தைத்தியனின் தேவதை 19,20

அத்தியாயம் 19

“அவந்திகா…” என்று தன்னை யார் அழைக்கிறார்கள் என்று பெண்ணவள் திரும்பி சுற்றும் முற்றும் பார்த்தாள் ஆனால் அவளின் கண்களுக்கு யாரும் தென்படவில்லை அடுத்த நொடியே அவளருகில் வேகமாக ஓடி வந்தாள் பூஜா அவளை பார்த்ததும் அவந்திகாவின் முகம் சட்டென்று மலர்ந்தது.

“பூஜா…” என்று அவந்திகா மகிழ்ச்சியுடன் அழைக்க, பூஜாவும் அவளை பார்த்து புன்னகைத்தாள் “அவந்தி…” என்று அழைக்க இருவரும் சில நொடிகள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர் எத்தனை மாதங்களுக்குப் பிறகு பார்க்கிறார்கள் இருவருக்கும் அப்படி ஒரு மகிழ்ச்சி.

“எப்படி டி இருக்க உன்னை பார்த்து எவ்வளவு நாள் ஆச்சு” என்று பூஜா அவளுடைய கையைப் பிடித்துக் கொண்டே கேட்டாள் அவந்திகா பதில் சொல்லப் போகும் நேரத்தில், அவள் கையில் இருந்த குழந்தை சினுங்கியது அந்த சத்தம் கேட்டதும் அவந்திகாவுக்கு தன் நிகழ்கால வாழ்க்கை நினைவுக்கு வந்தது.

கல்லூரி நாட்களில் தன்னுடன் இருந்த தோழியின் முன்னால் இப்போது இரண்டு குழந்தைகளின் தாயாக நின்று கொண்டிருந்தாள் அவளால் முன்புபோல் இயல்பாக பேச முடியாமல் தடுமாறினாள் அவள் தோழி அழகாக ஜீன்ஸ் டாப் அணிந்து மார்டன் அணிந்து மார்ட்டின் யுவதியாக நிற்க இவள் காட்டன் புடவை கட்டி கையில் பிள்ளையுடன் நிற்க சற்று அவமானமாகவும் ஏக்கமாகவும் இருந்தது.

“நான்… நல்லா இருக்கேன் டி…” என்று மெதுவாக பதில் சொல்ல, பூஜாவின் பார்வை அவள் கையில் இருந்த குழந்தையின் மீது சென்றது “இது… உன் குழந்தையா டி” என்று கேட்டவள், பதிலுக்காக காத்திருக்காமலேயே குழந்தையை அவந்திகாவின் கையிலிருந்து வாங்கிக் கொண்டாள் குழந்தையை பார்த்ததும் அவளுடைய முகம் இன்னும் மலர்ந்தது.

“அட… உன்னை மாதிரியே இருக்கு டி பேபி அப்படியே உன் முகம்” என்று கூற அவந்திகாவின் உதட்டில் மெல்லிய புன்னகை தோன்றியது அவள் பதில் சொல்லும் முன்பே பூஜா மீண்டும் பேசினாள் “எங்க கிட்ட ஒரு வார்த்தை கூட சொல்லாம காலேஜ்ல இருந்து போயிட்டல்ல எவ்வளவு தேடினோம் தெரியுமா உன்னைப் பற்றி எதுவுமே தெரியல…”அந்தக் கேள்விக்கு அவந்திகா என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் அமைதியாக நின்றாள்.

அப்போது பூஜாவின் பார்வை அவளுக்கு சற்று பின்னால் நின்றிருந்த அகோரன் மீது சென்றது உயரமாகவும், கம்பீரமாகவும் அமைதியாக கையில் இன்னொரு குழந்தையுடன் நின்றிருந்தவனைப் பார்த்தவள் மீண்டும் அவந்திகாவை பார்த்தாள் “இவரு… உன் ஹஸ்பன்ட்டா டி” என்று கேட்க அந்தக் கேள்வி அவந்திகாவை மேலும் தடுமாற வைத்தது அவள் அகோரனை பார்த்தாள்.

