உயிரின் உவமை நீ 11

அத்தியாயம் 11

 

காலை பொழுது விடிய பொழுது புலர்ந்தும் ராயன் எழுந்து கொள்ளவேயில்லை இரவெல்லாம் உறங்காததால் நன்றாக உறங்கி கொண்டிருந்தான் வீட்டில் சத்தமாக இருக்க அந்த சத்தத்தில் கண்விழித்தான் மெல்ல அவன் எழுந்து வெளியே வர சமையலறையில் இருந்து தான் அந்த சத்தம் வந்தது ‘மனுசனை தூங்க கூட விட மாட்டாங்க’ என்று புலம்பிக் கொண்டே அவன் சமையலறைக்கு வந்தான் அங்கே அவன் தாய் ஏதோ சமைத்து கொண்டிருக்க அவன் மனைவி திரும்பி நின்று தன் அத்தையுடன் கதை அளந்து கொண்டிருந்தாள்.

 

அவள் திரும்பி நின்றிருக்க ரத்த சிவப்பு நிற பட்டு பாவடை சட்டை அணிந்து இருக்க அவளின் நீளக் கூந்தலின் பின்னல் இடையை தாண்டி இருந்தது அதில் ஒரு முழம் மல்லிப் பூவை வைத்து கொண்டு காதில் ஜிமிக்கி ஆட கையில் கண்ணாடி வளையல் சளசளக்க கையில் அவர் சுட்ட வடையை கையில் வைத்து கொண்டு சாப்பிட்டு கொண்டே கதை பேசிக் கொண்டு இருந்தாள் அவளின் பின்னழகிலேயே ஆணவனுக்கு பித்தம் கொண்டது செதுக்கி வைத்த தங்க சிலையாக இருந்தாள் அவன் மனைவி.

 

அவன் அங்கேயே நின்று இருப்பதை பார்த்த செல்வி “என்ன டா நீ எப்போ வந்த” என்று கேட்க அவனோ பதில் கூறாமல் பெண்ணவளையே பார்த்து கொண்டிருந்தான்

செல்வி பேசியதை பார்த்த அஞ்சலி திரும்பி நின்றாள் அங்கே நின்றிருந்த ராயனை பார்க்க அவனும் அவளை தான் பார்த்தான் அவளின் முன்னழகில் அவளின் காலடியிலேயே விழுந்துவிட்டான் மன்னவன் இத்தனை நாள் இவளை எப்படி கவனிக்காமல் போனோம் என்று எண்ணம் வந்தது.

 

அஞ்சலி மாநிறம் கலையான முகம் வெள்ளந்தியான மனது வில் போன்ற புருங்கள் மூக்கில் ஒற்றை கல் பதித்த மூக்கத்தியுடன் ஐந்தடி உயரத்தில் கழுத்தில் அவன் கட்டிய புது மஞ்சள் தாலி கழுத்தை ஒட்டிய சிறிய செயினுடன் அழகு பதுமையென அவன் முன் நின்றிருந்தாள் அவளின் கழுத்துக்கும் அவன் கண்கள் செல்ல அதற்க்குள் செல்வி “ராயா ராயா” என்று இரண்டு முறை கூப்பிட்டு விட சுயநினைவுக்கு வந்தவன் “சொல்லுங்க மா” என்று கேட்க மகனின் பார்வையை பார்த்த செல்வி.

 

“என்ன மந்திரிச்சு விட்ட கோழி மாதிரி நிக்குற வா வந்து வடை சாப்பிடு” என்றார் 

“மாமா அத்தை சுட்ட வடை செம்ம டெஸ்ட்டா இருக்கு” என்று கூறிக் கொண்டே ராயன் வாயில் ஊட்டி விட போக “இல்லை நான் இன்னும் குளிக்கல” என்று கூறிவிட்டு குளிக்க சென்றான்.

 

குளியலறை சென்று ஷவரை திறந்து குளிக்க ஆரம்பித்தான் குளிர் நீர் உடலில் பட அவன் கண்ணை மூட அவன் மனக்கண்ணில் அஞ்சலியின் உருவம் தான் வந்தது பாவடை சட்டையில் அவள் சிரித்து கொண்டே நிற்க அவள் சூடியிருந்த மல்லிகையின் மணம் நேற்று அவள் கட்டி அணைத்து படுத்தது அனைத்தும் நினைவுக்கு வந்து அவனை பாடாய் படுத்தி எடுத்தது அடுத்த நொடியே தலையை உலுக்கி கொண்டவன்

‘என்னடா ராயா இது… நேத்து வரைக்கும் குழந்தையா தெரிஞ்ச பொண்ணு, இன்னைக்கு ஏன் இப்படி என் மனசைக் கலைக்குறா” என்று தனக்குத்தானே கேள்வி கேட்டுக் கொண்டான்.

 

மீண்டும் தலையை சிலுப்பி கொண்டவன் ‘இல்ல… இது சரியில்லை. அவளுக்கும் உனக்கும் பத்து வயசு வித்தியாசம் இன்னும் அவள் உலகமே தெரியாத குழந்தை மாதிரி அவளுக்கு நீ நேரம் கொடுக்கணும்… உன் ஆசையை அவ மேல திணிக்கக் கூடாது’ என்று தனக்கு தானே மனதில் கூறிக் கொண்டான்.

 

ஆனாலும், வெட்கமே இன்றி வடையை தன் முன்னே நீட்டிய அவள் முகம் நினைவுக்கு வந்ததும், அவன் இதழோரம் அவனே அறியாமல் ஒரு சிறிய புன்னகை மலர்ந்தது

“சரியான லூசுப் பொண்ணு…” என்று முனுமுனுத்தவன் குளித்து முடித்து முகத்தில் விழுந்த நீரைத் துடைத்துக் கொண்டு வெளியே வந்தான்.

 

அவன் குளித்து முடித்து உடை மாற்றி வேலைக்கு கிளம்ப போக “ராயா நானும் அருளும் சாய்ந்திரம் ஒரு விசேஷத்துக்கு போறோம் வர ராத்திரி ஆகும் நீயே அஞ்சலிக்கு வரும் போது சாப்பிட எதாவது வாங்கிட்டு வந்துரு” என்று கூற அவனும் சரியென தலையை ஆட்டிவிட்டு வெளியே கிளம்பினான் அவன் காரை எடுத்துக் கொண்டு கிளம்ப பெண்ணவள் அவனுக்காக வாசலில் வந்து நின்று அவனையே பார்க்க கார் கண்ணாடி வழியாக அவளை பார்த்து கொண்டே காரை ஓட்டிச் சென்றான் ராயன்.

 

இரவு வேலை முடிந்து அவன் வீட்டுக்கு வர வீடே அமைதியாக இருந்தது வீட்டில் யாரும் இல்லை என்பது புரிந்தது அவன் கதவை திறந்து உள்ளே வந்தவன் “அஞ்சலி” என்று அழைக்க அவள் குரல் கொடுக்கவில்லை

“பாப்பா” என்று அழைக்க அறையில் இருந்து ஓடி வந்தாள் பெண்ணவள் அவன் முன்னே வந்தவளின் முகம் பளிச்சென்று சிரித்த முகமாக இருக்க சொக்கி தான் போனான் அவள் சிரிப்பில்.

 

“மாமா ரொம்ப பசிக்குது என்ன வாங்கிட்டு வந்திங்க இந்த அத்தையும் அருள் மாமாவும் என்னை தனியா விட்டுட்டு போய்ட்டாங்க” என்று கூற ஏனோ அவனுக்கு அவள் அவன் தம்பியையும் மாமா என்று அழைப்பது பிடிக்கவில்லை அவளுக்காக வாங்கி வந்த சாப்பாடு பொட்டலத்தை பிரித்து தட்டில் வைத்து அவளுக்கு ஊட்டி விட ஆரம்பித்தான்.

 

“அஞ்சலி நீ இனிமே என்னை மட்டும் தான் மாமான்னு கூப்பிடனும் அருளை மாமான்னு கூப்பிட கூடாது” என்று கூற பெண்ணவள் முகம் சுருங்கியது “ஏன் மாமா அவரு எனக்கு மாமா தான” என்று கேட்க “இல்லை இனி நான் மட்டும் தான் உனக்கு மாமா அருளை அண்ணான்னு கூப்பிடு” என்றான்.

 

அஞ்சலிக்கு தான் யோசிக்கும் அளவுக்கு மூளை இல்லையே “சரி மாமா” என்றாள் சிரித்து கொண்டே இருவரும் சாப்பிட்டு முடிக்க ராயனே அனைத்தையும் எடுத்து வைத்தவன் அறையின் உள்ளே வர அஞ்சலி தன் மேல் சட்டையின் பின்னே இருந்த கொக்கியை கழட்ட முடியாமல் தவித்துக் கொண்டிருந்தாள் அவளை பார்த்தவன் அப்படியே ஒரு கணம் நிற்க “மாமா கொக்கியை கழட்டி விடுங்க” என்று கூற அவனும் ஒரு வித தயக்கதுடனே அவள் அருகில் சென்றான் அவன் மனமோ ‘போகாத ராயா’ என்று கூறிக் கொண்டே இருக்க அதை அடித்து துரத்தியவன் அவள் அருகில் வந்து கொக்கியை கழட்டி அவள் நீண்ட கூந்தலை முன்னே தூக்கி போட்டான்.

 

அவன் பார்வை இப்போது அவள் கழுத்து வளைவுக்கு சென்றது அங்கே இருந்த பூனை முடிகளை பார்த்தவனுக்கு தாபம் தலைத் தூக்கியது அங்கே முத்து முத்தாக வியர்த்து இருக்க லேசாக வாயால் காற்றை ஊத 

சில்லென்ற காற்று அவள் கழுத்தில் பட “மாமா சூப்பரா இருக்கு ரெம்ப வியர்க்குது முதல்ல நைட்டியை போடனும்” என்று அவள் கூற அவன் மனம் அலை பாய்ந்தது ஒவ்வொரு கொக்கியாக அவன் கைகள் நடுங்க கழட்ட சரியாக அந்த மின்சாரம் தடைபட்டது அந்த அறையே இருளாக மாற “அய்யய்யோ மாமா எனக்கு பயமா இருக்கு” என்று கூறிக்கொண்டே அவனை இறுக அணைத்து கொண்டாள் சிறிதளவு கூட யோசியாமல் அவன் மார்பில் முகம் புதைத்து இறுக அணைத்துக் கொண்டாள்.

 

ராயனின் இதயம் வேகமாகத் துடித்தது அவள் உடல் லேசாக நடுங்குவதை உணர்ந்தவன், ஒரு கணம் என்ன செய்வதென்றே தெரியாமல் நின்றான் “பாப்பா… பயப்படாதநான்தான் இருக்கேன்ல்ல” என்று மெதுவாக அவள் காது மடலில் மீசை முடி பட கூறிக் கொண்டே அவள் முதுகை ஆறுதலாக வருடினான்.

 

அதே நேரத்தில் வெளியே மின்னல் வெட்ட, அஞ்சலி இன்னும் அவனோடு ஒட்டிக் கொண்டாள் “இப்பவும் பயமா?” என்று அவன் கேட்க “ம்ம்ம்…ரொம்ப பயமா இருக்கு மாமா” என்றாள் “சரி… நீ இங்கேயே இரு நான் மெழுகுவர்த்தி எடுத்துட்டு வரேன்” என்று கூறிவிட்டு அவன் அங்கிருந்து செல்ல போக 

“வேண்டாம்… என்னையும் கூட்டிட்டு போங்க மாமா” என்று அவள் அவன் சட்டையைப் பிடித்துக் கொண்டே நின்றாள் அதை பார்த்த ராயன் தலையில் அடித்து கொண்டு அங்கிருந்து சென்றான்.

 

“சரியான லூசு டி நீ..”என்றவன் அவள் கையைப் பிடித்தபடியே மெழுகுவர்த்தி எடுக்க இருவரும் இருட்டில் மெதுவாக நடந்தனர் இருள் ஓரளவுக்கு பழகியிருக்க மெழுகுவர்த்தி எடுத்து வந்து ஏற்றி வைத்தான்.

 

மெழுகுவர்த்தியின் மஞ்சள் வெளிச்சம் அறை முழுவதும் பரவியது அந்த மங்கலான ஒளியில் அஞ்சலியின் முகம் இன்னும் அழகாகத் தெரிந்தது அவளின் நெற்றியில் பூத்து இருந்த வியர்வை துளிகளை பார்த்த ராயன், அவளிடமிருந்து பார்வையைத் திருப்ப முடியாமல் நின்றான்.

 

“மாமா… என்னாச்சு ஏன் அப்படிப் பார்க்குறிங்க” என்று அவள் புருவம் சுருக்கிக் கேட்டாள்.

“ஒன்னுமில்லை…” என்று கூறியவன் வேறு பக்கம் தன் பார்வையை திருப்ப முயன்றான்

ஆனால் அஞ்சலியோ அவன் முகத்தை ஆராய்ந்தபடி, “பொய் சொல்றிங்க…‌மாமா ஏதோ இருக்கு…” என்றாள்.

 

ராயன் மெதுவாக அவள் அருகே வந்தான் இருவருக்கும் இடையில் சில அங்குல இடைவெளி மட்டுமே இருந்தது அவளின் கண்கள் அவன் கண்களை நேராக சந்தித்தது

அவன் கை தானாகவே உயர்ந்து அவள் கன்னத்தில் விழுந்திருந்த முடிக்கற்றையை காதோரமாக ஒதுக்கி வைத்தது.

 

அந்த ஸ்பரிசத்தில் அஞ்சலி லேசாக சிலிர்த்தாள் “மாமா…” என்று மெதுவாக அழைத்தவள், அவள் வெட்கத்தில் கண்களைத் தாழ்த்திக் கொண்டாள் கன்னங்கள் இரண்டும் சிவந்தது அந்த நொடியில் ராயனின் மனம் அவளை முத்தமிடச் சொன்னது அடுத்த கணம் அவளின் உயரத்துக்கு குனிந்து இதழை நோக்கி தன் இதழை கொண்டு செல்ல “மாமா என்ன பண்ண போறிங்க” என்று பதட்டத்துடனே கேட்க அவள் திருதிருவென விழிக்க அவளின் முட்டை கண்ணை பார்த்தவன் அடுத்த கணம் எதை பற்றி யோசியாமல் அவளின் இதழில் தன் இதழை பொருத்தினான்.

 

அவள் பயத்துடனே அவன் இடைப்பகுதியில் இருந்த அவன் சட்டையை இறுக்கி பிடித்து கொள்ள மென்மையாக முத்தமிட எண்ணியவன் முதல் முத்தத்தையே வன்மையாக கொடுக்க ஆரம்பித்தான் அவள் இதழ்கள் அவன் இதழால் மென்று விழுங்கப்பட்டது இருவரின் எச்சிலும் இடம் மாறியது அவளின் நாவே

வரண்டு போகும் அளவுக்கு தலைவன் முத்தமிட ஆரம்பித்தான்.

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *