கைக்கிளை மாயம் 7,8
அத்தியாயம் 7
“ஏன் டி உனக்கு கை கழுவிட்டு வர இவ்வளவு நேரமா” என்று நந்தினி கேட்க “ரெஸ்ட் ரூம் போய்ட்டு வந்தேன் டி” என்றாள் ரோஜா தன் முகத்தை அவளிடம் காட்டாமல் அவளும் அவளின் தோழிகளும் பேசிக் கொண்டே வெளியே செல்ல பிரம்மாவின் பார்வை பெண்ணவளை பின் தொடர்ந்தது ஏனோ அவளை காயப்படுத்தி விட்டோமோ என்று தோன்றியது யோசனையுடனே தன் வீடு வந்து சேர்ந்தான் இருப்பினும் அவன் நினைவுகள் மட்டும் பெண்ணிவளிடம் மட்டுமே இருந்தது இரவெல்லாம் உறக்கம் வராமல் தவித்தான் விடிந்த பின்னும் உறங்கவில்லை அத்தனை போதையிலும் இரவு நடந்த நிகழ்வுகள் அனைத்தும் அவன் கண்முன்னே வந்து போனது காலை எட்டு மணிக்கு குளித்து உடை மாற்றி வந்தவன் கிளம்பி மருத்துவமனைக்கு சென்றான்.
அவன் மருத்துவமனைக்கு வந்த பின்பு கேன்டின் சென்று சாப்பிட்டு முடித்து கோப்புகளை சரி பார்த்து மீண்டும் வார்டின் உள்ளே ஒரு பத்து மணி போல் நுழைய அங்கே நந்தினி மட்டும் தனித்து இருந்தாள் அவளுடன் எப்போதும் சுற்றி திரியும் ரோஜா இல்லை ‘எங்கே போனாள்’ என்று நினைத்தவன் அவளிடம் கேட்க்கலாமா என்று தோன்ற நந்தினி அருகில் கேட்க அதற்க்குள் அவனுக்கு முன்பே முந்திரிக்கொட்டையை போல முந்தி கொண்டான் சத்யா “நந்தினி ரோஜா எங்க” என்று கேட்க “அவளுக்கு நேத்து நைட்ல இருந்து உடம்பு சரியில்லை சார் காய்ச்சல்” என்றாள்.
ஏனோ பிரம்மாவுக்கு மீண்டும் சத்யா மீது கோபம் வந்தது அவன் ரோஜாவை பற்றி விசாரிக்கும் போது ‘நேத்து நைட்ல இருந்து உடம்பு சரியில்லைன்னா என்னால தான் அவளுக்கு உடம்பு சரியில்லையா’ என்று நினைத்தவன் மனதில் குற்றவுணர்வு வந்து தொலைத்தது அதன் பின் ஒரு நிமிடம் கூட அங்கு இல்லாமல் அவளின் விடுதி நோக்கி விரைந்தான் அது மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் தங்கும் குவார்டஸ் என்பதால் ஒவ்வொருவரும் ஒவ்வொரு சிறிய வீடு போன்ற அமைப்பில் இருந்து தனி தனி அறைகளில் தங்கி இருந்தனர்.
நந்தினி ரோஜாவுடன் இன்னும் இருவர் தங்கி இருந்தனர் அவர்களும் அன்று டியூட்டிக்கு சென்றிருக்க ரோஜா மட்டும் தனியே இருந்தாள் ரோஜாவின் அட்டனன்ஸ் டிஜிஸ்ட்டரில் ஏற்கனவே அவளின் அறை எண்ணை பிரம்மா பார்த்திருக்கிறான் என்பதால் அவளின் அறை நோக்கி நடந்தான் அவன் மருத்துவன் என்பதால் பெரிதாக யாரும் அவனை கண்டு கொள்ளவில்லை ரோஜா அறையில் சென்று கதவை தட்ட பெண்ணவள் உள்ளே உறங்கி கொண்டிருந்தாள்.
அவள் அரைகுறை ஆடையில் படுத்திருக்க அறையின் கதவு மீண்டும் மீண்டும் தட்டப்பட்டது எப்படியும் அறை தோழிகள் தான் வந்திருப்பார்கள் என்று நினைத்து எழுந்து வந்து கதவை திறந்தாள் சத்தியமாக அவள் நினைக்கவில்லை அங்கு பிரம்மா நின்றிருப்பான் என்று அவர் கனவில் எதிர்ப்பார்க்கவில்லை அவள் அதிர்வுடனே நிற்க பிரம்மா அவளையே ஆவென்று பார்த்து கொண்டிருந்தான்.
அவள் நேற்று அணிந்திருந்த வெள்ளை சுடிதாரை தான் அணிந்திருந்தாள் ஆனால் துப்பட்டா இல்லை அதே முழங்காலுக்கு கீழ் இருந்த அனார்கலி டாப் கீழே பாட்டம் எதுவும் அணியாது இருக்க அவளின் கழுத்து இறக்கம் சற்று அதிகப்படியாக இருக்க காய்ச்சலில் கண்கள் சிவந்து தலையெல்லாம் கலைந்து அலங்கோலமாக தான் இருந்தாள் நேற்று அவன் கடித்து வைத்து அவள் இதழில் லேசான காயம் இருக்க அவன் பற்தடம் கூட அழகாக இருந்தது அவளின் கூர்நாசியில் இருந்த ஒற்றை கல் மூக்குத்தி என்று ஒன்றையும் அவன் மிச்சம் வைக்கவில்லை அவன் கண்கள் தொட்டு மீண்டது அவள் சாதாரணமாக தான் இருந்தாள் அவனுக்கு தான் ஏதோ தேவலோக ரதி நேரில் வந்ததை போல தோன்றியது அவளை ஆவென்று ஆளை விழுங்குவதை போல பார்க்க அவன் பார்வை அவளின் மேனியில் இருக்க ‘ஆத்தி இவரு என்ன இப்படி பார்க்குறாரு’ என்று நினைத்தவள் கூச்சம் வந்து தரையில் கிடந்த துப்பட்டாவை எடுத்து மேலே போட்டாள் “என்ன சார் வேணும்” என்று கேட்க அவனுக்கு அவளே வேண்டும் என்று எப்படி சொல்வான்.
“வார்ட்ல உனக்கு உடம்பு சரியில்லைன்னு சொன்னாங்க அதான் பார்த்துட்டு போலாம்ன்னு வந்தேன்” என்றான்
“ஓ அதான் பார்த்துட்டிங்கள்ள கிளம்புங்க” என்று கூறிவிட்டு கதவை மூடியவள் தாழிடாமல் உள்ளே போக அவனும் அவள் பின்னேயே கதவை திறந்து கொண்டு உள்ளே வந்தான்.
“சார் என்ன பண்றிங்க யாராவது பார்த்தா என்ன நினைப்பாங்க” என்று அவள் கேட்க அவளை தோளை பிடித்து அங்கிருந்த கட்டிலில் அமர வைத்தவன் அவள் நெற்றி கழுத்தை தொட்டு பார்த்தான் அவள் கேட்ட எந்த கேள்விக்கு பதில் சொல்லாமல் “மாத்திரை எதாவது போட்டியா” என்று கேட்க
“போட்டேன்” என்றாள் அவனை பார்த்து கொண்டே “அது தான் சரி ஆகிருச்சான்னு பார்க்க வந்தேன்” என்றான் “சரி” என்று அவள் தலையை ஆட்ட அவளை குனிந்து பார்த்தவனின் கண்களில் அவளின் இதழ்கள் மீண்டும் வந்து கண்ணை பறித்தது நேற்று முத்தமிட்டதை நினைத்து பார்க்கும் போது உடல் இப்போது கூட சில்லிட்டதை தாபம் தலை தூக்கியது ரத்த நாளங்கள் புத்துயிர் பெற்றன.