அவனோ எந்த உணர்ச்சியையும் வெளிக்காட்டாமல் அமைதியாக நின்றிருந்தான் அந்த நேரத்தில் பூஜாவே அவனிடம் கை நீட்டினாள் “ஹாய் அண்ணா… நான் பூஜா அவந்திகாவோட ஃப்ரண்ட்” என்று அகோரன் ஒரு நொடி அவளை பார்த்துவிட்டு, அவளது கையைப் பிடித்தான்.

“நான் அசோக் உங்க ஃப்ரண்ட்டோட ஹஸ்பண்ட்” என்றான்‌ அவளை ஓரக்கண்ணால் பார்த்து கொண்டே அவன் இயல்பாக கூறியதும், அவந்திகா உடனே அவனை முறைத்துப் பார்த்தாள் அவளுடைய பார்வையை புரிந்துகொண்டவன் போல, அகோரனின் உதட்டின் ஓரத்தில் மிகச் சிறிய புன்னகை தோன்றியது.

அவன் தன்னை என்ன வேண்டுமானாலும் அறிமுகப்படுத்திக் கொள்ளட்டும் என்பது போல அவந்திகா முகத்தைத் திருப்பிக் கொண்டாள் அப்போது அவர்களிடம் சுபாஷ் வந்து சேர்ந்தான் “ஏய் சுபாஷ்… இங்க பாரு” பூஜா உற்சாகமாக அவனை அழைத்தாள்.

“அவந்தியோட பேபிஸ் ட்வின்ஸ் போல பாரு, ரெண்டு பேரும் ஒரே மாதிரி இருக்காங்க” என்று கூற சுபாஷின் பார்வை உடனே பூஜாவின் கையில் இருந்த குழந்தையின் மீது சென்றது அடுத்ததாக அவளுக்குப் பின்னால் நின்றிருந்த அகோரனின் மீதும் விழுந்தது அவன் முகத்தில் ஒரு மெல்லிய புன்னகை தோன்றியது ஆனால் அந்தப் புன்னகை கண்களை எட்டவில்லை உண்மையைச் சொல்லப்போனால், அவனுக்கு சிரிப்பே வரவில்லை ஒரு காலத்தில் அவந்திகாவிடம் தன் காதலை சொல்லாமல் மனதிற்குள் சுமந்துகொண்டு திரிந்தவன் அவன்.

அவள் ஒருநாள் தன்னை புரிந்துகொள்வாள் என்ற நம்பிக்கையும் அவனுக்குள் இருந்தது ஆனால் இன்று…அவள் அவன் முன்னால் இரண்டு குழந்தைகளுடன் நின்று கொண்டிருந்தாள் அவளுக்கு அருகில் அவளுடைய கணவனாக இன்னொரு ஆணும் நின்றிருந்தான்.

அந்த உண்மை சுபாஷின் நெஞ்சுக்குள் இருந்து அவன் மனதை குத்தி கிழித்தது “ஆமா… ரொம்ப அழகா இருக்காங்க…” என்று மட்டும் சொன்னான் அவந்திகா அவனைப் பார்த்தாள் அவனுடைய முகத்தில் இருந்த அந்த வலியை அவள் கவனிக்காமல் இல்லை.

ஒரு காலத்தில் தன்னை காதலித்தவன இன்று தன் வாழ்க்கையை வேறு ஒருவன் பக்கத்தில் நின்று பார்த்துக் கொண்டிருக்கிறான் அவந்திகாவின் மனதிற்குள் ஏதோ ஒரு குற்ற உணர்வு மெதுவாக எழுந்தது அவள் அவனை காதலிக்கவில்லை தான் ஆனால் அவனை காயப்படுத்துவதை போல தோன்றியது ஆனால் அவளால் அதற்கு எந்த பதிலும் சொல்ல முடியவில்லை.

