்று கேட்க “ஆமாம்” என்றான் அவள் எதுவும் சொல்லவில்லை முன்புபோல் கோபப்படவும் இல்லை அமைதியாக அந்தப் பொருட்களை வாங்கிக்கொண்டாள்.
அவளுக்கே அது சற்று வித்தியாசமாக தான் இருந்தது அகோரன் வெளியே செல்லத் திரும்பியபோது அவள் அவனை அழைத்தாள்
“ஹலோ” என்று அழைக்க அவன் திரும்பிப் பார்த்தான் அவள் சில நொடிகள் அவனைப் பார்த்துவிட்டு தயங்கி பின் “தேங்க்ஸ்…”
என்று மெதுவாகச் சொன்னாள்
“என் மனைவிக்கும் குழந்தைகளுக்கும் வாங்கி தர்றதுக்கு என் கிட்ட தேங்க்ஸ் சொல்லனும்ன்னு எந்த அவசியமும் இல்லை” என்றான் “ஓகே” என்று கூறிவிட்டு அவள் புடவையை ஒரு முறை தன் மேலே வைத்து கண்ணாடியில் பார்த்து கொண்டிருந்தாள்.
அகோரனின் முகத்தில் அவளை பார்த்த உடனே சிறிய புன்னகை தோன்றியது அங்கிருந்து வெளியே சென்றான் அவன் சென்ற பிறகும் அவந்திகாவின் பார்வை கதவிலேயே இருந்தது ஏனோ…அவன் வாங்கிக் கொடுத்த அந்தச் சேலை அவளுக்கு மிகவும் பிடித்திருந்தது அதை ஒரு முறை கையால் தொட்டு பார்த்து தடவி கொடுத்தாள் கையில் வைத்து ரசித்தாள்
சிறிது நேரத்திற்குப் பிறகு, குழந்தைகளுக்கும் புதிய உடைகளை அணிவித்துவிட்டு அவந்திகாவும் தயாராகினாள்
அவள் சேலையில் அறையை விட்டு வெளியே வந்தபோது, வாசலில் நின்றுகொண்டிருந்த அகோரனின் பார்வை அவள்மீது விழுந்தது.
அவன் அப்படியே சில நொடிகள் அவளை கண் இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான் அவளின் உச்சம் தலை முதல் உள்ளங்கால் வரை தொட்டு உணர்ந்தவன் கண்ணால் பார்த்து பழகியவன் இருப்பினும் ஏதோ புதிதாக பார்ப்பதை போல பார்த்தான் பழைய அவந்திகா திரும்பி வந்ததை போல அவனுக்கு தோன்றியது
அத்தனை நேர்த்தியாக அவள் புடவை கட்டியிருந்தாள் இடை வளைவில் புடவை இறங்கி இருக்க அவளின் இடை தெரிய அவன் கண்கள் அங்கே நிலைக்குத்தி நின்றது.
அவந்திகாவுக்கும் அவன் தன்னைப் பார்ப்பது தெரிந்தது அவள் அவனை நிமிர்ந்து பார்க்க இருவருடைய கண்களும் ஒரே ஒரு முறை நேரடியாக சந்தித்தன அந்த ஒரு நொடியில்…அவள் மனதில் மீண்டும் மீண்டும் அவன் கூறிய அதே வார்த்தை ஒலித்தது.
“நான் உன்னை காதலிக்கிறேன்டி…” என்ற வார்த்தை அந்த வார்த்தையை அவள் காதுகளில் விழுந்தவுடன் அவளுடைய இதயம் வேகமாகத் துடித்தது அவள் உடனே பார்வையைத் திருப்பிக்கொண்டாள் இருப்பினும் அவள் நடந்து செல்லும் போது கூட அகோரனின் கண் இமைக்காத பார்வை அவள் முதுகை துளைப்பதை போன்ற ஒரு உணர்வு அவளுக்கு வந்தது அகோரன் உடனே அவள் அருகில் வந்தவன் காந்தா கையில் இருந்த குழந்தையை வாங்கி கொண்டு பெண்ணவளின் தோளில் கையை போட்டு ஜோடியாக நடந்து வர அந்த ராட்ச கூட்டம் நீ நான் என்று போட்டி போட்டு கொண்டு அவர்களை பார்த்தது.
