தைத்தியனின் தேவதை 17,18
அத்தியாயம் 17
பெண்ணவள் சாப்பிட்டு முடிக்க அகோரன் கையை கழுவிவிட்டு வந்து காரில் ஏறினான் அப்போது அந்த வழியாக வந்த அவந்திகாவின் தந்தை கார் ஜன்னல் வழியே தன் மகளை பார்த்தவர் அவள் பக்கத்தில் இருந்த அகோரனையும் உடனே பார்த்தார் அவருக்கு புரிந்து போனது தன் மகளின் மகவுக்கு இவன் தான் தந்தை என்று ஆக தன் மகள் தன்னிடம் பொய் கூறியிக்கிறாள் என்று நினைத்தவருக்கு அவளை பார்க்க பார்க்க அவருக்கு கோபம் வந்தது தன் ஸ்கூட்டரை எடுத்து கொண்டு கோபத்துடன் வீடு வந்து சேர்ந்தார்.
ரங்கநாதன் மனதின் ஓரத்தில் தன் மகள் உண்மையை தான் சொல்கிறாளோ என்று நினைத்தவர் மீண்டும் அவளை தேடி அலைய ஆரம்பித்தார் இன்று ஆடவனுடன் பார்த்தவுடனே அவர் முடிவு செய்துவிட்டார் நிச்சயமாக தன் மகள் தவறு செய்திருக்கிறாள் அது அவளின் காதலன் தான் என்று முடிவுக்கும் வந்திருந்தார்.
அவர் வீட்டுக்கு வரும்போதே கோபத்துடன் விறு விறுவென நடந்து அவரை பார்த்து அவர் மனைவி ஜானகி “வாங்கங்க நம்ம கிடைச்சாளா” என்று ஏக்கத்துடன் கேட்க அவரோ தன் கையில் மாட்டியிருந்த பையை தூக்கி எறிந்தார் “என்னங்க என்னாச்சு ஏன் இவ்வளவு கோவமா இருக்கிங்க நம்ம பொண்ணு கிடைச்சாளா இல்லையா” என்று அவர் பதட்டத்துடனே கேட்க “அவள் நம்மள பத்தியெல்லாம் கவலப்படவேயில்லை ஜானகி அவளுக்கு பிடிச்சவனோட ஊர் சுத்திட்டு இருக்கா ஹாஸ்பிட்டல் போய் விசாரிச்சேன்
அவள் யாரோ ஒருத்தன் கூட கார்ல போனதா அங்க வேலை பார்க்குறவங்க சொன்னா நான் நம்பள சுத்தி எல்லா இடமும் தேடிப்பார்த்தேன் சிக்னல்ல ரோட் கிராஸ் அவன் கூட உன் பொண்ணு கார்ல போறதை பார்த்தேன் நம்ம கிட்ட அவள் பொய் சொல்லி நல்லா ஏமார்த்தி இருக்கா” என்றார் ஜானகிக்கு தன் கணவர் கூறியதை கேட்டு பேரதிர்ச்சியாக இருந்தது மனம் தாங்க முடியாமல் கண்ணீர் வடித்தவர்
“நல்லா பொண்ணா தானங்க இருந்தா அவளுக்கு என்ன தான் ஆச்சு” என்று கேட்டவர் மனம் உடைந்து அழுக ஆரம்பித்தார்.
முதலில் அவந்திகாவின் பெற்றோர் அவளை தனியே தவிக்கவிட்டு சென்றவர்கள் மறுநாளே மனம் கேட்க்காமல் ரங்கநாதன் மட்டும் வந்து விசாரிக்க அவரிடம் அனைத்தையும் கூறி இருந்தனர் அங்கிருந்த மருத்துவ ஊழியர்கள் அதன் பின் அவர் தன் மகள் எங்கேயாவது தென்படுகிறாளா என்று தேடும் போது தான் அவர் அவந்திகாவை பார்த்தது “நம்ம பொண்ணுக்கு என்ன தாங்க ஆச்சு இப்படி மாறிட்டா” என்று ஜானகி கண்ணீர் விட ரங்கநாதன் மனம் வருந்தி அமர்ந்து இருந்தார்
அவந்திகாவின் பெற்றோர் மீண்டும் அவளை தவறாகவே புரிந்து கொண்டனர்.
அகோரனும் அவந்திகாவும் கண்ணாடி மாளிகைக்கு வந்து சேர்ந்தனர் அவந்திகா இறங்கும் முன்னே அவள் கையில் இருந்த குழந்தைகளை காந்தாவும் அகோரனும் வாங்கி கொண்டனர் அவந்திகா பிள்ளைகளுக்கு பசியாற்றிவிட்டு உறங்க சென்றாள் அகோரனும் தன் வேலைகளை பார்க்க சென்றான்.
குழந்தைகளை காந்தா குளிக்க வைத்து உறங்க வைத்தவள் அறைக்கு வெளியே காவலுக்காக நின்றிருந்தாள் அவந்திகா அறையின் உள்ளே திடீரென ஒரு உருவம் வந்து நின்றது கருப்பாக இருந்த அந்த உருவம் ஒரு முறை அவந்திகாவையும் அவள் மகவுகளையும் பார்த்து கொண்டே நிற்க பெண்ணவள் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள் வேறொரு அறையில் இருந்த அகோரனுக்கு திடீரென ஒரு உணர்வு வந்தது அடுத்த கணம் அவன் அந்த அறையின் உள்ளே வந்து நிற்க அந்த உருவம் திடீரென மறைந்தது.
அகோரன் வாழ்வில் முதல் முறையாக பதட்டமடைய ஆரம்பித்தான் உடனே ஓடி தொட்டிலில் இருந்த பிள்ளைகளை பார்த்தான் அவர்கள் சீராக மூச்சு விட அப்பாடா என்று திரும்பியவன் உடனே அவந்திகாவை பார்த்தான் அவளும் நிம்மதியாக உறங்கிக் கொண்டிருந்தாள் பெண்ணவள் புடவையில் படுத்து உறங்கி கொண்டிருக்க பெண்ணவள் சாதாரண பீடிங் கவுன் அணிந்து உறங்கி கொண்டிருந்தாள் தலையெல்லாம் பின்னலிடாமல் கலைந்து கிடந்தது அவன் முதல் முறையாக அவளை பார்த்ததை போல அவள் இல்லை முகமெல்லாம் வாடி இளைத்து கண்ணில் கருவளையத்துடன் சோர்ந்து போய் உறங்கி கொண்டிருந்தாள் அவளின் இந்த நிலைக்கு தான் தானே காரணம் குற்ற உணர்வு அவன் நெஞ்சை குத்தி கிழிக்க ஆரம்பித்தது.
ஒரு இருக்கையில் சென்று பிள்ளையின் பாதுக்காப்புக்கும் தன்னவளின் பாதுகாப்புக்காகவும் அமர்ந்தான் அவளை முதல் முறையாக பார்த்த நாள் நினைவுக்கு வந்தது அவன் நினைவலைகள் பின்னோக்கி சென்றது அனைத்தையும் அசை போட ஆரம்பித்தான்.
அவன் சூனியக்கார பாட்டி அவந்திகாவை அவனுக்கு காட்டிய பிறகு மறுநாளே அவளை பார்த்தே தீர வேண்டும் என்ற ஆவல் அவனுள் எழ அவளை காண நேரில் சென்றான் சாதாரணமாக ஒரு மனிதனை போல அவன் காரில் சென்று அவளின் கல்லூரி வாசலின் வெளியே காத்திருக்க அங்கே பல ஆண்களும் பெண்களும் நடந்து சென்று கொண்டிருந்தனர்
தன்னவள் எப்போது வருவாள் என்ற அவன் ஆர்வம் அதிகமாக அவனை காக்க வைத்து இறுதியாக பையை மாட்டிக் கொண்டு சிவப்பு நிற காட்டன் சுடிதாரில் தன் தோழிகளுடனே கதை அளந்து கொண்டே சிரித்து கொண்டே நடந்து வந்தாள்.
அவளை பார்த்த மறுகணம் அகோரன் கண் இமைக்க அவனை கடந்து பல அழகான பெண்கள் சென்ற போதும் அவன் கண்கள் என்னவோ தன்னவளின் மீது தான் இருந்தது
அவளை பார்க்க பார்க்க பார்த்து கொண்டே இருக்கலாம் என்று தோன்றியது இவள் தான் என் சரி பாதியா என்று நினைத்தவன் அவள் மெய் மறந்து ரசிக்க ஆரம்பித்தான்.
அவளோ தன்னை ஒருவன் தூரத்தில் இருந்து ரசித்து கொண்டு இருக்கிறான் என்பது தெரியாமல் தன் தோழிகளுடன் சிரித்து பேசிக் கொண்டே கையில் ஒரு லாலிபப்பை வைத்து கொண்டு சிறு பிள்ளை சாப்பிட்டு கொண்டே வர அகோரன் காரை விட்டு இறங்கியவன் அவளை பார்த்து கொண்டே நிற்க அவளின் தோழி அவளை துரத்தி கொண்டே வர
அவளிடம் தப்பிக்க அவள் ஓடி வர நேரே வந்து அகோரனின் மீது மோதிவிட்டாள் அதில் அவளின் நெற்றி பொட்டு அவன் கருப்பு சட்டைக்கு இடம் மாறி விட “சாரி சார்” என்று கூறிவிட்டு அங்கிருந்து ஓடினாள்.
அவள் சென்ற பாதையைப் பார்த்துக் கொண்டிருந்தவன், மெதுவாக தன்னுடைய சட்டையில் இருந்த அந்தச் சிறிய சிவப்பு பொட்டை விரலால் தொட்டுப் பார்த்தான்
அவளுடைய வாசனை கூட அந்த நொடியில் அவனுடைய மூச்சில் கலந்தது போல இருந்தது
அவன் முகத்தில் தெரியாமல் ஒரு சிறிய புன்னகை தோன்றியது.
அந்தச் சிறிய பொட்டு…
அவனுக்கு ஏதோ ஒரு பொக்கிஷம் போல தோன்றியது அன்று மாலை அவன் கண்ணாடி மாளிகைக்கு திரும்பியதும் முதலில் செய்தது வேறு எதுவும் இல்லை அந்த கருப்பு சட்டையை கழற்றினான் அதில் ஒட்டியிருந்த அவந்திகாவின் பொட்டு விழுந்துவிடாதபடி மிகவும் கவனமாக அதை எடுத்தான்
அவனுடைய அறையில் இருந்த ஒரு சிறிய மரப்பெட்டியைத் திறந்தான்
அதற்குள் அந்தப் பொட்டை வைத்து மூடியவன், சில நொடிகள் அதை பார்த்துக்கொண்டே நின்றான்.
அது ஒரு சாதாரண பொட்டு
ஆனால் அகோரனுக்கு…
அது அவந்திகாவிடமிருந்து அவனுக்குக் கிடைத்த முதல் நினைவுப் பொருள்
அந்த நாளிலிருந்து அவளைப் பற்றிய அவனுடைய எண்ணம் மாறிவிட்டது
அவள் அவனுடைய இனத்தின் எதிர்காலத்திற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பெண் மட்டுமல்ல அவளை அவனுடைய மனம் ஏற்கனவே தன்னுடையவளாகத் தேர்ந்தெடுத்துவிட்டது.
அன்று அவன் பார்த்த குறும்புக்கார அவந்திகா இவள் இல்லை அவளின் குறும்புதனமும் புன்னகையும் காற்றில் கரைந்துவிட்டு இருந்தது இரண்டு பிள்ளைகளின் தாயாக அவளுக்கும் நிறைய பொறுப்புகள் இருந்தது அப்போது குழந்தைகளில் ஒரு குழந்தை வீல்லென்று அழ அவந்திகா திடுக்கிட்டு எழுந்தாள் அவள் எதிரே கண்விலகாமல் பார்த்து கொண்டு இருந்த அகோரனை பார்த்தவள் பதட்டத்துடன் அவனை பார்த்தாள்.
“எ…எ…என்ன…நீ…நீ…இங்க என்ன பண்ணுற” என்று திக்கி திணறி கேட்க அகோரன் தன்னை சமாளித்து கொண்டவன் “ஏதோ சத்தம் கேட்டுச்சு அதனால தான் வந்தேன்” என்றான்
பெண்ணவள் அவனை நம்பாத ஒரு பார்வை பார்த்தாள் அழும் மகனை கையில் தூக்கிய அகோரன் அவள் கையில் கொடுத்தான் இங்கே இருந்து அவளை சங்கடப்படுத்த வேண்டாம் என்று வெளியே சென்றான்.
‘அவளே கண்டுபிடிக்குற அளவுக்கா நடந்துப்ப அகோரா’ என்று நினைத்தவன் தன் முன் வந்த காந்தாவை பார்த்தான் அப்போது தான் சற்று முன் அவனுக்கு வந்த உணர்வு நினைவுக்கு வந்தது “காந்தா நடக்கிற எதுவும் சரியாப்படல பத்திரமா பார்த்துக்கோ ” என்று எச்சரித்துவிட்டு வெளியே சென்றான் கந்தா சரியென்று தலையை ஆட்டினாள் ஆனால் அவளுக்கு அனைத்தும் பாதுகாப்பாக இருப்பதை போல தோன்றியது இருப்பினும் என்ன நடந்திருக்கும் என்று யோசனையுடனே நின்றிருந்தாள்.
அறையின் உள்ளே அவந்திகா பிள்ளைக்கு பணியாற்றி படுக்க வைத்தவள் தானும் படுத்து உறங்கினாள் மாலை வரை அகோரன் அவள் அறையின் உள்ளே வரவேயில்லை பிள்ளைகள் உறங்கிய பின்பு அவந்திகாவுக்கு நேரம் போகாமல் இருக்க அந்த அரண்மையை சுற்றி பார்க்க ஆரம்பித்தாள் கந்தா அவளுடன் வர போக “காந்தா நீ பசங்களை பார்த்துக்கோ” என்று அவள் கூற அவளின் கட்டளையை மீறி எதுவும் செய்யாமல் அமைதியாக குழந்தைகள் இருந்த அறைக்கு சென்றாள்.
அவந்திகா அந்த அரண்மனையை சுற்றி பார்க்க ஆரம்பித்தாள் பெரிய அரண்மனை தான் பின்னே ஒரு அருவி வேறு இருந்தது சுற்றிலும் வனப்பகுதி இருக்க அதன் நடுவே அமைந்திருந்தது அந்த அரண்மனை நடந்து வந்து கொண்டே இருந்தவள் ஒரு அறையை தாண்டி நடக்க போக அவளின் கால்கள் அங்கேயே நின்றது அந்த அறை கதவு திறந்திருக்க அந்த அறையின் உள்ளே சென்றாள் நிறைய பழமையான பொருட்கள் சுத்தமாக துடைத்து வைக்கப்பட்டு இருந்தது மரத்தால் அலமாரி இருக்க அங்கே நிறைய பொம்மைகள் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தது மேலே இருந்த ஒரு பொம்மையை பார்த்தவள் அதை எடுக்க முயல அவள் உயரத்துக்கு அது எட்டவில்லை உடனே ஒரு நாற்காலியை எடுத்து போட்டு எடுக்க முயற்சிக்க எங்கிருந்தோ வந்த கருப்பு உருவம் அவளை கீழே இடித்து தள்ள அடுத்த கணம் அவளை தாங்கிபிடித்தான் அகோரன் இருவரும் நிலை தரையில் விழுந்தனர்.
அத்தியாயம் 18
அகோரன் மீது பெண்ணவள் விழ, அவளின் மொத்த மேனியும் அவன் உடலோடு உரசியது அந்த ஒரு கணம் ஆணவன் மூச்சு பேச்சின்றி அப்படியே நின்றுவிட்டான் சரியாக ஆறு மாதங்கள் ஆறு மாதங்களாக அவளை நெருங்காமல், அவளிடம் இருந்து தன்னை விலக்கி வைத்திருந்தவன் ஆனால் இப்போது எதிர்பாராத விதமாக அவள் அவன் மீது விழுந்திருக்க, அவன் உடல் முழுவதும் வெப்பம் பரவியது.
அவந்திகா அவன் மீது இருந்து எழுந்து கொள்ள முயன்றாள் ஆனால் அவள் எழும் ஒவ்வொரு அசைவிலும் இருவரின் மேனியும் மீண்டும் மீண்டும் உரச, அவனுடைய நிலை நியூட்டனின் மூன்றாம் விதியைப் போல ஆனது அவளின் ஒவ்வொரு வினைக்கும் அவனுக்குள் எதிர்வினை ஒன்று உருவாகிக் கொண்டே இருந்தது.
ஒரு கட்டத்தில் தன்னைத் தானே சமாளித்துக் கொண்டவன், அவளிடம் கையை நீட்டினான் அவளுடைய கையைப் பிடித்து அவளையும் தூக்கி நிறுத்தியவன், அடுத்த நொடியே அவளிடமிருந்து விலகி நின்றான் மின்சாரம் தாக்கியது போல அவந்திகாவும் அவனிடமிருந்து விலகி நின்றாள்.
அவனைப் பார்த்து முறைத்துக் கொண்டே நின்றவளைப் பார்த்த அகோரன் மனதிற்குள்,‘அய்யய்யோ… கொல்றாளே என்னடி பார்வை இது’ என்று நினைத்துக் கொண்டான்.
“எதுக்கு இப்போ என்னை வந்து இடிச்சுத் தள்ளுன” என்று அவள் கோபமாகக் கேட்க, “நான் எப்போ உன்னை இடிச்சுத் தள்ளினேன்” என்று அகோரன் புரியாதவன் போலக் கேட்டான் “பொய் சொல்லாத நீதான் என் முதுகுல கை வச்சு என்னை இடிச்சுத் தள்ளுன” என்று அவள் சொன்ன மறுகணமே, அங்கு உண்மையில் என்ன நடந்திருக்கிறது என்பதை அகோரனால் புரிந்து கொள்ள முடிந்தது உண்மையைச் சொன்னால் அவள் நிச்சயமாகப் பயந்துவிடுவாள் அதனால் அதை அவளிடம் சொல்லாமல் மறைத்தவன், “உன்னை யாரு இங்க தனியா வரச் சொன்னா” என்று வேறு கேள்வியைக் கேட்டான்.
“நீ எதுக்கு என்னைப் பிடிச்சுத் தள்ளிவிட்டன்னு முதல்ல சொல்லு” என்று அவள் விடாமல் கேட்டாள் அகோரன் அவளை சில நொடிகள் பார்த்துவிட்டு,“ம்ம்… உன்னைத் தள்ளிவிடனும்னு வேண்டுதல் அதனாலதான் தள்ளிவிட்டேன்” என்றான்.
“என்னது” என்று அவள் அதிர்வுடனே அவனை பார்த்தாள் “முதல்ல உன்னோட அறைக்குப் போ” என்று அகோரன் கட்டளையிட்டான் அவளுக்கு உடனே கோபம் வந்தது “நான் எங்க இருந்தா உனக்கு என்ன நான் இங்கேதான் இருப்பேன்” என்று திமிராகச் சொல்ல,‘இவ இப்படி சொன்னா கேட்கவே மாட்டா’ என்று மனதிற்குள் நினைத்தவன், அடுத்த நொடியே அவளை அப்படியே தூக்கித் தோளில் போட்டுக் கொண்டான்.
“டேய் என்ன விடுடா” என்று அவள் அவன் தோளில் கிடந்தபடியே கத்த ஆரம்பித்தாள் “பரதேசி,எருமைமாடு,குரங்கு” என்று அவள் திட்டிக் கொண்டே வர, அகோரன் எதையுமே காதில் வாங்காதவன் போல அவளைத் தூக்கிக் கொண்டு நேராக அவளுடைய அறையை நோக்கி நடந்தான் இப்போதெல்லாம் அவந்திகாவுக்கு அகோரனைப் பார்த்து சுத்தமாக பயம் போயிருந்தது.
அவன் தன்னுடைய அனுமதியின்றி தன்னை நெருங்க மாட்டான் என்பது அவளுக்கு நன்றாகவே தெரிந்திருந்தது அதனால்தான் அவனிடம் இவ்வளவு தைரியமாக வாயடித்துக் கொண்டிருந்தாள் அறைக்குள் சென்றதும் அவளைப் படுக்கையில் இறக்கிவிட்டவன், அங்கே நின்றிருந்த காந்தாவைப் பார்த்தான்.
“காந்தா… இனிமேல் இவள் இந்த அறையை விட்டு சாப்பிட மட்டும் தான் வெளிய வரனும். வேற எதுக்காகவும் வெளிய வரக்கூடாது” என்று கண்டிப்பாகச் சொல்ல,
“சரிங்க எஜமான்” என்று காந்தா உடனே தலையசைத்தாள் அவந்திகா அவனை முறைத்தபடியே,“ரூமுக்குள்ளேயே இருந்தா எனக்குப் பைத்தியம் தான் பிடிக்கும்…” என்று வாய்க்குள்ளேயே முனுமுனுத்தாள்.
அந்த வார்த்தைகள் அகோரனின் காதில் விழாமல் இல்லை அவளை ஒரு முறை முறைத்துப் பார்த்தவன், அடுத்ததாக அந்த அறையைச் சுற்றிப் பார்த்தான் அவனுடைய பார்வை அலமாரியின் மீது சென்றது.
அங்கு சில புத்தகங்கள் மட்டும் இருந்த இடத்தில் இப்போது ஏராளமான புத்தகங்கள் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தன மேசையின் மீது ஒரு புத்தம் புதிய போன் அறையின் ஒரு மூலையில் புதிதாக ஒரு டிவி அவந்திகா புரியாமல் அவனைப் பார்த்தாள் “இதை வச்சு என்ன பண்ண முடியுமோ பண்ணிக்கோ” என்றவன் சிறிது இடைவெளிக்குப் பிறகு, “ஆனா இந்த அறையை விட்டு மட்டும் வெளிய வரவே வராத” என்று சொல்லிவிட்டு திரும்பி நடந்தான்.
அவந்திகா அவன் செல்வதைப் பார்த்துக் கொண்டே நின்றாள் பிறகு அறையைச் சுற்றிப் பார்த்தாள் புத்தகங்கள்…புது போன்…டிவி… என்று அவளுடைய தேவைக்காக எல்லாவற்றையும் செய்து வைத்திருந்தவன், வெளியே மட்டும் அவளை கடுமையாகக் கட்டுப்படுத்திக் கொண்டிருந்தான்.
அவள் உதட்டை சுழித்துக் கொண்டு மனதிற்குள் நினைத்தவள் ‘சரியான வித்தைக்காரனா இருப்பான் போலையே…’ மனதிலேயே அவனை மெச்சி கொண்டாள் அவளுக்கே தெரியாமல் அவளுடைய முகத்தில் சிறிய புன்னகை ஒன்று மலர்ந்தது.
நள்ளிரவு வேளையில் அவன் அறைக்குள் வர அவந்திகா உறங்கியிருந்தாள் அவள் மீது ஒரு புத்தகம் ஒன்று கிடந்தது அதை எடுத்து ஓரமாக வைத்தவன் விளக்கை அணைத்துவிட்டு வந்து படுக்க வெளியே கடுங்குளிர் நிலவ பெண்ணவள் கம்பளி உள்ளே சுருண்டு கொண்டே அகோரனை அனைத்து கொண்டு படுத்து கொண்டாள் குளிருக்கு அவன் உடல் சூடு இதத்தை அவன் காலோடு தன் காலை பின்னிக் கொண்டே படுத்து உறங்கினாள் அவள் நன்றாக தான் உறங்கினாள் ஆணவனுக்கு தான் உறக்கம் என்பதே வரவில்லை அவன் அழகு காதலி அவனை அணைத்து கொண்டு படுக்க அவன் தான் அவஸ்தையுடன் படுத்திருந்தான்.
நாட்களும் நகர்ந்தது சரியாக அவந்திகா இங்கு வந்து ஒரு மாதம் முடிந்திருந்தது அவள் வெளியே செல்லும் போதெல்லாம் காந்தாவும் ஒரு நிழலை போல அவளுடன் வருவாள் அவந்திகா தன் பழைய நிலைக்கு மாற முயன்று கொண்டிருந்தாள் நன்றாக சிரித்து காந்தாவுடன் பேசிக் கொண்டு இருப்பவள் அவ்வப்போது தன் தாய் தந்தை தங்கை நினைவு வர எதுவும் பேசாமல் அமைதியாக படுத்து கொள்வாள் ஒரு நாள் தன் தாயை போனில் அழைக்க “ஹலோ யாருங்க” என்று மறுமுனையில் இருந்து அவர் கேட்க “அம்மா நான் அவந்திகா” என்று கூறி முடிக்கும் முன்னே அழைப்பு துண்டிக்கப்பட்டது வேதனையுடன் அழுது கொண்டே அமர்ந்திருந்தாள் காந்தா அவளை சமாதானம் செய்தாள் இப்போது நல்ல தோழிகளாக மாறி இருந்தனர்.
இப்படியாக ஒரு நாள் இருவரும் துணி மடித்து வைத்து கொண்டே ஏதேதோ பேசிக் கொண்டு இருந்தனர் பக்கத்தில் படுக்கையில் பிள்ளைகள் இரண்டும் கையை காலை ஆட்டிக் கொண்டு படுத்திடுந்தனர் காந்தா இருவரையும் பார்த்தவள் “எஜமானி அம்மா குட்டிப்பையன் உங்களை மாதிரி இருக்கான் குட்டிப்பொண்ணு அப்படியே ஐயா மாதிரி” என்று கூற அவந்திகாவின் முகம் மாறியது “என் பசங்க என்னை மாதிரி தான் இருக்காங்க அவனை மாதிரி இல்லை” என்றாள் கோபத்துடனே.
“என்ன நீங்க அவரை மரியாதை இல்லாம பேசுறிங்க” என்று கந்தா கேட்க “அவனை இன்னும் கேவலமா கூட திட்டுவேன்” என்றாள் பெண்ணவள் கோபத்துடனே காந்தா வாயில் கை வைத்து கொண்டு அவளை பார்த்தாள் “சரியான பொம்பளை பொறுக்கி” என்று அவள் கூற “எஜமானி அம்மா ஐயா அப்படிப்பட்டவரு இல்லை” என்றாள்.
“நீ எப்படி அவனுக்கு வக்காளத்து வாங்கலாம் அவன் கிட்ட எப்படியெல்லாம்” என்று அவள் ஏதோ கூற வந்து தன்னை தானே கட்டுக்குள் கொண்டு வந்தாள் அவளின் பழைய நினைவுகள் நினைவுக்கு வந்தது அவனை வெறுக்க வைத்தது “எஜமானி அம்மா அவரு எகபத்தினி விரதன் உங்களை தவிர எந்த பொண்ணையும் இதுவரை ஏறெடுத்து பார்த்தது அவரு பல வருசமா உங்களுக்காக காத்திருந்தாரு தெரியுமா” என்று கேட்க “ஏன் உங்க ராட்சச கூட்டத்துல பொண்ணுங்களே இல்லையா” என்று அவள் கோபத்துடன் கேட்க “ஆமாம் மா எங்க இனத்துல பொண்ணுங்களே இல்லை எல்லாரும் அழிஞ்சிட்டாங்க” என்றாள்.
“ஏன் நீ பொண்ணு இல்லையா” என்று அவள் கேட்க “நாங்க ராட்சச இனமே இல்லை நாங்க பறவை இனத்தை சேர்ந்தவங்க” என்றாள் “ம்ம்ம் அவன் தேடி தேடி என்னை தான் டார்சல் பண்ணனும்ன்னு வந்துருக்கான்ல்ல” என்று கேட்க “அதெல்லாம் விதி மா இன்னாருக்கு இன்னார் தான்னு கடவுள் தான் முடிவு பண்றாரு அவருக்கு நீங்க தான்னு இருக்கு இந்த ராட்சச கூட்டத்தோட முதல் பெண் வாரிசும் உங்க மகள் தான் மா” என்றாள்.
அவந்திகாவின் முகம் உடனே இறுகியது பெண்ணவளின் முக மாற்றத்தை பார்த்த காந்தா அமைதியானாள் பேச்சை மாற்ற வேறு ஏதோ கேட்பதை போன்று திசை திருப்பினாள் மறுநாள் குழந்தைகளுக்கு பெயர் சூட்ட வேண்டும் என்று அவன் பாட்டி கூற அதற்க்கு விழா ஏற்பாடு செய்யலாம் என்று நினைத்தான் அகோரன்.
அதற்க்காக அவன் இனத்து ஆட்கள் அனைவரையும் அழைத்து விழாவுக்கு ஏற்பாடு செய்தனர் அகோரன் அவந்திகா இருந்த அறையின் உள்ளே வந்தவன் “நாம் ரெண்டு பேரும் இன்னைக்கு வெளியே போறோம் கிளம்பி இரு” என்று கூற அவளின் முகம் உடனே மலர்ந்தது ஒரு வழியாக இந்த சிறையில் இருந்து வெளியே சென்று நல்ல சுதந்திர காற்றை சுவாசிக்கலாம் என்று நினைத்தவள் புடவை கட்டி கிளம்பி வந்தாள் காந்தா அவளுடன் ஒரு குழந்தையை தூக்கி அவந்திகாவின் கையில் ஒரு குழந்தை இருந்தது.
காந்தா அவர்களுடனே வர “நீ வர வேண்டாம் இங்கேயே இரு” என்றான் அகோரன் காந்தாவை பார்த்து அவளின் கையில் இருந்த குழந்தையையும் அவனே வாங்கி கொள்ள இருவரும் காரில் ஏறி கிளம்பினர் ஏனோ அவளுக்கு காந்தாவை அழைத்து வராமல் வந்தது வருத்தமாக இருக்க முகத்தை தூக்கி வைத்து கொண்டே வந்தாள் அகேரனுக்கு அவளின் முகவாட்டம் புரிந்தாலும் அதை பற்றி அவளிடம் கேட்க்கவில்லை பெயர் சூட்டும் விழாவுக்காக உடை எடுக்க பிரபல துணிக்கடைக்கு வந்திருந்தனர் ஆடைக்காக மட்டும் அல்ல அவளை வெளியே அழைத்து வந்து நேரம் செலவிட வேண்டும் என்று தோன்றியதால் தான் அவன் அவளை அழைத்து வந்தான்.
இருவரும் கடையின் உள்ளே வர அகோரன் அங்கிருந்து பேபி கேரியர் ஒன்றை வாங்கி பிள்ளையை மாட்டிக் கொண்டே பெண்ணவள் அவனுடன் மெல்ல நடந்து வந்தாள் அப்போது “அவந்திகா” என்ற குரல் அவளை அங்கேயே நிறுத்தி வைத்தது.