வித்தாரக்கள்ளியை வென்றவன் 3,4 அத்தியாயம் 3 முத்துச்செல்வி எப்படியோ வீடு வந்து சேர அவளின் பாட்டி செண்பகம் பூ கட்டிக் கொண்டு இருந்தார் வீட்டிலேயே பூவைக் கட்டி விற்பனை செய்து வருகிறார் “வந்துட்டியா செல்வி அடுப்புல சோறு வடிச்சி வச்சுருக்கேன் கருவாட்டு குழம்பு இருக்கு போட்டு சாப்பிடு” என்று கூற “ஏன் பாட்டி இதெல்லாம் செஞ்ச நான் வந்து செஞ்சுக்க மாட்டனா உனக்கே மூட்டு வலி” என்று கூறிக் கொண்டே தட்டில் சாப்பாட்டை வைத்து சாப்பிட ஆரம்பித்தாள். “நீ சாப்பிடியா பாட்டி” என்று கேட்டு கொண்டே கருவாட்டு குழம்பை சாப்பாட்டுடன் எடுத்து வாயில் வைத்தவள் அதன் ருசியில் மெய் மறக்க “நான் சாப்பிட்டேன் டி” என்றார் “உன் அளவுக்கு சமைக்க யாரலையும் முடியாது பாட்டி” என்றவள் மெல்ல சாப்பிட்டு கொண்டு இருக்க “இன்னைக்கு வேலை எப்படி போச்சு” என்று அவர் கேட்க பெண்ணவளின் மனதில் அவளே அறியாமல் சேதுவின் நினைவு வந்தது …