தைத்தியனின் தேவதை 11,12
அத்தியாயம் 11
ஒரு நாள் இரவு அவந்திகா ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள் அறை முழுவதும் அமைதியாக இருந்தாலும் ஜன்னல் வழியாக வந்த நிலவொளி மட்டும் அவளது முகத்தின் மீது மெல்ல விழுந்து கொண்டிருந்தது அறையின் இருண்ட மூலையில் அகோரன் நின்றிருந்தான் வழக்கம்போல அவளிடம் நெருங்க முயற்சிக்கவில்லை அவனால் அது முடியவும் முடியாது என்று அவனுக்கும் தெரிந்து தான் இருந்தது ஆனால் அவளை விட்டு ஒருநாளும் அவன் விலகியதே இல்லை.
அவந்திகாவின் வலது கையில் கட்டப்பட்டிருந்த அந்தக் கயிறு இன்னும் அவனைத் தடுத்து நிறுத்தி கொண்டு தான் இருந்தது அவன் ஒரு அடி முன்னேறினாலே…அந்தக் கயிறு மெல்ல பிரகாசிக்க ஆரம்பித்தது அதன் சக்தி அவனை எச்சரிப்பது போல இருக்கும்.
அதனால் பல நாட்களாக அவந்திகாவை அவனால் தொலைவில் இருந்து மட்டுமே பார்க்க முடிந்தது அவள் தூங்குவதை பார்த்துக் கொண்டிருந்தவன் அவளின் மாசு மருவற்ற முகம் அவனை ஏதோ செய்தது இத்தனை நாள் பிரிவு அவனை ஏக்கமடைய செய்தது இன்று முதல் முறையாக அவளது வயிற்றின் மீது பார்வையைப் பதித்தான் அவனது கண்களில் ஏதோ ஒரு மாற்றம் அது கோபமல்ல அச்சமல்ல ஏக்கம் ஒரு தந்தையின் ஏக்கம் அவளுக்குள் வளர்ந்து கொண்டிருந்தது அவனுடைய உயிர் அவன் உதிரம் அந்தக் குழந்தை சாதாரண குழந்தை அல்ல அவன் சக்தி அவன் உயிரின் ஒரு பகுதி அவன் ஒட்டு மொத்த வம்சத்தின் வாரிசு அகோரன் மெதுவாக தன் கையை உயர்த்தினான்.
அவந்திகாவைத் தொட வேண்டும் என்ற ஆசையில்லை அவளது வயிற்றை மட்டும் ஒருமுறையாவது தொட்டுப் பார்க்க வேண்டும் என்ற ஏக்கம் தன் பிள்ளைகள் எப்படி இருக்கின்றன என்பதை உணர வேண்டும் என்ற அவனுடைய ஏக்கம் அவன் கை மெதுவாக முன்னேறியது.
ஆனால் அவளிடம் இருந்து இன்னும் சில அங்குல தூரத்தில் வந்ததும் அந்தக் கயிறு திடீரென பிரகாசித்தது அகோரன் அப்படியே நின்றுவிட்டான் அவன் கையைப் பின்னால் இழுக்கவில்லை சில நொடிகள் அந்தக் கையை அப்படியே நீட்டியபடி நின்றான் அவளது வயிற்றை ஒரு முறையெனும் தொட்டுவிட முடியாதா என்ற ஏக்கம் அவன் கண்ணில் இருந்தது அந்த இடைவெளி அவனுக்கு முடிவில்லாத தூரமாகத் தோன்றியது அப்போது அவந்திகாவின் வயிற்றுக்குள் இருந்த குழந்தை மெதுவாக அசைந்தது.
அகோரனின் கண்கள் ஆச்சரியத்தில் அகல விரிந்தன அவன் தன் கையை பார்த்தான் மீண்டும் அவளது வயிற்றைப் பார்த்தான் அவன் மகவுகள் அவனை உணர்ந்து இருந்தன அதனால் தான் தாங்கள் இருக்கிறோம் என்று அசைந்து கொடுத்தது அவனுடைய முகத்தில் பல வருடங்களாக காணப்படாத ஒரு மென்மையான உணர்வு தோன்றியது “என்னை உணர்றியா என் தங்கமே” அவன் மெதுவாக முனுமுனுத்தான்.
ஆனால் அவந்திகா காதில் எதுவும் விழுந்த பாடில்லை அவள் ஆழ்ந்த உறக்கத்திலேயே இருந்தாள் அகோரன் மெதுவாக தன் கையை இறக்கிக் கொண்டான் ஒருமுறை கூட தன் குழந்தையை தொட்டு பார்க்க முடியாத ஏக்கத்துடன் அவளைப் பார்த்துக் கொண்டிருந்தான்.
அந்த இரவு மட்டும் அல்ல…அடுத்தடுத்த இரவுகளிலும் அவன் அப்படியே தொலைவில் நின்று அவளையும், அவளுக்குள் வளர்ந்து கொண்டிருந்த தன் உயிரையும் பார்த்துக் கொண்டிருந்தான் நாட்கள் நகர்ந்தன…அவந்திகாவின் வயிறு வேக வேகமாக பெரிதாக ஆரம்பித்தது.
அவள் பிள்ளைகளின் வளர்ச்சிக்கு எதிர்மாறாக அவள் உடல் தன் இயல்பை மீறி மாறிக் கொண்டிருந்தது நாளுக்கு நாள் அவள் மெலிந்து கொண்டே போனாள் அவள் சாப்பிடும் உணவே அவளுக்கு போதவில்லை சொல்லப்போனால் அவள் வழக்கத்தை விட அதிகமாக தான் சாப்பிட்டால் ஆனால் அவளின் பிள்ளைகளுக்கு அது போதவேயில்லை அவளிடம் இருந்தும் சத்துகளை எடுத்து கொண்டு வளர ஆரம்பித்தது அவளின் மகவுகள் அவளின் முகத்தில் இருந்த பொலிவு மறைந்தது கண்களுக்குக் கீழே கருவளையம் அதிகரித்தது எப்போதும் சோர்வாகவே இருந்தாள் சிறிது தூரம் நடந்தாலே மூச்சு வாங்கியது அவ்வளவு பெரிய வயிற்றை தூக்கி கொண்டு நடக்க முடியவில்லை ஆறு மாத வயிறு ஏதோ ஒன்பது மாத வயிற்றை போல இருந்தது அவளினா வலியையும் வேதனையையும் அவளால் யாரிடமும் சொல்லவும் முடியவில்லை அவளின் தாய் தந்தை அவளிடம் பேசுவதையே நிறுத்தி இருந்தனர் அவளின் தங்கையும் பள்ளி விடுதியில் சேர்த்திருந்தனர் தனிமையும் அவளின் உடல் மாற்றங்களும் பெண்ணவளை பாடாய் படுத்தி எடுத்தது.
சில நேரங்களில் உணவைப் பார்த்தாலே வாந்தி வந்தது வேறு சில நேரங்களில் ஒரு அரக்கியை போல அள்ளி வாயில் போட்டு கொண்டாள் “என்னால ஏன் எல்லாரை மாறியும் சாதாரணமா இருக்க முடியல” என்று கண்ணாடி முன் நின்று கண்ணீர் விட்டு அழுதாள் தன் முகத்தை ஒரு முறை பார்த்தாள் உடல் மெலிந்து பொலிவு இழந்து இருந்தவளை பார்க்க பார்க்க அவளுக்கே கோபம் வந்தது சொல்லப்போனால் அவளுக்கே தன்னை அடையாளம் காண முடியவில்லை ஒரு புறம் வயிறு மட்டும் வேகமாக பெரிதாகி கொண்டே இருந்தது மறுபுறம் அவளுடைய உடல் மெலிந்து கொண்டே இருந்தது.
அது சாதாரண கர்ப்பம் அல்ல அவளுக்குள் வளர்ந்து கொண்டிருந்த அரக்கக் குழந்தை, தன் வளர்ச்சிக்குத் தேவையான சக்தியை அவளுடைய உடலில் இருந்தே எடுத்துக் கொண்டிருந்தது அவந்திகாவுக்கு அந்த உண்மை தெரியவில்லை ஆனால் அவளுடைய உடல் அதை உணர ஆரம்பித்திருந்தது.
ஒரு நாள் அவள் அறையில் தனியாக இருந்தபோது திடீரென தலைசுற்றியது சுவரைப் பிடித்துக் கொண்டு எழுந்து நிற்க முயன்றாள் ஆனால் அவளால் அது முடியவில்லை அவளின் தாய் வெளியே சென்று இருக்க “அம்மா…”என்று அழைக்க முயன்றாள் ஆனால் அவள் குரல் கூட வெளியே வரவில்லை அந்த அளவுக்கு அவள் வலுவிழந்து காணப்பட்டாள்.
அடுத்த நொடியே அவளுடைய கண்கள் இருண்டன அவள் தரையில் சரிந்து விழுந்தாள் அவளது உடல் அசைவில்லாமல் கிடந்தது அந்த நொடியில்…அறையின் இருண்ட மூலையில் நின்றிருந்த அகோரனின் கண்கள் சிவந்தன அவன் பல நாட்களாக தொலைவில் இருந்து அவளைப் பார்த்துக் கொண்டிருந்தான் அவளால் அவனை உணர முடியவில்லை அவனாலும் அவளை நெருங்க முடியவில்லை ஆனால் இப்போது அவள் உயிர் மெதுவாக அவளின் உடலை விட்டு செல்வதை அவனால் உணர முடிந்தது அவனது பார்வை அவளது வயிற்றின் மீது சென்றது குழந்தையின் சக்தி அதிகரித்துக் கொண்டிருந்தது ஏனோ அவனே அறியாமல் அவன் மிகவும் பதட்டமடைய ஆரம்பித்தான் சொல்லப்போனால் அவனுள் பய உணர்வும் தோன்றியது எத்தனையோ கெட்ட சக்திகளை நேரடியாக எதிர் கொள்பவன் முதல் முறையாக தன்னவளுக்கு அஞ்சினான்.
அவந்திகாவின் சக்தி குறைந்து கொண்டே இருந்தது இன்னும் கொஞ்சம் தாமதித்தால் நிச்சயமாக அவள் இறந்து விடுவாள் என்பது அவனுக்கு புரிந்துவிட்டது அகோரன் இறுக்கமாக தன் கைகளை மூடினான் முதன்முறையாக அந்தக் கயிற்றின் சக்தியை பற்றி கவலைப்படாமல் அவளை நோக்கி கையை நீட்டினான் அவளைத் தொட முடியவில்லை.
ஆனால் அவனுடைய சக்தியை அந்த கயிற்றால் தடுக்க முடியவில்லை அவன் கண்களை இறுக மூடினான் அடுத்த நொடி அவனுடைய உடலில் இருந்து கருமையான சக்தி மெல்ல வெளியேறியது அது காற்றை போல அவந்திகாவை சுற்றி படர்ந்தது அவளுடைய உடலை நேரடியாகத் தொடாமல்…அவளைச் சுற்றி ஒரு பாதுகாப்பு வளையம் போல உருவானது.
அகோரன் தன் சக்தியை மெதுவாக அவளுக்குள் செலுத்தினான் அவளுடைய குறைந்து கொண்டிருந்த உயிர் சக்தி மீண்டும் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்க ஆரம்பித்தது அவந்திகாவின் மூச்சு காற்று சீரானது அவளின் வாடிய முகம் சாதாரண நிலைக்கு வந்தது அவளது விரல்கள் மெதுவாக அசைந்தன அகோரன் இப்போது கண்களைத் திறந்தான் அவள் மீண்டும் மூச்சுவிடுவதை பார்த்ததும் அவனுடைய முகத்தில் ஒரு நிம்மதி ஆனால் அடுத்த நொடியே அவன் பலவீனமாக ஒரு அடி பின்னால் தடுமாறினான் அவளை காப்பாற்றுவதற்காக அவனுடைய சக்தியின் ஒரு பகுதியை அவளுக்குக் கொடுத்திருந்தான் அவந்திகா மெதுவாக கண்களைத் திறந்தாள் அவள் சுற்றி முற்றி தன் பார்வையை ஓடவிட்டாள் ஆனால் அங்கு யாரும் இல்லை.