அவளுக்குப் பின்னால் நின்றிருந்த அகோரனோ, சுபாஷின் பார்வையை அமைதியாக கவனித்துக் கொண்டிருந்தான் அவனுடைய கண்களில் மட்டும் அந்த அமைதிக்குள் மறைந்திருந்த எச்சரிக்கை உணர்வு மெல்ல வெளிப்படத் தொடங்கியது ஏனோ அவனுக்கு சுபாஷை பிடிக்கவேயில்லை அவனுக்கு அவனை பற்றியும் முன்பே தெரியும்.

அவந்திகா முகம் வாடி இருப்பதை பார்த்த சுபாஷ் மனம் வலித்தது ஒருவேளை அவளுக்கு இந்த திருமணத்தில் விருப்பம் இல்லையோ என்று நினைத்தவன் அவளிடம் பேச வேண்டும் என்று தோன்றியது எப்படி அழைக்க என்று தெரியாமல் “வாங்களேன் எல்லாரும் போய் ஒரு காபி சாப்பிட்டு வரலாம்” என்று அவன் கேட்க அகோரனுக்கு புரிந்து போனது அவன் எண்ண ஓட்டம் என்னவென்று இருப்பினும் அவந்திகா என்ன சொல்கிறாள் என்று காத்திருக்க “சாப்பிடலாமே” என்று அவள் கூற சகோதரனின் முகம் கோபத்தில் சிவந்தது பெண்ணவள் அதை கவனிக்கவில்லை.

அனைவரும் பக்கத்தில் இருந்த காபி ஷாப்புக்கு செல்ல ஏனோ அவந்திகாவுக்கு தான் சற்று சங்கடமாக இருந்தது அவளால் சகஜமாக இருக்க முடியவில்லை அவள் வயது இருக்கும் நண்பர்களுடனே பேச சங்கடப்பட்ட அகோரனுக்கும் அது புரிந்து தான் இருந்தது இருப்பினும் அவன் பெரிதாக மறுக்கவில்லை.

சுபாஷ் அவந்திகாவையே பார்த்து கொண்டு இருந்தான் அவளிடம் எப்படி பேசுவது என்ற யோசனையுடனே இருக்க அகோரனின் காபியை குடித்து கொண்டே அவனையே பார்த்து கொண்டு இருந்தது சில நிமிடங்கள் கழித்து அவந்திகா எழுந்தாள்.

“நான் வாஷ்ரூம் போயிட்டு வரேன்” என்று கூறிவிட்டு குழந்தையை பூஜாவிடம் அவளும் வாங்கி கொண்டாள் அவள் எழுந்து செல்ல சுபாஷின் கண்கள் அவளிடமே இருந்தது அகோரன் அவளை கொன்றுவிடும் ஆத்திரத்துடன் பார்த்து கொண்டு இருந்தான்.

சில நிமிடங்கள் கழித்து அவந்திகா வெளியே வருவதை பார்த்த சுபாஷ் ஏதேதோ காரணத்தை சொல்லிவிட்டு வெளியே சென்றான் அவந்திகா அருகில் சென்று “அவந்தி…” என்று அழைக்க அவள் திரும்பிப் பார்த்தாள்.

“என்ன சுபாஷ்” என்று கேட்க சுபாஷ் சில நொடிகள் அமைதியாக அவளைப் பார்த்துக் கொண்டிருந்தான் எப்படி கேட்பது என்று தெரியவில்லை இறுதியில் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு,“உனக்கு… இந்தக் கல்யாணம் பிடிச்சிருக்கா” என்று கேட்டான் நேரடியாக அந்தக் கேள்வி அவந்திகாவை அப்படியே உறைய வைத்தது அவளது கண்கள் தன்னிச்சையாக அகோரனை நோக்கிச் சென்றன அவன் சற்று தூரத்தில் அமர்ந்திருந்தான் அவளைப் பார்க்கவில்லை பூஜா ஏதோ பேசிக் கொண்டு இருக்க அதை கவனித்து கொண்டு இருந்தான்.

ஆனால் ஏதோ ஒரு கணத்தில் அவன் பார்வை தன்னை நோக்கித் திரும்பிவிடுமோ என்ற பதற்றம் அவளுக்குள் ஏற்பட்டது “நான்…” என்ற அவந்திகாவின் வார்த்தைகள் தொண்டைக்குள் சிக்கின.

“அவந்தி… நான் உன்னை கஷ்டப்படுத்தனும்ன்னு கேட்கல நீ சந்தோஷமா இருக்கியா என்று தெரிஞ்சுக்கனும்னு தான் கேட்டேன் சாரி தப்பா எதாவது கேட்டு இருந்தா…” என்ற சுபாஷின் குரலில் இருந்த உண்மையான அக்கறை அவளை மேலும் தடுமாறச் செய்தது.

“நான்…” என்றவள் மீண்டும் அதே வார்த்தை மட்டுமே அவளிடமிருந்து வந்தது சுபாஷ் அவளது முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தான் “உனக்கு இந்த வாழ்க்கை… பிடிச்சிருக்கா” என்று மீண்டும் கேட்க எதுவும் பதில் சொல்ல முடியாமல் அவந்திகா தலையைத் தாழ்த்திக் கொண்டாள்.

அவளால் ‘ஆம்’ என்றும் சொல்ல முடியவில்லை ‘இல்லை’ என்றும் சொல்ல முடியவில்லை அவளது அமைதியே சுபாஷுக்கு பதிலாகத் தோன்றியது “சுபாஷ் நான் நல்லா தான் இருக்கேன்” என்று அவள் கூறி முடிக்கவும் “அவந்திகா” என்று கோபத்துடன் அகோரன் அழைக்கவும் சரியாக இருந்தது அவள் திடுக்கிட்டு திரும்ப அவன் கையில் பிள்ளையுடன் நின்றிருந்தான்.

அகோரன் அங்கே வந்த வெயிட்டரை உற்று பார்க்க அவன் வேண்டுமென்றே சுபாஷ் அருகில் வந்து மோதியவன் மொத்த ஜூஸ்சையும் அவன் மீது கொட்டி விட “சாரி சார் சாரி” என்றான் ஏதோ மயக்கத்தில் இருந்து தெளிந்தவனை போல அந்த வெயிட்டர் “அவந்தி நான் வாஷ் ரூம் போய்ட்டு வரேன்” என்று கூறிவிட்டு அங்கிருந்து கிளம்ப அகோரன் பெண்ணவள் அருகில் வந்தவன் “குழந்தைங்க அழறாங்க பீட் பண்ணனும் வா” என்று கூறி அவளை அழைத்து சென்றான்.

அவன் கைகள் கெட்டியாக அவந்திகா கையை பிடித்து இருக்க “என் கையை விடு” என்றாள் கோபத்துடனே பெண்ணவள் அகோரன் திரும்பி அவளை ஒரு பார்வை பார்க்க அவன் பார்வையில் தெரிந்த தீ அவளுக்கு பயத்தை கொடுக்க அவள் அமைதியாக வந்தாள் பூஜா கையில் இருந்த குழந்தையை அவந்திகா வாங்கி கொள்ள “நாங்க அப்புறம் வரோம் மா” என்று கூறிவிட்டு அகோரன் பெண்ணவளை அங்கிருந்து அழைத்து சென்றான்.

பூஜாவுக்கு ஒன்றும் புரியாமல் இருவரையும் பார்த்தவள் “சரி போய்ட்டு வாங்க” என்றாள் “மறக்காம கால் பண்ணு அவந்தி” என்று கூறி அனுப்பி வைக்க இருவரும் காரில் ஏறினர் காருக்குள் சில நொடிகள் குழந்தையின் அழுகை மட்டுமே கேட்டுக் கொண்டிருந்தது அகோரனின் முகம் இறுகிப் போயிருந்தது. ஸ்டியரிங்கை பிடித்திருந்த அவனுடைய விரல்கள் கோபத்தில் இறுக்கமாக இருந்தன குழந்தை அழ பிள்ளைக்கு பசியாற்ற அகோரன் கோபத்துடனே காரை ஓட்டினான் இருவரும் வரும் போது இருந்த மகிழ்ச்சி இப்போது இல்லை அகோரனுக்கு சுபாஷை கொன்றுவிட்டாள் என்ன என்று கூட தோன்றியது அத்தனை கோபம் அவன் மீது வந்தது எவ்வளவு தைரியம் இருந்தாள் என்னவளிடம் வந்து பேசுவான் என்று நினைத்தான்.

 

அத்தியாயம் 20

 

காருக்குள் ஒரு குண்டு ஊசியை போட்டால் கூட சத்தம் வரும் அளவுக்கு இருவரும் அமைதியாக இருந்தனர் சொல்லப்போனால் இருவரும் வெவ்வேறு மனநிலையில் இருந்தனர் ஒரு குழந்தை வரும் வழியிலேயே இன்னொரு குழந்தையையும் பசியாற்றி உறங்க வைக்கவும் இருவரும் வீடு வந்து சேரவும் சரியாக இருந்தது வீட்டிற்குள் வந்ததிலிருந்து இருவருக்கும் இடையே ஒரு வார்த்தை கூட பேசப்படவில்லை.

 

குழந்தைகளுக்கு பசியாற்றி அவர்களை அறையில் படுக்க வைத்துவிட்டு, அவந்திகா அறைக்குள் இருந்த படுக்கையில் வந்து அமர அவளுக்குப் பின்னாலேயே வந்த அகோரன் அந்த அறையின் கதவை மூடிவிட்டு அமைதியாக அவளை முறைத்து கொண்டே நின்றான் அவனுடைய முகத்தில் இன்னும் கோபம் அப்படியே இருந்தது அதைப் பார்த்ததும் அவந்திகாவால் தன்னை அடக்கிக் கொள்ள முடியவில்லை “எதுக்கு என்னை அங்கிருந்து கூட்டிட்டு வந்திங்க” என்று கேட்க

அகோரனின் புருவம் சுருங்கியது முகம் சிவந்து இன்னும் கோபம் அதிகரித்தது அவளை இன்னும் எரித்து விடுவதை போல பார்க்க உன் பார்வைக்கு எல்லாம் நான் பயப்பட மாட்டேன் என்பதை போல் நின்றாள் அவந்திகா.

 

“சொல்லு அங்கிருந்து என்னை ஏன் அப்படி இழுத்துட்டு வந்த நான் என் பிரண்ட்ஸ் கூட பேசுனா உனக்கு என்ன வந்துச்சு உன்னை மாதிரி அப்பா அம்மா சொந்த பந்தம் நண்பர்கள்ன்னு யாரும் இல்லாம என்னையும் அனாதை மாதிரி வாழ சொல்றியா” என்று கேட்க அவளுடைய குரலில் கோபம் இருந்தது.

 

அகோரனுக்கு உடனே கோபம் வர அவளின் கழுத்தை பிடித்தவன் “என்ன டி ரொம்ப வாய் பேசுற” என்று கேட்டு கொண்டே அவளை பார்த்து முறைக்க அவள் எதற்க்கும் அசராமல் அவன் இடுப்பை பிடித்து கிள்ள அடுத்த கணம் அவளின் கழுத்தில் கையை எடுத்தான் அகோரன் “லூசு” என்றவன் அவளை கோபத்துடனே பார்த்து முறைத்தவன்

“எவ்வளவு தைரியம் இருந்தா அவன் உன் கிட்ட வந்து அப்படி பேசுவான் அதனால தான் உன்னை அங்க இருந்து கூட்டிட்டு வந்தேன்” என்றான் கோபத்துடனே.

 

அகோரனின் குரல் அறை முழுவதும் அதிர்ந்தது அவன் குரலே சொன்னது அவன் மிகுந்த கோபத்தில் இருக்கிறான் என்று அவந்திகா ஒரு நொடி திகைத்தாலும், அடுத்த நொடியே அவனை நேராகப் பார்த்தாள்.

 

“யார் என்ன பேசுனா” என்று அவள் கேட்க அகோரனின் முகம் மாறியது “அவன் தான் உன் கிட்ட ஒருத்தன் வழிஞ்சிட்டு இருந்தானே அவன் தான்” என்றான் “யாரை சொல்ற நீ” என்று ஒரு நிமிடம் யோசித்தவளுக்கு புரிந்து போனது அவன் யாரை சொல்கிறான் என்று 

“அப்போ நாங்க பேசுனதை ஒட்டு கேட்டியா” என்று அவள் கேட்க அகோரன் அவளை சில நொடிகள் உற்றுப் பார்த்தான் பிறகு மெதுவாக அவளருகில் வந்தவன் அவளை இடையை பிடித்து தன் அருகில் இழுத்தவன்

“நான் ஒன்னும் ஒட்டு கேட்க்கல நீ மனசுல நினைச்சாலே எனக்கு கேட்க்கும் உன் கிட்ட யார் பேசுனாலும் உனக்கு என்ன நடந்தாலும் எனக்கு தெரியும் ஏன்னா நீ தான் என் சரி பாதி” என்றான் அவளின் கண்களை நேராக பார்த்து அவன் குரல் இப்போது சற்றுத் தாழ்ந்திருந்தது.

 

“நீ இப்போ என்ன நினைக்கிறேன்னு கூட எனக்கு கேட்கும்” என்று அவந்திகாவின் முகத்தில் குழப்பம் தோன்றியது அவன் கூறியதை கேட்டு அவளுக்கு சற்று அதிர்ச்சியாக கூட இருந்தது அவளின் கன்னத்தை பிடித்து அகோரன்

“உன் முகத்தை பார்த்தாலே உன் மனசுக்குள்ள என்ன ஓடுதுன்னு எனக்கு தெரியும் நீ அவன்கிட்ட பதில் சொல்லாம அமைதியா நின்ன அந்த ஒரு நிமிஷமே போதும்… அவன் கேட்ட கேள்விக்கு உன்னால பதில் சொல்ல முடியலன்னு எனக்கு புரிஞ்சிடுச்சு” என்று அவன் அவந்திகாவின் கண்கள் அவனை நோக்கி நிலைத்து இருந்தது.

 

“நான் யார்கிட்ட பேசுனா உனக்கு என்ன” என்று 

அவள் சற்றுக் கோபமாகவேகேட்டாள்

அந்த வார்த்தை அகோரனின் பொறுமையை முற்றிலும் உடைத்தது “எனக்கு என்னவா”

அவன் இன்னும் ஒரு அடி முன்னால் வந்தான்

“நீ யார் கிட்ட பேசுனாலும் எனக்கு கோபம் வரும் ஏன்னா நான் உன்னை காதலிக்கிறேன் டி” என்று அவன் கூற அந்த வார்த்தை அறையெங்கும் எதிரொலித்தது அவந்திகா அப்படியே உறைந்து போய் நின்றாள்.

 

அகோரனின் கண்கள் அவளுடைய கண்களிலிருந்து விலகவே இல்லை

“நான் உன்னை காதலிக்கிறேன் இந்த உலகத்துல எனக்கு மனைவின்னு ஒருத்தி இருந்தா… அது நீதான் என் வாழ்க்கையில நான் நேசிக்கிற பெண் நீ ஒருத்தி மட்டும் தான் எனக்கே எனக்குன்னு‌ இருக்கவள் உரிமை எடுத்துக்க இன்னொருத்தன் முயற்சி எடுத்தா அவனை நான் கொலை பண்ண கூட தயங்க மாட்டேன்” என்றான் அவன் பேச்சை கேட்டு

அவந்திகாவின் இதயம் வேக வேகமாகத் துடிக்க ஆரம்பித்தது அவன் குரலில் கோபம் இருந்தாலும், அதற்குள் இருந்த வலி அவளால் உணர முடிந்தது.

 

“நீ என் மனைவி உன்னை வேறொரு ஆண் காதலிச்சிருக்கான் இன்னைக்கு அவன் உன்னை பார்த்ததுமே அவன் மனசுல என்ன இருக்குன்னு எனக்கு புரிஞ்சு போச்சு அப்படி இருக்கும்போது அவன் உன்னை தனியா அழைச்சு ‘உனக்கு இந்த கல்யாணம் பிடிச்சிருக்கான்னு கேட்கும்போது…”

என்றவன் ஒரு கணம் நிறுத்தினான் அவனுடைய தாடை இறுகியது கோபத்தில்.

“எனக்கு கோபம் வராதா” என்று கேட்க அவந்திகா எதுவும் பேசவில்லை.

 

“எந்த பொண்ணையும் உண்மையா நேசிக்கிற ஆண்மகனுக்கு இந்த கோபம்தான் இருக்கத்தான் செய்யும் அவன் மனைவியையோ… அவன் காதலியையோ… இன்னொருத்தன் வந்து அவளோட வாழ்க்கையைப் பற்றி கேள்வி கேட்கும்போது, அவனால் அமைதியா நின்னு வேடிக்கை பார்க்க முடியாது உனக்கு புரியுதா”

என்று அவன் அவளுக்கு மிக அருகில் வந்து நின்று கூற முதல் முறையாக பெண்களுக்கு அவன் நெருக்கம்‌ வெட்கத்தை வரவழைத்தது 

அதுவும்… அவன் உன்னைப் பார்த்த பார்வை 

அவந்திகாவின் விழிகள் அவன் முகத்தில் நிலைத்தன அவள் தலையை தாழ்த்தி நிற்க அவள் இடையை வளைத்திருந்த அவனின் கைப்பிடி இறுகியது “நீ என்னுடையவள் எனக்கே எனக்கானவள் உன்னை எப்படி இன்னொருத்தனுக்கு தூக்கி கொடுக்க முடியும்” என்றவன் குரல் இப்போது மிகவும் மென்மையாக மாறியது.

 

அவளின் இடையில் இருந்த அவன் பிடி இறுகிக் கொண்டே இருக்க இருவரின் கண்களும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டது அந்த நேரம் அந்த அறை கதவு தட்டப்பட்டது அகோரன் சுய நினைவுக்கு வந்தவன் சென்று கதவை திறக்க காந்தா தான் நின்றிருந்தாள் “எஜமானே மூதாட்டி உங்களை கூப்பிட்டாங்க” என்று கூற அகோரன் அங்கே சென்று பெண்ணவள் மட்டும் அப்படியே நின்றிருந்தாள்.

அகோரன் வெளியே சென்ற பிறகும், அவந்திகா அசையாமல் அதே இடத்தில் நின்று கொண்டிருந்தாள் அவன் சொன்ன வார்த்தைகள் மட்டும் அவளுடைய காதுகளில் திரும்பத் திரும்ப ஒலித்துக் கொண்டிருந்தன

“நான் உன்னை காதலிக்கிறேன் டி…”

அவள் மெதுவாக தன் நெஞ்சின் மீது கையை வைத்தாள் இதயம் ஏதோ புதிதாகத் துடித்துக் கொண்டிருந்தது “என்ன இது…” எனக்கு ஏன் ஒரு மாதிரி இருக்கு என்று தன்னைத்தானே கேட்டுக் கொண்டவள் உடனே தலையை அசைத்தாள் “அவன் கோபப்பட்டதால தான் எனக்கு இப்படி இருக்கு வேற எதுவும் இல்லை…” என்று தனக்குத்தானே சமாதானம் சொல்லிக் கொண்டாள் ஆனால் அந்த வார்த்தையை அவளுடைய மனம் ஏற்றுக் கொள்ளவில்லை.

