உயிரின் உவமை நீ 4

அத்தியாயம் 4 ராயன் அறைக்கதவைத் திறந்து வெளியே வந்தான் “சொல்லுங்க சம்மந்தி… நிச்சயத்தை அடுத்த வாரமே வச்சிக்கலாம் நாள் நல்லா தான் இருக்கு…” என்று செல்வி கைப்பேசியில் பேசிக் கொண்டிருந்தார். அதை கேட்ட அஞ்சலியின் பார்வை தானாகவே ராயனைத் தேடியது “ராயா… தேதி உனக்கு ஓகே தானப்பா?” என்று செல்வி கேட்க, ராயனோ ஒரு கணம் கூட யோசிக்காமல், “எனக்கு ஓகேதான் மா… உங்களுக்கு எது சந்தோஷமோ அது தான் எனக்கும்” என்றான். அந்த ஒரு பதில்… அஞ்சலியின் மனதில் இருந்த சிறிய நம்பிக்கையையும் நொறுக்கிவிட்டது அவள் மனதுக்குள் ஏதோ ஒன்றை உடைத்தது அது என்னவென்று மட்டும் அவளால் புரிந்துகொள்ள முடியவில்லை ஏனோ மூச்சு முட்டுவது போல இருந்தது அதற்கு மேல் அங்கே நிற்க முடியாமல் அமைதியாகத் திரும்பியவள், யாரும் கவனிக்காதபடி தன் வீட்டுக்குள் ஓடினாள். அறைக்குள் நுழைந்ததும் கதவை மூடிவிட்டு படுக்கையில் குப்புற விழுந்தாள் ‘ஏன் இப்படி என் மனசு…

Premium Reader Subscription

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *