உயிரின் உவமை 4
அத்தியாயம் 4
ராயன் அறைக்கதவைத் திறந்து வெளியே வந்தான் “சொல்லுங்க சம்மந்தி… நிச்சயத்தை அடுத்த வாரமே வச்சிக்கலாம் நாள் நல்லா தான் இருக்கு…” என்று செல்வி கைப்பேசியில் பேசிக் கொண்டிருந்தார்.
அதை கேட்ட அஞ்சலியின் பார்வை தானாகவே ராயனைத் தேடியது “ராயா… தேதி உனக்கு ஓகே தானப்பா?” என்று செல்வி கேட்க,
ராயனோ ஒரு கணம் கூட யோசிக்காமல்,
“எனக்கு ஓகேதான் மா… உங்களுக்கு எது சந்தோஷமோ அது தான் எனக்கும்” என்றான்.
அந்த ஒரு பதில்…
அஞ்சலியின் மனதில் இருந்த சிறிய நம்பிக்கையையும் நொறுக்கிவிட்டது
அவள் மனதுக்குள் ஏதோ ஒன்றை உடைத்தது அது என்னவென்று மட்டும் அவளால் புரிந்துகொள்ள முடியவில்லை
ஏனோ மூச்சு முட்டுவது போல இருந்தது அதற்கு மேல் அங்கே நிற்க முடியாமல் அமைதியாகத் திரும்பியவள், யாரும் கவனிக்காதபடி தன் வீட்டுக்குள் ஓடினாள்.
அறைக்குள் நுழைந்ததும் கதவை மூடிவிட்டு படுக்கையில் குப்புற விழுந்தாள்
‘ஏன் இப்படி என் மனசு வலிக்குது…? அவர் கல்யாணம் பண்ணிக்கிட்டா எனக்கு என்ன…? நான் ஏன் அழறேன்…?’
என்று தனக்குத்தானே கேள்வி கேட்டுக் கொண்டவளுக்கு எந்தக் கேள்விக்கும் பதில் கிடைக்கவில்லை கிடைத்ததெல்லாம்… காரணம் தெரியாத கண்ணீர் மட்டும்தான்.
மறுநாளில் நிச்சய வேலைகள் பரபரப்புடனே ஆரம்பமானது அஞ்சலி எப்போதும் போல செல்வி வீட்டுக்கு வந்து அமர அவள் முகம் வாடி இருப்பதை பார்த்தவர் “என்ன டி முகம் ஒரு மாதிரி வாட்டமா இருக்கு உங்க அடிச்சாங்களா எதாவது சேட்டை பண்ணிட்டியா” என்று அவர் வேலை செய்து கொண்டே கேட்க “ஒன்னும் இல்லை அத்தை” என்றாள் சோர்வுடனே அவளிடம் முன்பு இருந்த கலகலப்பு இல்லை என்று அவருக்கு தோன்றியது ஆனால் அவர் அதை பற்றி மீண்டும் கேட்க்கவில்லை.
நிச்சயத்துக்கு இன்னும் மூன்று நாட்கள் தான் இருந்தது அஞ்சலி வழக்கம் போல செல்வி வீட்டுக்கு வர “அஞ்சலி நாங்க எல்லாரும் துணி எடுக்க போறோம் நியும் வா உனக்கு ஒரு தாவணி பாவாடை எடுத்துட்டு வருவோம்” என்று செல்வி கூற “இல்லை அத்தை நான் வரலை எனக்கு வீட்ல வேலை இருக்கு” என்று அவர் சொல்லுக்கு முதல் முறையாக மறுத்து பேசியவளை ஆச்சரியமாக பார்த்தவர்
“அது இல்லை அஞ்சலி நீ வந்தா உனக்கு அளவு சரியா பார்த்து எடுக்கலாம்” என்று அவர் கூற.
அப்போது அங்கே வந்த ராயன் “அம்மா… அவளுக்கு வேலை இருக்குன்னு சொல்றாள்ல. விடுங்க… இன்னொரு நாள் எடுத்துக்கலாம்” என்று கூற அவளுக்கு இன்னும் வலித்தது.
அவன் ஒரு வார்த்தையாவது, “வா பாப்பா…” என்று சொல்லுவான் என்று ஏனோ எதிர்பார்த்திருந்தாள் ஆனால் அவனோ அதையும் சொல்லவில்லை அந்த ஏமாற்றத்துடன் அமைதியாகத் தலைகுனிந்து நின்றாள்.
அவள் தலைகுனிந்து நின்றதை பார்த்த செல்விக்கு ஏதோ ஒன்று அவளிடம் வித்தியாசமாகத் தோன்றியது
“என்னடி… நிஜமாவே வர மாட்டியா?” என்று மீண்டும் கேட்டார்.
“வரலை அத்தை…” என்று மெல்ல சொன்னவள், அதற்கு மேல் அங்கே நிற்க முடியாமல் திரும்பி தன் வீட்டுக்குள் சென்றாள்
அவள் போன திசையையே ஒரு நொடி ராயன் பார்த்தான் ‘எப்பவும் நம்ம வீட்டிலேயே சுத்திட்டு இருக்கவள்… இன்னைக்கு அவங்க வீட்டுக்கு போறா என்னாச்சு இவளுக்கு?’ என்று மனதிற்குள் நினைத்தான்.
ஆனால் அடுத்த நொடியே அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல், “அம்மா… நேரம் ஆகுது கிளம்பலாமா?” என்று காரை நோக்கி நடந்தான் அவன் குடும்பத்தினர் அனைவரும் துணி எடுக்க கிளம்பிவிட, வாசலில் நின்றபடியே அந்தக் காரை பார்த்துக் கொண்டிருந்தாள் அஞ்சலி கார் கண்களுக்கு மறைந்த பிறகும் கூட, அங்கேயே சில நிமிடங்கள் அசையாமல் வாடிய முகத்துடன் நின்றிருந்தாள்.
நிச்சய நாளும் வந்தது ஊரே கூடியிருக்க நிச்சயமே கல்யாணத்தை நன்றாக ஏற்பாடு செய்யப்பட்டது அஞ்சலி தன் தாய் தந்தையுடன் அங்கே வந்தாள் மண்டப மேடையில் ராயனும் கல்யாண பெண்ணான ரம்யாவும் அமர்ந்திருக்க அந்த பெண்ணின் மீதே அவள் கண் சென்றது அது பொறாமையா அல்லது ஏதோ ஒன்று அவளுக்கே தெரியல்லை.
செல்வி அஞ்சலியை பார்த்தவுடன் “ஏன் டி இவ்வளவு லேட்டா வா வாருவ” என்று கேட்க
“வீட்ல வேலை அத்தை அதான்” என்றாள் வாடிய முகத்துடன் நிச்சய வேலையில் அவள் அவரை கவனிக்கவில்லை.
நிச்சயமும் ஆரம்பமானது ராயன் பெண்ணின் விரலில் மோதிரத்தை மாட்ட போக அந்த பெண்ணின் கை நடுங்கியது அதை பார்த்தவனுக்கு ஒன்றும் புரியவில்லை சரி திருமண பதட்டம் போல என்று நினைத்தான் அவளும் இவனுக்கு மோதிரம் அணிவிக்க அனைவரும் கைதட்ட அஞ்சலி மட்டும் உம்மென்று எந்த வித எதிர்வினையும் முகத்தில் காட்டாமல் அமர்ந்து இருந்தாள்.
நிச்சயம் நல்லபடியாக முடிந்த பின்னும் ரம்யா பதட்டத்துடன் தான் இருந்தாள் அவளை பார்த்த ராயன், “ரம்யா… உங்களுக்கு என்னாச்சு?” என்று கேட்டு விட,
“ஒன்னும் இல்லை… நிச்சய டென்ஷன்… வேற ஒன்னும் இல்லை…” என்று அவள் சமாளித்தாள் அவ்வப்போது யாருக்கோ போனில் மெசேஜ் அனுப்பிக் கொண்டே இருந்தாள் சரி… தோழிகளாக இருக்கும் என்று ராயன் கண்டுகொள்ளவில்லை.