ஆனால் சில நொடிகள் கழித்து
அவளுடைய பார்வை மீண்டும் அவனைத் தேடியது ஓரக்கண்ணால் அவனை பார்க்க
அகோரனும் அவளை தான் பார்த்துக் கொண்டிருந்தான் வைத்த கண் வாங்காமல் பார்த்து கொண்டே இருந்தான்
இந்த முறை அவன் உதட்டின் ஓரத்தில் சிறிய புன்னகை வர அவந்திகா அவனை முறைத்துவிட்டு வேறு பக்கம் திரும்பிக்கொண்டாள்.
ஆனால் அவளுடைய உதட்டிலும் தெரியாமல் அவளே அறியாமல் ஒரு சிறிய புன்னகை மலர்ந்தது அன்று இருவரும் வெளிப்படையாக எதுவும் பேசவில்லை ஆனால் அவர்களுடைய பார்வைகள் மட்டும் ஒருவரோடு ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்தன.
விழா ஆரம்பமானது உறவினர்கள் அனைவரும் ஒன்று கூடியிருந்தனர்
அழகாக அலங்கரிக்கப்பட்ட தொட்டிலில் இரு குழந்தைகளும் அருகருகே படுத்திருந்தனர் ஒரு பக்கம் ஆண் குழந்தையும், மறுபக்கம் பெண் குழந்தையும் அவந்திகா அவர்களைப் பார்த்தபடி நின்றுகொண்டிருந்தாள் அகோரன் அவளருகில் வந்து நின்றான்.
“ரெண்டு பேருக்கும் பேர் யோசிச்சாச்சியா” என்று கேட்க அவந்திகா அவனைப் பார்த்தாள்
“நீயே சொல்லு ஆனா ஒரு கண்டிஷன் அகோரன் மாதிரி மட்டும் வேண்டாம்” என்றாள்
அகோரன் குழந்தைகளைப் பார்த்தான்
“பையன் பெயர் ஆதித்யன்” என்று கூற
அவந்திகாவின் முகத்தில் உடனே புன்னகை மலர்ந்தது ‘நல்லவேளை இந்த ராட்சச கூட்டத்துல இருந்து ஏதோ ஒரு பெயரை வைக்கல’ என்று நினைத்தாள்.
“ஆதித்யன்” என்று அவள் மெதுவாக அந்தப் பெயரை உச்சரித்தாள் பிறகு பெண் குழந்தையைப் பார்த்தாள்
“அப்போ இவளுக்கு என்ன பெயர் வச்சிங்க”
என்று அகோரனிடம் கேட்க அவளைப் பார்த்தவன் “ஆதிரா” என்று கூற
அந்தப் பெயரைக் கேட்டதும் அவந்திகாவின் முகம் இன்னும் மலர்ந்தது.
“ஆதித்தயன்… ஆதிரா…”
என்று இரு பெயர்களையும் ஒன்றாகச் சொல்லிப் பார்த்தாள் அகோரன் அவளைப் பார்த்தபடி,“உனக்குப் பிடிச்சிருக்கா”
என்று கேட்டான் பதிலுக்கு அவளோ “ரொம்ப நல்லா இருக்கு” என்றாள் அவனைப் பார்த்து மெதுவாகத் தலையசைத்தாள்.
இருவரும் பக்கத்து பக்கத்தில் நிற்க “காந்தா” என்று அழைத்தாள் அவந்திகா, அவளும் அவள் அருகில் வந்தவள் “சொலுலங்க மேடம்” என்றாள் “ஒரு போட்டோ எடுத்து கொடு” என்று போனை அவளிடம் கொடுக்க இருவரும் குழந்தைகளுடன் ஜோடியாக நிற்க அவந்திகா அவனை மீண்டும் ஓரக்கண்ணால் பார்த்தாள்
“நீ தான் என் சரிபாதி…” என்று அவன் கூறிய வார்த்தை அவளின் மனதை வந்து தொட
அவள் பார்வையைத் தாழ்த்திக்கொண்டாள்.
சில நிமிடங்களுக்குப் பிறகு குழந்தைகளுக்குப் பெயர் சூட்டும் நிகழ்ச்சி தொடங்கியது உறவினர்கள் அனைவரும் மகிழ்ச்சியாக வாழ்த்திக்கொண்டிருந்தனர் அவர்கள் வித்தியாசமான பல கொடூர உருவங்களில் இருக்க பெண்ணவளுக்கு பெரிதாக பயம் ஒன்றும் இல்லை சாதாரணமாக தான் இருந்தாள் அவர்கள் தங்களால் முடிந்த கிழங்கு பழங்கள் பூக்கள் இறச்சிகள் அனைத்தும் எடுத்து வந்திருந்தனர்
“ஆதித்யன்” “ஆதிரா” என்று குழந்தைகளின் பெயர் அறிவிக்கப்பட்டது அடுத்ததபடியாக சுற்றிலும் கைதட்டல் எழுந்தது ஆராவாரத்துடனே அவர்கள் வித்தியாசமான ஒலி எழுப்ப அவந்திகாவின் கண்களில் மகிழ்ச்சி தெரிந்தது அவள் தன் குழந்தைகளைப் பார்த்தாள் அருகில் நின்றிருந்த அகோரனும் குழந்தைகளைப் பார்த்துக்கொண்டிருந்தான்.
அந்த நேரத்தில் ஒரு நொடி அவந்திகா அவனைப் பார்த்தாள் சொல்லப்போனால் இன்று தான் அவனை சரியாக பார்க்கிறாள் என்று கூட சொல்லலாம் பனை மரத்தில் பாதி உயரத்தில் இருந்தான் அகோரன் கருப்பு நிற சட்டை கருப்பு பேன்ட் அணிந்து இருந்தான் உயரத்துக்கு ஏற்ற உடல்வாகுடன் பார்க்கவே கம்பீரபாக இருந்தான் அவன் கண்கள் மட்டும் மனிதர்களை போல் அல்லாமல் சற்று வித்தியாசமாக இருந்தது அவன் அவளை திரும்பி பார்க்க சட்டென தன் பார்வையை மாற்றி கொண்டாள் பெண்ணவள்
ஒரு வார்த்தையும் பேசாமல் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டே இருந்தனர்.
அவன் சூனியக்காரி பாட்டி வேண்டா வெறுப்புடன் விழா முடியும் தருவாயில் வந்து நின்றார் விழா முடிந்து அனைவரும் அங்கிருந்து ஒவ்வொருவராக கிளம்பி செல்ல கருப்பு நிற உருவம் மீண்டும் அந்த கூட்டத்தின் உள்ளே நுழைய காற்று பலமாக வீசியது அகோரனுக்கு ஏதோ ஒன்று வித்தியாசமாக பட சட்டென அங்கே திருப்பி பார்த்தான் அந்த உருவம் அந்த இடத்தை தீ வைத்து கொளுத்து விட அடுத்த கணம் அகோரனின் கண்களில் கோபத்தீ பரவியது “காந்தா அவந்திகாவையும் குழந்தையையும் கூட்டி இங்கிருந்து போ” என்று அந்த இடமே அதிரும் படி கத்தியவனின் உருவம் சற்றும் நேரத்தில் மனித உருவில் இருந்து ஒரு கொடிய ராட்சச உருவத்துக்கு மாறியது அடுத்த நொடி அவன் தீயின் உள்ளே பறந்து செல்ல.
அவந்திகா அங்கே நடந்த அனைத்து நிகழ்வுகளையும் அதிர்வுடனே பார்த்து கொண்டே நிற்க “எஜமானி அம்மா வாங்க போலாம்” என்று காந்தா கையில் இரண்டு பிள்ளைகளையும் வைத்து கொண்டு கூற பாட்டியும் அவளை பார்த்து முறைத்தவர்
“உள்ள போ” என்று கட்டளையிட அவளும் அறையின் உள்ளே சென்றாள் ஆனால் தீயினுள் சென்ற அகோரன் எங்கே என்று திரும்பி திரும்பி பார்த்து கொண்டே சென்றாள்.
அவந்திகா அறையின் உள்ளே சென்று பதட்டத்துடனே அமர்ந்தாள் காந்தா பிள்ளைகளை தொட்டிலில் படுக்க வைத்து கதவை மூடினாள் அந்த அறை ஜன்னலையும் வேக வேகமா மூட “காந்தா இங்க என்ன நடக்குது அகோரன் எங்கே அவ…அவருக்கு ஒன்னும் ஆகுதுல்ல” என்று பதட்டத்துடன் கேட்க அவளிடம் இருந்து எந்த வித பதிலும் இல்லை அவளுக்கு மட்டும் எப்படி தெரியும்.
அவந்திகா அவள் முகத்தையே பார்க்க அவள் எதுவும் பதில் பேசாமல் நிற்க உடனே மிகவும் பதட்டமடைந்தவள் கதவை திறந்து வெளியே ஓடினாள் “எஜமானி அம்மா நில்லுங்க” என்று கந்தா கத்தி கொண்டே அவள் பின்னே ஓடி வர அங்கே இருந்த தீ அணைக்கப்பட்டு இருக்க அங்கிருந்த பொருட்கள் அனைத்தும் எரிந்து கிடந்தது புகை மண்டலமாக இருந்தது அகோரன் எங்கே என்று அவள் கண்கள் அவனை தேடிப்பார்த்தது அவன் எங்கும் இல்லை என்றவுடன் அவளே அறியாமல் அவளின் கண்கள் கலங்க ஆரம்பித்தது.
அத்தியாயம் 22
காத்தா அவள் அருகில் வந்தவள் “உள்ள வாங்க முதல்ல நீங்க வெளியே இருந்தா உங்க உயிருக்கு ஆபத்து மா” என்று கூற பெண்ணவள் கலங்கிய கண்களுடன் காந்தாவை பார்த்தவள் “அகோரன் எங்க” என்று அவள் கேட்க “எனக்கு தெரியாது மா இப்படி தான் அடிக்கடி அந்த உருவம் வந்து ஐயாவை தொல்லை பண்ணும் அவரும் பறந்து போய் அதை தேடி கொல்ல போவாரு வர்ற ஒரு வாரம் கூட ஆகும் ஆனா அந்த இதுவரை அந்த உருவம் செத்ததே இல்லை ஆனா ஒவ்வொரு முறை அவரு திரும்ப வரும் போது பல காயங்களோட தான் வருவாரு” என்று கூற பெண்ணவளின் முகம் வாடியது “வாங்க மா ஐயா வரும் போது தான் வருவாரு” என்று கூறி அவளை அழைத்து செல்ல பெண்ணவள் கலங்கிய கண்களுடன் திரும்பி திரும்பி பார்த்து கொண்டே அறையின் உள்ளே சென்றாள்.
அப்போது இருந்து சரியாக ஏழு நாட்கள் கடந்திருந்தது ஒவ்வொரு நாளும் விடியும்போதும் அஞ்சலியின் முதல் பார்வை அகோரனை தான் தேடியது அவள் தினமும் அவனுக்காக காத்திருந்து சோர்ந்து போக
ஒவ்வொரு இரவும் கண்களை மூடும்போதும் அவன் காயங்களோடு திரும்பி வரும் காட்சி தான் அவளது மனதில் தோன்றியது ஒரு நாள் இரவு பெண்ணவள் நன்றாக உறங்கி கொண்டிருந்தாள் அப்போது அவள் கனவில் அகோரன் ரத்த காயங்களுடன் இறந்து கிடப்பதை போல ஒரு கனவு வர பெண்ணவள் அடித்து பிடித்துக் கொண்டு எழுந்தாள்.
நள்ளிரவு வேளை பிள்ளைகள் இரண்டும் உறங்கி கொண்டிருந்தனர் பெண்ணவள் மட்டும் எழுந்து வெளியே வந்தவள் வெளியே இருந்த காந்தாவிடம் “அவர் இன்னும் வரலையா காந்தா” என்று கேட்க அந்த நாளில் மட்டும் இது நூறுவது முறையாக அவள் வந்து கேட்க காந்தாவுக்கே அவளை பார்க்க பாவமாக இருந்தது காந்தா அவளைப் பார்த்து பெருமூச்சு விட்டாள் “இல்லை மா எஜமான் இன்னும் வரலை நீங்க போய் தூங்குங்க…” என்றாள்.