பிரம்மா அங்கிருந்து செல்ல எத்தனிக்க
“மாமா” என்று சொல்லிவிட்டு நாக்கை கடித்து கொண்டவள் “சார் உங்க டிரஸ்ல ஏதோ கரை ஒட்டி இருக்கு” என்று கூற அவன் எங்கே என்று குனிந்து பார்க்க அவன் கண்ணுக்கு எதுவும் அகப்படவில்லை காரணம் அவள் பக்கத்தில் இருக்கும் அவன் அவனாக இருக்கவில்லை மூளை வளர்ச்சி இல்லாத காதலனாக இருந்தான்.
ரோஜா பொறுமை இழந்து எழுந்து அவன் அருகில் வந்தவள் அவன் சட்டை பாக்கெட்டில் இருந்த சிறிய கரையை டிஸ்யூ பேப்பரை வைத்து துடைத்து எடுக்க அவளின் மேனியில் வியர்வையுடன் கலந்து வந்த அவளுக்கே உரிய மணம் கூட ஆணவனை கட்டி இழுத்தது அவளையே பார்த்தவன் அவளின் கைக் கொடுத்து தன்னோடு சேர்த்தணைக்க பெண்ணவள் அதிர்ந்து அவனை பார்க்க அவனும் அவளை தான் பார்த்து கொண்டே இருந்தான் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டே இருக்க பிரம்மா அவள் உயரத்துக்கு குனிந்து அவள் இதழை கவ்வி முத்தமிட அவள் கண்கள் அதிர்ச்சியில் விரிந்தது நேற்று ஏற்பட்ட காயத்தில் தன் நாவால் மருந்திட்டு ஆர வைக்க முயற்சிக்க நேற்றை போல் இல்லாமல் மிக மிக மென்மையான முத்தமாக அது இருந்தது பெண்ணவளும் அந்த முத்தத்தை எதிர்ப்பார்த்து காத்திருந்தாளோ என்னவோ அவன் சட்டையை பிடித்து அவனுக்கு ஒத்துழைப்பு கொடுக்க இருவரின் இதழ்களும் ஒட்டி உறவாடி கொண்டு இருந்தது முத்த சத்தத்தை தவிர அந்த அறையில் வேறு எந்த சத்தமும் கேட்க்கவில்லை.
ரோஜா முத்தத்தில் மயங்கி கிரங்கி நின்றிருந்தாள் அவன் கைகள் சற்று நேரத்துக்கு அவன் பார்த்து ரசித்த அவளின் அங்க வளைவுக்கு இடம் மாற பெண்ணவள் திடீரென சுயநினைவுக்கு வர அவன் நெஞ்சில் கை வைத்து பிடித்து இடித்து
அவனை தள்ள முத்தத்திலேயே லயித்து அவள் இடித்து தள்ளியதில் நிலை தடுமாறி நின்றான்
“என்ன பண்றிங்க வெளியே போங்க முதல்ல” என்று அவள் கத்த பிரம்மா அவளை பார்த்தவன் அவள் முகம் சிவந்து இருப்பதை பார்த்து ரசித்தான் கூடவே அவன் சிறிது நேரத்துக்கு முன் முத்தமிட்ட அவளின் இதழும் சிவந்து இருக்க பெண்ணவள் அவன் முகம் பார்க்க முடியாமல் தடுமாறி எங்கோ பார்த்து பேச அவனுக்கு சிரிப்பு தான் வந்தது.
“போங்க வெளிய” என்று அவள் கத்த ஆணவன் அவளை மையலுடன் பார்த்து கொண்டே வெளியே செல்ல பட்டென்று கதவை மூடி தாழிட்டாள் அவளுக்கு பயத்தில் கைகள் நடுங்கியது இதயம் படபடவென அடித்து கொண்டது மூச்சு வாங்கியது பதட்டத்தில் அங்கே இருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து தண்ணீரை குடிக்க எடுக்க அவள் கை நழுவி அதுவும் கீழே விழுந்தது
மிகவும் பதட்டத்துடனே அவள் இருந்தாள்.