சிறிது நேரத்தில் அவளின் கைப்பேசி மீண்டும் ஒலித்தது திரையில் வந்த பெயரை பார்த்தவளின் முகம் ஒரு நொடி வெளிறிப் போனது யாரும் கவனிக்காதபடி அழைப்பை துண்டித்துவிட்டு, அவசரமாக கைப்பேசியை கைப்பைக்குள் வைத்துக் கொண்டாள்.
நிச்சயம் நல்லபடியாக முடிய அடுத்த இரண்டு வாரங்களில் திருமணத்துக்கு நாள் குறிக்கப்பட்டது பெண் வீட்டில் தான் அவசரப்படுத்தியிருந்தனர் கல்யாண வேலைகள் ராயன் வீட்டில் கலைக்கட்ட ஆரம்பித்தது நிச்சயம் முடிந்த பிறகு ராயன் ஒரு முறை ரம்யாவிடம் பேச அழைக்க அவளோ இரண்டு வார்த்தைகள் மட்டுமே பேசிவிட்டு அழைப்பை துண்டித்தாள் சரி இன்னும் இரண்டு வாரத்தில் திருமணம் அப்போது பேசிக் கொள்ளலாம் என்று நினைத்தான்.
பத்திரிகை அச்சிட்டு வர செல்வி முதல் பத்திரிகையை அஞ்சலி வீட்டுக்கு தான் எடுத்து சென்றார் இத்தனை வருட பழக்கம் அல்லவா பல இக்கட்டான நேரங்களில் அவருக்கு உறுதுணையாக இருந்தது அஞ்சலியின் குடும்பம் தான் செல்வி வீட்டின் உள்ளே தாம்பூல தட்டுடன் வர “அடடே வாங்க அக்கா” என்று வரவேற்றார் சகுந்தலா.
அஞ்சலியும் சத்தம் கேட்டு அங்கே வந்தாள்
அஞ்சலியின் பெற்றோர் பத்திரிகையை வாங்கி கொள்ள “முதல் பத்திரிகையை உங்களுக்கு தான் கொடுத்துருக்கேன் குடும்பத்தோட வந்துருங்க” என்று கூற அவர்களும் “கண்டிப்பா வந்துட்றோம்” என்றனர் செல்வி அஞ்சலியை பார்த்தவர்
“நீயும் தான் டி காலையிலேயே வந்துரு” என்று கூற அவளும் பதிலுக்கு தலையாட்ட
“இப்போல்லாம் வாயை திறந்து பேச கூட காசு கேட்க்குற நீ” என்று போற போக்கில் சொல்லிவிட்டு சென்றார்.
அவர் சென்ற பிறகு பத்திரிகையை எடுத்துக் கொண்டு தன் அறைக்குள் சென்றாள் அஞ்சலி
கதவை மெதுவாகச் சாத்திவிட்டு, இரு கைகளாலும் அந்தப் பத்திரிகையைப் பிடித்துக் கொண்டவள் அதைத் திறந்து பார்த்தாள்.
பொன்னிற எழுத்துக்களில் “ராயன் – ரம்யா” என்ற பெயர்கள் அச்சிடப்பட்டிருந்தது.
அந்த இரண்டு பெயர்களையே இமைக்காமல் வெகுநேரம் பார்த்துக் கொண்டிருந்தாள்.
“இன்னும் இரண்டு வாரத்துல… ராயன் மாமா கல்யாணம் பண்ணிக்கிட்டா… இனி எப்பவும் எதிர் வீட்டுல இருக்க மாட்டாங்களா…? நான் தினமும் அவரைப் பார்க்க முடியாதா…?” என்று மனதிற்குள் நினைத்தவளின் தொண்டை அடைத்தது.
அந்தப் பத்திரிகையை நெஞ்சோடு இறுக அணைத்துக் கொண்டாள் ஏன் இப்படி மனசு வலிக்கிறது… ஏன் கண்ணீர் வருகிறது… என்று அவளுக்கே புரியவில்லை
அடுத்த நொடியே அவளின் கண்களில் இருந்து வழிந்த கண்ணீர், அந்தப் பத்திரிகையின் மீதே விழுந்தது அவளின் ஒவ்வொரு கண்ணீர் துளியும்… இன்னும் சில நாட்களில் பலரின் வாழ்க்கையையே அந்த கண்ணீர் தலைகீழாக மாற்றப் போகும் ஒரு புயலின் அமைதியான தொடக்கம் என்பதை அப்போது யாருமே அறிந்திருக்க வாய்ப்பு இல்லை.
அந்த நாளுக்கு பிறகு அஞ்சலி முன்பு போல செல்வி வீட்டுக்கு அடிக்கடி செல்வதே இல்லை வாசலில் நின்றபடியே ஒரு முறை எட்டிப் பார்த்துவிட்டு அமைதியாகத் திரும்பிச் சென்று விடுவாள்.
அவளின் அந்த மாற்றத்தை செல்வியும் கவனித்தார்
“என்ன டி இப்போல்லாம் எங்க வீட்டுக்கே வரவே மாட்டேங்குற?” என்று ஒருநாள் கேட்டார்
“சும்மா தான் அத்தை…” என்று ஒரு வார்த்தையில் முடித்துவிட்டாள் அஞ்சலி.
“கல்யாண வேலை எல்லாம் முடிஞ்ச பிறகு உன்னை கவனிச்சிக்கிறேன்” என்று சிரித்துக் கொண்டே செல்வி சொல்ல, அஞ்சலி உதட்டில் மட்டும் மெல்லிய சிரிப்பை வரவழைத்தாள் பொய்யாக சிரித்தாள் ஆனால் அந்தச் சிரிப்பு அவள் கண்களை எட்டவே இல்லை சகுந்தலாவும் தன் மகளை கவனித்து கொண்டு தான் இருந்தார் சரியாக சாப்பிடாமல் தூங்காமல் எப்போதும் எதையோ நினைத்து கொண்டு அறையை விட்டு வெளியே வராமல் இருக்கும் மகளை ஆனால் அது எதனால் என்று அவருக்கு தெரியவில்லை.
நாட்கள் வேகமாகக் நகர்ந்தன திருமணத்துக்கு இன்னும் மூன்று நாட்கள் மட்டுமே இருந்தது ராயன் வீட்டில் உறவினர்கள் ஒவ்வொருவராக வந்து சேர, அந்த வீடே விழாக்கோலம் பூண்டிருந்தது சிரிப்பு, பேச்சு, சத்தம் என்று வீடு முழுவதும் உற்சாகமாக இருந்தது
ஆனால் எதிர் வீட்டின் ஜன்னல் அருகே நின்றிருந்த அஞ்சலியின் மனம் மட்டும் அமைதியாக அழுதுகொண்டே இருந்தது காரணம் தெரியாமல் வலிக்கும் அந்த உணர்வுக்கு என்ன பெயர் என்று அவளுக்கே தெரியவில்லை இருந்தாலும், இன்னும் சில நாட்களில் ராயன் அந்த வீட்டை விட்டு வேறு ஒருவருடன் சென்றுவிடுவான் என்ற எண்ணம் மட்டும் அவள் இதயத்தை மெதுவாக நொறுக்கிக் கொண்டே இருந்தது.
அந்த மூன்று நாட்களிலும் அஞ்சலி ராயனை நேரில் பார்ப்பதையே தவிர்த்தாள் தூரத்தில் அவன் கார் சத்தம் கேட்டாலே ஜன்னல் வழியாக ஒரு நொடி பார்த்துவிட்டு மறைந்துவிடுவாள் இல்லை எழுந்து கூட வரமாட்டாள் முன்புபோல் அவன் வீட்டுக்குள் ஓடிச் செல்லவும் இல்லை, செல்வியிடம் மணி கணக்காக பேசவும் இல்லை.
அவளின் இந்த அமைதியான மாற்றம் யாருக்கும் பெரிதாகத் தெரியவில்லை ஆனால் தினமும் எதிர் வீட்டைச் சுற்றி சிரித்துக் கொண்டிருந்த அந்தச் சின்னப் பெண்ணின் சிரிப்பு மொத்தமாகத் தொலைந்துவிட்டதை மட்டும் அந்த வீட்டுச் சுவர்கள் அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்தன அவள் ஒவ்வொரு நாளையும் கண்ணீரோடு கடந்து கொண்டு இ
ருந்தாள்.
அவளுக்கு ஏன் இத்தனை வலி என்பதை குழந்தையான அந்த குமரி உணரவேயில்லை.