சிறிது நேரத்திற்கு முன்பு கோபமாக இருந்தவனை நினைத்தபோது, இப்போது அவளுக்குள் கோபம் வரவில்லை மாறாக, அவன் கண்களில் தெரிந்த வலிதான் நினைவுக்கு வந்தது‌ “நீ தான் என் சரிபாதி…” என்ற அந்த வார்த்தையை நினைத்ததும் அவளுடைய உதடுகளின் ஓரம் தெரியாமல் புன்னகை மலர்ந்தது‌ அடுத்த நொடியே தன் புன்னகையை உணர்ந்தவள் அதிர்ந்து போய் முகத்தை இறுக்கிக் கொண்டாள்.

“என்ன இது அவன் பைத்தியம் மாதிரி பேசிட்டு போனா நான் ஏன் அதை பத்தி நினைக்கனும்” என்று முனுமுனுத்தவள் படுக்கையில் சென்று அமர்ந்தாள் அப்போது கதவு திறக்கும் சத்தம் கேட்டது அகோரன் உள்ளே வந்தான் அவனைப் பார்த்ததும் ஏனோ அவளுடைய பார்வை தானாகவே அவன் முகத்தைத் தேடியது அவனும் அவளைப் பார்த்தான்.

இருவருடைய கண்களும் ஒரு நொடி சந்தித்தன அவந்திகா உடனே பார்வையைத் திருப்பிக் கொண்டாள் அதை கவனித்த அகோரனின் முகத்தில் சிறிய புன்னகை தோன்றியது அவள் உணர்வுகளை அவளுக்கு முன்பே அவன் புரிந்து கொண்டான் “என்ன” என்று அவன் கேட்டதும், “ஒன்னுமில்லை” என்று அவள் வேகமாக பதில் சொன்னாள்.

அகோரன் அவளருகில் வந்து அமர்ந்தான் “நான் கோபத்துல பேசிட்டேன் என்னை மன்னிச்சிடு” என்று அவன் கூற அவள் அமைதியாக இருந்தாள் “ஆனா… நான் சொன்னது எதுவும் பொய் இல்லை” என்க்ஷு கூற அந்த வார்த்தையை கேட்டதும் அவளுடைய இதயம் மீண்டும் வேகமாகத் துடித்தது அவள் அவனைப் பார்க்காமல், “எனக்கு தூக்கம் வருது” என்று மட்டும் கூறிவிட்டு படுத்துக் கொண்டாள்.

அகோரன் அவளை சில நொடிகள் பார்த்துக் கொண்டே இருந்தான் அவந்திகா கண்களை மூடினாள் ஆனால் தூக்கம் வரவில்லை அவனுடைய குரலும், பார்வையும், அவன் சொன்ன அந்த ஒரு வார்த்தையும் அவளுடைய மனதை விட்டு அகலவே இல்லை ஏனோ அவன் பார்வை அவளை பின் தொடர்ந்து கொண்டே இருப்பதை போன்ற ஒரு உணர்வு வந்ததது “காதலிக்கிறேன்…” என்ற வார்த்தை அவள் மனதில் மீண்டும் மீண்டும் ஓடிக் கொண்டிருந்தது.

 “எனக்கு பைத்தியம் பிடிச்சு போச்சா…” என்று புலம்பியவள் அமைதியாக படுத்துக்கொள்ள அவந்திகாவுக்கே தெரியாமல் அவளுடைய மனதில் அகோரனுக்காக ஒரு சிறிய இடம் உருவாகிக் கொண்டிருந்தது‌

ஆனால் அவளுக்குள் முளைத்திருந்த அந்த உணர்வுக்கு பெயர் மட்டும் அவளுக்குத் தெரியவில்லை இது அவன் மீது ஏற்பட்ட ஒரு விதமான பற்றுதலா… அல்லது அவனுடைய கட்டுப்பாட்டுக்குள் இருந்ததால் உருவான ஸ்டாக்ஹோம் சின்ட்ரோமா… இல்லை, உண்மையாகவே அவன் மீது காதல் விழுந்துவிட்டாளா எதற்கும் பதில் தெரியாமல் அவள் குழம்பியபடியே கண்களை மூடிக்கொண்டாள்.

 

 

 

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *