கைக்கிளை மாயம் 7,8,9
அத்தியாயம் 7 “ஏன் டி உனக்கு கை கழுவிட்டு வர இவ்வளவு நேரமா” என்று நந்தினி கேட்க “ரெஸ்ட் ரூம் போய்ட்டு வந்தேன் டி” என்றாள் ரோஜா தன் முகத்தை அவளிடம் காட்டாமல் அவளும் அவளின் தோழிகளும் பேசிக் கொண்டே வெளியே செல்ல பிரம்மாவின் பார்வை பெண்ணவளை பின் தொடர்ந்தது ஏனோ அவளை காயப்படுத்தி விட்டோமோ என்று தோன்றியது யோசனையுடனே தன் வீடு வந்து சேர்ந்தான் இருப்பினும் அவன் நினைவுகள் மட்டும் பெண்ணிவளிடம் மட்டுமே இருந்தது இரவெல்லாம் உறக்கம் வராமல் தவித்தான் விடிந்த பின்னும் உறங்கவில்லை அத்தனை போதையிலும் இரவு நடந்த நிகழ்வுகள் அனைத்தும் அவன் கண்முன்னே வந்து போனது காலை எட்டு மணிக்கு குளித்து உடை மாற்றி வந்தவன் கிளம்பி மருத்துவமனைக்கு சென்றான். அவன் மருத்துவமனைக்கு வந்த பின்பு கேன்டின் சென்று சாப்பிட்டு முடித்து கோப்புகளை சரி பார்த்து மீண்டும் வார்டின் உள்ளே ஒரு பத்து மணி போல் நுழைய…