அந்த இரண்டு வார்த்தைகள் அஞ்சலியின் இதயத்தை மீண்டும் ஒருமுறை வலிக்கச் செய்தது அவள் அமைதியாக அறையின் உள்ளே வந்தவள் அறையின் ஜன்னல் அருகே சென்று நின்றாள் வெளியே அடர்ந்த காடு பனியும் இருளில் மூழ்கிக் கொண்டிருந்தது அவளது விரல்கள் தன்னையறியாமல் மேலே போர்த்தியிருந்த கம்பளியை இறுக்கி பிடித்தது காதல் பிரிவு அதனுடன் சேர்ந்து அவன் அருகாமைக்கும் பெண்ணவள் ஏங்கி தவிக்க ஆரம்பித்தாள்.
“நீ எப்போ வருவ டா..நீ இருந்தாலும் தொல்லையா இருக்கு…இல்லைன்னாலும் தொல்லையா இருக்கு” என்று வாய்விட்டே புலம்பியவளின் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தோடியது அவள் மெதுவாக கண்களை மூடிக்கொண்டாள் ஆனால் அவளின் அழுகை மாத்திரம் நிற்கவேயில்லை அவளின் கன்னத்தை ‘என்ன இது நான் எதுக்கு அவனுக்காக அழனும்’ என்று நினைத்தவள் கண்ணை துடைத்து கொண்டாள் இருப்பினும் மீண்டும் அழுகை வந்தது படுக்கையில் படுத்தவளுக்கு உறக்கமும் வரவில்லை கண்களை மூடி மட்டும் படுத்து கிடந்தாள்
அந்த நேரத்தில் வனத்தின் அமைதியை கெடுக்கும் வண்ணம் காட்டின் வெகு தொலைவில் இருந்து ஒரு பயங்கரமான அலறல் கேட்டது “ஆஆஆஆ…” என்ற அலறல் சத்தம் கேட்க காட்டின் நான்கு புறமும் அந்த சத்தம் எதிரொலித்தது பறவைகள் சிறகை விரித்து சத்தத்துடன் பறந்தன அந்த சத்தம் மொத்த காடையும் அதிர வைத்தது அஞ்சலி திடுக்கிட்டு கண்களைத் திறந்தாள் காந்தாவும் பயந்து அவளை நோக்கி ஓடி வந்தாள்.
“மா… உள்ளேயே இருங்க வெளிய வராதிங்க” என்று கூற பெண்ணவளின் இதயம் படபடவென அடித்து கொண்டது மிகவும் பதட்டமடைய ஆரம்பித்தாள் “காந்தா அது…” என்ற கூற வந்த அவந்திகாவின் குரல் நடுங்கியது அவளால் அதற்க்கு மேல் எதுவும் பேச முடியவில்லை முத்து முத்தாக வியர்க்க ஆரம்பித்தது மீண்டும் அந்த அலறல் சத்தம் கேட்டது இந்த முறை அது இன்னும் அருகில் கேட்டது அஞ்சலியின் இதயம் வேக வேகமாகத் துடித்தது “அது அகோரனா” என்று கேட்க காந்தா பதில் சொல்லாமல் ஜன்னலை மூடச் சென்றாள் அப்போது காட்டு இருளுக்குள் ஒரு உருவம் தடுமாறியபடி நடந்து வருவது தெரிந்தது அஞ்சலியின் பார்வை அந்த உருவத்தின் மீது பதிந்தது ஒரு கணம் அவள் மூச்சே நின்று போனது உடல் முழுவதும் காயங்கள்…சட்டையின்றி வெற்று உடலில் ஆங்காங்கே ரத்தக்கறைகள்…ஒரு கையை மார்போடு அழுத்தியபடி…அவன் மெதுவாக அந்த வீட்டை நோக்கி நடந்து வந்துகொண்டிருந்தான்.
“அகோரன்…” என்று அஞ்சலியின் உதடுகள் தன்னையறியாமல் அவன் பெயரை உச்சரித்தன அடுத்த நொடி கதவு பலமாக திறந்தது அகோரன் உள்ளே வந்தான் அவன் கண்கள் மட்டும் வழக்கம்போல் சிவந்து எரிந்துகொண்டிருந்தன ரத்த காயங்களுடன் அவன் அறையின் உள்ளே அகோரன் வந்தவன் முதலில் வேகமாக நடந்து வந்து தொட்டிலில் இருந்த குழந்தைகளை தான் பார்த்தான் அடுத்த படியாக அவன் பார்வை அவந்திகாவிடம் வந்தது அவளை பார்த்தவன் அவள் நன்றாக இருக்கிறாள் தெரிந்ததவுடன் அவன் மனது நிம்மதியடைய அடுத்த கணம் கண்கள் இருட்டி பெண்ணவள் மீது மயங்கி சரிந்தான்.
அவன் பாரம் தாங்க முடியாமல் பெண்ணவள் தடுமாற காந்தா அகோரனை பிடித்து கொண்டாள் அவன் பாட்டி சத்தம் கேட்டு அந்த அறையின் உள்ளே வந்ததார் “யாருக்கு என்னாச்சு” என்று கேட்டவர் மயங்கி கிடந்த தன் பேரனை பார்த்தவர் “அய்யோ அகோரா எங்க இனத்தின் கடைசி வாரிசே உனக்கு என்னவாயிற்று” என்று கத்தி கொண்டே அவன் அருகில் “அரசி அவருக்கு இப்போவே மருத்துவ உதவி தேவை” என்க “காந்தா நீ அவரை கூட்டிட்டு வா” என்ற அவந்திகா வெளியே சென்று காரை எடுக்க காந்தா அகோரனை காரில் படுக்க வைத்தாள்.
“நீ குழந்தைகங்களை பார்த்துக்கோ பால் பிரிட்ஜில எடுத்து வச்சிருக்கேன்” என்று கூறியவள் காரை அங்கிருந்து வேகமாக ஓட்டிச் செல்ல பாட்டி கோபத்துடனே பெண்ணவளை பார்த்தார் அடுத்த அரை மணி நேரத்தில் கார் அந்த வனத்தை தாண்டி ஒரு மருத்துவமனையை வந்தடைய பெண்ணவள் அங்கிருந்தவர்கள் உதவியுடன் அவனை மருத்துவமனையில் அனுமதித்தாள் அவனுக்கு அவசர சிகிச்சை அளிக்கப்பட்டது.
செவிலியர் ஒருவர் அவளிடம் வந்து “அவர் யாரு பெயர்” என்று கேட்க “அகோ..” என்று கூற வந்து தன்னை கட்டுக்குள் கொண்டு வந்தவள் “அசோக் என் ஹஸ்பன்ட்” என்று கூறினாள் அவரும் இன்னும் தேவையான குறிப்புகளை கேட்டு எழுதிக் கொண்டு அங்கிருந்து சென்றார்.
அடுத்த ஒரு மணி நேரத்தில் மருத்துவர் வெளியே வந்தவர் “ஒன்னும் இல்லை அவரை சிங்கமோ புலியோ ஏதோ ஒரு மிருகம் அட்டாக் பண்ணியிருக்கு அவரு அதுக்கிட்ட இருந்து போராட டிரை பண்ணியிருக்காரு இப்போ நல்லா இருக்காரு நீங்க வீட்டுக்கு கூட்டிட்டு போலாம்” என்று கூற பெண்ணவளுக்கு அப்போது தான் உயிரே வந்ததது “டாக்டர் நான் அவரை பார்க்கலாமா” என்று கேட்க அவரும் சரியென்று தலையை ஆட்ட பெண்ணவள் கண்கள் கலங்க அறையின் உள்ளே ஓடினாள் அகோரன் ஆங்காங்கே தையல் போடப்பட்டு கட்டுகளுடன் அமர்ந்திருந்தான் அறையின் உள்ளே வந்தவளை சந்தேகமாக பார்த்தவனுக்கு என்ன புரிந்ததோ அமைதியாக அமர்ந்திருந்தான்.
அவந்திகா தயங்கி தயங்கி அவன் அருகில் சென்றவள் “நீ…நான்…உனக்கு உடம்பு பரவாயில்லையா” என்று கேட்க “ம்ம் பரவாயில்லை நாம வீட்டுக்கு போலாமா குழந்தைகளை பார்த்தே ஒரு வாரம் ஆச்சு” என்று கூற பெண்ணவளின் முகம் வாடியது ‘இப்போ கூட அவன் குழந்தைகளை பத்தி மட்டும் தான் கேட்ப்பானா என்னை பத்தி ஒரு வார்த்தை கூட கேட்க மாட்டானா’ என்று நினைத்தவள் அவனிடம் அதை பற்றி கேட்கவில்லை “சரி போலாம்” என்றாள்.
இருவரும் காரில் ஏறி அமர அவந்திகா டிரைவர் சீட்டில் அமர்ந்து காரை லாவகமாக ஓட்ட ஆரம்பித்தாள் ஆணவன் பின்னிருக்கையில் அமர்ந்திருக்க அவர்கள் வரும் போதே விடியல் வந்தது பொழுதும் புலர்ந்திருந்தது ஏதோ அவர்கள் வாழ்வில் ஒளி வந்ததை போல தோன்றியது பெண்ணவள் ரத்த சிவப்பு நிற காட்டன் புடவை கட்டியிருந்தாள் தன் நீண்ட தலைமுடியை கொண்டையிட்டு இருந்தாள் அவசர அவசரமாக வந்ததில் அவள் புடவையை சரியாக கட்டியிராமல் இருக்க அவள் கார் ஓட்டும் போது அவளின் இடை பக்கம் இருந்த புடவை கீழே இறங்கி இருந்தது.
அவளின் இடை மன்னவன் கண்ணுக்கு தெள்ள தெளிவாக தெரிய ஆணவன் கண்கள் அங்கேயே நிலைத்து இருந்தது இத்தனை நாள் கண்ணிலேயே படாத மனைவியின் மேனி அழகு இன்று கண்ணில் பட ஆணவனுக்கு மோகம் தலை தூக்க உடலின் வெப்பம் அதிகரித்தது அவன் துளைக்கும் பார்வையை பெண்ணவளும் உணர்ந்தாளோ என்னவோ கண்ணாடி வழியே அவன் பார்வையை கவனித்தவள் தன் புடவையை சரி செய்து கொண்டாள்.
அகோரனுக்கு அவள் செயல் ஏமாற்றத்தை கொடுக்க அவன் முகத்தை தூக்கி வைத்து கொள்ள அவந்திகாவும் அவனை கவனிக்காமல் இல்லை கார் நேரே கண்ணாடி மாளிகையின் வாசலில் வந்து நிற்க அவன் பாட்டியும் காந்தாவும் அவனுக்காக காத்திருந்தார்.
“அகோரா” என்ற கலங்கிய குரலுடன் பாட்டி அவன் அருகில் வந்தவர் “நம் குலத்தில் ஒரு பெண்ணை திருமணம் செய்திருந்தால் இந்த நிலை வந்திருக்குமா உனக்கு” என்றவர் அவந்திகாவை பார்த்து முறைக்க அவளும் பதிலுக்கு அவரை பார்த்து முறைத்தவள் “உங்க பேரனை நான் ஒன்னும் எனக்கு வாழ்க்கை கொடுக்க சொல்லி கூப்பிடலை” என்றாள் கோபத்துடனே பதிலுக்கு “என்ன டி ரொம்ப வாய் பேசுற அவன் யாருன்னு தெரியுமா உன்னால நான் அவன் இவ்வளவு கஷ்டப்படுறான்” என்று அவர் கத்த அகோரன் இருவரையும் எப்படி சமாளிப்பது என்று தெரியாமல் விழிக்க காந்தா அதை புரிந்து கொண்டவளை போல “எஜமானி அம்மா குழந்தைங்க அழுதுட்டு இருக்காங்க” என்று பெண்ணவளை அழைக்க அவளின் கவனம் குழந்தைகளிடம் வந்தது அதன் பின் அனைவரும் உள்ளே வர அவந்திகா அறையின் உள்ளே சென்றாள்.
அகோரனும் பாட்டியை சமாளித்து தன் அறையின் உள்ளே வந்து படுத்து கண்களை மூடினான் அவந்திகா மகனை கையில் வைத்து கொண்டே அவனை பார்க்க அகோரன் மறுபுறம் வந்து படுக்கையில் சோர்வுடனே விழுந்தான் அவன் கண்களை மூடி உறங்க வேண்டுமென்றே அவள் மகனின் கையில் லேசாக அடிக்க அவன் வீல்லென்று அழுக அகோரன் திடுக்கிட்டு எழுந்தான்.