மீண்டும் தண்ணீர் பாட்டிலை எடுத்து அவள் குடித்து முடித்து தன்னை அசுவாசப்படுத்துவதற்க்குள் அவளுக்கு போதும் போதும் என்றானது ‘இவரு ஒரு நிமிசம் கூட சும்மா இருக்க மாட்டாரு மூணு வருசத்துக்கு முன்னாடி தாலி கட்டிட்டு ஓடி போய்ட்டு இப்போ வந்து பொண்டாட்டியாம் பெரிய பொண்டாட்டி சும்மா சும்மா முத்தம் கொடுக்குறாரு’ என்று மனதிற்க்குள் புலம்பிவள் தன் முன்னே இருந்த கண்ணாடியில் அவளின் முகத்தை பார்த்தாள் குறிப்பாக இதழுக்கு அவள் கண்கள் சென்றது
அவன் பற்தடம் தெரிய லேசாக அதை தொட்டு பார்த்தவளுக்கு கோபம் தான் வந்தது
“அவரு முத்தம் கொடுத்தா நீயும் மயங்கி நிற்பியா உனக்கு” என்று கண்ணாடியை பார்த்து தன்னை தானே திட்டிக் கொண்டே இருந்தாள்.
பிரம்மா அவள் அறையில் இருந்து வெளியே தன் தலை முடியை தன் கையால் களைத்தவனுக்கு ஏதோ புது உணர்வை கொடுத்தது அவன் ஒன்றும் பெண்களையே பார்க்காதவன் அல்ல அவன் லண்டனில் இருக்கும் போது பல பெண்களுடன் பழகியிருக்கிறான் ஏன் இங்கு வந்து கூட.. அனைத்தும் அவன் வாழ்க்கையில் இருந்தது தான் ஆனால் இவளிடம் மட்டும் அப்படி என்ன புதிதாக இருக்கிறது என்று தான் அவனுக்கு தெரியவில்லை.
‘என்ன டா இது நானா இது ஒரு பொண்ணு வெறுத்து ஒதுக்கும் போது கூட தேடி போய் முத்தம் கொடுக்க தோனுது’ என்று நினைத்தான் “உனக்கு முத்தம் மட்டும் போதுமா” என்று அவன் மனசாட்சி அவனிடம் கேள்வி கேட்க அதோடு நின்று விடுமா அவன் ஆசை மோகம் துகில் உரித்து கைகள் கோர்த்து
ருசித்து மேனியெங்கும் உரசி முத்தமிட்டு
வலியிலும் சுகம் கண்டு அவளை முத்தாட தோன்றியது தன் கேபினுக்கு வந்தவன் வேலை செய்ய முடியாமல் வேலை செய்ய தோன்றாமல் தனது இருக்கையில் அமர்ந்து கனா கண்டு கொண்டு இருந்தான்.
ரோஜா படுக்கையில் விழுந்தவள் உறங்க கூட முடியாமல் புரண்டு புரண்டு படுத்து கொண்டு இருந்தாள் ‘இந்த விஷயமெல்லாம் அப்பா அம்மாவுக்கு தெரிஞ்சா என்ன ஆகும் இந்த மாமா பண்ற எதுவும் சரியில்லை அய்யனார் அப்பா என்னை இதே மாதிரி வீட்டுக்கு கொண்டு போய் சேர்த்துரு அடுத்த ஊருணி பொங்கலுக்கு வந்து உனக்கு பொங்க வைக்கிறேன்’ என்று மனதிலேயே வேண்டுதல் வைத்து கொண்டு இருந்தாள்.
ஏனெனில் ரோஜா வீட்டில் அவளுக்கு தீவிரமாக மாப்பிள்ளை தேடிக் கொண்டு இருந்தான் அன்று திருமணம் முடிந்து ஏதோ கோபத்தில் மாப்பிள்ளை செல்கிறான் என்று நினைத்தனர் அவன் திரும்பி வரவேயில்லை என்றவுடன் அவர்களின் நம்பிக்கை பொய்த்து போனது அவளை உடனே திருமணம் செய்து கொள்ள வற்புறுத்த அவள் தான் படிக்க வேண்டும் என்று கூறியிருந்தாள் இது இறுதி வருடம் என்பதால் தீவிரமாக மாப்பிள்ளை தேடும் படலம் நடைபெற்று கொண்டிருக்கிறது
அனைத்தையும் அவளுக்கு பயம் வேறு வந்தது அதனாலேயே அவள் உறங்க முடியாமல் விழித்து கிடந்தாள்.
அத்தியாயம் 8
மறுநாள் காலை பெண்ணவள் எப்போதும் போல மருத்துவமனைக்கு வந்தாள் அவள் வந்து நின்ற மறுகணம் “பிரம்மா சார் உங்களை கூப்பிட்டாரு” என்று பெண் வந்து சொல்லிவிட்டு போக ரோஜாவுக்கு வந்ததே கோபம் வேக வேகமாக அவன் அறைக்கு நடந்து சென்றவள் கதவை தட்டாமல் கூட திறந்து உள்ளே சென்றாள் “என்ன வேணும் உங்களுக்கு உங்க நடவடிக்கை எதுவுமே சரியில்லை நீங்க என் கிட்ட ரொம்ப உரிமை எடுத்துக்குற மாதிரி தோனுது மூணு வருசத்துக்கு முன்னாடி எங்க போனிங்க” என்று அவள் கத்திக் கொண்டே இருக்க பிரம்மா அவளையே கன்னத்தில் கை வைத்து கொண்டு பார்த்து கொண்டே இருந்தான்.
அவன் அமைதியாக அவளையே பார்த்து கொண்டிருக்க அவன் கண் விலகாத பார்வை பெண்ணவளுக்கு கூச்சத்தை கொடுக்க
“எதுக்காக கூப்பிட்டிங்க” என்று கேட்க
“ஒரு வழியா இப்போவாது கேட்டியே” என்றவன்
அவள் முன் ஒரு காகிதத்தை வைத்தான்
“என்ன இது” என்று அவள் கேட்க “பிரிச்சி பாரு” என்று கூற அவளும் அதை பிரித்து பார்த்தாள்
“என்ன இது” என்று அவள் கேட்க
“ஏன் படிக்க தெரியாதா” என்று கேட்டான்
உடனே ரோஜா அவனை பார்த்து முறைத்து வைக்க “நான் உங்க கிட்ட வேலை கேட்டனா” என்று கேட்டாள் பிரம்மா அவளுக்கு டிரையினிங் முடிந்தவுடன் இங்கேயே வேலைக்கு ஏற்பாடு செய்து இருந்தான்
“புருசனும் பொண்டாட்டியும் ஒரே இடத்துல வேலை பார்ததா நல்லா தான இருக்கும்” என்று கூற.
“நான் இங்க இருக்க மாட்டேன் டிரையினிங் முடிஞ்ச உடனே நான் ஊருக்கு போய்டுவேன்” என்று கூற பிரம்மா அவன் இருக்கையில் இருந்து எழுந்தவன் அறையின் கதவை மூடி தாழிட்டவன் அதை பார்த்த ரோஜாவின் வயிற்றுக்குள் புளியை கரைத்தது
மிகவும் பதட்டமைடைந்தாள் “எதுக்காக இப்போ கதவை தாழ்ப்பாள் போட்டிங்க” என்று கேட்க பிரம்மா எதுவும் பதில் கூறாமல் தன் கையில் இருந்த சட்டை பட்டனை கழட்டி கொண்டே அவளை நெருங்கி அவளோ பயத்தோடு பின்னே சென்றாள் “சார் நீங்க பண்ற எதுவுமே சரியில்லை எனக்கும் பிடிக்கலை இந்த மாதிரியெல்லாம் பண்ணினா நான் உங்க மேல கம்ப்ளைன்ட் பண்ண வேண்டி வரும்” என்று அவள் கூற “என்ன கம்ப்ளைன்ட் பண்ணுவ” என்று கேட்டு கொண்டே பிரம்மா அவளை நெருங்கி வர “எங்க வீட்ல மாப்பிள்ளை பார்த்துட்டு இருக்காங்க நீங்க இந்த மாதிரி நடந்துக்குறது எல்லாம் ரொம்ப தப்பு” என்று அவள் பயத்துடனே கூறிக் கொண்டே சுவற்றில் மோதி நின்றாள்.
பிரம்மா தன் சட்டையை முழங்கை வரை மடித்துவிட்டவன் அவள் எங்கும் விலகி செல்லாத படி இருபுறமும் கையை வைத்தவன்
“உனக்கு ஒன்னும் பிடிக்காத மாதிரி தெரியலையே” என்று கேட்டுக் கொண்டே அவளை நெருங்கி நிற்க பெண்ணவள் பயத்துடனே கண்களை இறுக மூடிக் கொள்ள அந்த நேரம் பிரம்மாவின் அறை கதவு தட்டப்பட்டது பிரம்மா அதை காதில் வாங்காமல் பெண்ணவளையே பார்க்க மீண்டும் கதவு தட்டப்பட்டது பிரம்மா தன் சட்டையை சரி செய்து கொண்டு கதவை திறக்க அங்கே அவன் நண்பன் ராஜ் தான் நின்றிருந்தான்.
“ஏன் டா கதவை தாழ்ப்பாள் போட்டுட்டு உள்ள தனியா என்ன பண்ணுற” என்று கேட்டு கொண்டே வந்தவன் உள்ளே வியர்த்து வடிய நின்றிருந்த ரோஜாவை பார்த்து அதிர்ந்தவன் தன் நண்பனை பார்த்தான் “டேய் என்ன டா நடக்குது இங்க” என்று கேட்க “ஒன்னும் இல்லை ஒரு பேஷன்ட் பத்தி டிஸ்கஷன் போய்ட்டு இருந்துச்சு” என்று தன் பேன்ட் பாக்கெட்டில் கையை நுழைத்து கொண்டு பிரம்மா வெகு சாதாரணமாக கூற ராஜ் ரோஜாவை சந்தேகமாக பார்க்க அவளோ அவன் முகம் பார்க்க முடியாமல் தலை குனிந்து நின்றாள் “ரோஜா நீங்க போலாம்” என்று கூற அவள் தப்பித்தால் போதும் என்று ஓடி விட.
ராஜ் நண்பனை சந்தேக கண்ணோடு பார்த்தான் “டேய் நீ உண்மையாவே அந்த பொண்ணு கூட பேஷன்ட் பத்தி தான் டிஸ்கஸ் பண்ணியா” என்று கேட்க “ஆமாம் டா” என்றான் சலித்து கொண்டே “சரி அதுக்குன்னு ரூம்மோட கதவை உள்ள தாழ்ப்பாள் போட்டுட்டு தான் டிஸ்கஸ் பண்ணுவியா” என்று கேட்க ‘நல்ல வேளை தாழ்ப்பாள் போட்டோம்’ என்று நினைத்தான் பிரம்மா.
“பதில் சொல்லு டா” என்று கேட்க “யாரும் தொல்லை பண்ணக்கூடாதுன்னு தான் டா கதவை தாழ்ப்பாள் போட்டேன்” என்றான் பிரம்மா “அப்போ உள்ள என்ன பண்ணிங்க அடுத்தவங்க டிஸ்டர்ப் பண்ண கூடாத அளவுக்கு என்ன நடந்துச்சு அந்த பொண்ணு ரொம்ப பதட்டமா இருந்துச்சு என்ன நடந்துச்சு ஒழுங்கா சொல்லு” என்று கேட்க “டேய் உனக்கு இந்த ஹாஸ்பிட்டல் வேற வேலையே இல்லையா நான் என்னை பண்றேன்னு பார்க்குறது தான் வேலையா” என்று கேட்க.
“எனக்கு இங்க நிறைய வேலை இருக்கு ஆனா உன்னை கவனிக்கிறது என் வேலை தான்” என்றான் “ஒ அப்படியா சரி எனக்கு இங்க நிறைய வேலை இருக்கு நீ கொஞ்சம் வெளிய போறியா” என்று பிரம்மா கூறிவிட்டு தன் இருக்கையில் சென்று அமர்ந்தவன் அன்றைய கோப்புகளை கையில் எடுக்க போக
“ஏதோ தில்லுமுல்லு பண்ற ஆனா என் கிட்ட மாட்டாமையா போக போற” என்று கூறிவிட்டு அங்கிருந்து வெளியேறினான் ராஜ்.
“சரியான லூசு” என்று வாய்விட்டே கூறிய பிரம்மா அன்றையா கோப்புகளை புரட்ட அவன் மனம் அவனே அறியாமல் ரோஜாவிடம் சென்றது அவள் பதட்டமடைந்த முகம் அவன் முத்தமிட செல்லும் போது அவள் கண்களை மூடிக் கொண்டு நின்ற விதம் அனைத்தும் அவன் மனதில் ஓடிக்கொண்டிருக்க லேசாக புன்னகை கூட வந்தது.
ரோஜா பதட்டத்துடனே ஓடி வர அவளை பார்த்த நந்தினி “அடியேய் நீ ஏன் பிரம்மா சார் ரூம்க்கு போனாலே ஒரு மாதிரி ஆகிடுற அவரும் எப்ப பாரு உன்னை மட்டும் கூப்பிட்டுட்டே இருக்காரு” என்று கேட்க அவளிடம் எந்த வித பதிலும் இல்லை அவள் அமைதியாக நிற்க
அங்கே வந்த செவிலியர் ஒருவர்
“நீங்க ரெண்டு பேரும் கதை பேசி வந்திங்களா இல்லை டிரையினிங்க்கு வத்திக்களா” என்று கேட்க நந்தினி தன் வேலையை பார்க்க சென்றாள்.
நந்தினி தன் வேலையைப் பார்க்கச் சென்றாலும் ரோஜாவின் முகம் மட்டும் இன்னும் இயல்பு நிலைக்கு வரவில்லை அவளால் இயல்பாக இருக்க முடியவில்லை பிரம்மாவை தன்னால் ஏற்கவும் முடியவில்லை ஏற்காமல் இருக்கவும் முடியவில்லை நடந்ததை நினைத்தாலே இதயம் வேகமாகத் துடித்தது பிரம்மாவின் அறைக்குள் நடந்த ஒவ்வொரு நொடியும் அவள் கண் முன்னே வந்து போனது
அவன் தீவிரமான முகம் என்று அனைத்துமே அவள் கண் முன் வந்து போனது ‘விட்டா இவரு டிரையினிங் முடிக்குறதுக்குள்ள என்னை அம்மா ஆக்கிடுவாரு போல’ என்று நினைத்தவள் வேலையில் கவனமானாள்.
மாலை அவள் வேலை முடித்து இடைவெளியில் கேன்டினுக்கு வந்து தனியாக சாப்பிட்டு கொண்டு இருக்க அவளின் அலைப்பேசி ஒலித்தது திரையில் அவளின் அம்மாவின் பெயரைப் பார்த்ததும் அவளுடைய முகம் மாறியது உடனே கைப்பேசியை எடுத்துக்கொண்டு மருத்துவமனையின் அமைதியான ஒரு மூலைக்குச் சென்றாள்.
“ஹலோ அம்மா…” என்றாள்
“என்னம்மா, வேலை எல்லாம் முடிஞ்சுதா என்ன பண்ற” என்று கேட்க
“முடிஞ்சுது மா சொல்லுங்க” என்று அவள் கூற
“ஒரு ரெண்டு நாள் லீவ் கிடைக்குமா” என்று கேட்க “எதுக்கு மா” என்று கேட்டாள் ரோஜா
“நீ வீட்டுக்கு வரனும் முக்கியமான விஷயம் பேசனும்” என்றார் ரோஜாவின் இதயம் திடீரென படபடக்க ஆரம்பித்தது.
“என்ன விஷயம் மா” என்று அவள் தன்னை சமநிலைப்படுத்தி கொண்டு கேட்க
“உனக்கு மாப்பிள்ளை பார்த்திருக்கோம் பையன் போலீஸ் நல்ல வேலையில் இருக்கான் அவங்க வீட்டுல இருந்து அடுத்த வாரம் உன்னை பொண்ணுபார்க்க வர்றாங்க” என்று கூற ரோஜா அதிர்ச்சியில் சில நொடிகள் பேசாமல் நின்றாள்.
“அம்மா… நான் ஏற்கனவே சொன்னேன்ல, இப்போதைக்கு கல்யாணம் வேண்டாம்ன்னு யாரை கேட்டு முடிவு பண்ணிங்க” என்று அவள் கத்த “ஊருக்குள்ள உன்னை பத்தி என்னலாம் பேசிக்கிறாங்க தெரியுமா நீ படிப்பு முடிச்சுட்டேன்னு சொன்னதால தான் நாங்க இப்போ பார்க்க ஆரம்பிச்சோம் இந்த முறை மட்டும் நீ எதுவும் சொல்லாம வீட்டுக்கு வா மாப்பிள்ளை குடும்பம் நல்ல குடும்பமாம் வந்து முதல்ல பாரு வராம இருந்து எங்களை அவமானப்படுத்தாத” என்று கூற
ரோஜா அமைதியாக இருந்தாள்
அவள் மனதில் உடனே பிரம்மாவின் முகம் தான் வந்து போனது.
“ரோஜா இருக்கியா” என்று கேட்க
“ம்ம் இருக்கேன் மா” என்றாள் சோர்வுடனே
“அப்போ நாளைக்கே கிளம்பி வந்துரு” என்று கூற அவளால் மறுக்க முடியாமல்
“சரி மா…” என்று கூறிவிட்டு அழைப்பைத் துண்டித்தாள்.
கைப்பேசியை கையில் வைத்தபடியே சில நொடிகள் அசையாமல் என்ன செய்வது என்று தெரியாமல் நின்றாள் ‘மூணு வருசத்துக்கு முன்னாடி போனவரு இப்போ எதுக்கு என் முன்னாடி வந்து நிற்கனும் நான் இப்போ என்ன பண்ணுவேன்’ என்று நினைத்தவளின் மனதில் பிரம்மாவின் முகம் வந்து கொண்டே இருந்தது தீவிரமாக யோசித்து கொண்டே நிற்க அங்கே நந்தினி வந்தாள் “ரோஜா என்னை எதுக்கு டி விட்டுட்டு வந்த” என்று கேட்க அவள் பதில் கூறாமல் நிற்க
“ரோஜா” என்று அவள் மீண்டும் அழைக்க
அவள் சருமத்துக்கு வந்தாள் “ஏன் டி எப்பவும் பேய் பிடிச்ச மாதிரியே இருக்க” என்று அவள் கேட்க “ஒன்னும் இல்லை டி” என்றாள் ரோஜா.
“இல்லை ஏதோ இருக்கு சொல்லு” என்று கேட்க
“என்ன பொண்ணு பார்க்க வர்றாங்க டி நான் ஊருக்கு போகனும்” என்றாள் “இவ்வளவு தான் ஜாலியா போ எனக்குலாம் எவனாவது மாப்பிள்ளை பார்க்குறானா” என்று புலம்ப அவளுக்கு கோபம் வந்தது “எனக்கு இந்த கல்யாணத்துல எல்லாம் விருப்பமே இல்லை டி” என்று கூற “சரி சொல்ல வேண்டியது தான” என்று அவள் கேட்க “நான் சொன்னேன் ஆனா கேட்க்கவே மாட்டேங்குறாங்க டி” என்றாள் கண்கள் கலங்க “இதெல்லாம் ஒரு பிரச்சனையா ஊருக்கு போய் மாப்பிள்ளையை பிடிக்கலைன்னு எதாவது ஒரு குறை சொல்லிட்டு ஓடி வந்துரு” என்று அவளை தேற்றி கொண்டிருந்தாள் ஆனால் எதுவும் ரோஜாவின் காதில் விழவில்லை அவள் நினைவுகள் மொத்தமும் பிரம்மாவிடம் தான் இருந்தது அவளே அறியாமல் கண்கள் கலங்கியது.