அவளுக்கு அங்கு என்ன நடந்தது என்பதும் புரியவில்லைதன் வயிற்றின் மீது கையை வைத்தபோது குழந்தை வழக்கம்போல அசைந்தது அவள் குழப்பத்துடன் கண்களை மூடினாள் அதே நேரத்தில் அறையின் இருண்ட மூலையில் அகோரன் நின்றிருந்தான் அவன் அவளைப் பார்த்துக் கொண்டு தான் இருந்தான் அகோரன் அவளை காப்பாற்றியதை பற்றி அவளுக்குத் தெரியாது அவனால் அதை அவளிடம் சொல்லவும் முடியாது அவளை நெருங்கவும் முடியாது அவள் உயிரோடு இருக்க வேண்டும் என்பதே அவனுடைய எண்ணமாக இருந்தது அவனுடைய பார்வை மீண்டும் அவளது வயிற்றின் மீது சென்றது அந்தக் குழந்தை மீண்டும் மெதுவாக அசைந்தது அகோரனின் உதடுகளில் மெல்லிய புன்னகை தோன்றியது வாழ்வில் முதல் முறையாக சிரிக்கிறான்
ஒரு அரக்கனுக்குள்…முதன்முறையாக ஒரு தந்தையின் உணர்வு விழித்துக் கொண்டது.
இப்படியே நாட்கள் நகர்ந்தது அவந்திகா வழக்கம்போல படுக்கையில் படுத்திருந்தாள் திடீரென அவளது வயிற்றுக்குள் ஏதோ இறுக்கி பிடித்தது போல உணர்ந்தவள் வலியில் உடலை சுருக்கிக் கொண்டாள் “அம்மா…” என்று மெல்ல அழைத்தாள்.
ஆனால் அடுத்த நொடியே வலி இன்னும் அதிகரித்தது அவளது கைகள் தானாகவே வயிற்றை இறுக பற்றிக் கொண்டது ஆறாவது மாதம் தான் ஆனால் அவளுக்குள் பிள்ளை பிறப்பதற்க்கான வலி வந்திருந்தது “அம்மா… அம்மா…” என்று இம்முறை சத்தமாக அழைத்தாள்.
அவளது நெற்றியில் வியர்வைத் துளிகள் பூத்தது மூச்சு வேகமாகியது இன்னொரு முறை வயிறு இறுகியதும் அவள் வலியில் அலறினாள் அந்த அலறல் அறை முழுவதும் எதிரொலித்த அதே நொடியில் அறையின் இருண்ட மூலையில் நின்றிருந்த அகோரனின் கண்கள் சட்டென்று சிவந்தன அவன் பார்வை அவளது வயிற்றின் மீது பதிந்தது அவளுக்குள் இருந்த குழந்தையின் சக்தி திடீரென பல மடங்கு அதிகரித்திருந்தது அவனுக்கு தெரிந்துவிட்டது அவன் மகவுகள் பிறக்க போகின்றன என்று அகோரனும் பதட்டமடைய ஆரம்பித்தான்.
அவந்திகா இன்னொரு முறை வலியில் அலறியபோது, அவளது வயிற்றுக்குள் இருந்த குழந்தை பலமாக அசைந்தது அந்த அசைவு சாதாரண குழந்தையின் அசைவை போல தோன்றவில்லை அந்த அசுர குழந்தை வெளியே வருவதற்க்கான அசைவு அது வெளியே வரத் துடிக்கும் ஒரு அசுர சக்தியைப் போல இருந்தது.
ஆறாவது மாதத்திலேயே…அந்த அரக்கக் குழந்தை பிறக்க தயாராகி கொண்டிருந்தது.
அத்தியாயம் 12
“அம்மா அம்மா” என்று அவந்திகா அந்த அறையே அதிரும் படி வலியில் அலறி துடிக்க சத்தம் கேட்டு ஓடி வந்தார் அவளின் தாய் ஜானகி “என்னாச்சு அவந்தி” என்று அவர் பதட்டத்துடனே கேட்க “வயிறு…வயிறு பயங்கரமா வலிக்குது மா” என்று அவள் பல்லை கடித்து தன் வலியை பொறுத்து கொண்டே கூற ஜானகி தன் கணவனை ஓடிச்சென்று அழைத்து வந்தார் “என்னங்க சீக்கிரமா ஹாஸ்பிட்டல் போகனும்” என்று கூற அவரும் தன் காரில் அவந்திகாவை ஏற்றி மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
நள்ளிரவு வேளையில் அவளை மருத்துவமனைக்கு அழைத்து வர அங்கிருந்த செவிலியர் உடனே அவசர சிகிச்சை பிரிவில் அவளை அனுமதித்தார் பெண்ணவள் வலியில் துடிப்பதை பார்த்தவர் அவளை பரிசோதிக்க அவளுக்கு உண்மையிலேயே பிரசவ வலி தான் வந்திருந்தது என்ன இது விந்தை என்று நினைத்தவர் பயத்துடனே மருத்துவரை அழைத்து வர அவரும் அவளை பரிசோதித்து பார்த்தவர் “பிரசவ வலி தான் வந்துருக்கு சீக்கிரமா எல்லாம் ரெடி பண்ணுங்க” என்று கூற அவந்திகா வலியில் துடி துடிக்க ஆரம்பித்தாள் அவளின் முகம் சிவந்து வியர்த்து எப்படியோ வலியை பொறுத்து கொண்டு ஒத்துழைப்பு கொடுக்க இரட்டை குழந்தைகள் பிறந்தன.
குழந்தைகள் பிறந்த மறு கணம் வெளியே சூறாவளி காற்று வீச ஆரம்பித்தது மருத்துவமனை வெளியே இருந்த நாய் எதையோ விசித்திரமாக பார்த்து குலைத்து வைத்தது ஒரு கட்டத்தில் அதுவே பயந்து அஅங்கிருந்து ஓட ஆரம்பித்தது அறையின் உள்ளே மின் விளக்குகள் விட்டு விட்டு எரிந்தன அங்கிருந்த மருத்துவர்களுக்கே அது பயத்தை கொடுத்தது அந்த வித்தியாசமான சூழலை பார்த்த மருத்துவர்கள் கூட பயந்துவிட்டனர்.
குழந்தைகள் இரண்டும் வீல்லென்று ஒரே நேரத்தில் அழ அந்த அழுகை சாதாரண குழந்தைகளின் அழுகையை போல இல்லாமல் மருத்துவமனை முழுவதும் எதிரொலிப்பது போல இருந்தது அந்த சத்தம் கேட்ட மறுநொடியே மருத்துவமனையின் ஜன்னல்கள் அனைத்தும் படபடவென்று அடித்துக் கொண்டன.
“என்ன இது” என்று அந்த மருத்துவர் அதிர்ச்சியுடனே சுற்றி பார்த்தார் அவந்திகா பிரசவ வலியில் சோர்ந்து கண்களை மூடியபடியே கிடந்தாள் அவந்திகா அவளது உடல் முழுவதும் வியர்வையில் நனைந்திருந்தது அவளுக்கு தன் குழந்தைகள் பிறந்துவிட்டார்கள் என்பது மட்டுமே தெரிந்தது
அவளின் பிள்ளையின் அழுகுரல் கூட கேட்டது ஆனால் கண்ணை திறக்க முடியாமல் சோர்ந்து போய் படுத்திருந்தாள்.
“குழந்தைகளை சுத்தம் பண்ணி வெளியே எடுத்துட்டு போங்க” என்று மருத்துவர் கூற அங்கிருந்த செவிலி பெண்கள் குழந்தை எடை மற்றும் உயரம் அனைத்தையும் சரி பார்த்து சுத்தம் செய்து வெளியே எடுத்து வந்தனர்.
அவந்திகாவின் தாய் தந்தை காத்திருக்க பிள்ளைகளை அவர்களின் கையில் கொடுத்தார் செவிலியர் “என் பொண்ணுக்கு ஆறு மாசம் தானே ஆகுது சொன்னிங்க ஆனா குழந்தைங்க அதுக்குள்ளேயே பிறந்துட்டாங்க” என்று ஜானகி கேட்க “அது தான் மேடம் எங்களுக்கும் புரியலை ஆனா குழந்தைகளுக்கு கரெக்ட்டான எடை வளர்ச்சி இருக்கு மா” என்றார் அந்த செவிலியர்
உடனே ஜானகியின் மனதில் ஒருவேளை தன் மகள் ஏற்கனவே கரு தரித்து இருப்பாளோ என்ற சந்தேகம் எழுந்தது ஆனால் அதை அவரிடம் அவர் கேட்க்கவில்லை தன் கையில் இருந்த மகளின் மகவுகளை பார்க்க கூட அவருக்கு பிடிக்கவில்லை உடனே செவலியிரிடம் கொடுத்தார் ரங்கநாதன் இடிந்து போய் ஒரு மூலையில் அமர்ந்து இருந்தார்.
அறையின் உள்ளே ஒரு மூலையில் யாருக்கும் தெரியாமல் அகோரன் நின்று கொண்டிருந்தான் அவனது பார்வை முழுவதும் அந்த இரண்டு குழந்தைகளின் மீதுதான் இருந்தது பல வருடங்களாக அவனுக்குள் இருந்த ஏக்கம் அந்த நொடியில் அவன் கண்களில் தெரிந்தது.
“என் குழந்தைகள்…” என்று அவன் மெதுவாக முனுமுனுத்து பார்த்தான் அத்தனை நிறைவாக இருந்தது அவன் மனது அவன் மெதுவாக தன் குழந்தைகளை நோக்கி ஒரு அடி எடுத்து வைத்தான் இந்த முறை அந்தக் கயிறு பிரகாசிக்கவில்லை அகோரன் அதிர்ச்சியுடன் தன் கையை பார்த்தான் மீண்டும் ஒரு அடி முன்னேறினான் எந்த தடையும் இல்லை.
அவன் மெதுவாக குழந்தைகளின் அருகில் சென்று நின்றான் ஒரு குழந்தை அழுது கொண்டிருக்க, மற்றொரு குழந்தை கண்களை மூடியபடி அமைதியாக இருந்தது
அகோரன் நடுங்கும் கையால் அந்தக் குழந்தையின் கன்னத்தை மெதுவாக வருடினான்.
அவன் தொட்டவுடன்…குழந்தை அழுகையை நிறுத்தியது குட்டி கண்களை விரித்து தன் தந்தையை பார்த்து மெல்ல சிரித்தது அந்த அசுர குழந்தை இயல்பான குழந்தையை விட அந்த குழந்தைகள் பன்மடங்கு அறிவாற்றல் பெற்று இருந்தன அகோரனின் உடனே கண்கள் கலங்கின “என்னை உணர்றியா…”
என்றவனின் குரல் முதல் முறையாக உடைந்தது லேசாக கண்கள் கூட கலங்கியது.
அதே நேரத்தில் மற்றொரு குழந்தையும் அழுகையை நிறுத்தியது அகோரன் இருவரையும் பார்த்துக் கொண்டே மெதுவாக சிரித்தான் அவன் வாழ்க்கையில் இதுவரை எதற்கும் பயப்படாதவன்
ஆனால் அந்த இரண்டு சின்ன உயிர்களை பார்த்தபோது…
அவனுக்குள் ஒரு புதிய பயம் பிறந்தது
அவர்களுக்கு ஏதாவது ஆகிவிடக்கூடாது என்ற பயம் காரணம் அவர்கள் மனித மற்றும் ராட்சச இனத்தின் கலவை என்பதால் அவனுக்கு அந்த பயம் வந்தது.
அந்த நேரத்தில் வெளியில் வீசிக் கொண்டிருந்த சூறாவளி காற்று திடீரென நின்றது வானம் அமைதியாகியது
ஆனால் உலகின் பல இடங்களில்
பல வருடங்களாக வறண்டு கிடந்த குளங்கள் மழை வெள்ளத்தால் நிரம்ப ஆரம்பித்தன வாடிப் போன மரங்களில் புதிய தளிர்கள் முளைத்தன கடலின் நடுவில் பெரிய அலை ஒன்று எழுந்து மீண்டும் அமைதியாகியது இரு குழந்தைகளின் பிறப்பு உலகயே உலுக்கி கொண்டு இருந்தது.
அதே நேரம் வெளியே ஜானகி கண்ணீர் விட்டு கதறி கொண்டு இருந்தார் “பாவி மகள் நம்மலை எப்படியெல்லாம் ஏமார்த்தி இருக்கா பாருங்கங்க நாம எப்படி ஊருக்குள்ள இனி நடக்க முடியும்” என்று அவர் புலம்பிக் கொண்டே இருக்க “வேற வழியில்லை பெத்த கடனை அடைச்சி தான ஆகனும்” என்று ரங்கநாதன் கூறினார்.
“இவள் இந்த மாதிரி ஒரு அசிங்கத்தை பண்ணிட்டு வந்ததுக்கு நாய் ஏன்ங்க அசிங்கப்படனும் மிச்சம் இருக்க ஒரு பொண்ணையாவது நாம ஒழுங்கா வளர்க்க வேண்டாமா” என்று அவர் கண்ணீருடனே கூற
“அதுக்கு இப்போ என்ன தான் பண்றது ஜானகி” என்று ரங்கநாதன் கேட்க “நான் அதுக்கு ஒரு வழி சொல்றேன்ங்க” என்றார் ஜானகி.
அப்போது “மேடம் உங்க பொண்ணு கண் முழிச்சாட்டாங்க” என்று செவிலிப்பெண் கூற அவள் இருந்த அறைக்கு இருவரும் சென்றனர் ஜானகி ஏதோ சண்டைக்கு செய்பவரை போல சென்றார் இருவரும் அறையின் உள்ளே வர அவந்திகா மெல்ல தன் பெற்றோரை பார்த்தாள் அவளின் கண்கள் கலங்க ஆரம்பித்தது ஆனால் அவளின் பெற்றோரோ அவளை ஒரு அருவருப்புடனே பார்த்தனர்.
“அம்மா” என்று அவள் ஏக்கத்துடன் பாசம் கலந்த குரலில் அழைக்க ஜானகி எங்கிருந்து தான் அத்தனை கோபம் வந்ததோ “ஒரு வார்த்தை உன் வாயில இருந்து வந்துச்சு நான் மனுசியாவே இருக்க மாட்டேன் என் வயித்துல தான் நீ பொறந்தியா டி பாவி உன்னை நான் நல்லா தான வளர்த்தேன் எப்படி டி நீ இப்படி ஒழுக்கம் கெட்டவளா மாறுன சொல்லு டி உண்மையாவே நீ என் வயித்துல பொறந்தியா எப்படி டி இவ்வளவு பெரிய பொய்யை எங்க கிட்ட சொல்ல உனக்கு மனசு வந்துச்சு ஏற்கனவே ஒருத்தன் கிட்ட ஏமார்ந்துட்டு எங்க கிட்ட அதை மூணு மாசமா மறைச்சி வேற இருக்க உனக்கு எவ்வளவு தைரியம் இருக்கனும்” என்று கேட்க.
“அம்மா நான் பொய் சொல்லலை உண்மையாவே இது ஆறு மாசம் குழந்தை தான் நான் அன்னைக்கே சொன்னனே ஒருத்தன் என் கனவுல வந்தான்னு” என்று கூற
ஜானகிக்கு அவளை கொன்றுவிடும் எண்ணம் எழுந்தது.
“இப்போ கூட நீ எங்க கிட்ட பொய் தான சொல்ற ஒரு தடவை கூட உண்மையை சொல்ல உனக்கு தோனலைல்ல” என்று ரங்கநாதன் கேட்க “அப்பா நான் உண்மையை சொல்றேன்” என்றாள் பெண்ணவள் இருவரும் ஒருவர் முகத்தை பார்த்து கொள்ள அந்த நேரத்தில் இரு குழந்தைகளில் ஒரு குழந்தை அழுக இருவரும் கோபத்துடனே வெளியே சென்றனர் அவளுக்கு உதவி செய்ய தோன்றவில்லை.
செவிலியர் ஒருவர் உள்ளே வந்து அழும் பிள்ளையை பார்த்தவர் “ஏன் மா குழந்தைங்க அழறது கேட்க்கல எழுந்து பசியாத்து மா படுத்தே இருக்க” என்று கேட்க பெண்ணவள் தட்டுத்தடுமாறி எழுந்து அமர்ந்தாள் அவர் பிள்ளையை கையில் அவளும் பசியாற்ற கையில் வாங்கினாள் ஏனோ அந்த பிள்ளையின் முகத்தில் மன்னவனின் சாயலை பார்த்தவளுக்கு குழந்தைக்கு பசியாற்றவே தோன்றவில்லை மாறாக கோபம் தான் வந்தது அழும் பிள்ளையை பார்த்து கொண்டே அமர்ந்து இருக்க அகோரனுக்கு கோபத்தில் கண்கள் சிவந்தது உடனே செவிலி பெண்ணின் உடலில் கூடு விட்டு கூடு பாய்ந்தவன் “ஏய் என்னை டி வேடிக்கை பார்த்துட்டு பிள்ளை பசிக்கு அழுகுதுல்ல” என்று அவன் மிரட்டலாக கூற அவளும் பசியாற்ற ஆரம்பித்தாள் அவள் கண்கள் அழுக அவனும் அவளை தான் பார்த்து கொண்டே இருந்தான் அவளின் கையில் இருந்த கயிற்றையும் பார்த்தவன் “என்ன இது கையில” என்று அவளிடம் கேட்க “ஒரு சித்தர் கொடுத்த கயிறு மேடம்” என்றாள் கண்கள் கலங்க.
“இதெல்லாம் குழந்தை பிறந்த அப்புறம் கட்டக்கூடாதுன்னு தெரியாதா உனக்கு” என்று கேட்க “தெரியாது மேடம்” என்றாள் அப்பாவியாக “சரி அதை கழட்டு” என்றார்
அவள் பிள்ளைக்கு பசியாற்றி கொண்டு இருக்க “எப்படி மேடம் கழட்டுறது” என்று கேட்க
“பக்கத்துல கத்திரிக்கோல் எடுத்து கழட்டு” என்றார் அவளும் தட்டுத்தடுமாறி எடுத்து தன் கையில் இருந்த கயிற்றை கழட்டி முடிக்க அகோரன் அந்த செவிலிப்பெண் உடலில் இருந்து தனியே வந்து நின்றான்.
அந்த செவிலியருக்கு ஒரு கணம் என்ன நடக்கிறது என்று புரியவில்லை பெண்ணவளின் கையில் இருந்த கத்திரிக்கோலை பார்த்தவர் “கையில பிள்ளையை வச்சிக்கிட்டு என்ன இதை கையில வச்சிக்கிட்டு இருக்க” என்று கேட்டவர் அவள் கையில் இருந்த கத்தரிக்கோலை வாங்கி வைத்தவர் அவளை முறைத்து விட்டு அங்கிருந்து சென்றார் “இவங்களுக்கு என்னாச்சு” என்று அவள் மனதில் நினைக்க அகோரன் கண்கள் பெண்ணவளை தான் பார்த்து கொண்டே இருந்தது இனி அவளையும் அவன் மகவையும் எந்த வித தடையும் இன்றி
அவன் நெருங்கலாம் என்ற புரிப்பு அவன் மனதில் இருந்தது.