வைத்தியனின் தேவதை 13, 14
அத்தியாயம் 13
மருத்துவமனையின் அறையினுள் அவந்திகா இன்னும் சரியாக நடக்க முடியாமல் தூங்க முடியாமல் படுக்கையில் சோர்ந்து கிடந்தாள் அவளுடைய பார்வை முழுவதும் தன் இரண்டு குழந்தைகளின் மீதே இருந்தது இனி இவர்களை எப்படி பார்த்து கொள்ள போகிறோம் என்பதிலேயே அவள் கவனம் இருந்தது இரண்டு பிள்ளைகளும் அப்படியே அவர்களின் தகப்பன் ஜாடையில் இருந்தது இரு குழந்தைகளின் கழுத்திலும் அகோரன் கழுத்தில் இருக்கும் அதே தாயத்து ஒளி வீசிக் கொண்டிருந்தது அது அவளின் கண்ணுக்கு மட்டுமே தெரிந்தது அந்த இரவு நேரம் கதவு திறக்கும் சத்தம் கேட்க அவள் மெல்ல திரும்பிப் பார்த்தாள்.
ரங்கநாதன் கையில் ஒரு பையுடன் உள்ளே வந்தார் அவரைப் பார்த்ததும் அவந்திகாவின் முகத்தில் சிறு நிம்மதி தோன்றியது “அப்பா…” என்று அவரை ஏக்கத்துடன் அவள் மெதுவாக அழைக்க ரங்கநாதன் அவளைப் பார்க்காமல் அந்தப் பையை அருகில் இருந்த மேசையில் வைத்தார்.
“உனக்கு தான் சாப்பாடு வாங்கி வந்தேன் சாப்பிடு பக்கத்துல தண்ணீ இருக்கு அந்த பையில் உன்னோட துணிமணி உன் பிள்ளைகளுக்கு தேவையான எல்லாம் இருக்கு” என்றார் அவ்வளவுதான் அதற்க்கு மேல் அவருடைய குரலில் வழக்கமான பாசம் இல்லை அவளைப் பார்த்து ஒரு வார்த்தை கூட பேச அவரால் முடியவில்லை அவந்திகா தன் தந்தையையும், பின்னால் அமைதியாக நின்று கொண்டிருந்த தன் தாயையும் மாறி மாறிப் பார்த்தாள்.
“அம்மா…” என்று அழைக்க ஜானகி அவளைப் பார்க்கவே இல்லை.
அவந்திகாவின் கண்களில் கண்ணீர் தேங்கியது “அம்மா நீங்க இன்னும் என் மேல கோபமா தான் இருக்கிங்களா” என்று அவள் கேட்க எந்த பதிலும் இல்லை அறைக்குள் நிலவிய அந்த அமைதி அவள் தாய் தந்தை அவளை கடுஞ்சொற்கள் சொல்லி திட்டுவதை விட அதிகமாக வலித்தது ரங்கநாதன் மட்டும் குழந்தைகள் இருந்த தொட்டிலை ஒரு கணம் பார்த்துவிட்டு முகத்தைத் திருப்பிக் கொண்டார்.
“சாப்பிட்டு தூங்கு” என்று மட்டும் கூறிவிட்டு வெளியே சென்றார் ஜானகியும் அவரைப் பின்தொடர்ந்து வெளியே சென்றார் கதவு மூடப்பட்டதும் அவந்திகாவின் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது ‘என்ன நடந்தாலும்… என் அம்மா அப்பா என்னை கை விட மாட்டாங்க’ என்று நினைத்தால் இனி பிள்ளைகளுக்காகவாது சாப்பிட வேண்டும் நினைத்தவள் ஒழுங்காக சாப்பிட்டாள்.
தன் குழந்தைகளைப் பார்த்தாள் “நம்மள எப்பவும் தாத்தா பாட்டி கைவிட மாட்டாங்க” என்றாள் ஏதோ வளர்ந்து ஆளான பிள்ளைகளுடன் பேசுவதை போல அவள் சொன்ன வார்த்தைகளுக்கு பதில் சொல்வது போல, ஒரு குழந்தை மெல்ல கண்களைத் திறந்து முடியது இன்னொரு பிள்ளை உறங்கி கொண்டிருந்தது அவளை பார்த்தது அவள் அந்த குழந்தையின் நெற்றியில் முத்தமிட்டாள்.
மறுநாள் காலையும் அப்படியே கடந்தது ஜானகியும் ரங்கநாதனும் மருத்துவமனையிலேயே இருந்தார்கள் ஆனால் ஒரு வார்த்தை கூட அவந்திகாவிடம் பேசவில்லை அவள் ஏதாவது பேச முயன்றால் கூட, அவர்கள் வேறு பக்கம் முகத்தை திரும்பிக் கொண்டார்கள் அவந்திகாவுக்கு அதன் காரணமே புரியவில்லை.
அவள் மட்டும் தன் குழந்தைகளுக்கு பால் கொடுத்து, அவர்களைப் பார்த்துக் கொண்டு அந்த நாளையும் சோர்வுடனே கடத்தினாள் அந்த இரவு கூட ரங்கநாதன் அவளுக்கு சாப்பாடு தேவையான அனைத்தையும் வாங்கி வந்து வைத்தார்.
“அப்பா…”அவந்திகா அழைத்தாள் அவர் நின்றார் “என் மேல கோபமா இருக்கீங்களா” சில நொடிகள் அவர் அமைதியாக நின்றார் பிறகு அவளைப் பார்க்காமலேயே “உன் உடல்நிலை சரி ஆகனும் அவ்வளவுதான்” என்று மட்டும் மொட்டையாக சொல்லிவிட்டு வெளியேறினார் அந்த பதில் அவந்திகாவின் மனதில் இன்னும் பெரிய கேள்வியை ஏற்படுத்தியது.
அடுத்த நாள் காலை.
“மேடம்…” என்று செவிலியர் அழைத்த குரலில் அவந்திகா கண்களைத் திறந்தாள் “இன்னைக்கு உங்களுக்கு டிஸ்சார்ஜ்” என்ற அந்த வார்த்தையை கேட்டதும் அவள் முகத்தில் சிறிய சந்தோஷம் தோன்றியது “இந்த பார்ம்ல கையெழுத்து போடுங்க” என்று சில காகிதத்தை அவள் முன் நீட்ட “என் அம்மா… அப்பா கிட்ட சைன் வாங்கிங்க” என்று கூறினாள்.
செவிலியர் சற்றுத் தயக்கத்துடன் அவளைப் பார்த்தார் “அவங்க… காலையிலேயே கிளம்பிட்டாங்க மேடம்” என்றார் அவந்திகா சில நொடிகள் எதுவும் புரியாமல் அவரைப் பார்த்தாள்.
“கிளம்பிட்டாங்களா” என்று அதிர்வுடனே கேட்டவள் “நான் இல்லாம எப்படி போனாங்க” என்று அவள் கேட்க
“ஆமா மேடம் இதை உங்க கிட்ட கொடுக்க சொன்னாங்க” என்று ஒரு பையை கொடுக்க அதில் கொஞ்சம் பணம் அவளின் துணிமணிகள் இருந்தது அவளுக்கு புரிந்துவிட்டது செவிலியர் அமைதியாக நின்றார் அந்த அமைதியே அவளுக்கு பதிலாக இருந்தது.
அவந்திகாவின் கண்கள் கலங்கின“எங்க போயிருக்காங்க உங்க கிட்ட எதாவது சொன்னாங்களா” என்று கேட்க “எனக்கு தெரியாது மேடம் நான் காலையில தான் டியூட்டிக்கு வந்தேன்” என்றார் அவர் “இதுல உங்க சைன் வேணும்” என்று கேட்க அவள் எதுவும் பேசவில்லை கண்களில் வழிந்த கண்ணீரை துடைத்து கொண்டு அதில் கையெழுத்து இட்டு கொடுத்தாள்.
அவர் சென்ற பின் உறங்கும் தன் இரண்டு குழந்தைகளையும் மாறி மாறி பார்த்தாள் பின்னர் மெதுவாக எழுந்தாள் தன் உடமைகள் அனைத்தையும் தன் பையில் எடுத்து வைத்தாள் உடல் இன்னும் வலித்தது ஆனால் அந்த வலியை விட அவள் மனதில் இருந்த வலி அதிகமாக இருந்தது.
சில நிமிடங்கள் கழிந்தது பையை தோளில் மாட்டிய கொண்டு தன் இரண்டு குழந்தைகளையும் மார்போடு அணைத்துக் கொண்டு அவந்திகா மருத்துவமனையின் வாசலில் வந்து நின்றாள் சாலையில் வாகனங்கள் பரபரப்புடன் சென்று கொண்டு இருந்தது மக்கள் அதை விட பரபரப்பாக நடந்து சென்று கொண்டிருந்தனர் முன்னால் பார்த்தாள் ஒரு பேருந்து நிலையம் இருந்தது அங்கே நடந்து சென்றாள் அங்கிருந்தவர்கள் அவளை வித்தியாசமாக பார்த்தனர்.
எங்கே போவது?
யாரிடம் போவது?
எதுவுமே தெரியவில்லை.
அவள் தன் குழந்தைகளைப் பார்த்தாள் “அம்மா இருக்கேன்… பயப்படாதீங்க…” என்று கண்ணீரோடு அவளுக்கும் சேர்த்து சொல்லிக் கொண்டாள் அவளை அங்கிருந்தவர்கள் பாவமாக பார்த்தனர் கழுத்தில் தாலி இல்லை தோளில் பை இரண்டு பச்சிளம் குழந்தைகள் கண்ணில் கண்ணீருடன் நின்றிருந்தவளை பார்க்கவே பாவமாக இருந்தது.
தொலைவில் இருந்து ஒரு கருப்பு நிற சொகுசு கார் வேகமாக வந்து அவளுக்கு முன்னால் வந்து நின்றது அதன் முன் கதவு திறந்தது அகோரன் காரிலிருந்து இறங்கினான் அவனைப் பார்த்த அந்த நொடியே அவந்திகாவின் உடல் முழுவதும் உறைந்து போனது அவனை கொன்று விடும் ஆத்திரத்துடன் அவனை பார்க்க “நீ…?” என்று அவளுடைய குரலில் அதிர்ச்சி.
அகோரன் அவளைப் பார்த்தான் அவளுடைய கையில் இருந்த இரண்டு குழந்தைகளையும் பார்த்தான் அவன் பார்வையில் ஒரு நொடி கூட சலனம் இல்லை பிறகு மெதுவாக அவளை நோக்கி நடந்தான்.
“வா வந்து கார்ல ஏறு போலாம்” என்று அழைக்க அவந்திகா அவனை பார்த்து முறைத்தாள் இத்தனை நாள் தான் பட்ட அவமானத்தில் துளி அளவு கூட பங்கெடுத்து கொள்ளாதவன் தன் பிள்ளைகளுக்கு தான் தந்தை என்ற அடையாளத்தை கொடுக்காதவன் இன்று தன் முன் வந்து நிற்கிறானே என்ற கோபம் ஆதங்கம் அவனை பார்த்து துளி அளவு கூட அவளுக்கு பயம் வரவில்லை “எங்க வரனும்” என்று அவள் கேட்க “என் வீட்டுக்கு” என்று அவன் வெகு சாதாரணமாக கூற “நான் உன் வீட்டுக்கு வர வேண்டிய அவசியம் இல்லை” என்று கூற அகோரன் அவளுடைய கண்களை நேராகப் பார்த்தான்.
“உனக்கு இப்போ போக வீடு இருக்கா” அந்த ஒரு கேள்வியில் அவந்திகா திகைத்து நின்றாள் அவளால் பதில் சொல்ல முடியவில்லை அவள் தன் பார்வையைத் தாழ்த்திக் கொண்டாள் கண்ணீரை அடக்கி கொண்டாள் அகோரன் மெதுவாக அவளிடம் வந்தான்.
“உன் அம்மாவும் அப்பாவும் உன்னை விட்டுட்டுப் போயிட்டாங்க இனி வர மாட்டாங்க” அவந்திகாவின் கண்களில் கண்ணீர் வழிந்தது “அது… அது உனக்கு எப்படி தெரியும்” என்று கேட்க “எனக்கு எல்லாம் தெரியும்” என்றான் “அவங்க திரும்பி வருவாங்க” என்று அவள் கூற “அவங்க இனி எப்பவும் உன் வாழ்க்கையில திரும்பி வரமாட்டாங்க” என்றான் அவன் சொன்ன பதில் மிகவும் உறுதியாக இருந்தது.
அவந்திகா அவனை வெறுப்புடன் பார்த்தாள் “சரி நீ ஏன் இங்க வந்த” என்று கேட்டாள் கோபத்துடனே “உன்னை கூட்டிட்டு போக” என்றான் “என்னை எங்க கூட்டிட்டு போற” என்று அவள் கேட்க “என் வீட்டுக்கு” என்றான் மீண்டும் அவள் அதிர்ச்சியுடன் அவனைப் பார்த்தாள் அவளின் கடந்த காலம் நினைவுக்கு வர “எனக்கு உன் மேல நம்பிக்கை இல்ல நான் வர மாட்டேன்” என்றாள் அகோரன் அவள் பேச்சை கேட்டு சற்றும் கோபப்படவில்லை.
“நம்பிக்கை இருக்கணும்னு நான் கேட்கல” அவன் அவளின் கையில் இருந்த குழந்தைகளை பார்த்தான் “ஆனா இவங்க என் குழந்தைங்க” அவந்திகாவின் கைகள் தன்னிச்சையாக குழந்தைகளை இன்னும் இறுக்கமாக அணைத்துக் கொண்டன.
“நான் என் குழந்தைகளை உன்கிட்ட கொடுக்காம என்னால நிச்சயமா எடுத்துட்டு போக முடியும்” என்றான் அவளின் கண்களை கூர்ந்து பார்த்து கொண்டே அகோரனின் பார்வை அவளுடைய கண்களைத் தொட்டது அவள் பயத்துடனே அவனை பார்க்க.
“நான் உன்கிட்ட இருந்து நம்ம குழந்தைகளைப் பிரிக்க வரல” சிறு இடைவெளிக்குப் பிறகு அவன் மெதுவாகக் கூறினான் “உன்னையும்… என் குழந்தைகளையும் பாதுகாக்கத்தான் வந்துருக்கேன் நீ தனியா இருக்குறது ஆபத்து” என்று கூற அவந்திகா அவனை புரியாத ஒரு பார்வை பார்த்தாள்.
அப்போது அவளின் கையில் பிள்ளைகளில் வீல்லென்று பசிக்கு அழ பெண்ணவளுக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை தடுமாறி நிற்க அகோரன் அவளை சில நொடிகள் பார்த்தான் பிறகு காரின் கதவைத் திறந்து வைத்தான் “வா அவந்திகா” என்று கூற அவள் அப்போதும் தயங்கி நிற்க “இப்போதைக்கு உனக்கும்… இந்த இரண்டு உயிர்களுக்கும்… நான் மட்டும் தான் இருக்கேன் இவங்க உனக்கு மட்டும் குழந்தைங்க இல்லை எனக்கும் குழந்தைங்க தான்” என்று கூற அவந்திகாவின் கண்களில் கண்ணீர் நிறைந்தது.
அவள் தன் குழந்தைகளைப் பார்த்தாள்பிறகு தன்னை அழைத்துக் கொண்டிருந்த அகோரனைப் பார்த்தாள் வேறு வழியேயில்லை என்பது அவளுக்கு புரிந்து போனது காரின் உள்ளே ஏறி அமர்ந்தாள் அவள் காரில் அமர்ந்த மறுகணம் கார் அங்கிருந்து விரைவாக சென்றது.
அத்தியாயம் 14
கார் வேகமாகச் சென்று, ஆள் நடமாட்டமே இல்லாத அடர்ந்த காட்டுப் பாதையில் சென்று நின்றது காருக்குள் அவந்திகாவின் கையில் இருந்த குழந்தை வீல் என்று அழுது கொண்டிருந்தது அதன் அழுகையை பார்த்த மற்றொரு குழந்தையும் அழ ஆரம்பித்தது அகோரன் உடனே ஒரு குழந்தையை அவளிடமிருந்து வாங்கித் தன் கைகளில் ஏந்தி கொண்டான்.
அவன் கைகளுக்குள் சென்ற அடுத்த நொடியே அந்தச் சின்னக் குழந்தையின் அழுகை நின்றுவிட்டது அது தன் தகப்பனிடம் இருப்பதை உணர்ந்தது போல,தன் பெரிய கண்களை விரித்து அகோரனையே பார்த்துக் கொண்டிருந்தது அந்தக் காட்சியைப் பார்த்த அவந்திகாவுக்கே ஆச்சரியமாக இருந்தது.
அடுத்த நொடி யோசிக்காமல், குழந்தைக்குப் பாலூட்டத் தொடங்கினாள் அவள் குழந்தையை சமாளித்து கொண்டிருக்க, திடீரென காரை சுற்றிலும் கருமையான நிழல்கள் அசைந்தன சில பெரிய பறவைகள் எங்கிருந்தோ பறந்து வந்து காரைச் சுற்றி வட்டமிட்டன அவற்றின் இறக்கைகள் விரிந்ததும், காரின் வெளிப்படையான கண்ணாடிகள் முழுவதும் கருமையான திரையைப் போல மூடப்பட்டன வெளியில் இருந்த நிலவொளி கூட காருக்குள் வரவில்லை அவந்திகா அதைப் பார்த்து மிரண்டு போனாள்.
‘இது… இவனோட மாயைதான்’ என்று மனதில் நினைத்தாள் அகோரன் அருகில் இருந்த குழந்தையை மெதுவாகத் தட்டிக் கொடுத்து அமைதிப்படுத்தினான் ஒரு குழந்தை பசியாறியதும், அவன் அதை அவந்திகாவிடமிருந்து வாங்கி கொண்டான் பின்னர் அவளுடைய கையில் இருந்த மற்றொரு குழந்தையையும் அவளிடம் விட்டுவிட்டு, அவன் பார்வையை திருப்பி கொண்டான் அவள் சங்கடப்படக் கூடாது என்பதற்காகவே அவன் அந்தப் பக்கம் பார்க்காமல் இருந்தான்.
சில நிமிடங்களுக்குப் பிறகு அவந்திகாவின் கையில் இருந்த குழந்தையும் உறங்கிவிட்டது அகோரன் அந்தக் குழந்தையை மெதுவாகத் தூக்கி தன் தோளில் போட்டுக் கொண்டான் பின்னர் மீண்டும் காரை இயக்கினான் சிறிது நேரம் அமைதியாகச் சென்ற பிறகு அவந்திகா தயக்கத்துடன் “என் கிட்ட குழந்தையை கொடுங்க…” என்றாள்.
அகோரன் அவளைப் பார்க்காமல் சிரித்தான் “எதுக்கு” என்று கேட்டான் “அது… குழந்தை கீழே விழுந்துடுமோன்னு பயமா இருக்கு” என்றாள் உண்மையான பயந்த விழிகளுடன் அகோரன் அவளை நோக்கி திரும்பி பார்த்தான்
“இது அகோரனோட வாரிசு’ அவன் குரலில் பெருமை கலந்திருந்தது “என்னோட ஒட்டுமொத்த சக்தியும் என் குழந்தைகளுக்குள்ள இருக்கும் அவங்க என்னோட கையில இருக்கும்போது கீழே விழ மாட்டாங்க” என்றான் அந்த வார்த்தைகள் அவந்திகாவுக்கு நம்பிக்கையை தருவதற்கு பதிலாக இன்னும் பயத்தை ஏற்படுத்தியது அவள் குழந்தையையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
அவளுடைய பயத்தை அகோரன் கவனிக்காமல் இருக்கவில்லை அடுத்த நொடி, அவன் உடலில் இருந்த கருமையான ஆடை ஒன்று மெதுவாக உயிர்பெற்றது போல அசைந்தது அது பறந்து வந்து அவன் தோளையும் நெஞ்சையும் சுற்றிக்கொண்டது அவன் கையில் இருந்த குழந்தை அந்த ஆடையின் உதவியால் அவன் நெஞ்சோடு பாதுகாப்பாக இறுகப் பொருந்தியது.
குழந்தையின் தலையைத் தடவியபடி அகோரன் “இப்போ பயப்பட வேண்டாம்” என்றான் அவந்திகா எதுவும் சொல்லவில்லை ஆனால் அவள் மனதிற்குள் ஒரு கேள்வி மட்டும் மீண்டும் மீண்டும் எழுந்தது ‘இவன் உண்மையிலேயே யார்’ என்பது தான் அந்த கேள்விக்கான பதில் கிடைக்கப் போகும் இடத்தை நோக்கித்தான் அந்த கார் சென்று கொண்டிருந்தது “இன்னும் கொஞ்ச நேரத்துல உனக்கே அதுக்கான பதில் கிடைச்சிடும்” என்றான் அகோரன் லேசான புன்னகையுடனே ‘நான் மனசுல நினைச்சது இவனுக்கு எப்படி தெரியும்’ என்று நினைத்தவள் அவனை அதிர்வுடனே பார்த்தாள் அவன் லேசான புன்னகையுடனே காரை ஓட்டிச் சென்று கொண்டு இருக்க ‘இவனுக்கு சிரிக்க கூட தெரியுமா’ என்று மனதில் நினைத்தாள் உடனே அவளை அவன் திரும்பி பார்க்க அவளும் தன் பார்வையை திருப்பி கொண்டாள்.
சிறிது நேரத்திற்குப் பிறகு கார் காட்டின் நடுவே இருந்த ஒரு பழமையான கல் பாலத்தை அடைந்தது அதன் மறுபுறம் சென்றவுடன், இதுவரை இருந்த காட்டு பாதை முற்றிலுமாக மாறியது மரங்களுக்கு நடுவே கருமையான பனிமூட்டம் சூழ்ந்திருந்தது அந்தப் பனிக்குள் ஒரு மிகப்பெரிய அரண்மனையின் உருவம் மெல்லத் தெரிந்தது.
அவந்திகாவுக்கு புரிந்துவிட்டது அவன் கண்ணாடி மாளிகைக்கு தான் இருவரும் வந்திருக்கிறோம் என்று அவள் தான் பல முறை இரவு அவன் கையால் தூக்கி வரப்பட்டு இருக்கிறாளே அவளுக்கு தெரியாதா இந்த இடம் இருவரும் காரிலிருந்து இறங்க அங்கிருந்த பல வித்தியாசமான மனிதர்கள் ஆரவாரத்துடனே அரை கூவல் விட பெண்ணவளுக்கு பயமாக இருந்தது ஆனால் அவளின் மகவுகளோ சிரித்து கொண்டே பொக்கை வாயுடன் வர அவளுக்கே ஆச்சரியமாக தான் இருந்தது.
அந்த மாளிகையின் உள்ளே சென்றதும் வெளியே இருந்த சத்தங்கள் அனைத்தும் ஒரே நொடியில் அடங்கிப் போனது சுற்றிலும் நல்ல வெளிச்சமாக இருந்தது சுவர்களில் எரிந்து கொண்டிருந்த தீப்பந்தங்கள் கூட சாதாரண நெருப்பைப் போல இல்லை மாயாஜாலங்கள் நிறைந்த இடமாக அது இருந்தது
அவற்றுக்குள் ஏதோ ஒரு உயிர் அசைந்து கொண்டிருப்பது போலத் தோன்றியது.
அவந்திகா மெதுவாக அகோரனின் அருகில் நடந்து வந்தாள் அவளுடைய விழிகள் அந்த மாளிகையின் ஒவ்வொரு மூலையையும் ஆராய்ந்து கொண்டிருந்தன சகல வசதிகளும் அந்த மாளிகையில் இருந்தன அனைத்தும் தங்கத்தால் செய்யப்பட்டு இருந்தது
அவள் இதற்கு முன்பும் இந்த மாளிகைக்கு வந்திருக்கிறாள்.
ஆனால் ஒவ்வொரு முறையும் இரவு நேரம்… அகோரனின் கைகளில் மயக்கத்திலோ அரைத் தூக்கத்திலோ தான் வந்திருக்கிறாள்
இப்படி விழித்த நிலையில் அந்த மாளிகையைப் பார்ப்பது இதுதான் முதல் முறை அப்போது
“அகோரா…” என்ற ஒரு வயதான பெண்மணியின் குரல் கேட்டது அவந்திகா அங்கே பதட்டத்துடன் திரும்பிப் பார்த்தாள்.
அகோரனின் வயதான பாட்டி மெதுவாக அவர்களை நோக்கி வந்து கொண்டிருந்தார் அவருடைய கையில் இருந்த பொருளை பார்த்ததும் அவந்திகாவின் புருவங்கள் சுருங்கின அது ஒரு சாதாரண ஆலத்தி தட்டு போல இல்லை கருமையான கல்லால் செய்யப்பட்ட சிறிய பாத்திரம் அதற்குள் சிவப்பு நிற திரவம் போல ஏதோ ஒன்று இருந்தது.
அந்தப் பொருளை எடுத்து முதலில் குழந்தைகளுக்குச் சுற்றினார் பின்னர் அகோரனுக்கும் அவந்திகாவுக்கும் சுற்றினார்
அவந்திகா தன்னையும் அறியாமல் ஒரு அடி பின்னால் நகர்ந்தாள் அதை கவனித்த அகோரன் அவளுடைய தோளில் கை வைத்தான் அவள் திடுக்கிட்டு அவனை பார்த்தாள் அவன் பயத்தை உணர்ந்தவனை போல “பயப்படாத இது ஒரு சடங்கு” என்றான்
அவன் குரல் வழக்கத்தைவிட மென்மையாக இருந்தது.
“இங்க யாரும் உன்னை எதுவும் செய்ய மாட்டாங்க” என்றான் அவள் எதுவும் சொல்லவில்லை ஆனால் அவனுடைய கை இன்னும் அவள் தோளில் இருப்பதை உணர்ந்தவளுக்கு அவள் பயம் கொஞ்சமே கொஞ்சம் குறைந்தது அவன் அருகில் இருக்கும் போது பாதுகாப்பாக உணர்ந்தாள்
அந்த நேரத்தில் வெளியிலிருந்து விசித்திரமான பறவைகளின் சத்தம் கேட்டது.
அவந்திகா உடனே திரும்பிப் பார்த்தாள்
மாளிகையின் உயரமான ஜன்னல்களில் பல பெரிய பறவைகள் வந்து அமர்ந்திருந்தன
அவை அனைத்தும் ஒரே நேரத்தில் தங்கள் இறக்கைகளை விரித்தன அதைப் பார்த்து அவளுடைய இதயம் மீண்டும் படபடத்தது
ஆனால் அவள் வெளியில் எதையும் காட்டாமல் நின்றாள்.
அகோரன் அவளை ஓரக்கண்ணால் பார்த்து லேசாக சிரித்தான் அவள் புரியாமல் அவனை பார்த்தாள் “என்ன” என்று கேட்க
“உனக்கு பயமா இருக்கு தான” என்று கேட்க
அவந்திகாவின் முகம் உடனே மாறியது
“எனக்கு ஒன்னும் பயம்லா இல்லை” என்று கூற “அப்படியா” அவன் ஒற்றை புருவத்தை உயர்த்தினான் “உன் பின்னாடி பாரு” என்க
ஒரு பெரிய மனிதனும் மிருகமும் கலந்த உருவம் ஒன்று அவள் பின்னே “ஆஆஆ” என்று அலறி அகோரனை அணைத்து கொண்டாள்.
“பயப்படாத இது பெயர் காந்தா உனக்கு தேவையான எல்லா உதவிகளையும் பண்ணும் குழந்தைகளை கவனிக்க உனக்கு உதவி பண்ண ஒரு ஆள்” என்று கூற அவந்திகா அதிர்ந்து போனாள்.
காந்தா தன் உருவத்தை மாற்றி கொண்டாள் மனித உருவில் ஒரு நடுத்தர வயது பெண்ணை போல நிற்க பெண்ணவளுக்கு ஆச்சரியமாக இருந்தது அகோரன் அவளையும் குழந்தையையும் தன் நெஞ்சோடு அணைத்தபடி மாளிகையின் உள்ளே நடந்தான்அவந்திகாவும் அவனைத் தொடர்ந்து சென்றாள்.
சில அடிகள் சென்றதும், மாளிகையின் நடுவில் இருந்த மிகப்பெரிய கதவு தானாகத் திறந்தது அதற்குள் இருந்த காட்சியைப் பார்த்ததும் அவந்திகா அப்படியே நின்றுவிட்டாள் அங்கே
சாதாரணமாக அவள் நினைத்தது போல ஒரு அறை இல்லை மாளிகையின் நடுவே மிகப்பெரிய வட்ட வடிவ மண்டபம் இருந்தது
அதன் நடுவில் கருங்கல்லால் செய்யப்பட்ட ஒரு தொட்டில் அந்தத் தொட்டிலுக்குள் குழந்தைகள் உறங்க ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது அவந்திகாவின் பார்வை உடனே அந்த தொட்டிலின் மீது சென்றது தங்க வைரம் நவரத்தினங்களால் ஆன தொட்டில் அது உள்ளே இரண்டு குழந்தைகள் உறங்க மெத்தையும் அமைக்கப்பட்டு இருந்தது
அகோரன் மெதுவாக தன் கையில் இருந்த குழந்தையை அந்தத் தொட்டிலில் படுக்க வைத்தான்.
தொட்டிலின் சுற்றிலும் இருந்த கற்களில் மெல்லிய ஒளி பரவத் தொடங்கியது
அவந்திகாவுக்கு மூச்சே நின்று போனது
அந்த ஒளி குழந்தைகளைச் சுற்றி ஒரு பாதுகாப்பு வட்டம் போல உருவானது
“இது என்ன” என்று அவள் பயத்துடனே மெதுவாகக் கேட்டாள்.
அகோரன் அவளை ஒரு முறைப் பார்த்தான்
“என் வாரிசுகளுக்கான பாதுகாப்பு” என்றான்
“எதுக்கு பாதுகாப்பு” என்று கேட்க
அவன் முகத்தில் இருந்த புன்னகை மறைந்தது
சில நொடிகள் அவளை அமைதியாகப் பார்த்தவன்,“எதிரிகளிடம் இருந்து”
என்று மெதுவாகக் கூறினான்.
அவந்திகாவின் முகத்தில் குழப்பம் பரவியது
அகோரன் அவன் எதிரி யார் என்று பதில் சொல்லவில்லை மாறாக அவன் ஒரு இடத்தை கூர்ந்து பார்க்க அங்கே அடுத்த கணம் ஒரு பெரிய படுக்கை மெத்தை என்று அனைத்தும் வந்தது அந்த இடமே ஒரு தனியறையை போல மாறியது “பயணம் பண்ணி வந்தது உனக்கு சோர்வா இருக்கும் நீ தூங்கு” என்றவன் அவள் பதிலை எதிர்ப்பாராமல் வெளியே வந்தான்
“காந்தா” என்று அழைக்க அந்த பெண் அங்கே ஓடி வந்தாள் “இந்த அறையோட வாசல்ல காவலுக்கு இரு என்னை கேட்க்காம யாரையும் உள்ள அனுமதிக்க கூடாது யாரையும்” என்று அழுத்தமாக கூறிவிட்டு செல்ல அவளும் அங்கே காவலுக்கு நின்றாள்.